ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian ICFI supporters to picket for release of Maruti Suzuki workers

மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்யக்கோரி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்திய ஆதரவாளர்கள் மறியல் போராட்டம்

மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்யக்கோரி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இந்திய ஆதரவாளர்கள் ஒரு மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.

அது ஏப்ரல் 17, மாலை 4 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலயம் அருகில் நடைபெறும். அது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து சுமார் 40 கி.மீ. இல் உள்ள ஒரு முக்கிய வாகன உற்பத்தி மையமாகும். இந்த மறியல் போராட்டம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கப்பட்ட சர்வதேச பிரச்சாரத்தின் பகுதியாக உள்ளது.

வட இந்திய மாநிலமான ஹரியானா மனேசரில் உள்ள மாருதி சுசூகி கார் ஆலையை சேர்ந்த பதின்மூன்று தொழிலாளர்களுக்கு போலியான கொலைக் குற்றச்சாட்டுகளின் பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, அதைவிட குறைந்த குற்றச்சாட்டுக்களுக்காக அதே ஆலையை சேர்ந்த இன்னும் 18 பேருக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இப்படியான தண்டனைகள் இந்தியாவின் முக்கிய பெரிய வர்த்தக கட்சிகளான ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் முழு ஒத்துழைப்புடன், சுசூகி நிறுவனம் மற்றும் போலீஸ் மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் ஒரு அரக்கத்தனமான ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் விளைவாகும். தொழிலாளர்கள் ஆலையில் நிலவும் கொத்தடிமை வேலை நிலைமைகளுக்கு எதிராக, வேலைநிறுத்தங்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் உட்பட போர்க்குணமிக்க போராட்டங்களில் பங்கு எடுத்ததற்காக குறி வைக்கப்பட்டனர்.

நிறுவனம் மற்றும் போலீஸ் ஜூலை 18, 2012 இல் ஆலையில் நிர்வாகத்தால் தூண்டி விடப்பட்ட ஒரு மோதலை மற்றும் நிறுவனத்தின் மனித வள மேலாளரான அவனிஷ் குமார் தேவ் மரணத்தில் முடிவடைந்த தீயை பயன்படுத்திக் கொண்டது. கொலைக்காக பதிமூன்று தொழிலாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது மற்றும் அவர்கள் கொலை குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது, ஆனால் எந்த ஆதாரமும் அவர்களை தீ மற்றும் தேவின் மரணத்துடன் இணைக்கவில்லை.

இந்த தீர்ப்பு தொழிலாளர்களை அச்சுறுத்த முனைகிறது மற்றும் தொழிலாளர்கள் உள்ளாக்கப்பட்டிருக்கும் கொடூரமான நிலைமைகளுக்கு எதிரான அனைத்து தொழிலாள வர்க்க எதிர்ப்பையும் இரக்கமின்றி நசுக்கும் என்றும் சுசூகி மற்றும் பிற முதலீட்டாளர்களுக்கும் மற்றும் இந்திய அதிகாரத்தட்டுக்களுக்கம் உத்தரவாதம் வழங்கவும் முற்படுகிறது.

இந்த ஏப்ரல் 17, மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம் மற்றும் ஏனைய சிறப்பு பொருளாதார மண்டல தொழிலாளர்களுக்கு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மாருதி சுசூகி தொழிலாளர்களுடன் உங்கள் வர்க்க ஐக்கியத்தை வெளிப்படுத்துங்கள்.

இந்த எதிர்ப்பானது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளிலுள்ள தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்யவும் மற்றும் போலியான குற்றத் தீர்ப்பை தோற்கடிக்கவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கப்பட்ட பிரச்சாரத்தை பலப்படுத்தும்.

 

தேதி மற்றும் நேரம்: ஏப்ரல் 17, திங்கள் 4 மணி

இடம்: ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலயம் அருகில்