ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Meeting in India discusses war and the fight for socialism

இந்திய பொதுக் கூட்டம் போர் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் பற்றி விவாதிக்கிறது

By our correspondent
10 October 2016

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய ஆதரவாளர்கள் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அக்டோபர் 2 ம் தேதி ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

"சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்" என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை மற்றும் சமீபத்திய வளர்ச்சிகள், கூட்டத்தில் குவிமையப்படுத்தி விவாதிக்கப்பட்டது, அதில் சிரியாவில் போர் மற்றும் தென் சீனக் கடல் குறித்த பதற்றங்கள், ஒரு பக்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் மறுபக்கம் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு இடையில் போர் அச்சுறுத்துல் உருவாகி வருவதும் உள்ளடங்கும். இந்தக் கூட்டம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு பதட்டமான மோதல், போரின் விளிம்புக்கு தள்ளிச்செல்லும் நிலையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னதாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய ஆதரவாளர்கள் பல தொழில்துறை பகுதிகளில் பிரச்சாரம் செய்தனர் மற்றும் உலக சோசலிச வலைத் தள கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு சென்று விநியோகித்தனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர் சதீஷ் சைமன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அவர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸ் அனுப்பிய வாழ்த்துக்கள் ஐ வாசித்தார்.

டயஸ் தனது வாழ்த்துக்களில், பூகோளரீதியாக புவிசார்-அரசியல் பதட்டங்கள் தூண்டப்பட்டு பெருகிவரும் சூழலில், குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா போருக்கு தயாராகி வரும் உள்ளடக்கத்தில் இந்திய துணைக் கண்டத்தில் ஏற்பட்டு வரும் சமீபத்திய வளர்ச்சிகளை முன்வைத்தார்.

"உங்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்று வரும் அதேசமயம், ஒரு இராணுவ மோதலுக்கான ஆரம்ப தீப்பொறி, ஏற்கனவே இந்திய துணை கண்டத்தின் வடக்கு பகுதியில் அணு ஆயுத இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் இடம்கடந்து செல்லத்தொடங்கி விட்டன." என்று எச்சரித்தார்.

சதீஷ் அவரது பேச்சுக்குறிப்பில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த்தின், கால் நூற்றாண்டு போர்: உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்துதல் 1990-2016 என்ற சமீபத்தில் வெளியான நூலின் ஆழமான பகுப்பாய்வு பக்கம் கவனத்தை ஈர்த்தார். கடந்த 25 ஆண்டுகளில் வளர்ச்சி கண்டு வந்த நிகழ்வுகள் வந்தடைந்துள்ள புள்ளியில் இப்போது இன்னுமொரு பேரழிவான உலகப் போருக்கான நிலைமை அதிகரித்து வருகிறது என்று சதீஷ் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி போருக்கான நிலைமைகளை மட்டுமின்றி தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சிகளுக்கான நிலைமைகளையும் தோற்றுவித்துள்ளது என்றார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய ஆதரவாளர்கள் குழுவில் இருந்து கூட்டத்தில் உரையாற்றிய அருண் குமார், சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது பூகோள மேலாதிக்கத்தை மீட்கும் முயற்சியில் அதன் உயர் நவீன இராணுவ சக்தியை சாதகமாக பயன்படுத்துகிறது என்று கூறினார். வாஷிங்டன், அதன் பூகோள மேலாதிக்கத்திற்கு தடைகளாகக் கருதும் ரஷ்யா மற்றும் சீனாவை இலக்கு வைத்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகப் பொருளாதாரத்திற்கு மறு ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்திய அமெரிக்கா, இன்று ஆழமடையும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் மையத்தில் உள்ளது என்று பேச்சாளர் விளக்கினார். போர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் தற்போதைய புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு எரியூட்டும் மையத்தில் அமெரிக்கா உள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலில் அவர் இந்தியாவை இன்னும் உறுதியாக ஒருங்கிணைந்துள்ளார் என்று குமார் சுட்டிக்காட்டினார். சீனாவிற்கு எதிரான "முன் வரிசை" நாடாக இந்தியாவை உறுதிப்படுத்தும் அதன் முயற்சியில், அமெரிக்கா, ஒரு தொடர் இராணுவ மூலோபாய உதவிகளை வழங்கியது. மோடி அரசாங்கம் ஆகஸ்ட் இறுதியில் ஒபாமா நிர்வாகத்துடன் கையெழுத்திட்ட திட்ட செயல்படுத்தல் பரிமாற்றம் பற்றிய குறிப்பாணை ஒப்பந்தம் (LEMOA) என்ற ஒப்பந்தம் இந்திய இராணுவத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.

