ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sessions sworn in as attorney general as Trump signs orders to increase police powers

செஸ்சன்ஸ் அட்டர்னி ஜெனரலாக  பதவியேற்கும்போது ட்ரம்ப் போலீஸ் அதிகாரத்தை அதிகரிக்க ஆணையிடுகிறார்

By Tom Eley 
10 February 2017

வியாழன் காலை அன்று, அலபாமா செனெட்டர் ஜெஃப் செஸ்சன்ஸ், டொனால்ட் ட்ரம்ப்பால் அட்டர்னி ஜெனரலாக பதவியேற்பது, ஜனநாயக உரிமைகளுக்கு உறுதியாக எதிர்ப்புத் தெரிவிக்கும் எதிராளி மேலேற்றம் பெறுவதென்பது அவற்றை பாதுகாப்பதை பணியாக கொண்டதல்ல என்பதைக் குறிக்கிறது.

மேற்கு வெர்ஜீனியாவின் ஜனநாயகக் கட்சிக்காரர் Joe Manchin குடியரசுக் கட்சிக்காரர்களுடன் சேர்ந்து அவரது உதவியுடன், புதன் கிழமை அன்று 52க்கு 47 என்ற வாக்கு அடிப்படையில் செஸ்சன்ஸ் தேர்வை செனெட்டானது உறுதிப்படுத்தியது.

பதவியேற்ற பின்னர், செஸ்சன்ஸ் புலம்பெயர்ந்தோர் “சட்டத்தை மீறும் தன்மைக்கும்”, “பயங்கரவாதத்திலிருந்து வரும் அச்சுறுத்தலுக்கும்” முடிவுகட்டுவதற்கு தனது அலுவலகத்தை அறிவுறுத்த போவதாகவும் வன்முறைக் குற்றங்களின் வளர்ச்சி என்று சொல்லப்படுவதை திருப்பி அடிக்கப் போவதாகவும் குறிப்பிட்டார். வன்முறைக் குற்றம் மீதான புள்ளிவிபரங்கள் தசாப்த காலங்களில் மிகக்குறைத்திருந்த போதிலும் பின்கூறப்பட்டது “ஆபத்தான நிலையான போக்கு” என்று அவர் விவரித்தார்.

இது முழு தொழிலாள வர்க்கத்தையும் இலக்கு வைப்பதற்கு அமெரிக்க போலீஸ் அதிகாரத்தை பாரியளவில் அதிகரிப்பதற்கான மறைமுக மொழியாகும். செஸ்சன்ஸ் பதவியேற்பு விழாவை அடுத்து உடனடியாக, ட்ரம்ப் அமெரிக்க சமுதாயத்தில் போலீசின் பங்கை அதிகரிக்கும் வண்ணம் வழிநடத்தும் இன்னும் மூன்று நிறைவேற்று ஆணைகளில் கையெழுத்திட்டார். முதலாவது, ட்ரம்ப் கூறியபடி, “நம் நாடு முழுவதும் பரவி இருக்கும் குற்றகர குழுக்களின் முதுகை உடைத்தல்” ஆகும். இரண்டாவது அமெரிக்காவில் வனமுறைக் குற்றம் மீதாக படையை உருவாக்கல். மூன்றாவது, போலீஸுக்கு எதிரான வன்முறையை தடுத்து நிறுத்தல் ஆகும்.

ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வழங்கப்படும் இந்த மற்றும் இன்ன பிற ஆணைகளை நிறைவேற்றுவதில் செஸ்சன்ஸ் பிரதான பங்கு வகிக்க இருக்கிறார். அட்டர்னி ஜெனரல் நீதித்துறைக்குத் தலைவராவார் மற்றும் முன்னணி சட்ட அமலாக்க அலுவலர் மற்றும் அமெரிக்க அரசாங்கத்திற்கு முதலாவது சட்ட ஆலோசகராக என இரு விதத்திலும் இருப்பார்.

இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து பிரதான நகரங்களின் போலீஸ் தலைமை அமைப்பின் முன்னர் புதன்கிழமை வழங்கப்பட்ட உரையில், ட்ரம்ப் அவரது முஸ்லிம் விரோத பயணத் தடைக்கு எதிரான தீர்ப்பிற்காக நீதிமன்றங்களைக் கண்டனம் செய்தார். அங்கே திரண்டிருந்த போலீஸ் தலைமைகளின் மத்தியில் அவர்கள் தங்களின் “உண்மையான நண்பனை வெள்ளை மாளிகையில் கொண்டுள்ளனர்” என்று கூறினார். ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவில் உள்ள போலீசார் 1000 பேர்களைக் கொல்கிறார்கள், அவர்களில் பலர் நிராயுதபாணிகள் ஆவர்.

செஸ்சன்ஸ் காலி செய்த செனெட் இருக்கை வியாழக்கிழமை அட்டர்னி ஜெனரல் அலபாமா, Luther Strange ஆல்  எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நியமனம் மாநில குடியரக் கட்சி கவர்னர்  Robert Bentley ஆல் செய்யப்பட்டது. இரு மாதங்களுக்கு முன்னர், Bentley க்கு எதிரான வழக்கு விசாரணையைத் தடுப்பதற்கு ஸட்ரேன்ச் தலையீடு செய்தார். பின்னர் அவர் செசென்சின் சென்ட் இருக்கைக்கு Bentley -ஐ மனுச்செய்தார். “ஊழல் முடைநாற்றம் இறுக்கம்” என்று ஒப்புக் கொள்கிறார் இன்னொரு அலபாமா செனெட்டரான எட். ஹென்றி.

செஸ்சன்ஸின் பணிகளுள் முலாவது பணி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட ஈராக் மற்றும் சிரியா உட்பட, முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ள ஏழு நாடுகளிலிருந்து வரும் புலம்பெயர்ந்தோரை ட்ரம்ப் தடைசெய்ததை பேணுவதாகும். கடந்த வாரம் ட்ரம்ப் தற்காலிக அட்டர்னி ஜெனரல் Sally Yates ஐ பயணத்தடையை ஆதரிக்க மறுத்ததற்காக அவரை பதவியிலிருந்து அகற்றினார். அத்தடை குடும்பங்களைப் பிரிப்பதுடன், மாணவர்கள் கல்லூரிகளில் படிப்பதையும் தொழிலாளர்கள் வேலை எடுப்பதையும் தடுக்கிறது.

வியாழக்கிழமை இரவு, அமெரிக்க மாவட்ட நீதிமன்றம், ட்ரம்ப் ஆணையை தடுக்கும் கீழ் நீதிமன்ற தீர்ப்பை நிலை நிறுத்தியது. அதற்கு ட்ரம்ப் ட்வீட்டரில்: “உம்மை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வேன், எமது தேசம் பணயம் வைக்கப்பட்டிருக்கிறது!” என்றார்.

நீதித்துறையின் தலைவர் என்ற வகையில், அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பலவற்றை மேற்பார்வை செய்கிறார், நடைமுறையில் இவை தேசிய போலீஸ் முகவாண்மையில் அவற்றுள் மத்திய புனாய்வு அமைப்பு (FBI); மதுபானங்கள் பணியகம், புகையிலை, துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள்; அமெரிக்க மார்ஷல் சர்வீஸ்; மத்திய சிறைக் கழகம், மற்றும் போதைப்பொருள் அமலாக்க நிர்வாகம் ஆகிய பலவாகும். இந்த முகவாண்மைகள், சுமார் 113,000 பணியாளர்களில் 90,000ஐ கொண்டிருப்பதுடன் வரவு-செலவுதிட்டத்தின் 27 பில்லியன் டாலர்களை தமது பங்காக எடுக்கின்றன.

