ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

සසප සාමාජික වෛද්‍ය ගමගේට එරෙහි දේශපාලන දඩයමක්

சோ... உறுப்பினர் வைத்தியர் கமகேவுக்கு எதிராக அரசியல் வேட்டையாடல்

By our reporter

23 October 2017

பேராதனை போதனா வைத்தியசாலையில் உளவியல் வைத்தியப் பிரிவில் சேவையாற்றிக்கொண்டிருந்த சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.)

வகையில் கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். “அவசர தேவை கருதி” என்ற சாக்கில் மேற்கொள்ளப்படும் இந்த இடமாற்றம், அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலையின் நிர்வாகமும் சேர்ந்து, சோ.ச.க. உறுப்பினர்களாக உள்ள வைத்தியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் வேட்டையாடலின் ஒரு பாகமாகும்.

கமகே

கமகேவுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் அவசர தேவை கருதி வழங்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் பேராதனை போதனா வைத்தியசாலை நிர்வாகமும் கூறுவது பொய்யாகும். கமகே கேட்டுக்கொண்ட இடமாற்றம் அங்கீகரிக்கப்பட்டு, 2017 இடமாற்ற பட்டியலில் அவரது பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது. ஆயினும் கமகேவுக்கு முன்னதாக மூன்று நான்கு ஆண்டுகளாக பெயர் பட்டியலில் ஏனையவர்கள் காத்திருக்கும் போதும், கமகேவுக்கு கொடுக்கப்பட்ட இந்த இடமாற்றம் நிச்சயமாக அரசியல் சதியின் பெறுபேறாகும் என்பது கீழ்வரும் தகவல்களின் மூலம் நிரூபிக்கப்படுகின்றது.

முதலாவதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் உளவியல் வைத்திய பிரிவுக்கு அவசியமான வைத்தியர்கள் எண்ணிக்கையில் பற்றாக்குறை இருக்கும் நிலையிலேயே கமகே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளார். இந்த பற்றாக்குறைக்கு தற்காலிக தீர்வாக இடைக்கால பயிற்சி காலத்தை முடித்துக்கொண்ட வைத்தியரையும் வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு வைத்தியரையும் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, அதற்காக முன்னணியில் இருந்து செயற்பட்டவர் வைத்தியர் கமகே என்பதை அந்த பிரிவில் வைத்தியர்கள் உட்பட நிர்வாகப் பிரிவும் நன்கு அறிந்த விடயமாகும்.

உளவியல் வைத்தியப் துறையின் நிர்வாகப் பிரிவினதும், நோயாளிகளதும் மனதை வென்ற செயலூக்கமான வைத்தியரான கமகே, சுகாதார சேவை வெட்டுக்களுக்கு எதிராக, சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் வைத்தியசாலை உழியர்கள் மத்தியில் போராடியதன் காரணமாக நிர்வாகத்தின் எதிர்ப்புக்கு ஆளாகியிருந்தார்.

இவை அனைத்துக்கும் மேலாக, அவர் அரச வைத்திய அதிகாரிகள் சங்க அதிகாரத்தின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியிருந்தார். சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட சமூக நலன்புரி துறையில் இடைவிடாமல் அமுல்படுத்தப்படும் சமூகவெட்டு மற்றும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள் முதலாளித்துவ நெருக்கடியின் விளைவு என்பதையும், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அந்த கொள்கைகளை மாற்ற முடியாது என்றும் கமகே தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்தவராவார். இந்த தாக்குதல்களை தோற்கடிப்பதற்காக தனியார் சொத்து மற்றும் இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ முறைமையை தூக்கி வீசி, பொதுவுடமை சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட, மனித தேவைகளுக்காக உற்பத்திகளை மேற்கொள்ளும் சோசலிச உற்பத்தி பொருளாதார முறைமைக்காக, போராட வேண்டும் என்பதை அவர் இடைவிடாது சுட்டிக் காட்டி வந்துள்ளார்.

முதலாளித்துவ முறைமையுடன் பிரிக்கமுடியாமல் பிணைந்துள்ள தொழிற்சங்கங்களால்; அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் தொழிற்சங்கவாத போலி போராட்டங்கள் மூலம் சுகாதாரம் உட்பட சமூக உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியாது, என்பதை சுட்டிக் காட்டி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் போராடியதன் காரணமாகவே, கமகே, அரச வைத்திய அதிகாரிகள் சங்க அதிகாரத்தின் கடுமையான அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கு எதிராகத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததாக, அந்த அதிகாரத்துவம் கமகே மீது குற்றம் சாட்டியிருந்தது. “அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்தை கைவிட்டது” என்ற தலைப்பில் 2017 ஜூன் 27 அன்று உலக சோசலிச வலைத் தளத்தில் வெளிவந்த கட்டுரையையே அவர் விநியோகித்திருந்தார். அது கடந்த காலத்தில், கொழும்பு சுகாதார அமைச்சு வளாகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட பொலிஸ் தாக்குதலுக்கு எதிர்ப்பு காட்டுவதற்காகவும் சைட்டம் தனியார் வைத்திய கல்லூரி நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொள்ளவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் ஜூன் 22 அன்று ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தை கைவிட்டமையை அரசியல் ரீதியில் ஆராய்ந்த கட்டுரையாகும்.

கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது: “கூடுமானவரை அழுத்தம் கொடுத்து கல்வி தனியார்மயமாக்கத்தை இரத்துச் செய்ய முடியும் என்ற மாயையை மாணவர்கள் மத்தியில் பரப்பி, அவர்களை பிரயோசனமற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குள் சிறைவைத்திருக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் அதற்குத் தலைமைத்துவம் கொடுக்கும் முன்னிலை சோசலிசக் கட்சியினதும் அரசியலுடன் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் வகிபாகமும் முன்னோக்கும் நன்கு பொருந்துகின்றது.”

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேராதனைக் கிளையின் செயலாளர் உதயங்க பெரேரா, சங்கத்தை விமர்சிக்க கூடாது எனக் கூறிக்கொண்டு அதற்குப் பிரதிபலித்ததோடு, அத்தகைய கட்டுரைகளை ஏனைய சுகாதார சேவை ஊழியர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டதன் மூலம் தனக்கு வெட்கக்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

சைட்டம் எதிர்ப்பு இயக்கத்துக்குள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் காட்டிய அரசியல் வங்குரோத்து பற்றி உலக சோசலிச வலைத் தளத்தில் பிரசுரமான கட்டுரைகளையும் விநியோகித்த கமகே, பேராதனை போதனா வைத்தியசாலை, சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை மற்றும் கண்டி பெரிய ஆஸ்பத்திரி போன்ற நிறுவனங்களில் வைத்தியர்கள், வைத்தியசாலை நிர்வாக சேவையாளர்கள், அதே போல் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் தொடர்ந்தும் தலையீடு செய்துகொண்டு வைத்திய சேவைக்குள் அரசியல் கலந்துரையாடலுக்கு வழிவகுத்திருந்ததைப் பற்றி சங்கம் அதிருப்தியடைந்திருந்தது.

வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் அனுருத்த பாதனிய, இடமாற்றம் பற்றி கமகே உடன் நடத்திய கலந்துரையாடலில், கடந்த முறை பேராதனை கிளையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள சங்கம் விடுத்த வேண்டுகோளை அவர் நிராகரிக்காமல் இருந்திருதந்தால், இத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என்றும், இப்போதும் கூட அதற்கு கால அவகாசம் உள்ளது என்றும் கூறியிருந்தார்.

முடிந்தால் சங்கத்தின் அரசியலுக்குள் அடிபணிய வைத்து கமகேவை சோ.ச.க. அரசியலில் இருந்து தூர விலக்குவதற்காகவே அந்த பதவிக்கு அவரை ஏற்றுவதற்காக அதிகாரத்துவம் முயற்சித்தது. அது தோல்வியடைந்த பின்னர், கமகேவை இடமாற்றுவதை நோக்கி அவர்கள் திரும்பியுள்ளனர் என்பது தெளிவு. கமகேவை இடம் மாற்றுவதற்காக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அதன் பேராதனை கிளையின் தலைவராக இருந்த வைத்தியர், சுரங்க வர்ணசூரியவை பயன்படுத்தியிருந்தது. இதற்கு உளவியல் வைத்திய பிரிவுத் தலைவரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது.

சோ.ச.க. உறுப்பினரான பேராதனை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் கெலும் சுசார, சங்கத்தின் கிளை கூட்டத்தில் கமகே இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்துப் பேசி, உடனடியாக அந்த இடமாற்றக் கடிதத்தை இரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரினார். அப்போது, கிளைத் தலைவர் உதயங்க பெரேரா, இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரும் கமகேயின் மேன்முறையீடு ஒன்று அவசியம் என தெரிவித்தார். அதை எதிர்த்த சில உறுப்பினர்கள், சங்கம் கமகேயிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி சத்தமிட்டனர்.

“சங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா” என அதன் அதிகாரிகள் கேள்வியெழுப்பிய போது, அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ சார்பு அரசியலுக்கு எதிராக சோ.ச.க. முன்னெடுத்த போராட்டமானது சங்கத்தினதும் நிர்வாகத்தினதும் வேட்டையாடலுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியப் போவதில்லை என கூறிய வைத்தியர் கெலும் பின்வருமாறு குறிப்பிட்டார்:

“சுகாதாரம் மற்றும் கல்வி உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமெனில், வைத்தியர்கள் உட்பட சகல தொழிலாளர்களும் தொழிற்சங்கவாத வேலைத் திட்டத்திடம் இருந்து மட்டுமன்றி, தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக முதலாளித்துவத்தின் கருவியாக மாறியுள்ள தொழிற்சங்கங்களில் இருந்தே பிரிந்து, தமக்கே உரிய நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பிக் கொண்டு, அனைத்துலக சோசலிசத்துக்காகப் போராட வேண்டும்.” என்றார்