ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

BJP gains in Indian state elections leave opposition Congress reeling

இந்திய மாநில தேர்தல்களில் பா.ஜ.க.வின் வெற்றிகள் அதன் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியினை தடுமாற செய்துள்ளது

By Deepal Jayasekera
15 March 2017

இந்தியாவின் ஆளும் கட்சியான இந்துமத மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP), இந்தியாவின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினை கொண்டிருக்கும் வட இந்திய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையை பெற்று ஒரு பெரும் தேர்தல் வெற்றியை பெற்றுள்ளது.

பிப்ரவரி மற்றும் மார்ச் மாத தொடக்கத்தில் மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்ட மற்ற நான்கு மாநிலங்களில் உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. தான் வெற்றிபெற்று அரசாங்கத்தை தலைமையேற்று நடத்தவுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும், ஒரு தசாப்த காலம் பழமைவாய்ந்த கூட்டணி அரசாங்கத்திற்கு இளைய பங்காளியாக இருந்துவந்த பா.ஜ.க. அங்கு ஒரு கடுமையான பின்னடைவால் பாதிக்கப்பட்டது.

இதற்கு மாறாக, ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் கடந்த சனிக்கிழமையன்று எண்ணப்பட்டதில் காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் அதற்கு படுதோல்வியுடனான ஒரு நெருக்கடியே உருவாகியது. இந்திய முதலாளித்துவத்தினால் சமீபகாலம் வரையிலும் விரும்பப்பட்ட ஒரே அரசாங்க கட்சியாக காங்கிரஸ் மட்டுமே இருந்தது, இருப்பினும் உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட இந்திய பெரும்பகுதிகளில் இதன் பின்னர் ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக திகழாது. மணிப்பூரில் தேர்தலுக்கு பிந்தைய சூழ்ச்சிகளின் விளைவுகளை பொறுத்தே, இந்தியாவின் 29 மாநிலங்களுள் 5 அல்லது 6 இடங்களில் மட்டுமே இந்த கட்சி ஆட்சியமைக்கும். இதற்கிடையில் பா.ஜ.க. குறைந்தது 15 மாநிலங்களில் அதிகாரத்தை கைப்பற்றுவதுடன் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 60 சதவிகித மக்களுக்காக பிரதிநிதித்துவப்படுத்துகின்றதும், அத்துடன் இந்தியாவின் தேசிய அரசாங்கத்தை அமைப்பதாகவும் இருக்கிறது.

பிரதம மந்திரி நரேந்திர மோடியின் வலதுசாரி நடவடிக்கையான துரிதப்படுத்தப்பட்ட முதலீட்டாளர் சார்பு "சீர்திருத்தம்" (அதாவது தனியார்மயமாக்கம் மற்றும் சிக்கன நடவடிக்கைகள்) மேலும் இன்னும் உறுதியான வெளியுறவுக் கொள்கை (சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ மூலோபாய தாக்குதலில் ஒரு ஒருங்கிணைப்பு மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான அதிகரிக்கப்பட்ட ஆக்கிரோஷத்தன்மை) போன்ற குறித்த ஒரு பேராதரவுடனான ஒப்புதலாக காட்ட மாநில தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கு பா.ஜ.க. விரைந்து செயல்பட்டது.

உண்மையில், காங்கிரஸ் மற்றும் பல்வேறு சாதி அடிப்படையிலான பிராந்திய கட்சிகள், தாங்களே நவீன தாராளவாத சீர்திருத்தங்களை செயற்படுத்தியுள்ளனர். இவர்கள் பாரிய வறுமை நிலைக்கு தலைமை தாங்குவதுடன், பொருளாதார பாதுக்காப்பின்மையை தீவிரப்படுத்துவதுடன் மற்றும் என்றுமில்லாத சமூக சமத்துவமின்மையை பெருக்கிவருகின்றனர் என்ற நிலையில் அவர்கள் மீதான பொது மக்களின் கோபம் மற்றும் அதிருப்தியினால் ஆதாயம் பெறுவதற்கு முற்றிலும் தகுதியற்றதாகவே பா.ஜ.க. இருந்தது. இரட்டை ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சிகளான மார்க்சிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (Communist Party of India - Marxist), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (Communist Party of India) அவர்களது பங்கிற்கு, பா.ஜ.க.வின் எழுச்சிக்கும் அதிகரித்துவரும் வர்க்க மோதல் தீவிரமயப்படுவதற்கும் பதிலீடாக இந்திய அரசுக்கும், காங்கிரஸ் கட்சி மற்றும் பிற வலதுசாரி எதிர் கட்சிகளுக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணிய செய்வதற்கு அவர்களது முயற்சிகளை இரட்டிப்பாக்குவதன் மூலமாக விடையிறுத்துள்ளனர். இது பா.ஜ.க.வினை ஊக்கப்படுத்தவே இன்னும் கூடுதலாக உதவியது.

