சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French unions seek to suppress opposition to Hollande’s labour reforms

பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் ஹோலண்டின் சீர்த்திருத்தங்களுக்கு வரும் எதிர்ப்பை நசுக்க முயல்கின்றன

By Stéphane Hugues
25 February 2016

Use this version to printSend feedback

தொழிற்சங்கங்கள், பிரெஞ்சு அரசாங்கத்தின் புதிய தொழிலாளர் சட்டத்திற்கு தங்களின் பரந்த உடன்பாட்டை ஆளும் வர்க்கத்திற்கு சமிக்கை காட்டும் அதேவேளை, வளர்ந்துவரும் எதிர்ப்பை வெற்று எதிர்ப்புக்கள் மூலம் திசைதிருப்ப நகர்கின்றன.

ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட் மற்றும் மானுவெல் வால்ஸ் இன் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட மசோதா, தேசிய தொழிலாளர் சட்டத்தை மீறும் வகையில், தனி வேலைத்தளங்கள் மட்டத்தில் ஒப்பந்தங்களை முதலாளிகளுடன் பேரம்பேசுவதற்கு தொழிற்சங்கங்களை அனுமதிக்கும். இது பரந்த தொழிலாளர் பகுதிகளின் ஜனநாயக உரிமைகள் அழிப்பை இன்றியமையாததாக்கும், வேலைநிலைமைகளை மற்றும் வாழ்க்கைத்தரங்களை கீழறுக்கும், மற்றும் பிரான்சில் வர்க்க உறவுகளில் பெரும் மாற்றத்தை குறிக்கும்.

தொழிலாளர் பொது கூட்டமைப்பு (CGT) இம் மசோதா தொடர்பாக செவ்வாய்க்கிழமை மாலை ஏனைய பத்து தொழிற்சங்கங்கள் சம்பந்தப்படும் வகையில் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. பங்கேற்ற மற்ற ஏழு தொழிற்சங்க சம்மேளனங்கள், பிரெஞ்சு மாணவர் தேசிய சங்கம் (UNEF), உயர்நிலைப்பள்ளி தேசிய மாணவர் சங்கம் (UNL) மற்றும் உயர்நிலைப்பள்ளி ஜனநாயக மாணவர் சங்கம் (FIDL) ஆகியன.

கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இருக்கின்ற விதிமுறைகளில் மாற்றங்களை முன்மொழிவதற்கு, குறிப்பாக தேவைக்கு அதிகமாக இருப்பதில், வேலைகளை ஒழுங்குசெய்வதில் மற்றும் வேலைநாட்களில், சமூக நலத்திட்டத்தில் மற்றும் பாதுகாப்பில் மற்றும் பயிற்சியின் மீதாக சட்டத்தின் புதிய விதிகள் மீதாக முன்மொழிவுகள் செய்வதற்கு தாங்கள் வேலைசெய்யப்போவதாக தொழிற்சங்கங்கள் கூறின.” திட்டமிடப்பட்ட சட்டத்தின் இரு அம்சங்கள் மீதாக அவர்களது ஆவணம் அதன் விமர்சனங்களை, அதாவது தொழிலாளர் நீதிமன்றங்களில் (prud'hommes) முதலாளிகளுக்கான அபராதங்களை திணிப்பதை மட்டுப்படுத்தல், மற்றும் முதலாளிகளின் தன்விருப்பிலான அதிகாரத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளைகுவிமையப்படுத்தியது. தொழிற்சங்கங்கள் மார்ச் 3 அன்று மீண்டும் கூடுவதற்கு உடன்பட்டன.

புதிய சட்டத்தின் இதயத்தானத்தை பற்றி: முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அவர்களின் திறன் மற்றும் தொழில்விதிகளை மீறும் நிறுவனங்கள் மட்ட ஒப்பந்தங்களை திணித்தல் பற்றியதில் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து அமைதியாக இருந்தன. இது, உரிமைகளை சீர்குலைப்பதை தொழிற்சங்கங்கள் நிராகரிக்கவில்லை என்பதையும் அரசாங்கத்துடனும் முதலாளிகளுடனும் மசோதாவின் பல்வேறு விதிகள் பற்றி அதை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகின்றன என்றும் காட்டுகிறது.

