ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan government raises VAT following IMF demands

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை அடுத்து பெறுமதி சேர் வரியை அதிகரிக்கின்றது

By Saman Gunadasa 
26 September 2016

இலங்கை அமைச்சரவை, முன்னர் பரவலான எதிர்ப்பின் காரணமாக விலக்கிக்கொண்ட பெறுமதி சேர் வரியை (VAT) அதிகரிப்பதற்கான மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்த செப்டெம்பர் 13 அன்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

11 முதல் 15 சதவீதம் வரை 4 சதவீதத்தால் வரி அதிகரிக்கப்படுவதனாது பல நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அது தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் மத்தியதர வர்க்கத்தின் கீழ் பிரிவுகளினதும் வாழ்க்கைத் தரத்தை கடுமையாகப் பாதிக்கும்.

வங்கிக்கு வழங்கிய பல்வேறு உறுதிமொழிகளின் முன்னேற்றத்தை பரிசீலிக்க சர்வதேச நாணய நிதிய குழு ஒன்று இலங்கைக்கு இரண்டு வார விஜயத்தை மேற்கொண்டதை அடுத்தே அமைச்சரவை இந்த முடிவை எடுத்தது.

அரசாங்கம் 15 சதவீத வாட் (VAT) வரியை அதிகரிக்காவிட்டால், “நவம்பரில் சர்வதேச நாணய நிதிய குழுவின் நிர்வாக சபைக்கு இரண்டாவது கடன் தவணையை விடுவிக்குமாறு முழு மனதுடன் பரிந்துரைக்க முடியாது" என்று நிதியக் குழுவின் தலைவர் ஜீவோ லீ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஜூன் மாதம், நிதியமானது அந்நிய செலாவனி நெருக்கடி மற்றும் நிதி நெருக்கடியை தவிர்ப்பதன் பேரில் இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்கு ஒப்புதல் அளித்தது. அமெரிக்க-சார்பு சிறிசேன-விக்கிரமசிங்கவின் அரசாங்கம், நிதிப் பற்றாக்குறையை தீவிரமாக குறைத்து, வாட் வரியை அதிகரித்து மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவது உட்பட, பல்வேறு “பொருளாதார சீர்திருத்தங்களை" முன்னெடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலியே இந்த கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எவ்வாறெனினும், வாட் வரி அதிகரிப்பானது, தொழிலாளர்கள் மற்றும் சிறு வர்த்தகர்களின் வளர்ந்து வந்த எதிர்ப்பின் மத்தியில் ஆகஸ்ட்டில் தற்காலிகமாக கைவிடப்பட்டது. வரி அதிகரிப்பின் வர்த்தமானி அறிவித்தலில் ஒழுங்குமுறை பிழை இருப்பதாக கூறி, கடந்த ஜூலையில் வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பை, அதிக வாட் வரி உயர்வை உடனடியாக செயல்படுத்தாமல் இடைநிறுத்தி வைத்துக்கொள்வதற்கான ஒரு சட்ட போர்வையாக அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டது.

நாணய நிதிய ஆய்வு குழுவின் சமீபத்திய அறிவிப்பைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரட்ன, “நாட்டின் நிதி நிலைமை பயங்கரமான நெருக்கடியில் இருப்பதால், வாட் வரி திணிப்புக்கு [நவம்பர் நடுப்பகுதியில்] புதிய வரவு-செலவுத் திட்டம் வரும் வரை அரசாங்கத்தால் காத்திருக்க முடியாது" என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

சிறு வியாபாரிகளை அமைதிப்படுத்தும் ஒரு முயற்சியாக, சில்லறை வர்த்தகத்துக்கு வாட் வரி அதிகரிப்பு வரையறையை வருடத்திற்கு 15 மில்லியன் ரூபாவில் இருந்து (103,000 டாலர்) 50 மில்லியன் ரூபா வரை அதிகரித்தல் போன்ற சில ஒப்பனை மாற்றங்களும் மசோதாவில் உள்ளடக்கப்பட்டன. எனினும், வாட் இப்போது, முன்பு விலக்களிக்கப்பட்ட சுகாதாரம், தொலைத்தொடர்பு போன்ற அத்தியாவசிய சேவைகள் மற்றும் பால் மா உட்பட அடிப்படை உணவுப் பொருட்களுக்கும் விதிக்கப்படும்.

தொலைத்தொடர்பு சேவைகள் மீதான வாட் வரி 50 சதவீதமாக இருப்பதோடு தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனைக் கட்டணங்கள் மற்றும் சத்திரசிகிச்சைகளில் கூர்மையான உயர்வுகள் இருக்கும். குறைந்த செலவிலான வீட்டுத் திட்டங்கள் மீதான வாட் வரி விலக்களிப்பு குறைக்கப்பட உள்ளதுடன் இப்போது 5 மில்லியன் டாலருக்கும் குறைவான மதிப்புள்ள குடியிருப்பு விடுதி திட்டங்கள் மீது அறவிடப்படும்.

அதிக வாட் அறவீட்டுக்கும் மேலாக, அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீது விசேட விற்பனைப் பண்ட தீர்வைகளை அதிகரித்துள்ளது. எடுத்துக்காட்டாக, சீனி மீதான தீர்வை, கிலோ ஒன்றுக்கு கிட்டத்தட்ட 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதிக்கான ஆடை உற்பத்தியின் உள்ளூர் விற்பனை மீது 75 ரூபா தீர்வை விதிக்கப்படும்.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடந்த ஆண்டு 6.7 சதவீதமாக இருந்த வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை, அரசாங்கம் இந்த ஆண்டு 5.4 சதவீதமாக குறைக்கும் என சர்வதேச நாணய நிதிய குழுவுக்கு மீண்டும் உறுதிப்படுத்தினார். அவர், பற்றாக்குறை அடுத்த ஆண்டு 4.7 சதவீதமாக குறைக்கப்படுவதோடு 2020ல் 3.5 சதவீதம் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை அடையும் என்றார்.

