ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Paris meeting addresses war danger in Asia, bankruptcy of Tamil nationalism

ஆசியாவில் போர் அபாயம், தமிழ் தேசியவாதத்தின் திவால்நிலை ஆகியவற்றை பாரிஸ் கூட்டம் விளக்குகிறது

By Kumaran Ira
16 May 2016

இலங்கையில் பெருகிவரும் போர் அபாயம் குறித்தும் தமிழ் முதலாளித்துவ தேசியவாதக் கட்சிகளின் திவால்நிலை குறித்தும் விளக்குவதற்கு பிரான்சில் உள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் ஞாயிறன்று பாரிஸில் ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ், சிங்கள, பிரெஞ்சு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

ICFI இன் இலங்கைப் பிரிவான இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் துணைச் செயலர் தீபால் ஜெயசேகர துவக்க உரை வழங்கினார். அமெரிக்காவின் “ஆசியாவை நோக்கிய திருப்பம்” மற்றும் சீனாவுக்கு எதிரான அதன் போர்த் தயாரிப்புகள் ஆகியவற்றின் பின்னால் இலங்கையை மிக நெருக்கமாகக் கொண்டுவருகின்ற நோக்கத்துடன், சென்ற ஜனவரியில் நடந்த தேர்தலில் மைத்ரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக அமர்த்துவதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வாறு ஒரு முக்கியமான பாத்திரம் வகித்தது என்பதை அவர் விளக்கினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும், நவ சம சமாஜக் கட்சி (NSSP) மற்றும் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி (USP) போன்ற போலி-இடது கட்சிகளும் அமெரிக்க ஆதரவுடனான இந்த ஆட்சி-மாற்ற நடவடிக்கையை ஆதரித்தன என்பதையும் அவர் எடுத்துக் கூறினார். சிறிசேனவை முந்தைய மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்திற்கான “ஜனநாயக” மாற்றாகக் கூறி TNAயும் போலி-இடது குழுக்களும் புகழ்ந்தன.

உண்மையில் பார்த்தால், அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறுவதிலும் தொழிலாள வர்க்கத்தின் மீது முன்கண்டிராத தாக்குதல்களை தொடுப்பதிலும் சிறிசேனா தனக்கு முன்பிருந்தவரின் பிற்போக்குத்தனமான கொள்கைகள் பலவற்றையும் ஆழப்படுத்தவே செய்திருக்கிறார். சிறிசேனாவின் ஆட்சி இராஜபக்ஷ இழைத்த போர்க் குற்றங்களை மூடிமறைத்து கொண்டிருப்பதையும், விசாரணையின்றி பிடித்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதை எதிர்ப்பதையும், அத்துடன் அதன் சிக்கன நடவடிக்கை திட்டநிரலுக்கு எதிராக தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து வருகின்ற எதிர்ப்பை ஒடுக்குவதையும் ஜெயசேகர சுட்டிக்காட்டினார்.

அத்தேர்தலில் ICFI யும் SEPம் மட்டுமே ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிசப் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு தேர்தலில் ஒரு கோட்பாடான பிரச்சாரத்தை நடத்தின. இலங்கையிலான நிகழ்வுகள் அதன் சரியான தன்மையை நிரூபணம் செய்திருப்பதாக ஜெயசேகர தெரிவித்தார்.

பிரான்சில் ICFI இன் முன்னிலை ஆதரவாளர்களில் ஒருவரான வி.ஞானா, தமிழ் தேசியவாதக் கட்சிகள் எங்ஙனம் ஏகாதிபத்தியத்தின் கருவிகளாக செயல்பட்டிருக்கின்றன என்பது குறித்துப் பேசினார். 2009 இல் இலங்கை உள்நாட்டுப் போரின் முடிவில் விடுதலைப் புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டமையானது, 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் பிரகடனம் செய்யப்பட்ட தமிழ் பிரிவினைவாத முன்னோக்கின் திவால்நிலையின் இறுதியான மற்றும் குருதிகொட்டிய விளைபொருளாக இருந்தது என்று ஞானா கூறினார்.

