ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Build an international movement against imperialist war!

ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்!

Socialist Equality Party
3 November 2016

இந்த சனிக்கிழமையன்று, நவம்பர் 5 ஆம் தேதி, சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் மிச்சிகன் டெட்ராய்டில் உள்ள வாய்ன் மாகாண பல்கலைக்கழத்தில் "முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்" எனும் ஒரு மாநாட்டை நடத்துகின்றன. இராணுவவாதம் மற்றும் மூன்றாம் உலக போர் அபாயத்திற்கு எதிராக அமெரிக்க, கனேடிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு, உலக நிலைமையை மீளாய்வு செய்து ஓர் அரசியல் மூலோபாயம் மற்றும் திட்டத்தை வரைவதே இம்மாநாட்டின் நோக்கமாகும்.

ஒட்டுமொத்த அரசியல் ஒழுங்கமைப்பின் ஆழ்ந்த நெருக்கடியை அம்பலப்படுத்தி உள்ள அமெரிக்க தேர்தல்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இம்மாநாடு நடத்தப்படுகிறது. தேர்தல் முடிவு இதுவரை தெரியாது என்றாலும், கிளிண்டன் அல்லது ட்ரம்ப் என அடுத்த நிர்வாகம் யார் தலைமையில் இருந்தாலும், அது வெளிநாட்டில் ஒரு போர் கொள்கையையும், உள்நாட்டில் சமூக மற்றும் அரசியல் பிற்போக்குத்தன கொள்கையையுமே பின்பற்ற உள்ளது.

இம்மாநாடு உலக நெருக்கடியை, அதற்கடியில் உள்ள புறநிலை சக்திகளை, தொழிலாள வர்க்கம் ஏற்க வேண்டிய அரசியல் மூலோபாயத்தை, மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு புதிய இயக்கத்தைக் கட்டமைக்க அவசியப்படும் உறுதியான பணிகளைப் பகுத்தாராயும். அது பின்வரும் திட்டநிரலை அடிப்படையாக கொண்டிருக்கும்:

1. உலகளாவிய நெருக்கடியும், மூன்றாம் உலக போர் அபாயமும்

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு மற்றும் முதல் வளைகுடா போர் நடந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னர், "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" தொடங்கப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்கா தொடங்கிய முடிவில்லா பிராந்திய போர்கள், ரஷ்யா மற்றும் சீனா உட்பட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகப்பெரிய போட்டியாளர்களுடன் அதிகரித்தளவில் ஒரு நேரடியான உலகளாவிய மோதலாக அபிவிருத்தி அடைந்துள்ளன. மக்களின் முதுகுக்கு பின்னால், தளபதிகளும் மற்றும் வாஷிங்டன் சிந்தனை குழாம்களும் உலகின் புதிய ஏகாதிபத்திய துண்டாடலுக்கான நிபந்தனைகள் மீது சண்டையிடுவதில் தேசங்களுக்கு இடையிலான ஒரு மிகப்பெரும் மோதலுக்கு திட்டங்களை வரைந்து வருகின்றன.

2. 2016 அமெரிக்க தேர்தல்களும், போரும் மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியும்

இராணுவ மற்றும் வெளியுறவு கொள்கை ஸ்தாபகத்தின் செல்வாக்கான பிரிவுகளால் ஆதரிக்கப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், சிரியாவில் "விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியை" உருவாக்க ஆதரவளிக்கிறார், இது ரஷ்யாவுடனான போர் என்பதையே அர்த்தப்படுத்தும் என்று முன்னணி தளபதிகள் கூறுகின்றனர். குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனால்ட் ட்ரம்ப் அவரது "முதலிடத்தில் அமெரிக்கா" (America First) திட்டத்திற்காக சீனா மீது ஒருமுனைப்பட்டுள்ளார், அங்கே ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக அமெரிக்கா அதிகரித்தளவில் ஆத்திரமூட்டும் இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்க தேர்தல் அதன் இறுதி முடிவில் தடுமாறிக் கொண்டிருக்கின்ற நிலையில், கிளிண்டனும் சரி ட்ரம்ப் உம் சரி முறைகேடு மற்றும் மோசடி-பழியுரைகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பின்னால் ஆளும் வர்க்கத்தின் வெவ்வேறு கன்னைகள் அவற்றின் உள்முரண்பாடுகள் மீது சண்டையிட்டு வருகின்றன என்றாலும் கூட, அவை அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் மத்திய பிரச்சினைகளை மூடிமறைப்பதில் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்காவினுள் நிலவும் வெடிப்பார்ந்த சமூக பதட்டங்களை வெளியில் உள்ள ஒரு எதிரிக்கு எதிராக வெளிப்புறமாக திருப்பிவிடுவதே அமெரிக்க போர் உந்துதலுக்குப் பின்னாலுள்ள பிரதான நோக்கமாகும். மக்களின் எந்தவிதமான அங்கீகாரமும் இல்லாமல் அமைப்புகளால் ஆழமாக பிளவுபட்டு தலைமை தாங்கப்படும் ஒரு நாட்டை, போரைக் கொண்டு ஐக்கியப்படுத்துவதே  நோக்கமாகும். ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியினர் பரந்த பெருந்திரளான மக்களால் வெறுக்கப்படுகின்றனர் என்பதோடு, அந்நாட்டின் நவீன வரலாற்றில் இவ்விரு ஜனாதிபதி வேட்பாளர்களுமே மிகவும் செல்வாக்கிழந்தவர்களாக உள்ளனர்.

