ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Chinese fears about Trump and the South China Sea

ட்ரம்ப் மற்றும் தென் சீனக் கடல் தொடர்பாக சீனா அச்சம் கொள்கின்றது

By Peter Symonds 
28 November 2016

தென்சீனக் கடல் கற்கைகளுக்கான தேசிய நிறுவனம் (NISCSS) எனும் ஒரு செல்வாக்குமிக்க சீன சிந்தனைக் குழுமம் கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது, ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் ஆசியாவில் அமெரிக்க இராணுவ கட்டியெழுப்புதல்கள், அத்துடன் டொனால்ட் ட்ரம்ப் இன் தலைமை குறித்து சீன ஆளும் வட்டத்துக்குள் உணரப்படும் பதட்டங்கள் மீதான ஒரு பார்வை ஆகியவை பற்றிய விபரங்களை தெரிவிக்கிறது.

ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு", சீனா மற்றும் அதன் தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளுக்கு இடையில் வேண்டுமென்றே நீண்டகாலமாகவுள்ள பிராந்திய மோதல்களுக்கு எரியூட்டுவதன் மூலம் தென்சீனக் கடல் பகுதியை அபாயகரமான பூகோள அரசியல் வெடிப்புப்புள்ளியாக மாற்றிவிட்டது. அதன் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள தீவுக்கூட்டங்கள் தொடர்பான சீனாவின் நடவடிக்கைகளையும் மற்றும் அதன் நிலப்பகுதியை சுற்றிலும் 12 கடல் மைல் பிராந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அதன் உரிமை கோருதலை முன்னிட்டு எடுத்த மூன்று "தடையற்ற கப்பல் போக்குவரத்து சுதந்திர" நடவடிக்கைகளை, இராணுவ ஆத்திரமூட்டல்களை அதிகரிக்க பற்றிக்கொண்டது.

NISCSS வெளியிடும் ஒரு அறிக்கையில், அதன் இயக்குனர் வூ ஷிகுன், அவரது நிறுவனமும் "எல்லோரையும் போல" முன்னாள் வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளின்டன் தான் அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெறுவார் என்று அனுமானித்ததை ஒப்புக்கொண்டார். South China Morning Post குறிப்பிட்டதுபோல, ட்ரம்ப் இன் கீழ் இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா அதன் இராணுவ பிரசன்னத்தை பெரும்பாலும் விரிவுபடுத்தும் என்று வூ கூறினார்.

"ஆசிய-பசிபிக் கொள்கையில் எந்தவொரு பின்னோக்கி செல்லலும் அங்கு இருக்காது, ஆனால் தென் சீனக் கடல் தொடர்பாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள மூலோபாய மோதல் தொடரும் வாய்ப்பு உள்ளது," என்று வூ கணித்தார். மேலும், அமெரிக்க போர்கப்பல்களின் எண்ணிக்கையை 272 லிருந்து 350 க்கு உயர்த்துவதன் மூலம் அதன் கடற்படை அளவினை அதிகரிக்கச் செய்யும் ட்ரம்ப் இன் திட்டம், ஆசிய-பசிபிக் பகுதியில் கூடுதலாக ஒரு பெரும் அமெரிக்க இராணுவ நிலைநிறுத்தலுக்கும், மேலும் இந்த பிராந்தியத்தில் "நுட்பமான சமநிலை முறிப்புக்கும்" வழிவகுக்கும், என்பது குறித்தும் அவர் எச்சரித்தார்.

South China Mornihg Post இன்படி, NISCSSல், "ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ பிசன்னம் குறித்த அறிக்கை" என்பது ஒரு சீன கல்வி நிறுவனம், பகிரங்கமாக கிடைக்கும் தரவிலிருந்து அமெரிக்க இராணுவ செலவுகள் மற்றும் பயன்பாடு குறித்த விவரங்களை ஆவணப்படுத்தும் முதல் முயற்சியாக உள்ளது. NISCSS, சீனாவின் ஹைனன் தீவில் அமைந்துள்ளது. இது தென் சீனக் கடல் பகுதிக்கு நேரடி அருகாமையில் உள்ளதுடன் மேலும் அணுஆயுத நீர்மூழ்கிக்கப்பல் வசதிகள் உள்ளிட்ட முக்கிய சீனக் கடற்படை தளங்களும் அங்கு அமைந்துள்ளது.

ஒபாமாவின் கீழ் இந்த பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ நிலைப்பாடு அதிகரிப்பு என்பது "முன்னொருபோதுமில்லாத" ஒன்று என்று வூ அறிவித்ததாக ஒரு NISCSS வலைத் தள அறிக்கையின் சுருக்கம் குறிப்பிட்டிருக்கிறது. 2020ஆம் ஆண்டிற்குள், ஆசிய பசிபிக் இல், பென்டகன் அதன் அதிநவீன ஆயுத அமைப்புகள் உட்பட 60 சதவிகித விமான மற்றும் கடற்படை சொத்துக்களை நிலைநிறுத்தவேண்டும்.

