ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Death toll mounts, as India-Pakistan tensions seethe

இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் கொந்தளிக்கையில்  இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கின்றது

By Sampath Perera and Keith Jones 
24 November 2016

இந்தியாவினாலும் பாகிஸ்தானினாலும் நிர்வகிக்கப்படும் காஷ்மீர் பகுதிகளை பிரிக்கும் எல்லை கட்டுப்பாட்டு கோடு (Line of Control-LoC) பகுதி ஊடாக நேற்று நடத்தப்பட்ட இந்திய பீரங்கிப்படை மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல்களில் 10 பாகிஸ்தானிய பொது மக்கள் மற்றும் 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், மேலும் 18 பேர் காயமடைந்தனர்.

நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள லவாத்தில், உள்ளூர் அதிகாரி ஒருவர் விவரித்ததுபோல "சிறிய மற்றும் பெரிய ஆயுதங்கள்" கொண்டு ஒரு பேருந்து தாக்கப்பட்டபோது, அதில் பயணித்துக் கொண்டிருந்த 9 அப்பாவி பொது மக்கள் இறந்தனர். இந்திய இராணுவம் திட்டமிட்டே பேருந்தினையும், தாக்குதல் நடந்த இடத்திற்கு விரைந்த முதலுதவி வாகனத்தையும் இலக்குவைத்து தாக்கியதாக இஸ்லாமாபாத் குற்றஞ்சாட்டியது.

பொதுமக்கள் மீது இலக்குவைத்து தாக்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டை புது தில்லி நிராகரித்து விட்டது. ஆனால் இந்திய இராணுவம், நேற்று முன்தினம் நிகழ்ந்த மூன்று இந்திய வீரர்களின் இறப்புக்கு பதிலடியாக "கடுமையாக பழிவாங்கும்" விதத்தில் அதன் அச்சுறுத்தலை தெரிவிக்க நேற்று எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தீவிர துப்பாக்கி தாக்குதலை நடத்தியது. இந்த மூவரில், ஒருவரது உடல் "சிதைக்கப்பட்டிருந்தது" என்று இந்தியா குற்றஞ்சாட்டுவதுடன் இந்த படுகொலைக்கு காரணமான இந்திய-எதிர்ப்பு இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவியுடன் கூடிய ஆதரவு பாகிஸ்தானால் வழங்கப்பட்டுவருகிறது என்றும் புது தில்லி கூறுகிறது.

புதன்கிழமை நடத்தப்பட்ட எல்லை தாண்டிய சரமாரியான குண்டுவீச்சு தாக்குதலை விவரித்து ஒரு இந்திய பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் ஹிந்துவுக்கு அளித்த செய்தியில், பாகிஸ்தான் இராணுவ நிலைகளின் மீது "நாங்கள் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தியுள்ளோம்," மேலும், "எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாள் முழுவதிலும் பதிலுக்குபதிலான துப்பாக்கிசூடு நடைபெற்றது" என்று கூறினார்.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டிற்கு வெகுஅருகாமையிலுள்ள ஊரி இந்திய இராணுவ தளத்தில் இஸ்லாமியவாதிகள் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாதிகள் செப்டம்பர் 18ல் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் பொறுப்பு என்று இந்திய இந்துமத மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியின் (BJP) அரசாங்கம் அறிவித்ததிலிருந்து, கடந்த இரண்டு மாதங்களாக தெற்கு ஆசிய போட்டி அணுஆயுத நாடுகளான இவை இரண்டும் பெருகிவரும் மோதல்களுக்கு இடையில் சிக்கியுள்ளன.

சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதி குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் 2003ல் ஏற்படுத்தப்பட்டிருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் சீர்குலைந்துவிட்டது என்பது தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் செய்தி ஊடகங்களிலும் மிகப்பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, இராஜதந்திர சச்சரவுகள், எல்லை தாண்டிய தாக்குதல்கள், பெருகிவரும் இறப்புக்கள், மற்றும் ஆத்திரமூட்டும் போர் அச்சுறுத்துதல்கள் இவைகளே "புதிய நடைமுறையாக" இப்பகுதியில் ஆகிவிட்டது. இதனை, மிகச்சாதாரணமாக சொல்வதானால் கூட, தற்போது நிலவும் சூழ்நிலை மிக எளிதில் தீப்பற்றும் நிலைக்கு ஒப்பானது. ஒன்று தற்செயலான விபத்தாகவோ அல்லது திட்டமிட்ட நிகழ்வாலோ ஒரு ஒட்டுமொத்த போர் தூண்டுவிடப்படலாம்.