தற்போதைய தொழிலாளர் விதியானது 100 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்டு வந்திருக்கிறது மற்றும் அது தொழிலாளர்களுக்காக பல பாதுகாப்புகளைக் கொண்டிருக்கின்றது. குறைந்த பட்ச நிலைமைகள், எந்த தொழிற்சாலையிலும் வேலைத்தளத்திலும் பகுதியாக இருக்குமாறு, கட்டாயம் உறுதிப்படுத்தக்கூடியவாறு, குறைந்த பட்ச நிலைமைகளும் கூட தொழிற்சாலைக்கு தொழிற்சாலை என்ற அடிப்படையில் கூட்டாக பேச்சுவார்த்தை செய்யப்பட்டு வருகின்றன.

தொழிற்சங்கங்கள் தாங்கள் சீர்திருத்தத்தை எதிர்ப்பதாக சிடுமூஞ்சித்தனமாக காட்டிக்கொள்ளும் அதேவேளை, அவை கவலைப்படுவதெல்லாம் தங்களது பாத்திரத்தை, சலுகையை, முதலாளிகளோடும் அரசோடும் உள்ள தங்களின் செல்வாக்கை காப்பது என்பது பற்றியதுதான். ஆயினும் இப்படிக் காட்டிக்கொள்வது உண்மையில் மோசடியானது: இந்த மசோதாவிற்கு எதிராக ஒரு வேலைநிறுத்த நடவடிக்கையை கூட ஏற்பாடு செய்ய அவை தொந்தரவுக்கு உள்ளானது கிடையாது.

லிபரேஷன் நாளிதழானது, தொழிற்சங்கங்களின் அறிக்கையைஒரு பயந்தாங்கொள்ளித்தனமான அதிகாரபூர்வ அறிவிப்புஎன்று அழைத்தது, இப்பொழுதுஅரசாங்கம் சற்றே இளைப்பாறலாம்என்று அது மேலும் குறிப்பிட்டது.

சமூக கோபமும் எதிர்ப்பின் வெளிப்பாடுகளும் மிகவேகமாய் வளர்கின்றன. தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு எதிரான இணைய வழி மனுக்கள் அதன் ஏற்பாட்டாளர்களின் நம்பிக்கைகளுக்கும் அப்பால் சென்றுவிட்டன மற்றும் சிலநாளிலேயே 500,000 கையெழுத்துக்கள் திரட்டப்பட்டன. உயர்நிலைப் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தற்போது விடுமுறையில் சென்றிருக்கும் மாணவர்கள், மார்ச் தொடக்கத்தில் அவர்கள் திரும்பி வந்ததும் அணிதிரள்வதற்கு தயார் செய்து வருகின்றனர் என்ற அறிகுறிகள் அங்கே காணப்படுகின்றன.

வழக்கத்திற்கு மாறாக பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தொழிற்சங்கங்கள் தொழிற்சங்கங்களுடன் பேச்சுக்களில் ஈடுபடுவதானது, PS இன் கொள்கைகளுக்கு மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் பரந்த எதிர்ப்பு உருவாகிவருவதை சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்புக்கள் PS உடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன, பரந்த அளவில் அதனை ஆதரிக்கின்றன, UNEF அலுவலர்கள் மெட்ரோ நியூஸ்உடனான ஒரு நேர்காணலில், தொழிற்சங்கங்களின் கோழைத்தனமான அறிக்கையைமுக்கிய அடிவைப்புஎன புகழ்கின்றனர்.

இருந்தபோதிலும், மாணவர் சங்கத்தின் அறிக்கைகள் இளைஞர்கள் மத்தியில் எழுந்துவரும் கோபத்தின் திரிக்கப்பட்ட வெளிப்பாடாக இருக்கின்றன. UNEF தலைவர் வில்லியம் மார்ட்டினே அறிவித்தார்,” ”எம்மைப்பொறுத்தவரை இந்த மசோதா ஒட்டகத்தின் முதுகை உடைக்க கிடைத்த ஒரு துருப்புச்சீட்டு. மாணவர்களாக அவர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் அவர்களின் படிப்பின்பொழுது கூட எதிர்கொண்டுவரும் நிலைமைகளில் மற்றும் அவர்களின் உழைக்கும் வாழ்வில், 10 ஆண்டுகளாக என்றுமிருந்திரா அளவு அதிகமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைககளை எதிர் கொண்டிருக்கின்றனர். இந்த நிலைமைகளை பொறுத்துக்கொள்ளும் மட்டம் சில வரையறைகளை கொண்டுள்ளது. அதனை அவர்கள் அடைந்துவிட்டனர்.”

