ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump’s Asia tour leaves region on brink of trade war and military conflict

ட்ரம்பின் ஆசிய சுற்றுப்பயணம் அப்பிராந்தியத்தை வர்த்தகப் போர் மற்றும் இராணுவ மோதலின் விளிம்பிற்கு இட்டுச் செல்கிறது 

By James Cogan
15 November 2017

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 12 நாள் ஆசிய சுற்றுப்பயணம், வெளிப்புற சவால்கள் மற்றும் உள்நாட்டு நெருக்கடிகளால் சீர்குலைந்து வீழ்ச்சியடைந்து வரும் ஒரு சக்தியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தற்போதைய உண்மையான நிலையின்படி அது உலக அரசியலில் மிகவும் கொடூரமான மற்றும் ஸ்திரமற்ற காரணியாக இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு முன்பிருந்தே நடைமுறையிலுள்ள அவரது நிர்வாக கொள்கைகளை காட்டிலும் ட்ரம்ப் இன்னும் பெரும் அச்சத்தையே உருவாக்கியுள்ளார். 

பியோங்யாங் ஆட்சி, “முழுமையான நிரூபிக்கக்கூடிய அணுஆயுத ஒழிப்பு” என்ற அமெரிக்க கோரிக்கைக்கு அடிபணியவில்லையானால், வட கொரியா “முழுமையாக அழிக்கப்படும்” என்ற தனது அச்சுறுத்தல்களை ட்ரம்ப் அப்பொழுது செயல்படுத்துவாரோ என்ற உடனடி பிரச்சினை உள்ளது. வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் இதுவரை அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

ஏதேனும் சில வடிவங்களில் சமரசங்களை எட்டுவதற்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அடங்கிய காட்சிகளுக்கு பின்னால் பல குறிப்புகள் இருந்த போதிலும், கடந்த வாரம் தென் கொரிய பாராளுமன்றத்தில் ட்ரம்ப் ஆற்றிய போர்வெறிமிக்க மற்றும் ஆணித்தரமான உரை அவரது நிர்வாகம் படைத்துறை நடவடிக்கை எடுக்கவுள்ளது குறித்த சிறு சந்தேகத்தையே எழுப்பியது. வட கொரிய ஆட்சி, அமெரிக்காவை சென்று தாக்கக்கூடிய வகையிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBMs) வைத்திருப்பதை அவர் “அனுமதிக்க மாட்டார்” என உறுதிபூண்டார். அவரது நிலைப்பாடு நிபந்தனையின்றி ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியாவால் ஒப்புதலளிக்கப்பட்டது.

அவரது உள்நாட்டு அரசியல் போட்டியாளர்களினால் அவரது தலைமைப் பதவி ஏற்கனவே முற்றுகையிடப்பட்டுள்ள நிலையில், அணு ஆயுதம் தாங்கிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வட கொரியா வைத்திருப்பது குறித்து வெள்ளை மாளிகை பின்வாங்கி அதை ஏற்றுக்கொள்வது என்பது ட்ரம்புக்கு ஒரு படுதோல்வியாக அது இருக்கும். அவரது நிர்வாகத்திற்கு, இராணுவ-உளவுத்துறை மற்றும் அமெரிக்க ஆளும் வர்க்கம் என அனைத்திற்கும் மத்தியில் கொடூரமான குற்றச்சாட்டுகள் இருக்கும்.

உலக சோசலிச வலைத் தளம் செப்டம்பர் 6 அன்று அதன் முன்னோக்கில் முன்வைத்த கேள்வி இன்னமும் உலகம் முழுவதும் எழுகிறது: “வாஷிங்டன் அதன் போர் முழக்கத்தின் பேரில் போரைத் தொடுத்து நல்லதை உருவாக்கப் போகிறதா? தொடர்ந்து விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களும் மற்றும் அவை வெறும் முரட்டுத்தனமான முழக்கங்கள் மட்டுமல்ல என நிரூபிக்கும் உறுதிப்பாடும் ஒரு அணுஆயுத போருக்கான சாத்தியத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு உந்து சக்தியாக மாறியிருக்கின்றனவா?