"ஆசிய-பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியங்களின் பெரும் மூலோபாய மதிப்பினை அமெரிக்கா கருத்தில் கொண்டு, இந்த பிராந்தியங்களில் அமெரிக்கா இராணுவம் ஏழு இராணுவ தள குழுக்களை ஸ்தாபித்துள்ளது, அதன் ஒட்டுமொத்த வெளிநாட்டு இராணுவ தளங்களில் இது 50 சதவிகிதமாகும், அவற்றுள் 122 ஜப்பானிலும், 83 தென் கொரியாவிலும் உள்ளடங்கும்," என்று அறிக்கை தெரிவிக்கிறது. 2015ஆம் ஆண்டளவில், பென்டகன் சர்வதேச தேதிக் கோட்டிற்கு மேற்கில் 97,000 பேரை நிறுத்திவைத்திருந்தது உட்பட 368,000 இராணுவ அதிகாரிகளை ஆசிய-பசிபிக் இல் கொண்டிருந்தது.

மேம்பட்ட இராணுவ உளவு பார்ப்பு விமானங்கள், வான்வழி ஆளில்லா விமானங்கள், மின்னணு கண்காணிப்புக் கப்பல்கள், அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள், இராணுவ உளவு விண்கோள்கள் போன்றவை மூலமான அமெரிக்க கண்காணிப்பு நடவடிக்கைகளின் பெருமளவு விரிவாக்கம், அதிலும் குறிப்பாக சீனாவுக்கு எதிராக செயல்படுத்தியது பற்றி இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. "அடிக்கடி நிகழ்த்தப்படும் அமெரிக்காவின் நெருங்கிய இராணுவ உளவு நடவடிக்கைகளின் அளவு மற்றும் வழிமுறையின் அதிமுதல் இலக்காக சீனா மாறிவிட்டது," என்று தெரிவிக்கிறது. "கிடைக்கும் புள்ளி விவரங்களின்படி, 2009ல் அமெரிக்கா சீனாவுக்கு எதிராக 260க்கும் மேற்பட்ட உளவு பறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது, மேலும் 2014ல் இந்த எண்ணிக்கை 1200க்கும் மேற்பட்டதாக இருந்தது."

2015ம் ஆண்டில், தென் சீனக் கடல் பகுதிகளில் அமெரிக்க கப்பல்கள் மற்றும் விமானங்கள் 700 க்கும் மேற்பட்ட ரோந்துகளை செயல்படுத்தியது "வெளிப்படையான அதிகரிப்பே" என்று அறிக்கை குறிப்பிடுகிறது. இது "சீனாவின் தேசிய பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல் மட்டுமல்லாது, சீனாவிற்கு முக்கியமான கடல்சார் உரிமைகள் மற்றும் நலன்களை சேதப்படுத்தியது மற்றும் சீன அமெரிக்க மூலோபாய பரஸ்பர நம்பிக்கையினை குறைத்து மதிப்பிட்டது மட்டுமல்லாது, கடல் மற்றும் வான்வழியாக தற்செயலான மோதல்களுக்கு வழிவகுக்கும் சாத்தியப்பாட்டிற்கும் இட்டுச்சென்றது."

ஆசியாவில் அமெரிக்காவின் இராணுவ கூட்டுக்கள் மற்றும் பங்காளிகள் உடனான அதன் விரிவடைந்துவரும் கட்டியெழுப்புதல்கள் குறித்தும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஜப்பானில் ஒரு உயர்தர விமானம் தாங்கி கப்பலை நிறுத்திவைப்பது; தென் கொரியாவில் THAAD ஏவுகணை எதிர்ப்பு அமைப்பினை ஈடுபடுத்துவது; பிலிப்பைன்ஸ் உடன் ஒரு விரிவான தள ஏற்பாட்டை வடிவமைப்பது; அமெரிக்க கடற்படையினர், விமானம் மற்றும் போர்கப்பல்கள் ஆஸ்திரேலிய தளங்களை அணுகுவது; சிங்கப்பூர் கடற்படை மற்றும் விமான தளங்களை அதிகளவு பயன்படுத்துவது; வியட்நாம், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகியவற்றுடன் பரந்த இராணுவ உறவுகளை மேம்படுத்துவது ஆகியவற்றை இது உள்ளடக்கியது.

தென் சீனக் கடல் பகுதிகளில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் நோக்கம் என்ன என்பதுபற்றி சீனாவுக்கு சந்தேகம் ஏதும் இல்லை. தடையற்ற "கப்பல் போக்குவரத்து சுதந்திரத்துடன்" வாஷிங்டனின் நோக்கமான "கடல்வழி இராணுவ தகமையை முற்றுமுழுதான பலத்துடன் தொடரவும், இந்த பிராந்தியத்தில் ஆட்சி அதிகாரத்துவ ஆதிக்கம் செலுத்தவும், அதன் கூட்டணி மற்றும் கூட்டாண்மை அமைப்புகளை ஒருங்கிணைப்பது..." என்பதையும் இந்த அறிக்கை விவரித்தது.