மோடியும், அவரது பா.ஜ.க.வும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலுக்கு அவர்களது வலுப்பெற்ற அரசியல் கரங்களை பயன்படுத்தும் என்பதில் கேள்விக்கே இடமில்லை. ஏற்கனவே அரசாங்க வட்டாரங்கள், பன்முக வணிக முத்திரை கொண்ட சில்லறை வணிகத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டினை எளிதாக்கவும், அதிகரிப்பதற்கும் தேவையான மாற்றங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும், அதன்மூலம் வால்மார்ட் (Walmart), கர்ஃபூர் (Carrefour) போன்ற சிறுவணிக நிறுவனங்கள் இந்தியாவிற்குள் தீவிரமான விரிவாக்கத்தை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என்று Times of India நாளிதழுக்கு தெரிவித்துள்ளனர்.

தற்போது நடந்து முடிந்துள்ள மாநில தேர்தல்களில், அதிலும் குறிப்பாக உத்திரப்பிரதேசத்தில் (UP), அங்கு ஒரு முதலமைச்சர் வேட்பாளரை தேர்தலில் நிறுத்துவதற்கு கூட பா.ஜ.க. எந்தவொரு திட்டமும் கொண்டிராதபோதும், மோடி தானே கட்சியின் "நட்சத்திர" பிரச்சாரகராக இருந்தார்.

மோடி மற்றும் தேசிய பா.ஜ.க. தலைமை மாநில தேர்தல்களில் மிகவும் அதிகமாக முதலீடு செய்தது, ஒரு பெரும் அரசியல் பரிசான உத்திரப்பிரதேச அரசாங்கத்தினை கட்டுப்படுத்துவதற்கு மட்டுமல்ல. பல்வேறு மாநில சட்டமன்றங்களிலுள்ள கட்சியின் வலிமையானது ஜுலையில் இந்திய ஜனாதிபதி தேர்தல் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் காலப்போக்கில், தேசிய பாராளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் (Rajya Sabha) மாற்றங்களை உருவாக்கலாம். பா.ஜ.க. தற்போது மாநிலங்களவையில் தேவையான பெரும்பான்மையுடன் இல்லாததினால், அதன் பெருவணிக ஆதரவாளர்களினால் மிகவும் ஆவலுடன் கோரிக்கைவிடப்பட்ட சில "சீர்திருத்தங்களுக்கு" அது அழுத்தம் கொடுக்க முடியாத நிலையிலிருந்தது. இந்த சீர்திருத்தங்களில், எளிதாக தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதற்கு ஏற்ற வகையில் தொழிலாளர் சட்டங்களை மாற்றுவது, ஒழுங்கமைக்கப்பட்ட துறை என்று அழைக்கப்படுவதில் ஆலைகளை மூடுவது, மேலும் பெருவணிகத் திட்டங்களுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவது மீதான தடைகளை அகற்றுவது போன்றவை அடங்கும்.

2014 தேசிய தேர்தல்களில் இருந்ததுபோலவே, வளர்ச்சிக்கும், நவீனமயமாக்கலுக்கும் உறுதியளித்து வருவதுடன், மேலும் பரந்தளவில் வெகுஜனத்தை வறுமையிலிருந்தும், வறிய தோற்றத்திலிருந்தும் வெளிக்கொணர்ந்து உயர்த்துவதற்கு அதன் எதிர் கட்சிகள் அப்பட்டமாக தோல்வியுற்றதை சுட்டிக்காட்டியும் பா.ஜ.க. தன்னை பொருளாதார "வளர்ச்சிக்கான," கட்சியென்று காட்டிக்கொள்கிறது. காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் பிரதம மந்திரிகளின் மகன், பேரன் மற்றும் பூட்டனாக இருக்கின்றவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய செய்தி தொடர்பாளரான ராகுல் காந்தியின் வம்சாவளியுடன் அவர்களை வேறுபடுத்திக்காட்டும் விதமாக வெளிக்காட்டிக்கொள்ளப்படும் மோடியின் எளிமையான தோற்றம் வரையிலும் இந்த விளையாட்டு உள்ளது.

