ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Deutsche Bank and the global financial crisis

ஜேர்மன் வங்கியும் உலக நிதி நெருக்கடியும்

Nick Beams
1 October 2016

இந்த வாரம் ஜேர்மன் வங்கியின் (Deutsche Bank) பங்குகள் வரலாறு காணா கீழ்மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்ததானது, புதிய நிதிப்பொறிவினை தவிர்ப்பதற்கான ஒரு அரசாங்க பிணையெடுப்பு பற்றிய விவாதங்களை எழுப்பியுள்ளது. ஜேர்மனியின் மிகப் பெரிய வங்கியை சுற்றி எழுந்த குழப்பங்கள், 2008 உருகுநிலைக்கு இட்டுச்சென்ற உலக நிதிய அமைப்பின் அனைத்து முரண்பாடுகளும் மீண்டுமொருமுறை வெடித்து வந்துகொண்டிருக்கின்றன என்பதை நிரூபிக்கிறது. ஆயினும், இப்பொழுது, இந்த முரண்பாடுகள் பிரதான வல்லரசுகளுக்கிடையில் பொருளாதார மற்றும் அரசியல் பதட்டங்களை தூண்டுவதுடன், அதேபோல் இப்புவிசார் அரசியல் மோதல்கள் நிதிநெருக்கடியையும் உக்கிரப்படுத்துகின்றன.

ஜேர்மன் வங்கியின் (Deutsche Bank) நிதி நிலையானது பல ஆண்டுகளாக கவலைக்குரியதாக இருந்து வந்திருக்கிறது, அத்துடன் அது “உலக நிதிய அமைப்புமுறையில் அதிர்ச்சிதரும் அமைப்புரீதியான ஆபத்திற்கு மிக முக்கிய பங்களிப்பாளராக” காணப்பட்டது என்று சர்வதேச நாணய நிதியம் கடந்த ஜூனில் கூறியிருந்தது. ஆனால் தற்போதைய நெருக்கடியின் உடனடிக் காரணம் அரசியலாக இருந்தது.

ஒரு நீண்ட விசாரணைக்குப் பின்னர், அமெரிக்க நீதித் துறையானது, 2008 நெருக்கடிக்கு இட்டுச்சென்ற அமெரிக்க குறைந்த பிணையுள்ள அடைமான சந்தை (sub-prime mortgage market) தொடர்பான மோசடி நடைமுறைகளுக்காக ஜேர்மன் வங்கியின் மீது 14 பில்லியன் டாலர்களை அபராதமாக விதிக்க கடந்தமாதம் முன்சென்றது. இந்த முடிவின் பொருளும் அதைச்சூழ உள்ள சூழ்நிலைமைகளும், அது ஜேர்மனியின் ஒரே பெரிய சர்வதேச வங்கியை தாக்குவதற்கான திட்டமிட்ட நகர்வு என சுட்டிக்காட்டியது.

இந்த முடிவானது, ஒரு தனிப்பட்டரீதியாக தீர்வை எட்டகூடிய வகையில் மூடப்பட்ட அறைக்குள்ளே விவாதிக்கப்படுவதைக் காட்டிலும், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் க்கு கசியவிடப்பட்டது. அது அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், குறிப்பாக ஜேர்மனிக்கும் இடையில் எழுந்துவரும் பதட்டங்களுக்கு மத்தியில் வெளிப்பட்டது.

அமெரிக்க அரசாங்கம் மற்றும் பெருநிறுவன வட்டாரங்களிடமிருந்தும் கடும் விமர்சனத்தை சந்தித்த ஒரு நடவடிக்கையான ஆப்பிள் நிறுவனத்தை 13 பில்லியன் யூரோக்கள் திருப்பி வரிசெலுத்தக் கோரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை அடுத்து  ஜேர்மன் வங்கி தொடர்பான நீதித்துறையின் நகர்வானது திருப்பித்தாக்குதலாக ஐரோப்பிய வட்டாரங்களில் பரவலாக கருதப்படுகின்றது. ஆப்பிள் மீதான அபராதம் தொடர்பான பதட்டம் அமெரிக்க முதலீட்டிற்காகவும் மற்றும் ஐரோப்பாவில் இலாபம் ஈட்டுவதற்கான அமெரிக்கா ஆதரவிலான அட்லாண்டிக் கடந்த வணிகம் மற்றும் முதலீட்டு பங்காண்மையை (TTIP) ஜேர்மனியும் பிரான்சும் தோல்வியடைந்துவிட்டது என அறிவிக்கப்பட்டதை அடுத்து அதிகரித்தது.

