ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German government plans massive expansion of spy services

ஜேர்மன் அரசாங்கம் உளவு சேவைகளை பெருமளவில் விரிவாக்க திட்டமிடுகிறது

By Sven Heymann
13 September 2016

ஜேர்மன் அரசாங்கமானது அதன் உளவு நிறுவனங்களை மிகப் பெரிய அளவில் விரிவாக்க திட்டமிட்டு வருகிறது. அரசியலமைப்பை காப்பதற்கான மத்திய உளவு முகமைக்கான (BfV) நிதியளிப்பு வருகின்ற ஆண்டில் 18 சதவீதம் உயருகின்ற அதேவேளை, வெளிநாட்டு உளவுச்சேவை (BND) 12 சதவீத உயர்வைப் பெறும். இது பொது ஒலிபரப்பாளர்களான NDR மற்றும் WDR மற்றும் Süddeutsche Zeitung நாளிதழின் ஆய்வால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜேர்மன் உளவு நிறுவனங்களை விரிவுபடுத்தலானது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரசு சாதனத்தை பெரிதாய் கட்டி எழுப்புவதன் ஒரு பகுதி ஆகும். உள்துறை அமைச்சர் தோமஸ் டி மஸியர் (CDU) இன் படி 2016க்கும் 2020க்கும் இடையில் மத்திய போலீசில் மட்டும் 7,000 புதிய பதவிகள் உருவாக்கப்பட இருக்கின்றன. கடந்த செவ்வாயன்று பாராளுமன்றத்தில் (Bundestag) நடந்த வரவு-செலவு திட்ட அறிக்கை மீதான உரையின் பொழுது, நிதியமைச்சர் வொல்ஃப்காங் ஷொய்பிள, பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தில் அதிகரிப்போடு, “உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு செலவிடலில் முந்திய திட்டமிடலை விடவும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, அதாவது 2.2 பில்லியன் யூரோக்கள் வரைக்கும் அதிகமாய் இருக்கும்” என அறிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், பாதுகாப்பு பற்றாக்குறைகள் மற்றும் இடைவெளிகள் தொடர்பானதில் இந்தக் கட்டி எழுப்புதலானது, உத்தியோகபூர்வமாய் நியாயப்படுத்தப்பட்டது. உண்மையில், இந்த ஒருங்கிணைந்த அளவீடுகளின் இலக்கு மக்களை பரந்த அளவில் கண்காணித்தல் மற்றும் ஒரு போலீஸ் அரசைக் கட்டுதல் ஆகும்.

பிரதான எதிர்க்கட்சிகளின் போர் உந்தல், வளர்ந்துவரும் சமூக சமத்துவமின்மை மற்றும் நீடித்த பொருளாதார நெருக்கடிக்கு அதிகரித்த எதிர்ப்புக்கள் நிலவும் நிலைமைகளின் கீழ், ஆளும் செல்வந்த தட்டானது வெளிப்படையான வர்க்கப் போராட்டத்தின் வெடிப்புக்கான நனவான தயாரிப்புக்களை செய்துவருகிறது.

Süddeutsche Zeitung ஆல் பெறப்பட்ட இரகசிய வரவு-செலவுத் திட்ட ஆவணங்கள் உள்நாட்டுப் பாதுகாப்பைக் கட்டி எழுப்புதலின் செய்ல்பரப்பு பற்றி தெளிவுபடுத்துகிறது. BfV வரும் ஆண்டில் 45 மில்லியன் யூரோக்களை நிதி அதிகரிப்பாகப் பெறும். 307 மில்லியன் யூரோக்கள் வரவு-செலவு திட்டத்துடன், இத்தொகையானது ஒரு ஆண்டில் மட்டும் 18 சதவீதத்தைக் கூட்டுகிறது.

BND யும் கூட குறிப்பிட்ட வகையில் பலப்படுத்தப்பட இருக்கிறது. செய்தித்தாள் குறிப்பிட்டவாறு அதன் வரவு-செலவு திட்டம் 12 சதவீத அளவில் 808 மில்லியன் யூரோக்களாக அதிகரிக்கும்.

