ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The social roots of the mass shooting in Orlando

ஓர்லாந்தோ படுகொலையின் சமூக வேர்கள்

Barry Grey
  15 June 2016

புளோரிடாவின் ஓர்லாந்தோ படுகொலை, அதாவது அமெரிக்க மண்ணிலேயே ISISஆல் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து உத்தியோகபூர்வ ஆரம்ப கட்டுக்கதைகள் வெறும் 48 மணிநேரங்கள் கூட நின்றுபிடிக்கவில்லை. ஒரு இராணுவ-ரக தாக்குதல் துப்பாக்கியோடு Pulse ஓரினச்சேர்க்கையாளர் விடுதியில் மக்களை கொல்வதென்று ஒமர் மதீன் எடுத்த முடிவில், இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கான அவரது அனுதாபங்கள் என்ன பாத்திரம் வகித்திருந்தாலும் சரி, ISIS அல்லது அதேபோன்ற ஏதேனுமொரு அமைப்பு அவரது நடவடிக்கைகளை வழிநடத்தியிருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையென இப்போது அரசாங்கம் அறிவிக்கிறது.

அனைத்திற்கும் மேலாக மதீன் வலதுசாரி மற்றும் வெள்ளையின மேலாதிக்க குழுக்களுடன் பெரிதும் பொருந்தக்கூடியதும், உள்நாட்டில் வளர்த்தெடுக்கப்பட்டதுமான பின்தங்கிய, பிற்போக்கான, இனவாத கண்ணோட்டங்களும் மற்றும் பாலின அடையாளத்தின் மீது முரண்பட்ட கருத்துக்களும் கொண்டிருந்தார் என்பது உட்பட, பெரிதும் தனிநபர் உணர்வுகளுடன் உளவியல் கொடூரத்தன்மைகள் கலந்த ஒரு கலவையான சுபாவத்தால் உந்தப்பட்டிருந்ததாக விடயங்கள் வெளியாகி வருகின்றன.

இந்த 49 பேரின் மரணங்கள், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருக்கின்ற காயமடைந்திருக்கும் ஏனைய 53 பேரினது நிலைமைகளையும், இவற்றிற்காக துயரப்பட்டு கொண்டிருக்கும் ஆயிரக் கணக்கான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் நிலைமைகளையும் தொடர்ந்து சுரண்டி, முன்பே திட்டநிரலில் உள்ள அன்னிய நாடுகளுக்குள் போர் மற்றும் அமெரிக்காவிற்குள் ஒடுக்குமுறை என இவற்றிற்கு அழுத்தமளிப்பதிலிருந்து, அமெரிக்க ஜனாதிபதியையும், இப்போதைய நிலையில் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களையும் மற்றும் பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான ஊடகங்களையும் அந்த செய்திகள் தடுத்துவிடவில்லை.

அந்த கொலைகாரர் மற்றும் அவரது குற்றம் குறித்து இதுவரையில் வெளியான உண்மைகளுடன் அவர்களது கருத்துக்களைச் சம்பந்தப்படுத்திக் காட்டும் ஆழமான முயற்சி இல்லாமல், அவர்கள் அமெரிக்காவில் முடிவின்றி தொடர்ச்சியாக மக்கள் மீது நடக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களின் இந்த சமீபத்தியதை, "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்றழைக்கப்படுவதற்குத் தொடர்ந்து அழுத்தமளிக்க பற்றி உள்ளனர். அந்த "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" இவ்வகைப்பட்ட கொடூரமான சம்பவங்களை வளர்த்தெடுக்கும் சமூக சூழல்களை உருவாக்குவதில் அந்தளவிற்கு ஒரு வஞ்சகமான பாத்திரம் வகித்துள்ளது.

மதீனின் வெளிப்படையான ஓரினச்சேர்க்கை விரோத மனோநிலையுடன் சேர்ந்து அந்த Pulse விடுதிக்கு அவர் அடிக்கடி வந்து சென்று கொண்டிருந்தார் என்பதும், ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் சமூக ஊடங்களில் செயலூக்கத்துடன் ஈடுபட்டிருந்தார் என்பதும் இப்போது தெரிய வந்துள்ளது. முன்னாள் சகதொழிலாளர்கள் அந்த கொலைகாரரின் தீவிர-வலது மற்றும் இனவாத கண்ணோட்டங்களை விவரிக்க முன்வந்துள்ளனர். மார்ச் 2014 மற்றும் மார்ச் 2015 க்கு இடையே மதீனுடன் வேலை செய்து வந்த டானியல் கில்ரோய், நியூ யோர்க் டைம்ஸ் வலைத்தளத்தில் பிரசுரமான ஒரு நேர்க்காணலில் எதிர்காலத்திய பாரிய படுகொலைக்காரரைச் அவர் சந்தித்திருந்ததாக அதில் அவர் விவரித்திருந்தார்.