கடந்த வார ஒரு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, செப்டம்பர் இறுதிக்கு பின்னர் அப்பகுதியில் 200 க்கும் மேற்பட்ட தனி சம்பவங்களாக எல்லை தாண்டிய பீரங்கி மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுமே முரண்பட்ட இறப்பு எண்ணிக்கைகளையே அறிவிக்கின்ற நிலையில், இந்த தாக்குதல் பரிவர்த்தனைகளினால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு நூறினை நெருங்கியிருக்கும் என்றே தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது.

"இராணுவத்தினரின் படுகொலைக்கு எதிராக இருபுறமுமே கடுமையான பதிலடி தாக்குதல்களை அதிகரிக்க நேரிடுவதும், இன்னும் சில சமயங்களில் பதிலடியாக சிரச்சேதம் செய்யவேண்டியதும் நிகழும்" என்று "இரண்டு இராணுவத்தினரும் அறிந்ததே," என்று எக்ஸ்பிரஸ் அறிக்கை தொடர்ந்தது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி ஊடாக பாகிஸ்தான் 125,000 துருப்புக்களை திரட்டியிருப்பதாக  கூறியிருக்கும் அதேவேளையில், இந்தியா, அதிலிருந்து ஒரு படி மேலாக, அப்பகுதியில் 225,000 துருப்புக்கள் வரை அணிதிரட்டிவிட்டது.

இந்தியா அதன் போர் தயார்நிலையினை மேம்படுத்தும் முனைப்பாக, குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் வாங்குவதற்கு அவசரகால ஆணைகளை விடுத்துள்ளது. IHS Jane's இன்படி, இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவிலிருந்து 2016 இறுதிக்குள் 750 மில்லியன் டாலர் மதிப்பிலான வெடிபொருட்கள் மற்றும் சிறப்பு படை உபகரணங்கள் கொள்முதலுக்கு புது தில்லி விரைந்து செயல்பட்டுள்ளது.

பாகிஸ்தானிய இராணுவம் மற்றும் அரசாங்க தலைவர்கள் வெளியிட்டுள்ள சீற்றமடைந்த பல எதிர் அறிக்கைகள் ஒருபுறம் இருக்க, பாகிஸ்தான் உடனான "மூலோபாய கட்டுப்பாடு" எனும் இந்தியாவின் பிரபல்ய கொள்கை மீதான இந்தியாவின் நிராகரிப்பு, மேலும் கடந்த செப்டம்பரில் பாகிஸ்தான் உள்ளே இந்தியாவின் எல்லை தாண்டிய தாக்குதல் குறித்து அமெரிக்கா மற்றும் உலகின் ஏனைய பிற வல்லரசுகளும் கண்டிக்கத் தவறியது இவற்றினால் இஸ்லாமாபாத் தெளிவாக கதிகலங்கி போய்விட்டது. இந்தியாவின் இராணுவ வலிமைக்கான நிரூபணமாகவும் மற்றும், எந்தவொரு சக்திவாய்ந்த வெடிப்பிலான தாக்குதல்களையும் மற்றும் எதிர் தாக்குதல்களையும் தவிர்ப்பதை முன்னிட்டு, பாகிஸ்தான் உள்ளே அதன் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் வெளிவருவதை தவிர்த்துவர காரணமாக இருந்த ஒரு நான்கு தசாப்த கால பழமையான கொள்கையினை பிஜேபி அரசாங்கம் கைவிட்டு இருப்பது, தொடர்ந்து தனது போர் விருப்பத்தை வலியுறுத்தும் வகையிலான புதிதாக அறியப்பட்ட போர் தயார்நிலைக்கு அதனை உட்படுத்தி இருப்பது, இவற்றுக்கெல்லாம் அடிப்படையாகவே இந்த தொடர் தாக்குதல்கள் அம்பலப்படுத்தப்பட்டுவருகின்றது.

