ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US police killed more than 1,150 in 2016

2016 இல் அமெரிக்க பொலிஸ் 1150க்கும் மேற்பட்டோரை கொன்றனர்

By Gabriel Black
4 January 2017

கண்காணிப்பு வலைதளமான killedbypolice.net இன்படி 2016 இல் அமெரிக்காவில் குறைந்தபட்சம் 1152 பேர் பொலிஸால் கொல்லப்பட்டனர். 2015ல் ஆவணப்படுத்தப்பட்ட மொத்த கொலைகள் எண்ணிக்கையான 1208 இலிருந்து சிறிதளவேனும் குறைந்துள்ளபோதும், நாளொன்றுக்கு மூன்று பேர் வீதம் பொலிஸால் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர்.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் பொலிஸால் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை, ஏனைய பிரதான முதலாளித்துவ நாடுகள் ஒவ்வொன்றிலும் பொலிஸால் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கைக்கு மிக கூடுதலாகவே உள்ளது. உதாரணமாக, 2015 இல், ஜேர்மன் மக்கள் தொகையை போன்று கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமான மக்கள் தொகையை மட்டுமே அமெரிக்கா கொண்டிருக்கும்போதிலும், ஜேர்மன் பொலிஸை காட்டிலும் 100 மடங்குக்கும் அதிகமான மக்களை அமெரிக்க பொலிஸ் கொன்றனர். இதற்கிடையில் 2014 இல், பிரிட்டனில் வெறும் 14 பேர் மட்டுமே பொலிஸால் கொல்லப்பட்டனர்.

வருடத்திற்கு ஒரு மில்லியன் குடிமக்களுக்கு 3.42 என்ற வீதத்தில் அமெரிக்க பொலிஸ் மக்களை சுட்டு கொல்வதாக ரட்கர்ஸ் பல்கலைகழகத்தின் (Rutgers University) ஒரு சமூகவியலாளரான பால் ஹிர்ஸ்ச்ஃபீல்ட் (Paul Hirschfield) கண்டறிந்தார். மாறாக, டென்மார்க் 0.187 என்ற வீதத்தைக் கொண்டிருந்தது; மேலும், பிரான்ஸ், 0.17; ஸ்வீடன், 0.133; போர்ச்சுக்கல், 0.125; ஜேர்மன், 0.09; நோர்வே, 0.06; நெதர்லாந்து, 0.06; பின்லாந்து, 0.034; மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ், 0.016 என்றவாறு இருந்தன.

ஏனைய விடயங்களுடன் சேர்த்து அதிகளவிலான மற்றும் பெரும்பாலும் கொலைகாரத்தனமான வன்முறை அமெரிக்க பொலிஸால் வழங்கப்படுவது அமெரிக்காவின் வர்க்க உறவுகளின் மூர்க்கத்தமான மற்றும் பதட்டமான நிலைமையின் ஒரு வெளிப்பாடாகும். தொழிலாள வர்க்கத்தின் பெரும் பிரிவுகள், அடிப்படைத் தேவைகளான சுத்தமான தண்ணீர், சத்தான உணவு, ஒரு வேலை, உடல்நல பராமரிப்பு, வாழ்வதற்கு ஏற்ற ஒரு இடம் மற்றும் கல்வி போன்றவற்றை கூட கிடைப்ப முடியாமல் கிட்டத்தட்ட வறுமை நிலையில் தான் வாழ்கின்றனர்.

அரசு, இதையொட்டி, அடிப்படை சமூக சேவைகள் வழங்கப்படுவதைக்கூட குறைத்து மிருகத்தனமான வன்முறையுடன் விடையிறுப்பதுடன், தேசிய பொலிஸ் படையை மேம்படுத்தவும், இராணுவமயமாக்கவும் பில்லியன் கணக்கிலான டாலர்களை செலவிடுகிறது. இது தேசிய பாதுகாப்புக்கு பிரிவிற்கு ஆட்களை அணிதிரட்டுவதையும், சமீபத்திய ஆண்டுகளில் பொலிஸ் வன்முறைக்கு எதிரான எதிர்ப்புகளை ஒடுக்குவதற்கு அரசு அவசரநிலைகள் சுமத்துவதையும் உள்ளடக்கியுள்ளது.

மோசடி, இலஞ்சம், ஏமாற்றுதல் மற்றும் அப்பட்டமான திருட்டு போன்ற அனைத்தும் பெருமளவில் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் வழமையான நடைமுறைகளாக இருக்கின்ற ஒரு நாடாக அமெரிக்கா உள்ளது. இதற்கிடையில் தொழிலாள வர்க்கம் ஒரு முற்றிலும் வேறுபட்ட நிலையில் நடத்தப்படுகிறது, இதில் சிறியளவிலான தவறான நடவடிக்கைகளுக்கும் பொலிஸ் அதிகாரியால் எவ்வித விசாரணையுமின்றி அதிகரித்தளவில் பொதுவான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுவருகிறது.

