ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Third election meeting of IYSSE at Humboldt University
Jörg Baberowski’s appeal for dictatorship and war

ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் IYSSE இன் மூன்றாவது தேர்தல் கூட்டம்

சர்வாதிகாரத்திற்கும் போருக்குமான ஜோர்க் பார்பெரோவ்ஸ்கியின் அழைப்பு

By our correspondents
9 January 2016

புதன்கிழமை அன்று சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு(IYSSE) , ஜனவரி 19 மற்றும் 20 திகதிகளில் இடம்பெற இருக்கும் மாணவர் மன்ற (StuPa) தேர்தலுக்கான அதன் பிரச்சாரத்தின் மூன்றாவது கூட்டத்தை பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தியது.

அண்ணளவாக 100 மாணவர்களுடன், ஹம்போல்ட் பல்கலைக்கழகத்து வரலாற்றுத்துறை பேராசிரியர் இருவரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அக்கூட்டம் பார்பெரோவ்ஸ்கியால் எழுதப்பட்ட Räume der Gewalt (வன்முறைக் களங்கள்) எனும் அண்மைய புத்தகத்தை மீளாய்வு செய்தது.

StuPa தேர்தலுக்கான IYSSE வேட்பாளர்களுள் ஒருவரான Katja, அண்மைய வாரங்களில் பல நேர்காணல்கள் மற்றும் உரைக்காட்சிகளில் பார்பெரோவ்ஸ்கியால் முன்வைக்கப்பட்ட அதிவலதுசாரி, அகதிகள் எதிர்ப்பு நிலைப்பாடுகளை குறிப்பிட்டு, கூட்டத்தை தொடக்கிவைத்தார். அவர் பின்னர் ஜேர்மன் IYSSE இன் பிரதான பேச்சாளரான கிறிஸ்தோஃப் வன்ட்ரயரை (Christoph Vandreier) அறிமுகம் செய்து வைத்தார்.


கிறிஸ்தோஃப் வன்ட்ரயர் உரையாற்றுகிறார்

வன்ட்ரயர் பார்பெரோவ்ஸ்கியின் எழுத்துக்களுடன் நன்கு பரிச்சயம் உள்ளவர். அவர், “பார்பெரோவ்ஸ்கியின் வரலாற்றை பொய்மைப்படுத்தல்” (“Jörg Baberowski’s Geschichtsfälschung”) எனும் கட்டுரையின் ஆசிரியர் ஆவார். அது பார்பெரோவ்ஸ்கியின் வரலாற்று மற்றும் தத்துவார்த்த கருத்துருக்களை விரிவாக அலசுகிறது. அக்கட்டுரையானது, கடந்த ஆண்டு ஆகஸ்டில் Mehring Verlag பதிப்பகத்தால் ஜேர்மனியில் வெளியிடப்பட்ட Wissenschaft statt Kriegspropaganda (அறிவாய்வுக்குப் பதிலாக போர்ப்பிரச்சாரம்) எனும் புத்தகத்தில் இடம்பெற்றது.

கூட்டத்தின் ஆரம்பத்தில் IYSSE இன் நோக்கம் பார்பெரோவ்ஸ்கிக்கு எதிரான “தனிநபர் மோதலை” தொடர்வது அல்ல, மாறாக பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு தொடர் குழப்பம்மிக்க போக்குகளைப் பற்றிப் பேசுவதாகும் என்று வன்ட்ரயர் வலியுறுத்தினார். IYSSE ஆனது,  அக்டோபர் புரட்சியை பொய்மைப்படுத்துவதற்கான பார்பெரோவ்ஸ்கியின் முயற்சிகளை, அவரது ஸ்ராலினிசத்தை உள்ளடக்கத்திலிருந்து அகற்றல் மற்றும் நாஜிக்குற்றங்களை முக்கியத்துவமற்றதாக்கும் அவரது செயல் பற்றிய புறநிலை ரீதியான விமர்சனங்களை எடுத்துக்கொண்டிருந்தது என்பதை அவர் தெளிவுபடுத்தினார். அவரது பங்கிற்கு பார்பெரோவ்ஸ்கி  அவரது நிலைப்பாடுகள் பற்றிய எந்த விவாதங்களையும் திரும்பத்திரும்ப நசுக்குவதற்கு முனைந்திருக்கிறார்.

“இன்று நாம் விவாதிக்கப்போகும் அவரது புதிய புத்தகத்தை நீங்கள் பார்ப்பீராயின், எமது மதிப்பீடு எவ்வளவு துல்லியமானதாக இருந்தது என்பதை ஒருவர் உணர்ந்துகொள்வார்,” என வன்டரயர் அறிவித்தார். “அது சர்வாதிகாரத்திற்கும் போருக்குமான அப்பட்டமான அழைப்பாகும்.”

