ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

China’s deep economic malaise

சீனாவின் ஆழ்ந்த பொருளாதார நலிவு

By Peter Symonds
13 January 2016

இந்தாண்டின் தொடக்கத்திலிருந்து கொந்தளித்த உலகளாவிய பங்குச் சந்தைகளது கவனங்கள் சீனப் பங்குச் சந்தைகளின் மந்தநிலையும் ரென்மின்பியின் வீழ்ச்சியும் ஒரு நீண்டகால ஆழ்ந்த பொருளாதார நலிவின் அடையாளங்களாகலாம் என்ற அச்சங்களுக்கு இடையே, சீனாவின் மீது ஒருங்குவிந்துள்ளன. சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குறைவானது, அதன் தொழில்துறையின் பாரிய மிதமிஞ்சிய உற்பத்தி திறனையும் மற்றும் சொத்துச் சந்தையையும், அதிக கடன் மட்டங்களையும் அம்பலப்படுத்துகிற நிலையில், இது வர்க்க போராட்டத்தின் ஒரு எழுச்சியைத் தூண்ட அச்சுறுத்துகிறது.

2015 க்கான உத்தியோகபூர்வ வளர்ச்சி விகிதம் 6.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2010 இல் 10.6 சதவீதமாக இருந்த இது, கால் நூற்றாண்டின் குறைந்தபட்ச மட்டத்திற்கு கீழிறக்கப்பட்டு வரவிருக்கும் ஆண்டில் 6.5 சதவீதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பல பகுப்பாய்வாளர்கள் அரசாங்கத்தினது அந்த புள்ளிவிபரங்கள் மீதும் சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர். சான்றாக, 2016 இல் வெறும் 4.8 சதவீத வளர்ச்சியை Consensus Economics அமைப்பின் சீனக் குழு அங்கத்தவர்களது ஒரு கருத்துக்கணிப்பு முன்கணிப்பதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி ஒன்று கடந்த வாரம் வெளியானது.

அரசு பொருளாதாரம் குறித்த மிகவும் துல்லியமான அளவீட்டை வழங்குவதற்காக, பொருளாதார பண்டிதர்கள், பிரதமர் லீ கெக்கியாங் உருவாக்கியதாக கூறப்படும் கெக்கியாங் குறியீடு என்றழைக்கப்படுவது போன்ற ஏனைய புள்ளிவிபரங்களை நோக்கி திரும்பும் அளவிற்கு அப்புள்ளிவிபரங்கள் கேள்விக்குள்ளாகி உள்ளன. ரயில் சரக்கு போக்குவரத்து, மின்சார உற்பத்தி மற்றும் வங்கி கடன் வழங்கல் ஆகிய கெக்கியாங் குறியீட்டின் மூன்று கூறுபாடுகளுமே சரிந்துள்ளன. வணிக இதழ் Caixin கடந்த வாரம் குறிப்பிடுகையில், ரயில் சரக்கு கையாளுகை 2015 இல் 10.5 சதவீத அளவிற்கு சரிந்திருந்தது, இது சாதனையளவிலான மிகப்பெரிய வருடாந்தர வீழ்ச்சியாகும் என்று குறிப்பிட்டது.

சீனாவின் கீழ்நோக்கிய சரிவு உலகளாவிய மந்தநிலை போக்குகளின் விளைவாகும். கடந்த மூன்று தசாப்தங்களில், அந்நாட்டில் முதலாளித்துவம் மறுபுனருத்தானம் செய்யப்பட்டமையும் மற்றும் உலகின் பிரதான மலிவு உழைப்பு தளமாக மாற்றப்பட்டமையும் ஒரு பிரமாண்ட பொருளாதார விரிவாக்கத்திற்கு இட்டுச் சென்றது. உயர்ந்த வளர்ச்சி மட்டங்களைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வைக்க ஒரு மிகப்பெரும் ஊக்கப்பொதியை மற்றும் வெள்ளமென மலிவு கடன்களைப் பாய்ச்சியதன் மூலம், பெய்ஜிங் ஆட்சி 2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்கு விடையிறுத்தது, அந்நெருக்கடி ஏற்றுமதிகளைப் பாதித்ததுடன், 20 மில்லியன் வேலைகளை இல்லாதொழித்து இருந்தது. எவ்வாறாயினும் உற்பத்தி கொள்திறனுக்கு ஏற்ற அளவில் முதலீடு செய்யப்படவில்லை, மாறாக மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு நடந்தது. இது பங்குச் சந்தைகளை விட அனைத்திற்கும் மேலாக  சொத்துக்களின் ஓர் வெறித்தனமான ஊக வியாபாரத்திற்கு எரியூட்டியது.

