ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

NATO summit plans escalation against Russia in Eastern Europe, Middle East

கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யா, மத்தியகிழக்கிற்கு எதிராக நேட்டோ உச்சிமாநாட்டின் திட்டங்கள் தீவிரம்

By Alex Lantier
11 July 2016

சனிக்கிழமை அன்று, வார்சோவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின் இரண்டாவது மற்றும் இறுதி நாள் நிகழ்வில் நேட்டோ அதிகாரிகளும் அரசு தலைவர்களும் கிழக்கு ஐரோப்பாவில் ஒரு பெரும் இராணுவ தீவிரப்படுத்தலுக்கும் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து படைகளை நிலைநிறுத்தவும் அங்கீகாரம் வழங்கினர். ஜோர்ஜியா மற்றும் உக்ரேன் உள்பட முன்னாள் சோவியத் குடியரசுகளுடன் விரிவுபடுத்தப்பட்ட நேட்டோ இராணுவ ஒத்துழைப்புடன் சேர்ந்து, இந்த முன்முயற்சிகள் அனைத்தும் ரஷ்யா மீதான சுற்றிவளைப்பையும் அதற்கெதிரான போருக்கான தயாரிப்பையும் நோக்கங்கொண்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக ஜூன் 23 அன்று நடந்த பிரிட்டிஷ் வாக்களிப்பை அடுத்தும் நிதி மற்றும் இராணுவக் கொள்கை மீதாக, குறிப்பாக ரஷ்யாவிற்கெதிராக வாஷிங்டனாலும் கிழக்கு ஐரோப்பிய அரசுகளாலும் மேற்கொள்ளப்படும் போர் உந்துதல்கள் மீதாக, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே கடும் மோதல்கள் வெடித்ததை அடுத்தும், இந்த உச்சி மாநாடு நடைபெற்றது.

நேட்டோ செயலதிபர் Jens Stoltenberg நேட்டோ துருப்புக்களின் ஒரு பெரும்படையை போலந்து மற்றும் பால்ட்டிக் குடியரசுகளுக்கு அனுப்பும் உடன்பாட்டை “வரலாற்று” சிறப்புடையதாக பாராட்டினார். அவரது கருத்துக்கள் அமெரிக்காவாலும் ஐரோப்பிய அதிகாரிகளாலும் எதிரொலிக்கப்பட்டன, ஆனால் ரஷ்ய உயர் அதிகாரிகளால் கடும்மையாக கண்டனம் செய்யப்பட்டன.

நேட்டோ திட்டங்கள் தொடர்பாக வார்சோவில் பேசுகையில், அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா, “ஒரு பட்டாலியன் அமெரிக்கப் படைவீரர்களை நிறுத்துவதில், அமெரிக்கா போலந்தில் இங்கு முன்னணி நாடாக இருக்கும்” என்று அறிவித்தார். “”இங்கிலாந்து எஸ்தோனியாவில் முன்னிலை வகிக்கும், ஜேர்மனி லித்துவேனியாவில் முன்னிலை வகிக்கும் மற்றும் கனடா லாத்வியாவில் முன்னணியில் நிற்கும் என்று அவர் தொடர்ந்தார். இதன் பொருள் சுமார் 4000 கூடுதல் துருப்புக்கள் இந்தப் பிராந்தியத்தில் சுழற்சிமுறையில் இருக்கும். மேலும் இன்னும் கூடுதலாய் 4000 அமெரிக்கத் துருப்புக்கள் உள்பட, ஐரோப்பா முழுவதும் கூடுதல் அமெரிக்க கவசவாகன படை சுழற்சிமுறையில் வரும். இதற்கிடையே, தெற்கில் ரூமேனியாவிலும் பல்கேரியாவிலும் நாம் புதிய தடுப்பு நடவடிக்கைகளை செய்ய உடன்பட்டுள்ளோம்” என்று கூறினார்.

ரஷ்ய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை பாதுகாப்பு செயலர் மைக் கார்ப்பென்டர், அமெரிக்க இராணுவ ஐரோப்பிய கட்டளையகம் “போரில் சண்டையிடும்” தலைமையகங்களாக ஆகும்பொருட்டு குறிப்பிடத்தக்க வளங்களை அர்ப்பணிக்க வேண்டி இருந்தது என்று கூறியதன் மூலம், நேட்டோ உறவுகளின் ஓங்கி ஒலிக்கும் குரலாக அதனை தொகுத்துக் கூறினார்.