இந்த பாரியளவிலான உயிர் இழப்பு பற்றியும் மற்றும் இந்த அரசினால் அனுமதிக்கப்பட்ட கொலைகள் குறித்த அரசியல் விவகாரங்களை தெளிவுபடுத்தவும் ஒரு சந்தர்ப்பமாக ஆண்டு இறுதி இருக்கிறது.

வாஷிங்டன் போஸ்ட்டை பொறுத்தவரை, பொலிஸால் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட (வெறும் கொலை அல்ல) மக்களின் எண்ணிக்கை அளவினை அதன் சொந்த தரவுதளத்திலிருந்து பெற்றவாறு, 2016ல் பொலிஸ் இன் துப்பாக்கி சூடுகள் மற்றும் கொலைகளால் பாதிப்படைந்தோரில் 24 சதவீதத்தினர் கறுப்பினத்தவராக இருந்தனர். அதாவது மொத்தம் சுட்டுக்கொல்லப்பட்ட 957 பேரில் 232 பேர் அவ்வாறிருந்தனர். 2016ல் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், மொத்த ஜனத்தொகையில் அவர்களது சதவிகிதப் பங்கை போன்று இரு மடங்கு வீதத்தில் சுடப்பட்டிருந்தனர்.

பொலிஸ் கொலைகள் குறித்த ஊடக விவாதங்களும், கறுப்பினத்தவர் வாழ்வாதார அமைப்புக்களின் (Black Lives Matter Organization) எதிர்ப்புக்களும், கொல்லப்பட்டோரில் 48 சதவீதம் வெள்ளையினத்தவரின் பெரும் பங்குவீதமாக உள்ளபோதும், சமமற்ற விகிதத்தில் பொலிஸால் கறுப்பினத்தவரே கொல்லப்பட்டுள்ளனர் என்பதற்கு கூடிய கவனத்தை கொடுக்கின்றன.

உலக சோசலிச வளைத் தளமும், "இனவெறி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதன் ஒரு அறிகுறியாக, மொத்த ஜனத்தொகையில் கறுப்பினத்தவரின் விகிதத்திலிருந்து மிக அதிகபட்ச அளவிலேயே பொலிஸால் அவர்கள் கொல்லப்படுகின்றனர், ஆனால் பாதிப்படைந்த வெள்ளையினத்தவர் எண்ணிக்கை இங்குள்ள அடிப்படையான விடயம் வர்க்கமே தவிர இனம் அல்ல." என்பதை வலியுறுத்துகிறது.

போலி இடது மற்றும் ஜனநாயக கட்சி அமைப்பினால் இனம் குறித்து பிரத்யேகமாக குவிமையப்படுத்தப்பட்டு, வர்க்கம் என்பதான மிக அடிப்படையான ஒரு விவகாரம் மறைக்கப்படுகிறது.

போஸ்ட் ஒவ்வொரு கொலையையும் கொல்லப்பட்டவரின் வர்க்கத்தை பின்தொடர்ந்து பார்க்கவில்லை. இருந்தாலும், தனித்தனியாக பார்த்தால், அவர்களது தோல் நிறத்தை பொருட்படுத்தாமல் கவனித்தால் அதில் தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் சிறந்த பிரிவுகள் ஒருபுறம் இருக்க, உயர் வகுப்பினரிலிருந்து ஒருவரை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். பெரும்பாலும் தொழிலாள வர்க்கத்தின் கீழ்மட்ட பிரிவுகள், அதுவும் அடிக்கடி மிகவும் நலிவடைந்த மட்டத்தை சேர்ந்தவர்களே கொல்லப்பட்டிருந்தனர்: அவர்களில் வேலையற்றவர்கள், மனநிலை பாதிப்படைந்தோர், வறிய மக்கள் வாழும் பகுதிகளில் வாழ்வோர், கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் வீடு இல்லாதோர் போன்றவர்களே இருந்தனர்.

உதாரணமாக, 957 பேர் கொல்லப்பட்டதில், 240 பேர் மன நோய் பாதிப்புள்ளவர்கள் என்பதற்கான தெளிவான அடையாளத்தை கொண்டிருந்தனர், அதாவது, பாதிக்கப்பட்டவர்களில் 25 சதவிகிதத்தினர்.