ஓர்லாந்தோ படுகொலையை மதீன் நடத்தியதைக் குறித்து அவர் கேள்விபட்ட போது தமக்கு "ஆச்சரியம் ஏற்படவில்லை" என்று கில்ரோய் குறிப்பிட்டார். “அவர் மிகவும் இனவாதியாக இருந்தார், மிகவும் பாலியல் உணர்வாளராக, யூத-எதிர்ப்பாளராக, ஓரினசேர்க்கை எதிர்ப்பாளராக இருந்தார் மற்றும் அவரால் ஆனமட்டும் தரக்குறைவான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தார்.” கறுப்பின மக்களைப் படுகொலை செய்வதைக் குறித்து மதீன் அடிக்கடி பேசி வந்ததார் என்பதையும் கில்ரோஸ் சேர்த்துக் கொண்டார். மதீன் மீதான அவரது குறைகள் குறித்து அவரது தொழில்வழங்குனர் அக்கறை காட்டாததால், கில்ரோய் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.

நவீன அமெரிக்க வரலாற்றிலேயே மக்கள் மீதான படுமோசமான துப்பாக்கிச்சூடு சம்பவமாக இது இருக்கின்ற அதேவேளையில், ஒமர் மதீன் மனிதபடுகொலையாளராக வளர்ந்திருப்பது ஏதோவிதத்தில் ஒரு தனித்த சம்பவமல்ல. துப்பாக்கி வன்முறை ஆவண வலைத் தளத்தின் தகவல்படி, ஜூன் வரையில், அமெரிக்காவில் மக்கள் மீதான துப்பாக்கிச்சூடு 18 முறை நடந்துள்ளது. மத்திய புலனாய்வுத்துறையின் தகவல்படி மனிதப்படுகொலை துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2014 இல் மொத்தம் 8,124 ஆக இருந்தது.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள், ஏறத்தாழ கார் விபத்துக்களில் உயிரிழந்தவர்கள் அளவிற்கு உள்ளது. அவை வேறெந்த முன்னேறிய தொழில்மயமான நாடுகளையும் விட ஏறத்தாழ அதிவேகமாக அதிகளவில் நடந்துள்ளன. அமெரிக்காவில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் மரண விகிதம் ஆண்டுக்கு ஒரு மில்லியன் மக்களுக்கு சுமார் 31 பேராக உள்ளது. ஜேர்மனியில் இந்த புள்ளிவிபரம் மில்லியனுக்கு இரண்டாகும்; இங்கிலாந்தில் ஒன்றே ஒன்று. ஜப்பானில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழக்கக்கூடியவர்கள் என்று பார்த்தால் அமெரிக்காவில் மின்னல் தாக்கி இறக்கக்கூடிய வாய்ப்புள்ள அளவிற்கே உள்ளது—10 மில்லியனில் ஒருவர்.

தன்னை தற்கொலை செய்துகொள்வதுடன் சேர்ந்து மக்களைப் படுகொலை செய்ய செய்யும் தனிநபர்களின் ஸ்திரமற்ற மனநிலைக்கு, இந்தளவிற்கு அடிக்கடி இழுத்துச் செல்லும் அளவிற்கு அமெரிக்க சமூகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்ற கேள்வியைத் தான் இத்தகைய உண்மைகள் பிரமாண்டமாக எழுப்புகின்றன. இந்தவொரு கேள்வியை அரசியல் ஸ்தாபகமோ அல்லது ஊடக ஸ்தாபகமோ கவனத்தில் எடுக்க விரும்பவில்லை அல்லது கவனிக்கத் துணியவில்லை. ஏனென்றால், அது அமெரிக்க முதலாளித்துவ சமூகத்தின் கொடுமையான நிலையை அம்பலப்படுத்துவதற்கே விரைவாக இட்டுச் செல்லும்.

