ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Who will follow the example of Muhammad Ali’s principled stand in our day?

முஹம்மது அலியின் முன்னுதாரணமான கோட்பாட்டுரீதியிலான நிலைப்பாட்டை இன்று யார் பின்பற்றுவார்கள்?

By David Walsh
6 June 2016

அவரது காலத்தில் போராட்டத்தினதும் எதிர்ப்பினதும் ஓர் அடையாளமாக திகழ்ந்த அதிக எடை பிரிவு முன்னாள் குத்துச்சண்டை வீரர் முகம்மத் அலியின் மரணம், எரிச்சலூட்டும் தங்களின் சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தும்விதத்தில் காலந்தாழ்த்தாமல் ஆளும்பிரிவினரால் உடனடியாக பற்றப்பட்டுள்ளது.

பெப்ரவரி 1964 இல் காசியஸ் கிளே (அலியின் நிஜப்பெயர்) மற்றும் சொன்னி லிஸ்டனுக்கு இடையிலான முதல் குத்துச்சண்டை போட்டி நடந்து அரை நூற்றாண்டுக்கு அதிகமான காலம், அலியின் ஆச்சரியமூட்டிய மறுபிரவேசத்திற்கு பின்னர் 40க்கும் அதிகமான வருடங்களும் கடந்து விட்டன என்பதை நம்புவதே கடினமாக இருக்கும்.

அலி ஒரு தலைச்சிறந்த விளையாட்டு வீரர், ஆனால் வியட்நாம் போருக்கு அவர் காட்டிய தைரியமான எதிர்ப்பின் மூலமாக தான் அவர் வரலாற்றில் மற்றும் மக்கள் நனவில் தலையாய இடத்தைப் பெற்றார் என்று ஒருவரால் நியாயமாக வாதிட முடியும். கிளர்ச்சிகரமான காலகட்டத்தின் விளைவாக, அலி அவரது எதிர்ப்பு நடவடிக்கைக்காக உலகெங்கிலுமான பத்து மில்லியன் கணக்கானவர்களிடையே பாராட்டுதலை மற்றும் நன்மதிப்பை பெற்றிருந்தார்.

பெப்ரவரி 1964 இல் லெஸ்பனில் நடந்த அதிக எடை பிரிவு குத்துச்சண்டை போட்டியில் அவரது 22 வயதில் பட்டம் வென்ற பின்னர், அந்த குத்துச்சண்டை வீரர் கறுப்பின தேசியவாத இஸ்லாம் தேசத்தின் (Nation of Islam) தன்னை இணைத்துக் கொண்டு, அவரது பெயரை முஹம்மத் அலி என்று மாற்றிக் கொண்டார். 1966 இல் அமெரிக்க இராணுவத்தில் சேவையாற்றுவதில்லை என்று அறிவிப்பதற்கு முன்னரும், அதற்கு ஓராண்டுக்குப் பின்னர் ஆயுதப்படையில் இணைய மறுத்தது வரையில், அவர் பல முறை அப்பட்டத்தை தக்க வைத்திருந்தார்.

அந்நேரத்தில் அலி விவரிக்கையில், “மிகவும் சக்தி வாய்ந்த அமெரிக்காவிற்காக, எனது சக சகோதரர்களை, அல்லது சில கறுப்பின மக்களை, அல்லது புழுதியில் பட்டினி கிடக்கும் சில வறிய மக்களை சுட்டுக்கொல்ல எனது மனசாட்சி எனக்கு இடமளிக்கவில்லை. மேலும் அவர்களை எதற்காக கொல்ல வேண்டும்? அவர்கள் ஒருபோதும் என்னை நீக்ரோ (Nigger) என்று அழைத்ததில்லை, அவர்கள் ஒருபோதும் என்னை விசாரணையின்றி கொல்ல நினைத்ததில்லை, அவர்கள் என்மீது நாயை ஏவிவிட்டதில்லை, அவர்கள் எனது தேச அடையாளத்திற்காக என்னை சூறையாடியதில்லை, எனது அன்னையையோ தந்தையையோ அலைக்கழித்து கொன்றார்களா... எதற்காக அவர்களை நான் கொல்ல வேண்டும்?… அந்த வறிய மக்களை நான் எதற்காக சுட வேண்டும், அதைவிட என்னை சிறையில் தள்ளுங்கள்!” என்றார்.

