ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump’s China policy threatens nuclear war

ட்ரம்பின் சீனக் கொள்கை அணுஆயுத போருக்கு அச்சுறுத்துகிறது

James Cogan
13 January 2017

சீன ஆட்சியிடமிருந்து பெருமளவிலான பொருளாதார மற்றும் மூலோபாய விட்டுக்கொடுப்புகளுக்கான அமெரிக்க கோரிக்கைகளை, ட்ரம்ப் நிர்வாகம், பாரியளவில் தீவிரப்படுத்த விரும்புகிறது என்பதையே டொனால்ட் ட்ரம்பின் மந்திரிசபை நியமனங்கள் மீதான உறுதிசெய்வதற்கான விசாரணை கூட்டங்கள் ஊர்ஜிதப்படுத்துகின்றன. பெருநிறுவன செல்வந்த குழுக்களது ஒரு சிறிய அடுக்கின் சூறையாடும் அபிலாஷைகளை பின்தொடர்வதில், ஓர் இராணுவ மோதலில் போய் முடியக்கூடிய மற்றும் ஓர் அணுஆயுத தாக்குதலை தூண்டக்கூடிய கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வியாழனன்று, முன்மொழியப்பட்டுள்ள ட்ரம்பின் வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சன் தெரிவிக்கையில், தென் சீனக் கடலில் பெய்ஜிங் அதன் இறையாண்மை பகுதியாக உரிமைகோரும் தீவுத்திட்டுக்கள் மற்றும் கடல்குன்றுகள் மீது கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நிலசீரமைப்பு நடவடிக்கைகளை நோக்கி, அடுத்த அமெரிக்க அரசாங்கம் ஏற்கவிருக்கும் மனோபாவம் குறித்து முன்னொருபோதும் இல்லாத வகையில் கருத்து வெளியிட்டார்.

ரில்லர்சன் அறிவித்தார்: “நாம் சீனாவிற்கு ஒரு தெளிவான சமிக்ஞை அளிக்க இருக்கிறோம், அதுவாவது முதலில், தீவு-கட்டமைக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும், இரண்டாவது அத்தீவுகளை நீங்கள் அணுகுவதை அனுமதிக்க முடியாது.”

இத்தகையவொரு கொள்கையின் விளைவுகள் அளபரியதாக இருக்கும். ரில்லர்சன் குறிப்பிட்ட தீவுகளில் சீன இராணுவ சிப்பாய்கள் உள்ளனர். அவற்றை சுற்றிய கடல்பகுதிகளில் சீன கடற்படை மற்றும் ரோந்துப்படை சுற்றி வருகின்றன. அவற்றுக்கு மேலே உள்ள வான்பகுதியில் சீன விமானப்படைகள் ரோந்து சுற்றுகின்றன. தென் சீனக் கடலில் இராணுவப் படைகளுடன் சேர்ந்து மிகப் பெரியளவிலான அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல்களை நிலைநிறுத்துவது மட்டுமே சீன அணுகுதலை தடுப்பதற்கான ஒரே கருதத்தக்க வழியாக இருக்கும்.

ரில்லர்சனின் அறிவிப்பை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதன் மிகவும் சாத்தியமான விளைவு போராகத்தான் இருக்குமென்ற ஒப்புதலை, உலகெங்கிலுமான ஊடக தலைப்பு செய்திகள் பிரதிபலித்துள்ளன. அதன் பங்கிற்கு, சீன அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ், இதன் தலையங்கத்தின் வரிகள் சீன ஆட்சியின் உயர்மட்ட வட்டாரங்களில் இருந்து நேரடியாக வருவதாக நம்பப்படுகின்ற நிலையில், அது விடையிறுப்பதில் அதன் வார்த்தைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை.

அதன் ஜனவரி 13 தலையங்கம் குறிப்பிடுகிறது: “வாஷிங்டன், தென் சீனக் கடலில் மிகப்பெரியளவில் போர் தொடுக்க திட்டமிடாமல், அத்தீவுகளை சீனா அணுகுவதைத் தடுப்பதற்கான ஏனைய வேறெந்த அணுகுமுறைகளும் முட்டாள்தனமாகவே இருக்கும். தென் சீனக் கடலில் மேலாதிக்கம் செய்வதற்கு அமெரிக்காவிற்கு எந்த பரிபூரண அதிகாரமும் கிடையாது. ரில்லர்சன், ஒரு மிகப்பெரிய அணுஆயுத சக்தியை அதன் சொந்த நிலப்பகுதிகளில் இருந்து பின்வாங்க நிர்பந்திக்க விரும்பினால், அவர் அணுஆயுத மூலோபாயங்களில் தேர்ச்சிக் கொள்ள வேண்டும் [அழுத்தம் சேர்க்கப்பட்டது].”

