ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India’s demonetisation scheme causing mass hardship

இந்தியாவின் பணம் செல்லாததாக்குதல் திட்டம் பரந்த துன்பங்களை விளைவிக்கிறது

By Kranti Kumara
18 January 2017

இந்திய அரசாங்கத்தின், "அதிர்ச்சியையும், பிரமிப்பையும்" ஏற்படுத்துகின்ற பணம் செல்லாததாக்குதல் திட்டத்தினால் நாட்டின் 85 சதவிகிதத்திற்கும் கூடுதலான பணம் செல்லாததாக்கப்பட்டதில் இந்தியா முழுவதிலும் பொருளாதார வாழ்க்கை கடுமையாக சீர்குலைந்துள்ளதுடன், இந்த திட்டம் தீடீரென சுமத்தப்பட்டதால் இரண்டு மாதங்களுக்கு பின்னரும் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்கள்  மீது பெரும் கஷ்டத்தை ஏற்படுத்திவருவது தொடர்கிறது.

இந்த பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கையானது, விவசாயிகளை மொத்த விற்பனையாளர்களிடமிருந்து மிகக் குறைந்த விலையினை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது, நுகர்வோர் தேவையையும் குறைத்துவிட்டது, மேலும் நிதி பற்றாக்குறையில் இருக்கும் முதலாளிகள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் நிலைக்கு இட்டுசென்றது ஆகியவற்றை ஒப்புக்கொண்ட உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகிய இரண்டும் இதன் விளைவாக இந்தியாவிற்கான அவர்களது 2017 பொருளாதார வளர்ச்சி குறித்த முன்கணிப்புக்களையும் தீவிரமாக குறைத்துவிட்டன.

சர்வதேச நாணய நிதியம் இந்த வாரம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இந்த நிதியாண்டின் இறுதியான மார்ச் 31, 2017 இல் இந்திய பொருளாதாரம் 6.6 சதவிகிதத்திற்கு வளர்ச்சியடையும் என்று அது தற்போது எதிர்பார்ப்பதாகவும், அதாவது அதன் முந்தைய முன்கணிப்பிலிருந்து ஒரு முழு ஒரு சதவிகிதம் குறைவடையலாம் என்றும், மேலும் 2017-18ம் ஆண்டில் வளர்ச்சிவீதம் 7.2 ஆக இருக்கலாம் அல்லது அதிலிருந்து 0.4 சதவிகித குறைவு ஏற்படலாம் என்றும் கூறியது. நாட்டின் வருடாந்திர பொருளாதார வளர்ச்சித் தேவையான 8 சதவிகிதத்தினை அடையும்பட்சத்தில் தான், அதனைக்கொண்டு ஒவ்வொரு ஆண்டிலும் தொழிலாளர் சக்தியாக உருவெடுக்கின்ற பத்து மில்லியன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க முடியும் என்று இந்திய அரசியல் தலைவர்கள் திரும்ப திரும்ப கூறிவந்துள்ளனர்.

இருப்பினும், அனைத்து இந்திய உற்பத்தியாளர் அமைப்பு (All India Manufacturer's Organization -AIMO) அதன் 300,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களிடையே 73,000 பேரிடம் எடுத்த ஒரு மாதிரி ஆய்வின்படி, பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கையினால் சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்ததைக் காட்டிலும், அல்லது மேலும் அந்த விஷயத்தை பொறுத்தமட்டில் இந்திய அரசாங்கத்தின் எதிர் பார்ப்பினையும் மீறுகின்ற வகையில் பெரும் அளவிலான, உண்மையில் மிகப்பெரிய அளவிலான, ஒரு எதிர்மறை தாக்கம் ஏற்பட்டது என்பதையே குறிப்பிடுகிறது.

AIMO ஆய்வினைப் பொறுத்தவரை, பிரதம மந்திரி நரேந்திர மோடியின் நவம்பர் 8ம் தேதிய அறிவிப்பினை தொடர்ந்து முதல் 34 நாட்களுக்கு இடையில், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் (குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களை கொண்டு நடத்தப்படும் குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனங்கள்) 35 சதவிகித பணி நியமனத்தை குறைத்ததுடன், வருவாயிலும் 50 சதவிகித சரிவினைக்கண்டு பாதிப்படைந்தது.

குறு மற்றும் சிறு தொழில்துறைகள் கடுமையான பாதிப்புக்கு உட்பட்டுள்ள அதேவேளையில், நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களும் 20ல் இருந்து 50 சதவிகிதம் வரையிலான கடுமையான வருவாய் இழப்பினை சந்தித்துள்ளன மேலும் அவற்றில் மொத்த வேலை குறைப்பும் நிகழ்ந்தது என்று AIMO ஆய்வு கண்டறிந்துள்ளது. நடுத்தர மற்றும் பெரிய உற்பத்தியாளர்கள் பற்றிய ஆய்வின்படி 5 சதவிகித வேலைவாய்ப்பினை குறைத்துவிட்டது. குறிப்பாக சாலை அமைப்பது போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற தங்களது ஊழியர்களில் சராசரியாக மூன்றில் ஒரு பகுதி ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கினர்.

