ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French workers, youth defy state of emergency to protest austerity policies

பிரெஞ்சு தொழிலாளர்கள், இளைஞர்கள் சிக்கனக் கொள்கைகளை எதிர்க்க அவசரகால நெருக்கடி நிலையை மீறுகின்றனர்

By Anthony Torres
1 April 2016

பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், தொழிற்சங்க ஆதாரத் தகவல்களின்படி 1.2 மில்லியன் பேர் மற்றும் பொலிஸ் தகவல்களின்படி 390,000 பேர், வியாழனன்று பிரான்ஸ் எங்கிலும் தொழிலாளர் நலத்துறை மந்திரி மரியம் எல் கொம்ரி இன் தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்திற்கு எதிராக போராடினர். ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் ஆல் கொண்டு வரப்பட்ட ஜனநாயக-விரோத அவசரகால நெருக்கடி நிலை மற்றும் பாரியளவில் கனரக ஆயுதமேந்திய கலகம் ஒடுக்கும் பொலிஸ் நிலைநிறுத்தல்களை மீறி, உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அதிகரித்து வரும் தொழிலாளர் அடுக்குகள் சோசலிஸ்ட் கட்சியின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் சங்கங்களது தகவல்படி, அங்கே பிரான்ஸ் எங்கிலும் 200 க்கும் மேற்பட்ட போராட்ட அணிவகுப்புகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடந்தன. பாரீஸ், மார்சைய்யில் மற்றும் துலூஸ் பேரணிகளில் 100,000 க்கு அதிகமானவர்களும் மற்றும் நாந்தேர், போர்தோ மற்றும் மொன்பெலியே இல் பத்தாயிரக் கணக்கானவர்களும் ஒன்று கூடியதாக அவை தெரிவித்தன.

நீஸ் மற்றும் மெட்ரோ பகுதியில் ரயில் தொழிலாளர்களின் ஒன்றுகூடல்

கல்வித்துறை அமைச்சகத்தின் தகவல்படி, அந்நாட்டின் 2,500 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 176 உயர்நிலை பள்ளிகள் நேற்று காலை பிரான்ஸ் எங்கிலும் முற்றுகையிடப்பட்டன. உயர்நிலை பள்ளி சங்கங்களின் புள்ளிவிபரங்கள்படி, 250 உயர்நிலை பள்ளிகள் முற்றுகையிடப்பட்டதாக அவை தெரிவித்தன. சுமார் 20 பாரீஸ் உயர்நிலை பள்ளிகள் அதிகாரிகளால் முன்கூட்டியே மூடப்பட்டிருந்தன, இந்தவொரு நடவடிக்கை "முன்னுதாரணமற்றது" என கல்வி அமைச்சக தொழிற்சங்கவாதி பிலிப் துர்னியேர் தெரிவித்தார்.

கப்பல்துறை தொழிலாளர்கள் மற்றும் துறைமுக தொழிலாளர்கள், நகரங்கள், தொழில்துறை மண்டலங்கள் மற்றும் துறைமுகங்களுக்கான டஜன் கணக்கான நுழைவுவாயில்கள் மற்றும் பாலங்களை அடைத்து, லு ஹாவ்ர் மற்றும் ருவான் இல் ஒன்றுதிரண்டனர். அவர்கள் ரயில்வே, ஏர் பிரான்ஸ் மற்றும் எஃகு உற்பத்தி நிறுவனம் ஆர்ஸ்லர்-மிட்டால் ஆகியவற்றின் தொழிலாளர்களின் பக்கவாட்டில் மார்சைய் போராட்டத்திலும் கலந்து கொண்டனர்.

பொது போக்குவரத்து மற்றும் மக்கள் போக்குவரத்தும் வேலைநிறுத்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டது. மாநில ரயில்களில் வெறும் பாதி அளவிற்கு மட்டுமே இயக்கப்பட்டன, TGV அதிவேக ரயில் போக்குவரத்து பிரான்சின் பல்வேறு பிராந்தியங்களில் 25 இல் இருந்து 50 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டிருந்தது. பாரீஸில் ஓர்லி விமான நிலையம் வேலைநிறுத்தங்களால் பாதிக்கப்பட்டது, ஓர்லியில் 20 சதவீத விமானங்கள் மற்றும் மார்சைய்யில் மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் பாதுகாப்பு கருதி இரத்து செய்யப்பட்டிருந்தன.