மற்ற விடயங்களுக்கு மத்தியில், BND ஆனது வழக்கத்திற்கு மாறான தொடர்புகள் என்று அழைக்கப்படுவதை இடைமறிக்க, சல்லடைபோட மற்றும் செயல்முறைப்படுத்த திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. இதில் அண்மைய ஆண்டுகளில் உரைவடிவ செய்திகளை அதிகரித்த அளவில் பதிலீடு செய்யும் வாட்ஸ் அப் போன்ற செய்திச் சேவைகளும் உள்ளடங்கும். இந்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து வெளியிடப்பட்ட Focus இதழின் கட்டுரைப்படி, உலகம் முழுமையும் பில்லியன் மக்களுக்கு மேலானோர் இப்பொழுது வாட்ஸ் அப் –ஐ பயன்படுத்தி நாள்தோறும் 42 பில்லியன் செய்திகளுக்கு மேல் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

பகுதி அளவில் மறைகுறியாக்கப்பட்ட (encrypted) செய்திகளை உடைத்தெடுக்க BND யின் “செயற்திட்டம் பானோஸ்” (Project Panos) பயன்படுத்தப்பட இருக்கிறது. Süddeutsche Zeitung அறிவித்தவாறு, BND ஆனது தற்போது உலகெங்கும் பயன்படுத்தப்படும் 70 தகவல் சேவைகளில் 10 ஐ மட்டுமே வாசிக்க முடியும். இந்தப் பணியை முடிக்க, வரவு-செலவு திட்டத்தில் 21.5 மில்லியன் யூரோக்கள் தனியாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. செய்தி அறிவிப்பின்படி, BND மெட்டா டாட்டாவை (metadata) மட்டுமல்லாமல் பரிமாறிக்கொள்ளப்படும் அரட்டை தகவல்களின் பொருள் பற்றியும் அக்கறை கொண்டுள்ளது. தேவைப்பட்டால், மறைகுறிகளை அகற்றுவதற்கு வெளியார் நிறுவனங்கள் கூட ஒப்பந்தம் செய்யப்படக்கூடும்.

“Zerberus” என்று அழைக்கப்படும் திட்டமானது, செயற்கைக்கோள் தொலைபேசியில் நடக்கும் கலந்துரையாடலை இடைமறிக்க BND க்கு உதவுவதற்கு இருக்கிறது. Tagesschau.de அறிவித்தவாறு, முக்கிய உள்நாட்டுத் தரவு புள்ளிகளில் கேபிள்களை ஒட்டுக்கேட்பதும் கூட முன்னெடுக்கப்பட இருக்கிறது. அத்துடன் கூட, மேலும் 55 மில்லியன் யூரோக்கள் BND இன் “அத்தியாவசிய தொழில்நுட்ப நவீனப்படுத்தலுக்கு” தயாராய் வைக்கப்பட்டிருக்கிறது.

BfV யின் ஸ்தூலமான திட்டங்கள் இரகசிய ஆவணங்களில்  விளக்கப்படவில்லை. இருந்தபோதிலும், BfV இன் திசைவழி  தெளிவாகவே தெரிகிறது. உள்நாட்டு உளவு சேவையானது கடந்த காலத்தில் இருந்ததை விடவும் குறிப்பிடத்தக்க உயர் மட்டங்களில் பணியாளரைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு ஏற்கனவே 470 பதவிகளை சேர்த்துள்ளது, 2017க்காக மேலும் 100 பேர் திட்டமிடப்பட்டுள்ளனர். BfV இவ்வாறு அண்மைய ஆண்டுகளில் விரைந்து வளர்ச்சி அடைந்துள்ளது. வரவு-செலவுத் திட்ட அங்கீகாரம் பெற்றால், BfV இன் வரவு-செலவுத் திட்டம் 2000க்கு பின்னர் இருந்து மூன்று மடங்காக ஆகும் என Tagesschau.de சுட்டிக்காட்டியது.

