ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Washington’s war threat against Iran

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் மிரட்டல்

By Bill Van Auken
3 February 2017

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ”முதலில் அமெரிக்கா” என்ற தனது கொள்கையை பிரகடனம் செய்தும் “ஏனைய நாடுகளால் ஏற்படுத்தப்படும் நாசங்களுக்கு” எதிராக அமெரிக்காவை பாதுகாப்பதற்கு சூளுரைத்துமான ஒரு பதவியேற்பு உரையை நிகழ்த்தி பதவியில் அமர்ந்து வெறும் இரண்டு வாரங்கள் தான் ஆகியிருக்கின்றன.

கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் அமெரிக்கா நடத்தி வந்திருந்த முடிவில்லாத போர்களில் இருந்து விலகி, தனிமைப்படுதலுக்குரிய விதத்தில் நகர்ந்ததை இந்த கொள்கை குறித்ததாக இருந்த அத்தனை பிரமைகளும் துரிதமாக அகற்றப்பட்டிருக்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால இராணுவவாதக் கொள்கையிலான ஒரு கூர்மையான தீவிரப்படலாய், ஒன்றுக்கடுத்த ஒன்றாய் வம்பிழுப்பதான ஆத்திரமூட்டல்களை ட்ரம்ப்பும் அவரது ஆலோசகர்களும் அரங்கேற்றி வருகின்றனர்.

ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜெனரல் மைக்கல் ஃபிளின் புதனன்று விடுத்த காலக்கெடுவில், இது அதன் மிகத்தெளிந்த வடிவத்தை எடுத்திருக்கிறது. இராணுவ உளவுப் பிரிவின் முன்னாள் தலைவரான இவர், வெள்ளை மாளிகையின் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஒரு முன்னறிவிப்புமின்றி வந்து பிரகடனப்படுத்தினார்: சென்ற சனிக்கிழமையன்று நடைபெற்ற ஈரானின் வெடிப்பு ஏவுகணை பரிசோதனை தொடர்பாகவும், அதன்பின் மூன்று நாட்கள் கழித்து யெமனில் ஹவுதியின் கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபிய போர்க்கப்பல் ஒன்றின் மீது நடத்திய தாக்குதலுக்கு ஈரானும் ஏதோவொரு வகையில் பொறுப்பாக இருந்ததாய் ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரிலும், “... நாங்கள் ஈரானை உத்தியோகபூர்வமாய் எச்சரிக்கையில் வைக்கிறோம்”.

இவை இரண்டும், “ஒட்டுமொத்த மத்திய கிழக்கு எங்கிலும் ஈரானின் ஸ்திரம்குலைக்கும் நடத்தை”க்கும், அதேபோல “ஈரானின் துஷ்ட நடவடிக்கைகளுக்கு போதிய பதிலளிக்க” ஒபாமா நிர்வாகம் தவறியிருந்ததற்கும் எடுத்துக்காட்டுகளாய் இருப்பதாக, ஃபிளின் அறிவித்தார்.

இந்த காலக்கெடுவை கொடுத்த பின்னர், ஃபிளின் ஒரேயொரு கேள்விக்கும் கூட முகம்காட்டாமல் செய்தியாளர் சந்திப்பில் இருந்து அகன்று விட்டார்.

வியாழனன்றான வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில், ஈரானை “எச்சரிக்கையில் வைப்பது” என்பதில் இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தலும் இடம்பெறுமா என்று ஒரேயொரு செய்தியாளர் மட்டுமே வினவினார். ஈரானின் ஏவுகணை பரிசோதனை ஐ.நா தீர்மானத்தை மீறிய ஒன்றாகும் என்று மோசடியாக குற்றம்சாட்டியும், “நமது கடற்படை கப்பலுக்கு எதிராய் ஈரான் எடுத்த குரோத நடவடிக்கைகளை” —இங்கே அவர் குறிப்பிடுவது ஒரு சவுதி கப்பல் மீது நடந்த ஹவுத்தி தாக்குதலை என்பது வெளிப்படை— மேற்கோள் காட்டியும் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளரான சீன் ஸ்பைசர் இதற்கு பதிலிறுத்தார். இந்த நடவடிக்கைகளை அமெரிக்கா “உட்கார்ந்து வேடிக்கை பார்க்க முடியாது” என்றும் அவை “பதிலிறுப்பு அளிக்கப்படாதவையாக” விடப்பட போவதில்லை என்றும் அவர் கூறினார்.

