சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 
Imperialism intensifies pressure on Russia and China

ரஷ்யா மற்றும் சீனா மீதான அழுத்தத்தை ஏகாதிபத்தியம் தீவிரப்படுத்துகிறது

Andre Damon
2 March 2016

Print version | Send feedback

இம்மாத தொடக்கத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு "சோசலிசம் மற்றும் போருக்கு எதிரான போராட்டம்" என்ற அறிக்கை ஒன்றை பிரசுரித்தது, அது ஓர் உலகளாவிய மோதலுக்கான அதிகரித்துவரும் அபாயத்தின் அடித்தளத்தில் இருக்கும் உலக ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகளைப் பகுத்தாராய்ந்தது.

அனைத்துலகக் குழு அமெரிக்காவிற்கும் ரஷ்யா மற்றும் சீனாவிற்கும் இடையே அதிகரித்துவரும் ஓர் இராணுவ மோதல் மீது கவனத்தைக் கொடுத்துள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகின்றது, “பெய்ஜிங் மற்றும் மாஸ்கோ இல் உள்ள அணுஆயுத அரசுகளை, காலங்கடத்தாமல் விரைவாக, அடிபணியவைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அமெரிக்க ஆளும் வர்க்கம் வரைந்துள்ளது. சீனா மற்றும் ரஷ்யாவை அரை-காலனித்துவ வாடிக்கையாளர் அரசுகளின் அந்தஸ்திற்கு குறைப்பதே வாஷிங்டனின் நோக்கமாகும்…”.

அனைத்துலகக் குழுவின் அந்த அறிக்கை பெப்ரவரி 18 அன்று பிரசுரிக்கப்பட்டது. சரியாக ஒரு வாரம் கழித்து, பெப்ரவரி 25 இல், ஐரோப்பாவிற்கான அமெரிக்க படைகளின் தளபதி ஜெனரல் பிலிப் ப்ரீட்லவ் (Philip Breedlove) அவரது கட்டளையக நிலைப்பாட்டு அறிக்கையை வெளியிட்டார். அது ரஷ்யா உடனான போர் இப்போது ஏறத்தாழ முழுமையாக தவிர்க்கவியலாததாக பார்க்கப்படுகிறது என்ற ஓர் உத்தியோகபூர்வ அறிவிப்பிற்கு நெருக்கத்தில் வந்திருந்தது. “ரஷ்ய பிரச்சினை தீர்வதாக இல்லை, அது ஒரு புதிய நீண்டகால சவாலை முன்வைக்கிறது… ரஷ்யா ஒட்டுமொத்தமாக அமெரிக்காவிற்கும் மற்றும் நேட்டோ கூட்டாளிகளுக்கும் ஓர் உயிர்பிழைப்புக்கான அச்சுறுத்தலை முன்வைக்கிறது,” என்றவர் அறிவித்தார்.

பெப்ரவரி 25 அன்று, அமெரிக்க பசிபிக் கட்டளையகத்திற்குத் தலைமை கொடுக்கும் அட்மிரல் ஹரி ஹரீஸ் அறிவிக்கையில், தென் சீனக் கடலில் சீனா ஒரு வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் அறிவித்தால் அது அமெரிக்க இராணுவ படைகளால் நிராகரிக்கப்படும் என்றார். சீனா மற்றும் ரஷ்யா இரண்டுக்கும் எச்சரிக்கையூட்டும் விதமாக, அந்நாளின் மாலையே அமெரிக்க விமானப் படை கலிபோர்னியாவிலிருந்து பசிபிக் இல் உள்ள பரிசோதிக்கும் தூரத்தினுள் (testing range) அணுஆயுதம் ஏந்தக்கூடிய 3 மினிட்மேன் ஏவுகணைகளை சோதனையிட்டது. இது ஒரு வாரத்திற்குள் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனையாகும்.