3. ஏகாதிபத்திய-எதிர்ப்பு போராட்டத்திற்கான மூலோபாயம்: வரலாற்று படிப்பினைகள்

ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டம் என்பது தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றி இருக்க வேண்டும் மற்றும் ஒரு சர்வதேசியவாத சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதையே வரலாறு எடுத்துக்காட்டுகிறது. ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 38 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட முதலாம் உலக போர் கொடூரங்களில் இருந்து ரஷ்ய புரட்சி வெடித்தெழுந்தது. சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச சீரழிவிற்கான எதிர்ப்பில் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலம், 60 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்ற இரண்டாம் உலக போருக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்டது.

பனிப்போர் உந்தமடைந்திருந்ததற்கு பிந்தைய எந்தவொரு காலப்பகுதியையும் விட உலக போர் அபாயம் இன்று மிகவும் உடனடியாக இருக்கின்ற போதினும் கூட, அமெரிக்காவிலோ அல்லது சர்வதேச அளவிலோ எந்தவொரு போர்-எதிர்ப்பு இயக்கமும் செயல்பாட்டில் இல்லை என்பது ஓர் அசாதாரணமான அரசியல் உண்மையாகும். ஆளும் வர்க்கத்தின் சகல கட்சிகளும் போரை ஆதரிக்கின்றன, அதேவேளையில் உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் போலி-இடது அமைப்புகள் ஏகாதிபத்திய தலையீட்டின் மிகவும் உணர்ச்சிப்பூர்வ ஆதரவாளர்களாக மாறி உள்ளன.

நவம்பர் 5 ஆம் தேதி மாநாடு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்டுள்ளது, அது வலியுறுத்துவதாவது:

போருக்கு எதிரான போராட்டமானது, சமூகத்தின் தலைச்சிறந்த புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்;

போருக்கு அடிப்படை காரணமான பொருளாதார அமைப்பான முதலாளித்துவத்திற்கு எதிராக அல்லாமல், போருக்கு எதிரான எந்தவொரு ஆழ்ந்த போராட்டமும் இருக்க முடியாது என்பதால் அது முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிசத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்;

அது ஆளும் வர்க்கத்தின் சகல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு எதிரானதாக மற்றும் சுயாதீனமானதாக இருக்க வேண்டும்;

அனைத்திற்கும் மேலாக, அது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஓர் ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் பாரிய சக்தியை அணிதிரட்டுவதில், சர்வதேசிய தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்.

4. போருக்கு எதிரான சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புதல்

ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு புதிய இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும்! ஏகாதிபத்திய போர் உந்துதலுக்கு அடியிலிருக்கும் அதே முதலாளித்துவ நெருக்கடி, சோசலிச புரட்சிக்கான புறநிலையான நிலைமைகளையும் உருவாக்குகிறது.

போர் வளர்வதோடு சேர்ந்து, வர்க்க போராட்டமும் தீவிரமடைந்து வருகிறது. ஒரு புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதே மத்திய பணியாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் செல்வாக்கு உலகின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் விரிவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் மற்றும் பல்கலைக்கழகத்திலும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பின் கிளைகள் ஸ்தாபிக்கப்பட வேண்டும். வரவிருக்கின்ற போராட்டங்களுக்குத் தயாரிப்பு செய்ய, பிரதான தொழிற்சாலைகளிலும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் முக்கிய பிரிவுகளுக்கு இடையிலும் ஆலை மற்றும் வேலையிட கமிட்டிகள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கத்திற்குத் தயாரிப்பு செய்வதில் நவம்பர் 5 மாநாடு ஒரு மைல்கல்லாக விளங்கும்.