அதே நேரத்தில், பா.ஜ.க. மிகத்தெளிவாக முஸ்லீம்-விரோத இனவாத வேண்டுகோள்களை விடுக்கிறது. அயோத்தியில் தரைமட்டமாக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் ஒரு இந்துமத கோயில் கட்டுவதற்கும், பசுவதையை தடைசெய்வதற்கும் இந்துமத உரிமைகள் கோரிக்கைவிடுப்பதை பா.ஜ.க. தலைவர் அமித் ஷா உயர்வாக பாராட்டினார். பிரச்சாரத்தின் முதல் வாரங்களில், பா.ஜ.க.வும் பெருமளவு சட்டவிரோத, மற்றும் பாகிஸ்தானுள்ளே சிறப்பு அதிரடிப்படையினரின் பொறுப்பற்ற தீடீர் தாக்குதல்களுக்கும் உத்திரவிட்டிருந்தது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது குறித்து மோடி மற்றும் பா.ஜ.க.வின் கீழ் இந்தியா ஒரு எழுச்சிபெற்றுவரும் இராணுவ மற்றும் பெரும் சக்தியாக உள்ளது என்று கூறுகிறது.

ஆனால் உத்திரப்பிரதேசத்தில், வேலைகளை உருவாக்கவும், மின்சாரம் வழங்கவும், மற்றும் வறுமையை குறைப்பதற்கும் சாதி அடிப்படையிலான சமாஜ்வாதி கட்சி அரசாங்கம் அதன் கடமையை செய்யதவறியது குறித்த பரந்த கோபமே அதன் முறையீட்டின் குவிமையமாக இருந்தது.

காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி ஒன்றை அமைப்பதன் மூலமாக இதற்கு சமாஜ்வாதி கட்சி (Samajwadi Party-SP) விடையிறுத்தது. "வளர்ச்சியை உள்ளடக்கிய" ஒரு பாதுகாவலனாக காங்கிரஸ் கட்சி தன்னை காட்டிக்கொள்கிறது, ஆனால் உண்மையில் சமூகரீதியிலான பிற்போக்குத்தனம், முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்கள், மேலும் இந்தியாவிற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையே ஒரு மூலோபாய கூட்டு பங்காண்மையை ஏற்படுத்திக் கொள்வது, இவற்றின் ஊடாக கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலத்தை கடத்துவதில் பெருமளவு கனமான பளு தூக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

பரந்த பட்டினி மற்றும் சமூக சீரழிவின் மூலமாக அழிவுக்குட்பட்ட ஒரு நாடான இந்தியாவில் காணப்படும் பிரச்சனைகளுள் உத்திர பிரதேசத்தின் சமூக-பொருளாதார நிலைமைகள் மிகவும் மோசமானவையாக இருக்கின்றன. உலக வங்கி மதிப்பீடுகளின்படி, உ.பி. மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பேர் ஒரு நாளைக்கு ஒரு அமெரிக்க டாலருக்கும் (US $1) குறைவான தொகையில் வாழ்க்கை நடத்துகின்றனர். தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் (National Sample Survey Organization-NSSO) ஒரு சமீபத்திய அறிக்கை, உ.பி.இல் பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் (15-35 வயதிற்கு இடைபட்டவர்கள்) வேலையற்றவர்களாக உள்ளனர் என்று மதிப்பிட்டுள்ளது.