ரஷ்யா மற்றும் சீனாவைப் பலவீனப்படுத்துவதற்கான ஏகாதிபத்திய முயற்சிகளை ஆய்வுக்குட்படுத்திய அனைத்துலகக் குழு, அவ்விரு நாடுகளிலும் இனரீதியிலான-மதரீதியிலான மற்றும் தேசியளவிலான-மொழிரீதியிலான பதட்டங்களின் அடிப்படையில், பிரிவினைவாத இயக்கங்களை ஏகாதிபத்தியம் ஊக்குவிப்பதைக் கவனிக்குமாறு அழைப்புவிடுத்தது. இந்த மதிப்பீடு Foreign Affairs இதழின் புதிய மார்ச்-ஏப்ரல் பதிப்பில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் உறுதிப்படுத்தப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு முன்னணி புவிசார்-மூலோபாயவாதியும், ஈராக் படையெடுப்பை வடிவமைத்தவர்களில் ஒருவருமான ரோபர்ட் டி. கப்லன், “யூரேஷியாவில் வரும் அராஜகம்" என்ற தலைப்பில் எழுதிய ஒரு கருத்துரையில், ரஷ்யா மற்றும் சீனா இரண்டிலும் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி அனேகமாக ஆழ்ந்த உள்நாட்டு பதட்டங்களை ஏற்படுத்தக்கூடும் என்றவர் வாதிடுகிறார். இது பல்வேறு இன, மத மற்றும் மொழிரீதியிலான குழுக்களிடமிருந்து தேசிய சுயாட்சிக்கான அதிகரித்த கோரிக்கைகளின் வடிவம் எடுக்கும் என்று அவர் எழுதுகிறார்.

ரஷ்யா "கொந்தளிப்புக்குள்" நுழையக் கூடும், அது "மீண்டும் அதை இன்னமும் துண்டாடக்கூடும்" என்று கப்லன் குறிப்பிடுகிறார். அவர், “ரஷ்யாவின் சேர்பியர்கள் பகுதிகள் மற்றும் தொலைதூர கிழக்கு மாவட்டங்களோடு சேர்ந்து, முஸ்லீம்களைப் பெரும்பான்மையாக கொண்ட வடக்கு காகசஸ், மத்தியிலிருந்து தொலைதூரம் இருப்பதுடன், இரத்தந்தோய்ந்த அரசியல் சுமையில் உள்ளது,” அது "கிரெம்ளின் உள்ளேயே கூட ஏற்படும் ஸ்திரமற்ற சம்பவத்தில் மாஸ்கோ உடன் அவர்களது உறவுகளைத் துறக்கக் கூடும்,” என இவற்றைக் கவனிக்குமாறு அவர் அழைப்புவிடுக்கிறார்.

சீனாவைப் பொறுத்த வரையில், “இந்த பரந்த நாட்டில் இனரீதியிலான பதட்டங்கள் அதிகரித்து வருவதாக" கப்லன் வலியுறுத்துகிறார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “ஏதோவொரு விதத்தில், சீனாவின் ஹன் மக்கள் பெரும்பான்மை உள்ள மாநிலமானது, மங்கோலியர்கள் (Mongols), திபெத்தியர்கள் மற்றும் உகூர்கள் (Uighurs) உட்பட பல்வேறு தேசத்தினரின் ஒரு சிறைக்கூடமாக உள்ளது. இவர்கள் அனைவரும் பல விதத்தில் மத்திய கட்டுப்பாட்டிலிருந்து விலகி உள்ளனர்.” “இன்று, உகூர் போராளிகள் மிகவும் உடனடியான பிரிவினைவாத அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்,” என்றவர் நிறைவு செய்கிறார்.

சீனாவில் உகூர் சிறுபான்மையினர் சீனாவின் 1.3 பில்லியன் மக்கள் தொகையில் வெறுமனே சுமார் 10 மில்லியன் மட்டுமே உள்ளனர். ஆனால் மங்கோலியா, ரஷ்யா, கஜகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய மூலோபாய நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டதும் மற்றும் சுமார் 1.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் வரை விரிவடைந்திருக்கும் புவிசார் அரசியல்ரீதியில் முக்கிய ஜின்ஜியாங் மாகாணத்தில் பரவலாக இருக்கும் மக்களுடன் ஒப்பிடுகையில், உகூர்கள் சீனாவில் மிகப்பெரிய இனக் குழுவாக குழுமி உள்ளனர்.

அவர், உகூர் பிரிவினைவாதிகள் "ஈராக் மற்றும் சிரியாவில் பயிற்சி பெற்றவர்கள், மேலும் அவர்கள் உலகளாவிய ஜிஹாதிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புபட்டால், அபாயம் அதிகரிக்கும்,” என்று குறிப்பிடும் அளவுக்கு செல்கிறார்.

