ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

A comment on demorapzed opportunists

அவநம்பிக்கை அடைந்த சந்தர்ப்பவாதிகளைக் குறித்து ஒரு கருத்து

By David North
19 April 2016

அலெக்ஸ் ஸ்ரைனர் மற்றும் பிரான்ங்க் பிரென்னரின் ட்ரொட்ஸ்கிச-விரோத வலைப்பதிவு, ஏப்ரல் 12 இல் நியூயோர்க்கின் புரூக்ளினில் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தைக் குறித்து குறிப்பிடுகிறது. அச்செய்தியின்படி:

“அதில் மொத்தம் சுமார் 30-35 பேர் பங்குபற்றியமை அதை ஏற்பாடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சி தான் என்றாலும், நியூயோர்க்கின் கிரேக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் எவரும் கலந்து கொள்ளாதது ஒரு ஏமாற்றமாக இருந்தது. இது ஐயத்திற்கிடமின்றி, சிரிசா அரசாங்கத்தால் அவர்களது எதிர்பார்ப்புகள் காட்டிக்கொடுக்கப்பட்டதன் விளைவாக, பல கிரேக்கர்கள் இப்போது அவநம்பிக்கை அடைந்திருப்பதாக உணர்வதுடன் சம்பந்தப்பட்டுள்ளது.”

மேற்கூறிய இந்த பத்தி, ஸ்ரைனரும் பிரென்னரும் அவர்களது வலைத் தளமான permanent-revolution.org இல் ஜனவரி மற்றும் ஜூலை 2015 க்கு இடையே பதிப்பித்துள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு குற்றப்பத்திரிகையாகும். முக்கியமான அந்த ஆறு மாதங்களின் போது, அவர்கள் சிரிசாவின் வர்க்க குணாம்சத்தையும் மற்றும் அது தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய காட்டிக்கொடுப்புக்கு தயாரிப்பு செய்து வருவதையும் அம்பலப்படுத்திய ICFI “குறுங்குழுவாதிகளைக்" கடிந்து கொள்வதற்காக அந்த வலைத் தளத்தை அர்பணித்திருந்தனர். சிரிசாவின் "அனுபவத்தை" மாதக் கணக்கில் புகழ்ந்த பின்னர், இப்போது அவர்கள் அதன் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள "அவநம்பிக்கையைக்" குறித்து புலம்புகிறார்கள்.

ஸ்ரைனரும் பிரென்னரும் அவர்களின் திறமைகளின் மிகச் சிறப்பானதைக் கொண்டு, அல்லது மிக மோசமானதைக் என்று கூட ஒருவர் கூறலாம், அந்த அவநம்பிக்கை நிலைக்கு பங்களிப்பு செய்துள்ளனர்.

ஜனவரி 22, 2015 இல் அவர்கள் எழுதினார்கள்:

… சிரிசா தலைமையின் சமரசப்படுத்தும் குணாம்சம், இத்தேர்தல் பிரதிநிதித்துவம் செய்த வரலாற்று மாற்றத்தினது முக்கியத்துவத்தை குறைத்துவிடவில்லை. ஒரு தலைமுறைக்கும் அதிகமான காலத்திற்கு "இடது" என்று கூறிக்கொண்ட —"தீவிர இடது" என்றும் கூட கூறிக்கொண்ட— ஓர் அரசியல் கட்சி முதல்முறையாக ஐரோப்பாவில் ஒரு தேசிய தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கம் ஒன்றை உருவாக்கி உள்ளது. அந்த தேர்தலே கூட கிரீஸை திடுக்கிடச் செய்துள்ளது. … இந்த வாய்ப்புகள் குறித்து குறுங்குழுவாத குழுக்கள் கண்காணாமல் உள்ளன. ஏனென்றால் அவை பரந்துபட்ட இயக்கங்கள் குறித்து அக்கறையற்றுள்ளன. மேலும் சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போல பரந்துபட்ட இயக்கம் உடைத்து வரும் போது, அவை இந்த அசௌகரியமான உண்மையிலிருந்து விலகிச்செல்வதற்காக கூடுதல்நேரம் வேலை செய்கின்றன.

சிரிசா அரசாங்கம் குறித்த ICFI இன் மதிப்பீட்டிற்கு, அவர்கள் ஒரு கிரேக்க சந்தர்ப்பவாதியால் எழுதப்பட்ட ஒரு நீண்ட மறுப்புரையையும் பிரசுரித்தனர்:

பதவியேற்பதற்கு முன்னரே அந்த முயற்சியைக் கண்டிப்பதற்கு பதிலாக, இந்த பரிசோதனை என்ன ஏற்படுத்தும் என்பதை ஒருவர் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அரசியல் யதார்த்தங்களை மறுப்பது மற்றும் ஐரோப்பாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதில் மட்டுமே சார்ந்துள்ள அரசாங்கத்தை ஆதரிக்காமல் இருப்பது ஆகியவை இடதின் எதிரிகளுக்கு, அதாவது இடதை உள்ளிழுத்துக் கொண்டுள்ள மற்றும் ஆண்டுகாலமாக வலதால் பயன்படுத்தப்பட்ட மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சியும் அதை ஆதரிப்பதும் மட்டுமே ஒரே வழி என்று பெரும்பான்மை மக்களை நம்ப வைக்க முயல்கின்ற இடதின் தோல்விகளை வலியுறுத்துகின்ற ஏதோவொன்றுக்கு, மட்டுந்தான் ஆதரவளிக்கிறது.

