ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump fires acting attorney general, pushes ahead with ban on refugees

இடைக்கால அட்டார்னி ஜெனரலை வேலையிலிருந்து நீக்கி, ட்ரம்ப் அகதிகள் மீதான தடையை முன்னெடுக்கிறார்

By Patrick Martin
31 January 2017

ஒபாமா நிர்வாகத்தின் பின்னரும் பதவியிலிருந்த அட்டார்னி ஜெனரல் சாலி யேட்ஸ் (Sally Yates), ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் யேமன் ஆகிய ஏழு முஸ்லீம்கள் பெரும்பான்மையான நாடுகளில் இருந்து அகதிகள் மற்றும் விருந்தினர்கள் வருவதைத் தடுக்கும் ட்ரம்பினது நிர்வாக ஆணையைப் பாதுகாக்க வேண்டுமென்ற அறிவுறுத்தல்களுக்கு கீழ்ப்படிய மறுத்ததும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரை பணியிலிருந்து நீக்கினார்.

“வழிமுறைக்கும் மற்றும் சட்டபூர்வத்தன்மைக்கும்" மதிப்பளித்த நிர்வாக ஆணைக்கு ஒப்புதல் வழங்கிய நீதித்துறையின் சட்டக் குழுவின் அலுவலக ஆய்வறிக்கையை ஏற்க மறுத்ததன் மூலமாக, யேட்ஸ் அந்த நெருக்கடியை இன்னும் துரிதப்படுத்தினார். அகதிகள் மற்றும் விருந்தினர்கள் மீதான இந்த தற்காலிக தடையை கண்டித்து அவர் வெள்ளை மாளிகைக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

“நீதியை எப்போதும் எதிர்பார்க்கவும் மற்றும் எது சரியோ அதன் சார்பில் நிற்கவும் இந்த அமைப்பில் பொதிந்துள்ள கடப்பாடுகளோடு நீதிமன்றத்தில் நாம் எடுக்கும் நிலைப்பாடுகள் ஒத்திசைவாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கே நான் பொறுப்பேற்றுள்ளேன்,” என்றவர் எழுதியிருந்தார். “இப்போது, நிர்வாக ஆணையை பாதுகாப்பது இந்த பொறுப்புறுதிகளுக்கு ஒத்திசைவாக இருப்பதாக நான் நினைக்கவில்லை அல்லது இந்த நிர்வாக ஆணை சட்டத்திற்குட்பட்டு இருப்பதாகவும் நான் கருதவில்லை,” என்றார்.

யேட்ஸை ஒரு "ஒபாமா AG (அட்டார்னி ஜெனரல்)” என்று ட்வீட்டரில் கண்டித்து விடையிறுத்த ட்ரம்ப், பின்னர் யேட்ஸ் அவர் நிர்வாகத்தை "காட்டிக்கொடுத்து" விட்டதாக அறிவிக்கும் ஒரு சிறிய அறிக்கையில் அவரை பணியிலிருந்து நீக்கினார்.

ஒபாமாவின் கீழ் துணை அட்டார்னி ஜெனரலாக இருந்த யேட்ஸ், ஜனவரி 20 க்குப் பின்னர் இடைக்கால அட்டார்னி ஜெனரலாக நீடிக்க ஒப்புக் கொண்டார் ஏனென்றால் தேசிய பாதுகாப்பு ஆணையத்தால் (NSA) இணையம் மற்றும் தொலைதொடர்பு பரிவர்த்தனைகள் மீதான சட்டபூர்வ உளவுபார்ப்புக்கு, நீதித்துறையின் அன்னிய நாடுகள் மீதான உளவுபார்ப்பு பிரிவில் அன்றாடம் போதுமானளவிற்கு உயர்மட்ட அதிகாரிகளின் கையெழுத்துக்கள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அவசியப்பட்டது.

கிழக்கு மாவட்டமான வேர்ஜினியாவின் அமெரிக்க அட்டார்னி டானா ஜெ. போன்ட்டெ (Dana J. Boente) இடைக்கால அட்டார்னி ஜெனரலாக இப்போது யேட்ஸை பிரதியீடு செய்வார். இவரது அலெக்சாண்டிரியாவை மையமாக கொண்ட அலுவலகம் தான், வாஷிங்டன் டிசி இன் வெர்ஜினியா புறநகரில் தலைமையகங்களைக் கொண்டுள்ள பெண்டகன் மற்றும் சிஐஏ இரண்டும் சம்பந்தப்பட்ட பெரும்பாலான தேசிய-பாதுகாப்பு சட்ட வழக்குகளை கையாள்கிறது. 

