ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian establishment lauds military’s use of Kashmiri youth as “human shield”

காஷ்மீர் இளைஞரை “மனிதக் கேடயமாக” இராணுவம் பயன்படுத்தியதை இந்திய ஆளும் வர்க்கம் பாராட்டுகிறது.

By Wasantha Rupasinghe
24 May 2017

கடந்த மாதம் ஒரு இராணுவ அதிகாரி காஷ்மீர் இளைஞர் ஒருவரை தனது ஜீப்பின் முகப்பில் கட்டி அவரை ஒரு “மனிதக் கேடயமாக” பயன்படுத்தியது குறித்து தேசிய அவமதிப்பைப் பெற்ற அந்த அதிகாரியை இந்திய இராணுவ தலைவரான ஜெனரல் பிபின் ராவத் பாராட்டியுள்ளார்.

இந்த மரியாதையானது, ஏப்ரல் 9 அன்று 26 வயதான ஃபரூக் டார் என்பவர் கைப்பற்றப்பட்டதுடன், இராணுவ பாதுகாப்பிற்காக முன்னணி வாகனத்தின் முகப்பில் அவரை வைத்து கட்டி, சர்வதேச சட்டத்தை தெளிவாக மீறுகின்ற வகையில், பல மணி நேரங்களுக்கு வாகனங்கள் சுற்றி அணிவகுத்துச் செல்லவைத்த மேஜர் நிடின் லீட்டுல் கோகோய் இன் பாதுகாப்பிற்கான ஒரு உரத்த குரலுடனான ஆளும்வர்க்கத்தின் மதிப்பளிப்பின் ஒரு பகுதியாகும்.

இந்திய இராணுவம், பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தேசிய அரசாங்கம், எதிர் கட்சியான காங்கிரஸ் கட்சி மற்றும் பெருநிறுவன செய்தி ஊடகங்கள் அனைத்தும் அவரது செயல்களை ஒரு சட்டபூர்வமானதாகவும், அரசாங்கத்திற்கு எதிராக “கல் வீசுபவர்களை” எதிர்கொள்வதற்கான விவேகமான நடைமுறையாகவும் அது இருந்ததென்று விவரித்து கோகோய் க்கு பெரு ஆதரவைத் தெரிவித்தனர்.

காஷ்மீரிகள் மற்றும் பல மில்லியன் கணக்கிலான இந்தியர்களின் கருத்துக்களுடன் இது முரண்பாடாகவுமுள்ளது. இந்த சம்பவத்திற்கான வீடியோ காட்சிகள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டபோது அதிர்ச்சியும், கோபமுமாக இருந்தது. இந்த வீடியோ பதிவில், “கல் வீசுபவர்கள் அனைவரும் இதே விதியை சந்திப்பார்கள்” என்று இராணுவ அதிகாரியின் ஒரு எச்சரிக்கையை கேட்க முடிந்தது.

மக்களின் ஆத்திரத்தை தணிப்பதற்காக, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை நீதிமன்றம் ஒன்று கூடி வருவதாக இராணுவம் அறிவித்தது. ஆனால் முன்னூகிக்கக்கூடிய ஒரு கொடூரமான நகைச்சுவையாக இது நிரூபணமாகியுள்ளது. கால் நூற்றாண்டு காலமாக, இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவம் அதுவே ஒரு சட்டமாக செயலாற்றி வருகிறது என்பதுடன், கடும் சட்டமான, ஆயுதப்படைகள் (ஜம்மு மற்றும் காஷ்மீர்) சிறப்பு உத்தரவாதச் சட்டத்தின் (Armed Forces (Jammu and Kashmir) Special Powers Act) கீழ் உத்தரவாதமுள்ள சட்டபூர்வ தண்டனையுடன் மரணதண்டனை விதித்தல், சித்திரவதை செய்தல் மற்றும் காணாமற்போகச் செய்தல் போன்றவற்றையும் நிகழ்த்தியுள்ளது.

விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படும் அதே நேரத்தில், இராணுவமும், அரசியல் தலைவர்களும் கோகோய் ஐ பாராட்டிவருகின்றனர். அவர், “விரைவான சிந்தனை, நேரத்திற்கேற்ற மனநிலை மற்றும் முன்முயற்சியை,” காட்டியுள்ளதாக ஒரு மூத்த இராணுவ அதிகாரி Indian Express பத்திரிகைக்கு தெரிவித்தார்.