பதட்டங்களை தணிக்கும் முயற்சியில், இந்தியாவின் "நுட்பமான தாக்குதல்கள்" ஏதும் நடக்கவில்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து பகிரங்கமாக கூறுகிறது. இருப்பினும், இந்தியாவிற்கு கண்டனம் தெரிவிக்க உலக தலைவர்கள் தவறியமை குறித்த அதன் கசப்பான புகார்களால் இந்த கூற்று பொய்யாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, கடந்த செப்டம்பரில் இருந்து கடைசி வாரம் வரை பல வாரங்களாக நீண்டுள்ள தீவிர எல்லை தாண்டிய துப்பாக்கி சூடு தாக்குதல்களில் எந்தவொரு பாகிஸ்தான் இராணுவத்தினரும்  கொல்லப்படவில்லை என்றும் பாகிஸ்தான் இராணுவம் மறுத்து உள்ளது.

நவம்பர் 14ல் திடீரென இது மாறிவிட்டது, ஒரே இரவில் இந்திய துப்பாக்கி சூடு தாக்குதல்களினால் ஏழு பாகிஸ்தானிய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் இராணுவம் அன்றுதான் அறிவித்தது.

இந்தியாவுடன் ஏதேனும் ஒரு வகையில் பேச்சுவார்த்தை தொடங்கும் ஒரு முயற்சியாக, பாகிஸ்தான் பிரதம மந்திரி நவாஸ் ஷெரிப் இன் உயர்மட்ட வெளியுறவு கொள்கை ஆலோசகரான சர்தாஜ் அஜிஸ் அடுத்த வார துவக்கத்தில் புது தில்லயில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் குறித்த "ஆசியாவின் மையம்" எனும் வருடாந்திர பிராந்திய மாநாட்டில் கலந்து கொள்வார் என்று இஸ்லாமாபாத் அறிவித்துள்ளது. இருப்பினும், இந்தியா அஜிஸ் இன் வருகை குறித்து எந்தவித ஆர்வமும் காட்டிக்கொள்ளவில்லை.

இந்தியாவின் "அப்பாவி பொது மக்களின் இறப்புகளில் முடியும் தொடரும் அப்பட்டமான ஆக்ரோஷத்தன்மையினால்...." என்று ஷெரிப் நேற்று கண்டனம் தெரிவித்தார், மேலும் புது தில்லி இந்த பிராந்தியத்தை முழுப்போரின் விளிம்பிற்கு இட்டு செல்கிறது என்று மறைமுகமாக எச்சரித்ததுடன், "இந்தியா தற்போதை நிலைமையின் தீவிரத்தன்மையினை புரிந்துகொள்ள தவறிவிட்டது" என்றும் கூறினார்.

"காஷ்மீர் இல் இந்திய பாதுகாப்பு படையினர் புரிந்துவரும் பெரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அட்டூழியங்கள்" மீதான சர்வதேச கவனத்தை திசைதிருப்பும் நோக்கத்தோடு புது தில்லி இஸ்லாமாபாத் உடனான போர் அழுத்தங்களை அதிகரித்துக் கொண்டே போகிறது என்று பாகிஸ்தானின் வழக்கமான குற்றச்சாட்டையே ஷெரிப்பும் வலியுறுத்தினார்.

உண்மையிலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் ஆளும் உயரடுக்கினர் அவர்களது ஏழு தசாப்த காலம் பழமைவாய்ந்த இராணுவ மூலோபாய போட்டிகளின் ஒரு அங்கமாக கருதி காஷ்மீர் மக்கள் விவகாரங்களை சூழ்ச்சியுடனும், தவறான நோக்கத்துடனுமே கையாண்டு வந்துள்ளனர். இந்திய துணைக்கண்டத்தில் வகுப்புவாத பிரிவினையை வேரூன்ற செய்து, ஒரு வெளிப்படையான முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் ஒரு பெரும்பான்மை இந்துத்துவ இந்தியா, என்ற வகையிலான இந்த போட்டிகள், தற்போது தெற்காசிய மக்களை அணுஆயுத போரில் மூழ்கடிக்கும் அச்சுறுத்தல்களில் கொண்டு நிறுத்தியுள்ளது. மேலும் இது இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளின் தேசிய முதலாளித்துவத்தின் பிற்போக்குத்தனமான தன்மைகளை உருவகப்படுத்தி காட்டுவதுடன், அவரவர் ஆட்சியின் கீழ் சுதந்திரத்தின் முற்றுமுழுதான தோல்வியையும் காட்டுகின்றது.      