சிரியா போருக்கும், ரஷ்யா மற்றும் சீனாவில் பிரிவினைவாத இயக்கங்களுக்கும் இடையே தொடர்பை வரைவதில் கப்லன் தனித்து நிற்கவில்லை. டிசம்பர் 2015 இல் London Review of Books இல் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை ஒன்றில், இதழாளர் செமோர் ஹெர்ஸ், சிரியாவில் அதன் பினாமி போரில் ஒரு முக்கிய அமெரிக்க கூட்டாளியான துருக்கி "பிரத்யேக போக்குவரத்து உதவியுடன் உகூர்களை சிரியாவிற்குள் கொண்டு வரும் அதேவேளையில் [ரெசெப் தயிப் எர்டோகன் அரசாங்கம்] சீனாவில் அவர்களது போராட்டங்களுக்கு ஆதரவாக அவர்களைத் தூண்டிவிடுகிறது,” என்று ஒரு வாஷிங்டன் அதிகாரி கூறியதை மேற்கோளிட்டார். ஹெர்ஸ் மேற்கோளிட்ட அந்த அமெரிக்க அதிகாரி, அவர் "எரிச்சலூட்டும் போக்கு" (rat line) என்று எதை குறிப்பிடுகிறாரோ, அது 800 க்கும் அதிகமான உகூர் போராளிகளைச் சிரியாவிற்குள் நுழைய அழைத்து வந்திருப்பதாக தெரிவித்தார்.

ஒரு முன்னாள் பெண்டகன் அதிகாரியும் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரியுமான கிறிஸ்டினா லின் செப்டம்பரில் எழுதுகையில், பஷர் அல்-அசாத்தின் சிரிய அரசாங்கம் இஸ்லாமிய போராளிகள் குழுக்களிடம் தோல்வி அடைந்தால், “பின்னர் ரஷ்யாவின் செசென்யா, சீனாவின் ஜின்ஜியாங் மற்றும் இந்தியாவின் காஷ்மீரில் இருந்து போராளிகள், அவர்களது ஜிஹாத்தைத் தொடர இந்த முகப்பை நோக்கி அவர்களது பார்வையைத் திருப்புவார்கள். அவர்கள் மத்தியக் கிழக்கின் இதய தானத்தில் நன்கு ஆதாரவளங்களைப் பெற்ற ஒரு புதிய சிரிய செயல்பாட்டு களத்தால் ஆதரிக்கப்படுவார்கள்” என்றார்.

இந்த கருத்துக்கள் சிரியாவில் நடந்து வரும் மோதலின் பரந்த முக்கியத்துவத்தைத் தெள்ளத்தெளிவாக்குகிறது. 1980களில் சோவியத்-ஆப்கான் போரில் இஸ்லாமிய சக்திகளை (இறுதியில் இவர்கள் தான் அல் கொய்தா ஆனார்கள்) ஒழுங்கமைக்க, நிதி வழங்க மற்றும் பயிற்சியளிக்க முஹாஜிதீனை தங்களின் ஆதரவுக்கு அமெரிக்க உளவுத்துறை சக்திகள் பயன்படுத்தியதைப் போலவே, சிரியா போரானது இறுதியில் ரஷ்யா மற்றும் சீனாவை நிலைகுலைக்கும் இலக்கைக் கொண்ட இஸ்லாமிய பிரிவினைவாத சக்திகளை ஒழுங்கமைக்க மற்றும் பயிற்றுவிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதை கப்லன் கூறுகையில், “மாஸ்கோ கட்டுப்பாட்டை இழக்கையில், உலகளாவிய ஜிஹாதிஸ்ட் இயக்கம் வெற்றிடத்தை அனுகூலமாக்கி, ரஷ்யாவின் தொலைதூர பிராந்தியங்கள் மற்றும் மத்திய ஆசியாவிற்குள் நுழையும்,” என்றார். “சிரியா மற்றும் ஈராக்கில் பயிற்சி பெற்ற" இத்தகைய இஸ்லாமிய பிரிவினைவாத இயக்கங்கள் "உலகளாவிய ஜிஹாதிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பை" ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் அவர் சேர்த்துக் கொள்கிறார்.

