ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Revolution in Russia

ரஷ்யாவில் புரட்சி

By Leon Trotsky
16 March 1917

உலக சோசலிச வலைத் தளம் 1917 பிப்ரவரியிலிருந்து மார்ச் வரையிலான லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களின் புதிய மொழிபெயர்ப்புக்களை வெளியிட்டு வருகிறது. பல அம்சங்களில், இக்கட்டுரைகள் முதல்முறையாக இப்போதுதான் ஆங்கிலத்தில் வெளிவருகின்றன.

இக்கட்டுரை நியூயோர்க் நோவி மிர் (புதிய உலகு) எனும் செய்தித்தாளில் மார்ச் 13, 1917ல் வெளியிடப்பட்டது. இது ரஷ்ய மொழியில் ட்ரொட்ஸ்கியின் 1923 Voina i Revoliutsiia (போரும் புரட்சியும்) என்பதில் வெளியிடப்பட்டது, தொகுதி 2, பக்கம்.432-434. இது இங்கே முதல் முறையாக மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. (மொழிபெயர்ப்பாளர்: ஃபிரெட் வில்லியம்ஸ், பதிப்புரிமை: WSWS).

ரஷ்யாவில் இப்பொழுது நடந்துவருவது, வரலாற்றில் எல்லாக் காலத்துக்குமான அதன் மகத்தான நிகழ்வுகளுள் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்படப் போகிறது. எக்காலத்துக்கும் அதன் மகத்தான நிகழ்வுகளுள் ஒன்றாக இருக்கப்போகின்றது. எமது குழந்தைகள், பேரக் குழந்தைகள், கொள்ளுப்பேர குழந்தைகள் இந்த நாட்களை மனிதகுல வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்று பேசுவார்கள். ரஷ்ய பாட்டாளி வர்க்கம் ஆட்சிகளிலே மிகவும் குற்றகரமானதிற்கு எதிராக, அரசாங்கங்களிலேயே மிகவும் அருவருப்பானதற்கு எதிராக கிளர்ந்து எழுந்தது. பெட்ரோகிராட் மக்கள் மிகவும் இழிவான மற்றும் இரத்தக்களரியான யுத்தங்களுக்கு எதிராக எழுச்சியுற்றுள்ளனர். தலைநகரின் துருப்புக்கள் கிளர்ச்சி மற்றும் சுதந்திரம் என்ற செம்பதாகையின் கீழ் அணிவகுத்திருந்தனர். ஜாரிச அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர். ரோமனோவின் அமைச்சர்கள், பழைய ரஷ்யாவின் இறையாண்மையாளர், அனைத்து ரஷ்ய சர்வாதிகாரத்தின் ஒழுங்கமைப்பாளர்கள் மக்களால் சிறை வைக்கப்பட்டார்கள். இதுவரைக்கும் இச்சிறைகள் மக்களுக்காக குரல்கொடுப்போருக்கு மட்டுமே அவற்றின் இரும்பு வாயிலைத் திறந்திருந்தது. இந்த உண்மை மட்டுமே, அவற்றின் அளவிலும் அதிகாரத்திலும் நிகழ்வுகளின் ஒரு உண்மை மதிப்பீட்டை வழங்கும். புரட்சியின் வலிமைகொண்ட பெரும் பனித்திரள் (avalanche)  முன்னே  அடித்துச்செல்கிறது. அதை எந்த மனித சக்தியாலும் தடுத்துவிட முடியாது.