உலகளாவிய நெருக்கடியிலிருந்து வேகமாக மீள்வதற்கும் மற்றும் உலகளாவிய உயர்ந்த வளர்ச்சி மட்டங்களுக்கு திரும்புவதற்கும் ஆதாரமாக வைக்கப்பட்ட இந்த மூலோபாயம் தோல்வியடைந்தது. ஏற்றுமதிகள் தொடர்ந்து சரியத் தொடங்கின, குறிப்பாக அடிப்படை தொழில்துறைகளில் பெரியளவில் மிதமிஞ்சிய உற்பத்திதிறன் இருப்பது வெளிப்பட்டது. சொத்துச் சந்தை நிரம்பி வழிவதுடன், விலைகள் தேக்கமடைந்துள்ளன. 2015 இன் முதல் பாதியில் தலைசுற்றும் உயரத்தை எட்டிய சீனப் பங்குச் சந்தைகள் பொறிந்து போய், இப்போது நிலைகுலைவிற்கு மற்றொரு ஆதாரமாகி உள்ளன.

உற்பத்தியின் ஏற்றுமதிகள் என்றவொரு அடிப்படையிலிருந்து சீன அரசாங்கம், உள்நாட்டு நுகர்வின் மீது கட்டமைந்த ஒரு சேவை பொருளாதாரத்திற்கு அதன் பொருளாதாரத்தை "மாற்ற" முயல்கிறது. ஆனால் இந்த புதிய "மாதிரி வடிவம்" முரண்பாடுகளால் நிரம்பியுள்ளது, உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் உழைக்கும் மக்களுக்கு அதிக வருமானங்கள் கிடைக்க வேண்டும் என்பது உண்மையாகும், அவ்விதத்தில் இது மலிவு கூலி ஏற்றுமதியின் மையமான சீனாவின் போட்டித்தன்மை கூடுதலாக பலவீனமாக்குகிறது. அனைத்திற்கும் மேலாக, அந்த ஆட்சி பெரும் எண்ணிக்கையிலான அரசுக்குச் சொந்தமான பெருநிறுவனங்களை மூடுவது அல்லது மறுசீரமைப்பு செய்வது உள்ளடங்கலாக சந்தைசார் சீர்திருத்தங்கள், வேலைவாய்ப்பின்மையை அதிகரிக்கவும் மற்றும் உள்நாட்டு நுகர்வைக் குறைக்கவே இட்டுச் செல்லும் என்றாலும், அவற்றை தீவிரப்படுத்துவதற்கு அதிகரித்த சர்வதேச அழுத்தத்தை முகங்கொடுக்கிறது.

சீனாவின் மாற்றம் பற்றிய எந்தவிதமான ஆரவார நடவடிக்கைகள் இருந்தாலும், உலக பொருளாதாரத்தில் அந்நாட்டின் செயல்பாடு ஒரு மலிவு உழைப்பு தளத்தில் தான் தங்கியுள்ளது. உற்பத்தி சார்ந்த எல்லா புள்ளிவிபரங்களும் துயரகரமாக உள்ளன. கடந்த மாதம் Caixin வெளியிட்ட ஒரு வணிக நிலவர குறியீட்டின்படி, சீனாவில் தொழிற்சாலை வேலைவாய்ப்பு 25 மாதங்களாக சரிந்துள்ளது. டிசம்பருக்கான உத்தியோகபூர்வ உற்பத்தி நுகர்வு மேலாண்மை குறியீடு (PMI) நவம்பருடன் ஒப்பிடுகையில் மிகச் சிறியளவில் 49.7 ஆக உயர்ந்துள்ளது ஆனால் இன்னமும் அது குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கான 50 புள்ளிக்கும் கீழே தான் உள்ளது. Caixin இன் டிசம்பருக்கான அதன் சொந்த PMI, நவம்பரின் 48.6 இல் இருந்து குறைந்து வெறுமனே 48.2 ஆக இருந்தது—இது தொடர்ந்து 10 வது மாதமாக 50 கீழே இருந்து வருகிறது.

