ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UK: Corbyn protects Tony Blair from a demand that he accounts for his Iraq war lies

ஐக்கிய இராஜ்ஜியம்: டோனி பிளேயர் அவரது ஈராக்கிய போர் பொய்களுக்கு பொறுப்பாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையிலிருந்து கோர்பின் அவரை பாதுகாக்கிறார்.

By Robert Stevens and Chris Marsden
1 December 2016

ஈராக் போர் சம்பந்தமாக நாடாளுமன்றத்தை "தவறாக வழிநடத்தியதற்காக" முன்னாள் பிரதம மந்திரி டோனி பிளேயர் மீது விசாரணைக்கு அழைப்புவிடுத்த ஒரு நாடாளுமன்ற தீர்மானம் மீதான புதன்கிழமை விவாதத்திலிருந்து தொழிற்கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின், பதவி அரசியல் கோழைத்தனத்தின் ஒரு நடவடிக்கையாக, தன்னைத்தானே விலக்கிக் கொண்டார்.

சிக்கன திட்டம் மற்றும் போரை எதிர்க்கும் அடித்தளத்தில் தொழிற்கட்சி தலைவராக அவர் தேர்வானதில் இருந்து, கோர்பின், ஒரு நெருக்கடியான சூழ்நிலையிலும் நாடாளுமன்ற தொழிற் கட்சியிலுள்ள போர்நாடுவோருக்கு அடிபணிந்துள்ளார். இது நேற்று அதன் இழிவார்ந்த இடத்தை எட்டியது.

“அமெரிக்க அரசாங்கத்துடனான பிரத்யேக கடித தொடர்புகளுக்கும் மற்றும் நாடாளுமன்றம் மற்றும் மக்களுக்கு வழங்கப்பட்ட பொது அறிக்கைகளுக்கும் இடையிலான முரண்பாட்டில் மிகத் தெளிவாக காட்டப்பட்டதைப் போல, ஈராக் படையெடுப்பை நோக்கிய அப்போதைய அரசாங்க கொள்கை குறித்து அப்போதைய பிரதம மந்திரியும் மற்றும் ஏனையவர்களும் அளித்த தவறான தகவல்கள் மீது" நான்கு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ஈராக் போர் சம்பந்தமான சில்கோட் விசாரணை, “போதுமான ஆதாரங்களை வழங்கியது,” என்று ஸ்காட்டிஷ் தேசிய கட்சி (SNP) நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் சால்மண்ட் ஆல் முன்வைக்கப்பட்ட ஒரு தீர்மானம் குறிப்பிட்டது.

"பொது கொள்கை மற்றும் தனிப்பட்ட கொள்கைக்கு இடையிலான இந்த முரண்பாடு மீதும், மற்றும் காட்டப்பட்ட உளவுத்தகவல்கள் மீதும், மற்றும் அந்த பேரழிவுகரமான தொடர் சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க உதவும் விதத்தில் அவசியமான மற்றும் உரிய கூடுதல் நடவடிக்கைகளாக அது கருதியதைக் குறித்து சபைக்கு அப்போது அது வழங்கிய அறிக்கை மீதும், கூடுதலாக ஒரு பிரத்யேக ஆய்வு நடத்துவதற்காக", அத்தீர்மானம், பொது நிர்வாகம் மற்றும் அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழு என்ற ஒரு நாடாளுமன்ற துணைக்குழுவை அமைக்க அழைப்புவிடுத்தது.

650 ஆசன நாடாளுமன்றத்தில், வெறும் 45 நாடாளுமன்ற உறுப்பினர்களே —அதுவும் பெரும்பாலும் SNP ஐ சேர்ந்தவர்களே— சால்மண்டின் தீர்மானத்தில் கையெழுத்திட்டனர். வெறும் இரண்டே இரண்டு தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், Kate Hoey மற்றும் Kelvin Hopkins, மட்டுமே அதில் கையெழுத்திட்டிருந்தனர்.

