ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Workers Struggles: Asia, Australia and the Pacific

தொழிலாளர் போராட்டங்கள்: ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக்

10 June 2017
Asia

இந்தோனிசியா: ஃபிரிபோர்ட் சுரங்கத் தொழிற்சாலையில் பெருந்திரளான பணிநீக்கங்கள் தொடர்கிறது

இந்தோனிசியா, பப்புவாவில் இருக்கும் PT ஃபிரிபோர்ட்டின் கிராஷ்பெர்க் சுரங்கத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 3,000 க்கும் அதிகமானோரை தற்போது வேலையைவிட்டு நீக்கம்செய்யப்பட்டிருக்கின்றனர். ஃபிரிபோர்ட்டுக்கும் மிட்சுபிஷிக்கும் இடையிலிருக்கும் கிராஷ்பெர்க் இலிருந்து செப்புக்கள் உருவாக்கும் ஒரு கூட்டு நிறுவனமான PT ஸ்மெல்ரிங் இலிருந்து நூற்றுக்கணக்கானவர்களை வேலையைவிட்டு நீக்கம்செய்யப்பட்டிருக்கின்றனர். ஃபிரிபோர்ட்டிலுள்ள இரசாயண, எரிசக்தி மற்றும் சுரங்கத் தொழிலாளர் சங்கம் (Chemical, Energy and Mining Workers Union [SP-KEP]) ஒரு மாதத்திற்கு மேலான வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தற்கு பின்னர் மே மாத இறுதிவாரத்தில் ஃபிரிபோர்ட் வேலையைவிட்டு நீக்கும் திட்டத்தை அதிகரித்திருக்கிறது.

சுரங்கத்தில் மே 1 ன்று பெருந்திரளான பணிநீக்கங்களை எதிர்த்து 8000 க்கு அதிகமான நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை செய்தனர். இந்நடவடிக்கையானது சட்டவிரோதமானது என்றும் விடுமுறை இன்றி வேலைக்கு வராமல் வேலைநிறுத்தம் செய்பவர்கள் மற்றும் ஐந்து நாட்களுக்கு மேற்பட்டு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அவர்களுடைய பணியிலிருந்து நீக்கப்படுவர் என்றும் ஃபிரிபோர்ட் தொழில்துறை நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிறுவனம் 2018 இல் வெறும் ஒரு மாத சம்பள இறுதிக் கொடுப்பனவுடன் “தன்விருப்பார்ந்த விலகல்” செய்யும் அறிவிப்புக்களை வழங்கியிருந்தது. சில தொழிலாளர்கள் கூறியதற்கு மாறாக பணத்தினை குறைவாகப் பெற்றனர் ஏனெனில் அவர்கள் நிறுவனத்திற்கு கொடுக்கவேண்டிய கடன்பாக்கி இருந்துள்ளது. மேலும் அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கப்படமாட்டாது என நிறுவனம் அறிவித்துவிட்டது.

இந்தோனிசியன் அரசாங்கத்துடன் அதன் நடப்பு ஒப்பந்த பிரச்சனை காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதால் இந்நிறுவனம் ஏற்கனவே ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்களை பணிநீக்கம் (விடுப்புக்கொடுத்துவிட்டு) செய்திருக்கிறது. புதிய அரசாங்கத்தின் விதிகளின்படி இந்த நிறுவனம் ஒரு புதிய சுரங்க அனுமதியைப் பெறவேண்டும். 51 சதவீத பங்குகளை விற்கவேண்டும், இரண்டாவது செப்பு உருக்காலையை கட்ட வேண்டும், நடுவர் தீர்ப்பாயத்தை கைவிடவேண்டும் மேலும் புதிய வரிகள் மற்றும் ஆதாயவரிகள் போன்றவற்றை செலுத்தவேண்டும். கிராஷ்பெர்க் இல் உற்பத்தியானது 60 சதவீதம் குறைந்துள்ளது என ஃபிரிபோர்ட் கொரியுள்ளது.