ஒபாமா மத்திய ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் நேட்டோ நடவடிக்கைகளின் பெரும் தீவிர முன்னெடுப்பையும் அறிவித்தார். ஆப்கானிஸ்தானில் 900 மில்லியன் டாலர் மற்றும் 39 நாடுகளினால் ஆன 12,000 க்கும் அதிகமான துருப்புக்களை இறக்குவது தொடர்பான உறுதிமொழிகளைப் பற்றியும் அதேபோல ஈராக்கில் மற்றும் சிரியாவில் புதுப்பிக்கப்பட்ட ஒரு தாக்குதல் நடவடிக்கையை முன்னெடுப்பது பற்றியும் அவர் அறிவித்தார்.

ஒபாமா இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஜேர்மன் சான்செலர் அங்கேலா மேர்க்கெல், பிரெஞ்சு ஜனதிபதி பிரான்சுவா ஹோலண்ட் மற்றும் இதாலிய பிரதமர் மாட்டியோ ரென்சி ஆகியோருடன் சேர்ந்து, உக்ரேனிய ஜனாதிபதியும் 2014 பிப்ரவரியில் கியேவ் நகரில் நடைபெற்ற நேட்டோ ஆதரவு சதியிலிருந்து தோன்றிய அதிவலது தேசியவாத தலைவருமான பெட்ரோ போரோஷென்கா உடன் ஒரு சந்திப்பில் கலந்து கொண்டார், ஏற்கனவே நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவரும் இன்னும் நிறைய சுதந்திர சந்தைப் பொருளாதார “சீர்திருத்தங்களை” அவர் தனது தரப்பில் திணிக்கும் நிலைமையில், மேலும் அதிக இராணுவ வாக்குறுதிகளைப் பெற்றார்.

முன்னணி ரஷ்ய அதிகாரிகள் நேட்டோ உச்சிமாநாட்டை கண்டித்தனர். சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்கும் முதலாளித்துவ மீட்சிக்கும் மேடை வகுத்துக் கொடுத்த கொள்கைகளை உடையவரும் மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் நேட்டோவின் வெறியாட்டத்திற்கு வசதிசெய்து கொடுத்ததில் முக்கிய பங்காற்றியவருமான முன்னாள் சோவியத் அதிபர் மிக்கையில் கோர்ப்பச்சேவ், உச்சிமாநாட்டை விமர்சித்தாக வேண்டிய நிலையை உணரும்படி தள்ளப்பட்டார்.

நேட்டோ தலைவர்கள் “பாதுகாப்பு பற்றி மட்டும் பேசுகிறார்கள், ஆனால் உண்மையில் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு தயாரிப்பு செய்கின்றனர்” என்றார் அவர். “வார்சோவில் நடக்கும் அனைத்து பகட்டுக்களும் எல்லோருக்கும் ஆரவார வேண்டுகோள், ஆனால் ரஷ்யா மீதாக அறிவிக்கும் யுத்தம்” என்று மேலும் கூறினார்.

ரஷ்ய அரசாங்கத்தின் சார்பில் பேசிய ஒருவர் நேட்டோவுக்கு “ரஷ்யாவிலிருந்து வரும் அச்சுறுத்தல் பற்றிப் பேசுவது அபத்தமானது” என்று கூறினார். பாராளுமன்ற பிரமுகர் கொன்ஸ்டான்டின் கொசாச்சியோவ் (Konstantin Kosachyov) நேட்டோவின் இராணுவத்தை நிறுவும் திட்டங்களை “பாலைவனத்தில் அணை கட்டுவதுடன்” இணைத்துப் பேசினார்.

ஒபாமா முன்வைப்பின் தவிர்க்க முடியாத முடிவுயாதெனில், நேட்டோவின் கொள்கை, அடிக்கடி நிகழ்கின்ற ஆக்கிரமிப்பு போர்களுக்குள் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மக்களைப் பூட்டி வைப்பதாகும். யுரேஷியா முழுவதிலும் மூலோபாயப் பதட்டங்களையும் இன மோதல்களையும் தூண்டிவிடும் இந்தக் கொள்கை, ஒரு அணுஆயுத அரசான ரஷ்யாவுடனான ஒரேயடியான போருக்கு செல்ல வைக்கும் வெடிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன.