பெருநிறுவன ஊடகங்கள் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக ட்ரம்ப்பை விமர்சனம் செய்திருக்கும் அதேவேளையில், ஈரானுக்கு எதிரான போர் மிரட்டல் தொடர்பான அவற்றின் பதிலிறுப்பு குறிப்பிடத்தக்க வகையில் தணித்து ஒலிக்கிறது. இது தற்செயலான விடயம் அல்ல. ட்ரம்ப்பின் கீழ் அது மிகவும் அதீதமான ஒரு வடிவத்தை எடுக்கின்ற அதேநேரத்தில், ஈரானுக்கு ஏதிரான போர் மிரட்டல் என்பது புதிய ஜனாதிபதியின் ஒரு கண்டுபிடிப்பாக பார்க்கப்பட முடிவது அரிதானதாகும். 1979 இல் ஷாவின் அமெரிக்க-ஆதரவு சர்வாதிகாரம் தூக்கிவீசப்பட்ட காலம் வரை இத்தகைய மிரட்டல்கள் பின்நோக்கி செல்லக் கூடியவை, அதன்பின் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் “தீமையின் அச்சு” மூலமாக, அதன்பின் ஒபாமாவின் கீழ் வான் தாக்குதல்களுக்கான தொடர்ச்சியான அமெரிக்க-இஸ்ரேலிய மிரட்டல்கள் ஆகியவை பின்தொடர்கின்றன. இத்தகைய ஒரு மூர்க்கத்தனமான போருக்கு திட்டமிடல் என்பது நீண்டகால இருகட்சி பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது.

இந்த அசாதாரணமான வசனங்களில் இருந்து ஈரான் என்ன புரிந்து கொள்ள முடியும்? இராணுவ நடவடிக்கை தொடங்கப்படும் முன்னதாக அது குறித்த எந்த பேச்சுவார்த்தையும் இருக்கக் கூடாது என்று ட்ரம்ப் திரும்பத் திரும்ப சொல்லி வந்திருப்பதைக் கொண்டு பார்த்தால், ஒரு சில தினங்களுக்குள் டோமாஹாக் குரூஸ் ஏவுகணைகள் தெஹ்ரானை நோக்கி பறந்து வரக் கூடும் என்று ஈரான் நம்புவதற்கு அனைத்து காரணங்களும் உள்ளன. இல்லையேல், ஆத்திரமூட்டலின் மூலமாக ஈரானை அணுசக்தி உடன்பாட்டை கிழித்துப் போட்டுவிட்டு தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடர்வதற்கு தள்ளி, அதன்மூலம் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பாதை திறக்க ட்ரம்ப் நிர்வாகம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

இத்தகையதொரு போருக்கான நோக்கங்கள் தெளிவாய் இருக்கின்றன, வெடி ஏவுகணை சோதனைகளுக்கோ அல்லது சவுதியின் போர்க்கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கோ அதில் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. ஈராக் மீதான தனது ஏகாதிபத்திய மூர்க்கத்தன போரையும், அதனைத் தொடர்ந்து லிபியா மற்றும் சிரியாவில் ஒபாமா நிர்வாகத்தினால் தொடக்கி வைக்கப்பட்ட ஆட்சி-மாற்றத்திற்கான போர்களையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடக்கி கிட்டத்தட்ட ஒன்றரை தசாப்த காலத்திற்கு பின்னர், இந்தப் பிராந்தியம் முழுவதிலுமே அமெரிக்கக் கொள்கை சுக்குநூறாகிக் கிடக்கிறது. ஈரானுக்கு எதிரான போருக்கு தயாரிப்பு செய்கின்ற விதத்தில் ஒரு கைப்பாவை ஆட்சியை அதிகாரத்தில் அமர்த்துவதற்கு அமெரிக்கா முயற்சி செய்த ஈராக் மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகளிலுமே, ஈரான் தனது செல்வாக்கையும் ஒரு பிராந்திய சக்தியாக தனது அந்தஸ்தையும் கணிசமாக அதிகரித்து விட்டிருப்பதோடு எண்ணெய்-வளமிக்க இப்பிராந்தியத்தில் மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் முனைப்பிற்கு ஒரு முட்டுக்கட்டையாக நின்று கொண்டிருக்கிறது.