ட்ரம்ப் அவரது அட்டார்னி ஜெனரல் வேட்பாளரான செனட்டர் ஜெஃப் செஸ்சன்ஸை உறுதிப்படுத்த குடியரசு கட்சி கட்டுப்பாட்டில் உள்ள செனட் இற்காக காத்திருந்திருக்கலாம். செவ்வாய்கிழமை செனட் நீதித்துறை குழு கட்சி அடிப்படையிலான வாக்கெடுப்பில் அந்த வேட்பாளருக்கு ஒப்புதல் வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அகதிகள் மற்றும் விருந்தினர்களைத் தடுக்கும் ஆணைக்கான எந்தவொரு எதிர்ப்பையும் ஏற்றுக்கொள்வதில்லை என்று அவர் முடிவெடுத்தார்.

அக்டோபர் 1973 இல் ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனை இறுதியில் இராஜினாமா செய்ய நிர்பந்தித்த வாட்டர்கேட் நெருக்கடியின் போது, இழிபெயரெடுத்த அவரது சனிக்கிழமை இரவு படுகொலைக்குப் பின்னர், ஜனாதிபதியின் உத்தரவுகளுக்கு கீழ்படிய மறுத்ததற்காக பணியிலிருந்து நீக்கப்பட்ட முதல் நீதித்துறை அதிகாரி யேட்ஸ் ஆகிறார். நிக்சன் வாட்டர்கேட்டின் சிறப்பு வழக்கறிஞர் Archibald Cox ஐ பணியிலிருந்து நீக்க அட்டார்னி ஜெனரல் எலியட் ரிச்சார்ட்சனுக்கு உத்தரவிட்டார், ஆனால் அதை அவர் ஏற்க மறுத்து இராஜினாமா செய்தார். துணை அட்டார்னி ஜெனரல் வில்லியம் ருக்கெல்ஷாஸூம் அதே நிலைப்பாட்டை எடுத்தார். நிக்சனின் உத்தரவை அமல்படுத்த மற்றும் கோக்ஸை பணியிலிருந்து நீக்க, அது மூன்றாம் நிலை அதிகாரியான சொலிசிட்டர் ஜெனரல் ரோபர்ட் போர்க்கிடம் விடப்பட்டது. இதன் விளைவாக பெருந்திரளான மக்களிடையே உண்டான கோபம், நிக்சனுக்கு எதிராக குற்ற வழக்குகளை ஆரம்பிக்க இட்டுச் சென்றது.

யேட்ஸின் முடிவானது, ட்ரம்பின் புலம்பெயர்ந்தவர்கள் மீதான தடை விவகாரத்தில் அரசு அமைப்புகளுக்குள் அதிகரித்து வரும் மோதலின் பாகமாக உள்ளது. ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருகட்சியிலுமாக அரசியல் ஸ்தாபகத்தின் பிரிவுகள், அமெரிக்க வெளியுறவுத்துறை கொள்கை மீது இந்த தடை ஏற்படுத்தும் பாதிப்பைக் குறித்து கவலை கொண்டுள்ளன. மறுபுறம், புலம்பெயர்ந்தோர்க்கு விரோதமான நடவடிக்கைகளின் சர்வாதிபத்திய குணாம்சத்தின் மீதான கோபத்தால் உந்தப்பட்டு, பத்தாயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டங்களில் பங்குபற்றி உள்ளனர். (பார்க்கவும்: “The protests against Trump's Muslim ban and the conflict within the state”)

அகதிகள் மற்றும் விருந்தினர்கள் மீதான தடைக்கு எதிர்வினையாக, பல்வேறு அமெரிக்க நகரங்களிலும் மற்றும் உலகெங்கிலும் நடக்கும் பாரிய போராட்டங்களை ட்ரம்ப் வெள்ளை மாளிகை கண்டு கொள்ளாது என்பதை அது தெளிவுபடுத்திவிட்டது. திங்களன்று தனது பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர்களுக்கான செயலர் சீன் ஸ்பைசர், ஞாயிற்றுகிழமை கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பேசிய நிர்வாகத்தின் ஏனைய செய்தி தொடர்பாளர்களது பொய்யுரைகளையே திரும்ப கூறி, சனிக்கிழமை வெளிநாடுகளில் இருந்து அமெரிக்க விமான நிலையங்களுக்கு வந்த 325,000 பேரில் வெறும் 109 பேர் மட்டுமே ட்ரம்பின் ஆணையின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக வாதிட்டார்.

