ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Official account of Manchester suicide bombing unravels

மான்செஸ்டர் தற்கொலை குண்டுவெடிப்பு பற்றிய உத்தியோகபூர்வ விளக்கம் தள்ளாடுகின்றது

Julie Hyland
25 May 2017

மான்செஸ்டர் தற்கொலை குண்டுதாரி சல்மான் ரமதான் அபேடியை பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு "ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்குத் தான்" தெரியும் என்ற பிரதம மந்திரி தெரேசா மே இன் கூற்று ஒரு பொய்யென அம்பலமாவதற்கு வெறும் 24 மணி நேரத்திற்கும் குறைந்த நேரமே எடுத்தது.

திங்களன்று இரவு மான்செஸ்டரில் Ariana Grande இன் இசைநிகழ்ச்சி அரங்கில் 22 பேரைக் கொன்ற அந்த 22 வயதான தாக்குதல்தாரி, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஒரு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருந்தார் என்பதை அபேடியை அறிந்தவர்கள் கூறிய தகவல்களும் அமெரிக்க மற்றும் பிரெஞ்சு உளவுத்துறை ஆதாரங்களிடம் இருந்து கசிந்த தொடர்ச்சியான அறிக்கைகளும் தெளிவுபடுத்துகின்றன.

அபேடி ஒரு தற்கொலை குண்டுதாரியாக இருக்கலாமென ஐந்தாண்டுகளுக்கு முன்னரே பிரிட்டிஷ் உளவுத்துறை எச்சரித்திருந்தது. அபேடி இன் இரண்டு கல்லூரி நண்பர்கள், “அவர் பயங்கரவாதத்தை ஆதரிப்பதும்" மற்றும் "ஒரு தற்கொலை குண்டுதாரியாக இருப்பது சரியே" என்ற கண்ணோட்டங்களை அவர் வெளிப்படுத்தியன் மீதும் கவலை கொண்டு, அப்போது தனித்தனியாக பொலிசாருக்கு தெரிவித்திருந்தனர்.

நிறைய கசிவுகளுக்கு இடையே, NBC செய்தியாளர் ரிச்சார்ட் ஏங்கெல் ட்வீட்டரில் கருத்திடுகையில், அபேடி இன் குடும்பத்தினர் அவர் "அபாயகரமானவர்" என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு அதிகாரிகளை எச்சரித்திருந்ததாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களுக்கு தெரிவித்ததைக் குறிப்பிட்டார்.

அதற்கடுத்த நாள், அவர் தந்தையும் சகோதரரும் அல் கொய்தாவின் நீண்டகால ஆதாரவாளர்கள் என்றும், இன்னும் அதிக தாக்குதல்களுக்கு திட்டமிட்டு வந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு, லிபியாவில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரார் கொலொம் கூறுகையில் அபேடிக்கும் இஸ்லாமிக் அரசுக்கும் இடையிலான தொடர்புகள் "நிரூபிக்கப்பட்டிருந்தன" என்றும், அபேடி சிரியாவில் இருந்தார், அங்கிருந்து சமீபத்தில் தான் திரும்பி இருந்தார் என்பது பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு உளவுத்துறை சேவைகளுக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

அமெரிக்க உளவுத்துறை மற்றும் ஏனையவற்றின் கசிவுகள், அபேடியைக் குறித்த விசாரணையில் "ஒருங்கிணைந்த நடவடிக்கையைச்" சேதப்படுத்துமென பிரிட்டிஷ் உள்துறை செயலர் அம்பர் ரூட் மற்றும் மே இன் அலுவலகம் இரண்டு தரப்பும் கண்டனங்களை வெளியிட்டன. மான்செஸ்டர் குண்டுவெடிப்பைக் குறித்த அவர்களின் உத்தியோகபூர்வ விபரங்களை கேள்விக்குட்படுத்தும் எவரொருவரையும் "சதி தத்துவவாதியாக" சித்தரிப்பதற்கான அவர்களது முயற்சிகளை இத்தகைய வெளியீடுகள் பலவீனப்படுத்துகின்றன என்பதே அவர்களின் உண்மையான கவலையாக உள்ளது.