நிர்வாகத்தின் வர்த்தக கொள்கைகள் தொடர்பாகவும் இதேபோன்ற கேள்விகளை முன்வைக்க முடியும். பேச்சுக்குப் பின்னரான பேச்சில், ட்ரம்ப், இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து தனது பொருளாதார போட்டியாளர்களுக்கு மத்தியிலான முரண்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்காக அமெரிக்காவினால் ஸ்தாபிக்கப்பட்டதான உலக வர்த்தக அமைப்பு, மற்றும் பன்னாட்டு வர்த்தக மற்றும் முதலீட்டு ஏற்பாட்டையும் கூட கண்டனம் செய்தார். ஒவ்வொரு நாடும் அமெரிக்காவுடனான தனது வர்த்தக உபரிகளை கணிசமாக குறைக்க தேவைப்படும் ஒரு சமரசமற்ற “அமெரிக்கா முதல்” திட்ட நிரலை தொடரவும் அவர் ஆணித்தரமாக உறுதியளித்தார்.

ட்ரம்ப், சீனா போன்ற “மூலோபாய போட்டியாளர்களை” மட்டும் குறித்து இந்த கோரிக்கையை முன்வைக்கவில்லை. அவர் இப்பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நெருங்கிய கூட்டணி நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியாவையும், அத்துடன் அமெரிக்கா தனது மூலோபாய குடையின் கீழ் கொண்டுவர முனையும் வியட்நாம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளையும் கூட அச்சுறுத்துகிறார்.

அமெரிக்காவை விலக்கி, மேலும் அமெரிக்க சந்தையில் அது வைத்துள்ள நம்பிக்கையை குறைத்து, புதிய மண்டல மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஏற்பாடுகளை அபிவிருத்தி செய்யும் அதன் முயற்சிகளுடன் மேலும் முன்னெடுத்து செல்வதாகவே சீன ஆட்சியின் பிரதிபலிப்பு அமைந்துள்ளது.

வியட்நாமில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (Asis Pacific Economic Cooperation-APEC) உச்சிமாநாட்டில், பெய்ஜிங் அதன் இலட்சியமான “ஒரே பாதை, ஒரே இணைப்பு” (One Belt, One Road-OBOR) மூலோபாயம் குறித்த ஆதாயமுடைய ஈடுபாட்டிற்கான வாய்ப்பாக அதனை கருதி நாடுகளை தன்வசப்படுத்த முயற்சித்தது. யூரேசிய நிலப்பகுதி முழுவதும் போக்குவரத்து மற்றும் எரிசக்தி வலையமைப்பை அபிவிருத்தி செய்வதும், மேலும் கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு ஐரோப்பாவை சார்ந்த உலகின் பெரும் உற்பத்தி மையங்களுக்கும், சந்தைகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்துவதும் சீன ஆட்சியின் நோக்கம் ஆகும்.

இதில், பாகிஸ்தான், வளர்ச்சியடையாத மத்திய ஆசிய நாடுகள், ரஷ்யா, மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் என அனைத்து நாடுகளும் பல பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நில அடிப்படையிலான திட்டங்களினால் பயனடையும் சாத்தியமுள்ளது. தெற்கு ஆசியா, கிழக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய தரைக்கடல் துறைமுகங்களிலும், உள்கட்டமைப்புகளிலும் பெரிய அளவிலான சீன முதலீட்டிற்கான திட்டங்களை இந்த கடல்சார் இணைப்புகள் உள்ளடக்கியுள்ளது.

