ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The capitalist crisis and the defense of democratic rights

முதலாளித்துவ நெருக்கடியும், ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பும்

By Andre Damon and Alex Lantier
23 May 2016

ஆஸ்திரியாவில் தீவிர-வலது சுதந்திர கட்சியின் நோர்பேர்ட் ஹோஃபர் (Norbert Hofer) க்கும் பசுமை கட்சியின் அலெக்சாண்டர் வன் டெர் பெல்லென் (Alexander Van der Bellen) க்கும் இடையிலான ஜனாதிபதி பதவிக்கான போட்டி, ஞாயிறன்று, ஒரு ஸ்தம்பிதநிலையில் போய் முடிந்தது. இந்த பிரதான ஐரோப்பிய நாட்டில், 1945 க்குப் பின்னர் முதன்முறையாக நாஜிக்களுடன் அதன் பாரம்பரியத்தை கொண்டுள்ள கட்சியைச் சேர்ந்த ஒருவரான ஹோபர் அரச தலைவர் ஆவாரா என்பதை தபால் மூலமாக அளித்த வாக்குகள் தான் தீர்மானிக்க இருக்கின்றன.

இருபதாண்டுகளுக்கு முன்னர், ஆஸ்திரிய ஜனாதிபதி குர்ட் வால்ட்ஹிம் முன்னர் நாஜி கட்சியின் அங்கத்தவராக இருந்தார் என்பது அம்பலமான போது ஓர் அரசியல் நிலைகுலைவை உருவாக்கிவிட்டது. இன்றோ ஹோஃபர் இன் உயர்வு, ஆளும் வட்டாரங்களில் குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றிருக்கக்கூடிய, அதிகரித்து வரும் மற்றும் அதிகரித்தளவில் மேலாதிக்கம் செலுத்துகின்ற ஒரு சர்வதேச போக்கின் பாகமாக உள்ளது. ஒரு நாடு மாறி ஒரு நாடாக வலதுசாரி சர்வாதிகார சக்திகள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் பாரம்பரிய கட்சிகள் மீது பெருந்திரளான மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கோபம் மற்றும் ஏமாற்றத்தை திசைதிருப்ப அணிதிரண்டு வருகின்றன.

இத்தகைய போக்கை, பிரெஞ்சு தேசிய முன்னணி, ஜேர்மனிக்கான மாற்றீடு, இங்கிலாந்து சுதந்திர கட்சி, உக்ரேனில் நவ-பாசிசவாத சக்திகளின் வளர்ச்சியிலும் மற்றும் பிலிப்பைன்ஸில் ரொட்ரிகோ டுரேற்ற தேர்ந்தெடுக்கப்பட்டதிலும் காணலாம். குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக டோனால்ட் ட்ரம்ப் நிறுத்தப்பட்டால், அமெரிக்காவில் இரண்டு முக்கிய கட்சிகளில் ஒன்று தனித்துவமான பாசிசவாத வேலைதிட்டம் மற்றும் நிலைநோக்கு கொண்ட ஒருவரை அதன் தலைமையில் கொண்டிருக்கும்.

ஜனநாயக அமைப்புகளின் உடைவுக்கு அடித்தளத்தில் இருப்பது என்னவென்றால், நீடித்த உலகளாவிய பொருளாதார நெருக்கடியும், இராணுவவாதம் மற்றும் போரின் அதீத வளர்ச்சியும், மற்றும் அனைத்திற்கும் மேலாக, வர்க்கப் போராட்டத்தின் தீவிரத்தன்மையும் ஆகும்.

