ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

One year of Sri Lankan President Sirisena’s rule: Propaganda and reality

இலங்கை ஜனாதிபதி சிறிசேனவின் ஆட்சியின் ஒர் ஆண்டு: பிரச்சாரமும் யதார்த்தமும்

By Pani Wijesiriwardena
11 January 2015

ஜனவரி 8, மைத்திரிபால சிறிசேன, அவரது முன்னோடியான மஹிந்த இராஜபக்ஷவின் அமைச்சரவையில் இருந்து விலகிய பின்னர், அடிப்படையில் வாஷிங்டனின் ஆதரவுடனான ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையில் இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடத்தைக் குறிக்கின்றது. சிறிசேன நிர்வாகமானது ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்காக நாடு முழுவதுமான உத்தியோகபூர்வ நிகழ்வுகளுடன், ஒரு "நல்லாட்சி வெற்றி வாரமாக" 2016 முதல் வாரத்தை பிரகடனம் செய்துள்ளது.

சிறிசேன கடந்த வாரம் காலியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், உங்களது முதல் ஆண்டில் திருப்தியடைந்தீர்களாக என யாராவது கேட்டால், "எனது உடனடி மற்றும் தெளிவான பதில் 'ஆம்' என்பதே” என அவர் வலியுறுத்தினார். “கடந்த ஆண்டு நாங்கள் எடுத்த முடிவுகள் [மக்களின்] வயிற்றில் உணர்ப்படாத போதிலும்,” நாங்கள் “சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கவும், ஊழலை ஒழிக்கவும் மக்களுக்குத் தேவையான நல்லாட்சியை உறுதி செய்யவும் முன்நகர்ந்துள்ளோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தனது அரசாங்கத்தின் முடிவுகள் "வயிற்றில் உணரப்படவில்லை" என்ற ஜனாதிபதியின் அலட்சியமான கருத்து, ஊதிய உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ச்சியான மானியம் உட்பட முன்னேற்றமான வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளைக் கோரி வரும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் மீதான அதன் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. கடந்த ஆண்டில், இத்தகைய கோரிக்கைகளுக்காக தொடர்ச்சியான பல போராட்டங்கள் இடம்பெற்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த நாட்டு மக்களில் சுமார் 25 சதவீதமானவர்கள் போசாக்கின்றி வாழ்கின்றனர். இலங்கையின் ஏனைய சமூக மற்றும் சுகாதார நோய்களைப் பற்றிக் குறிப்பிடத் தேவையில்லை.

ஜனநாயகத்தை உறுதிசெய்வதில் சிறிசேனவின் சாதனை என்ன? அவர் எதேச்சதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக வாக்குறுதியளித்திருந்த போதிலும், மட்டுப்படுத்தப்பட்ட மாற்றங்களை மட்டுமே மேற்கொண்டார். தனது பதவிக்காலம் 2020 இல் முடிவுக்கு வரும்போதே, ஜனாதிபதியின் அதிகாரங்களை முற்று முழுதாக இல்லாமல் ஆக்கப்போவதாக, அவர் கூறுகின்றார். அவரது நிர்வாகத்தின் கீழ் செய்யப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மாற்றியமைத்தலில் அரசியலமைப்புச் சபைக்கு, சிரேஸ்ட்ட அரச அதிகாரிகளின் நியமித்தமையும் உள்ளடங்கும். இதில் ஜனாதிபதிக்கு மாறாக, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களே மேலாதிக்கம் செய்வர்.

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிறிசேனவின் ஆட்சியிலும், அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (புலிகள்) எதிரான யுத்தத்தின் போது பயன்படுத்தப்படுத்திய அதே பொலிஸ்-அரச ஆட்சி முறைகளை உழைக்கும் மக்களுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது. சுகாதார தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் போது உட்பட வேலைநிறுத்தகாரர்களுக்கு பதிலீடாக படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். அதிக வேலைச்சுமைக்கு எதிராக போராடிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸ் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. வரவு-செலவு திட்ட வெட்டுக்களுக்கு எதிராக போராடிய வங்கி ஊழியர்கள் அண்மையில், ஆர்ப்பாட்டம் மீதான நீதிமன்ற தடையினால் பாதிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மீதும், தெற்கில் சுத்தமான குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள் மீதும் பொலிஸ் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது.