உண்மையில் இது, ட்ரம்ப் வெள்ளை மாளிகையினது நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் கடுமையான தாக்குதலின் முக்கியத்துவத்தை நிராகரிக்கவும், ட்ரம்ப் வெள்ளை மாளிகை பயன்படுத்தும் எண்ணற்ற பொய்களை மிக எளிமையாக உள்ளபடியே பொய்யென்று நிரூபித்துக் காட்டுகிறது. இந்த 109 என்ற எண்ணிக்கை சனிக்கிழமை அமெரிக்க விமான நிலையங்களில் கைது செய்யப்பட்டவர்களை மட்டுமே குறிக்கிறது, ஆனால் ட்ரம்ப் விதித்த தடையானது அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான நுழைவனுமதியைக் கொண்டிருக்கும் அந்த அனைத்து ஏழு நாடுகளிலும் உள்ள எவரொருவரையும் பாதிக்கிறது. வாஷிங்டன் போஸ்ட் மேற்கோளிட்ட வெளியுறவுத்துறை புள்ளிவிபரங்களின்படி, 2015 இல் நுழைவனுமதி வைத்திருந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, அதாவது இப்போது அமெரிக்காவிற்கு வருவதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கும் இவர்களின் எண்ணிக்கை, 83,000 க்கும் அதிகமாகும், அவர்களில் பாதி பேர் அதாவது சுமார் 42,000 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள்.

இந்த எண்ணிக்கையில் நுழைவனுமதி இல்லாமல் பயணிக்கும் அகதிகள் நிச்சயமாக சேர்க்கப்படவில்லை. உலகெங்கிலும் 63 மில்லியன் இடம்பெயர்ந்தவர்கள் உள்ளனர், பெரும்பாலும் இது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், சிரியா, யேமன் மற்றும் லிபியாவில் அமெரிக்கா தூண்டிவிட்ட போர்கள் மற்றும் உள்நாட்டு போர்களாலும் மற்றும் அமெரிக்க ஆதரவிலான சிக்கனக் கொள்கையின் காரணமாக ஆபிரிக்காவின் பெரும்பாகங்களின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டதனாலும் உண்டான விளைவாகும். கடந்த ஆண்டு ஒபாமா ஒப்புக்கொண்ட 110,000 என்ற மிகச் சிறியளவிலான அகதிகளுக்கான அமெரிக்க பங்கை, 50,000 அல்லது அதற்கும் குறைவாக குறைப்பதற்கு, வேறு வார்த்தைகளில் கூறுவதானால் உலகின் மிகச் செல்வ செழிப்பான நாட்டிற்குள் மொத்தத்தில் 0.2 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதத்திற்கு குறைப்பதற்கு ட்ரம்ப் முன்மொழிகிறார். 

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகம் ஓர் அறிக்கையில் குறிப்பிடுகையில், “அமெரிக்காவிற்குள் மீள்குடியமர்வு பெறும் நிகழ்முறையில் உள்ள உலகெங்கிலுமான ஆயிரக்கணக்கான அகதிகள் நிச்சயமற்றத்தன்மையை முகங்கொடுப்பதைக்" குறித்து கவலைகளை வெளிப்படுத்தியது. வாரயிறுதி வாக்கில் சுமார் 800 அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைய மறுக்கப்பட்டனர், மற்றும் மீள்குடியமர்வு மீதான 120 நாள் தடையானது ஏறத்தாழ 20,000 பேரின் நுழைவைத் தடுக்கக்கூடும்.

நிர்வாக ஆணையைப் பாதுகாப்பதில் நிர்வாகம் ஆக்ரோஷமான சட்ட விடையிறுப்புகளுக்கு திட்டமிட்டு வருகிறது. ப்ரூக்ளின், பாஸ்டன், சீட்டெல், வடக்கு வெர்ஜினியா மற்றும் லோஸ் ஏஞ்சல்ஸ் இல், பெடரல் மாவட்ட நீதிபதிகளின் ஐந்து வெவ்வேறு தீர்ப்புகள் விமான நிலையங்களில் வாரயிறுதியில் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களை விடுவிக்க நிர்பந்தித்தது. ஆனால் இந்த நடவடிக்கைகள் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க அரசு அதிகாரிகளின் நுழைவனுமதியை மறுப்பதிலோ அல்லது இரத்து செய்வதிலோ எந்த தாக்கமும் கொண்டிருக்கவில்லை.

மிகவும் கடுமையான மற்றும் நீண்டகால தாக்கங்களைக் கொண்ட ட்ரம்ப் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க குடியுரிமை சங்கம், அமெரிக்க-இஸ்லாமிய உறவுகளுக்கான குழு (CAIR) மற்றும் வாஷிங்டன் மாநில அரசால் திங்கட்கிழமை தொடங்கி சட்டவழக்குகள் தொடுக்கப்பட்டன. மொத்தம் 15 மாநில அட்டார்னி ஜெனரல், இவர்கள் அனைவரும் ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்பின் அகதிகள் மீதான தடையானது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறி ஞாயிறன்று ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். நியூ யோர்க் மற்றும் கலிபோர்னியா உட்பட இன்னும் பல மாநிலங்கள், இந்த விவகாரத்தில் வழக்கு தொடுக்க பரிசீலித்து வருகின்றன.