ஃபிரிபோர்ட் விடுமுறை அளிக்கும் கொள்கையை அறிமுகப்படுத்தியிருந்தது. குறுகிய கால அறிவித்தல் மூலம் அதன் 10 சதவிகித நிரந்தர தொழிலாளர்களுக்கு நீண்ட கால விடுப்பினைக் கொடுக்கின்றது. விடுப்பு நாட்களுக்கான சம்பளம் கொடுக்கப்படுகிறது, இருந்தபோதிலும். தொழிலாளர்கள், அதிக வேலைக்கான சம்பளக் கூலி, தங்கும் வசதி உட்பட பல்வேறு நலன்களை இழக்க நேரிட்டுள்ளது.  இரண்டு நாட்களில் அறிவித்தல் கொடுக்கப்பட்டு நிறுவனத்தின் தங்கும் இடத்திலிருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.

இந்தோனிசியா PT ஃபிரிபோர்ட், உள்ளூர் பீனிக்ஸ் (Phoenix) துணையுடன், அமெரிக்காவை அடித்தளமாகக் கொண்ட ஃபிரிபோர்ட்-எம்சிஎம்ஓரான் (Freeport-McMoRan), 12,000 நிரந்தரத்த தொழிலாளர்களையும் 20,000 ஒப்பந்த தொழிலாளர்களையும் வேலையில் அமர்த்தியிருந்தது. அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைத் திட்டத்தின் ஒரு பகுதியாக வேலையைவிட்டு நீக்குதலை நிறுவனம் நடைமுறைப்படுத்துவதாக தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

பாகிஸ்தான்: குவேட்டாவில் அரசு மருத்துவமனை செவிலியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்

பலூசிஸ்தானின் மாகாண தலைநகரான குவேட்டாவில் திங்கட்கிழமையன்று அரசாங்க மருத்துவமனை செவிலியர்கள் வேலையிலிருந்து வெளிநடப்பு செய்து பொதுமருத்துவமனைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை அவர்கள் பணிக்குத் திரும்பப்போவதில்லை என்று கூறியுள்ளார்கள். அவர்களின் எல்லா கோரிக்கைகளும் “கால தாமதப்படுத்தாமல்” நிறைவேற்றுவதாகவும் ஒரு தீர்வுக்காக அரசாங்க குழுவையமைக்க உத்தரவாதம் அளித்து அரசாங்கம் ஒரு பொய்யான வாக்குறுதியை அளித்திருந்ததன் பின்னர் செவிலியர்கள் பிப்ரவரியில் இதே பிரச்சனைக்காக நான்கு நாள் நடத்திய வேலைநிறுத்தப்போராட்டத்தை முடித்திருந்தனர்.

ஒரு தொழில்வல்லுநர் ஆரோக்கிய கொடுப்பனவுக்காகவும், அவர்களுடைய சேவைக் கட்டமைப்பை முன்னேற்றவும் செவிலியர்கள் கோரினர். 2011 இலிருந்து தொழில்வல்லுநர் ஆரோக்கிய கொடுப்பனவுக்காக செவிலியர்கள்  கோரிக்கைவைத்துவருவதாக செவிலியர் நடவடிக்கைக் குழு (NAC) வின் ஒரு தொடர்பாளர் கூறினார். அரசாங்கம் கோரிக்கையை ஏற்றுக்கொண்டபோதிலும் ஒரு உத்தியோகபூர்வ ஆணையை நீண்ட காலமாக வழங்கவில்லை என அவர் கூறினார். சேவைக் கட்டமைப்பு மற்றும் அண்டை மாகாணங்களுக்கு இணையாக தொழில்வல்லுநர் கொடுப்பனவுகளைக் கொடுக்கவேண்டும் என்று செவிலியர்கள் கோரினர்.

அவர்களுடைய கோரிக்கைகளை மிகவிரைவில்  நிறைவேற்றவில்லையென்றால் வரவு - செலவு அமர்வு தினத்தன்று மாகாண சட்டசபைக்கு வெளியே செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவும், குவேட்டாவில் பேரணிகள் நடத்தப்போவதாகவும் NAC மற்றும் பலூசிஸ்தான் செவிலியர்கள் சங்க பிரதிநிதிகள் கூறினார்கள். செவிலியர்கள் புதன்கிழமை வரை வேலைநிறுத்தப்போராட்டத்தில் இருந்தார்கள்.