2009 முதலாக தமிழ் தேசியவாதக் கட்சிகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை நோக்கி வெளிப்படையாக நோக்குநிலையமைத்துக் கொண்டு, சீனாவுக்கு எதிரான போர் முனைப்பை ஆதரித்து நிற்கின்றன. சிறிசேனா தேர்ந்தெடுக்கப்படுவதற்கும், பின் அவரது சிக்கன நடவடிக்கைகளுக்கும், அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறையிலடைக்கப்பட்டிருப்பதற்கும், மக்களைப் பீதியூட்டி வைக்க போலிஸ் வன்முறையில் இறங்குவது பெருகிச் செல்வதற்கும் அவர்கள் ஆதரவளித்தனர்.

இறுதியாக அலெக்ஸ் லான்ரியேர் பேசினார். ஐரோப்பாவில் உள்ள இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் முகம்கொடுக்கும் போர் பரவல், சிக்கன நடவடிக்கைகள், தேசியவாதத்தின் ஊக்குவிப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகிய அதே பிரச்சினைகளையே ஐரோப்பாவில் இருக்கும் அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளும் முகம்கொடுத்திருக்கின்றனர் என்பதையும் போராட்டத்தில் அவர்களுடன் தோள் சேர வேண்டியதன் அவசியத்தையும் அவர் விளக்கினார். பிரான்சில் உள்ள அத்தனை தேசங்களையும் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் தலைமை கொடுப்பதற்கும் அவர்களுக்கு ஒரு ட்ரொட்ஸ்கிச அரசியல் மற்றும் வரலாற்று முன்னோக்கினை வழங்குவதற்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவைக் கட்டியெழுப்புவது அவசியமாக உள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார்.

பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி போர் மற்றும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை அமல்படுத்தி வருகின்ற நிலையில், பல தசாப்தங்களாக அக்கட்சியின் பின்னால் அணிவகுத்து வந்திருக்கக் கூடிய புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி மற்றும் இடது முன்னணி போன்ற போலி-இடது கட்சிகளின் அரசியலை லான்ரியேர் தாக்கினார். தேசியவாத மற்றும் வெளிநாட்டவர்-அச்ச மனோநிலைகளை வளர்த்தெடுப்பதில் அவை இன்று உடந்தையாக செயல்படுகின்றன என்றார்.

“பிரான்சில் போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போலிஸ்-அரசு சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு பாதையமைத்துத் தருவதே இந்த அமைப்புகளின் பாத்திரமாக உள்ளது” என்று லான்ரியேர் கூறினார். “தொழிலாளர்களை நோக்கிய அவற்றின் குரோதம், தமிழ் தேசியவாதக் கட்சிகள் கொண்டிருக்கும் குரோதத்தின் அளவுக்கு அடிப்படையான தன்மை கொண்டதே. அது வர்க்கப் போராட்டத்தில், அதாவது தொழிலாள வர்க்கத்தை நோக்கி முதலாளித்துவமும் அதன் குட்டி-முதலாளித்துவ கூட்டாளிகளும் கொண்டிருக்கும் குரோதத்தில் வேரூன்றியுள்ளது. பிரான்சில் அவை தொழிலாளர்களின் முன்நிறுத்தக் கூடிய அபாயங்கள் இலங்கையில் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் முகம்கொடுப்பவற்றுக்கு சற்றும் குறைச்சலில்லாதவை ஆகும்.”

கூட்டத்தின் இறுதியில், வருகைதந்திருந்தவர்கள் தொடர்ந்து இருந்து நீண்டநேரம் விவாதித்தனர். அமெரிக்காவின் “ஆசியாவை நோக்கிய திருப்பம்”, ஆசியாவிலான போர் முனைப்பில் இந்தியாவின் பங்கு, இலங்கை உள்நாட்டுப் போரின் குணாம்சம், மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் எவ்வாறு ஒரு சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வது ஆகியவை தொடர்பான கேள்விகளை கேட்டனர்.

பல வருடங்களாக WSWS ஐ வாசித்து வருகின்ற ஒரு சிங்களத் தொழிலாளி கூறுகையில், அதன் பகுப்பாய்வு சரியாக இருப்பதாக தான் கருதுவதாகத் தெரிவித்தார். அப்படியிருக்க தொழிலாள வர்க்கத்தில் ஏற்கனவே அதற்கு ஒரு பரந்த ஆதரவு எப்படி இல்லாமல் இருக்கிறது என்று அவர் வினவினார்.