CGT மட்டும் மார்ச் 31 , ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்திற்கான தேதியாக தயக்கத்துடன் நிர்ணயித்துள்ளது. அதன் அலுவலர்கள் லிபரேசன் இடம், சட்டத்தை எதிர்கொள்கையில் CGT இன் செயல்பாடற்ற தன்மையை, தொழிலாளர்கள் தாக்கி இருக்கின்றனர், “சில அடிவயிற்றுவலி இருந்ததுஎன்று கூறினர். சமூக ஊடகத்தில் மார்ச் 9 அன்று, “தொழிற்சங்க தலைமையோடோ அல்லது இல்லாமலோஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புக்கள் விடப்பட்டு இருக்கின்றன.

பிரான்ஸ் இன்னும் அவசரகால நிலையில் இருக்கின்றது அதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எதையும் ஒழுங்கமைக்கவில்லை என்ற நிலையானது, தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் மீதாக பொலீஸ் மற்றும் முதலாளிகளின் ஆணைக்கு ஆதரவளிப்பதை எடுத்துக்காட்டுகின்றன.

தொழிலாளர் உரிமைகள் மீதான இந்த தாக்குதல் பிரெஞ்சு அவசரகாலநிலை மேலும் மூன்று மாதங்களுக்கு புதுப்பிக்கப்பட்டதை அடுத்து தொடங்கியது. “Daech (சிரியாவிலும் ஈராக்கிலும் உள்ள இஸ்லாமிய அரசு) தோற்கடிக்கப்படும்வரைஅது தொடர்ந்து இருக்கும் என்று வால்ஸ் கூறியிருப்பதானது, அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் எந்தவிதமான எதிர்த்தாக்குதலையும், வேலைநிறுத்தங்களை, கூட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை தடைசெய்வதுடன் அவற்றை சட்டவிரோதமாக்குவதற்கும் நோக்கங்கொண்டிருக்கிறது என்பதைக் குறிக்கிறது. PS இன் நிரந்தரமான அவசரகாலநிலையின் வர்க்க உள்ளடக்கம் வெகுஜனங்கள் முன்னே வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.

10,000 பிரெஞ்சு துருப்புக்கள் வீதிகளில் ரோந்து செல்வதுடன், அனைத்து எதிர்ப்புக்களையும் எதிர்கொள்ளும்போதும், “இறுதிவரை சீர்திருத்தத்தை முன்னெடுப்பதற்குஉறுதிபூண்டிருப்பதாக, மசோதா மூலம் அவற்றை நசுக்கப்போவதாக வால்ஸ் வலியுறுத்தினார்.

தொழிலாளர் சீர்திருத்தத்திற்கு எதிரான போராட்டமானது, PS அரசாங்கத்திற்கும், பிரான்சில் PS ஆல் பின்பற்றப்படும் போர்க்கொள்கைகளுக்கும் பொலீஸ் அரசு ஆட்சிக்கும் பொருளாதார சிக்கனக்கொள்கைக்கும் எதிராக மட்டுமல்லாது, அனைத்து ஏகாதிபத்திய அரசாங்கங்களாலும் பின்பற்றப்படும் கொள்கைகளுக்கு எதிரான அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே மேற்கொண்டு எடுத்துச் செல்லப்படமுடியும். அது பிரான்சிலும் ஐரோப்பா முழுமையிலும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதை நோக்குநிலையாய் கொண்ட ஒரு நனவான முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டமாக கட்டாயம் இருக்க வேண்டும்.

இதற்காக, அது தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், மற்றும் PS க்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் எதிரான போராட்டத்தை தடுக்க விழையும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி உட்பட்ட அவற்றின் அனைத்து கூட்டாளிகளுடனும் கட்டாயம் முறித்துக்கொள்ள வேண்டும். பல வருடங்களாக அவை ஹோலண்டின் பிற்போக்கு நிகழ்ச்சிநிரலுக்கு எதிராக எழுந்துவரும் எதிர்ப்பை நசுக்கியே வந்துள்ளன. ஹோலண்ட் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் மிகவும் செல்வாக்கிழந்த பிரெஞ்சு ஜனாதிபதியாக இருக்கிறார். அவற்றின் குற்ற உடந்தை தன்மையால்தான் மிகப் பலவீனமான ஹோலண்ட் நிர்வாகம் அதன் பிற்போக்கு நிகழ்ச்சி நிரலை தொடர்ந்தும் திணிக்க முடிந்திருக்கிறது.