நவம்பரில் பெய்ஜிங் கருத்தரங்கம் ஒன்றில் பிரதமர் லீ கூறுகையில், பாரம்பரிய தொழில்துறைகளில், குறிப்பாக எஃகு மற்றும் நிலக்கரி துறைகளைச் சுட்டிக்காட்டும் விதத்தில், பெரும் எண்ணிக்கையிலான நலிந்த (zombie) நிறுவனங்கள் என்றழைக்கப்படுவதில் உள்ள மிதமிஞ்சிய உற்பத்தி கொள்திறனைக் குறைக்க தீர்மானித்திருப்பதாக தெரிவித்தார். ஆனால் இப்போது வரையில் அரசின் அனைத்து மட்டங்களிலும் அதிகரித்துவரும் சமூக கிளர்ச்சிகளுக்கு அஞ்சி அதற்கான சிறிய நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை.

வடகிழக்கு சீனாவின் மிகப்பெரிய நிலக்கரி நிறுவனமான Longmay குழுமத்தின் தலைவிதியை நியூ யோர்க் டைம்ஸ் கடந்த மாதம் கவனத்திற்கு கொண்டு வந்தது, அந்நிறுவனம் நான்கு நகரங்களில் உள்ள 42 சுரங்கங்களில் 100,000 வேலைகளை அல்லது அதன் தொழிலாளர் சக்தியில் 40 சதவீதத்தை குறைக்க கடந்த செப்டம்பரில் திட்டங்களை அறிவித்தது. ஆனால் Heilongjiang மாகாண அரசிற்குச் சொந்தமான அந்நிறுவனம் (SOE) வேலை வெட்டுக்களைக் காலந்தாழ்த்தியது. பல நூறு பழைய தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர், ஆனால் அம்மாகாண நிர்வாகங்கள் அந்நிறுவனத்தின் உடனடி கடன் பிரச்சினைகளைக் கடந்து வர ஒரு குறுகியகால பிணையெடுப்பாக 600 மில்லியன் டாலர்களை வழங்கியது.

ICIS C1 Energy இன் ஒரு பகுப்பாய்வாளரான டெங் ஷன் நியூ யோர்க் டைம்ஸிற்குப் பின்வருமாறு தெரிவித்தார்: “அவர்கள் சமூக கிளர்ச்சி குறித்து கவலை கொண்டிருக்கிறார்கள், ஆகவே தான் தாமதப்படுத்துகிறார்கள். இந்த வேலைவெட்டுக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்டிருக்க வேண்டும்.” எவ்வாறிருந்தாலும் மாகாண அரசாங்கத்தின் அச்சங்கள் ஆதாரபூர்வமானவையே, ஏனெனில் எந்தவித பாரிய வேலைநீக்கங்களுக்கும் முன்னதாக ஏற்கனவே போராட்டங்கள் வெடித்திருந்தன. கூலிகள் காலதாமதமாக வழங்கப்படுவதை எதிர்த்து Hegang நகரில் ஆயிரக் கணக்கானவர்கள் ஏப்ரலில் பேரணியில் இறங்கினர். அதை ஒழுங்கமைத்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அக்டோபரில், அந்நிறுவன நிர்வாகம் திட்டமிடப்பட்ட ஒரு பேரணி நாளன்று தொழிலாளர்களை சுரங்கங்களிலேயே அடைத்ததன் மூலமாக மட்டுமே மற்றொரு போராட்டத்தைத் தடுத்தது.

விரிவடைந்துவரும் சேவைத்துறையில் வேலைகள் உருவாக்கவதற்கான சாத்தியக்கூறும் பொய் என்பதை சுரங்கத் தொழிலாளர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். பொருளாதாரரீதியில் சீனாவின் மிகவும் ஒடுக்கப்பட்ட மாகாணங்களில் ஒன்றான Heilongjiang ஏற்கனவே மந்தநிலைமையில் புதைந்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளை அதற்கு முந்தைய ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிட்டால் பொருளாதார வெளியீடு 2.2 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தது.