ஸ்ரைனரும் பிரென்னரும் சிப்ராஸ் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக, சிரிசாவை ஒரு முதலாளித்துவ கட்சியாக WSWS குணாம்சப்படுத்தியதை எதிர்க்கும் அளவிற்குச் சென்றனர். அவர்கள் எழுதினார்கள்:

மார்க்சிஸ்டுகள் அரசியல் யதார்த்தத்தை மிகவும் ஆழமாக புரிந்து கொள்ள "முதலாளித்துவ கட்சி" போன்ற ஒரு வகைப்பாட்டைப் பிரயோகிக்கிறார்கள், ஆனால் ஒரு குறுங்குழுவாத போக்கின் கரங்களில் அத்தகைய ஒரு வகைப்பாடு உள்ளடக்கமற்றதாகவும் மற்றும் பெயர் கூறி அழைப்பதற்கான ஒரு வடிவம் என்பதற்குச் சற்று அதிகம் என்பதாகவும் மாறிவிடுகிறது.

இவ்வாறான தாக்குதல் போக்கு 2015 எங்கிலும் தொய்வின்றி தொடர்ந்தது. ஆனால் இப்போது, எந்தவித விளக்கமும் இன்றி, அவர்கள் சிரிசா அரசாங்கம் ஏற்படுத்திய பரந்தளவிலான அவநம்பிக்கையைக் குறித்து எழுதுகிறார்கள்.

கிரீஸின் தொழிலாளர் புரட்சி கட்சியின் தலைவர் சவாஸ் மிஷேல் வழங்கிய உரை, ஸ்ரைனர்-பிரென்னர் கூட்டத்தின் உச்சக்கட்டமாக இருந்தது. இவர் ஏதென்ஸில் இருந்து ஸ்கைப் வழியாக அக்கூட்டத்தில் உரையாற்றினார். சவாஸ் மிஷேல், ஸ்ரைனரின் ஒரு அரசியல் கூட்டாளி என்பதுடன் அனைத்துலகக் குழு மீது அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ள வெறுப்புத்தான் அவர்களை பிரதானமாக பிணைத்து வைக்கிறது.

ஸ்ரைனர் மற்றும் பிரென்னரைப் போலவே, சவாஸ் மிஷேலும் 2015 இல் சிரிசா ஆட்சியை பிரகாசமாக வர்ணித்ததுடன், ICFI இன் எச்சரிக்கைகளை கண்டித்தார். ஆனால் அந்த ஆனந்தப் பரவசம் மரண வேதனைக்கு தான் வழிவிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, சவாஸ் மிஷேல் "அந்த காட்டிக்கொடுப்பை, ஸ்ராலின், சேர்ச்சில் மற்றும் ரூஸ்வேல்ட் இடையிலான 1944 உடன்படிக்கையால் கிரேக்க கிளர்ச்சியாளர்கள் வரலாற்றுரீதியாக காட்டிக்கொடுக்கப்பட்டதுடனும் மற்றும் அதன் பின்னர் அதனினும் மோசமாக 1945 உள்நாட்டு போரின் போது அவர்களது ஆயுதங்களைப் போட்டுவிட்டு பிரிட்டிஷிடம் சரணடையுமாறு போராளிகளை நிர்பந்தித்த கிரேக்க ஸ்ராலினிசவாதிகளின் காட்டிக்கொடுப்புடனும் ஒப்பிட்டார்.”

வரலாற்றுரீதியில் பொருத்தமற்ற ஒப்பீடுகளை தவிர்த்துக்கொள்ளக்கூட சிரிசாவின் நம்பிக்கை துரோகத்தைக் குறைத்துக் காட்டவில்லை. ஆனால் சவாஸ் மிஷேல் கிரீஸில் ஏராளமாக இருக்கும் ஒரு சந்தர்ப்பவாத அரசியல் வகையைச் சேர்ந்தவர். அவரது நுரையீரலைக் கொண்டு யோசித்து, அவர் வனப்புரை பகட்டாரவாரப் பேச்சை அரசியல் பகுப்பாய்வுடன் சேர்த்துக் குழப்புகிறார். 2015 இல் சிரிசா ஆட்சியின் புரட்சிகர உள்ளடக்கத்தை கொண்டாட அவர் தன்னைத்தானே ஓய்வின்றி அர்பணித்துக் கொண்ட பின்னர், இப்போது அவர் வெகுஜன வாக்கெடுப்புக்குப் பிந்தைய நிலைமையை, நூறாயிரக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை பேரழிவுகரமாக விலையாக எடுத்த கிரேக்க உள்நாட்டு போர் சம்பவங்களுடன் ஒப்பிடுகிறார். இது அபரிமிதமான மிகைப்படுத்தல் என்பதுடன் தற்போதைய அரசியல் நிலைமையைத் தெளிவுபடுத்த இது எதுவும் செய்யவில்லை.