நிகழ்வுகள் இந்தப் பாதையில் சென்றது தொடர்பாக அமெரிக்க ஆளும் ஸ்தாபகம் கொண்டிருக்கும் வெறுப்புமிக்க கோபத்திற்கு, ட்ரம்ப் புதன்கிழமையன்று பதிவிட்ட தனது ஒரு முரட்டுத்தனமிக்க ட்வீட்டில் வெளிப்பாட்டை கொடுத்திருந்தார்: ”அமெரிக்கா மூன்று ட்ரில்லியன் டாலர்களை அங்கு கொட்டியிருந்ததற்குப் பின்னரும் கூட ஈராக்கில் மேலும் மேலும் அதிகமான பகுதிகளை ஈரான் துரிதமாக கையகப்படுத்திக் கொண்டிருக்கிறது. நீண்டகாலமாக வெளிப்படையாய் இருக்கிறது!”

சென்ற வாரத்தில் சிஐஏ தலைமையகத்தில் பேசிய ட்ரம்ப், 2003 ஆக்கிரமிப்பிற்கு பின்னர் அமெரிக்கா “ஈராக்கின் எண்ணெயை எடுத்திருக்க வேண்டும்” என்ற தனது அயோக்கியத்தனமான வலியுறுத்தலை மீண்டும் பேசியதோடு, “உங்களுக்கு இன்னுமொரு வாய்ப்பு கிட்டலாம்” என்றும் அலட்சியமாகக் கூறினார். ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் அதனைக் கடந்தும் இன்னும் விரிந்த இன்னும் இரத்தக்களரியான ஒரு போரின் நேரடியான அச்சுறுத்தலையே இந்த கருத்துக்கள் மேலும் மேலும் குறித்து நிற்பதாக தென்படுகின்றன. ஈரானுடனான ஒரு போரின் பின்விளைவுகள் அப்பிராந்தியத்தில் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் மற்றும் அமெரிக்காவிலும் கூட பேரழிவுகரமானதாக இருக்கக் கூடும்.

”வெளியுறவுக் கொள்கையில் ஒரு புதிய சகாப்தம்” என்ற தலைப்பிலான ஒரு கவலை தொனிக்கும் கட்டுரையில் வாஷிங்டன் போஸ்ட் வியாழனன்று பின்வருமாறு கருத்துரைத்திருந்தது: “பாரம்பரியமான இராஜதந்திரத்தை ஓரங்கட்டி வைத்து விட்டு உலகிற்கு தமது ‘முதலில் அமெரிக்கா’ அணுகுமுறையை துரிதமாக நீட்டிக் கொண்டிருக்கின்ற ஆலோசகர்களின் ஒரு சிறிய குழுவிடையேயான முடிவெடுத்தலின் மீது கவனம் குவிப்பதாக தென்படுகின்ற ஒரு மல்லுக்கட்டான மற்றும் மரபுகளை உடைக்கின்றதான வெளியுறவுக் கொள்கையை ஜனாதிபதி ட்ரம்ப் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.”

ஆயினும் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளை தன்னிச்சையானது அல்லது உந்துதலின் விளைவு என நம்புவது ஒரு அபாயகரமான தவறாகி விடும். மாறாக, அவை ஒரு தெளிவான திட்டத்தின் பகுதியாகும்.

ட்ரம்ப்பின் உதவியாளர்கள் தமது கொள்கையை, இந்தமுறை ஈராக்கை மட்டும் சுக்குநூறாக்குவதாக மற்றும் அடிமைப்படுத்துவதாக இல்லாமல், மாறாக அமெரிக்காவிற்குள்ளான தொழிலாள வர்க்கம் உள்ளிட, ஒட்டுமொத்த கோளத்தையுமே அடிமைப்படுத்துவதற்கான, “அதிர்ச்சியும் பிரமிக்க வைப்பதுமான” ஒன்றாக, குறிப்பிடுவதாய் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவிக்கிறது.

ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகையால் பின்பற்றப்படுகின்ற வெளியுறவுக் கொள்கையின் வடிவம் நாளுக்கு நாள் மேலும் தெளிவடைந்து வருகிறது. அது இன்று ஈரான் மீது கவனம் குவிக்கின்ற நிலையில், சீனாவுக்கு எதிராய் மேலும் மேலும் அதிகமான ஒரு மோதல் போக்கை கடைப்பிடிக்கிறது. ட்ரம்ப்பின் பாசிச தலைமை மூலோபாயவாதியான ஸ்டீபன் பானன், 2016 தேர்தலுக்கு முந்தைய ஒரு வானொலி ஒலிபரப்பின் போது, அமெரிக்கா “ஐந்து முதல் 10 வருடங்களுக்குள் தென் சீனக் கடலில் போருக்குச் செல்லும்” என்று கணித்திருந்தார்.

ட்ரம்ப் நிர்வாகமானது ரஷ்யாவை நோக்கி ஒரு தணிந்த மனப்போக்கை கடைப்பிடிக்கும் மட்டத்திற்கு —இது ஆளும் ஸ்தாபகத்திற்குள்ளான கடுமையான மோதல்களின் குவியப்புள்ளியாக இருக்கிறது, தேர்தலிலும் பங்காற்றியது— அது மற்ற இடங்களில் போர் செய்வதற்கு வசதியான விதத்திலான ஒரு தற்காலிக மற்றும் தந்திரோபாயரீதியான தள்ளிவைப்பு மட்டுமேயாகும். அமெரிக்க நலன்களுக்கு இணங்கிச் செல்ல ரஷ்யா தவறுமானால், அதன் முறையும் வெகுவிரைவிலேயே வந்து சேரும்.

ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகை வெளியுறவுக் கொள்கையை நடத்துகின்ற விதம், பேரளவிலான கூட்டாளிகளையும் எதிரிகளையும் ஒன்றுபோல அது மிரட்டல்விடுவதும் அவமதிப்பதும், அமெரிக்க அரசாங்கங்களின் வரலாற்றில் உண்மையாக எந்த முன்னுதாரணமும் இல்லாத ஒன்றாகும். மாறாக, வெளிநாட்டு அரசாங்கங்களையும் அரசின் தலைவர்களையும் அவர் நடத்துகின்ற விதமானது அடோல்ஃப் ஹிட்லர் அல்லது பெனிட்டோ முசோலினியின் அடாவடித்தனமான சீற்றங்கள் மற்றும் அச்சுறுத்தலையே நினைவுக்குக் கொண்டுவருகிறது.

ஆனால் அவர்களைப் போலவே, ட்ரம்ப்பும் வானத்தில் இருந்து குதித்தவரோ அல்லது நரகத்தில் இருந்து எழுந்தவரோ அல்ல. அமெரிக்காவை ஆளுகின்ற நிதிச் சிலவரணியின் குற்றவியல்தன்மையின் உருவடிவே அவராவார். அவர் பின்பற்றுகின்ற கொள்கைகள் முன்கண்டிராததாக இருக்கலாம், ஆயினும் அவை பல தசாப்தங்களாய் தயாரிப்பு செய்யப்பட்டு வந்திருப்பவையே ஆகும்.

குறிப்பாக 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு பிந்திய காலத்தில், அமெரிக்க முதலாளித்துவ வர்க்கமானது, ஜனநாயகக் கட்சி நிர்வாகம் மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகம் இரண்டின் மூலமாகவும், தனது நெருக்கடிகளையும் உலகச் சந்தைகளிலான தனது மேலாதிக்கம் தேய்ந்து சென்றிருந்ததையும் மிரட்டல்கள் மூலமாகவும் இராணுவ வலிமைப் பயன்பாட்டின் மூலமாகவும் சரிக்கட்ட முயற்சி செய்து வந்திருக்கிறது, இந்த முயற்சியின் பெரும்பகுதி வெற்றிகாண முடிந்திருக்கவில்லை என்றபோதிலும்.

ட்ரம்ப்பின் ஜனாதிபதி பதவிக்காலம் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில், அத்துடன் உலகளாவிய இராணுவவாதத்தின் நீண்டநாள் கொள்கையில் இருந்து விளைந்த வரிசையான அழிவுகளுக்கு பின்னர், இந்த கொள்கையானது உலகப் போரை நோக்கிய வேகமான செலுத்தமாக இன்னும் அதிதீவிரமான மற்றும் பொறுப்பற்றதொரு வடிவத்தை எடுத்திருக்கிறது.