ஸ்காட்டிஷ் தேசிய கட்சி எந்தவொரு கோட்பாட்டுரீதியிலான கவலைகளில் இருந்தும் அத்தீர்மானத்தைக் கொண்டு வரவில்லை. மாறாக, ஒரு ஐரோப்பிய-ஒன்றிய ஆதரவு பிரச்சாரத்திற்கு தலைமை கொடுப்பதற்கான பிளேயரின் விருப்பம், இதையொரு "முற்போக்கு கூட்டணியாக" சித்தரிக்கும் அவர்களது சொந்த முயற்சிகளின் மதிப்பைக் கெடுக்கும் என்று அஞ்சும் அரசியல் உயரடுக்கின் பிரிவுகளுக்காக சால்மண்ட் பேசுகிறார். அந்த விவாதத்திற்கு முன்னதாக சால்மண்ட் ஒரு அறிக்கையில் கூறுகையில், “அவரது அரசியல் மறுபிரவேசத்திற்கு பிளேயர் திட்டமிட்டு வருகின்ற ஒரு தருணத்தில், ஐக்கிய இராஜ்ஜிய வெளியுறவு கொள்கை மீதுள்ள இந்த கரும்புள்ளியை நாடாளுமன்றமும் அதன் குழுக்களும் நீண்டகாலத்திற்குப் பின்னர் முடிவுக்கு கொண்டு வருவதற்கு சரியான நேரமாகும்,” என்றார்.

ஆனால் சால்மண்ட் இன் உள்நோக்கங்கள் என்னவாக இருந்தாலும் அத்தீர்மானம் அதன் குற்றச்சாட்டில் மிகச் சரியாக இருந்தது, அதாவது பிளேயர், ஈராக் உடனான போருக்கு வழி வகுப்பதற்காக அமைப்புரீதியில் பொய் உரைத்திருந்தார். இது மீண்டும் கோர்பினை, அவர் பாதுகாப்பதாக வாதிடும் கொள்கைகள் மீது ஒரு நிலைப்பாட்டை எடுக்க அல்லது அவர் கட்சியின் பிளேயரிச அணியுடன் மற்றொரு ஒரு கேவலமான சமரசத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைமையில் நிறுத்தியது.

சில்கோட் குறித்து கோர்பின் ஜூலையில் பலர் அறிய பின்வருமாறு அறிவித்திருந்தார், “போருக்கு முன்னதாக சபை தவறாக வழிநடத்தப்பட்டிருந்தது என்பதை இப்போது நாம் அறிகிறோம், 13 ஆண்டுகளுக்குப் பின்னர் அதை எவ்வாறு கையாள்வதென சபை இப்போது முடிவெடுத்தாக வேண்டும், அதேபோல சில்கோட் அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்ட முடிவுகளை எடுத்தவர்கள் அனைவரும் அவர்களது நடவடிக்கைகளுக்கான விளைவுகளை முகங்கொடுத்தாக வேண்டும், அவர்கள் யாராக இருந்தாலும் சரி.”

எதிர்பார்த்தவாறே, அங்கே பிளேயருக்கோ அல்லது வேறு எவருக்கோ எந்த பாதிப்புகளும் இருக்காது என்பதை உறுதிப்படுத்துவதில் கோர்பின் கருவியானார். தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த விவாதத்தில் கலந்து கொண்டு அத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு நிர்பந்திக்க, அந்த விவாதத்திற்கு முன்னதாக, பிளேயரிச PLP பெரும்பான்மை மூவரிசை நெறியாளுகை (three-line whip) கோரியதாக செய்திகள் குறிப்பிட்டன. 2003 ஈராக் போருக்கு எதிராக வாக்களித்திருந்த தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இப்போது பிளேயருக்கு அவர்களது பாதுகாப்பை வழங்குவதில் பலமாக இருந்ததாக கார்டியன் குறிப்பிட்டது. பிரதான நெறியாளர் (Chief Whip) நிக் பிரௌன் PLP இன் ஒரு கூட்டத்தில் வெளிப்படையாக "நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதன் மீது ஒரு அடையாள வாக்கெடுப்புக்கு அழைப்புவிடுத்தார்,” மற்றும் "ஈராக் போரை எதிர்த்திருந்த இடது கட்சியின் நாடாளுமன்ற இடதுசாரி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன் க்றையர் (John Cryer), உரத்த குரலில் [SNP] தீர்மானத்தை கண்டித்ததாக" சில ஆதாரங்கள் தெரிவித்தன.

தொழிற் கட்சியின் ஒரு செய்திதொடர்பாளர் The Independent க்கு கூறுகையில், அதற்கு பதிலாக அங்கே ஒரு-வரிசை நெறியாளுகை (one-line whip) மட்டுமே இருந்திருக்கலாம் என்றார், இதன் அர்த்தம் அதில் கலந்து கொள்வதும் மற்றும் எதிராக வாக்கிடுவதும் கட்டாயமில்லை என்பதாகும். அதே பத்திரிகை மேற்கோளிட்ட ஒரு ஆதார நபரின் கருத்துப்படி, எவ்வாறிருப்பினும் நிழல் அமைச்சரவை SNP தீர்மானத்தை "எதிர்க்க" முடிவெடுத்திருந்தது. கோர்பினின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அவர் "வேறொரு காரியத்திற்கு உறுதியளித்திருப்பதால்" அவரால் கலந்து முடியாமல் போகலாம் என்றார்.

