ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ICFI campaign to free Maruti Suzuki workers
Sri Lankan SEP/IYSSE to hold a picketing and a public meeting in Colombo

மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்வதற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரச்சாரம்

இலங்கை சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. கொழும்பில் மறியல் போராட்டமும் கூட்டமும் நடத்தவுள்ளன

29 March 2017

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ) அமைப்பும், இந்தியாவில் போலி வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்தவதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுத்துள்ள பிரச்சாரத்தின் பாகமாக, கொழும்பில் ஒரு மறியல் போராட்டத்தையும் பொதுக் கூட்டத்தையும் நடத்தவுள்ளன. மார்ச் 31, வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு கொழும்பு கோட்டை இரயில் நிலையத்தின் முன்பாக மறியல் போராட்டம் இடம்பெறும். ஏப்பிரல் 4, செவ்வாய் கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் பொதுக் கூட்டம் நடைபெறும்.

வட இந்திய மாநிலமான ஹரியானாவில் மனேசரில் உள்ள மாருதி சுசூகி கார் ஆலையை சேர்ந்த பதின்மூன்று தொழிலாளர்களுக்கு இந்திய நீதிமன்றம் ஒன்றினால் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதைவிட குறைந்த குற்றச்சாட்டுக்களுக்காக அதே ஆலையை சேர்ந்த இன்னும் 18 பேருக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்ட கொடூரமான தண்டனை, இந்தியாவின் பிரதான அரசியல் கட்சிகளான ஆளும் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) மற்றும் காங்கிரஸ் கட்சியினதும் முழு ஒத்துழைப்புடன், ஜப்பானியருக்கு சொந்தமான கார் கம்பனி, போலீஸ் மற்றும் நீதித்துறை அதிகாரிகளாலும் முன்னெடுக்கப்பட்ட இழிவான சோடிப்பு வழக்கின் விளைவாகும். அந்த தொழிலாளர்கள் ஜப்பானீய கூட்டுத்தாபனம் கடைப்பிடிக்கும் கொத்தடிமை வேலை நிலைமைகளுக்கு எதிராக வேலைநிறுத்தங்கள், ஆலை உள்ளமர்வுகள், ஆர்ப்பாட்டங்கள் உட்பட மாருதி சுசுகி தொழிலாளர்கள் நடத்திய தொடர் போராட்டத்தில் போர்க்குணத்துடன் பங்கெடுத்ததாலேயே இவ்வாறு போலி வழக்கில் சிக்கவைக்கப்பட்டனர்.

மாருதி சுசுகி தொழிலாளர்கள் மீதான ஜோடிப்பு வழக்கில், கம்பனியும் போலீசும் 18 ஜூலை 2012 அன்று நிர்வாகத்தால் தூண்டி விடப்பட்ட ஒரு மோதல் மற்றும் நிறுவனத்தின் மனித வளங்கள் முகாமையாளர் அவனிஷ் குமார் தேவ் கொல்லப்பட்ட தீ விபத்து சம்பவத்தையும் பற்றிக்கொண்டன. 13 தொழிலாளர்களும் அவரது மரணத்துக்கு காரணமானவர்களாக குற்றஞ்சாட்டப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும், அவர்களுக்கும் அந்த சம்பவங்களுக்கும் இடையிலான எந்த தொடர்பும் நிரூபிக்கப்படவில்லை. போலீஸ், கம்பனி நிர்வாகத்துடன் வேண்டுமென்றே கூட்டுச் சேர்ந்து செயற்பட்டதுடன் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் ஜோடிக்கப்பட்டவை என்பதை தனது சொந்த விசாரணையில் கண்டுபிடித்திருந்த போதும், நீதிமன்றம் அவற்றை வேண்டுமென்ற புறக்கணித்து 31 தொழிலாளர்களுக்கும் தண்டனை விதித்தது.

மோசமான இந்திய சிறைகளுக்குள் மாருதி சுசுகி தொழிலாளர்களை தள்ளிவிடுவதன் மூலம் இந்திய ஆளும் வர்க்கமானது தொழிலாளர்கள் மீது திணிக்கப்படும் கொடூரமான வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் எந்தவொரு சவாலுக்கும் எதிராக நாடு பூராவும் தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்க எதிர்பார்க்கின்றது. அத்துடன் எந்தவொரு கொடூரமான அடக்குமுறை நடவடிக்கைகளின் மூலமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சார்பில் கொத்தடிமை ஆட்சியை பேணிக் காக்க தனது தயார் நிலையை உதரவாதப்படுத்துகிறது.

மாருதி சுசுகி தொழிலாளர்கள் மீதான போலி வழக்கை தோற்கடிக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்தியா, தெற்காசியா மற்றும் உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்தின் தொழிற்துறை மற்றும் அரசியல் சுயாதீன பலத்தை அணிதிரட்ட போராடுகின்றது. போலி வழக்கில் சிக்கியுள்ள அனைத்து தொழிலாளர்களையும் உடனடியாக விடுதலை செய்யவும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை இரத்துச் செய்யவுமான போராட்டத்தை சர்வதேச தொழிலாள வர்க்கம் போராட வேண்டும் என அது அழைப்பு விடுக்கின்றது. தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தின் ஊடாக மட்டுமே முதலாளித்துவ கூட்டுத்தாபனங்களாலும் அவற்றுக்கு சேவகம் செய்யும் முதலாளித்துவ அரசாங்கங்களாலும் திணிக்கப்படும் அத்தகைய ஒடுக்குமுறைகளை தோற்கடிக்க முடியும்.

சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டத்தில், மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்வதற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரச்சாரம் மற்றும் அதை வழிநடத்தும் அரசியல் வேலைத் திட்டம் மற்றும் முன்நோக்கின் முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்படும். அனைத்துலகக் குழுவின் பிரச்சாரத்துக்கு ஆதரவளிப்பதோடு ஏப்பிரல் 4 கொழும்பில் நடக்கவுள்ள எமது கூட்டத்தில் பங்குபற்றுமாறு நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மறியல் போராட்டம்

மார்ச் 31, வெள்ளி, பிற்பகல் 4.00 மணி

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால்.

**********  *************  *********  *******************  *************  *********

பொதுக் கூட்டம்

ஏப்பிரல் 4, செவ்வாய் கிழமை, பிற்பகல் 4.00 மணி

கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம்.