உலக பொருளாதார நெருக்கடியினால் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், இந்தியா ஆசியாவில் தனது அதிகாரத்துவத்தை நிலைநாட்டுவதற்கு சீனாவுடனான அதன் போட்டியில் இன்னும் மிக பின்தங்கிய நிலையிலேயே வீழ்ந்து கிடப்பது குறித்த அச்சமும் நிறைந்துள்ளது. இந்நிலையில், இந்திய முதலாளித்துவ வர்க்கம் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் நரேந்திர மோடியை அதிகாரத்திற்கு கொண்டுவந்தது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான மிக கடுமையான கொள்கைகளை பின்பற்ற வைப்பதற்கும், மேலும் மிகுந்த துணிவுடன் உலக அரங்கில் அவர்களது நலன்களை உறுதிப்படுத்துவதற்கும் தான் என்பதாகும்.

பாகிஸ்தான் உடனான "மனோபாவத்தை" மாற்றுவது குறித்து இந்தியா தீவிரமாக உள்ளது என்பதை தெளிவுபடுத்த மோடி தனது விரைந்த நடவடிக்கைகள் மூலமாக சமிக்ஞை காட்டியுள்ளார். அதிகாரத்தை கையில் எடுத்து ஒரு சில வாரங்களிலேயே, எல்லை கட்டுப்பாட்டு கோடு ஊடான பகுதியில் மிக தீவிரமான இராணுவ தயார்நிலைக்கு அங்கீகாரம் அளித்தார். இன்னும் குறிப்பிடத்தக்க வகையில், தெற்கு ஆசியா மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் இந்தியா பிராந்திய மேலாதிக்க சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்ற அதன் இலட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ள அமெரிக்காவின் ஆதரவினை அதிகரிக்கச்செய்யும் ஒரு நோக்கமும் இதில் அடங்கும். மேலும், வாஷிங்டனின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" எனும் சீனா எதிர்ப்பு கொள்கையிலும் மோடி ஒருங்கிணைந்துள்ளார்.

இந்தியாவின் ஒரே இஸ்லாமிய பெரும்பான்மை மாகாணமான ஜம்மு-காஷ்மீரில் கடந்த கோடை காலத்தில் வெடித்த  வெகுஜன கொந்தளிப்பிற்கு விடையிறுப்பாகவும் மற்றும் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தினால் (CPEC) உதாரணமாக காட்டப்படும் சீனா-பாகிஸ்தான் கூட்டணியின் விரைந்த விரிவாக்கத்திற்கு பிரதிபலிப்பாக பிஜேபி அரசாங்கம் இஸ்லாமாபாத் உடனான பதட்டங்களை இன்னும் அதிகரித்துள்ளது.

காஷ்மீரில் இந்திய எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் எந்தவொரு ஆயுத உதவியினையும் தவிர்ப்பதற்கு இஸ்லாமாபாத்தை வலியுறுத்தவும், இந்திய பிராந்திய மேலாதிக்கத்தை ஏற்க செய்யவும், பாகிஸ்தான் உடனான தற்போதைய நெருக்கடியை பயன்படுத்த சுயபாங்கு கொண்ட பலசாலி மற்றும் உக்கிரமான இந்துமத வகுப்புவாதியான மோடி தலைமைத்துவத்தின்கீழ் இந்திய முதலாளித்துவம் முனைந்து வருகிறது.