"தேசவெறி" கொண்ட கோழைத்தனமான குத்துச்சண்டை அமைப்பு நிர்வாகிகளால் அலியின் குத்துச்சண்டை உரிமம் உடனடியாக இரத்து செய்யப்பட்டு, அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பட்டம் பறிக்கப்பட்டது. அவர் விளையாட்டுத்துறை எழுத்தாளர்களால், பொதுவாக இதழியல் சகோதரத்துவ அமைப்பின் (journalistic fraternity) முட்டாள்தனமான மற்றும் மிகவும் மேம்பாக்கான அங்கத்தவர்களால் பரவலாக நிந்திக்கப்பட்டார். "போருக்கு எதிராக மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்யும் குளிக்காத நபர்களைப் போல" அந்த குத்துச்சண்டை வீரர் தனக்குத்தானே "ஒரு பரிதாபகரமான தோற்றத்தை" ஏற்படுத்தி கொண்டுள்ளார் என்று பெருமதிப்பிற்குரிய ரெட் ஸ்மித் குறிப்பிட்டார். மற்றொரு மேதைமை பொருந்திய விளையாட்டுத்துறை எழுத்தாளர் ஜிம் முர்ரே லோஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸில் எழுதுகையில், அலியை ஒரு "கறுப்பின பெனடிக்ட் ஆர்னால்ட்" என்று குறிப்பிட்டார். (கறுப்பின ஆர்னால்ட் ஒரு தளபதியாக அமெரிக்க சுதந்திரத்திற்காக போராடி பின்னர் பிரித்தானியர்களுடன் இணைந்து கொண்டார்).

அலி மீது ஜூன் 1967 இல் வழக்கு விசாரணை தொடரப்பட்டு, ஐந்தாண்டுகாலம் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கு நீதிமன்றங்களில் இழுத்தடிக்கப்பட்டு வந்த நான்காண்டுகளுக்கு, அவர் உடல்ரீதியில் அவர் பலமாக இருந்த போதும், அலியால் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் இருந்தது. இறுதியில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் 1971 இல் அவர் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்தது. அவர் மீது தடைவிதிக்கப்பட்டிருந்த காலத்தில் நாடெங்கிலும் அவர் சுற்றுப்பணயம் செய்து, வியட்நாம் போருக்கான எதிர்ப்பைக் குறித்தும் மற்றும் ஏனைய சமூக பிரச்சினைகளையும் குறித்து நூற்றுக் கணக்கான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பேசினார். அலி அவரது குத்துச்சண்டை உரிமத்தை மீண்டும் பெற்று, அதிக எடை பிரிவு குத்துச்சண்டை போட்டிக்கான பட்டத்தை மீண்டும் பெறுவதற்காக போராடி தோற்றிருந்தாலும், பின்னர் மீண்டும் இன்றுவரை ஒரு சாதனையாக உள்ள மூன்றாவது முறையாக அதை வென்றார்.

அவரது கூச்சலிட்டு தன்னைத்தானே பெருமைப்படுத்தும் தன்மை மற்றும் சிலவேளைகளில் குரூரமாக வெடித்தெழுதல் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு, எல்லா விதத்திலும், அலி ஒரு தன்மையான கண்ணியமான மனிதராக இருந்தார். பெரிதும் காட்டுமிராண்டித்தனமான ஒரு விளையாட்டில் வென்றெடுத்த அவரது தலைச்சிறந்த விருதுகளைக் கண்காட்சியில் வைத்தார், அவர் குறிப்பிட்டத்தக்க கருணை மற்றும் சீரிய பண்புகளையும், மற்றும் உடல்ரீதியில் பிரமாண்டமான தைரியமும் கொண்டிருந்தார். அனைத்திற்கும் மேலாக அலி அதீத கூரிய அறிவும் பெற்றிருந்தார். அவர் குத்துச்சண்டை மைதானத்தில் மட்டும் மனதை ஈர்க்கக்கூடியவராக இருக்கவில்லை, அனுபவம்மிக்க பேட்டியாளர்கள் மற்றும் எதிர்கருத்தாளர்களின் கூட்டத்தில் அவருக்கென, அவர்களை விட சிறந்த இடத்தையும் கூட அவரால் தக்கவைத்திருக்க முடிந்திருத்தது.