WSWS க்கான ஆதரவு துரிதமாய் பெருகி வருகிறது என்று உரையாற்றிய தோழர்கள் அக்கேள்விக்கு பதிலளித்தனர், ஒட்டுமொத்த சமூக மற்றும் அரசியல் அமைப்புமுறைக்கான பரந்த எதிர்ப்புக்காக அது பேசுகிறது என்றும் சுட்டிக்காட்டினர்.

இந்த ஆதரவு மட்டத்தை, வரலாற்றுரீதியாக புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று அவர்கள் விளக்கினர். பல தலைமுறைகளாக, குறிப்பாய் 1930களில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் மார்க்சிஸ்டுகளுக்கு எதிராய் அரசியல் படுகொலைகளை நடத்தியது - இது 1940 இல் லியோன் ட்ரொட்ஸ்கி கொல்லப்படுவதில் உச்சம் கண்டது - முதலாய், மார்க்சிசம் தாக்குதலுக்கு இலக்காக இருந்து வந்திருக்கிறது. இந்தத் தாக்குதல் முதலாளித்துவத்திடம் இருந்தும் சோவியத் அதிகாரத்துவத்திடம் இருந்தும் மட்டுமல்லாமல், சமீப தசாப்தங்களில் மிக மூர்க்கமாக, போலி-இடது சக்திகளிடம் இருந்தும் வந்திருக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் பாரிய புரட்சிகரப் போராட்டங்களின் தலைமைக்கு எழுவதற்கு ICFIக்கு இப்போது நிலைமைகள் கனிந்திருக்கின்றன.

2009 இல் போரின் இறுதி மாதங்களில் நடந்ததை தமிழர் இனப்படுகொலையாக SEP வரையறை செய்கிறதா என கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒரு தமிழ் தொழிலாளி வினவினார்.

இலங்கை உள்நாட்டுப் போரின் முடிவில் விடுதலைப் புலிகளின் வசமிருந்த பகுதிகளில் LTTE போராளிகளும், தமிழர்களும் கூட்டமாய் படுகொலை செய்யப்பட்டதென்பது ஒரு படுபயங்கரமான குற்றம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், தமிழ் தேசியவாதக் கட்சிகள் செய்ய முனைவது போல அதற்கு வெறுமனே ஒரு “இனப் படுகொலை” பெயரட்டையை மட்டும் ஒட்டி விடுவது என்பது, இந்த படுபயங்கர நிகழ்வில் இருந்தான படிப்பினைகளை எடுப்பதிலும் இந்திய துணைக்கண்டம் மற்றும் சர்வதேச அளவில் போர் அபாயத்திற்கு எதிராக போராடுவதிலும் சம்பந்தப்பட்ட சிக்கலான அரசியல் பிரச்சினைகளில் எதற்கும் தீர்வாகாது என்று உரைவழங்கியவர்கள் விளக்கினர்.

தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கும் அரசியல் சுயாதீனத்திற்கும் போராடுவதே மையமான அரசியல் பிரச்சினையாக இருந்தது என்பதை அவர்கள் வலியுறுத்தினர். அடுத்தடுத்து வந்த இலங்கை ஆட்சிகள் தமிழர்களுக்கு எதிராக மட்டும் போர் தொடுக்கவில்லை, தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்காக தமிழர்-விரோத மனோநிலையை ஊக்குவித்துக் கொண்டே அதேசமயத்தில் சிங்களத் தொழிலாளர்களுக்கு எதிராகவும் தாக்குதல் தொடுத்தனர். 1970களில், இலங்கையின் சம சமாஜக் கட்சி மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் சிறிமாவோ பண்டாரநாயகவின் அரசாங்கம், ஜேவிபியின் கிளர்ச்சி ஒன்றை நசுக்கிய போது சுமார் 15,000 கிராமப்புற இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

இலங்கை அரசாங்கத்தின் போர்க் குற்றங்களை விமர்சனம் செய்த தமிழ் தேசியவாத சக்திகள், இராஜபக்ஷவின் கீழ் இழைக்கப்பட்ட அந்தக் குற்றங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கக் கூடிய உயர் அதிகாரிகள் பலரையும் கொண்டிருக்கிற சிறிசேனா அரசாங்கத்தின் பின்னால் இப்போது அணிவகுத்து நிற்கின்றன என்பதையும் உரையாற்றிய தோழர்கள் எடுத்துக் கூறினர்.