கூடுதல் வளங்கள் மத்திய முகமைகளுக்கும் மாநிலங்களில் உள்ள  பாதுகாப்பு முகமைகளுக்கும் இடையில் உறவுகளை ஆழப்படுத்துவதை நோக்கமாய் கொண்டிருக்கிறது. இந்த உள்ளடக்கத்தில், BfV ஆனது மாநில கண்காணிப்பு முகமைகளுக்கான “மத்திய முகமைப் பாத்திரத்திற்குள் இடைப்பட்ட அர்த்தத்தில்” நகர இருக்கிறது, என அது குறிப்பிட்டது. அத்துடன் கூட, BfV-ன் தரவு விவரங்கள் வெளிநாட்டவரின் மையப் பதிவேட்டினுடைய (AZR) விவரங்களுடன் இணைக்கப்பட இருக்கிறது. சைபர் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட இருக்கிறது.

மக்கட்தொகையை உளவு பார்த்தல் மின்னணுவியல் வழிமுறைகளூடாக நடத்தப்படவிருப்பது என்பது மட்டுமல்ல. தகவலளிப்போருக்கு பணமளிக்கவும் செலவுகளுக்காகவும் BfV 2.8 மில்லியன் யூரோக்களை வைத்திருக்கிறது.

உள்நாட்டு உளவு முகமையை பலப்படுத்துவதும் கூட ஒரு முக்கிய வெளிநாட்டுக் கொள்கையின் கூறைக் கொண்டிருக்கிறது. BfV இன்றைய நாள்வரை அமெரிக்க உளவு முகமையான NSA உடனான ஒத்துழைப்பில் பெரிதும் சார்ந்திருக்கிறது. இதில் 2013ல் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றிய தகவலாளர் எட்வார்ட் ஸ்நோவ்டெனால் அம்பலப்படுத்தப்பட்டவாறான அதன் XKeyScore மென்பொருளைப் பயன்படுத்துவது உள்ளடங்கும். Tagesschau.de இன்படி, தற்போதைய அபிவிருத்திகள், “அமெரிக்க முகாமைகளிலிருந்து ஒரு விடுதலையை” சுட்டிக்காட்டுகின்றன. நீண்டகாலத்தில், ஜேர்மன் உளவு முகமைகள் மிகவும் சுதந்திரமாக செயல்படும் திறனைக் கொள்ள தெளிவாகவே திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன.”

இடது கட்சியும், பசுமைகளும் போலீஸ் மற்றும் கண்காணிப்பு அரசைக் கட்டுவதை ஆதரிக்கின்றன. அரசு சாதனத்தை பலப்படுத்தும் அரசாங்கத்திட்டங்கள் பற்றிய எந்த விமர்சனமும் வலதிலிருந்தே வருகிறது.

பாராளுமன்றக் குழுவின் இடது கட்சியின் இணைத்தலைவர் Dietmar Bartsch, மஸியேரின் முன்முயற்சிக்கு தான் நற்சான்று கோருகிறவாறு, “நிறைய போலீசார் வேண்டும் என்று கூறியது உண்மையில் எதிர்க் கட்சிதான்” என்றார். அதேவேளை, “தனிநபர் மற்றும் வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களின் ஒரு தோல்வியுற்ற கொள்கைக்கான பொறுப்பாக” இருப்பதாய் பாராமன்றத்தில் மகா கூட்டணியைக் குற்றம் சாட்டினார். அவர்கள் போலீசாரை “சிக்கனப் பொருளாதாரக் கொள்கையின் பலியாக” ஆக்கினர் மற்றும் 1998க்குப் பின்னர் “17,000 போலீஸ் வேலைகளை துடைத்துக்கட்டிவிட்டனர்.” அவசியப்படுவது என்னவெனில், “செயல் திறனுடைய அரசு”, மற்றும் அது பொதுச்சேவையில், குறிப்பாக போலீஸ் நன்கு ஆயுத மயப்படுத்தப்படல் மற்றும் நன்கு பயிற்றுவிக்கப்படலை” உள்ளடக்கும்.