மனித உரிமைகள் பாதுகாப்புப் பற்றிக் கூற இருப்பது என்ன? இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்கள் பற்றி விசாரிப்பதற்காக, முன்மொழியப்பட்ட ஒரு சர்வதேச விசாரணை அமெரிக்காவின் உதவியுடன் கீழறுக்கப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தின் போது பத்தாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டமை சம்பந்தமாக முன்னைய இராஜபக்ஷ அரசாங்கம் மற்றும் இராணுவ தளபதிகளும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். வாஷிங்டன், உள்நாட்டு விசாரணை என்று அழைக்கப்படும் ஒன்றை நடத்துவதற்கான அனுமதியை சிறிசேன அரசாங்கத்துக்கு வழங்கும் பொருட்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் ஒரு தீர்மானத்தினை கொண்டு வந்தது. இது யுத்தக் குற்றங்களுக்கு மூடிமறைப்பதற்குப் பயன்டுத்தப்படும். "புலிச் சந்தேக நபர்கள்" என முத்திரை குத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் -பெரும்பாலனவர்கள் தமிழர்கள்- இன்னும் விசாரணை இல்லாமல் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

"ஊழலற்ற," மற்றும் வெளிப்படையான ஆட்சி பற்றிய சிறிசேனவின் பகட்டான பேச்சு ஒரு போலித்தனமானதாகும். நாடு, சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியினால் (யூ.என்.பி.) கடந்த ஏழு தசாப்தங்களாக மாறி மாறி ஆட்சி செய்யப்பட்டு வருகிறது. இந்த இரண்டு கட்சிகளும் இலஞ்சம், ஊழல், பாரபட்சம் மற்றும் குடும்ப ஆட்சி போன்ற மோசடிகளில் அடுத்தடுத்து மூழ்கிப் போயுள்ளது.

கடந்த ஆண்டு பூராவும், சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் முன்வைத்த பகுப்பாய்வுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலின் சர்வதேச உள்ளர்த்தங்கள் பற்றி விளக்குகையில், WSWS ஜனவரி 12, 2015 பின்வருமாறு எச்சரித்தது: "இறுதி விஷயம், சிறிசேனவின் நியமனத்தின் மூலம் இலங்கை தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்ற அமைதி, ஜனநாயகம், செழிப்பு போன்ற எதுவும் கிடையாது. நாடு, சீனாவிற்கு எதிரான அமெரிக்க சதியின் மற்றொரு அரங்கமாக மாற்றப்படப் போகின்றது. மோசமாகிவரும் உலகப் பொருளாதார மந்த நிலை சூழ்நிலையின் கீழ், 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தின் போது சுமத்தப்பட்ட மற்றும் இராஜபக்ஷவினால் விரிவாக்கப்பட்ட சகல அடக்குமுறை சட்டங்களும் மீண்டும் அமுலுக்கு வரவுள்ளதோடு, வாழ்க்கைத் தரங்கள் மீதான தொடர்ந்தும் உக்கிரமடையும் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிடப் பயன்படுத்தப்படும்.”

சிறிசேனவின் தேர்வு, இலங்கைக்கு மட்டுமல்ல இந்தப் பிராந்தியம் முழுவதுக்குமான, ஒரு திருப்புமுனையைக் குறிக்கின்றது. அவர், அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு கொண்ட இருவரான விக்கிரமசிங்க, மற்றும முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் உதவியுடன், வாஷிங்டனின் தூண்டுதலின் பேரில் ஒரு அரசியல் சதி மூலம் அதிகாரத்திற்கு கொண்டுவரப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் பெருவணிக ஆதரவு கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக் கொண்டதையடுத்து, இந்த ஆட்சி மாற்ற நடவடிக்கை முழுமையடைந்தது.

நவ சம சமாஜக் கட்சி (NSSP), ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் முன்னிலை சோசலிஸ்ட் கட்சி போன்ற போலி இடது குழுக்கள், புரவசிபலய (பிரஜைகள் சக்தி) போன்ற மத்தியதர வர்க்க அமைப்புக்களும் இணைந்து இராஜபக்ஷ அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் வாழ்க்கை தரங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான, தொழிலாளர்கள் மற்றும் மற்றும் ஏழைகளின் எதிர்ப்பினை, அமெரிக்க சார்பு நடவடிக்கைக்கு ஒரு போலி ஜனநாயக முகமூடியை வழங்கி, திசை திருப்பிவிட்டார்கள்.

