ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French woman arrested, fined for wearing Muslim headscarf on Cannes beach

கான் கடற்கரையில் முஸ்லீம் தலையங்கி அணிந்திருந்ததற்காக பிரெஞ்சு பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டார்

By Anthony Torres
29 August 2016

மதச் சுதந்திரம் மீதான ஓர் அடிப்படை தாக்குதலாக, பிரெஞ்சு முஸ்லீம் பெண்மணி ஒருவர் முஸ்லீம் தலையங்கி அணிந்திருந்தார் என்பதற்காகவே அவரை பொலிஸ் கைது செய்து அபராதம் விதித்தது. துலூஸ் இல் இருந்து வந்திருந்த ஒரு முன்னாள் விமானப் பணிப்பெண்ணான சியாம், கான் (Cannes) கடற்கரையில் தமது குடும்பத்தாருடன் விடுமுறையை கழித்து கொண்டிருந்தபோது, "வெளிப்படையாக" எடுத்துக்காட்டும்வகையில் தலையங்கி அணிந்திருப்பதாக குற்றஞ்சாட்டி பொலிஸ்க்கு ஓர் அழைப்பு கிடைத்தது.

அதே கடற்கரையில் இருந்த பிரான்ஸ் 4 இன் இதழாளர் Mathilde Cusin அந்த சம்பவத்தை NouvelObs க்கு விவரித்தார்: “மூன்று பொலிஸ்காரர்கள் கடற்கரையை கண்காணித்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அவர்களில் இருவர் கண்ணீர் குண்டுகளை, அனேகமாக அவை மிளகுப்பொடி தூவுவதாக இருக்கலாம், சுடுவதற்கு தயாராக இருந்தார்கள். பின்னர் அவர்கள் கடற்கரைக்கு குறுக்கே நடந்து சென்று, தனது தலையில் தலையங்கி அணிந்திருந்த ஒரு பெண்மணியை நோக்கி சென்றார்கள்,” என்றார். பிரான்ஸ் இல் தலையங்கி அணிவது சட்டபூர்வமானது என்றாலும், உடல் முழுவதும் மூடிய நீச்சல் உடை அங்கிக்கு (புர்க்கினி) எதிரான சமீபத்திய உத்தரவை மேற்கோளிட்டுக் காட்டி, அந்த இளம் பெண்மணியை கடற்கரையிலிருந்து வெளியேறுமாறு உள்ளூர் பொலிஸ் கோரியது.

சியாம், NouvelObs க்கு பின்வருமாறு தெரிவித்தார், “[ஒரு பெண் பொலிஸ்] கூறும் போது, 'கான் நகரில் ஓர் உத்தரவு அமலில் இருப்பது உங்களுக்கு தெரியுமா?' என்றார், நான் தெரியாது என்றேன், இது குறித்து எனக்கு துல்லியமாக ஒன்றும் தெரியாது, இந்த சர்ச்சை குறித்து எனக்கு தெரியாது என்றேன்.” பொலிஸ் உடனான மோதல் வலுத்தது, சியாம் கருத்துப்படி, “என் குழந்தைகள் அழுது கொண்டிருந்தனர், என் குடும்பத்துடன் சேர்ந்து நான் அவமதிக்கப்படுவதை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். … என் அழுகையையும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் எங்களை அவமானப்படுத்தினார்கள்,” என்றார்.

“சற்று வன்முறையான" என்று Cusin வர்ணித்த ஒரு கோபமான கூட்டம் சியாம் ஐ சுற்றி கூடியது, “முழுவதும் சுதந்திரமாக இனவாத பேச்சுகள் பேசப்பட்டன. நான் அதிர்ந்து போனேன். 'இங்கிருந்து வெளியேறி வீட்டுக்கு போங்கள்!' என்றும், 'அம்மணி, சட்டம் என்றால் சட்டம் தான், நீங்கள் செய்யும் தொந்தரவால் நாங்கள் சோர்ந்து போனோம்' என்றும், 'இங்கே நாங்கள் அனைவரும் கத்தோலிக்கர்கள்!' என்றும் இதுபோன்ற வார்த்தைகளை என் முகத்துக்கு நேராக யாரும் கூறி நான் கேட்டதில்லை,” என்றவர் தெரிவித்தார்.