ஒபாமா அவரது செய்தியாளர் மாநாட்டின் பெரும்பகுதி நேரத்தை, அமெரிக்காவில் பேராபத்தான பொலீஸ் வன்முறை மற்றும் டலாசில் ஒரு துப்பாக்கிதாரியால் போலீஸ்கார்கள் சுடப்பட்டது மீதான அமெரிக்காவில் வெடித்துவரும் அரசியல் நெருக்கடி பற்றிய கேள்விகளுக்கு விடை கொடுப்பதற்கே செலவிட்டார் இருப்பினும், அவர் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையாளர் மார்க் லாண்டலர் (Mark Landler) இடமிருந்து நேட்டோ திட்டமிடுபவர்களால் தயாரிக்கப்பட்டுவரும் போர்க் கொள்கைகளின் விளையன்கள் மீதான ஒரு கேள்வியை பதில் கொடுக்க எடுத்துக்கொண்டார்.

லாண்ட்லர் குறிப்பிட்டிருந்தார் ”நீங்கள் விரும்புகிறவாறு, ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஈராக்கில் துருப்புக்களுடன், நீங்கள் உங்கள் ஜனாதிபதி பதவிக்காலத்தை நிறைவு செய்தால், அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி பதவிக்காலத்தை இரண்டு முறை வகித்தவராய் தேசத்தைப் போரில் நிறுத்தியுள்ளவராய் நீங்கள்தான் இருப்பீர்கள்….. தொடர்ந்து யுத்தத்தில் வாழும் நிலைக்கு அமெரிக்க மக்கள் தாமே அடங்கிப் போக வேண்டுமா?”

ஒபாமாவின் பதிலளிப்பானது, அமெரிக்க மக்களும் அனைத்து நேட்டோ நாடுகளின் மக்களும் உண்மையில் நிரந்தர போர் சூழலில் வாழ பழகிக்கொள்ள வேண்டியிருக்கும் என்ற உறுதிப்படுத்தல் மீது குவிந்தது. ஆப்கான் யுத்தத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டு, இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஜப்பான் முடியாட்சியுடன் நேசநாடுகள் யுத்தத்தை முடித்த வழியில் ஒரு முடிவை கொணரும் வகையில் மத்திய கிழக்கில் ஒரு அமைதி உடன்பாட்டைக் கையெழுத்திடுவது முடியாதது என்று அவர் முடித்தார். பதிலாக, நேட்டோ “பங்காண்மை வைத்துக்கொள்ளும்”, அதாவது, மத்திய கிழக்கை முடிவிலாதவகையில் இராணுவ ரீதியாய் ஆக்கிரமிக்கும்,

“நாம் உள்ளே செல்வதற்கு தேர்வு இருக்கிறது, அல் கொய்தாவை எடுத்துக்கொள்ளுங்கள், வெளியேற்றுங்கள், பின்னர் தொடர்ந்த பயங்கரவாத நடவடிக்கை அல்லது கிளர்ச்சி எழுச்சியால் ஏற்படும் வலிகளின் கீழ் நொருங்கும் நாட்டைப் பாருங்கள். அல்லது தங்களின் திறமையைக் குறிப்பிட்ட காலத்தில் கட்டி எழுப்ப அனுமதிக்கும் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட பங்காண்மையை பேண முயற்சிப்போம், நம்மை அல்லது நம் கூட்டாளியை தாக்க முயற்சிப்பவர்கள் என அறியும் அமைப்புக்களுக்கு எதிராக நமது சொந்த நடவடிக்கைகளை தேர்ந்தெடுக்கலாம். ஏனென்றால் அவர்கள் அரசு இல்லாத செயல்பாட்டாளர்கள், மெக்ஆர்தர் (அமெரிக்க தளபதி டக்ளஸ்) மற்றும் சக்கரவர்த்திக்கு (ஜப்பான்) இடையிலான சந்திப்பு மற்றும் போர் அதிகாரபூர்வமாக முடிந்து போனது என்பதுபோன்ற திருப்தியை என்றும் பெறுவது கடினமானது.” என்று ஒபாமா கூறினார்.

நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து எழும் படமானது, அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் மரணத்தில் போய்முடிகின்ற அதிபயங்கரமான நெருக்கடி பற்றியதாகும். ஒபாமாவின் கருத்துக்களின் தப்பிக்கவியலாத முடிவானது, ஒரு நீட்டிக்கப்பட்ட வரலாற்றுக் காலத்தில் அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளாலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வெளிநாட்டுக்கொள்கை ஒரு இரத்தம் தோய்ந்த தோல்வியாகும். சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பின்னரான கால் நூற்றாண்டில், சோவியத் கூட்டாளியான ஈராக் நேட்டோ இராணுவ நடவடிக்கையின் இலக்காக இருந்து வருகிறது, அதேபோல முன்னாள் சோவியத் கூட்டாளி ஆப்கானிஸ்தான், சேர்பிய தலைமையிலான யூகோஸ்லாவிய அரசின் எச்சம், இப்பொழுது சிரியா என இரண்டுமே சோவியத்தின் கூட்டாளிகளாக இருந்தன.