ஜேர்மன் வங்கியின் பங்கு மூழ்குதல் வெள்ளிக்கிழமை அன்று, குறைந்தபட்சம் இப்போதைக்காவது, அமெரிக்காவானது அதன் அபராதத்தை 5.4 பில்லியன் டாலர்களாக குறைப்பதற்கு தயாராகிவிட்டது என்ற செய்தியின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆயினும், இது நடந்துகொண்டிருக்கும் பொருளாதார மற்றும் நிதிய யுத்தத்தில் பெரும்பாலும் குறுகியகாலமே நீடிக்கக்கூடிய மோதல்தவிர்ப்பாகவே  நிரூபிக்கப்படும்.

இம்மோதல்கள் தற்காலிகமான நிகழ்வுப்போக்கல்ல அல்ல, மாறாக ஒன்றோடொன்று தொடர்புள்ள இரு புறநிலை அபிவிருத்திகளில் வேரூன்றியுள்ளன. அவை: குறைந்த வளர்ச்சி மட்டங்கள், வீழ்ச்சியுறும் வர்த்தகம், குறைந்த முதலீடு மற்றும் உற்பத்தித்திறனில் வீழ்ச்சி ஆகியவற்றால் குறிக்கப்படும் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை மற்றும் பங்கு மற்றும் பத்திர சந்தைகளில் உயர்வில் எதிரொலிக்கும் பெரும் நிதியக் குமிழிகளின் அபிவிருத்தியாகும்.

பெருகிவரும் நிதியச்சந்தைகள் மற்றும் உண்மையான பொருளாதாரத்தின் தேக்கநிலைக்கும் இடையே காணப்படும் முரண்பாடு என்றுமில்லாத வகையில் அதிகரித்த வெடிக்கும் வடிவத்தை எடுக்கின்றது. ஊகவணிகம், மத்திய வங்கியின் ஊக்கத்திட்டங்களாலும்  மற்றும் நிதிய சொத்துக்களின் ஊடாக சாதாரணமாக அதிகபணத்தை உருவாக்கலாம் என்பது ஒரு ஊகமையாகும். இறுதி ஆய்வில் இது செல்வம் உண்மைப் பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதில் முடிகின்றது.

பலதசாப்தங்களாக, நிதிய சொத்துக்கள் கிட்டத்தட்ட அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அளவில் சமமாக இருந்தன. ஆனால் 1980களில் ஆரம்பித்த நிதியூட்டல் அதியுயர்வானது, 2008 நெருக்கடியின்போது, இந்த சொத்துக்கள் உலக மொத்த உள்நாட்டு (GDP) உற்பத்தியை விடவும் 360 சதவீதம் அதிகமாக இருந்தன. இந்த வீதமானது உலகின் பிரதான மைய வங்கிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிதியமைப்புக்குள் ட்ரில்லியன் டாலர்களைக் கொட்டல் மற்றும் அதிகுறைந்த மற்றும் எதிர்மறை வட்டிவீதங்களைக் கூட ஏற்றல் என்ற அசாதாரண பணக் கொள்கைகளின் விளைவுக்குப் பின்னர் அதிகரிக்க மட்டுமே செய்தது.