முன்னாள் சுரங்கத் தொழிலாளரும் இப்போதைய டாக்சி ஓட்டுனருமான திரு க்யூ தொழிலாள வர்க்கத்தின் சீற்றம் மற்றும் கடுமையை நியூ யோர்க் டைம்ஸிற்குத் தெரிவித்தார்: “90 களில், ஒவ்வொரு வறுமையில் இருந்தோம். இப்போதோ பணக்காரர்கள் மிகவும் பணக்காரர்களாக இருக்கிறார்கள், ஏழைகள் மிகவும் ஏழைகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். வேலைநீக்கங்களின் காரணமாக, ஒவ்வொருவரும் கவலை கொண்டிருக்கிறார்கள். இந்த சுரங்கங்களுக்கு வெளியே வாழ்வதற்கு யாருக்கும் எந்த வழியும் இல்லை. புத்தாண்டு விடுமுறைகள் வருகின்ற நிலையில், அங்கே Hegang இல் குழப்பமே நிலவும்,” என்றார்.

பெரியளவில் வேலை இழப்புகளைச் சந்திப்பது வெறுமனே சுரங்கத் தொழிலாளர்கள் அல்லது அடிப்படை தொழில்துறை தொழிலாளர்கள் மட்டுமல்ல. கடந்த மாதம் South China Morning Post பத்திரிகையில் எழுதுகையில் பகுப்பாய்வாளர் Andy Xie பின்வருமாறு விவரித்தார்: “2009 க்குப் பின்னரில் இருந்து சீனா 40 ட்ரில்லியன் யான் (6.1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்) மிதமிஞ்சி முதலீடு செய்திருக்கக்கூடும். அதன் ஸ்தூலமான விளைவு தான் காலியான கட்டிடங்களும், மிதமிஞ்சிய தொழில்துறை உற்பத்திதிறனும்.”

எஃகு தொழில்துறையின் 200 முதல் 400 மில்லியன் டன் வரையிலான மிதமிஞ்சி உற்பத்தி கொள்திறன் குறித்த மதிப்பீடுகளை மேற்கோளிட்ட பின்னர் —இது வேறெந்த நாட்டின் மொத்த உற்பத்தியை விடவும் அதிகமாகும்— Xie தொடர்ந்து பின்வருமாறு குறிப்பிட்டார்: “இந்த படுபயங்கரமான நிலைமை எல்லா பண்டங்களது தொழில்துறையிலும் பொதுவாக உள்ளது. ஸ்மார்ட்போன் உற்பத்தி போன்ற புதிய தொழில்துறைகள் ஏற்கனவே மிகப்பெரியளவில் மிதமிஞ்சிய உற்பத்தி கொள்திறனைக் கொண்டுள்ளன. மின்ஆலைகள் கூட பெரிதும் குறைபிரயோகத்தில் உள்ளன.”

2015 இன் முதல் 11 மாதங்களில், மிகப்பெரிய மற்றும் நடுத்தரமான எஃகு ஆலைகள் 53.1 பில்லியன் யான் ($8.8 பில்லியன்) இழப்புகளில் பாதிக்கப்பட்டதாக சீன இரும்பு மற்றும் எஃகு கூட்டமைப்பு அறிவித்தது. ஒரு மிகப்பெரிய அரசுக்குச் சொந்தமான நிறுவனமான வூஹன் இரும்பு & எஃகு ஆலை கடந்த மாதம் அறிவிக்கையில் மூன்று மாதங்களுக்குள் 6,000 வேலைகளைக் குறைக்க திட்டமிடுவதாகக் குறிப்பிட்டது, அதேவேளையில் அதன் தாய் நிறுவனம் 11,000 வேலைகளை வெட்டி, 2016 இல் 20 சதவீத அளவிற்கு சம்பளங்களைக் குறைக்கக்கூடும்.

ஏனைய தொழில்துறைகளில் ஏற்கனவே மறுசீரமைப்புகள் நடந்து வருகின்றன. சீனாவின் இரண்டு மிகப்பெரிய கப்பல் குழுமங்கள் கடந்த மாதம் ஒருங்கிணைந்தன மற்றும் அதன் இரண்டு மிகப்பெரிய ரயில் உற்பத்தி நிறுவனங்களான CNR மற்றும் CSR இந்தாண்டின் தொடக்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்டன.