வரும் வாரங்களிலும் இந்த சரிவு தொடரும் என்று AIMO கணித்துக்காட்டுகிறது, மார்ச் மாதத்திற்குள் குறு மற்றும் சிறு தொழிற்துறைகளில் வேலை இழப்புக்கள் 60 சதவிகிதம் வரை உயர்வடையும் என்றும் அதேசமயம் நடுத்தர மற்றும் பெரிய தொழிற்துறைகளில் மூன்று மடங்காக அதிகரித்து 15 சதவிகிதத்தை அடையும் என்றும் முன்கணிப்பு செய்கிறது.

AIMO ஆய்வு நடத்தியவர்களே தங்களது ஆய்வின் கண்டுபிடிப்புகளைக் கண்டு திகைத்து நின்றனர். "இதுபோன்ற ஒரு தைரியமான நடவடிக்கை (பணம் செல்லாததாக்குதல்) அரசாங்கத்தினால் எடுக்கப்படுகின்றபோது நிச்சயமாக ஏற்படக்கூடிய உடனடி பின்விளைவுகளை பற்றி AIMO புரிந்துகொள்கின்ற போதும்," அவர்கள் எழுதியதாவது, ’ஒரு மாத காலத்திற்கு பின்னரும் கூட தொழில் துறைகள் இதுபோன்ற அதிர்ச்சியினை எதிர்பார்க்கவில்லை அல்லது எதிர்கொள்வதற்கு தயார்நிலையிலும் இல்லை.

டிசம்பரில், AIMO தலைவர்கள் வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியையும் சந்திப்பதற்கு பலமுறை முயற்சித்து உள்ளனர், ஆனால் அவர்களுக்கு போதிய வரவேற்பு அங்கு கிடைக்கவில்லை. AIMO அதிபர் K.E. ரகுராமை இது தூண்டியதுடன், "இந்திய அரசாங்கம்.......விழித்தெழுவதற்கு இது மிக சரியான நேரம். மார்ச் 2017க்குள், பெரும் எண்ணிக்கையிலான சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அலகுகள் மூடப்பட்டுவிடும். சிறு மற்றும் குறு தொழில்துறைகள் இந்த நஷ்டங்களை ஒரு மாத காலத்திற்கு கூடுதலாக சமாளிப்பது என்பதும் இயலாது” என்று வியந்தார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தைப் பொறுத்தவரையில், இதுபோன்ற தொழில் நிறுவனங்கள் நிதிய அளவில் நலிவடைந்த சுய தொழில் கைவினைஞர்கள் உட்பட 81 மில்லியன் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குகிறது.

பாரதிய ஜனதாக் கட்சி (BJP) அரசாங்கத்தின் பணம் செல்லாததாக்குதல் திட்டத்தின் விளைவாக இந்த சமூக சீர்குலைவு ஏற்பட்டுள்ளது, அது ஆதரவற்ற கிராமப்புற தொழிலாளர்கள், மத்திய அரசாங்கத்தின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி (Mahatma Gandhi National Rural Emploment Guarantee (NREGA) Program) திட்டத்தின் கீழ் தற்காலிக வேலைவாய்ப்பினை பெறுகின்ற அவர்களது உரிமையினை நடைமுறைப்படுத்த முனைகின்றபோது எதிர்கொள்ளும் கஷ்டத்தில் முள்போல் குத்துவதில் மேலும் சுட்டிக்காட்டப்படுகிறது.

2005ல் காங்கிரஸ் கட்சி தலைமையிலான, ஸ்ராலினிச கட்சி ஆதரவுடனான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி (United Progressive Alliance-UPA) அரசாங்கம் முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களை தொடர்வதற்கும், வாஷிங்டன் உடனான ஒரு "பூகோள ரீதியான மூலோபாய கூட்டுக்கும்” அரசியல் மறைப்பு வழங்கும் பொருட்டு ஏற்கப்பட்டதுடன் ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஆண்டு முழுவதிலும் உடல் உழைப்பினை வழங்கும் இந்த NREGA திட்டம் 100 நாட்களுக்கு, குறைந்த ஊதியம் வழங்குவதற்கான உத்தரவாதமளிக்கின்றது.