அமெரிக்காவில் 39,000 வெரிசோன் தொழிலாளர்களது வேலைநிறுத்தம், பிரான்சில் தொழிலாளர் சட்டங்களில் பிற்போக்குத்தனமான "சீர்திருத்தத்திற்கு" எதிரான பாரிய போராட்டங்கள், கிரீஸில் பொது வேலைநிறுத்தம், சீனா மற்றும் இந்தியாவில் வேலைநிறுத்தங்கள் உட்பட உலகளாவிய அளவில் அரசியல் தீவிரமயமாகும் நிகழ்வுபோக்கையும், வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியினது அறிகுறிகளையும் கவனிக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் மே 21 இல் பிரசுரித்த முன்னோக்கில் அழைப்புவிடுத்தது. வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியானது, “தொழிற்சங்கங்களால் ஆதரிக்கப்படும் சகல உத்தியோகபூர்வ 'இடது' கட்சிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் திரும்புவதில் அரசியல் வெளிப்பாட்டைக் கண்டு வருகிறது,” என்பதை நாம் விளங்கப்படுத்தினோம்.

ஆளும் உயரடுக்குகள் அவை எல்லா பக்கத்திலிருந்தும் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக உணர்கின்றன. அவர்களது போர் மற்றும் சமூக செலவினக் குறைப்பு திட்டங்கள் ஆழமாக மதிப்பிழந்துள்ளன என்பதும், பாரிய எதிர்ப்பைத் தூண்டிவிட்டு வருகின்றன என்பதும் அவர்களுக்கு நன்றாக தெரியும். அவை சமூக எதிர்ப்பின் மீது முன்பினும் அதிக வன்முறையான மற்றும் மூர்க்கமான ஒடுக்குமுறைக்கு நிலைமைகளை உருவாக்கி வருகின்ற அதேவேளையில், அதிதீவிர சக்திகளை ஒன்றுதிரட்டுவதன் மூலமாக இந்த அரசியல் தீவிரமயமாதலை முன்கூட்டியே தடுப்பதற்கு முயன்று வருகின்றன.

இந்தளவிற்கு நவ-பாசிச சக்திகளால் பரந்த ஆதரவை வென்றெடுக்க முடிகிறதென்றால், அதற்கான அரசியல் பொறுப்பு பெயரளவில் "இடது" எனக்கூறிக்கொள்வதின் வலதுசாரி மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்பு குணாம்சத்திலேயே தங்கியுள்ளது. இதை மிகத் தெளிவாக பிரான்ஸ் மற்றும் கிரீஸில் காணலாம். பிரான்சில் தொழிலாளர்களும் இளைஞர்களும் தேர்ந்தெடுத்த சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம், பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுகிறோம் என்ற பெயரில் அவசரகால அதிகாரங்களைத் திணித்துள்ளதுடன், தொழிலாளர்களது கூலிகள் மற்றும் வேலையிட நிலைமைகளைத் தாக்கும் ஒரு சட்டத்தைப் பலவந்தமாக நிறைவேற்றி உள்ளது. கிரீஸில் தீவிர இடதின் கூட்டணி எனும் சிரிசா, அது எதிர்க்க வாக்குறுதி அளித்திருந்த அதே சிக்கன நடவடிக்கைகளைப் பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்பிற்கு எதிராக நடைமுறைப்படுத்துவதற்காக கலகம் ஒடுக்கும் பொலிஸைப் பிரயோகித்து வருகிறது.

பிரேசிலில் அதிகாரத்தை ஒரு ஏதேச்சதிகார சர்வாதிகாரம் கைப்பற்றி, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக ஒரு பயங்கர ஆட்சிகாலத்தை தொடங்கி உள்ள நிலையில், 13 ஆண்டுகள் உலகளாவிய வங்கிகளின் கட்டளைகளை விசுவாசத்துடன் திணித்து வந்த தொழிலாளர்கள் கட்சி (PT) அரசாங்கம், 52 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரடியான இராணுவ தலையீட்டிற்கு வழி வகுத்துள்ளது. அதற்கு அண்மையில் உள்ள வெனிசூலாவில், ஹ்யூகோ சாவேஸ் இன் அரசியல் வாரிசுகள், அதிகரித்து வரும் பணவீக்க விகிதம் மற்றும் வீழ்ச்சி அடைந்து வரும் எண்ணெய் வருவாய்களுக்கு விடையிறுப்பாக, ஊதிய உயர்வுக்கான தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு தடைவிதிக்கும் ஓர் அவசரகால நெருக்கடி நிலையைத் திணிப்பதன் மூலமாக விடையிறுக்கிறது.