அதன் கொள்கைகளுக்கு எதிராக இளைஞர்களது ஆர்ப்பாட்டங்கள் விரைவிலேயே ஒடுங்கி விடுமென நம்பியிருந்த சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம், போராட்டங்கள் அதிகரித்ததால் அதிகரித்தளவில் பீதியுற்றுள்ளது. ஒரு மந்திரிசபை கூட்டத்திற்குப் பின்னர், பிரதம மந்திரி இல்லத்திலிருந்து, அரசாங்க செய்தி தொடர்பாளர் ஸ்ரெபான் லு ஃபொல், “அனைவரும் அமைதியாகுமாறு" அழைப்புவிடுத்தார், “... விடயங்களை முறிப்பதற்கான அல்லது வன்முறைக்கான சிலரது நடவடிக்கைகளுக்கு நாங்கள் இடம் தர மாட்டோம். ஆகவே அனைவரும், உள்ளவாறே, குடியரசு விதிகளை மதிப்பதற்காகவும் அமைதியாக இருக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். எந்தவொரு வன்முறையையும் நாங்கள் ஏற்க மாட்டோம்” என்றார்.

உண்மையில் சோசலிஸ்ட் கட்சி, அதன் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே உள்ள எதிர்ப்பைப் பயமுறுத்தும் ஒரு முயற்சியில், ஒரு பொலிஸ் அரசிற்கு மதிப்புடைய அளவில், மிகப் பெரியளவில் பாதுகாப்பு ஆயத்தப்பாடுகளைச் செய்திருந்தது. கனரக ஆயுதமேந்திய CRS கலகம் ஒடுக்கும் பொலிஸ் மற்றும் ஆயுதந்தாங்கிய வாகனக் காவல்படையின் மிகப்பெரிய பிரிவுகள் என இவற்றின் குரோதமான கண்காணிப்பின் கீழ் தான் போராட்ட பேரணிகள் நடந்தன.

பாரீஸில், நூற்றுக் கணக்கான கலகம் ஒடுக்கும் பொலிஸின் பல பிரிவுகள் கனரக கவசங்கள், கைத்தடிகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளுடன் துரிதமாக போராட்ட பேரணிகளை, அதுவும் குறிப்பாக இளைஞர்களது அணிவகுப்புகளைச் சூழ்ந்தன. சீருடை அணியாத பொலிஸ்காரர்கள் கூட்டத்தில் கலக்க முயற்சிப்பதற்கு முன்னதாக, போராட்டங்கள் தொடங்குவதற்கு முன்னர், அவர்கள் பரபரப்பாக கலகம் ஒடுக்கும் பொலிஸ் மற்றும் ஆயுதக் காவல்படையினருடன் சேர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது.

“அரசாங்கம் எங்களை ஏமாற்றி விட்டது, Lavoisier உயர்நிலை பள்ளி வீதிகளில் கிடக்கிறது"

உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறிய ஒரு மாணவர், அவரது பல்கலைக்கழகத்தில் பொது உளவுத்துறை முகமையின் உளவாளிகள் மாணவர் உள்ளிருப்பு போராட்டங்களில் கலந்து, அவர்களை தொடர்பு கொள்வதற்கான தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்ததாகவும் மற்றும் சக மாணவர்களது ஏதேனும் சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கையைக் கண்டிக்க பிரெஞ்சு உள்நாட்டு உளவுத்துறைக்குத் தெரிவிக்குமாறு மாணவர்களிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.

பாரீஸ், நாந்தேர் மற்றும் ரென் உட்பட பல போராட்ட அணிவகுப்புகள் பொலிஸ் உடனான மோதல்களில் போய் முடிந்தது. பாரீஸ் பகுதியில், பொருட்களை வீசி எறிந்ததற்காக ஒரு டஜன் கணக்கானவர்களைப் பொலிஸ் கைது செய்தது. நாந்தேரில், அவர்கள் போராட்டக்காரர்களை தாக்க நீர் பீய்ச்சிகளைப் பிரயோகித்தனர்.