தந்திக் கம்பிகள் அறிவிப்பதுபோல, றொட்ஸியான்கோ (Rodzianko) தலைமையின் கீழ், டூமாவின் பெரும்பான்மை பிரதிநிதிகளால் ஆகிய தற்காலிக அரசாங்கம் அதிகாரத்தில் இருந்தது.[1] மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தின் நிறைவேற்றுக்குழுவான இந்த தற்காலிக அரசாங்கம், புரட்சிக்கு வரவும் இல்லை அதற்கு அழைக்கப்படவும் இல்லை, நடத்தவும் இல்லை, அதற்கு தலைமை தாங்கவும் இல்லை. றொட்ஸியான்கோ கள் மற்றும் மில்லியுகோவ் (Miliukov) கள் முதலாவது புரட்சிகர எழுச்சியின் மாபெரும் அலையால் அதிகாரத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கிறார்கள். அனைத்திலும் அவர்கள் அஞ்சுவது யாதெனில் அதில் மூழ்குவது பற்றித்தான். அமைச்சர்கள் தன்னந்தனி சிறைகளுக்கு எடுத்துச்செல்லப்பட்ட பின்னர், இன்னும் சூடு தணியாமல் இருந்த அந்த இடங்களை எடுத்துக்கொண்ட பின்னர், மிதவாத முதலாளித்துவ வர்க்கம் புரட்சியானது முடிந்துவிட்டது என்று கருத தயாரிப்பு செய்திருந்தது. அதுதான் உலகம் முழுவதிலும் உள்ள முழு முதலாளித்து வர்க்கத்தின் எண்ணமாகவும் நம்பிக்கையாகவும் இருந்தது. இதற்கிடையில் புரட்சியானது அப்போதுதான் தொடங்கி இருந்தது. அதன் இயக்கு சக்தி றொட்ஸியான்கோ மற்றும் மில்லியுகோவ் ஆகியோரை தேர்தெடுத்தவர்கள் அல்லர். மற்றும் புரட்சியானது அதன் தலைமையை ஜூன் மூன்றாம் தேதிய டூமாவின் நிறைவேற்றுக் குழுவில் கண்டுகொள்ளாது.

பட்டினி கிடக்கும் குழந்தைகளின் பசியெடுத்த தாய்மார்கள் கொதிப்படைந்து தங்களின் மெலிந்த கரங்களை அரண்மனை ஜன்னல்களை நோக்கி உயர்த்தினர், மக்களின் இந்தப் பெண்களின் வசைமொழிகள் புரட்சிகர எச்சரிக்கை ஒலியின் குரலாக மீள ஒலித்தது. அதுதான் நிகழ்வுகளின் தொடக்கமாக இருந்தது. பெட்ரோகிராட் தொழிலாளர்கள் எச்சரிக்கை ஒலி எழுப்பினர்; நூறாயிரக் கணக்கானவர்கள் தொழிற்சாலைகளிலிருந்து நகரின் சாலைகளில் பெருக்கெடுத்தனர், அது தடுப்பரண்கள் என்னவென்று ஏற்கனவே அறியும். இங்குதான் புரட்சியின் வலிமை இருக்கிறது! ஒரு பொதுவேலைநிறுத்தம் தலைநகரின் சக்திமிக்க அமைப்பை ஆட்டம் காணச் செய்தது, அரசு அதிகாரத்தை செயலிழக்கச் செய்தது, மற்றும் ஜாரை அவரது பொன்முலாம் பூசிய குகைகளில் ஒன்றிற்குள் விரட்டிச்சென்று விட்டது. இங்குதான் புரட்சியின் பாதை இருக்கிறது! பெட்ரோகிராட் கோட்டை காவற்படையின் துருப்புக்கள், அனைத்து ரஷ்ய இராணுவத்தின் நெருங்கிய படைப்பிரிவு என்ற வகையில், கிளர்ந்தெழுந்த வெகுஜனங்களின் அழைப்புக்கு பதில் கொடுத்தது மற்றும் மக்களின் முதலாவது பிரதான வெற்றியைச் சாத்தியமாக்கியது. புரட்சிகர இராணுவம் – அதாவது புரட்சியின் நிகழ்வுகளில் தீர்மானிக்கும் வார்த்தையை பெற்றிருந்தது!

நாம் பெற்ற தகவல் முழுமையில்லாதது. அங்கு போராட்டம் இருந்தது. முடியாட்சியின் அமைச்சர்கள் சண்டை இல்லாமல் அகலவில்லை. ஸ்வீடிஷ் தந்திகள் பாலங்கள் தகர்க்கப்பட்டதை, வீதிச் சண்டைகளை, மாகாண நகரங்களில் எழுச்சிகளைப் பற்றிக் கூறியது. முதலாளித்துவ வர்க்கமானது, அதன் கேர்னல் Engelhardts மற்றும் Gronsky தணிக்கை அலுவலர்களுடன், “ஒழுங்கை மீட்டமைக்கும்” பொருட்டு அதிகாரத்தில் தொடர்ந்து இருந்தது. அவை அவர்களின் சொந்த வார்த்தைகள். தற்காலிக அரசாங்கத்தின் முதலாவது அறிக்கை குடிமக்களை அமைதியாக இருக்குமாறும் அமைதி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் அழைப்பு விடுத்தது. மக்களின் தூய்மைப்படுத்தும் பணி செய்யப்பட்டுவிட்டது என்றால், அவமதிப்பால் மூழ்கடிக்கப்பட்டிருந்த ரோமனோவ் அரசபரம்பரையால் நூற்றாண்டு காலங்களாக திரட்டப்பட்டிருந்த பிற்போக்கு அழுக்கையெல்லாம், புரட்சியின் இரும்புத் துடைப்பம் ஏற்கனவே முற்றிலுமாக துடைத்து அகற்றி விட்டிருக்கிறது!