“நீங்கள் கூறுவதைப் போல, வெளிப்படையான மத அடையாளங்களை நீங்கள் குறி வைக்கிறீர்கள் என்றால், சிலுவைகளை ஏன் நீங்கள் கண்டு கொள்வதில்லை?” என்று சியாம் இன் குடும்பத்தினரும் அவர்களது நண்பர்களும் கேள்வி எழுப்பினர். அதற்கு பொலிஸ், “நாங்கள் சிலுவைகளை வேட்டையாடவில்லை. அம்மணி, சாலைக்கு செல்லுங்கள், உங்களை நாங்கள் கடற்கரையை விட்டு வெளியேற கோருகின்றோம்,” என்று பதிலளித்தனர்.

அவரது இஸ்லாமை கடைப்படிப்பதே பிரச்சினைக்குரியது என்று சியாம் கூறி முடித்தார், அதேவேளையில் பொலிஸ் அவரிடம் மறைமுகமாக, "தற்போதைய சூழலில் நீங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும், நாங்கள் உங்கள் மீது புகார் எழுத வேண்டியிருக்கும்,” என்று தெரிவித்தனர்.

பின்னர் சியாம் கூறுகையில், “என் மதத்துடன் சம்பந்தமில்லாதவர்கள் மக்களை கொல்கிறார்கள் என்பதற்காக, கடற்கரைக்குச் செல்லும் உரிமை எனக்கு இல்லையா! அவர்கள் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துகிறார்கள் என்பதற்காக, எனது உரிமைகள் பறிக்கப்படுகிறது. நாங்கள் பிரான்சில் வசிக்கிறோம், நான் எங்கே செல்ல விரும்புகிறேனோ அங்கே செல்ல எனக்கு உரிமை இருக்கிறது! இது அவமதிப்பதாகும் … இன்று நீங்கள் கடற்கரையில் அனுமதிக்க மாட்டீர்கள். நாளை, வீதியிலேயே அனுமதிக்க மாட்டீர்கள்? நாளை மறுநாள், வீட்டிலேயே கூட எங்கள் மத சம்பிரதாயங்களுக்கு தடை விதிப்பீர்கள்? மனித உரிமைகள் நிறைந்த இந்த மண்ணில், நான் சுதந்திரம், சமத்துவம் அல்லது சகோதரத்துவத்தின் எந்த சாயலையும் பார்க்கவில்லை. பிரான்சில் இது நடப்பதற்காக நான் ஆச்சியமடைகின்றேன்,” என்று கூறி முடித்தார்.

பின்னர் சியாம், கான் இல் இருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டார், NouvelObs குறிப்பிடுகையில், “கான் இல் அவர்களை தங்க வைத்திருந்தவர் 'மன சஞ்சலமடைந்ததுடன்', சிறிது அந்த 'வெட்ககேடான' அவமதிப்புக்காகவும், திட்டமிட்டவாறு கான் இல் அவர்கள் தொடர்ந்து தங்க வேண்டாமென கேட்டுக் கொண்டார்,” என்று குறிப்பிட்டது.

அந்த சம்பவத்தை பகிரங்கப்படுத்துவதற்கு, பிரான்சில் கூட்டான இஸ்லாமிய எதிர்ப்புணர்வை சியாம் குறைகூறினார். அவர் அறிவிக்கையில், “நம் நாட்டில் இவ்வாறு நடக்க நாம் அனுமதிக்க கூடாது என்று நான் கூறி முடித்தேன். அனைத்திற்கும் மேலாக, நான் ஒரு புலம்பெயர்ந்தவர் கிடையாது. என் பெற்றோர்கள் பிரெஞ்சு, என் பாட்டனார்களும் பிரெஞ்சு பிரஜைகள் … 'இங்கிருந்து வெளியேறி வீட்டுக்கு போ' என்று கூறும் போது, எனக்கு சிரிப்புத்தான் வருகிறது, இது நிஜமாகவே கடுமையான இனவாதம்,” என்று அவர் தெரிவித்தார்.