"அமெரிக்காவுடன் இந்த பெரிய பாதுகாப்பு கூட்டணியை ஏற்படுத்தியதனால் துணிச்சல் பெற்று புது தில்லி பாகிஸ்தானுக்கு எதிராக வெளிப்படையான மிரட்டலில் ஈடுபட்டு வருகிறது மற்றும் இப்பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்க நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்வதிலும் ஈடுபட்டுள்ளது" என்று குமார் வலியுறுத்தினார். இரண்டு அணு ஆயுத அரசுகளுக்கு இடையில் முழு அளவிலான போர் வெடிக்கும் ஆபத்தை கொண்டுள்ள  தற்போதைய இந்திய-பாகிஸ்தான் மோதலின் வேர், 1947 இந்திய துணைக்கண்ட பிற்போக்கு பிரிவினையில் தான் உள்ளது என்று அவர் விளக்கினார்.

“இரண்டு ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட விதிவிலக்கு இல்லாமல் முழு இந்திய ஆளும் உயரடுக்கும், பாகிஸ்தானிய எதிர்ப்பு பிரச்சாரத்தை கிளறிவிடுவதில் இந்து மத வெறியரான மோடியின் பின்னால் இப்போது அணி திரண்டுள்ளன. பாகிஸ்தான் ஷெரீப் அரசாங்கம் அதன் பங்கிற்கு இந்திய எதிர்ப்பு பேரினவாதத்தை கிளறிவிட இந்திய ஆக்கிரமிப்பிலுள்ள ஜம்மு காஷ்மீரில் காஷ்மீர் மக்களின் குறைகளை சிடுமூஞ்சித்தனமாக சுரண்டி வருகிறது. "

ஒரு மூன்றாம் உலக போரை தடுப்பதற்கான ஒரே வழியாக சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டுவதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விடுத்துள்ள அழைப்பின் முக்கியத்தை குமார் வலியுறுத்தினார்.

ஒரு உயிரோட்டமுள்ள கேள்வி-பதில் நிகழ்ச்சி, உரைகளுக்கு பின்னர் தொடர்ந்தது. கேள்விகளில் பின்வருவன உள்ளடங்கும்: ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்பில் ஒன்றாக இணைந்துள்ள ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே ஒரு மோதல் வெடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதா? ஏகாதிபத்திய சக்திகள் ஒரு ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது எப்படி ஒரு அதிக செலவாகும் போருக்கு தயாராகி வருகின்றன? ரஷ்யா மற்றும் சீனா எப்படி ஏகாதிபத்திய போர் அபாயத்தை எதிர்கொள்ள முடியும்? ஏகாதிபத்திய போருக்கு ஆதரவு கொடுப்பதில் போலி இடது குழுக்களின் பங்கு என்ன? எப்படி ஒரு சிறிய அமைப்பினால் மக்கள் மத்தியில் இந்த போர் எதிர்ப்பு பிரச்சாரத்தை எடுத்துச் செல்ல முடியும்?

கூட்டத்தின் பின்னர் WSWS நிருபர்கள் கூட்டத்தில் பங்கெடுத்த பலருடன் பேசினார்கள்.

ஒரு இயந்திர பொறியியல் மாணவரான யுவான் கூறினார்: "பொதுவாக, நாங்கள் பிரச்சினைகளை ஒரு தேசியவாத கண்ணோட்டத்தில் இருந்து தான் பார்த்து வந்துள்ளோம். நான், இதுவரையில் இரு நாடுகளுக்கு இடையே தான் போர்கள் தொடுக்கப்படுகின்றன என்று நினைத்தேன், ஆனால் சூறையாடும் ஏகாதிபத்திய சக்திகள் சந்தைகளுக்கும் வளங்களுக்குமாகத்தான் ஒன்றுக்கு எதிராக ஒன்று போராடுகின்றன என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இந்தப் போர்கள் மக்களுக்காக போராடப்படவில்லை ஆனால் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்காகத் தான்."

ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) ஒரு தொழிலாளியான ராஜ் கூறினார்: "கூட்டம் நன்றாக இருந்தது. நான் பணியிடத்தில் உலக சோசலிச வலைத் தளம் பற்றி பல சக தொழிலாளர்களுக்கு சொல்லி வருகிறேன் மற்றும் தளத்தை படிக்கும்படி அவர்களை ஊக்கப்படுத்துகிறேன். அரசு ஒடுக்குமுறையை எதிர்கொண்டாலும் கூட இந்த இயக்கத்தை அழித்து விட முடியாது என்று நான் நினைக்கிறேன், ஆனால் நாம் பலரை மார்க்சிஸ்டுகளாக பயிற்றுவிக்க வேண்டும்,  நமக்கு இன்னும் அதிகமாக தலைவர்கள் வேண்டும்" என்றார்.