இஸ்லாம் தேசத்தில் இணைவதென்ற அலியின் முடிவு அவரது நுண்ணறிவை உரைக்கவில்லை, மாறாக அதை இந்த உள்ளடக்கத்தில் தான் பார்க்க வேண்டியுள்ளது: மெக்கார்த்திய கம்யூனிச எதிர்ப்பு விரோதங்களில் இருந்து மட்டுமே எழுந்திருந்த, உத்தியோகப்பூர்வ அமெரிக்க அரசியல் வாழ்க்கை ஒன்றும் வழங்கி இருக்கவில்லை. மிகவும் ஒடுக்குப்பட்ட மக்களது அடுக்குகள் ஏதேனும் சாத்தியமான எதிர்ப்பு வடிவத்தைத் தேடி வந்தனர்.

அவரது சிந்தனைக்கு இன்னும் அதிகமாக ஒத்த விடயங்களையோ அல்லது முற்போக்கானதையோ எடுத்துக்காட்டவோ அல்லது அந்த குத்துச்சண்டை வீரரை உயர்த்திக் காட்டுவதற்கோ உண்மையில் அங்கே எந்த காரணமும் கிடையாது. அலி சித்தாந்தரீதியில் பலவீனமாக இருந்தார். 2005 வாக்கில் பரம-போர் குற்றவாளியான ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷிடம் இருந்து சுதந்திரத்திற்கான ஜனாதிபதி விருதை வாங்கியதற்கு காரணம், அவர் வயது மற்றும் உடல்நல பிரச்சினைகளின் காரணமாக தணிந்து போயிருந்தார் அல்லது தளர்ந்து போயிருந்தார்.

எவ்வாறிருந்த போதினும், 1966 இன் தொடக்கத்தில், வியட்நாம் போர் எதிர்ப்பு அமெரிக்காவில் ஒரு பாரிய நிகழ்வுபோக்காக இல்லாதபோதே, அலியின் நிலைப்பாடு கோட்பாட்டுரீதியிலும், ஈர்க்கக்கூடியரீதியிலும் இருந்தது. அது நிச்சயமாக மக்களது அதிருப்திக்கு பங்களிப்பது செய்து, தூண்டிவிட்டது. ஏப்ரல் 28, 1967 இல் அவர் இராணுவத்தில் சேர மறுத்த அந்நேரத்தில், நியூ யோர்க் நகரிலும் ஏனைய இடங்களிலும் நூறாயிரக் கணக்கானவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன, அதே ஆண்டு (மார்டின் லூதர் கிங் ஜூனியர் உரையாற்றிய) ஏப்ரல் 15 ஆர்ப்பாட்டமும் அதில் ஒன்றாகும்.

அந்நேரத்தில் அலியின் மூலவேர், எதிர்ப்பிற்கான மூலவேராக இருந்தது. நடப்பில் இருந்ததற்கு எதிரான ஓர் எதிர்ப்பு சகாப்தத்தில், ஒரு முக்கிய பிரபலமாக அவர் மேலெழுந்தது ஒரு பாரிய பிரசித்தமான யதார்த்தமாகும். அமெரிக்காவில், நேவார்ட், டெட்ராய்ட், லோஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஏனைய நகரங்களும் 1960 களின் மத்திய பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்தன. அந்த தசாப்தத்தின் பின்பகுதி வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கத்தையும் மற்றும் ஒவ்வொரு கல்லூரி வளாகத்தில் போராட்டத்தின் வெளிப்பாடுகளை கண்டது. அமெரிக்க தொழிலாளர்களுக்கும் பொலிஸிற்கும் இடையே ஊர்வலங்களின் போது நடந்த மோதல்கள் மற்றும் மிகப்பெரிய தேசிய வேலைநிறுத்தங்கள் ஆகியவை நாளாந்த விடயமாக இருந்தன. சர்வதேச அளவில், கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் இல் வெறுப்புக்கு உள்ளான சர்வாதிகாரங்கள் வீழ்ச்சி அடைந்தன. மாபெரும் பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து உலகளாவிய நெருக்கடி அதன் முழுவீச்சில் புரட்சிகர உச்சத்தை எட்டியது, 1968 மே-ஜூன் இல் பத்து மில்லியன் கணக்கானவர்கள் பங்குபற்றினர்.