ஜேர்மன் வங்கியின் நெருக்கடி மீது கருத்துரைத்து, ஒரு நிதிய ஆய்வாளர் ஃபைனான்சியல் டைம்ஸ்-க்கு சொன்னார்: ”உடனடியாகவோ அல்லது பின்னரோ தற்போதைய சந்தை திரித்தல்க்களுக்கான கடும் விலையை செலுத்த வேண்டியிருப்பதாக முதலீட்டாளர்கள் இப்போது கவலைப்படுகின்றனர்.” ஆயினும், சந்தை திரித்தலானது உலக நிதிய அமைப்பின் மிக அடித்தளங்களிலேயே உள்ள ஆழமான முரண்பாடுகளின் உடனடி வெளிப்பாடாக மட்டுமே இருந்தன.

நிதிச்சொத்தனாது பரந்த அளவில் உண்மையான செல்வத்தை இல்லாது செய்வதைக் கருதுகின்ற நிலைமைகளின் கீழ், நிதி மூலதனத்தின் ஒவ்வொரு பகுதியும் தங்கள் போட்டியாளர்களை அகற்றும் முயற்சியில் என்றுமில்லா வகையில் தங்கள் போட்டியாளர்களுக்கு ஆபத்தானவையாக கட்டாயம் திரும்புகின்றன.

இந்தப் போக்குகள் ஜேர்மன் வங்கியில் குறிப்பிட்ட வெளிப்பாட்டைக் காண்கின்றன. பல தசாப்தங்களாக, ஜேர்மனி பரந்தளவிலான தொழிற்துறையின் முக்கிய பகுதிகளுடன் அது நெருக்கமாக வேலைசெய்து வந்தது. ஆனால் உலக நிதி மூலதனத்தின் வளர்ச்சியானது, இந்த வணிக மாதிரி அதிகரித்த அளவில் தாக்குப் பிடிக்கத்தக்கதாக இல்லை, 1980களின் முடிவில் ஜேர்மன் வங்கியானது தன்னைத்தானே ஒரு உலக முதலீட்டு வங்கியாக மாறிக்கொள்ள விழைந்தது. மற்றும் தீவிரமாக அதன் போட்டியாளர்களை, குறிப்பாக அமெரிக்க வங்கிகளை இலக்கு வைத்தது, அமெரிக்க குறைந்த பிணையுள்ள அடைமானக் (sub-prime) சந்தையில் அதன் குற்றகர நடவடிக்கைககள், இந்த செயல்முறைகளின் அங்கமாக இருந்த கோல்ட்மன் சாக்ஸ் போன்ற அமெரிக்க போட்டியாளர்களின் குற்றகரச்செயல்களை எதிரொலிக்கின்றன.

அமெரிக்க அரசாங்கத்தால் ஒழுங்கு செய்யப்படும் பிணையெடுப்புக்களால் அமெரிக்க வங்கிகள் வலுப்படுத்தப்படும் அதேவேளை, ஜேர்மன் வங்கியின் நிதி நிலையானது சீராக அரிக்கப்பட்டு வருகிறது.

அது பிணையெடுப்பு இல்லாமல், போட்டியிடும்பொருட்டு சந்தையிலிருந்து நிறைய மூலதனத்தை உயர்த்த வேண்டியிருக்கிறது. ஆனால் பிரதான மத்திய வங்கிகளால் வகுத்து வைக்கப்பட்ட அதிகுறைந்த மற்றும் எதிர்மறை வட்டி வீத ஆட்சியானது, அதன் அடிப்படை வர்த்தக முன்மாதிரி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது மற்றும் இலாப எதிர்பார்ப்புக்கள் கீழிறக்கப்பட்டுள்ளன என்று அர்த்தப்படுத்துகிறது. ஜேர்மன் வங்கி தனது வரவு-செலவு இருப்புநிலைக் குறிப்பில் திரும்பசெலுத்தமுடியாத கடன்களை அதிகளவில் கொண்டிருந்தும் உலக வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அக்கறையுடன் புதுயிர்ப்பிப்பதற்காக சாத்தியங்களை அதற்கு வெகுதொலைவிலேயே இருக்கையில் அதன் எதிர்த்தரப்புக்கள் கடனுக்கான என்றுமில்லா அதிக வீதத்தில் இலாபங்களைக் கோருகின்றன.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டவாறு, “ஜேர்மன் வங்கியின் பெரும் பிரச்சினை அதற்கு மூலதனம் தேவை மட்டுமே என்பதல்ல. மாறாக எதனையும் உயர்த்துவது என்பது கடினமானது என்பதைக் காணும்”, ஆகையால் வரும் ஆண்டுகளில் அதன் மூலதனச் செலவை வெற்றிகாணக்கூடிய வகையில் தான் இலாபம் செய்ய முடியும் என்று முதலீட்டாளர்களை திருப்திப்படுத்துவதற்குப் போராட வேண்டி வரும்.”