சியாம் க்கு அளிக்கப்பட்ட தொல்லை, பல்வேறு வலதுசாரி மற்றும் சோசலிஸ்ட் கட்சி அரசாங்க நகராட்சி தலைவர்கள் (மேயர்கள்) திணித்த புர்க்கினி அணிவதற்கான தடைகளின் ஒரு விளைபொருளாகும். புர்க்கினி அணிந்திருந்த முஸ்லீம் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சச்சரவுக்காக கோர்சிகாவில் வலதுசாரி போராட்டங்கள் நடந்ததற்கு பின்னர் அந்த தடைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. உடல் முழுவதும் மூடிய நீச்சல் உடை அங்கியைக் கண்டித்து பிரெஞ்சு ஊடகங்களில் ஒரு மிரட்சியூட்டும் பிரச்சாரத்திற்கு இடையே நகராட்சி தலைவர்கள் புர்க்கினிக்கு தடைவிதித்து உத்தரவாணைகள் பிறப்பித்தனர்.

கான் இன் Thierry Migoule நகரில் பொது சேவைகளுக்கான பொது இயக்குனர் AFP க்கு கூறுகையில், “கடற்கரையில் மத அடையாளங்களை அணிவதற்கு நாங்கள் தடைவிதிக்கவில்லை, ஆனால் எங்களுடன் போரில் ஈடுபடுகின்ற பயங்கரவாத இயக்கங்களுடன் இணக்கத்தைக் காட்டும் விதத்தில் கண்களை உறுத்தும் ஆடைகளுக்குத்தான் நாங்கள் தடை விதித்துள்ளோம்,” என்றார்.

மதசார்பின்மை மற்றும் பெண் உரிமைகளின் பாதுகாப்பு என்றழைக்கப்படுவது மற்றும் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற மூடிமறைப்பில் கீழ், பிரெஞ்சு அரசு முஸ்லீம் மக்கள் மீது முன்னொருபோதும் இல்லாதளவிற்கு கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. சியாம் மீது புகார் எழுதுவதென்ற பொலிஸ் இன் முடிவு போன்ற இதுமாதிரியான கருத்துக்கள் இஸ்லாம் சம்பிரதாயத்தையே குற்றகரமாக்கும் ஒரு முயற்சியாகும். ஒரு முஸ்லீம் பெண்மணி வெளியில் தெரியும் விதத்தில் அவரின் மத நம்பிக்கை ஓர் அடையாளமாக தலையங்கி அணிந்திருந்தார் என்பதற்காக அவரை இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஒரு ஆதரவாளர்போல் கையாளலாம் என்பதே Migoule கருத்தின் தெளிவான உள்ளர்த்தமாகும்.

இது முன்னுக்குப் பின் முரணான அரசியல் பொய். அனைத்திற்கும் மேலாக உண்மையில் பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்களானது மத்திய கிழக்கில் பிரெஞ்சு அரசு உட்பட நேட்டோ கூட்டணியினது வெளியுறவு கொள்கையின் விளைவாகும்.

சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிராக மக்கள் செல்வாக்கு பெற்ற ஜனநாயக மேலெழுச்சிகளை பிரதிநிதித்துவம் செய்வதாக பொய்யாக கூறி, அவரது ஆட்சியை எதிர்த்து சண்டையிடும் இஸ்லாமிய போராளிகள் குழுக்களை பாரீஸூம் ஏனைய நேட்டோ தலைமைகளும் ஆதரிக்கின்றன. சிரியாவில் பயிற்றுவிக்கப்பட்ட இஸ்லாமிய சக்திகளால் அதே பயங்கரவாத முறைகள் இன்று பிரான்சில் பயன்படுத்தப்படுகின்றன, இவர்கள் பிரெஞ்சு வெளியுறவு கொள்கையின் கருவியாக, ஐரோப்பிய மண்ணில் தாக்குதல்களை ஒழுங்கமைக்க மூடிமறைப்பாக, பாதுகாப்பு சேவைகளிடமிருந்து அவர்கள் பெறும் பாதுகாப்பை சாதகமாக்கிக் கொண்டுள்ளனர்.