இவற்றுடன் கூட, கார்ப்பொரேட்டுக்களாலும் மாநில அரசுகளாலும் மேற்கொள்ளப்படும் மத்திய சட்ட மீறுகையின் சூழ்நிலைகளிலிருந்து, தொழிலாளர்கள், சிறுபான்மையரை பாதுகாக்கும் பணிகளை அவ்வப்போது கொண்டிருக்கும் அலுவலகங்கள் உள்ளன. இவற்றுள் நன்கு அறியப்பட்டவை DOJ இன் மக்கள் உரிமை பிரிவாகும்.

மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு செஸ்சன்ஸின் ஏற்றத்தின்போதெல்லாம் கணிசமான அளவு வரலாற்று விசித்திரம் இருக்கிறது, அவரது பதவியேற்பில் அவர் ஒரு உண்மையை உறுதிப்படுத்துவதாகக் காணப்படுகிறது. அதாவது, “நான் ஒருபோதும் எதிர்பாராத ஏதோ ஒன்று என்வாழ்வில் நிகழும்” என்று அவரே ஒப்புக்கொண்டார்.

செஸ்சன்ஸ் “மாநில உரிமைகள்” என்று அழைக்கப்படுவதற்கு நீண்டகாலம் ஆதரவு கொடுத்துவருபவர் - “தங்களின் மக்களின் ஒடுக்கப்பட்ட பகுதியினரின், அதாவது முதலில் அடிமைகள், பின்னர் குத்தகை பயிர் செய்வோர், இப்பொழுது அனைத்து இனங்களின் தொழிலாளர்கள் என இவர்களின் உரிமைகளை மிதித்துத் துவம்சம் செய்வதற்கு தென்மாநில அரசாங்கங்களின் “உரிமை” க்கான வரலாற்றுரீதியான மறைமுகச்சொல் இதுவகும். இதற்கிடையில், அந்நேரங்களில் நீதித்துறையானது “மாநில உரிமைகள்” என்று கூறிக்கொள்வதற்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் பணியைக் கொண்டிருந்தது.”

உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட அடிமைகள் மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள அவர்களது கூட்டாளிகளின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கங்ககொண்டுள்ளதை வெளிப்படுத்தி ஜனாதிபதி  Ulysses S. Grant இன் கீழ், நீதித்துறையானது 1870ல் உருவாக்கப்பட்டது. கிராண்ட் முன்னாள் கூட்டாட்சி அதிகாரி Amos Akerman ஐ அட்டர்னி ஜெனரலாக முன்மொழிந்தார். இவர் இரண்டே ஆண்டுகளில் Ku Klux Klan உறுப்பினர்களுக்கு எதிராக 3000க்கும் மேலான குற்றச்சாட்டு ஆவணங்களை வைத்தார். பின்னர் கிராண்ட் நிர்வாகத்தில் Akerman பதவி அகற்றப்பட்டதானது, மறுசீரமைப்புக்கு முடிவு கட்டியது மற்றும் பழைய அடிமைமுறையிலான குழு ஆட்சியை பலப்படுத்தியது.

கிட்டத்தட்ட ஒரு நாற்றாண்டுக்கு பின்னர், அட்டர்னி ஜெனரல் ராபர்ட் கென்னடி, பரந்த வெகு ஜன மக்கள் உரிமை இயக்கத்தின் அழுத்தத்தின் கீழ், தென்பகுதி ஆளும் வர்க்கத்தின் வன்முறை எதிர்ப்புக்கு எதிராக கூட்டாட்சி மக்கள் உரிமைகளையும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்களையும் அமல்படுத்துதற்கு மீண்டும் நீதித்துறையைப் பயன்படுத்தினார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, தென் கரோலினாவின் Strom Thurmond தலைமையிலான பிரிவினைவாத அரசியல்வாதிகள் ஜனநாயகக் கட்சியை கைவிட்டுவிட்டு குடியரசுக் கட்சிக்கு தாவினர். அந்நேரம் மக்கள் உரிமைப் போராட்டங்களின் பொழுது Selma மற்றும் Montgomery –யிலும் வசித்துவந்த இளம் Jefferson Beauregard Sessions இந்த வெளியேற்றத்தைத் தொடர்ந்து, 1965 அளவில் ஹண்டிங்டன் கல்லூரியில் குடியரசுக் கட்சியினர் கல்லூரியில் சேர்ந்தார்.