இந்திய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இராணுவ அதிகாரி கோகோய் க்கு ஒரு இராணுவ தலைமை ஊழியர் பாராட்டு அட்டை (Chief of Army Staff Commendation Card) வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டதில் எந்தவொரு சந்தேகமும் இல்லையென தெரிவித்ததுடன், ஏப்ரல் 9ம் தேதிய அவரது நடவடிக்கைகள் உட்பட, “எதிர்-கிளர்ச்சி நடவடிக்கைகளிலுள்ள தொடர்ச்சியான அவரது முயற்சிகளும்” அதற்கு காரணமாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

முன்னதாக, இந்து மேலாதிக்கவாத பி.ஜே.பி. இன் பொதுச் செயலரான ராம் மாதவ், “காதல் மற்றும் யுத்தத்தில் எல்லாமே நியாயமானது தான்” என்று கூறி, கோகோய் ஐ பாராட்டினார். மேலும் அவர், “அவர் எடுத்த நடவடிக்கையினால் உயிர்களை காப்பாற்றியமை குறித்து நான் அவரை பாராட்டுகிறேன்,” என்றும் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பஞ்சாப் மாநில முதல்வரான அமரீந்தர் சிங், மே 20 அன்று Indian Express இல் எழுதிய ஒரு கருத்துக் கட்டுரையில், “காஷ்மீரில் கல் வீசுபவர்களை எதிர்த்து மனிதக் கேடயத்தைப் பயன்படுத்தியது குறித்து ஒரு சிறப்பு சேவை பதக்கத்திற்கு மேஜர் கோகோய் தகுதியுடையவர்” ஆகிறார் என குறிப்பிட்டுள்ளார். “அரசாங்க சாசனம் பரந்தளவில் நடைமுறையில் இருந்தால் மட்டுமே” காஷ்மீரில் “சமாதானம்” என்பது சாத்தியமாகும் என்று கூறுவதுடன், இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை அரசின் எதிர்ப்பை நசுக்குவதற்கு இன்னும் இரக்கமற்ற வகையில் செயல்பட இந்திய அரசை அவர் வலியுறுத்தினார். மூத்த காங்கிரஸ் தலைவர், “நமது துணிச்சலான ஜவான்கள் (சிப்பாய்கள்) உட்பட நாட்டு மக்களின் நலனுக்காக, நாட்டிற்கு சாதகமான வகையில் அமைதி பேச்சுவார்த்தைகளை நடத்தக்கூடிய உயர் மட்டத்தினர் இந்திய இராணுவத்திற்கு தேவைப்படுகின்றனர்” என்று எழுதினார்.   

ஆளும் வட்டாரங்களிலுள்ள சர்வாதிகார மனோநிலையை மேலும் குறிப்பிடும் வகையில், “இராணுவம், எழுத்தாளர் அருந்ததி ரோய் ஐ ஒரு இராணுவ ஜீப்பில் கட்டவேண்டும்” என்று பி.ஜே.பி. பாராளுமன்ற உறுப்பினர் பரேஷ் ராவால் திங்களன்று ட்வீட் செய்தார். சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட நூலான The God of Small Things இன் ஆசிரியரான ரோய், காஷ்மீரில் இந்திய அரசாங்கத்தின் கொடூரமான அடக்குமுறைகள் மீதான அவரது விமர்சனங்கள் குறித்து பி.ஜே.பி. மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களால் அவர் பலமுறை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கை கொந்தளிப்பிற்குள்ளாகிய வெகுஜன ஆர்ப்பாட்ட அலையின் பரந்த மற்றும் தீவிரத் தன்மையினைக் கண்டு இந்திய உயரடுக்கு அதிர்ச்சியடைந்துள்ளது. சமீபத்தில், 2011 வரை ஆறு ஆண்டுகளாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியுள்ள M.K. நாராயணன், “காஷ்மீர் பள்ளத்தாக்கில், புது தில்லியிலிருந்து பரந்த அந்நியப்படுதல் போக்கு தற்போது மிகவும் வலுப்பெற்றுள்ளதுடன், இந்தியாவின் நிலைமையையும் கட்டுப்பாடு இழக்கச் செய்துவிட்டது, மேலும் உடனடியாக ஒரு உண்மையான “இன்டிபாடா” மோதலாக எதிர்கொள்ளக்கூடும்” என்று எச்சரித்தார்.