இந்த யுத்தங்களின் இருப்புநிலைக் குறிப்பு அழிவுகரமானது. ட்ரில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்து, பலபத்தாயிரக்கணக்கான படைவீரர்களை இழந்து, மில்லியன் கணக்கான மக்களின் இறப்புக்கு காரணமாக இருந்துள்ளது, நேட்டோ அரசுகளுக்கு யுத்தத்தை தொடர்வதைத்தவிர வேறுவழி இல்லை, அவை ஒன்றையும் நிறைவேற்றப்போவதில்லை, அவை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள உழைக்கும் மக்களின் மக்கள்திரளினால் வெறுக்கப்படுகின்றன.

போர் மூலோபாயத்தின் ஒரு பிரதான காரணம், அதன் ஆதரவாளர்களால் வைக்கப்பட்டவாறு, ஏகாதிபத்திய சக்திகள் தமக்கு இடையிலான கூர்மை அடைந்து வரும் வேறுபாடுகளை நசுக்குவதற்காகும். சிலர் - பிரான்ஸ், இத்தாலி மற்றும் இதர மேற்கு ஐரோப்பிய அரசுகளின் துணையுடனான ஜேர்மனி தலைமையிலான இராணுவ மற்றும் வெளிநாட்டுக் கொள்கைக்காக வளர்ந்து வரும் அழைப்புக்கள் உட்பட, அது பிரெக்ஸிட் வாக்கிலிருந்து வரும் அரசியல் பின்விளைவை மட்டுப்படுத்தும் என்று நம்புகின்றனர், அது வாஷிங்டனிடமிருந்தும் அதன் பிரிட்டிஷ் கூட்டாளியிடமிருந்தும் மிகவும் தீவிரமானதாகவும் சுதந்திரமானதாகவும் இருக்கும்.

Carnegie ஐரோப்பிய சிந்தனைக் குழாமிலிருக்கும் ஒரு உயர் அதிகாரியான ஜூடி டிம்ப்சே (Judy Dempsey), இந்த ஒப்பந்தமானது ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க ஆதரவு அட்லாண்டிக்வாத கிளைக்கான ஊக்கத்தை” வழங்கக்கூடும் மற்றும் ரஷ்யாவை பொறுத்தவரை “ஐரோப்பாவை பிளவுபடுத்தலை மற்றும் அட்லாண்டிக் கடந்த உறவை பலவீனப்படுத்தலை மிகவும் கடினமானதாக ஆக்கும்” என்று எழுதினார்.

உச்சிமாநாட்டில் நேட்டோ தலைவர்கள் ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டுக் கொள்கை தலைவர் பெடெரிகா மொஹெரீனி (Federica Mogherini) யை மட்டம் தட்டும் வகையில் நடந்துகொண்டனர். அவரது பணியாளர்கள்தான் சுதந்திர ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டுக் கொள்கைக்காக அழைக்கும் ஒரு அறிக்கையை தயாரிக்க பேர்லினுடன் சேர்ந்து வேலை செய்திருந்தனர். நேட்டோ-ஐரோப்பிய ஒன்றிய நெருங்கிய ஒத்துழைப்பு மீதான ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு அவ்வம்மையார் கலந்துகொள்ள அனுமதி மறுத்தனர்.

எவ்வாறாயினும், ஐரோப்பிய உயட்மட்ட அதிகாரிகள், ரஷ்யாவிற்கெதிரான போர் உந்துதலை தங்களது சொந்த ஏகாதிபத்திய நலன்களை பாதிப்பதாகப் பார்க்கின்றனர், வாஷிங்டனுடன் தங்களது வேறுபாடுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட், “ரஷ்யாவுடன் ஐரோப்பிய உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்று கூற நேட்டோவுக்கு ஒரு பங்கும் இல்லை. பிரான்சை பொறுத்தவரையில், ரஷ்யா எதிரியுமல்ல, அச்சுறுத்தலும் அல்ல” என்று அறிவித்தார்.