ட்ரம்ப் பின்னால் நிற்கும் சமூக சக்திகள் மற்றும் பொருளாதார நலன்களைக் குறித்த ஒரு பகுப்பாய்வானது, அவர் நிர்வாகம் ஓர் அணுஆயுத தாக்குதலை முன்னிறுத்தும் விதத்தில் சீனாவை ஒரு முழு அளவிலான போரால் அச்சுறுத்துவதற்கு தயாரிப்பு செய்வதைக் காட்டிலும் மேலதிகமாக செல்கிறது என்பதில் சிறிதும் ஐயப்பாடும் வைக்காது.

அவர் பதவியேற்பதற்கு முன்னரே, ட்ரம்ப் மற்றும் அவர் மந்திரிசபையில் உள்ள பில்லியனர்கள் மற்றும் முன்னாள்-தளபதிகளின் பரிவாரம், அவர்கள் பல்வேறு பிரச்சினைகளில் சீனாவுடன் மோதலைத் தூண்டுவார்கள் என்பதற்கு சமிக்ஞை காட்டியுள்ளனர். தென் சீனக் கடலில் சீனாவின் கடல்எல்லை உரிமைகோரல்களை நிராகரிப்பது மட்டுமின்றி, சீன ஏற்றுமதிகள் மீது வரிவிதிப்புகளை திணிப்பது; வட கொரியா அதன் அணுஆயுத திட்டத்தை நிறுத்த பெய்ஜிங் அதை நிர்பந்திக்குமாறு கோருவது; மற்றும் தாய்வான் தீவு சீனாவின் பகுதி என்பதையும் மற்றும் ஒரு சுதந்திர அரசு கிடையாது என்பதையும் உத்தியோகபூர்வமாக, 1979 இல் இருந்து, வாஷிங்டன் எதன் அடிப்படையில் அங்கீகரித்து வந்துள்ளதோ, அந்த "ஒரே சீனா கொள்கையை" கைத்துறப்பதற்கு அச்சுறுத்துவது ஆகியவையும் இக்கொள்கைகளில் உள்ளடங்கும்.

சாத்தியமான ஆத்திரமூட்டல்களின் பட்டியலில் இன்னுமொரு சேர்க்கையாக, காங்கிரஸில் ட்ரம்பின் பிரதான ஆதரவாளர்களில் ஒருவரான அர்கன்சாஸின் குடியரசு கட்சியாளர் டோம் கொட்டன், நவம்பரில் "ஹாங்காங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சட்டத்தை" அறிமுகப்படுத்துவதற்காக குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக விரும்பிய மார்க்கோ ரூபியோவுடன் இணைந்தார். இச்சட்டம், ஹாங்காங் அதன் பெருநில ஆட்சியிலிருந்து "போதுமானளவிற்கு தன்னாட்சியில்" தங்கியிருப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதை அவசியப்படுத்தும். வரவிருக்கும் நிர்வாகத்தால் தங்களின் நிலைமையும் கவனத்தில் எடுக்கப்படலாம் என்பதற்கு ஒரு சமிக்ஞையாக, திபெத்திய தேசியவாதிகள் ட்ரம்ப் தேர்வானதை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.

சீனா மீதான இந்த ஒருங்குவிப்பானது, சீனாவை தங்களின் உடனடியான மிகப் பெரிய பொருளாதார, புவிசார் அரசியல் மற்றும் முக்கிய இராணுவ போட்டியாளராக பார்க்கும், அமெரிக்க பெருநிறுவன உயரடுக்கின் ஒரு பலம் வாய்ந்த கன்னையினது நலன்களில் இருந்து நேரடியாக பெருக்கெடுக்கிறது.

எண்ணெய் கூட்டுக்குழுமம் ExxonMobil இன் முன்னாள் தலைமை செயலதிகாரி ரெக்ஸ் ரில்லர்சன், இந்த அடுக்கின் ஆளுருவாக நிற்கிறார். ரில்லர்சனின் கீழ், ExxonMobil குழுமம் வியட்நாம் உடனான பங்காண்மையுடன் சீனாவின் கடல்எல்லை உரிமைகோரல்களை எதிர்த்து, தென் சீனக் கடலில் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை அணுகுவதை ஆக்ரோஷமாக பின்தொடர்ந்தது. 2014 இல், அதன் எண்ணெய் வயல்களில் ஒன்றை ஒரு சீன எண்ணெய் அகழ்வாலை ஆக்கிரமித்தது. பெருநில சீன எரிசக்தி உற்பத்தி மற்றும் வினியோகத்தின் ஒரு பங்கின் மீதான ExxonMobil குழுமத்தின் பேராசைகள், சீனாவின் உள்நாட்டு தொழில்துறையை ஏகபோகமாக்கி உள்ள சீன அரசு நிறுவனங்கள் மீது மேலாளுமை செய்வதையும் பின்புலத்தில் கொண்டுள்ளது. உலகெங்கிலும் —அமெரிக்க ஆக்கிரமிப்பு ஈராக்கிலும் கூட— ஒப்பந்தங்களுக்கான அமெரிக்க எரிசக்தித்துறை பெருநிறுவனங்களின் முயற்சிகள் அவற்றின் சீன போட்டியாளர்களால் கீழறுக்கப்படுகின்றன.