இதன் விளைவு "யூகோஸ்லாவியா வகைப்பட்டதாக" இருக்கும், அதாவது "ஒரு இடத்தில் தொடங்கி எல்லா இடங்களுக்கும் பரவும்" வன்முறை மற்றும் பிரிவினைவாதமாக இருக்கும் என்று அவர் நிறைவு செய்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யூகோஸ்லாவியாவை உடைக்க அமெரிக்கா மற்றும் மேற்கத்திய சக்திகளால் பயன்படுத்தப்பட்ட தந்திரோபாயங்கள்: அதாவது தேசிய-பிரிவினைவாத பிளவுகளைத் தூண்டிவிடுவது, பின்னர் இது ஊடகங்களில் போர் அறிவிப்பிற்கான ஒரு காரணமாக தொகுத்தளிக்கப்படும் மற்றும் இராணுவ தலையீட்டுக்கான ஒரு பாசாங்குத்தனமாக காட்டப்படும், இவை மீண்டும் கொண்டு வரப்படுவதை சீனா மற்றும் ரஷ்யா முகங்கொடுக்கும்.

1991 இல் குரோஷியா மற்றும் ஸ்லோவேனியாவின் சுதந்திரத்தை அமெரிக்கா அங்கீகரித்தமை மற்றும் 1992 இல் பொஸ்னியாவின் பிரிவினைக்கு ஒப்புதல் வழங்கியமை என இவற்றில் தொடங்கி, 1999 சேர்பியா குண்டுவீச்சில் போய் முடிந்த பிரதான சக்திகளின் அரசியல் தலையீட்டால் யூகோஸ்லாவியாவின் உடைவு உத்தரவாதம் செய்யப்பட்டது.

1990 களில் மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்ற யூகோஸ்லாவியாவின் இனவாத பிரிவினை, ரஷ்யாவைச் சுற்றி வளைப்பதற்கான மற்றும் நேட்டோவை தொடர்ந்து கிழக்குநோக்கி விரிவாக்குவதற்கான நிலைமைகளை உருவாக்க உதவியது. 1999 இல் செக் குடியரசு, ஹங்கேரி மற்றும் போலந்தை நேட்டோ சேர்த்துக் கொண்டது, அதைத் தொடர்ந்து 2004 இல் பல்கேரியா, எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா, ருமேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா ஆகியவற்றையும், மற்றும் இறுதியில் 2009 இல் அல்பேனியா மற்றும் குரோஷியாவை இணைத்துக் கொண்டது. இதன் விளைவாக, நேட்டோவின் எல்லை கிழக்கை நோக்கி 600 மைல்களுக்கும் அதிகமாக விரிவடைந்தது.

இறுதி ஆய்வுகளில், சீனா மற்றும் ரஷ்யா இரண்டும் முகங்கொடுத்து வரும் கடுமையான புவிசார் அரசியல் நிலைமை, முதலாளித்துவ மீட்சியின் விளைவாகும். அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அவ்விரு நாடுகளது முதலாளித்துவ ஆட்சிகளால் பயன்படுத்தப்படும் நடவடிக்கைகள் —அதாவது, தேச வெறியைத் தூண்டுவிடுவது, அரசு ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்துவது மற்றும் இராணுவ ஆயுதமயப்படுத்தலில் பாரியளவில் செலவிடுவது ஆகியவை— நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கு எந்த வழியும் வழங்காது.

ரஷ்யா மற்றும் சீனாவின் தொழிலாள வர்க்கம் அதன் புரட்சிகர சோசலிச பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும். கடந்த நூற்றாண்டில் செய்ததைப் போலவே, அது மீண்டுமொருமுறை புரட்சிகர போராட்ட பாதைக்குத் திரும்பி, இப்போதிருக்கும் தேசிய முதலாளித்துவ ஆட்சிகளைத் தூக்கியெறிய வேண்டும். சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் சேர்ந்து, இந்த அடித்தளத்தில் மட்டுமே, ரஷ்யா மற்றும் சீனாவின் பெருந்திரளான மக்கள் ஏகாதிபத்தியத்திடம் அடிபணிந்துபோவது மற்றும் அணுஆயுத போர் பயங்கரங்களை என இரண்டையும் தடுக்க முடியும்.