Indian Express வெளியிட்டுள்ள ஒரு ஆய்வின்படி, கடந்த ஜுலை மாதம் முதல் நவம்பர் ஊடாக மூன்று மில்லியன் தொழிலாளர்கள் NREGA  தினசரி வேலைவாய்ப்பினை பெறுவதற்கு முயன்றனர். பின்னர் டிசம்பரில், பணம் செல்லாததாக்குதலுக்கு பிறகு முதல் மாதம் முழுவதிலும், தினசரி சராசரியானது 5 மில்லியனுக்கு உயர்ந்தது. இந்த ஆண்டின் முதல் வார இறுதியில், தினசரி சராசரி 8.4 மில்லியன் பேருக்கு என்ற வகையில் அதிகரித்தது, பணம் செல்லாததாக்குதலுக்கு முந்தைய சராசரியைவிட இரண்டரை மடங்கு அளவிற்கு நன்றாக உயர்ந்திருந்தது.

2016-17 தற்போதைய நிதி ஆண்டில் அரசாங்கம் நிர்ணயித்த தொகையினை பொறுத்தவரை NREGA திட்டத்தின்கீழ் சராசரி தினக்கூலியாக வெறும் 161 ரூபாய் (கிட்டத்தட்ட US $2.40) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மீது திடீரென எடுக்கப்பட்ட பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கையானது "கறுப்புப் பணத்திற்கு" எதிராக, அதாவது சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும், அல்லது வரி அதிகாரிகளின் ஆய்விற்கு உட்படுத்தப்படாமல் வரியேய்ப்பு செய்து வெளியில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் பணம் மற்றும் சொத்துக்கள் போன்றவற்றுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு "நுட்பமான தாக்குதல்" தான் இது என்று மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்கவாத BJP யும் கூறியுள்ளன.

இது ஒரு மோசடி ஆகும். இந்தியாவின் பெரும்பாலான "கறுப்பு பணம்", நிலபுலன்கள், தங்கம், வெளிநாட்டு நாணயம் போன்ற வடிவங்களிலும், இந்திய நாணயங்களாக வைத்திருக்காமல் வெளிநாட்டு வங்கி கணக்குகளாக வைத்திருப்பதும், இவையனைத்தும் இந்திய பெருநிறுவன முதலாளிகள், நிலச்சந்தை அபிவிருத்தியாளர்கள், மற்ற பணக்கார மற்றும் பெரும் செல்வந்தர்களின் கைகளில் தான் உள்ளன. இந்த பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கையினால் ஏற்பட்ட துயரச் சுமைகளை தாங்கிநிற்கின்ற தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளின் கைகளில் அவை இல்லை.

பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நோட்டுக்களின் ஒரு மிகப்பெரிய பகுதி நாட்டின் வங்கிகளில் தான் வைப்புத்தொகையாக வைக்கப்பட்டுள்ளது என்றே பூர்வாங்க புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன, மேலும் இப்புள்ளிவிவரங்கள், கறுப்பு பணமாக" பதுக்கிவைக்கப்பட்டிருந்த தொகையினை அரசாங்கத்தின் சொந்த மதிப்பீடுகளின்படி  உயர்ந்த அளவில் அதிகமாக்கி காட்டப்பட்டன என்பதை வலுவாக தெரிவிக்கின்றன.

அப்படியே இருப்பினும் கூட, அரசாங்கத்தின் இந்த பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கையின் உண்மையான நோக்கம், உழைக்கும் மக்களின் இழப்பில்  இந்தியாவின் வலுவிழந்த வங்கிகளுக்கு மற்றும் அரசாங்க நிதிகளுக்கு முட்டுக்கொடுப்பது தான் ஆகும்.

வங்கி அமைப்புக்கள் மூலமாக மக்கள் அவர்களது செல்லாத பழைய நோட்டுக்களுக்கு பதிலாக புதிய செல்லுபடியாகும் நோட்டுக்களை மாற்றுவதற்கு வலியுறுத்தப்படுவதனால், திரும்ப செலுத்தப்படாத வணிக கடன்களினால் கட்டுபடுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் ஒரு ஆற்றொணா பணம் உட்செலுத்துதல் தேவையினை கொண்டிருக்கின்ற வங்கிகளுக்கு நிதியளிப்பினை மேற்கொள்ள இயலும் என்று அரசாங்கம் நம்பிக்கொண்டிருக்கிறது. வங்கி அமைப்புக்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற தினசரி நிதி பரிமாற்றங்களின் விகிதத்தினை வியப்பூட்டும் வகையில் அதிகரிக்கச் செய்வது, தொடர்ந்து அவற்றை வங்கிகளுக்கான ஒரு ஆதாரத் திறன் கொண்ட வருமானமாக்குவது, மேலும் நடைமுறை வரி வரம்பிற்குள் அவற்றைக் கொண்டுவருவது ஆகியவையே நீண்டகால நோக்கமாக உள்ளது.