உண்மையில் சவாஸ் மிஷேல் அவரது சொந்த மிகைப்படுத்தல்களையே தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஜூலை 2015 காட்டிக்கொடுப்பை 1940 களின் கிரேக்க தொழிலாளர் இயக்க சீரழிவுகளுடன் ஒப்பிட்டு, மிஷேல்—ஸ்ரைனர்—பிரென்னர் வலைப்பதிவின் செய்தியில் உள்ளவாறு—"தொழிலாள வர்க்கம் காட்டிக்கொடுக்கப்பட்டு இருந்தாலும், அவர்கள் தோற்கடிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார்.”

இது மிக மோசமான ஏமாற்றுத்தனமாகும். சவாஸ் மிஷேல் 1940 களின் அழிவுகளுடன் ஒப்பிடும் தொழிலாள வர்க்கம் அந்தவொரு பாரிய "காட்டிக்கொடுப்பால்" பாதிக்கப்பட்டது தான், ஆனால் அது "தோல்விக்கு" ஆளாகவில்லை என்று அவர் வாதிடுகிறார்.

சவாஸ் மிஷேலின் அரசியல் வரலாற்றுக்கு பரிச்சயமானவர்கள், “காட்டிக்கொடுப்புக்கும்" மற்றும் "தோல்விக்கும்" இடையிலான அவரது எரிச்சலூட்டும் வேறுபடுத்தலின் மூல ஆதாரத்தைப் புரிந்து கொள்வார்கள். அவர் ஜெரி ஹீலியிடம் இருந்து இந்த சந்தர்ப்பவாத வார்த்தை விளையாட்டைக் கற்றுக் கொண்டார். ஹீலி பப்லோவாதத்திற்கு திரும்பிய காலப்பகுதியில், அவர் தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு பின்னடைவின் அரசியல் முக்கியத்துவத்தையும் மற்றும் பாதிப்பையும் குறைத்துக் காட்டுவதற்காக, "தொழிலாள வர்க்கத்தின் தோல்வியடையாத இயல்பை" குறித்து பேசினார். சவாஸ் மிஷேல், முட்டாள்தனத்தினால் மட்டுமல்ல, மாறாக அவரது சொந்த சந்தர்ப்பவாத விளைவுகளுக்கான அரசியல் பொறுப்பை தட்டிக்கழிக்க அது உதவும் என்பதாலும் தான், இந்த அரசியல் அபத்தத்தை மனதார ஏற்றுக் கொண்டார். இன்னும் கூடுதலாக தனிப்பட்ட அர்த்தத்தில், சவாஸ் மிஷேலுக்கு பாதிப்பு வராத வரையில், தொழிலாள வர்க்கத்தின் இந்த காட்டிக்கொடுப்புகள் ஒரு "தோல்வியாக" காட்டப்படக்கூடாது. அவர்களைப் பொறுத்த வரையில், வெறுமனே காட்டிக்கொடுப்பு என்பது தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்கள் குறைவதை அர்த்தப்படுத்துகிறது. அவரது விருப்பமான ஏதென்ஸ் தேனீர்விடுதி ஒன்றில் அவரது போலி-இயங்கியல் வெற்றுரைகளை பகிரங்கமாக வழங்குவது சவாஸ் மிஷேலுக்கு சாத்தியமில்லை என்றாகும் போது மட்டுந்தான் ஒரு தோல்வி ஏற்படும்.

கிரேக்க தொழிலாள வர்க்கம் ஓர் அரசியல் தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனைத்துலகக் குழு ஜூலை 2015 இல் குறிப்பிட்டதற்காக அதை கண்டித்த ஸ்ரைனர் மற்றும் பிரென்னர், 2015 சம்பவங்களின் போது அவர்கள் வகித்த அரசியல் பாத்திரம் குறித்து எந்த கணக்கும் வழங்கவில்லை. சிரிசா அரசாங்கத்தின் குற்றகரமான போலித்தனத்தை அனைத்துலகக் குழு அம்பலப்படுத்தியதற்காக அதை தாக்குவதற்கு அவர்கள் ஏன் அவர்களது மொத்த அரசியல் சக்தியையும் அர்பணித்தார்கள் என்பதை அவர்கள் விளக்கத் தவறுகிறார்கள்.

கட்டுரையாளர் பின்வருவதையும் பரிந்துரைக்கிறார்:

The Frankfurt School, Postmodernism and the Poptics of the Pseudo-Left: A Marxist Critique(Mehring Books)

Behind the designation of Russia and China as “imperiapst”: A case study in theoretical charlatanry