ட்ரம்ப் ஐ பொறுத்த வரையில், பேரினவாதம் மற்றும் அதிதீவிர தேசியவாத அடிப்படையில் "அமெரிக்கா மீண்டும் தலைசிறந்ததாய் ஆக்கப்படுமென" வாக்குறுதி அளிப்பதன் மூலமாக ஆதரவை வென்றெடுக்கும் இந்த வியாபார பில்லியனரின் திறமை, முற்றிலுமாக இரு-கட்சி ஆட்சிமுறைக்கு மக்களிடையே உள்ள ஆழ்ந்த வெறுப்புடன் பிணைந்துள்ளது. ட்ரம்ப் மற்றும் அனேகமாக அவரது ஜனநாயக கட்சி எதிர்ப்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு இடையிலான ஒரு பிரச்சாரத்தில், ட்ரம்ப் ஊழலுக்கு எதிரான "ஸ்தாபக-விரோத" வேட்பாளராக மற்றும் வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை ஸ்தாபகத்தின் இழிவார்ந்த பிரதிநிதியாக தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொள்கிறார்.

இத்தகைய நிலைமைகளின் கீழ், நடுத்தர வர்க்க போலி-இடது பிரதிநிதிகள் ஒரு முதலாளித்துவ அடித்தளத்தில் "ஜனநாயக சக்திகளின்" ஒரு பொதுவான கூட்டணி அவசியப்படுவதாக வாதிட்டு வருகிறார்கள். கிரீஸில் சிரிசா அரசாங்கத்தின் முன்னாள் நிதி மந்திரி யானிஸ் வாரூஃபாக்கி இன் கருத்துக்கள் துல்லியமாக அத்தகையதாகும். இவர் சிக்கனத் திட்டத்திற்கு எதிரான கிரேக்க தொழிலாளர்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுப்பதில் ஒரு மத்திய பாத்திரம் வகித்தார்.

International Viewpoint வலைத் தளத்தில் பிரசுரித்த ஒரு பகிரங்க கடிதத்தில், வாரூஃபாக்கி இவ்வாறு அறிவிக்கிறார், “பணச்சுருக்கம், வெளிநாட்டவர் விரோத போக்கு, அதீத-தேசியவாதம், செலாவணி மதிப்பிறக்க போட்டி, அதீத போர்வெறி, இன்னும் இதரபிறவற்றுடன்", 1930 களில் "இருந்ததைப் போல, நாம் அதே மாதிரியான வரலாற்று காலகட்டத்தில் இருக்கிறோம்,” என்றார். 1930 களில் "முற்போக்குவாதிகளின் கடமையாக இருந்தது" என்ன? என்று வினவும் அவர், “அதுவாவது… தீய சக்திகளுக்கு எதிராக ஜனநாயகவாதிகளின் (தீவிர கொள்கை உடையவர்கள், தாராளவாதிகள், முற்போக்கான பழமைவாதிகளுடனும் கூட) எல்லைகள் மற்றும் கட்சிச்சார்பு அற்ற ஐரோப்பா தழுவிய ஓர் இயக்கம் உருவாக்கப்பட்டது. இன்றைக்கும் அது தான் நமது கடமையாக இருக்கிறதோ என்று நான் பெரிதும் அஞ்சுகிறேன்,” என்றார்.