வாஷிங்டனின் தலையீடானது, சீனாவை இராணுவ ரீதியில் சுற்றி வளைப்பதற்கும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் மீது அமெரிக்க மேலாதிக்கத்தை தக்கவைப்பதன் பேரில் யுத்தத்திற்கு தயாரிப்பதற்குமான அதன் பரந்த "ஆசியாவில் முன்னிலை" திட்டத்தின் ஒரு பாகமாகமேயாகும். அமெரிக்கா, இராஜபக்ஷவை எதிர்ப்பது அவரது ஜனநாயக விரோத நடவடிக்கையின் காரணமாக அல்ல. மாறாக அவர், பெய்ஜிங் உடன் அரசியல் மற்றும் பொருளாதாரக் உறவுகள் வைத்திருப்பதலேயே ஆகும். தனது வர்த்தக மற்றும் சக்தி வளங்களைப் பாதுகாக்கவும், விரிவாக்குவதற்குமான அதன் அதன் "கடல்சார் பட்டுப் பாதை" திட்டத்தின் ஒரு பகுதியாக பெய்ஜிங் கருதும் கொழும்பு துறைமுக நகரத்திட்டம் போன்ற பிரதான சீனாவின் முதலீடுகளை நிறுத்துவது அல்லது கட்டுப்பாடுகளை திணிப்பது உட்பட நடவடிக்கையின் மூலம் சிரிசேன – விக்ரமசிங்க அரசாங்கம் நாட்டை சீனாவிடம் இருந்து திட்டமிட்ட வகையில் தூர விலக்கியுள்ளது.

சிறிசேனவின் நிர்வாகம் அமெரிக்க போர் திட்டங்களுடன் நாட்டை நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ளது. இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி மற்றும் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் உட்பட கிட்டத்தட்ட ஒரு டஜன் சிரேஷ்ட அமெரிக்க அதிகாரிகள் இந்த உறவுகளைப் பலபடுத்துவதற்கு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். 2015 இல் அமெரிக்க குறிக்கோள்களைப் பட்டியலிட்டு, கெர்ரி ஜனவரி 1 ம் தேதி ஒரு பத்தியை எழுதினார்: "கடந்த ஆண்டு நைஜீரியா, பர்மா, இலங்கை மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளில் முக்கியமான ஜனநாயக வெற்றிகள் குறித்தது" ஜனநாயகம் பற்றிய கெர்ரியின் பேச்சு போலித்தனமானதாகும். இந்த நாடுகள் ஒவ்வொன்றிலும், அமெரிக்கா, வாஷிங்டன் சார்பு அரசாங்கங்களை நிறுவுவதற்காக சதிவேலைகளில் ஈடுபட்டது.

கடந்த வாரம், பொருளாதார ரீதியில் சீனாவை தனிமைப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட அமெரிக்க தலைமையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு குழுமமான வாஷிங்டனின் பசிபிக் ஊடான பங்காண்மை அமைப்பில் சேருவதற்கான கலந்துரையாடலில் ஈடுபடப் போவதாக சிறிசேன அரசாங்கம், அறிவித்தது. கொழும்பு, பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட "அமெரிக்க-இலங்கை பங்காண்மை பற்றிய கலந்துரையாடலையும்" அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளது. அமெரிக்கா, தெற்கு துறைமுகமான அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்திற்காக, 2.4 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ய எண்ணியுள்ளது. இது, சீனாவினை இதேபோன்ற திட்டத்தினை கீழறுக்கும் முயற்சியாகும்.

சிறிசேன தனது உரையில், நாட்டின் பொருளாதார பிரச்சினை. தற்போதைய அரசாங்கத்தின் பிழை அல்ல. ஆனால் அது அவற்றினைத் தீர்க்கும். பூகோளப் பொருளாதாரப் பின்னடைவையும் கடன் அதிகரிப்பினையும் எதிர்கொண்டுள்ள ஆளும் கும்பலின் சில தட்டினர், கிரேக்கத்திலான பொருளாதார நெருக்கடியுடனான சமாந்தரத்தினை சுட்டிக் காட்டி அத்தகைய சிக்கன நடவடிக்கைகள் அவசியம் என கோருகின்றனர். அரசாங்கம் இதற்கு எப்படிப் பிரதிபலிக்கும் என்பதை வரவு-செலவு திட்டத்தில் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது. ஓய்வூதிய உரிமையை வெட்டித் தள்ளல் உரம் மற்றும் ஏனைய மானியங்களை வெட்டுதல், அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைத்தல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகளை அதிகரித்தல் இதில் அடங்கும்.