தொழிற்சங்கத்தின் ஆரம்ப மதிப்பீடுகளின்படி 8,000 பேர் கலந்து போராடிய ரென்னில், பாதுகாப்பு படைகள் பெரும் எண்ணிக்கையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. ஏழு பொலிஸ்காரர்கள் காயமடைந்ததாக செய்திகள் குறிப்பிட்டன, அண்மித்தளவில் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஹோலாண்ட் இன் சமூக செலவுக்குறைப்பு நிகழ்ச்சிநிரலுக்கு தொழிலாளர்களது எதிர்ப்பு இடது முன்னணி மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற சோசலிஸ்ட் கட்சி அரசியல் கூட்டாளிகளாலும் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களாலும் நசுக்கப்பட்டுள்ள நான்காண்டுகளுக்கு பின்னர், பிரான்சில் வர்க்க பதட்டங்கள் வெடிப்பார்ந்த விகிதாசாரங்களை ஏற்று வருகின்றன. மக்கள்தொகையில் 71 சதவீதத்தினர் தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்தை எதிர்க்கின்றனர், அச்சட்டம் வார வேலை நேரத்தை அதிகரிப்பதுடன், தொழிலாளர்களது உரிமைகளைப் பாதுகாக்கும் தொழிலாளர் சட்ட வழிவகைகளை நீக்குவதற்கு முதலாளிமார்களுடன் தொழிற்சங்கங்கள் கூடி இயங்க அனுமதிக்கிறது.

“உங்களது ரோலெக்ஸைப் பாருங்கள், இது கிளர்ச்சிக்கான நேரம்"

சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான நேட்டோ அதிகாரங்களது போரில் அவற்றால் ஊக்குவிக்கப்பட்ட இஸ்லாமிய வலையமைப்புகளால் பாரீஸ் அல்லது புரூசெல்ஸில் நடத்தப்பட்டதைப் போன்ற பயங்கரவாத அட்டூழியங்களின் அபாயத்தையோ அல்லது அவசரகால நெருக்கடி நிலையையோ காரணங்காட்டி, இந்த இயக்கத்தைப் பீதியூட்டுவதற்கு நடந்த உத்தியோகபூர்வ முயற்சிகளை அப்போராட்டங்களில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்கள் நிராகரித்தனர்.

எவ்வாறிருந்த போதினும் தொழிலாளர்களது கோரிக்கைகளை மதிக்கும் ஒரு சமரசத்தை எட்டுவதில் ஆளும் உயரடுக்குக்கு எந்த விருப்பமும் கிடையாது. பிரெஞ்சு முதலாளித்துவத்தின் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்காக மற்றும் ஆழமடைந்துவரும் ஸ்திரமற்ற உலகளாவிய பொருளாதார மற்றும் இராணுவ சூழலால் உந்தப்பட்டிருக்கிறோம் என்று வலியுறுத்தி, வணிக வட்டாரங்களும், சோசலிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களால் வென்றெடுக்கப்பட்ட வரலாற்றுரீதியிலான சமூக உரிமைகளை நிர்மூலமாக்க மற்றும் எல்லா விலையும் கொடுத்து அவற்றில் வெட்டுக்களைத் திணிக்க தீர்மானகரமாக உள்ளன.

எல் கொம்ரி சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே பாதை, சோசலிஸ்ட் கட்சியின் அரசியல் துணை அமைப்புகளுடன் முறித்துக் கொண்டு, தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கரங்களில் இருந்து இந்த போராட்டத்தை விடுவிப்பதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் இன்னும் பரந்த பிரிவுகளை இந்த போராட்டத்தில் ஒன்றுதிரட்டுவதுமாகும். இதன் அர்த்தம் முற்றிலுமாக தேசிய உள்ளடக்கத்திலிருந்து சுதந்திரமாக உடைத்துக் கொண்டு, ஹோலாண்ட் இன் அவசரகால நெருக்கடி நிலை போன்ற ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் போர் உந்துதல் ஆகியவற்றிற்கு எதிராகவும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராகவும் சர்வதேச அளவிலான தொழிலாளர்களுக்கு முறையிட்டு ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதாகும்.