பிலிப்பைன்ஸ், சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் (Association of South East Asian Nations-ASEAN) 10 உறுப்பு நாடுகளிலும் நடத்தப்பட்ட கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் (East Asia Summit-EAS), பெய்ஜிங்கினால் முன்மொழியப்பட்ட பிராந்திய பரந்த பொருளாதார கூட்டுழைப்பின் (Regional Comprehensive Economic Partnership-RECP) உருவாக்கம் பற்றி மேலும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அமெரிக்க நட்பு நாடுகளும் அடுத்த ஆண்டு வரையில் எந்தவொரு நிதி ரீதியான உடன்பாட்டையும் தாமதிப்பதில் வெற்றியடைந்துள்ள போதிலும், அதனை ஸ்தாபிப்பதற்கான நோக்கம் வெளிப்படையாக இருந்தது. அமெரிக்கா நீங்கலாக இந்த ஆதரவளிப்போர் தொகுதி, ஏற்கனவே உலக உற்பத்தி வலை அமைப்பினால் கணிசமாக ஒருங்கிணைக்கப்பட்ட நாடுகளின் ஒரு குழுவிற்குள் நெருக்கமான இணைப்புகளை உருவாக்குகிறது. ஒருங்கிணைந்து, அவை உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40 சதவிகிதத்தை உருவாக்குவதோடு, அதன் பாதி மக்கள்தொகையையும் உள்ளடக்குகிறது.

OBOR திட்டம் மூலமான RCEP குறித்த ஒரு தர்க்க நீட்டிப்பு, ரஷ்யா, மத்திய ஆசியா, தெற்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா ஆகிய நாடுகளை இணைப்பதாக இருக்கும்.

ஒபாமா நிர்வாகத்தின் மாற்றீடாக இருந்த அமெரிக்க ஆதிக்கத்திற்குட்பட்ட “Trans Pacific Partnership”, சீனா அதன் உள்நாட்டு பொருளாதாரத்தின் பாதுகாக்கப்பட்ட பிரிவுகளை ஒழுங்குபடுத்தும் வரை அதனை ஒதுக்கிவிடும். இருப்பினும், ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளன்று, பாதுகாப்புவாத அடிப்படையில் உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்க சந்தை மீதான அணுகலை பெருமளவு வழங்கியதால் TPP ஐ நிராகரித்தார்.

வாஷிங்டனை போலவே சீனாவை மையப்படுத்தும் ஆதரவளிப்போர் குழுவிற்கு வெறுமனே எதிரிடையாகவுள்ள ஜப்பானிய ஆளும் வர்க்கம், அமெரிக்க பங்கேற்பு இல்லாமலேயே TPP நிறுவப்பட வேண்டும் என்று இன்னும் அழுத்தம் கொடுக்கிறது. இறுதியில் ஆதரவளிப்போர் குழு அமைக்கப்பட்டாலும் கூட, RCEP மூலம் அளவு, நோக்கம் மற்றும் இலட்சியத்தின் அடிப்படையில் அது சிறியதாக்கப்படும்.

ட்ரம்ப் அவரது ஆசிய சுற்றுப்பயணம் முழுவதிலும், அமெரிக்க பங்கு சந்தைகளின் எழுச்சிக்கு மேலான எழுச்சி அமெரிக்க பொருளாதாரத்தின் “வலிமையை” நிரூபித்தன என்பது குறித்து பொறிபறக்கும் கோபத்துடன் கண்களை மூடிக்கொண்டார். வோல்ட் ஸ்ட்ரீட் என்பது ஒரு ஊக வணிக மையமாக, ஃபெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் அதிகரித்து வரும் பெரும் கடன் அபாயத்தில் இருந்து வரும் தொடர்ச்சியான உள்ளீடுளால் தடைப்பட்டுள்ளது என்று அமெரிக்க அளவிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி, ஒவ்வொரு தீவிர பொருளாதார ஆய்வாளரும் எச்சரிக்கின்றனர்.