இப்போது கட்டவிழ்ந்து வரும் சம்பவங்கள் ஏற்கனவே நன்கு தெரிந்த ஒரு வடிவத்துடன் பொருந்துகின்றன. ஓர் தாக்குதல் நடந்ததும், அதை நடத்தியவர்கள் பாதுகாப்பு/உளவுத்துறை முகமைகளுக்கு பரிச்சயமானவர்களே என்பது உடனடியாக தெரிய வருகிறது, அவர்கள் "கண்காணிப்பு வலையிலிருந்து தப்பிக்க" முடிந்ததற்கான காரணங்களை அந்த முகமைகள் தப்பித்தவறியும் கூட ஒருபோதும் விவரித்ததில்லை. ஆனால் அவற்றிற்கு தகைமையில்லை என்ற வாதத்திற்கு மதிப்பளிக்க முடியாது. இந்த தாக்குதல் நடாத்தும் நபர்கள் அரசுக்குள் உள்ள சக்திகளால் பாதுகாக்கப்படுகின்றனர் என்பதே ஒரே நம்பத்தகுந்த விளக்கமாக உள்ளது.

அரசியல் நிலைப்பாட்டிலிருந்து, இத்தகைய தாக்குதல்களின் தோற்றுவாய் தெளிவாக உள்ளது. ஒவ்வொரு விடயத்திலும் இதன் மூலவேர்களை, முன்னாள் யூகோஸ்லேவியா, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா மற்றும் அதற்கு அங்காலும் என 1991 சோவியத் ஒன்றிய கலைப்பில் இருந்து இன்றைய நாள் வரையில் நடத்தப்பட்ட பேரழிவுகரமான போர்களில் காணலாம். இதன் விளைவு, இந்த நாடுகளை எல்லாம் பயங்கரவாத குழுக்கள் மற்றும் பயங்கரவாதிகளை வளர்த்தளிக்கும் வளமான நிலப்பரப்பாக மாற்றப்பட்டு, ஓர் அரசியல் மற்றும் சமூக பேரழிவு நடத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஏனைய இடங்களின் வீதிகளில் பயங்கரமான வன்முறைக்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள், ஆட்சி மாற்றத்திற்கான இத்தகைய ஏகாதிபத்திய போர்களில் நெருக்கமாக சம்பந்தப்படுத்தப்பட்ட பிற்போக்குத்தனமான பயங்கரவாத வலையமைப்புகளின் தயாரிப்பாளர்களாவர்.

மேற்கத்திய சக்திகள் நிதியுதவி மற்றும் ஆயுதங்கள் வழங்கி பயன்படுத்தி கொண்ட பிரிவினைவாத பயங்கரவாத அமைப்புகளுடன் குண்டுவெடிப்பு அட்டூழியங்களை நடத்தியவர்கள் நெருக்கமாக பிணைந்திருந்தனர் என்ற பழகிப்போன பாதையையே லிபியா மற்றும் சிரியாவிற்கான அபேடியின் பயணங்களும் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத சக்திகளுடனான அவர் தொடர்புகளும் பின்தொடர்கின்றன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அதன் அதன் வெளிநாட்டு நடவடிக்கைகளில் தனது சேவைகளுக்காக இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களை பயன்படுத்தியதற்கு முன்னுதாரணமாக விளங்கும் ஒரு பகுதியான மான்செஸ்டரில் இருந்து அபேடி வருகிறார்.

அபேடி, 2016 இல் சிரியாவில் ஒரு டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டவரும், மான்செஸ்டரில் இருந்தவருமான ISIS க்கு ஆள்சேர்க்கும் Raphael Hostey உடன் நெருக்கமாக தொடர்பில் இருந்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன. பல ஆண்டுகளாக, லிபிய இஸ்லாமியவாத போராடும் குழுவின் சில அங்கத்தவர்கள் அபேடி இன் வீட்டிற்கு அருகே மான்செஸ்டரின் Whalley Range மாவட்டத்தில் செயல்பட்டு வந்தனர். கடாபி ஆட்சியை எதிர்த்ததில் அவர்கள் வகித்த பாத்திரத்திற்கு பிரதிபலனாக அவர்கள் அங்கே ஆள்சேர்க்க அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அங்கிருந்த உள்ளூர் தலைவர், Abd al-Baset Azzouz, 2014 இல் லிபியாவிற்கு செல்லும் வரையில் அங்கே செயல்பட்டு வந்தார். அவர் குண்டு தயாரிப்பதில் ஒரு வல்லுனர் என்றும், 200 இல் இருந்து 300 போராளிகள் அவர் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