NISCSS அறிக்கை, வெளிப்படையாகவே சீனாவின் மூலோபாய நலன்களின் நிலைப்பாட்டில் இருந்து எழுதப்பட்டது. ஆசியாவில் அமெரிக்க கட்டியெழுப்புதல்களுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பெய்ஜிங் தன்னால் இயன்றவரை அதன் தென் சீனக் கடல் தீவுகளில், எதிர்கால இராணுவ நோக்கங்களுக்கு பயன்படுகின்ற வசதிகளை ஸ்தாபித்தது உட்பட, அதன் சொந்த விரிவாக்கத்தை முடுக்கிவிடுவதன் மூலம் விடையிறுத்து வந்தது. அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான போர் அபாயத்தை மட்டும் எடுத்துக்காட்டும் ஒரு மேல் செல்வந்த அடுக்கின் நியாதிக்க குழுவின் நலன்களை பிரதிநிதித்துவபடுத்தும் விதமாகவே சீன ஆட்சியின் இராணுவ பிரதிபலிப்பு உள்ளது.

எவ்வாறாயினும், இந்த NISCSS அறிக்கை, ஆசியா பசிபிக் பகுதியில் அமெரிக்க இராணுவ விரிவாக்கத்தின் அளவினையே குறிப்பிட்டு காட்டுகிறது. சிங்கப்பூர் சார்ந்த, பிரிட்டிஷ் மூலோபாய ஆய்வாளர் அலெக்ஸ் நெயில், Financial Time இல்: "அமெரிக்கா சீனாவை ஒட்டிய பகுதிகள் முழுமையாக அதன் கண்காணிப்பு விமானங்களின் தன்மையையும் மற்றும் பலத்தினையும் அதிகரித்துள்ளது என்றும், மேலும் சீனாவின் இராணுவ நவீனமயமாக்கலுக்கு ஈடாக இருந்து வருகிறது என்றே நான் கருதுகிறேன்" என்று கூறினார்.

சீனா, அமெரிக்காவுக்கு "ஈடான" நடவடிக்கைகளை எடுத்தால், மற்றும் அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகள் ஊடாக, அதேபோல் ஹவாய் சுற்றிலும், நூற்றுக்கணக்கான இராணுவ கண்காணிப்பு விமானங்கள் மூலம் இராணுவ உளவும் நடத்தினால் என்ன நடக்கும் என்பதை நெயில் நிச்சயமாக கருத்தில்கொள்ளவில்லை. வினா எழுப்புவது என்பது அதற்கு விடையிறுக்கவும் வேண்டும் என்பதாகும்: அதாவது, இதற்கான பதில் அமெரிக்க அரசியல், இராணுவம் மற்றும் ஊடக ஸ்தாபனங்களில் வெடிப்புதன்மையுடனான எதிர்விளைவாகவே இருக்கும்.

அமெரிக்க ஜனாதிபதியாக தீவிர வலதுசாரி ட்ரம்ப் பதவியிருத்தப்பட்டமை ஆசியா பசிபிக் பகுதியில் போர் அபாயத்தை மட்டுமே அதிகரிக்கும். ட்ரம்ப், "அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக்குவோம்" என்ற அவரது தேசியவாத திட்டநிரலின் ஒரு அங்கமாக, ஏற்கனவே சீனாவுடனான ஒரு வர்த்தக போர் பற்றி முன்னறிவிப்பு செய்துவிட்டார். இருப்பினும், அதன் வரலாற்று ரீதியான வீழ்ச்சியில், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை இன்னும் முன்னெடுப்பதற்கு ஏற்ற பொருளாதார செல்வாக்கை நீண்டகாலம் தக்கவைக்க இயலாத நிலையில், இராணுவ அச்சுறுத்தல்கள், ஆத்திரமூட்டல்கள் மற்றும் தனது நலன்களை நிலைநாட்ட போரினை நாடுவது இவற்றையே அதிகரித்த அளவில் கையிலெடுத்து வருகின்றது.

சீன ஆளும் வட்டத்திற்குள் காணும் அச்சத்தின் பிரதிபலிப்பாக, கடந்த வெள்ளிக்கிழமை NISCSS செயலாளர் வூ பின்வருமாறு அறிவித்தார்: "கிழக்கு மற்றும் தென்சீனக் கடல் பகுதியின் பதட்டங்களினால் ஆசிய-பசிபிக் இல் ஒரு புதிய ஆயுத போட்டி உருவாகும் என்பது பற்றியே நான் மிகவும் கவலை கொண்டுள்ளேன்." ஆசிய-பசிபிக் இல் ஏற்கனவே ஒரு அதிகரித்துவரும் ஆயுதப் போட்டி நடந்துகொண்டே இருப்பது மோதலுக்கும், போருக்குமான ஒரு முன்னோடியே, என்பதை வூ நன்கு அறிவார் என்பதில் சந்தேகம் இல்லை.