ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

What lies behind the German elite’s celebration of Macron?

ஜேர்மன் உயரடுக்கு மாக்ரோனை கொண்டாடுவதன் பின்னணி என்ன?

By Johannes Stern
26 April 2017

பிரான்சின் ஜனாதிபதி தேர்தலில் இமானுவேல் மாக்ரோனின் வெற்றி ஜேர்மன் ஆளும் வர்க்கத்திற்குள் கண்கூடாக ஒரு கொண்டாட்ட அலையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

மாக்ரோன் இரண்டாம் இடத்தின் வேட்பாளரான தேசிய முன்னணியின் நவ-பாசிச மரீன் லு பென் ஐ விட சற்றே முன்னேறி இருப்பதாக காட்டிய முதல் உத்தேச கணிப்புகள் ஞாயிறன்று மாலை வெளியான பின்னர் உடனடியாக, ஜேர்மன் அரசு செய்தி தொடர்பாளர் ட்வீட்டரில் எழுதினார், “ஒரு பலமான ஐரோப்பிய ஒன்றியம்+சமூக சந்தை பொருளாதாரத்திற்கான அவரது போக்குகளுடன் இமானுவேல் மாக்ரோன் வெற்றிகரமாக வந்திருப்பது நல்லது. வரவிருக்கும் இரண்டு வாரங்களுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்,” என்றார்.

ஜேர்மனியின் நாடாளுமன்ற வெளியுறவு விவகார கமிட்டியின் தலைவர் நோர்பேர்ட் ரோட்ஜன் (கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள்) குறிப்பிடுகையில், “ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவிற்கு இதை விட சிறந்தது இருக்க முடியாதென நான் கருதுகிறேன். மாக்ரோன் ஜனாதிபதி ஆவார் என்று நாம் நம்பலாமென நினைக்கிறேன்,” என்றார்.

வெளியுறவுத்துறை அமைச்சரும் துணை சான்சிலருமான சமூக ஜனநாயக கட்சியின் சிங்மார் காப்ரியல் மத்திய கிழக்கிற்கான அவரது மூன்று நாட்கள் விஜயத்தின் போது அறிவிக்கையில், “தேர்தலில் இமானுவேல் மாக்ரோன் முன்னிலையில் இருப்பது நிச்சயமாக எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற எல்லா வேட்பாளர்களைக் காட்டிலும் அதிக முடிவுகளைப் பெற்றுள்ள அவர் இப்போது இரண்டாவது சுற்றுக்குச் செல்வார், அவர் புதிய பிரெஞ்சு ஜனாதிபதி ஆவார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்,” என்றார். மாக்ரோனை "தொடர்ந்து ஆதரிக்க" அவரால் "தனிப்பட்டரீதியில் ஆனமட்டும் அனைத்தும் செய்வதாக" தெரிவித்தார். அவர் "ஒரு சிறந்த ஜனாதிபதியாக" விளங்குவார், மேலும் அவர் "ஒரு நல்ல நேசமான மனிதரும் ஒரு நல்ல நண்பரும் கூட,” என்றார்.

எதிர்கட்சிகள் என்றழைக்கப்படும் கட்சிகளும் ஷாம்பெயின் மூடிகளைத் திறந்தன. பசுமை கட்சி தலைவர் Cem Özdemir ட்வீட்டரில், “நன்றி, #பிரான்ஸ்! நன்றி! இரண்டாம் சுற்றுக்கு செல்வதற்காக! இமானுவேல் மாக்ரோனுக்கு வாழ்த்துக்கள்!” என்று எழுதி மாக்ரோனை வாழ்த்தினார். சுதந்திர சந்தை ஜனநாயகவாதிகள் (FDP) கட்சியின் தலைவர் கிறிஸ்டைன் லிண்ட்னெர், “ஐரோப்பாவிற்கான ஒரு சமிக்ஞை, புதுப்பித்தலின் ஒரு சமிக்ஞை. இமானுவேல் மாக்ரோன் ஜேர்மனிக்கும் தைரியத்தை வழங்குகிறார்,” என்று எழுதினார்.

முதல் சுற்றில் "இடது" தேசியவாத ஜோன்-லூக் மெலேன்சோனை ஆதரித்த இடது கட்சி, மாக்ரோனின் வெற்றியை வலியுறுத்துவது மேற்கொண்டும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்களைச் சீரழிப்பதையே அர்த்தப்படுத்தும் என்பதை அறிந்திருந்தும் கூட, அவர்கள் இப்போது மாக்ரோனின் வெற்றியையே வலியுறுத்தி வருகிறார்கள். இடது கட்சி துணை-தலைவர் பெர்ன்ட் றிக்ஷிங்கர் ட்வீட்டரில் குறிப்பிடுகையில், “கடுமையானது: #மாக்ரோனுக்கு ஆதரவு அவசியம் ஏனென்றால் அவர் #லு பென்னுக்கு எதிராக நிற்கிறார், ஆனால் அவர் கோரிக்கைகள் முந்தைய அவலத்தை மாற்றிடாமல் தொடர்கிறது,” என்று எழுதினார்.

ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தேசியவாதம் மற்றும் இனவாதத்திற்கான அவர்களின் எதிர்ப்பு என்பதை மேற்கோளிட்டு மாக்ரோனுக்கான அவர்களின் ஆதரவை பகிரங்கமாக நியாயப்படுத்தி வருகின்றனர். காப்ரியல் விவரித்ததைப் போல, “முடிவைக் குறித்து" அவருக்கு மகிழ்ச்சியாக உள்ளது ஏனென்றால் மாக்ரோன் நிச்சயமாக "இரண்டாம் சுற்றில் வலதுசாரி தீவிரவாதம் மற்றும் வலது சாரி வெகுஜனவாதம், மற்றும் ஐரோப்பியர்கள் எதிரான எதிர்ப்பைக் கடந்து" வருவார்.

இந்த ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் யாரை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்? யதார்த்தத்தில், மாக்ரோன் 2016 வரையில் பிரான்சுவா ஹோலாண்டின் கீழ் வெளியேறவிருக்கும் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தை சேர்ந்தவராக இருந்தார் என்கின்ற நிலையில், அக்கட்சியின் கீழ் படிப்படியாக தேசிய முன்னணியின் கொள்கைகளேயே ஏற்றிருந்தார். நவம்பர் 2015 பாரீஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர், ஹோலாண்டு லு பென்னை எலிசே மாளிகைக்கு வரவழைத்ததுடன், அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்குத் தடைவிதிக்கும் ஓர் அவசரகால நெருக்கடி நிலையை திணித்தார். அதனையடுத்து சோசலிஸ்ட் கட்சி குடியுரிமையைப் பறிக்கும் ஒரு தீர்மானத்தை பிரெஞ்சு அரசியலமைப்பில் சேர்க்கும் நோக்கத்தைப் பின்தொடர்ந்தார், இந்த சட்டபூர்வ முறை தான் விச்சி ஆட்சியின் கீழ் எதிர்ப்பு தலைவர்களை தொல்லைக்கு உட்படுத்தவும் மற்றும் யூதர்களை படுகொலை முகாம்களுக்கு அனுப்பவும் அடித்தளத்தை வழங்கியது.

ஜேர்மனியின் ஸ்தாபக கட்சிகள் வலதுசாரி தீவிரவாத கொள்கைகளுக்கு மறுவாழ்வளிக்க அதேபோன்ற பாத்திரம் வகித்து வருகின்றன. அவை இரண்டு விதத்தில் ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியினது வளர்ச்சி பொறுப்பாகின்றன. முதலாவதாக, பல தொழிலாளர்களை விரக்திக்கு இட்டுச் சென்றுள்ள துயர்மிகுந்த சமூக நிலைமைகளை அவை உருவாக்கி இருப்பதுடன், அவர்களை சுரண்டுவதற்கான வலதுசாரி வாய்வீச்சுக்கு உதவியுள்ளன. இரண்டாவதாக, ஐரோப்பாவில் ஆழமடைந்து வரும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகளின் கீழ், அவை தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த மற்றும் அவர்களது சொந்த ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்காக முன்பினும் அதிகமாக வெளிநாட்டவர் விரோத மனோபாவம் மற்றும் தேசியவாதத்தைப் பகிரங்கமாக ஊக்குவிக்கின்றன.

மாக்ரோன் ஏன் பேர்லினில் ஒரு முற்போக்கு இரட்சகராக பாராட்டப்படுகிறார் மற்றும் மே 7 இல் இரண்டாம் சுற்று நடப்பதற்கு முன்னரே வெற்றியாளராக முடிசூடப்படுகிறார்?

ஒரு விடயத்தைப் பொறுத்த வரையில், முன்னாள் ரோத்ஸ்சைல்ட் வங்கியாளரும் வெளியேறவிருக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி ஹோலாண்டின் கீழ் பொருளாதார அமைச்சருமான மாக்ரோன், ஐரோப்பிய நிதிய மூலதன நலன்களுக்கு மிகவும் வெளிப்படையாக வக்காலத்து வாங்குபவர் என்பதோடு, இவர் பேர்லினால் கோரப்பட்ட சிக்கன கொள்கைகளை பிரான்சில் தீவிரப்படுத்துவதற்கும், புரூசெல்ஸால் கோரப்பட்டதை ஐரோப்பா எங்கிலும் தீவிரப்படுத்துவதற்கும் முறையீடு செய்து வருகிறார்.