மான்செஸ்டர் தாக்குதல் எந்தளவிற்கு வஞ்சகமாக உள்ளதோ அதேயளவிற்கு அரசியலுக்காக அது பயன்படுத்தப்படுவதும் கபடத்தனமாக உள்ளது. செவ்வாயன்று தெரேசா மே, தேசிய பயங்கரவாத அச்சுறுத்தலை அதிகபட்ச அச்சுறுத்தல் மட்டத்திற்கு "அபாயகரமானதாக" உயர்த்தினார். மற்றொரு தாக்குதல் "உடனடியாக நிகழலாம்" என்ற உத்தியோகபூர்வ எச்சரிக்கைகளுக்கு இடையே, பயங்கரவாத எதிர்ப்பு படைகளைப் பலப்படுத்துவதற்காக அண்மித்து 1,000 இராணுவ துருப்புகள் வீதிகளுக்கு, பிரதானமாக இலண்டனில், நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நகர்வுகள், 2015 இல் மே உள்துறை செயலளராக இருந்த டோரி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு இரகசிய திட்டமான Operation Temperer க்கு உட்பட்டுள்ளன.  

பயங்கரவாத தாக்குதல்கள் முக்கிய தேர்தல்களுடன் பொருந்தி வரும் ஒரு வடிவத்தை, இந்த சமீபத்திய தாக்குதலும் பின்பற்றுகிறது. மிக சமீபத்தில் கடந்த மாதம் பாரீஸில் Karim Cheurfi ஆல் ஒரு பொலிஸ் அதிகாரி மீது மரணகதியிலான தாக்குதல் நடந்தது. இது, வீதிகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் பாரிய பொலிஸ் மற்றும் இராணுவத்தை முன்னிறுத்தி, பிரான்சின் முதல் சுற்று ஜனாதிபதி தேர்தல்களை துப்பாக்கி முனையில் நடத்துவதை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டது.

பிரிட்டனில் என்ன கட்டவிழ்த்து விடப்படும் என்பதற்கு பிரான்ஸ் ஒரு ஆழ்ந்த எச்சரிக்கையை வழங்குகிறது.

பாரீஸில் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, 2015 இல் இருந்து ஓர் அவசரகால நெருக்கடி நிலை அமலாக்கப்பட்டுள்ளது. அது, மான்செஸ்டர் குண்டுவெடிப்பைக் காரணங்காட்டி நேற்று தான் மீண்டும் நீடிக்கப்பட்டது.

மே 7 ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்றில் நவ-பாசிசவாத மரீன் லு பென் வென்றிருந்தால், பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் உயர்மட்ட அங்கத்தவர்கள் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நடத்த தயாரிப்பு செய்திருந்ததாக கடந்த வாரம் L’Obs சஞ்சிகை செய்தி வெளியிட்டது. அதன் நோக்கம் தேசிய முன்னணியின் ஜனாதிபதி பதவிகாலத்தை தடுப்பதல்ல, மாறாக இடதுசாரி அதிருப்தியை நசுக்குவதும், சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான அரசாங்கத்துடன் ஒரு கூட்டணியை நிறுவி லு பென்னை ஆட்சி செய்ய வைப்பதுமாகும். அந்த சமயத்தில், வங்கியாளர் இமானுவல் மக்ரோனுக்குப் பின்னால் நடைமுறையளவில் தனது ஆதரவை வழங்கிய ஜோன்-லூக் மெலோன்சோன் போன்ற பெயரளவிலான "இடது" பிரதிநிதிகளின் அடிபணிவு, குறைந்தபட்சம் இப்போதைக்கு ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியைப் பரிசீலிக்க வேண்டியதில்லை என்றளவிற்கு இருந்தது.

இதேபோன்ற விவாதங்கள் பிரிட்டனின் ஆளும் வட்டாரங்களில் நடக்காது என்று யாரேனும் ஆழமாக நம்ப முடியுமா?

தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சிக்கன நடவடிக்கைகளை ஆழப்படுத்துவது மற்றும் அமெரிக்காவோடு சேர்ந்து சிரியா, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் கூட போரைத் தீவிரப்படுத்துவதற்கான போக்கைப் பின்தொடர்வதென நிஜத்தில் மக்கள் ஆதரவில்லாத நடவடிக்கைகளை அதிகரிப்பதற்காக, ஜனநாயக நடைமுறையை ஒரு நாடாளுமன்ற பெரும்பான்மையின் ஊடாக முன்கூட்டிய நீக்கும் முயற்சியில் தெரேசா மே முன்கூட்டியே ஜூன் 8 இல் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.