இந்த கடும் மோதல்கள் மற்றும் அதிக அபாயமான போக்கினை மேலும் தொடர இந்தியாவிற்கு அமெரிக்காவினால் அளிக்கப்பட்டுவரும் பெரும் ஊக்கம் முழுப்போரில் சென்று முடியும் என்பதை பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஒப்புக்கொண்டுள்ளார். இஸ்லாமாபாத் இன் ஆழ்ந்த பயத்திற்கு காரணம், அமெரிக்கா தனது மூலோபாய உதவிகளை இந்தியாவின் மீது பொழிவது மட்டுமல்ல, அதன் பரம எதிரியுடன் எப்பொழுதும் பெருகிவரும் இராணுவ மூலோபாய இடைவெளி, மேலும் கடந்த செப்டம்பரில் பாகிஸ்தான் உள்ளே இந்தியாவினால் நடத்தப்பட்ட "நுட்பமான தாக்குதல்கள்" போன்ற சட்டவிரோத மற்றும் ஆத்திரமூட்டுதல் நடவடிக்கைகளை அமெரிக்கா அங்கீகரிப்பது போன்றவையே ஆகும்.

பாகிஸ்தான் உடனான இந்தியாவின் போர் நெருக்கடியுடன் இந்தியா சீனா இடையே விரிவடைந்துவரும் அழுத்தங்களும் சேர்ந்துவிட்டன, மேலும் இந்தியா பாகிஸ்தான் மூலோபாய போட்டி, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சீனா இடையிலான மோதல்கள் இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்துவருகின்றன. இந்த நிலை உலகின் முதல் மற்றும் நான்காம் நிலைகளில் அதிகாரத்துவம் படைத்த நாடுகள் இடையிலான, அனைத்து மனித இனத்திற்கும் கணிப்பிட இயலாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பாரிய தெற்கு ஆசிய போருக்கு இட்டு செல்லும் என்பது சுட்டிக்காட்டப்படுகின்றது.

இஸ்லாமாபாத்தை "கட்டுப்பாடாக" இருக்குமாறு சீனா அறிவுறுத்துகின்ற போதிலும், பாகிஸ்தானை "பயங்கரவாத நாடு" என்று முத்திரைகுத்துவதன் மூலம் இஸ்லாமாபாத்தை தனிமைப்படுத்த முனைகின்ற இந்தியாவை சீனா எதிர்க்கத்தான் செய்கிறது என்பதை குறிப்பிட்டுகாட்டி இந்திய அரசாங்கம், இராணுவம், மேலும் குறிப்பாக பெரு வணிக ஊடகங்கள் அனைத்தும் சீனாவை கடுமையாக தாக்கியுள்ளன.

அமெரிக்காவின் அதிமுக்கிய ஆசிய கூட்டணி நாடு மற்றும் ஆசியாவில் பெய்ஜிங் இன் பெரும் திறன்படைத்த மூலோபாய போட்டியாளருமான ஜப்பான் உடன் இந்திய இராணுவ மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் மோடி இந்த மாத முற்பகுதியில் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டார். தென் சீனக் கடல் மீதான அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் சீன எதிர்ப்பு பற்றிய வழக்கமான வலியுறுத்தல் குறித்த ஓர் அறிக்கையினை வெளியிட்டு மோடி மற்றும் ஜப்பான் பிரதம மந்திரி அபே இருவரும் அவர்களுக்கு இடையிலான உச்சிமாநாட்டை நிறைவு செய்தனர்.

இதற்கிடையில், அடுத்தகட்ட நிகழ்வாக பெய்ஜிங் மற்றும் இஸ்லாமாபாத் இரண்டின் அமைதியையும் குலைக்கின்ற நோக்கத்துடன், இந்திய பாதுகாப்புதுறை அமைச்சர் பாரிக்கர் "முதல் பயன்பாடு இல்லை" என்ற இந்தியாவின் அணுஆயுத கொள்கையினை இந்தியா கைவிடப்போவதை ஆதரிப்பதாக அறிவித்தார். இந்தியாவின் நோக்கங்களை பன்முகப்படுத்திக்காட்டும் பாரிக்கர், இது புது தில்லிக்கு அதன் எதிரிகளை கையாள்வதற்கான நன்மைபயக்கும் உந்துதல்களை அளிக்கும் என்று கூறுகின்றார்.