இல்லை, றொட்ஸியான்கோ கள் மற்றும் மில்லியுகோவ் கள் உடனேயே பேசத் தொடங்கி இருந்த ஒழுங்கு, மற்றும் அமைதி, கிளர்ந்தெழுந்த ரஷ் (பழைய ரஷ்யா) இல் நாளையே வந்துவிடாது. நாடானது, இப்பொழுது, ஒடுக்கப்பட்ட, ஏழ்மைக்குள்ளாக்கப்பட்ட அனைவரும், ஜாரிசத்தாலும் ஆளும் வர்க்கங்களாலும் திருடப்பட்டவர்கள் அனைவரும், ஒரு தட்டினரை அடுத்து மற்றொருவராக, நாடு இப்பொழுது எழுந்து கொண்டிருந்தது மற்றும் முழு மற்றும் எல்லையற்று விரிந்த அனைத்து ரஷ்ய மக்கள் சிறைகளிலும் எழுந்தனர். பெட்ரோகிராட் நிகழ்வுகள் தொடக்கம் மட்டுமே ஆகும்.

ரஷ்யாவின் புகழ்பெற்ற மக்களின் தலைமையில், புரட்சிகர பாட்டாளி வர்க்கம் அதன் வரலாற்றுப் பணியை மேற்கொண்டது; அது அடைக்கலம் புகுந்திருந்த அனைத்து முகாம்களிலிருந்தும் முடியாட்சி மற்றும் எதேச்சாதிகார பிற்போக்கை விரட்டியடித்து, அதன் கரங்களை ஜேர்மன் மற்றும் அனைத்து ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்திற்கு நீட்டும். அதற்காக ஜாரிசத்தை மட்டுமல்லாமல், அதேபோல யுத்தத்தையும் கூட கலைப்பது அவசியமாயிருக்கிறது.

புரட்சியின் இரண்டாவது அலையானது, ஒழுங்கை மீளமைப்பது மற்றும் முடியாட்சியுடன் சமரசம் செய்து கொள்வது பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்த, றொட்ஸியான்கோ கள் மற்றும் மில்லியுகோவ் களின் தலைகளுக்கு மேலாக அடித்துச்சென்றது. புரட்சியானது, அதன் சொந்த ஆழத்திலிருந்து, அதன் சொந்த அதிகாரத்தை முன்னெடுக்கும் —மக்களின் புரட்சிகர அமைப்பானது வெற்றியை நோக்கி அணிநடை இட்டது. பிரதான யுத்தங்கள் மற்றும் பிரதான பாதிப்பாளர்கள் இரண்டுமே முன்னுக்கு இருக்கிறது. அப்போது மட்டும்தான் முழுமையான மற்றும் உண்மையான வெற்றி பின்தொடரும்.

லண்டனிலிருந்து வரும் சமீபத்திய தந்திச்செய்திகள் ஜார் நிக்கோலாய் (Tsar Nikolai) தனது மகனுக்கு ஆதரவாக அரியாசனத்தை துறக்க விரும்புவதாக கூறின. இந்த பேரத்துடன், பிற்போக்கும் மிதவாதமும் முடியாட்சியையும் பரம்பரையையும் பாதுகாக்க விரும்பின. இப்போது காலம் தாழ்ந்துவிட்டது. மிக மாபாதகமானவை குற்றங்கள், மிகவும் நேர்மைக் கேடானவை இன்னல்கள், மற்றும் மிக மகத்தானது மக்களது கோபத்தின் எல்லைதான்.

முடியாட்சியின் சேவகர்களே காலம் கடந்துவிட்டது! மிதவாத ஒடுக்குமுறையாளர்களே காலங்கடந்து விட்டது! புரட்சியின் சக்திமிக்க பெரும் பனித்திரள் (avalanche) இயங்கத் தொடங்கி விட்டது — எந்த மனித சக்தியாலும்  அதை தடுக்க முடியாது.

Novy mir, 16 March 1917.

அடிக்குறிப்பு :

[1] அமெரிக்க பத்திரிகைகளின் தந்திகள், டூமா குழு மற்றும் தற்காலிக அரசாங்கம் பற்றிய மனக்குழப்பத்தில் மூழ்கின.