அரசாங்கம் ஏற்கனவே தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் ஹில்டன் ஹோட்டல், கிராண்ட் ஹயாத் மற்றும் லங்கா ஹொஸ்பிடல் போன்ற பல அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை விற்க நடவடிக்கை எடுத்துள்ளது. மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்கள், இந்த அரசாங்க நிறுவனங்களுக்கான அரசு நிதி உதவிகள் வெட்டப்பட வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, மேலும் அதிகரிக்கப்படும்.

தற்போதைய உலக பொருளாதார மந்த நிலையினால் பாதிக்கப்பட்டு, ஏற்றுமதிகள் சரிந்து மற்றும் வெளிநாட்டு முதலீடு குறைந்து, இலங்கையின் பொருளாதார பிரச்சினைகள் ஆழமடைந்துள்ளன.

* வர்த்தக பற்றாக்குறை, இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் 4.2 பில்லியன் டாலரை எட்டியது. இது முந்தைய ஆண்டை விட 2.2 சதவீதம் அதிகரிப்பாகும், மற்றும் இந்த ஆண்டு இது 8.5 பில்லியன் டாலரை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* ஆண்டின் முதல் பாதியில், வெளிநாட்டு முதலீடு 4.5 பில்லியனாக வீழ்ச்சியடைந்தது. இது முந்தைய ஆண்டை விட 52.5 சதவீதம் மிகப் பெரிய சரிவாகும்.

* இந்த ஆண்டின் முதல் பாதியில் ஏற்றுமதி வருவாய், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.8 சதவிகிதம் குறைந்துள்ளது.

இலங்கை பொருளாதாரத்தின் பலவீனம் பற்றி ஊடக கருத்து ஒன்றில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியலாளர் சிறிமல் அபேரத்ன, நாட்டின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், இன்னமும் மந்த நிலையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். "அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அதன் வட்டி வீதத்தை உயர்த்தினால், உலக பொருளாதாரம் மிகப் பெரிய பொருளாதார அழுத்தத்தை எதிர்கொள்ளும். கடன் செலவு கணிசமாக அதிகரிக்கும் என்பதால் இது இலங்கை பாதிக்கும்," என அவர் எச்சரித்தார்.

அந்நிய முதலீடுகளுக்காக ஏங்கும் அரசாங்கம், கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிட்டு ஒரு தொகை பொது நிறுவனங்களை விற்றுக்கொண்டிருக்கின்றது. கொழும்பு பங்குச் சந்தை தலைவர் வஜிர குலதிலக, “அரசாங்கம் பங்குச் சந்தை ஊடாக இந்த நிறுவனங்களில் தன் பாகங்களை விநியோகித்த பின், இந்த நிறுவனங்கள் தானாக கம்பனிகளாக பட்டியலிடப்பட்டும்" என ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

நாட்டின் அந்நிய செலாவனி, முக்கியமாக மத்திய கிழக்கில் இருந்து இலங்கை தொழிலாளர்கள் பணம் அனுப்புவதில் பெரிதும் நம்பியுள்ளது. சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பொருளாதார ஆய்வாளர் நிமால் சந்தரட்ன சமீபத்தில் தெரிவித்ததாவது: "இந்த வெளிநாட்டு பணம் இல்லையேல், நாட்டின் வெளிப்புற நிதி ஒரு பரிதாபமான நிலையில் இருக்க வேண்டும்."

உண்மையில், மத்திய கிழக்கு நாடுகள், வெளிநாட்டு வருவாயில் 60 வீதத்தை பூர்த்தி செய்கின்றன -இந்த ஆண்டு முதல் பாதியில் 3.6 பில்லியன் டாலராவதோடு அது இலங்கை ஏற்றுமதி வருமானத்தின் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டதாகும். எனினும், வெளிநாட்டு வருமானத்தின் வளர்ச்சி, இந்த ஆண்டு 5.6 வீதத்துக்கு, முந்தைய ஆண்டுகளை விட 10 சதவீதம் குறைந்துள்ளது.

ஆட்டங்காணும் எண்ணெய் விலை, சிரியாவில் உக்கிரமடைந்து வரும் போர் மற்றும் லிபியா மற்றும் ஈராக்கில் நீடித்த நெருக்கடிகளும், மத்திய கிழக்கில் இருந்து வரும் வெளிநாட்டு வருமானத்தை சார்ந்துள்ள ஏழை நாடுகள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே சரிந்துவரும் வாழ்க்கை நிலைமையின் மேலான புதிய வாட் மற்றும் பிற வரி அதிகரிப்புக்கள், தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் வெகுஜனப் போராட்டங்கள் வெடிப்பதற்கு களம் அமைக்கின்றது.

பல மாதங்களாக, சம்பள உயர்வு கோரி அல்லது அத்தியாவசிய பொருட்களுக்கான மானியக் குறைப்பை எதிர்த்து, அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிராக மற்றும் இலவசக் கல்வி வெட்டுக்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் அல்லது எதிர்ப்புக்கள் இல்லாமல் ஒரு நாள் கூட கடக்கவில்லை.