பாதிக்கப்பட்டவர்களில், கொல்லப்பட்ட 46 சதவீதத்தினர், அதாவது 441 பேர் துப்பாக்கி ஏந்தி இருக்கவில்லை. ஒரு நூற்றியெழுபது பேர் கத்தி ஒன்றை ஆயுதமாக வைத்திருந்தனர். மேலும் 44 பேர் சில வகையான விளையாட்டு ஆயுதங்களை கொண்டிருந்தனர். நாற்பத்தியேழு பேர் ஆயுதம் கொண்டிருக்காததுடன் அவர்கள் சரியாக ஒரு பாதையில் காரை செலுத்தாததே பொலிஸுக்கு அபாயகரமாக இருந்தது.

அறுப்பத்தைந்து பேர் காரினை ஓட்டி சென்றது பொலிஸுக்கு அவர்கள் காரையே ஆயுதமாக பயன்படுத்தும் வகையினராக வகைப்படுத்த காரணமாயிற்று. ஆனாலும், பல நிகழ்வுகளில் அங்கு ஒரு வாகனமே ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது என்று காண்பிக்க ஒரு ஆதாரமும் இல்லாமல் போனது. உதாரணமாக, ஒரு 17 வயது வெள்ளையின ஆண் Redwine என்ற கிறிஸ்துவர், ஒரு கார் துரத்தலினால் மோதலுக்குள்ளானபோது சுடப்பட்டார். அவர் ஆயுதமற்று இருந்தார், எனினும் வாகனத்தை திருடியிருப்பார் என்று சந்தேகிக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 34 சதவிகிதத்தினரான 329 பேர் தப்பியோடிவிட்டது மற்றொரு குறிப்பிடத்தக்க உண்மையாக உள்ளது.

மக்களை விரைந்து கொல்ல முற்படும் பொலிஸிற்கு அவர்களால் முற்றிலும் எந்தவித அபாயமும் இல்லை என்பதையே இந்த ஒட்டுமொத்த புள்ளி விவரங்களும் எடுத்துக்காட்டுகின்றன.

மிகவும் நலிவடைந்த மற்றும் வறிய நிலையிலுள்ளவர்கள் மீதான பரந்த பின்னணி கொண்ட தண்டனைகளில் பொலிஸ் கொலைகளையும் கருத்தில் கொள்ளவேண்டும். அமெரிக்காவில் 2 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள் மத்திய மற்றும் மாநில சிறைகளில் உள்ளனர். மேலும் இன்னும், 4.75 மில்லியன் மக்கள் நன்னடத்தையின் பேரில் அல்லது பிணையில் வெளியே உள்ளனர். இதன் அர்த்தம் என்னவென்றால், கிட்டத்தட்ட 7 மில்லியன் மக்கள், வயது வந்தோர் மக்கள் தொகையில் 3 சதவிகிதத்தினர் சிறையில் இருந்துகொண்டே இருக்கின்றனர்.

பொலிஸ் படுகொலைகள் போலவே, அங்காடி திருட்டு, வாகன திருட்டு மற்றும் பெரும் கொள்ளை போன்ற பெரும் திருட்டுக்கள் காரணமாக பெரும்பாலானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் போதைப்பொருள் வைத்திருந்ததற்காகவோ, பயன்படுத்தியதற்காகவோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கில் பல நூறாயிரக்கணக்கான உயிர்களின் இழப்புக்கு காரணமான ஆக்கிரமிப்பு போர்களுக்கு பொறுப்பாளிகளான உண்மையான குற்றவாளிகளான புஸ் மற்றும் ஒபாமாவின் நிர்வாகங்கள், அத்துடன் 2008 இல் பொருளாதாரத்தை உடைத்த வங்கியாளர்கள் இழைத்த கடுமையான குற்றங்களுக்கான இலாபங்களை அறுவடை செய்கையில், அமெரிக்காவில் ஆதரவற்ற மற்றும் நம்பிக்கை இழந்த மில்லியன் கணக்கான மக்கள் ஒப்பீட்டளவில் சிறிய அத்துமீறல்களுக்கும் கொடூரமாக தண்டிக்கப்படுகின்றனர்.

பொலிஸ் பயிற்சி, சமூக ஈடுபாடு அல்லது இன சார்பின்மை வகுப்புகள் எந்த அளவிலும் பொலிஸ் படுகொலைகளை முடிவுக்கு கொண்டுவராது. இந்த அல்லது அந்த பொலிஸ் அதிகாரிகள் என்ன உணர்கிறார்கள் மற்றும் நினைக்கிறார்கள் என்பதை காட்டிலும், மிகவும் அடிப்படையான அரசியல் மற்றும் பொருளாதார யதார்த்தங்களில் இருந்தே இந்த இறப்புக்கள் உதயமாகுகின்றன. 2017ல், ஒரு மோசமடையும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், மக்கள் தொகையில் பரம ஏழையான பிரிவினரை கொல்லவும், துன்புறுத்தவும், சிறையிலிடவும் அரசு இன்னும் அதிகளவில் தயாராக இருக்கும்.