அவரது சமீபத்திய புத்தகம் ஜேர்மன் வரலாற்றில் மிகவும் பிற்போக்கான சிந்தனையாளர்களின் மரபில் நிற்கிறது என்பதை வன்டரயர் விளக்கினார். யுத்தங்களுக்கு இடையிலான காலகட்டத்தில்  தேசியவாத பழமைவாத வட்டாரங்களின் எழுத்துக்களுடனான தொடர்புபட்ட விஷயமாக இருந்தது என்ற வகையில், பார்பெரோவ்ஸ்கியின் புத்தகம் மேலோட்டமான பகுத்தறிவற்றவாதத்தின் பலமான அடையாளத்தால் பண்பிடப்படுகிறது மற்றும் அது ஜனநாயக விரோத கருத்துருக்களால் மேலாதிக்கம் செய்யப்படுகிறது.

இப்புத்தகமானது எந்தவிதமான விஞ்ஞான வழிமுறையையும் இயல்பாகக் கொண்டிருக்கவில்லை. அந்நூலின் எடுத்த எடுப்பிலேயே பார்பெரோவ்ஸ்கி வாழ்க்கை என்பது எவ்வித தொடர்புமற்ற அடுத்தடுத்து வரும் கணங்களின் தொகுப்புத்தான் என்கிறார். “இது எந்தவிதமான விஞ்ஞான வடிவத்தையும் நிராகரித்தலாகும்” என வன்டரயர் கூறுகிறார். பின்பு அவர் பார்பெரோவ்ஸ்கியின் வன்முறை தத்துவம் என்பதன் பிற்போக்குத்தன்மையை மெய்ப்பிக்கும் பல மேற்கோள்களை அவரது எழுத்திலிருந்து மேற்கோள்காட்டினார்.

பார்பெரோவ்ஸ்கி மனிதர்கள் இயற்கையாகவே மாற்றமுடியாதவர்களாகவும் மற்றும் இயல்பாகவே வன்முறையாளராக இருக்கிறார்கள் என்று கருதுகிறார். வன்முறை பற்றிய உடனடி நிலைமைகளுக்குள் அவரது ஆய்வை கட்டுப்படுத்திக் கொள்கிறார் மற்றும் வன்முறை தோன்றுவதில் காரணங்கள் அல்லது வாழ்நிலைமைகள் ஏதாவது பாத்திரம் ஆற்றுகின்றன என்று நம்பும் உண்மைக்கு எதிராக வெளிப்படையாகவே விவாதிக்கிறார்.

பார்பெரோவ்ஸ்கியின் நிபந்தனை அற்ற தர்க்கத்தை ஒருவர் பின்பற்றினால், பின்னர் அடிமையின் கிளர்ச்சி அல்லது நாஜிக்களுக்கு எதிரான எதிர்ப்பினை அரசியல் நம்பிக்கையில் இருந்து எழுந்த அல்லது பாதிக்கப்பட்டவர்களின் சமூக வெளிப்பாடு என்பதைக் காட்டிலும் மனிதனின் வன்முறை இயல்பின் வெளிப்பாடு என்று புரிந்துகொள்வது மட்டுமே சாத்தியமாகும். நேர்மாறாக, நாஜிக்களின் தொழிற்துறை ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட வெகுஜனப்படுகொலை மனிதனின் நீடித்த வன்முறையின் ஒரு வெளிப்பாடாக குறைக்கப்படும்.

பார்பெரோவ்ஸ்கிக்கான பிரச்சினை வன்முறை பற்றி புரிந்துகொள்வது அல்ல, மாறாக அதனை நியாயப்படுத்துவதாகும் என்பது வெளிப்படையானதாகும் என வன்டரயர் குறிப்பிட்டார். இது தொடர்பானதில் பார்பெரோவ்ஸ்கியின் எழுத்து மிக வெளிப்படையானதாக இருந்தது. சமூக சமத்துவத்தின் அடிப்படையிலான சமூகம் நினைத்தும் பார்க்கவியலாதது மற்றும் அனைத்துக்கும் மேலாக, சமூக ஒழுங்கிற்கு அந்த கீழ்ப்படிதல் என்பது அவசியமானதாகும் என அவர் அறிவிக்கிறார். சமூக ஒழுங்கை நிலைநாட்டுவது என்பது வன்முறை அல்லது வன்முறை அச்சுறுத்தல்களின் அடிப்படையில் மட்டுமே நிறைவேற்றக்கூடியதாகும். “இது ஒரு முன்மாதிரியான ஜனநாயகவிரோத வாதமாகும்” என்று வன்டரயர் விளக்கினார்.

இந்த தத்துவத்தின் அடிப்படையில், பார்பெரோவ்ஸ்கி ஒடுக்கப்படுவோர் மீதான ஒடுக்குவோரின் வன்முறையை நியாயப்படுத்துகிறார். புதிய யுத்தங்களின் ஆதரவாளராகவும் கூட இருக்கிறார். அண்மைய நேர்காணல் ஒன்றில் அவர், பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரே வழி “பழிக்கு பழி” என்ற கோட்பாட்டின் அடிப்படையிலானது என்று அறிவித்தார்.