இறந்தவர்கள் தங்களின் வாழ்க்கை சுரண்டப்படுவதற்கு எதிராகவோ மற்றும் முற்றிலும் இற்றுப்போன நோக்கங்களை கொண்ட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதிலிருந்தோ தாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியாது. தவிர்க்கவியலாதவாறு, ஜனாதிபதி பராக் ஒபாமா, சந்தேகத்திற்கு இடமளிக்காதவர்களிடையே அவரது ஏறத்தாழ இயல்புக்கு மீறிய எரிச்சலூட்டும் பாசாங்குத்தனம் மற்றும் நேர்மையற்றதன்மைக்கு மற்றொரு உதாரணத்தை காட்ட, அலி இன் மரண சம்பவத்தை பற்றிக் கொண்டார்.

அறிக்கை ஒன்றில், ஒபாமா வலியுறுத்துகையில் "கடினமான காலத்தின் போது" அலி "தைரியமாக எதிர்த்து நின்றார்; மற்றவர்கள் பேசாத போது அவர் பேசினார். குத்துச்சண்டை வளையத்திற்கு வெளியே அவரது போராட்டம் அவரது பட்டத்தைப் பறித்திருக்கலாம், அவரது பொது கௌரவத்தைப் பாதித்திருக்கலாம். அது அவருக்கு இடது மற்றும் வலதிலிருந்து எதிரிகளை உருவாக்கி, அவரை தலைமறைவாக இருக்க செய்திருக்கக்கூடும், அண்மித்து சிறைச்சாலைக்கே கூட அனுப்பி இருக்கும். ஆனால் அலி அவரது களத்தில் உறுதியாக நின்றார். இன்று நாம் அங்கீகரிக்கும் இந்த அமெரிக்காவிற்கு பயன்படுத்திக் கொள்ள அவரது வெற்றி நமக்கு உதவியிருக்கிறது,” என்றார்.

உளவாளிகள், பொலிஸ்காரர்கள் மற்றும் முதலீட்டு வங்கியாளர்களுக்கான தலையாய ஜனாதிபதி ஒபாமாவுக்கு, ஒரு பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் போதும், “எதிர்த்து நிற்பது" “தைரியமாக பேசுவது" குறித்து ஏதேனும் தெரியுமா? ஆளும்தட்டினரது ஒப்புதல் கிடைக்கும் என்று ஒரு உறுதிமொழி இல்லாது ஒரு தனி நடவடிக்கை எடுப்பதற்கு இந்த நபர், சுயமாக முயன்றிருப்பாரா அல்லது ஒரு விரலை காட்டி எதிர்ப்பையாவது தெரிவித்திருப்பாரா?

யாரொருவரும் அவருக்கு எதிர்ப்புகாட்டாமலே அத்தகையவொரு அதிர்ச்சியூட்டும் அறிக்கையை ஒபாமாவால் அளிக்க முடிகிறது என்பது அமெரிக்க ஊடகங்களின் மற்றும் புத்திஜீவித பொதுவாழ்வின் துர்நாற்றம் வீசும் நிலையைக் குறிப்பிடத்தக்களவில் எடுத்துக்காட்டுகிறது. அலி சிறைக்குச் செல்ல தயாராக இருந்ததற்காக அமெரிக்க ஜனாதிபதி அவரைப் பாராட்டுகிறார்—செல்சியா மேனிங், ஜூலியன் அசான்ஞ் மற்றும் எட்வார்ட் ஸ்னொவ்டனை தயவுதாட்சண்யமின்றி பழியுணர்ச்சியுடன் குற்றஞ்சுமத்தியவரிடம் இருந்து இது வருகிறது! ஏகாதிபத்திய போரில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட எதிராளிகளும் குறைவாக அச்சுறுத்தப்படுவதில்லை!