சிந்து மாகாணத்தில் அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமையன்று சிந்து மாகாணத்திலிருக்கும் கராச்சியில் சிந்து சட்டசபைக்கு வெளியே சுமார் 300 அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள் 2012இல் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து அவர்கள் பெறாத அவர்களுடைய சம்ளத்தை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்த சமயத்தில் சுமார் 3,850 ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டார்கள். ஆனால் அரசாங்கத்தை மாற்றும் வகையில் வந்த 2013 தேர்தலைத் தொடர்ந்து அந்த தேர்வுகள் சட்டவிரோதமானது என்று சம்பளத்தை நிறுத்திவிட்டனர் என ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

பாகிஸ்தான் ஆசிரியர்கள் மோசமான முறையில் சுரண்டப்படுகிறார்கள் மேலும் வாழ்க்கையை ஓட்டுவதற்கு பள்ளி நேரம் முடிந்த பிறகு பகுதி நேர வேலைக்கு போக நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். பணி நீக்கம் செய்யப்படாத மற்றும் அவர்களுடைய கற்பிக்கும் கடமைகளை செய்து கொண்டிருக்கும் ஆசிரியர்கள், பெரும் ஆசிரியர் சங்கங்களினால் தனிமைப்படுத்தப்பட்டு வந்துள்ளனர்.

கைபர் வடமேற்கு எல்லைப்புற மாகாண கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை போராட்டம்

யூன் 1 அன்று பெஷாவரில் இருக்கும் கைபர் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் அரசாங்கம் நடத்தும் கல்லூரிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தாமதப்படுத்தும் சம்பள உயர்வு மற்றும் உதவித்தொகைகளுக்காக அரசாங்கத்திற்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள். நவம்பரில் இதே பிரச்சனைக்கான ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக அவர்களின் நடவடிக்கையிருந்தது. மற்ற அரசாங்க ஊழியர்களுக்கு நிகராக அவர்களுடைய சம்பள அலகை கொண்டுவர வேண்டும் என்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் உதவி போதனா ஆசிரியர்கள், தனிப்பட்ட விரிவுரையாளர்கள் போன்றோரை நிரந்தரப்படுத்தவேண்டும் எனவும் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் கோரிக்கை வைத்தனர்.

வடமேற்கு எல்லைப்புற மாகாண கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் வடமேற்கு எல்லைப்புற பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சங்கம் ஆகியவற்றால் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 6,000 போதனா ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நவம்பரில் நேர்மையான முறையில் உருவாக்கப்பட்ட செயல்திட்டத்தினையும் மற்றும் திரும்பவும் மே இல் அவர்கள் தெரிவித்த கோரிக்கைகள் நிறைவேற்றத்த தவறியதற்காக அரசாங்கத்தினை இந்த சங்கங்கள் குற்றம்சாட்டினர்.

பஞ்சாப் நகராட்சி தொழிலாளர்கள்  ஊதியம் தொடர்பாக  தொடர்ச்சியாக போராட்டம் செய்கின்றனர்

டோபா டெக் சிங் மாவட்டத்தில் நகராட்சிக் குழுவின் நகராட்சித் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் இரண்டு மாதங்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வுதியங்களை மாவட்ட அரசாங்கம் வழங்கக்கோரி திங்கள் மற்றும் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பட்டக்காரர்கள் அரசாங்க அலுவலர்களுடன் சந்திப்பதற்கு முற்பட்டபோது காவல்துறையினர் தடுத்துநிறுத்தியுள்ளனர்.

அவர்களுடைய சம்பளத்தினை விரைவில் வழங்கவில்லையென்றால் அவர்கள் நகரசபை வளாகத்தினை பூட்டிவிடுவதாகவும், நகரத்திற்கான நீர்வழங்களை நிறுத்திவிடுவோம் என்றும் சாலைத் துப்புரவு பணிகளையும் மற்றும் கழிவகற்றும் சுகாதார வேலைகளையும் புறக்கணிக்கப்போவதாகவும் தொழிலாளர்கள் கூறினார்கள்.