இத்தகைய பயங்கரவாத தாக்குதல்களில் எப்போதும் அரசுக்கு நன்கு தெரிந்த மற்றும் அரசின் கண்காணிப்பில் இருக்கும் தனிநபர்களே சம்பந்தப்பட்டுள்ள நிலையில், பிரான்சில் அவசரகால நெருக்கடி நிலையை திணிக்க மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பறிக்க இவை பின்னர் சாதகமாக்கிக் கொள்ளப்படுகின்றன.

சியாம் மீது புகார் எழுதப்பட்டு ஒருசில நாட்களுக்குப் பின்னர், பொதுமக்கள் கூடும் கடற்கரையில் புர்க்கினியை தடைவிதிக்கும் நகராட்சி முதல்வர்களின் முடிவை இரத்து செய்யுமாறு அரசு கவுன்சில் (Council of State) ஒரு தீர்ப்பை வழங்கியது. நகராட்சி தலைவர்களும் மற்றும் பிரதம மந்திரி மானுவெல் வால்ஸூம் பகிரங்கமாக அந்த தீர்ப்பை நிராகரித்ததுடன், அவர்களது மிரட்சியூட்டும் முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தை அதிகரிக்க அவர்கள் தீர்மானகரமாக இருப்பதாக வலியுறுத்தினர்.

வால்ஸ் கருத்துப்படி, “அரசு கவுன்சிலின் தீர்ப்பு பிரச்சினையை தீர்க்காது.” அவர் தொடர்ந்து கூறுகையில், “கடந்த காலத்தைப் போலவே, மவுனமாக இருப்பது சற்றே காட்டிக்கொடுப்பாக இருக்கும். இது மற்றொரு அடிபணிவாக ஆகிவிடும்,” என்றார்.

இத்தகைய கருத்துக்கள் தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கையாகும். அவசரகால நெருக்கடி நிலையைத் திணிப்பது என்ற ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் இன் முடிவு மற்றும் அரசியலமைப்பில் குடியுரிமை பறிக்கும் கோட்பாடுகளை உள்ளடக்குவதற்கான அவரின் பரிந்துரை —அதாவது நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சி பிரான்சில் யூத படுகொலையை தொடங்குவதற்கு அனுமதித்த ஒரு நடவடிக்கையை சட்டபூர்வமாக்குவதற்கான அவரின் இந்த பரிந்துரை— தற்செயலானதோ அல்லது பயங்கரவாத-எதிர்ப்பு நடவடிக்கையோ கிடையாது. இது, குறிப்பாக தொழிலாளர்களது சமூக உரிமைகளை அழிக்கும் சோசலிஸ்ட் கட்சியின் பிற்போக்குத்தனமான தொழிலாள சட்டத்திற்கு எதிரான சமூக எதிர்ப்பு மற்றும் போரின் தீவிரப்பாடுக்கு இடையே, பிரெஞ்சு ஜனநாயகத்தின் ஆழ்ந்த நெருக்கடியை எடுத்துரைக்கிறது.

பிரெஞ்சு ஆளும் உயரடுக்கில் உள்ள பலமான சக்திகள் இந்த நெருக்கடிக்கு ஒரு சர்வாதிகார ஆட்சியை ஸ்தாபிப்பதன் மூலம் தமது பதிலை காட்டலாமா என் விவாதித்துவருகின்றன. அவ்வாறான ஒரு ஆட்சி, ஒட்டுமொத்த மத சமூகங்களுக்கும் தொல்லை கொடுக்கும் ஒரு கொள்கையையும் அல்லது முற்றுமுதலான இனச்சுத்திகரிப்பைகூட நடைமுறைப்படுத்தக்கூடும்.

இந்தாண்டு தொடக்கத்தில் அரசியலமைப்பில் குடியுரிமையை பறிக்க முயன்றபோது, ஹோலாண்ட் பின்வாங்க வேண்டியிருந்தது; தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு முன்னதாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சமூக எதிர்ப்பு மனோபாவம் மிகவும் வெடிப்பார்ந்து இருந்தது மற்றும் அதுபோன்றவொரு கொள்கைக்கு அரசியல் சூழ்நிலை கனிந்திருக்கவில்லை. இப்போது முகத்தை மூடிய பெண்களை தொலைப்படுத்துவதுடன், ஆளும் வர்க்கம் மீண்டும் தாக்குதலுக்கு திரும்பி உள்ளது.