தொழிலாளர்களுக்கு சம்பந்தமே இல்லையென்றாலும் நிறுவனங்கள் அவற்றின் கணக்குப் புத்தகத்தில் காட்டும் தொழிலாளர்களான, "கண்ணுக்குப்புலனாகா வேலைவாய்ப்பின்மையை" தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து சீன ஆளும் வட்டங்களில் விவாதிக்கப்பட்டு வருவதற்கு இடையே, மிகப்பெரியளவிலான வேலை இழப்புகள் குறித்தும் கருத்துவேறுபாடு இல்லாதுள்ளது. அந்த அரசாங்கம் அதிகரித்தளவிலான கடன் மட்டங்களை முகங்கொடுக்கிறது, அவற்றில் பெரும்பாலானவை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதிவழங்க மற்றும் Longmay போன்ற "நலிந்த நிறுவனங்களுக்கு" உயிர்கொடுக்க உள்ளூர் அரசாங்கங்களால் திரட்டப்பட்டவை ஆகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் அந்நாட்டின் கடன் கடந்த நாட்கு ஆண்டுகளில் அண்மித்து 50 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது.

அதன் ஆண்டு முன்உத்தேச மதிப்பீட்டில், சீன சமூக விஞ்ஞான பயிலகம், நிறைய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை கணக்கில் கொண்டு வருவதன் மூலமாக 2016 இல் அரசாங்கம் "கண்ணுக்குப்புலனாகாத வேலைவாய்ப்பின்மையை" கூடுதலாக கண்ணுக்குப் புலனாகுமாறு கொண்டு வர வலியுறுத்தியது. Société Générale இன் ஒரு மூலோபாயவாதி Wei Yao, “சீனாவின் மிக முக்கிய பொருளாதார பிரச்சினைகளான பிழையான மூலதன ஒதுக்கீடு, செயல்படா சொத்துக்களின் அதிக அதிகரிப்பு மற்றும் உற்பத்தித்திறன் சீரழிவு ஆகியவற்றைச்" சரிசெய்ய, முதல் சுற்றில் 1.7 மில்லியன் தொழிலாளர்கள் வேலையிழப்புகளுக்கு உள்ளாகக்கூடும் என்று கூறி நவம்பரில் ஒரு குறிப்பை பிரசுரித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உலகெங்கிலும் போலவே, சீனத் தொழிலாளர்களும் வேலைகள் மற்றும் நிலைமைகளின் சீரழிவு மூலமாக நெருக்கடியின் சுமையை தாங்க வேண்டியிருக்கும்.

கடந்த ஆண்டு Heilongjiang மாகாணத்தின் Longmay தொழிலாளர்களது போராட்டங்கள், கூர்மையாக அதிகரித்துவரும் வர்க்க பதட்டங்களுக்கு வெறும் ஒரேயொரு அறிகுறியாகும். ஹாங்காங் ஐ மையமாக கொண்ட சீன தொழிலாளர் இதழின் (China Labour Bulletin) சமீபத்திய புள்ளிவிபரங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் எண்ணிக்கை, டிசம்பரில் குறிப்பிடத்தக்க உயர்வுடன், கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு கூடுதலாக அதிகரித்து 2,774 சம்பவங்களை எட்டியிருப்பதை எடுத்துக்காட்டியது. இது 2014 இல் 1,379 ஆக இருந்தது. பெரும்பாலான வேலைநிறுத்தங்கள் கூலிகள் கொடுக்கப்படாததற்காக நடந்திருந்தன, கூலிகள் பெரும்பாலும் மாதக்கணக்கில் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தன, கட்டுமானத் தொழில்துறையில் ஒரு பொதுவான நடைமுறையாக இருந்த இது இப்போது உற்பத்தித்துறை, சுரங்கத்துறை மற்றும் சேவைகள் துறையிலும் பரவி வருகிறது.

இந்த புள்ளிவிபரங்கள் எந்த விதத்திலும் முழுமையானது இல்லை என்றாலும், அரசின் தொழிற்சங்கங்கள் மற்றும் பொலிஸ்-அரசு வழிமுறைகளைக் கொண்டு அந்த ஆட்சி எப்போதும் ஒடுக்க முயலுகிறது என்று தொழிலாள வர்க்கத்தினுள் கொதித்துவரும் அதிருப்தி பற்றிய ஒரு மேல்வாரியான பார்வையை வழங்குகிறது. பரந்தளவில் விரிவடைந்துள்ள தொழிலாள வர்க்கம் —இது சுமார் 400 மில்லியன் என்று மதிப்பிடப்படுகிறது— இந்த கவசத்தை உடைத்து கொண்டு, அந்த ஆட்சியின் நுட்பமான அதிகார பிடியை நிலைகுலைத்துவிடுமோ என்பதே சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் நிரந்தர அச்சமாக உள்ளது.