  யிறுப்புகளுக்குத்___________________________________________________________________________________________________________CAIR சட்டவழக்கு பரந்த அரசியல் பாய்ச்சலைக் கொண்டிருந்தது, இரண்டாம் உலக போரின் போது ஜப்பானிய-அமெரிக்கர்களது கைது நடவடிக்கையையே மிஞ்சிவிடும் அளவிற்கு ட்ரம்ப் உத்தரவு ஒரு பாரிய சுற்றி வளைப்பின் தொடக்கம் மட்டுமே என்று அது குற்றஞ்சாட்டியது. அந்த சட்டவழக்கின்படி, வெள்ளை மாளிகை நடவடிக்கையின் நோக்கம் "அமெரிக்காவில் சட்டபூர்வமாக வசிக்கும் புலம்பெயர்ந்த மற்றும் புலம்பெயர்ந்திராத முஸ்லீம்களை பாரியளவில் வெளியேற்றுவதை தொடங்கி" வைப்பதாகும். அந்த சட்டவழக்கை தொடுத்த வழக்காளிகள், அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் தற்போது சட்டபூர்வமாக வசிப்பவர்கள் என இருதரப்பினரையும் உள்ளடக்கி உள்ளனர், இவர்கள் அனைவரும் முஸ்லீம்கள் என்பதுடன், எதிர்காலத்தில் அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதை முகங்கொடுக்கலாம்.

அகதிகள் மற்றும் புலம்பெயர்வோர்கள் மீது அதிகரித்து வரும் மக்கள் அனுதாபமும், மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்பின் தாக்குதல் மீதான கோபமும், ACLU க்கு வெள்ளமென பாய்ந்த நிதியுதவிகளில் வெளிப்பட்டது. அது கைது செய்யப்பட்டவர்களில் முதல் குழுவினரை விடுவிப்பதற்காக பெருமளவில் சட்டபூர்வ வேலைகளை செய்தது. வாரயிறுதியில் அக்குழுவின் வலைத் தளத்திற்கு 24 மில்லியன் டாலர் நிதியுதவிகள் வந்ததாகவும், வழமையாக ஓராண்டின் மொத்த தொகையைக் காட்டிலும் இது ஆறு மடங்கு என்றும் ACLU நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நன்கொடைகள், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடிகர் சங்கத்தின் (Screen Actors Guild) விருது வழங்கும் விழாவின் போது நடிகை சாரா பௌவுல்சன் (Sarah Paulson) செய்த ஒரு அழைப்பின் பாகமாக தூண்டிவிடப்பட்டிருந்தன, அந்த விழாவில் அவர் “The People v. O.J. Simpson: American Crime Story” என்பதில் நடித்ததற்காக ஒரு விருது வென்றார்.

திங்களன்று பிரிட்டன் எங்கிலுமான நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் நடந்த மிகப்பெரும் ஆர்ப்பாட்டங்கள் உட்பட அகதிகள் மீதான தடைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. பிரதான போராட்டம், இலண்டனுக்கு வெளியே பிரதம மந்திரி இல்லம் அமைந்துள்ள டவுனிங் வீதியில் நடந்தது, அதில் 25,000 மக்கள் கலந்து கொண்டதாக மதிப்பிடப்படுகிறது. மாலை 7 மணி வாக்கில், வெள்ளை அரங்கம் (Whitehall) நெடுகிலும் நீண்டிருந்த கூட்டம் ட்ரம்ப்-எதிர்ப்பு மற்றும் அகதிகள்-சார்பான கோஷங்களுடன் உத்தியோகபூர்வ பேச்சாளர்களின் பேச்சையே மூழ்கடித்தது.

பேர்மின்ஹாம், எடின்பேபர்க், கிளாஸ்கோவ், அபெர்டீன், கார்டிஃப், மான்செஸ்டர், லீட்ஸ், ஷெஃபீல்ட், பிரைடன், நியூகாஸ்டல் மற்றும் லிவர்பூல் உட்பட பிரதான நகரங்களிலும், இங்கிலாந்தின் டஜன் கணக்கான ஏனைய இடங்களிலும் பல ஆயிரக் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதற்கிடையே டொனால்ட் ட்ரம்பை "உத்தியோகபூர்வ விஜயத்திற்கு அழைக்க கூடாது" என்று வலியுறுத்தும், குறிப்பாக கடந்த வாரம் பிரதம மந்திரி தெரேசா மே முன்மொழிந்த அழைப்பைத் திரும்ப பெற வேண்டுமென்ற ஒரு மனு, ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான கையெழுத்துக்களை பெற்றுள்ளது.