ஐரோப்பா மற்றும் ஜப்பானில், அத்துடன் சீனா போன்ற புதிதாக உருவான பொருளாதார மையங்களிலும் உள்ள அதன் ஏகாதிபத்திய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் தசாப்தங்களின் உறவு சரிந்துவிட்ட நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் வலுவற்ற நிலையில் உள்ளது. பில்லியனர் தன்னலக்குழுக்களின் ஒரு சிறிய அடுக்கு கிட்டத்தட்ட அறிய முடியாத அளவிலான செல்வத்தை கட்டுப்படுத்துகின்ற போதிலும், பரந்த வெகுஜன அமெரிக்க தொழிலாளர்கள் வீழ்ச்சியடையும் வாழ்க்கைத் தரம், சீர்கெடும் உள்கட்டுமானம் மற்றும் இன்னும் காணப்படுவதான அப்பட்டமான பொலிஸ் அடக்குமுறை ஆகியவற்றையே எதிர்கொள்கின்றனர்.

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சீரழிவுக்கும், விரக்திக்கும் ஆளுருவாக ட்ரம்ப் இருக்கின்றார். ஆசியா முழுவதிலும், நாடுகள் இன்னும் கூடுதலான அமெரிக்க பொருட்களை வாங்குவது, அல்லது பொருளாதார தடைகளை எதிர்கொள்வது குறித்து தேவையைக் காட்டிலும் அவர் இன்னும் எதையாவது செய்யக்கூடும். சில நேரங்களில், “பில்லியனுக்கு” அதிகமான விலைமதிப்புள்ள அமெரிக்க தயாரிப்பிலான விமானம், போர்க்கப்பல்கள் மற்றும் ஏவுகணைகளை வாங்க அரசாங்கங்களை வலியுறுத்துகின்ற அமெரிக்க இராணுவ-தொழில்துறை சார்ந்த சிக்கல்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒரு நிலைப்பாடுள்ள மனிதராக முழுவதையும் கடந்து வந்தார்.   

“மலிவு உழைப்பு” நாடுகளாக ஒருமுறை முத்திரை குத்தப்பட்டவர்களுடன் அவர்களும் “போட்டியிடும்” வகையில் அமெரிக்க ஊதியங்களும் நிலைமைகளும் மிகவும் தாழ்ந்த நிலைக்கு உந்தப்பட்டு வருகின்றன என்பது போன்ற தெரிவிக்கப்படாத அனுமானம் ஒருபுறம் இருந்தாலும், ஆசிய அடிப்படையிலான பெருநிறுவனங்கள் உற்பத்தி பொறுப்பை அமெரிக்காவிடம் மாற்ற ட்ரம்ப் முடிந்தவரை தீவிரமாக முன்மொழிந்தார்.

ட்ரம்பின் சுற்றுப்பயணத்தின் ஒரே வெற்றியாக கூறுவதானால், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் ஆளும் உயரடுக்கினர் அமெரிக்க எதிர்தரப்பினரால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில் அந்நாடுகளுக்கு அவர் சென்றதைக் குறிப்பிடலாம். மேலும் இது, சீனாவை இராணுவ ரீதியில் எதிர்கொள்வதற்கு ஒரு “நான்குமுனை” கூட்டணியை அமைப்பது குறித்து அவர்களது ஆதரவை சுட்டிக்காட்டியதுடன், அதன் வளர்ந்துவரும் பிராந்திய மற்றும் சர்வதேச செல்வாக்கை உடைக்கவும் முயல்கிறது.

ட்ரம்பின் ஆசிய சுற்றுப்பயணம், அமெரிக்காவின் மூலோபாய நிலையில் உள்ள ஒரு புதிய படுமோசமான வீழ்ச்சியையே குறிப்பிடுகிறது. இந்நிலையில், அமெரிக்க ஆளும் வர்க்கம் இன்னும் பரந்த போர் இயந்திரத்தை கொண்டிருப்பதை நிரூபித்துள்ளமையும், அதன் உலகளாவிய ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள அந்த போர்க்கருவிகளை பயன்படுத்த முனையும் வகையில் அவ்வப்போது அது கொண்டிருக்கும் தயார் நிலையும் சர்வதேச தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பெரும் ஆபத்தாக உள்ளது.

பின்வரும் கட்டுரைகளையும் ஆசிரியர் பரிந்துரைக்கிறார்:

சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்
ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தினதும் இளைஞர்களினதும் ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்!