பொருளாதார நெருக்கடியின் ஒரு அடையாளமாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF, வழிகாட்டலின்படி நாணயம் மிதக்க விடப்பட்டதையடுத்து, கடந்த ஆண்டில் ரூபாய் 10 வீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. அரசாங்கம் பொதுச் செலவில் கடுமையான வெட்டுக்களைக் கோரும் சர்வதேச நாணய நிதியத்திடம் இன்னுமொரு கடனைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளது.

சிறிசேன மற்றும் விக்ரமசிங்க அரசாங்கத்தினை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக பாடுபட்ட நசசக தலைவர் விக்ரமபாகு கருணாரட்ண, அண்மையில், கொழும்பினை தளமாக கொண்டு வெளிவரும் லக்பிம பத்திரிகையின் இரிதா சங்ரஹாய வார வெளியீட்டில் அரசாங்கத்தின் “ஜனநாயகத்தினைப்” பாராட்டினார். அவர் பல்வேறு துறைகளில் வெடித்த போராட்டங்களை சிறிசேனவின் கீழான ஜனநாயகத்திற்கான சான்றாக வஞ்சத்தனமாக சித்தரித்தார். “சம்பளம், சிறப்புரிமை மற்றும் தொழில் பிரச்சினை சம்பந்தமாக உழைக்கும் மக்கள் போராட்டத்துக்கு வந்துள்ளனர்” என்று எழுதிய கருணாரட்ண, “ஜனநாயக சுதந்திர சூழலுக்குள்ளேயே எல்லா சமூகப் போராட்டங்களும் நடத்தப்பட வேண்டும்” என்று மேலும் தெரிவித்தார்.

கருணாரட்ண, உக்கிரமான வர்க்கப் போராட்டங்கள் வெடிக்கும் போது கட்டவிழ்த்து விடப்படவுள்ள, அரச வன்முறைகளை பற்றி முன்னெச்சரிகை செய்யும் அதன் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மூடிமறைக்கும் அதேவேளை சிறிசேன மற்றும் அரசாங்கத்தினை பற்றி வெட்கமின்றி துதி பாடுகின்றார். இதேபோல், போலி இடதுகளின் ஆதரவுடனான தொழிற்சங்கங்களும் பிரஜைகள் சக்தி போன்ற குழுக்களும் சிறிசேனவின் “ஜனநாயகத்தை” பற்றிப் பேசுகின்றன. இது எல்லாவற்றுக்கும் மேலாக, இலங்கை வஷிங்டனின் பின்னால் அணிதிரள்வதை மூடி மறைப்பதற்கே ஆகும்.

சிறிசேன நியமிக்கப்பட்டு ஒருவருடத்தில், தொழிலாள வர்க்கம் அரசியல் நிலமைகளை பற்றிய ஒரு மதீப்பீட்டை செய்ய வேண்டும். சிறிசேன அரசாங்கம், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலமைகள் மீதான தாக்குதல்களை உக்கிரமாக்கியுள்ளதோடு, உலகம் பூராவும் தொழிலாளர்களுக்கு இன்னுமொரு அழிவுகரமான உலக யுத்தத்தின் ஆபத்தினை ஏற்படுத்துகின்ற, அமெரிக்காவின் போர்த் திட்டங்களுடன் நாட்டினை இணைத்து விடுகின்றது. இராஜபக்ஷ மற்றும் சிங்களப் பேரினவாதத்தில் ஆழமாகப் மூழ்கிப் போயுள்ள சிலசுக இன் அவரது பிரவையும் நோக்கி மீண்டும் திரும்புவது, முன்னேற்றமான மாற்றீட்டினை வழங்கப்போவதில்லை. தொழிலாளர்களும் இளைஞர்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் பக்கம் திரும்புவதோடு சிறிசேன அரசாங்கத்துக்கும் ஒட்டு மொத்த முதலாளித்துவ ஒழுங்குக்கும் எதிராக சர்வதேச சோசலிச முன்னோக்குக்காக போராட வேண்டும்.