குஜராத்தில் டாட்டா மோட்டார் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் போராட்டம்

குஜராத்தி சனந் இல் இருக்கும் டாட்டா மோட்டார் கார் உற்பத்தித் தொழிற்சாலையில் புதிய வேலைக்கான ஒப்பந்தத்திற்கு [long term settlement (LTS)] நீட்டிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் மீதான ஆர்ப்பாட்டத்தில் சுமார் 450 தொழிலாளர்கள் நிறுவனத்தின் உணவு தயாரிப்பைப் புறக்கணித்தனர். முதல் வருட ஒப்பந்தத்தின்படி ஒரு சம்பள உயர்வினை வழங்கவேண்டும் என கோரி வருகின்றனர். நிறுவனம் 18 மாதங்களாக பேச்சுவார்த்தைகளை இழுத்து மூடிவிட்டது என அவர்களுடைய சங்கம் கோரியது.

ஊடக அறிக்கையின்படி, மார்ச்சில் புனே தொழிற்சாலையில் சங்கம் ஏற்றுக்கொண்ட அதே செயல்திறன் அடிப்படையிலான LTS ஐ சனந், லக்னோ மற்றும் ஜாம்ஷெட்பூர் போன்ற இடங்களில் இருக்கும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் கையொப்பம்பெற்று நிறைவேற்ற டாட்டா நிறுவனம் முயற்சித்துக்கொண்டிருந்தது.  புனே ஒப்பந்தத்தில் 3 வருடங்களுக்கு ஆண்டு ஊதியத்தில் மொத்தமாக 8,600 ரூபாயும் ஊக்க ஊதியத்தில் 8,700 ரூபாயும் அதிகரிக்கும் வகையில் உள்ளடங்கியிருந்தது.  அவர்களுடைய சம்பளம் குறைந்தபட்சம் 10 சதவீதம் செயல்திறன் அடிப்படையில் இணைக்கப்பட்டிருக்கிறது.

கர்நாடகா சுகாதார நல தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

பெங்களூருவில் சுமார் 200 அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார நல ஆர்வலர்கள் (ASHAs) 8 மாதங்களாக வழங்காத சம்பளத்திற்காகவும் மற்றும் அடையாள அட்டை வழங்கக்கோரியும் யூன் 5 அன்று ஒரு ஒருநாள் வேலைநிறுத்தத்தினை நடாத்தினர். உதவிபடி உட்பட மிக குறைந்தளவிலான மாத சம்ளம் 5,000 ரூபாய் பெறுகிற தொழிலாளர்கள் சுகாதார நல தொழிலாளர்களாக பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேசிய நகர்புற சுகாதார திட்டத்தின் கீழ் சுகாதார நல விழிப்புணர்வை வழங்கவும் வீட்டுக்கு வீடு நோய்த் தடுப்பு மருந்தினை வழங்கி நிர்வகிக்கின்றனர். அவர்கள் புதிய மென்பொருளில் (Software) ஊழியர்களாக பட்டியலிடப்படவில்லை என்று அவர்களுக்கு NHUM ஆல் கூறப்பட்டிருப்பதாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறினார்கள்.

கம்போடியன் ஆடைத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

செவ்வாய்க்கிழமையன்று கம்போடியா, டன்கோர் மாவட்டத்தில் சவுத்லான்ட் தொப்பித் தொழிற்சாலையிலிருந்து சுமார் 1,000 தொழிலாளர்கள் நகராட்சிமன்ற பிரிவு தேர்தலில் வாக்களிக்க நேரத்தை எடுத்துக்கொண்டதற்காக மூன்று நாட்கள் சம்பளத்தை இழக்கநேரிடும் என நிறுவனம் அறிவித்ததால் வெளிநடப்பு செய்தனர். வழமையாக கம்போடியன் தொழிலாளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு அவர்களுடைய சொந்த ஊருக்கு செல்ல விடுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

வழமையாக அவர்களின் விடுமுறை உரிமையிலிருந்து மூன்றுநாட்கள் கழிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படும் என்று நிறுவனம் கூறியிருக்கிறது. முன்னர் அவர்கள் நிர்வாகத்தினை அணுகிச் சென்றபோது அவர்கள் வாக்களிக்க நேரமாகிவிட்டால் அதற்கு அவர்கள் தெளிவான பதிலை கொடுக்கவில்லை என தொழிலாளர்கள் குற்றம் சுமத்தினார்கள். புதன்கிழமையன்று தொழிலாளர்கள் இன்னும் வேலைக்கு திரும்புவதற்கு மறுத்துக்கொண்டிருந்தார்கள்.