அதற்கு பதிலாக, அந்தளவிலான சமூக செயற்பிறழ்ச்சி மற்றும் வன்முறையை உருவாக்கும் அமைப்புமுறையை பாதுகாப்பதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட அதே மூடிமறைப்புகளே சிடுமூஞ்சித்தனமாக நேர்மையற்ற விதத்தில் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. போர் வெறியூட்டல் மற்றும் மக்கள் மீதான உளவுபார்ப்பையும் ஏனைய பொலிஸ்-அரசு நடவடிக்கைகளையும் கூடுதலாக அதிகரிப்பதற்கான கோரிக்கைள் என இவற்றின் கலவையே, திரும்ப திரும்ப, மக்கள் கொல்லப்படும் ஒவ்வொரு புதிய சம்பவத்திற்கும் உத்தியோகபூர்வ விடையிறுப்பாக உள்ளது. துப்பாக்கிகளினது தாக்கம், நோய்க்கான ஒரு அடையாளம் என்பதை விட அதுதான் காரணம் என்பதைப் போல, ஜனநாயகக் கட்சியினரிடமிருந்து வரும் கருத்துக்களில் துப்பாக்கி கட்டுப்பாட்டுக்கான கோரிக்கைகள் உள்ளடங்கி உள்ளன.

குடியரசுக் கட்சியினரிடம் இருந்து, குறிப்பாக அவர்களது தற்போதைய ஜனாதிபதி வேட்பாளராக ஆகக்கூடிய பாசிசவாத பில்லியனர் டோனால்ட் ட்ரம்ப் இன் விடையிறுப்பு பொதுவாக புலம்பெயர்ந்தவர்கள் மீதும், குறிப்பாக முஸ்லீம்கள் மீதும் புதிய மற்றும் முன்பினும் மிகவும் கடுமையான தாக்குதல்களைக் கொண்டுள்ளது.

ஜனாதிபதி ஒபாமா அவரது தேசிய பாதுகாப்பு குழுவின் கூட்டத்தைத் தொடர்ந்து ஓர் உரை வழங்கிய போது செவ்வாயன்று இது முழுமையாக வெளிப்பட்டது. அவரது பாதுகாப்புத்துறை செயலர், முப்படை தளபதிகளின் தலைமை தளபதி, உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் தலைவர், தேசிய உளவுத்துறை இயக்குனர் மற்றும் ஏனைய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பக்கவாட்டில் இருக்க, ஒபாமா அறிவிக்கையில், ISIS ஐ "அழிக்க" போரைத் தீவிரப்படுத்துவதே ஓர்லாந்தோ படுகொலையிலிருந்து எழும் முக்கிய முன்னுரிமையாகும் என்றார்.

கூடுதல் சிறப்பு படை துருப்புகள் மற்றும் தாக்கும் ஹெலிகாப்டர் போன்ற கூடுதல் தளவாடங்களை அனுப்புவது உட்பட ஈராக் மற்றும் சிரியா இரண்டிலும் அமெரிக்க இராணுவ வன்முறையை தீவிரப்படுத்தும் சமீபத்திய நடவடிக்கைகளை அவர் கொண்டு வந்திருந்தார். அவர் 120 க்கும் அதிகமான உயர்மட்ட ISIS தலைவர்களை "அகற்றிவிட்டதை" தெரிவித்ததுடன், லிபியாவில் அமெரிக்க இராணுவ தலையீட்டைத் தீவிரப்படுத்தும் திட்டங்களை மறைமுகமாக குறிப்பிட்டார்.

பின்னர் அவர் காங்கிரஸ், அதாவது குடியரசு கட்சியினரை கருத்தில்கொண்டு, துப்பாக்கி வைத்திருப்பதைக் கட்டுப்படுத்தும் சட்டமசோதாவை நிறைவேற்றுமாறு கோருவதற்கு நகர்ந்தார். முடிவில், பிரதானமாக "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" மற்றும் முஸ்லீம் நாடுகளில் அமெரிக்க நவகாலனித்துவ நடவடிக்கைகளை நீடித்து வைத்திருக்க வேண்டியதன் நிலைப்பாட்டிலிருந்து, முஸ்லீம் புலம்பெயர்வுக்கு தடைவிதிப்பதற்கும் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான ஏனைய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கும் அழைப்புவிடுப்பதற்காக ட்ரம்பை ஐ குற்றஞ்சாட்டியதுடன் நிறைவு செய்தார்.

மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் கடந்த கால்-நூற்றாண்டின் போர்கள் மற்றும் அவரது சொந்த கொள்கைகளே ISIS இன் வளர்ச்சிக்கு நேரடியாக பொறுப்பாகி இருந்தன என்பதைக் குறித்து அவர் எப்போதும் போல ஒன்றும் கூறவில்லை. அமெரிக்காவின் பாரிய படுகொலைகளும், அழிப்புகளும் மற்றும் வாஷிங்டன் திட்டமிட்டு பிரிவினைவாத மோதல்களைத் தூண்டிவிட்டதுமே ISIS இற்கான மூலவேர்களாகும். அதன் உடனடி அர்த்தத்தில் ISIS மற்றும் அதன் முன்னோடி அமைப்புகளுக்கு சிஐஏ இன் ஆதரவு மற்றும் வாஷிங்டனின் பிராந்திய கொடுங்கோலாட்சி கூட்டாளிகள் அவற்றை ஆயுதமேந்த செய்தமை மற்றும் நிதியுதவி வழங்கியமை ஆகும்

இவை அனைத்துமே அமெரிக்காவில் பாரிய வன்முறையின் நிஜமான காரணங்களை மூடிமறைக்கும் ஒரு முயற்சியாகும், அது அமெரிக்க முதலாளித்துவத்தின் சீரழிவு மற்றும் கடுமையான நெருக்கடியில் தங்கியுள்ளது. 1991 இல் முதல் பாரசீக வளைகுடா போர் தொடங்கி, அன்னிய நாடுகள் மீதான போர் மற்றும் உள்நாட்டில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்கள் ஒருபோல தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக நிலைமைகள் மீது நடத்திய சளைக்காத தொடர்ச்சியான 25 ஆண்டுகால தாக்குதல்களின் கடைசி அத்தியாயத்திற்கு ஒபாமா தலைமை தாங்கியுள்ளார்.

முடிவில்லாப் போரானது, அமெரிக்காவிற்குள் சமூக வாழ்வின் மற்றும் அரசியலின் இராணுமயமாக்கலுடன் ஒன்றிணைந்துள்ளது. அமெரிக்காவின் எல்லைகளுக்குள், குறிப்பாக மிகவும் பலவீனமான சமூக பிரிவுகள் மீதான இந்த நாளாந்த யதார்த்தத்தின் தாக்கத்தை மிகைப்படுத்துவது ஏறத்தாழ சாத்தியமில்லை. அரசியல் பிற்போக்குத்தனம், தேசிய பேரினவாதம், புலம்பெயர்வு விரோத இனவாதம் என மிகவும் பிற்போக்கான மனோபாவங்கள், ஏகாதிபத்திய போர் மற்றும் தொழிலாள வர்க்கத்தை வறுமைப்படுத்தும் ஒரு திட்டநிரலைப் பின்தொடர்வதற்காக திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சமூக எதிர்ப்பின் தவிர்க்கவியலாத வளர்ச்சிக்குத் தயாரிப்பு செய்வதற்காக, கொடூரம், காட்டிமிராண்டித்தனம் மற்றும் ஒட்டுமொத்த படுகொலையைப் பயன்படுத்தி, தொழிலாள வர்க்க சமூகங்களை நோக்கி பொலிஸ் ஓர் இராணுவமயப்பட்ட ஆக்கிரமிப்பு படையாக மாற்றப்பட்டுள்ளன.

தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பு மற்றும் பொறிவு, தொழிலாளர்களுக்கு எதிரான ஆளும் உயரடுக்குடனான அவற்றின் கூட்டணி மற்றும் வர்க்க போராட்டங்களை ஒடுக்குவது ஆகியவையும் சமூக துன்பங்களுடன் சேர்ந்துள்ளன.

எவ்வாறிருப்பினும் இப்போது சமூக சமத்துவமின்மையின் பிரமாண்ட அதிகரிப்பு மற்றும் ஆளும் உயரடுக்கின் ஆணவமான குற்றகரத்தன்மை மீதான ஆழ்ந்த கோபத்தால் உந்தப்பட்டு, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் வர்க்க போராட்டத்தின் ஒரு புதிய மேலெழுச்சி ஆரம்பித்திருப்பதை நாம் பார்த்து வருகிறோம்.

அமெரிக்க ஆளும் வர்க்கத்தைப் பொறுத்த வரையில்—உள்நாட்டு சமூக பதட்டங்களை, தேசியவாதம் மற்றும் போர் வழிவகைகளைக் கொண்டு திசைதிருப்புவது முக்கியமானதாக இருக்கின்றது.

தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்த வரையில் அமெரிக்காவில் மனித படுகொலை வன்முறை நாளாந்த நிகழ்வாவதற்கு ஒரேயொரு பதில் தான் இருக்கிறது, அதாவது அது அத்தகைய கொடூரங்களை உருவாக்கும் நோய்வாய்ப்பட்ட அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வரும் சோசலிச புரட்சியின் பாதையாகும்.