உண்மையில் 1930 கள், வாரூஃபாக்கி தழுவி இருக்கும் அரசியலின் திவால்நிலைக்கு பொருள் பொதிந்த படிப்பினையாகும். அந்த தசாப்தத்தில், ஸ்ராலினிச மேலாதிக்கம் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள், பாசிசத்திற்கு எதிரான முதலாளித்துவ வர்க்கத்தின் "ஜனநாயக" கூறுபாடுகள் என்று கூறப்பட்டதன் ஒரு கூட்டணியாக "மக்கள் முன்னணிவாத" (popular frontism) வேலைத்திட்டத்தை ஊக்குவித்ததன் மூலமாக, மந்தநிலை, போர் மற்றும் பாசிசத்தின் வளர்ச்சிக்கு விடையிறுத்தன. இது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பேரழிவுகரமானதாக நிரூபணமானது. 1940 வாக்கில், ஐரோப்பாவின் பெரும்பகுதிகள் பாசிச ஆட்சியின் கீழ் வந்தன.

1930 களின் ஸ்ராலினிச மக்கள் முன்னணியைப் போன்ற அதே போன்ற பாணியில், சமூக செலவினக் குறைப்பு மற்றும் போர் கொள்கைகளை மேற்கொண்டு வரும் அதே கட்சிகளுடன் தொழிலாளர்களைக் கட்டிவைக்கும் வாரூஃபாக்கி இன் கொள்கையானது, உண்மையில், தீவிர-வலது சக்திகளின் வளர்ச்சிக்கு எதிராக பாரிய ஆதரவை வென்றெடுக்கக் கூடிய ஓர் அரசியல் இயக்கத்தின் அபிவிருத்தியைத் தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. அமெரிக்காவில், ஜனநாயக கட்சியைச் சுற்றி உள்ள அரசியல் சக்திகள், முன்னொருபோதும் இல்லாதளவில் உழைக்கும் மக்களிடமிருந்து நிதி பிரபுத்துவத்திற்குச் செல்வவள பரிமாற்றத்தை உருவாக்கிய ஒரு சமூக கொள்கைக்கு எவ்விதமான மாற்றத்தையும் முன்மொழியாமல், ட்ரம்ப் க்கு எதிரான ஓர் அரசியல் இயக்கத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றன.

முதலாம் மற்றும் இரண்டாம் உலக போர்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் முதலாளித்துவ ஜனநாயக நெருக்கடியை விவரிக்கையில், தலைச்சிறந்த மார்க்சிச தத்துவவியலாளரும் மற்றும் புரட்சியாளருமான லியோன் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

ஜனநாயக வடிவங்களின் உடைவானது, ஒரு சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறையினது ஆழ்ந்த நெருக்கடியின் விளைவாகும் என்ற புரிதலின் மீது ட்ரொட்ஸ்கி அவரது பகுப்பாய்வை வைத்திருந்தார். மிதமிஞ்சிய மின்சார உபயோகத்திற்கு ஆதாரமாக உள்ள முதலாளித்துவத்திற்கு எதிராக திருப்பிவிடப்பட்ட ஓர் அரசியல் வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தைச் சர்வதேச அளவில் அணிதிரட்டுவதே அன்றைக்கு போல இன்றைக்கும் உரிய கடமையாக உள்ளது.

அவசியமான தீர்மானங்களை எடுக்குமாறு நாம் உலகெங்கிலும் உள்ள எமது அனைத்து வாசகர்களுக்கும் அழைப்புவிடுக்கிறோம். முதலாளித்துவ ஆட்சியின் முடமான அமைப்புகளை நிமிர்த்த முயற்சிப்பதால் எந்த பிரயோஜனமும் கிடையாது. இரண்டு மாற்றீடுகள் தான் கூர்மையாக முன் உள்ளன: ஒன்று ஆளும் வர்க்கமும் அதன் பொருளாதார அமைப்புமுறையும் மனிதயினத்தைப் போர், மந்தநிலைமை மற்றும் சர்வாதிகார பாதாளத்தில் தள்ளும் அல்லது சர்வதேச தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி, ஒரு சோசலிச அடித்தளத்தில் உலக பொருளாதாரத்தை மறுஒழுங்குப்படுத்தும்.