ஆபிரிக்கன் அமெரிக்கர்களிடம் தாம் ஒருபோதும் சட்ட ரீதியான சமத்துவத்திற்கு சமரசம் செய்துகொள்ளமாட்டோம் என்ற தென்பகுதி ஆளும் தட்டின் ஒரு பிரிவை செஸ்சன்ஸ் பிரிதிநிதித்துவம் செய்கிறார். அவர் தமது பதவியை 1981லிருந்து 1994 வரைக்கும் தென்மாவட்டங்களுக்கான அமெரிக்க அட்டர்னி ஜெனரலாக வகித்துவந்தார். இதனை செனெட்டர் Elizabeth Warren ஆல் படிக்கப்பட்டு செனெட் குடியரசுக் கட்சியினரால் அமைதிப்படுத்தப்பட்ட Coretta Scott King பேச்சில் கூறுவதானால், “கறுப்பினக் குடிமக்களால் அளிக்கப்படும் வாக்கு சுந்திரமாக செயற்படுத்துவதை அமைதிப்படுத்தற்கு” எனலாம்.

இடையிட்ட ஆண்டுகளில் செஸ்சன்ஸ் மாறவில்லை. அவர் அலபாமா அட்டர்னி ஜெனரலாக (1994-1996) பின்னர் அமெரிக்க செனெட்டராக (1996-2007) குடியரசுக் கட்சியில் தொடர்ந்து தன்னை வலது புறத்தில் வைத்துக் கொண்ட ஒரு மதிப்பை நிலைநாட்டினார். அவர் மாறாத வகையில் போர், இராணுவவாதம், கூடுதல் போலீஸ் அதிகாரம், கார்ப்பொரேஷன்களின் கட்டுப்படுத்தமுடியா அதிகாரம் ஆகியவற்றிக்கு ஆதரவாகவும் தொழிலாளர், பெண்கள், சிறுபான்மையர், ஒர்பால் ஆண் இணையர், ஓர்பால் பெண் இணையர் மற்றும் புலம்பெயர்ந்தோரின் மிகவும் உரத்த குரலைப் பாதுகாப்பதை எதிர்க்கிறார்.

செஸ்சன்ஸ் மாறியிருக்கவில்லை என்றால், அட்டர்னி ஜெனரலாக அவரது ஏற்றமானது முழு அமெரிக்க ஸ்தாபகத்தின் வலதுபுற விலகலின் வெளிப்பாடாக மட்டுமே பார்க்க முடியும், அது ஜனநாயக உரிமைகள் மீதான ஆழந்த தாக்குதல்களையே முன்கூட்டி படம்பிடித்துக் காட்டுகின்றன.

செஸ்சன்ஸ் நீண்ட காலத்திற்கு முன்பே ஜனநாயக உரிமைகளை செயலூக்கத்துடன் பாதுகாப்பது எதனையும் கைவிட்டுவிட்ட ஒரு அலுவலகத்தைத்தான் பாரம்பரியமாக பெறுவார். பாராக் ஒபாமாவின் கீழான DOJ கடந்த எட்டு ஆண்டுகளில் ஒரு போலீஸ்காரருக்கு எதிராகக் கூட கூட்டாட்சி மக்கள் உரிமை சம்பந்தமான குற்றச்சாட்டை வைக்கவில்லை. இதே காலகட்டத்தில் எண்ணற்ற படுகொலைகள் வீடியோ காட்சிகளாக கூடப்படதிவு செய்யப்பட்டன என்பது கவனிக்கத்தக்கது. மற்றும் ஒபாமாவின் கீழ் 2009லிருந்து 2015வரை வேலைசெய்த அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர், எங்கும், எவரையும் சட்ட ரீதியான கண்ணோட்டமில்லாமல் படுகொலை செய்வதற்கான “உரிமையை” கொண்ட ஜனாதிபதிக்கு போலி சட்ட நியாயமாக செஸ்சன்ஸ்க்காக விட்டுள்ளார். இந்த அதிகாரம்தான் டொனால்ட் ட்ரம்ப் அடிக்கடி பயனபடுத்த விருப்பம் கொண்டுள்ள அதிகாரம் ஆகும்.