ஒட்டுமொத்த மக்களையும் தீவிரப்படுத்திய டிரோன் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டவரும், உலகின் பல்வேறு பாகங்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைச் சாம்பலாக்குவதை அர்த்தப்படுத்தும் "படுகொலை பட்டியல்களுக்குத்" தலைமை வகித்தவருமான ஒபாமா, “முஹம்மது அலி உலகையே உலுக்கினார். அதனால் உலகம் இன்று சிறப்பாக உள்ளது,” என்று வலியுறுத்துகிறார்.

ஒபாமா அறிக்கையின் ஒரு கூறுபாடு நிஜத்தை ஒலித்து இருந்தது: கோட்பாடுகளுக்காக தொழில் வாழ்க்கை மற்றும் வருவாயைத் தியாகம் செய்யவும் அலி தயாராக இருந்தார் என்பதன் மீது ஒபாமாவின் வெளிப்படையான ஆச்சரியம் தான் அது. இது பரந்த மற்றும் நிஜமான தொந்தரவூட்டும் பிரச்சினை ஒன்றை உரைக்கிறது: இந்த வகையான அரசியல் தைரியத்தின் முன்னுதாரணங்களுக்காக நாம் ஏன் 1960 களுக்கு திரும்பிப் பார்க்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம்?

உலகின் ஏனைய பாகங்களில் அமெரிக்கா ஒரு கால் நூற்றாண்டாக போரில் ஈடுபட்டுள்ளது. இக்கால பகுதியில், எண்ணற்ற விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகளும் ஏனையவர்களும் பில் கிளிண்டன், புஷ் மற்றும் ஒபாமாவின் கரங்களில் இருந்து விருதுகளைப் பெற்றுள்ளனர், இந்த ஜனாதிபதிகள் ஒவ்வொருவரும் நூறாயிரக் கணக்கான அல்லது அதற்கும் அதிகமான மனித உயிர்கள் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்ற கொள்கைகளுக்காக குற்றவாளி ஆகிறார்கள். மக்களுக்குத் தெரிந்த வரையில், ஒரேயொரு ஜீவன் கூட ஒரு விருதைத் திருப்பி அளித்து வெள்ளை மாளிகை அல்லது கென்னடி மையத்தில் பேசியதில்லை அல்லது இத்தகைய இரத்தக்கறை படிந்த நிர்வாகிகள் ஒருவரிடம் இருந்து வாங்கிய கௌரவங்களை பொதுப்படையாக திருப்பி கொடுத்ததில்லை.

Sidney Poitier, Meryl Streep, Bob Dylan, Aretha Franklin, B.B. King, Stevie Wonder, James Taylor, Jack Nicholson, Paul Simon, Warren Beatty, Ossie Davis and Ruby Dee, Robert De Niro, Bruce Springsteen, Mel Brooks, Dustin Hoffman மற்றும் Lily Tomlin ஆகிய பிரபலங்கள் அவ்வாறு கௌரவிக்கப்பட்டவர்களில் சிலராவார்கள் —இவர்களில் சிலர் சமூக போராட்ட அல்லது குறைந்தபட்சம் சுதந்திர சிந்தனையின் வரலாறுகளைக் கொண்டுள்ளனர்.

ஸ்தம்பித்த, பரந்த சந்தர்ப்பவாத காலகட்டம், அடிபணிவு மற்றும் பேசாதிருக்கும் தன்மையை ஊக்கப்படுத்தி உள்ளது. அத்தகைய காலகட்டங்களின் சமூக கருத்துவேறுபாடு, ரஷ்ய மார்க்சிஸ்ட் பிளெக்ஹானோவ் ஒருமுறை குறிப்பிட்டதைப் போல, பல ஜீவன்கள் "ஒரு குளிர்கால உறக்கத்தில்" முடங்கி கிடக்கின்றன, மேலும் "அவர்களது தார்மீக மட்டமே மிகவும் தரந்தாழ்ந்து குறைந்து போயுள்ளது.” அத்தகைய காலகட்டங்களில் இருந்து நாம் விரைவிலேயே முழுமையாக வெளிவருவது நல்லது!