போட்டிக் கும்பல்கள் தங்களின் சொந்த அந்தஸ்தை பலப்படுத்திக்கொள்வதற்கான முயற்சியில் ஒவ்வொன்றும் எல்லாவற்றுக்கும் எதிராக உதைத்துத்தள்ளும் யுத்தத்தினை அவை நடத்துகின்றதைப் போல, ஜேர்மன் வங்கி குறிவைக்கப்பட்டது. தனியார் முதலீட்டு நிதியங்கள் மற்றும் ஊகவணிகர்கள் வங்கிக்கு எதிராக பந்தயம் கட்ட போட்டியிட்டுக்கொண்டிருக்கின்றன.

வெள்ளிக்கிழமை அன்று பணியாளர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், ஜேர்மன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோன் கிறையன் இதன் பின்னணியிலுள்ள சக்திகளுக்கு மறைமுகமாகக் கூறினார், வங்கித் தொழிலில், நம்பிக்கைதான் எல்லாம், மற்றும் “அங்கு சந்தையில் செயல்படும் சக்திகள் தற்போது உள்ளன, அவை எம்மில் உள்ள இந்த நம்பிக்கையை பலவீனப்படுத்த விரும்புகின்றன.”

ஜேர்மன் வங்கி மட்டுமே இலக்கு அல்ல. மோதலின் பரந்த பரிமாணங்கள் ஐரோப்பிய ஆணைக்குழுவின் துணைத்தலைவர் Valdis Dombrovskis ஆல் இந்த வார அறிக்கையில் குரல் கொடுக்கப்பட்டது. உலக வங்கிமுறை  செயல்பாட்டுக்கு அமெரிக்காவினால் சீர்திருத்தங்கள் நெருக்கப்படுகின்றன, அவை “ஐரோப்பிய வங்கித்துறையால் தாங்கப்படும் மூலதனத் தேவைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு” வழிவகுக்கும், அது ஏற்றுக்கொள்ளப்படாது என்று அவர் அறிவித்தார்.

அமெரிக்காவை நேரடியாக பெயர்கூறாத அதேவேளை, அவர் சொன்னார்: “நாம் ஐரோப்பாவிற்காக வேலை செய்யும் ஒரு தீர்வை விரும்புகிறோம் மற்றும் எமது உலகப் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் எமது வங்கிகளை ஒரு சாதகமற்ற நிலையில் வைக்க விரும்பவில்லை.”

உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் தீர்க்கப்படாத முரண்பாடுகளின் வழியில் புவிசார் அரசியற் பதட்டங்கள் தூண்டப்படுகின்றன. ஜேர்மன் வங்கி (Deutsche Bank)  நெருக்கடியில் எடுத்துக்காட்டுகின்றவாறு அவை ஒன்றை ஒன்று தூண்டிக்கொண்டு இருக்கின்றன என்பது உள்ளார்ந்த முக்கியத்துவம் உடையதாக இருக்கின்றன. வலியும் வேதனையும் மிகுந்த 20வது நூற்றாண்டின் வரலாறு எடுத்துக்காட்டுவதைப்போல், சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் தடுக்கப்பட்டாலொழிய, இது தவிர்க்க முடியாமல் உலக யுத்தத்திற்கு இட்டுச்செல்லும் முதலாளித்துவ அமைப்பின் உலக நிலைமுறிவின் ஐயத்திற்கிடமில்லா வெளிப்பாடாகும்.