2014 தேசிய தேர்தல்களில், உ.பி. மக்களின் மொத்த வாக்குகளில் 40 சதவிகிதத்திற்கும் சற்றே குறைந்த வாக்குகளை பெற்று மொத்தம் 403 சட்டமன்ற தொகுதிகளுள் 312 இனை பா.ஜ.க. கைப்பற்றியதன் மூலமாக அதன் வெற்றியை மீண்டும் அங்கு தக்கவைத்தது. சமாஜ்வாதி கட்சி (SP) அதன் சட்டமன்ற பிரதிநிதித்துவங்கள் 224 லிருந்து 47 ஆக சரிவுற்றதை கண்டனர், அதேவேளையில் காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் 28 லிருந்து வெறும் 7 ஆக குறைந்துவிட்டது.

மற்றொரு முக்கிய நிகழ்வாக, தலித்துக்கள் மற்றும் மற்ற பொருத்தமற்ற விகிதாசாரத்தில் ஏழ்மை பீடித்த குறைந்த சாதி குழுக்களின் (முன்னாள் தீண்டத்தகாதவர்கள்) பிரதிநிதியாக தன்னை காட்டிக்கொள்ளும் பகுஜன் சமாஜ் கட்சியின் (Bahujan Samaj Party-BSP) வறிய தோற்றம் இருந்தது. பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் 2002 ஆம் ஆண்டு முதல் உ.பி. மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர், ஆனால், முந்தைய தேர்தலில் 80 இடங்களை வெற்றிகொண்ட பகுஜன் சமாஜ் கட்சி, அதிலிருந்து குறைந்து வெறும் 19 இடங்களையே தற்போது வெற்றிகொண்டது.

SP மற்றும் BSP கட்சிகளுக்கு குழிபறிக்கும் விதமாக, தலித் மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோர் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் சாதி பிளவுகளை பா.ஜ.க. சுரண்டியதுடன், தேர்தல் வேட்புமனுதாக்கல் செய்வதில் அவர்களது "நியாயமான பங்கு" மற்றும் லக்னோவில் SP மற்றும் BSP அரசாங்கங்களிடமிருந்து அரசாங்க ஆதரவும் கிடைக்கப்பெறாதிருந்த கீழ்சாதி குழுக்களுக்கு பிரதிநிதித்துவம் செய்வதற்கு உரிமை கோருகின்ற உள்ளூர் வட்டார பிரமுகர்களை வேட்பாளர்களாக நியமித்திருந்தது.

அண்டை மாநிலமான உத்தரகண்டில், பா.ஜ.க.வினால் காங்கிரஸ் கட்சி அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டது. 46 சதவிகிதம் பதிவான வாக்குகளுடன், முந்தைய மாநில தேர்தல்களில் பெற்றிருந்த 26 இடங்களிலிருந்து உயர்ந்து தற்போது பா.ஜ.க. 57 இடங்களை வெற்றிகொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அதன் தொகுதி எண்ணிக்கை 21 லிருந்து வெறும் 11 க்கு வீழ்ச்சியடைந்ததை கண்டது. அதிலும் தற்போது அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் ஹரிஷ் ராவத் கூட மறு தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

சிறிய வடகிழக்கு தொகுதியான மணிப்பூரில், காங்கிரஸ் கட்சியின் தொகுதி எண்ணிக்கை 28 லிருந்து 19 க்கு சரிவடைந்தது. முந்தைய மணிப்பூர் மாநில தேர்தலில் எந்தவொரு இடத்தையும் வெற்றிகொள்ளாத பா.ஜ.க. 21 இடங்களை கைப்பற்றியதுடன், பாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் உத்தேசத்தில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஒருவர் உட்பட பிற கட்சிகளிடமிருந்து போதுமான ஆதரவினை பெறுவதற்கு தற்போது அணிதிரட்டவேண்டுமென்று கோருகின்றனர்.