சமூக போராட்டங்களைக் காட்டிக்கொடுப்பதில் மற்றும் விற்றுத் தள்ளுவதில் நீண்ட சாதனைகளைக் கொண்டுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் பழைய கட்சிகளது எந்தவித செல்வாக்கில் இருந்தும் சுதந்திரமாக, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அவர்களது சொந்த போராட்ட அங்கங்கள் அவசியமாகும். தொழிற்சங்க அதிகாரத்துவம், மிகவும் அப்பட்டமாக சோசலிஸ்ட் கட்சியுடன் தொடர்புபட்ட பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT), அந்த சட்டத்திற்குச் சார்பாக உள்ளது. ஸ்ராலினிச கட்சியின் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) மற்றும் அதன் கூட்டாளிகள், எல் கொம்ரி சட்டத்தில் திருத்தங்கள் செய்ய அழைப்பு விடுப்பதன் மூலமாக, பின்னர் அதை மிக சுலபமாக திணிப்பதற்காக, அவற்றின் பங்கிற்கு சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தை ஸ்திரப்படுத்த மற்றும் அதை மூடிமறைக்க முயற்சித்து வருகின்றன.

போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்காது போனால் மக்கள் எதிர்ப்பின் மீது அவை முற்றிலுமாக கட்டுப்பாட்டை இழக்க வேண்டியிருக்கும் என்று அஞ்சி, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் ஏப்ரல் 5 மற்றும் 9 என நடவடிக்கைக்கான புதிய நாட்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

“பெரு வணிகங்கள் அடிமைத்தனத்தை மீண்டும் கொண்டு வந்தால், CFDT எங்களை விலங்கிட கட்டணங்களைப் பேரம் பேசும்"

நேற்று CFDT இன் இரண்டாம் இடத்தை தக்கவைக்கும் Véronique Descacq கோமாளித்தனமாக குறிப்பிடுகையில், சோசலிஸ்ட் கட்சியால் எல் கொம்ரி சட்டம் ஏதேனும் விதத்தில் திரும்ப பெறப்படுவது என்பது "தொழிலாளர்களுக்கு ஒரு தோல்வியாக" இருக்கும் என்று வாதிட்டது. RTL இல் அப்பெண்மணி கூறுகையில், “இன்று நம்முடைய முன்மொழிவுகளை செவியுறச் செய்ய நம்மால் முடிந்திருக்கிறது, நாம் நாடாளுமன்றவாதிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம். சில CFDT நிர்வாகிகள் வீதிகளில் இறங்கி உள்ளனர், ஆனால் நாங்கள் எல்லோருக்குமே அதே நிலைப்பாடு தான் கொண்டிருக்கிறோம். நமது செல்வாக்கை உணரும்படி நாம் செய்ய வேண்டும், ஆகவே தான் அதன் [அச்சட்டத்தின்] குறிப்புகள் மாற்றப்பட்டு சிறந்த குறிப்புகளை பெறும்,” என்றார்.

அதன் பங்கிற்கு, CGT போராட்டத்திற்கு முன்னதாக ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து ஒரு கூட்டறிக்கை பிரசுரித்தது. “மார்ச் 31 ஆம் தேதி நடவடிக்கைக்குப் பின்னர், அரசாங்கம் விடையிறுக்கும். அவ்வாறு செய்யவில்லை என்றால், அதில் கையெழுத்திட்டுள்ள அமைப்புகள், வரவிருக்கும் நாட்களில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அவர்களது நடவடிக்கைகளைத் தொடரலாமா என்றும், வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் உட்பட ஒன்றுதிரட்டல்களைச் செய்யலாமா என்றும் விவாதிக்க அவர்களை அழைத்து பேசும்,” என்று குறிப்பிட்டது.

சோசலிஸ்ட் கட்சியிடம் முற்றிலுமாக மண்டியிட வேண்டுமா வேண்டாமா என்று விவாதிப்பதற்கான ஒரு அழைப்புடன் CGT போராட்டங்களை நிறுத்துவதற்கு அழைப்பு விடுப்பதன் மூலமாக, இன்றியமையாத விதத்தில் சோசலிஸ்ட் கட்சியின் கொள்கைகளைப் போலவே அதுவும் அதே மாதிரியான கொள்கைகளைப் பின்பற்றுகிறது என்பதை மறைக்க விரும்புகிறது.