ஆனால், பி.ஜே.பி. மற்றும் இந்திய உயரடுக்கின் இதற்கான விடையிறுப்பாக கடும் வன்முறை மட்டுமே உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக புது தில்லியின் தாக்குதலானது, தெற்காசிய அணுஆயுத வல்லரசுகளை அபாயகரமாக மிக நெருக்கமான யுத்தத்தின் விளிம்பிற்கு கொண்டு வந்துள்ளது. நேற்று நடந்த பாரிய எல்லை தாண்டிய பீரங்கித் தாக்குதல்களினால் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் பல பாகிஸ்தான் இராணுவ “முன்னோக்கு” நிலைகள் அழிக்கப்பட்டமையானது இதற்கு இன்னும் ஊட்டமளிப்பதாகவுள்ளது.

மேலும், டார் மீதான குற்றவியல் செயல்முறையும், மற்றும் அது குறித்து இந்திய ஆளும்வர்க்கத்திற்குள் இருக்கும் உற்சாகமிக்க ஆதரவும், இந்திய அரசு காஷ்மீர் மக்கள் மீதான அதன் ஒடுக்குமுறையை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளதற்கு உதாரணமாகியுள்ளது.

ஸ்ரீநகர்-புத்காம் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைதேர்தலுக்கான வாக்களிப்பின்போது நடந்ததான இந்த ஏப்ரல் 9 ம் தேதிய “மனிதக் கேடயம்” என்ற நிகழ்வுதான் பாரிய மக்கள் ஆர்ப்பாட்டங்களுக்கான தருணமாக இருந்தது. இறுதியில், வெறும் 7 சதவிகித வாக்காளர்களே தங்கள் வாக்குகளை பதிவு செய்ததானது, ஒரு குறைந்தளவு வாக்குபதிவையே கொண்டிருந்தது. இதற்கிடையில், பாதுகாப்பு படையினரால் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதற்கு எதிர்மாறாக, பெய்வா துணை மாவட்டத்திலுள்ள சில் கிராமத்தில் வசிக்கும் ஒரு சில கிராமவாசிகளுக்கு மத்தியில் ஃபரூக் டார் வாக்களித்தார். கம்போரா கிராமத்தில் அவரது மைத்துனர் வீட்டில் நடைபெற்ற துக்கம் தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டபோது இராணுவம் அவரை கைது செய்தது, அப்போது அங்கு சில பெண்களும் தேர்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர், Wire செய்தி ஊடகத்தில் டார் பேசியபோது பின்வருமாறு கூறினார்: “அவர்கள் (இராணுவம்) எனது மோட்டார்வாகனத்தை சேதப்படுத்திவிட்டனர், துப்பாக்கி அடி மற்றும் மரத்தடிகளை கொண்டு என்னை கடுமையாக தாக்கி கிட்டத்தட்ட மயங்கிய நிலையில் ஜீப்பின் முகப்பில் வைத்து கட்டி 10 முதல் 20 கிராமங்கள் ஊடாக என்னை ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.”

மேலும் அவர் பின்வருமாறு கூறினார்: “என் முடிவு நெருங்கிவிட்டது என்றே நான் நினைத்தேன், ஆனால் என்னைப் பார்த்தவர்கள் என் குடும்பத்துக்கு இதை தெரிவிக்க வேண்டுமென்று நான் நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தேன்.”

ஃபரூக்கின் விடுதலைக்காக பொலிஸிடம் அவர்கள் விடுத்த வேண்டுகோள், குடும்ப உறுப்பினர்கள், கிராமவாசிகள் மற்றும் உள்ளூர் சேர்பஞ்ச் (தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத் தலைவர்) வரை மாலை இராணுவ முகாமிற்கு வரும்வரை எப்படி கவனிக்கப்படாமல் போனது என்று அவரது மூத்த சகோதரன் ஃபெயட் அகமது விளக்கினார். “அவர் (டார்) கல் வீசுபவர் அல்ல என்று நாங்கள் இராணுவத்திடம் கெஞ்சிக்கேட்ட பின்னரே அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல எங்களை அவர்கள் அனுமதித்தனர்,” என்றும் அகமது கூறினார்.