சீனப் போட்டியை உடைத்தெறிவதற்கான ட்ரம்பினது செல்வந்த உயரடுக்கின் முன்னீடுபாடானது, ரஷ்யாவிற்கு எதிரான முதல் நடவடிக்கைக்கு அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் வெறித்தனமான கோரிக்கைகளை எதிர்க்கும் அவர்களின் விருப்பத்தில் மிக தெளிவாக எடுத்துக்காட்டப்படுகிறது. அமெரிக்க தேர்தலில் அது குறுக்கீடு செய்தது என்ற குற்றச்சாட்டுக்களின் மீதும் மற்றும் அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களிடம் இருந்து பஷர் அல்-அசாத் ஆட்சியை பாதுகாக்க சிரியாவில் தலையீடு செய்ததற்காகவும் மாஸ்கோ உடனான ஒரு உடனடி மோதலுக்காக ஜனநாயகக் கட்சியிடம் இருந்தும், குடியரசு கட்சி மற்றும் உளவுத்துறை முகமைகளின் அதிகாரிகளிடம் இருந்து வரும் மிரட்சியூட்டும் அழைப்புகளை ட்ரம்ப் இதுவரையில் பெரிதும் ஒதுக்கி தள்ளி உள்ளார்.

அதேநேரத்தில், ரஷ்யா உடனான உறவுகளின் தன்மையானது, முழுமையாக எந்தளவிற்கு புட்டின் ஆட்சி அமெரிக்க கட்டளைகளுக்கு அடிபணிகிறது என்பதன் மூலம் தீர்மானிக்கப்படும் என்பதை ட்ரம்பின் பிரதிநிதிகள் சமிக்ஞை செய்துள்ளனர். பாதுகாப்புத்துறை செயலருக்கான வேட்பாளர் ஜேம்ஸ் மாத்திஸ், நேற்றைய உறுதிபடுத்தும் விசாரணைக் கூட்டத்தில் கூறுகையில், மாஸ்கோ ஒரு "பிரதான அச்சுறுத்தல்" தான் என்றார். அவர் “முழுமையாக கூடி இயங்க" விரும்புகிறார் என்றாலும், அங்கே "கூட்டாக நாம் வேலை செய்யக்கூடிய பகுதிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது, ரஷ்யாவை நாம் எதிர்கொள்ள வேண்டிய பகுதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.”

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, சீனாவை நோக்கிய அமெரிக்க செல்வந்த உயரடுக்கின் சூறையாடும் திட்டநிரல், சீன முதலாளித்துவ வர்க்கத்தின் மைய நலன்களுக்கும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் அரசியல் ஸ்திரப்பாட்டிற்கும், உயிர்பிழைப்புக்குமே கூட சவால்விடுக்கிறது. ஒரு மூர்க்கமான மற்றும் ஊழல்பீடித்த சீன செல்வந்த உயரடுக்கின் பிரதிநிதியாக நிற்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அணுஆயுதங்களைக் கொண்டு அச்சுறுத்துவதைத் தவிர வேறெந்த விடையிறுப்புக்கும் இலாயக்கற்று உள்ளது, அதேவேளையில் திரைக்குப் பின்னால் அது ஒரு சமரசத்திற்கும் முறையிட்டு வருகிறது. எவ்வாறிருப்பினும் அமெரிக்க முதலாளித்துவத்தின் திவால்நிலையும், மற்றும் அதன் உலகளாவிய மேலாதிக்கம் சீரழிந்து வருவதை தடுப்பதற்கான அதன் ஆளும் உயரடுக்கின் பெரும்பிரயத்தனமும், சீனாவை ஒரு அரை-காலனித்துவ வாடிக்கையாளர் அரசாக மாற்றும் அதன் நோக்கத்திலிருந்து எந்தவொரு நீண்டகால பின்வாங்கலின் சாத்தியக்கூறையும் தவிர்த்துவிடுகிறது.

பெப்ரவரி 18, 2016 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) உலக சோசலிச வலைத் தளத்தில் "சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்" என்ற அதன் அறிக்கையை பிரசுரித்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்தை முன்னெடுத்து, அதுபோன்றவொரு இயக்கம் எதன் அடிப்படையில் இருக்க வேண்டுமோ அதற்கான சோசலிச கோட்பாடுகளை வரைந்தளித்தது. போருக்கு மூல காரணமான முதலாளித்துவம் மற்றும் தேசிய அரசு பிளவுகளை தூக்கியெறியவதற்குரிய பொதுவான போராட்டத்தில் உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே ஒரு மூன்றாம் உலக போர் வெடிப்பை தடுக்க முடியும்.

ஓர் அணுஆயுத பேரழிவுக்கு இட்டுச் செல்லக்கூடிய, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான ஒரு மோதல் அதிகரித்து வருகின்ற நிலையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கிற்காக போராடுவதானது, அரசியல்ரீதியில் அவசர தேவை என்ற அத்தியாவசிய உணர்வுடன் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.