ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ICFI supporters in India call meeting on “World War and the Russian Revolution”

"உலகப் போரும் ரஷ்ய புரட்சியும்" என்ற கூட்டத்திற்கு இந்திய ICFI  ஆதரவாளர்கள் அழைப்பு

22 ஏப்ரல் 2017

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய ஆதரவாளர்கள், மே 1 அன்று கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் "உலகப் போர் மற்றும் ரஷ்ய புரட்சி" என்ற தலைப்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளனர். இந்த நிகழ்வானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் நினைவு நாள், அக்டோபர் 1917 புரட்சியின் நூற்றாண்டு மற்றும் அதன் தொடர்ச்சியான இணையவழி விரிவுரை தொடரின் பாகமாகும்.

உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தது போல் சிரியாவில் வாஷிங்டனின் குரூஸ் ஏவுகணை தாக்குதல் மற்றும் ஆப்கானிஸ்தானில் அதன் பெரும் இராணுவ விமான குண்டுவீச்சு (MOAB) மீது குண்டுத் தாக்குதல் நடத்தியது என்பது அமெரிக்கா, கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஈராக் மீதான படையெடுப்புடன் தொடங்கிய உலகளாவிய மேலாதிக்கத்திற்கான தனது போரில் ஒரு புதிய அத்தியாயத்தை திறந்துள்ளது. இந்த இராணுவத் தாக்குதல்களும் வட கொரியாவிற்கு எதிரான தற்போதைய தொடர்ச்சியான அச்சுறுத்தல்களும் பரந்த யுத்தங்களுக்கு முன்னோடியாகும், அத்துடன், அணுசக்தி ரஷ்யா மற்றும் சீனாவுடனான நேரடி மோதல் ஆகியவற்றிற்கு சாத்தியமானவை.

மோடி அரசாங்கம், சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ மூலோபாயக் கட்டமைப்பில் இந்தியாவை ஒரு முன்னணி நிலைக்கு மாற்றியுள்ளதுடன், அமெரிக்காவுடன் இராணுவ உறவுகளை பலப்படுத்துகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், புது தில்லி இந்திய இராணுவ தளங்களை பயன்படுத்த அமெரிக்க இராணுவத்திற்கு அனுமதி அளிக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புகளில் மையமாக இருக்கும் அமெரிக்க ஏழாவது கடற்படைக்கான முக்கிய சேவை மற்றும் பழுது பார்க்கும் பெரிய தளமாக இந்த நாடு மாறியுள்ளது.

இந்த நடவடிக்கைகள் அனைத்து தெற்காசியாவையும் அமெரிக்க மற்றும் சீனாவிற்கும் இடையே இராணுவ மோதலுக்குள் இழுக்கும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது, அது இந்த பிராந்தியத்திலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு படுபயங்கரமான மரண விளைவுகளை ஏற்படுத்தும்.

பெங்களூரு கூட்டம், அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடி பற்றி விவாதிக்கும், அதேபோல் ஒரு மூன்றாம் உலகப் போர் மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கான வடிவங்களை உந்துதல் பற்றியுமாகும். இத்தகைய பேரழிவை தடுக்க ஒரே வழி தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பாகமாக இந்திய தொழிலாளர்களை அணிதிரட்டி, காலாவதியான முதலாளித்துவ அமைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், இந்த அமைப்புத்தான் ஏகாதிபத்திய யுத்தத்திற்கு ஆதாரவளமாக உள்ளது.

இங்கே தான் 1917 அக்டோபரில் ரஷ்யப் புரட்சியின் சமகாலத்திய பொருத்தம் உள்ளது, அது உலகப் புரட்சியின் முதன்மையான வெளிப்பாடு, உலக சோசலிசப் புரட்சியின் முதல் வெடிப்பாகும், அது முதலாவது உலகப்போரினால் ஏற்படுத்தப்பட்ட பிரமாண்டமான அழிவிலிருந்து எழுந்ததாகும். ரஷ்ய தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்ற வழிநடத்திய  லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் போல்ஷ்விக்குகளின்  போராட்ட  அரசியல் படிப்பினைகளை இன்று தொழிலாளர்கள் பெற்றுக் கொள்ள  வேண்டும்.

தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் பெங்களூரு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுகிறோம். அது இப்பொழுது தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் புரட்சிகர பணிகளைப் பற்றி விவாதிக்கும்.

 

தேதி மற்றும் நேரம்: திங்கள், மே 1, 10:00 மணி

இடம்: 2 வது மாடி, ஜெய் பீம் பவன்,

புதிய மிஷன் ரோடு, 16, 1st குறுக்கு சாலை

(லால்பாக் பிரதான  சாலை மற்றும் 1st குறுக்கு வீதி குறுக்கீடு)

பூர்ணிமா தியேட்டர் அருகில், பெங்களூரு 560027

டவுன் ஹால் மற்றும் சந்தை பஸ் ஸ்டாப்பில் இருந்து நடை தூரம், பிஷப் கோட்டன் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி வழியாக (வரைபடத்தைப் பார்க்கவும்)