முன்னதாக வெறும் 48 மணி நேரத்திற்கும் குறைவான காலத்தில், அவர் திட்டங்கள் சிதைந்து கொண்டிருப்பதாக தெரிந்தது. சமூக பாதுகாப்புக்காக ஓய்வூதியதாரர்கள் அவர்களின் வீடுகளை விற்க செய்யும், மே இன் தேர்தல் அறிக்கை முன்மொழிவு மீதான அரசியல் தாக்கம், அவருக்கு தலைவணங்கி சேவையாற்றும் ஊடக ஆதரவாளர்களே கூட அவர் தேர்தலை தொழிற் கட்சியிடம் இழந்து விடுவார் என்று கவலைக் கொள்ளுமளவிற்கு கூர்மையாக இருந்தது.

கோர்பின் அணுஆயுதங்களைக் குறிப்பிட்டளவிற்கு எதிர்த்தார் மற்றும் நேட்டோ மீது விமர்சனங்கள் வைத்தார் என்பதால், 2015 இல் ஒரு பெயர் வெளியிடாத மூத்த பிரிட்டிஷ் தளபதி, கோர்பின் பிரதம மந்திரியானால் அங்கே ஒரு "இராணுவ கலகம்" நடக்குமென எச்சரிக்குமளவிற்கு, கோர்பின் பிரதம மந்திரி ஆவதற்கான சாத்தியக்கூறுகள் மீது பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் உள்ள ஆளும் வர்க்கத்திற்குள் கோபம் நிலவுகிறது.

பொலிஸ், MI5, MI6 மற்றும் இராணுவத்திற்கான நடைமுறையளவிலான செய்தி தொடர்பாளராக மே சவாலின்றியும் கேள்வியின்றியும் சென்று கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் திட்டநிரலை தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்குள் திருப்புவதற்காக அவர் மான்செஸ்டர் தற்கொலை குண்டுவீச்சை பயன்படுத்துகிறார். 

1974 இல் பழமைவாத கட்சி பிரதம மந்திரி எட்வார்ட் ஹீத் முன்கூட்டியே தேர்தலுக்கு அழைப்புவிடுத்ததே இங்கிலாந்து வரலாற்றில் இதற்கு முந்தைய முன்மாதிரியாக இருந்தது. பிரிட்டனில் போர்குணம் மிக்க சுரங்கத் தொழிலாளர் வேலைநிறுத்தம் உட்பட சர்வதேச அளவில் அப்போது பிரமாண்ட அரசியல் சமூக அழுத்தங்கள் இருந்த நிலையில், “யார் நாட்டை ஆள்வது?” என்று முடிவெடுக்க ஹீத் தேர்தலுக்கு அழைப்புவிடுத்தார்.

ஹீத் தோல்வியடைந்தார் என்றாலும் நான்கு நாட்கள் டவுனிங் வீதியில் தங்கியிருந்தார். ஆனால் இப்போதோ, மூத்த இராணுவ அதிகாரிகள் மத்தியில் ஓர் ஆட்சிக்கவிழ்ப்புக்கான சாத்தியக்கூறு குறித்து விவாதிக்கப்பட்டிருந்ததாக ஒப்புக் கொள்ளப்படுகிறது.

அதற்கு பதிலாக, தொழிற் கட்சியின் கட்டுப்பாட்டை மீள-ஸ்தாபிதம் செய்வதற்கு உதவுவதன் மூலம் வரவிருக்கும் தொழிற் கட்சி அரசாங்கத்தை சார்ந்திருக்கலாமென அரசு முடிவெடுத்தது. வலதுசாரிகளுக்கான ஆதரவிலிருந்து அணு ஆயுதங்கள் மற்றும் முப்படைகள் வரையில் மற்றும் சமூக நல வெட்டுக்களைத் திரும்பப் பெற மறுப்பது வரையில், வலதுசாரிகள் கோரும் ஒவ்வொன்றையும் வழங்குவதற்கு கோர்பின் தயாராக இருப்பதால், அவரது அரசியல் சரணாகதி அரசு ஒடுக்குமுறையை நோக்கி திரும்புவதை அவசியமற்றதாக ஆக்கிவிடும் என்று நம்புவதற்கெல்லாம் அங்கே எந்த காரணமும் இல்லை. சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கிய திருப்பம், இங்கிலாந்தை உலுக்கிக் கொண்டிருக்கும் ஆழ்ந்த வர்க்க விரோதங்களில் இருந்தும் மற்றும் பிரிட்டிஷ் மூலதனத்தின் அப்பட்டமான துர்நாற்றத்தில் இருந்தும் பெருக்கெடுக்கிறது.