அந்த முக்கிய காரியம் எதை உள்ளடக்கி இருந்தது என்பது இதுவரையில் வெளியிடப்படவில்லை. ஆனால் அந்த முன்னேற்பாடு, விவாதத்திற்கு சற்று முன்னதாக நடந்த பிரதம மந்திரியின் வாராந்தர கேள்வி நேரத்தில் கலந்து கொள்வதிலிருந்து அவரை தடுக்கவில்லை.

கோர்பின் வரத்தவறியமை, அதன் பின்னர் நடந்த ஏமாற்றுத்தனமான சம்பவங்களுக்கு ஒரு பொருத்தமான முகவுரையாக இருந்தது.

வெறும் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அந்த விவாதத்தில் கலந்து கொண்டனர், இந்த எண்ணிக்கையும் அந்த மூன்று மணி நேர அமர்வின் போது தொடர்ந்து சுருங்கியது. ஒரு சந்தர்ப்பத்தில், 10 க்கும் குறைவான டோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அரசு ஆசனங்களில் இருந்தனர், தொழிற் கட்சியின் தரப்பில் ஒருவருமே இல்லை என்றளவிற்கு இருந்தது. மூன்று மணி நேரத்தில் பல்வேறு தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் டோரிக்களும் குற்றம் பதிவு செய்யப்படாத ஒரு போர் குற்றவாளியை புகழ்வதற்கும் மற்றும் பிளேயரை, அல்லது அப்போரை ஆதரித்த ஆளும் வட்டத்தின் வேறு எவரொருவருக்கும் எதிரான எந்தவொரு தீர்மானத்தையும் கண்டிக்கவும் திரும்பினர், எது எப்படியிருந்தாலும் அவர்கள் பதில் கூற பொறுப்பாகிறார்கள்.

தொழிற் கட்சியினது நிழல் அமைச்சரவையின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபாபியன் ஹாமில்டன், பிளேயரை பாதுகாத்து பிரதான உரை வழங்கினார். ஹாமில்டன் போர்-ஆதரவு Euston அறிக்கை குழுவில் கையெழுத்திட்டிருப்பவர் ஆவார் மற்றும் நவ-பழமைவாத ஹென்றி ஜாக்சன் சமூகத்தின் ஒரு அங்கத்தவரும் ஆவார். அவரது எதிர்ப்பாளர்களுடன் " உறவை எட்டும்", கோர்பின் முயற்சிகளின் பாகமாக அவருக்கு இப்போதைய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. “மத்திய கிழக்கு, கிழக்கு ஐரோப்பா எங்கிலும் மற்றும் அதைக் கடந்தும் ஸ்திரமின்மை அதிகரித்து வரும் நிலையில், நாம் நாளையே இன்னும் மிகப்பெரிய சவால்களை முகங்கொடுக்கக்கூடும், அதனால் தான் நான் இந்த தீர்மானத்தை ஆதரிக்கவில்லை,” என்று குறிப்பிட்டு அத்தீர்மானத்தை எதிர்ப்பதில் ஹாமில்டன் போர்முரசு கொட்டினார். பிளேயர் "தவறான நம்பிக்கையில் செயல்பட்டார்" என்பதை அவர் ஒருபோதும் "ஒரு நொடிப்பொழுதும்" நினைத்துப் பார்க்கவில்லையாம்.

அவரது Sedgefield தொகுதியில் பிளேயரை வென்றிருந்த பில் வில்சன் கூறுகையில், பிளேயரிசம் என்பது "அவதூறான ஒரு வார்த்தையாக" இருந்தாலும் கூட அவ்வாறு அழைக்கப்படுவதற்காக அவர் "பெருமைப்படுவதாகவும்", ஒட்டுமொத்த சபையே "டோனி பிளேயருக்காக பெருமைப்பட" வேண்டுமென்றும் தெரிவித்தார்.

தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பென் பிராட்ஷோ கூறுகையில், “என் சொந்த கட்சியில் இது மாதிரியான எந்த முட்டாள்தனமும் இல்லை என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று கூறியதுடன், ஈராக் விவகாரத்தில் "நமது முன்னாள் பிரதம மந்திரி சரியாக இருந்தார் என்பதை வரலாறு நிரூபிக்கும்,” என்றார்.

ஒரு சமயம், தொழிற் கட்சியின் அயன் ஆஸ்டின், சால்மண்டை நோக்கி, “அமருங்கள்! உங்களிடம் இருந்து நாங்கள் நிறைய கேட்டுவிட்டோம். அமருங்கள்!” என்று கூச்சலிட்டார்.

இறுதியில் அத்தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்த போது, 439 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை எதிர்த்தனர், 70 பேர் ஆதரித்தனர். வெறும் ஐந்து தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே அத்தீர்மானத்தை ஆதரித்தனர், 158 பேர் அதற்கு எதிராக வாக்களித்தனர்.

புதன்கிழமை சம்பவங்கள் கூர்மையான எச்சரிக்கையாக இருக்கும்.

தொழிற் கட்சி வலதுடனான அவரது கேவலமான கூட்டணியை பேணுவதற்காக, கோர்பின் வெறுமனே பிளேயர் எனும் ஒரு தனிநபரை மட்டும் ஆதரிக்கவில்லை அல்லது அவரது நடவடிக்கை தனியொருவரது நடவடிக்கை கிடையாது. இந்த அவசியம், தொழிற் கட்சி ஒரு போருக்கான கட்சியாக தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்கான அவசியத்திலிருந்து பெருக்கெடுக்கிறது.

கோர்பின் சில சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் சிக்கனத் திட்டநிரலின் இந்த அல்லது அந்த அம்சங்களுக்கு எதிராக அழைப்புவிடுக்கலாம், ஆனால் போர் சம்பந்தமான அடிப்படை பிரச்சினையில் அவர் ஒவ்வொரு முறையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மூலோபாய தேவைகளைப் பாதுகாப்பதற்காக செயல்படுகிறார். உலகளாவிய சந்தைகள் மற்றும் மூலோபாய ஆதாரவளங்கள் மீதான அதன் பங்கை பாதுகாப்பதற்கு கட்சி பற்றுகளை எல்லாம் பொருட்படுத்தாமல், வாஷிங்டன் உடனான அதன் இராணுவ கூட்டணியை மட்டுமே ஒரே வழிவகையாக பார்த்து வரும் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதியாக 2003 இல் பிளேயர் செயல்பட்டார். இதனால் தான் பிளேயருக்காக புகழ்பாடுவதை முன்னணி டோரி கட்சி மைக்கெல் கோவ் உம் ஆமோதித்தார், இவர், ஈராக் மீது தொடர்ச்சியாக கவனத்தை ஈர்ப்பது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தற்போதைய இராணுவ தலையீடுகளை அதிகரிப்பதிலிருந்து அதை தடுத்து வருகிறது என்று எச்சரித்த தொழிற் கட்சியினருக்கு தனது ஆதரவை வழங்கியவராவார்.

“இந்த சபையை தவறாக வழிநடத்துவதற்கான" பிளேயரது "ஒரு திட்டமிட்ட முயற்சி எந்த கட்டத்திலும் இருக்கவில்லை" என்று கோவ் வலியுறுத்தினார். போருக்குள் இறங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் உடன் முன்கூட்டியே உடன்பாடு செய்திருந்தார் என்ற எந்தவொரு வாதமும் பொய் என்றார்.

இன்னும் அவரை பொறுத்தவரை, ஈராக் போரை தொடர்ந்து சிரியாவில் பிரிட்டிஷ் இன் செயலற்றத்தன்மை, இது "அப்பாவி அலெப்போ மக்கள் மீது பயங்கரங்களைக் கட்டவிழ்த்து விட" அசாத், ரஷ்யா மற்றும் "யூத-விரோத ஈரானை" அனுமதித்துள்ளது. “இப்போது பாதிக்கப்பட்டு வரும் அலெப்போ மக்களுக்கு உதவ நாம் ஏதாவது செய்வதற்கான கடமைப்பாட்டை" ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக, இது பின்னோக்கி பார்க்கும் "கடமை பிறழ்ச்சியாகும்"

கட்டுரையாளரின் ஏனைய பரிந்துரைகள்:

ஈராக் மீதான சில்கோட் இன் ஆய்வு தீர்ப்பு: பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு போர் குற்றம்
[7 July 2016]

UK parliamentary debate buries Iraq War inquiry
[16 July 2016]