பார்பெரோவ்ஸ்கி அவரது வன்முறையின் தத்துவம் என்பதை அக்டோபர் புரட்சி மீதான அவரது தாக்குதலுக்கும் நாஜி குற்றங்களை அவரது முக்கியத்துவமற்றதாக்குதலுக்கும் கூட தொடர்பு படுத்துகிறார். அவரது புத்தகத்தில் கிழக்குமுனையில் நாஜிக்களால் மேற்கொள்ளப்பட்ட அழித்தொழிப்பு யுத்தத்தை, அதன் விருப்பிற்கு எதிராக ஜேர்மன் இராணுவம் உள்ளிழுக்கப்பட்ட ஒரு மோதல், பின்னர் அது கட்டுப்படுத்தத முடியமல்போனது என்று விவரிக்கிறார். இந்த வகையில் நாஜிக்களால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட வெகுஜனப்படுகொலைகள் அதன் முக்கியத்துவத்திலிருந்து அகற்றப்பட்டு முக்கியத்துவம் அற்றதாக ஆக்கப்பட்டது, என வன்டரயர் நிலைநாட்டினார். அவரது புத்தகத்தில் பல்வேறு கலாச்சாரங்களின் சகவாழ்வு என்பது சாத்தியமில்லை என்று அவர் வாதிக்கும்பொழுது அந்நிய கலாச்சார வெறுப்பு கிளர்ச்சிக்கு ஒரு அடிப்படையையும் கூட  பார்பெரோவ்ஸ்கி வழங்குகிறார்.

அத்தகைய வலதுசாரி நிலைப்பாடுகள் மீண்டெழுகின்றன மற்றும் பாதுகாக்கப்படுகின்றன என்ற உண்மையை விரைவாக தீவிரமடைந்துவரும் அரசியல் சூழலின் உள்ளடக்கத்திற்கு உள்ளேதான் விளங்கப்படுத்தமுடியும் என வன்டரயர் குறிப்பிட்டார். “சர்வாதிகாரம் மற்றும் இராணுவவாதத்தின் மீள்வருகையுடன் சேர்ந்து கடந்தகாலத்தின் பிற்போக்கு கருத்தியல்கள் அவற்றை ஆதரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன.” ஜேர்மன் ஆளும் வர்க்கமானது  சிரியாவிற்கு எதிரான யுத்தத்தை ஜேர்மன் இராணுவத்தை பெருமளவில் மீளாயுதமயப்படுத்துவதை முன்கொணர்வதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகிறது. இந்தக் கொள்கை ஜனநாயக உரிமைகள் மீதான அடிப்படை தாக்குதல்களுடன் இணைக்கப்படுகிறது.

IYSSE ஆனது இந்த போக்குகளை ஒரு சோசலிச முன்னோக்குடன் எதிர்க்கிறது என்று வன்டரயர் விளக்கினார். “இந்த முன்னோக்குதான், இறுதியில் வர்க்க சமுதாயத்தில், சமூக சமத்துவமின்மையில் மற்றும் சுரண்டலில் எப்படி வன்முறையானது வேரூன்றி இருக்கின்றது என்பதை விளக்குகிறது” என்றார். யுத்தம் மற்றும் ஒடுக்குமுறை இன்ன பிறவற்றையும் கொண்டுவருவது முதலாளித்துவத்தின் நெருக்கடிதான்” என அவர் குறிப்பிட்டார். அதேநேரம் முதலாளித்துவ அமைப்பே, தாண்டி வரக்கூடிய சாத்தியம் உள்ள அதே முரண்பாடுகளை தோற்றுவிக்கிறது.”

அறிக்கைக்குப் பின்னர் வன்டரயரின் குறிப்புக்கள் பற்றிய ஒரு விரிவான விவாதம் நடைபெற்றது, அதில் வருகை தந்திருந்த இரு பேராசிரியர்களும் பங்கேற்றனர். பார்பெரோவ்ஸ்கியினால் முன்னெடுக்கப்பட்ட நிலைப்பாடுகளால் பெரும்பான்மை பார்வையாளர்கள் அதிர்ச்சியுற்றனர்.

IYSSE கூட்டத்தில் முதல்தடவையாக பங்கேற்ற ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் வரலாறு படிக்கும் கிறிஸ்டின் இந்த கலந்துரையாடலில் ஆரம்பத்தில் பேசினார். “அத்தகைய மனிதர் இந்த பல்கலைக்கழகத்தில் கற்பிக்க முடியுமா என்பதையிட்டு நான் அதிர்ச்சியடைகிறேன்,” என்று அவர் கூற பல மாணவர்களால் கைதட்டல் பெற்றது. “இந்த புத்தகம் ஹிட்லரின் ஆதரவாளரால் எழுதப்பட்டிருக்க வேண்டும். இங்கு வைக்கப்பட்ட மேற்கோள்களை, சிறப்பாக கிழக்கில் படையெடுப்பு தொடர்பாக வைக்கப்பட்டவற்றை, கையை விட்டுப் போய்விட்ட ஒன்றாக அல்லது ரஷ்ய உள்நாட்டு யுத்தத்தோடு ஒப்பிடத்தக்கதாக வெறுமனே வன்முறை செயல் என்று புறந்தள்ளிவிட முடியாது. ஜேர்மன் இராணுவம் படையெடுத்து யூதர்களையும் ரஷ்யர்களையும் படுகொலை செய்தது” என்றார்.