திங்களன்று ஜேர்மன் டாக்ஸ் பங்குச்சந்தை 12.398 புள்ளிகளுடன் சாதனையளவிலான உயரத்தை எட்டியது குறிப்பிடத்தக்கதாகும். டோச்ச சொத்து நிர்வாக நிறுவனத்தின் தலைமை முதலீட்டு மூலோபாயவாதி Stefan Kreuzkamp கூறுகையில், “இந்த முடிவுக்குப் பின்னர் நான் கூறுவது என்னவென்றால், பிரான்ஸ் வாழ்க! ஐரோப்பாவும் வாழும். ஐரோப்பிய பங்குகளும் தான்,” என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

உலகளாவிய சக்தியாக பாத்திரம் வகிக்க பேர்லினில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் மேலாதிக்கம் செலுத்துவதற்கான ஜேர்மன் ஆளும் உயரடுக்கின் அறிவிக்கப்பட்ட குறிக்கோள் இரண்டாவது காரணமாகும். “நாம் கூட்டாக, குறிப்பாக ஜேர்மனியும் பிரான்சும் சேர்ந்து, ஐரோப்பாவை உலகின் உண்மையான நடவடிக்கையாளராக ஆக்கினால், நாம் மட்டுமே செல்வாக்கு கொண்டிருக்கலாம்,” என்று முதல் சுற்று தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக ஜேர்மன் ஜனாதிபதியும் மற்றும் சமூக ஜனநாயக கட்சியின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் பிரெஞ்சு பத்திரிகை Sud Ouest உடனான ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய இராணுவவாதத்திற்கு வக்காலத்து வாங்கும் ஒருவராக, மாக்ரோன் இத்தகைய வெறித்தனமான திட்டங்களில் ஒரு கூட்டாளியாவார். டொனால்டு ட்ரம்பின் ஆக்ரோஷமான "அமெரிக்கா முதலில்" கொள்கையைக் குறிப்பிடும் விதத்தில், “அமெரிக்காவின் புதிய நோக்குநிலை" நிலைமைகளின் கீழ், “ஒரு ஐக்கியப்பட்ட ஐரோப்பா முன்பினும் அதிக முக்கியமாகிறது,” என்பதை ஸ்ரைன்மையர் குறிப்பிட்டார். “பிரான்சில் தேசியவாத மற்றும் வெகுஜனவாத கட்சிகள் விரும்புவதைப் போல,” ஐரோப்பா ஐக்கியப்பட தவறினால், “நாம் நடவடிக்கையாளர்களாக இருக்க மாட்டோம், மாறாக ஏனைய சக்திகளின் கைப்பாவைகளாக இருப்போம்,” என்று எச்சரித்தார்.

ஆனால் அனைத்திற்கும் மேலாக, ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்திற்காக அஞ்சுகிறது. அதன் தற்போதைய பதிப்பில், ஜேர்மன் வார சஞ்சிகை Der Spiegel, “அந்நாட்டின் [பிரான்சின்] அமைப்புகள் நிர்வாகிகளின் இலாயக்கற்ற தன்மையால் புரட்சிக்கு முந்தைய நிலைமைக்குள் சூழ்ச்சி" செய்துள்ளனவா என்ற கேள்வியில் ஒருங்குவிந்திருந்தது. "இன்று ஒரு அரசாக அழைக்கப்படுவது ஏற்கனவே அரசர்கள் கால உலகின், பிரெஞ்சு புரட்சிக்கு முந்தைய அழுகி போயிருந்த பண்டைய ஆட்சியின் (Ancien Regime) எச்சசொச்சங்களா," என்பதில் ஒருங்குவிந்திருந்தது.

உண்மையில் முதலாளித்துவ வர்க்க நிலைமை மிக மோசமான உள்ளது—ஒரு "புரட்சிக்கு முந்தைய நிலைமை!” க்குள் பிரான்சில் சூழ்ச்சிகள் செய்துள்ள "இலாயக்கற்ற நிர்வாகிகளில்" அவரும் ஒருவர் என்ற போதினும், முதலாளித்துவ வர்க்கம் மாக்ரோனைச் சார்ந்திருக்கிறது.

மக்களை நம்ப வைக்க இடது கட்சி என்ன செய்ய விரும்புகிறதோ அதற்கு நேரெதிராக, இரண்டாம் சுற்று தேர்தலில் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்திற்கு அங்கே எந்த குறைந்த தீய சக்தியும் இருக்கப் போவதில்லை. பிரெஞ்சு தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் இரண்டு வேட்பாளர்களுமே போர் மற்றும் பிரதான சமூக தாக்குதல்களுக்காக போட்டியிடுகிறார்கள். மாக்ரோன் குறைந்தபட்சம் இப்போதைக்கு, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடனான போர் மற்றும் வர்த்தக போருக்குத் தயாரிப்பு செய்யும் ஒரு ஜேர்மன் மேலாதிக்கம் கொண்ட இராணுவ ஒன்றியமாக ஐரோப்பிய ஒன்றியத்தை மாற்றுவதை ஆதரிக்கின்ற நிலையில், லு பென் எதிர்விரோத தேசிய அரசுகளுக்குள் ஐரோப்பாவைப் பிளவுபடுத்துவதற்காக போட்டியிடுகிறார், இது இறுதியில் போர் என்பதையே அர்த்தப்படுத்தும்.

ஒரு சோசலிச அடித்தளத்தில் ஐரோப்பாவை ஐக்கியப்படுத்துவதே மீண்டும் காட்டுமிராண்டித்தன நிலையடைவதைத் தடுப்பதற்கான ஒரே வழியாகும். பிரான்சில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியை (Parti de l’égalité Socialiste – PES) கட்டுவது இதற்கு அவசியமாகும்.