WSWS முன்னரே குறிப்பிட்டவாறு, கருவியான ஹோல்டர், செஸ்சன்ஸ்க்கு விட்டுப்போவதில் “அம்பலப்படுத்துபவர்களை, பத்திரிகையாளர்களை இடருக்குள்ளாக்கல்; ஆர்ப்பாட்டக்காரர்கள் போர் எதிர்ப்பு செயற்பாட்டாளர்களை பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு இலக்காக்குதல்; வரையற்ற நிறைவேற்று அதிகாரத்தை உறுதிப்படுத்தல்; அரசாங்க இரகசியங்களை நியாயப்படுத்தல்; புலம்பெயர்ந்தோரை பெரிய அளவில் வெளியேற்றல், சட்டவிரோத உள்நாட்டு உளவுவேலையை விரிவுபடுத்துவதற்கு உதவுதல்; தொழிலாளர்களது கூலிகளை மற்றும் சலுகைகளை வெட்டல்; அமெரிக்க சட்ட அங்கத்திற்குள் எதேச்சாதிகார மற்றும் பாசிச சட்டக் கொள்கைகளை ஊடுருவச்செய்தல் ஆகியன உள்ளடங்குவனவாகும்.

கல்விச்செயலர், Betsy DeVos க்கான ட்ரம்ப்பின் பொறுக்கி எடுப்புக்கு எதிர்ப்பைப் போல, செஸ்சன்ஸ்க்கு எதிரான ஜனநாயகக் கட்சியின் குற்றப்பொறுப்பு, உண்மையான எதிர்க்கட்சி போல் ஜனநாயகக் கட்சிக்குள் மறைந்து கொள்வதைப் போன்றது. உண்மையில் இதுவரை செய்யப்பட்ட ட்ரம்பின் ஒவ்வொரு பிரேரிப்பும் செனெட் குழு, அறைவாரியான வாக்குகள், பெரும்பான்மையாக ஜனநாயகக் கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதாகும்.

வாரனைப் பொறுத்த அளவில், அவ்வம்மையார் தன்மீது சுமத்தப்பட்ட வாய்மூடப் பண்ணும் ஆணையை அவர் எதிர்க்கவில்லை, மற்றெந்த ஜனநாயகக் கட்சி செனெட்டரும் கூட எதிர்க்க்வில்லை. மாறாக, மசாசூசெட்ஸ் செனெட்டர் ட்ரம்ப் கொள்கைகளுக்கு ஒரு கோட்டபாட்டு ரீதியான எதிர்ப்பாளர் எனக் காட்டுவதை உடனடியாகப் பற்றிக் கொண்டார்.

அவ்வம்மையார் அப்படிப்பட்டவர் அல்லர். Warren மற்றும் Sen. Bernie Sanders உள்பட்ட ஜனநாயக் கட்சி செனெட்டர்கள் புது நிர்வாகத்துடன், அவர்களது மைய கொள்கை வேட்கையில் — பொருளாதார தேசியவாதத்திற்கு ஒத்துழைப்பதற்கு “வேலை செய்வதற்கு” அவர்களின் தயார்த்தன்மையை வலியுறுத்தியுள்ளனர். ட்ரம்ப் மீதான அவர்களது தாக்குதலின் பிரதான வழி வலதிலிருந்து வருகிறது, அதாவது ரஷ்யாவுக்கு எதிரன ஒரு மிகவும் போர் மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கக் கோரி வருகின்றது.