கோவாவின் ஒரு சிறிய முன்னாள் போர்த்துகீசிய காலனியில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க முடிந்தது. ஐந்தாண்டு கால பழமைவாய்ந்த பா.ஜ.க.வின் மாநில அரசாங்கத்துடனான அதிருப்திகளை சுரண்டிக்கொண்டு, 40 உறுப்பினர்களை கொண்ட மாநில சட்டமன்றத்தில், அதுவும் அதன் 2012 வாக்கு எண்ணிக்கையை போல் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வாக்குகளுடன் 17 இடங்களை வெற்றிகொண்டது. ஆனால், மத்திய அரசாங்கத்தினது அதிகாரத்தையும் மற்றும் அதன் சொந்த போர் நோக்கங்களையும் பயன்படுத்தி பா.ஜ.க. விரைவில் பாதிப்பை நிரப்பியது என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. பா.ஜ.க. சிறு கட்சிகளிடமிருந்து ஆதரவிற்காக அணிதிரண்டது, மற்றும் மனோகர் பாரிக்கரிடம் அவரது பாதுகாப்பு அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கவும், மேலும் அவர் 2000 முதல் 2005 வரையிலும், மார்ச் 2012 முதல் நவம்பர் 2014 வரையிலும் அவர் வகித்திருந்த பதவியான கோவா முதலமைச்சர் பதவியினை மீண்டும் ஏற்றுக்கொள்ளவும் கூறியது.

சுமார் 30 மில்லியன் மக்கள் தொகையுடன் ஐந்து மாநிலங்களுள் இரண்டாவது பெரிய மாநிலமாக தேர்தல் நடைபெற்ற பஞ்சாபில் மட்டும் பா.ஜ.க.வுக்கு முடிவுகட்டி காங்கிரஸ் முன்னிலை வகிக்க முடிந்தது. மொத்தம் 117 உறுப்பினர்கள் கொண்ட மாநில சட்டமன்றத்தில் காங்கிரஸ் 77 இடங்களை வெற்றிகொண்ட நிலையில், அங்கிருந்த சீக்கிய வகுப்புவாத ஷிரிமோனாய் அகாலி தளம் (Shrimonai Akali Dal-SAD) மற்றும் பா.ஜ.க. வும் இணைந்த ஒரு கூட்டணி அரசாங்கத்தின் பத்தாண்டு கால ஆட்சியினை முடிவுக்கு கொண்டுவந்தது. SAD 41 இடங்களை இழந்து, 15 இடங்களுடன் விடப்படுகிறது, அதே நேரத்தில் பா.ஜ.க. 5.4 சதவிகித மக்கள் வாக்குகளை மட்டும் பெற்று வெறும் 3 இடங்களை வெற்றிகொண்டது.

மோடி அரசாங்கத்தின் பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கையினால் வேலைவாய்ப்பு நெருக்கடியும், பொருளாதார சீர்குலைவும் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும், ஸ்ராலினிச இடது முன்னணி அதன் 2012 ஆண்டின் பரிதாபகரமான செயல்பாட்டை போன்றே மீண்டும் ஐந்து மாநில தேர்தல்களில் ஒரேயொரு இடத்தை வெற்றிகொள்ளவும் தவறிவிட்டது.

உ.பி. மற்றும் பஞ்சாபின் தொழில் நகரங்களில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக ஸ்ராலினிஸ்டுக்கள் ஒரு காலத்தில் இருந்தனர். ஆனால் இந்தியா எங்கிலும் பல்வேறு வலதுசாரி சாதிய மற்றும் பிராந்திய கட்சிகளுடனான கூட்டணிகள் உட்பட சாதிய அடிப்படையிலான அரசியல்கள் மீதான அவர்களது வளர்ச்சி, மற்றும் பெருவணிக "சீர்திருத்த" செயல்களை நடைமுறைப்படுத்துவதில் அவர்களது பங்கு ஆகியவற்றின் விளைவாக அவர்களுக்கான ஆதரவு வற்றிப்போனது. 1991ம் ஆண்டு முதல், இந்தியாவின் அடுத்தடுத்த மத்திய அரசாங்கங்களுக்கு, அதிலும், உலக மூலதனத்திற்கு இந்தியாவை ஒரு மலிவு-உழைப்பு புகலிடமாக உருவாக்குகின்ற ஆளும் உயரடுக்கின் திட்டநிரலை பின்பற்றி வருகின்ற காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கங்களுக்கே பெரும்பாலும் ஸ்ராலினிஸ்டுகள் ஆதரவளித்து வந்துள்ளனர். மேலும், இடது அரசாங்கம் அமைத்துள்ள மாநிலங்களில், ஸ்ராலினிஸ்டுக்கள் தாங்களே "முதலீட்டாளர் சார்பு" கொள்கை என விவரித்துகொண்டதையே அங்கு நடைமுறைப்படுத்தின.