ஆச்சரியப்படவேண்டியதில்லை, மோடியின் முதலீட்டாளர் சார்பு அரசாங்கம், அதன் பணம் செல்லாததாக்குதல் திட்டத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள இந்த பாரிய சமூக சீர்குலைவு குறித்து முற்றிலும் அலட்சியமாக இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் மோடி ஆற்றிய ஒரு உரையில், "கறுப்பு பணம்" மற்றும் "பயங்கரவாதத்திற்கு" எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்ததனால் அவர் "நாட்டை காப்பாற்றியுள்ளார்" என்று தெரிவித்தார், மேலும் எந்தவொரு கஷ்டமும் விரைவில் தீருமென்றும் அவர் தெரிவித்தார். அவரது புத்தாண்டு உரையில், அவர் ஏதோ ஒரு வேறுபட்ட தந்திரத்தை கையாண்டார். "அடுத்த தலைமுறையினருக்கு ஒரு உதாரணமாக இருக்கும்," வகையில் இலஞ்ச ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியர்கள் ”வலியை” தாங்கிக் கொண்டனர், "ஒரு மாபெரும் அளவிலான சொத்தினை கொண்டிருந்த" வங்கிகள், நடுத்தர வர்க்கத்தினருக்கும், ஏழைகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டுமென்று ஊக்குவித்தார், மற்றும் குறிப்பாக பயிர் நடுதலை முன்னெத்துச் செல்வதற்கு தீவிர பண தேவையுடன் இருக்கும் விவசாயிகளுக்கு, அடுத்த மாத வரவு-செலவு திட்டத்தில் ஒரு சில "நிவாரண நடவடிக்கைகள்" உட்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

சில நாட்களுக்கு பின்னர், பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தின் கீழ் ஒரு நிதியமைச்சராக இருந்த ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, ஏழைகளினால் "காத்திருக்க" முடியாது என்று அவர் அச்சமுறுவதாக கூறினார். இந்தியாவின் கவர்னர்கள் மற்றும் லெப்டினன்ட் கவர்னர்களுக்கு அவர் ஆற்றிய ஒரு உரையில், "சில நிவாரணங்கள்" வழங்கப்படும் என்ற மோடியின் புத்தாண்டு உரை பற்றி முகர்ஜி பாராட்டினார், ஆனால் இது சமூக அமைதியின்மையை தடுப்பதற்கு துளியும் போதாது என்பதை நிரூபிக்கும் என்ற  அவரது கவலையை சமிக்ஞை செய்தார். "நாம் அனைவரும் ஏழைகளின் துயரத்தினை முற்றிலும் போக்குவதற்கு கூடுதல் கவனம் கொண்டிருக்கவேண்டும்...... இங்கே இப்பொழுதே அவர்கள் உதவிகளைப் பெறவேண்டும்" என்றும் முகர்ஜி அறிவித்தார்.

வலதுசாரி Indian Express அதன் பங்கிற்கு "ஜனாதிபதி கூற்றுக்கு செவிகொடுங்கள்" என்ற ஒரு ஆசிரிய தலையங்கத்தில், கிராமப்புற இந்தியாவில் உருவாகிவரும் ஒரு நெருக்கடி குறித்த அவரது எச்சரிக்கைகளை அரசாங்கம் கண்டிப்பாக செவிமடுக்கவேண்டும்." என்று பிரசுரித்தது.

பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கை, மற்றும் பொதுவாக மோடி அரசாங்கத்தின் தீவிர வலதுசாரி, அதில் சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர் உந்துதலுடன் இந்தியா மேலும் மேலும் அணிசேருவது உட்பட்ட பெரும் வர்த்தக சார்பு கொண்ட திட்ட நிரல் ஆகியவற்றின் மீது எழுந்த பொதுமக்கள் கோபத்தை அநுகூலமாக்க திராணியற்றதாகவே இதுவரை எதிர் கட்சிகளின் நிலைமை உள்ளது என்பதை அவைகளே நிரூபித்துவிட்டன. இதற்கு காரணம், காங்கிரஸ் கட்சியிலிருந்து இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM வரையிலான,அனைத்து எதிர்கட்சிகளுமே இந்த திட்ட நிரலை அமுல்படுத்துவதற்கு உதவி செய்து இருக்கிறார்கள்.

இரண்டு தசாப்தங்களாக, 1989 முதல் 2008 வரையிலும், ஒரு தொடர்ச்சியாக வலதுசாரி அரசாங்கங்களை அவற்றில் பெரும்பானவை காங்கிரஸ் தலைமையிலானவை அவற்றை CPM தக்கவைத்தது, அவை பூகோள முதலாளித்துவத்திற்காக இந்தியாவை ஒரு மலிவு உழைப்பிற்கான புகலிடமாக மாற்றும் மற்றும் வாஷிங்டனின் தளபதியாக மாற்றுகின்ற முயற்சியில் கனமான வேலைகளை செய்தன.