ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Amid high tensions, UN votes for harsh sanctions on North Korea

உயர் பதட்டங்களுக்கு மத்தியில், வட கொரியா மீதான கடுமையான தடைகளுக்கு ஐ.நா. வாக்களிக்கிறது

By Peter Symonds
7 August 2017

கடந்த மாதம் வட கொரியா இரண்டு நீண்ட தூர ஏவுகணை சோதனைகளை நடத்தியது குறித்து ட்ரம்ப் நிர்வாகத்தின் கடுமையான அழுத்தத்தின் கீழ், அதன் மீது தண்டனைக்குரிய புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் ஒரு தீர்மானத்திற்கு சனிக்கிழமையன்று ஐ.நா. பாதுகாப்பு சபை ஒருமனதாக வாக்களித்தது. இந்த தடைகள் வட கொரியாவை கடுமையாக பாதிக்கும் என்பதோடு, யுத்தத்திற்குள் இறங்குவதற்கு அச்சுறுத்தும் கொரிய தீபகற்பம் மீதான பதட்டமான மோதல்களை ஒருங்கிணைக்கவும் செய்யும்.

பியோங்யாங்கின் அணுஆயுத மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கு எதிராக குறுகிய இலக்கை கொண்டிருந்த முந்தைய ஐ.நா. தீர்மானங்களைப் போலன்றி, சமீபத்தியது பரவலாக வட கொரிய பொருளாதாரத்தை பொருளாதார ரீதியாக முடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, நிலக்கரி, இரும்பு, ஈயம் மற்றும் கடல் உணவுப் பொருட்கள் ஆகியவற்றிற்கான வட கொரிய ஏற்றுமதிகளின் மீது நேரடியான தடைகளை விதிக்கின்றது, மேலும் இது, சுமார் 1 பில்லியன் டாலர் அல்லது மொத்தத்தில் மூன்று பங்1கு ஏற்றுமதி வருவாயைக் குறைக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம், கூடுதலான வட கொரிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நாடுகளை தடை செய்வதோடு, வட கொரியாவுடனான புதிய கூட்டு முயற்சிகளையும் அல்லது தற்போதைய கூட்டு நிறுவனங்களில் புதிய முதலீடுகளையும் தடை செய்கின்றது. இது, பயணக் கட்டுப்பாடு மற்றும் சொத்து முடக்கம் ஆகியவற்றிற்கான ஐ.நா. தடுப்பு பட்டியலில் ஒன்பது தனிநபர்களையும், நான்கு வணிக நிறுவனங்களையும் சேர்க்கின்றது. இது, நாட்டின் முக்கிய அந்நிய செலாவணி வங்கியாக செயல்படும் வட கொரிய அரசுக்கு சொந்தமான வெளிநாட்டு வர்த்தக வங்கியையும் உள்ளடக்கியது.

ஐ.நா.வின் அமெரிக்க தூதரான நிக்கி ஹேலி , இந்த தீர்மானம் “ஒரு தலைமுறையில் எந்தவொரு நாட்டின் மீதும் மிகக் கடுமையான தொகுப்பு பொருளாதாரத் தடைகளை” சுமத்தியுள்ளது என்று பெருமையடித்து கொண்டார், பின்னர் Fox News இல், “முதன்முதலாக நாங்கள் அவர்களின் வயிற்றில் ஒரு உதை கொடுத்தோம்...... அதை அவர்கள் இப்போதே உணர ஆரம்பிக்கிறார்கள்” என்றார்.

ஐ.நா.வில் பேசியபோது, தீர்மானத்தை ஆதரிப்பதற்காக சீனாவை ஹேலி பாராட்டியபோதும், பின்வருமாறு எச்சரிக்கவும் செய்தார்: “நாம் பிரச்சனையை தீர்த்துவிட்டதாக நினைத்துக்கொண்டு நம்மை நாமே முட்டாளாக்கிக் கொள்ளக்கூடாது. முடித்துக்கொள்ளவும் கூடாது. வட கொரிய அச்சுறுத்தல் நம்மை விட்டு விலகவில்லை, இது விரைவாக வளர்ந்துவரும் மிக மோசமான அபாயமாகும். மேலதிக நடவடிக்கை தேவையாகவுள்ளது.”

ஜூலை 28ம் தேதியன்று, அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியைச் சென்று தாக்கும் சாத்தியமுள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணை ஒன்றை வட கொரியா நிறுவியதைத் தொடர்ந்து, அமெரிக்கா சீனா மீதான அழுத்தத்தை மிகப்பெரியளவில் அதிகரித்தது. பெய்ஜிங் “வட கொரியா தொடர்பாக எங்களுக்கு எதுவும் செய்ய வேண்டியதில்லை,” என்று ஜனாதிபதி அதனிடம் கோபமாக வெடித்தார், மேலும் “ இதை தொடர்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றும் எச்சரித்தார்.

பென்டகன் இராணுவப் படையின் காட்சி ஒன்றை தொடர்ந்து மற்றொன்று என்ற வகையில், கொரிய தீபகற்பம் மீது இரண்டு மூலோபாய B1 ரக குண்டு வீசிகளை அனுப்பியதை தொடர்ந்து கடலுக்குள் ஏவுகணைகளை நிறுவுவது உட்பட, தென் கொரியா உடனான கூட்டு நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகளை நடத்தியது. கடந்த புதனன்று, இந்த ஆண்டின் அதன் நான்காவது அறிமுக சோதனையாக, பசிபிக் மீது அமெரிக்கா தனது சொந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) சோதனையை நடத்தியது.

ட்ரம்ப் நிர்வாகம், அறிவுசார் சொத்துரிமைகள் பற்றிய விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போர் நடவடிக்கைகளுக்கு தயாரிப்புகள் செய்ததாக கடந்த வாரம் நிகழ்ந்த தகவல் கசிவுகளினால் சீனாவின் நுழை வாயிலில் போருக்கான அமெரிக்காவின் அச்சுறுத்தல் அதிகரித்திருந்தது. சீனாவிற்கு எதிராக அமெரிக்க வர்த்தக அபராதங்கள் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.

தற்போது விடுப்பில் இருக்கும் ட்ரம்ப், வட கொரியா மீது “மிகப்பெரிய நிதியியல் தாக்கத்தை” கொண்டிருக்கும் பொருளாதாரத் தடைகளை அறிவிக்கும் ஐ.நா.வின் தீர்மானத்திற்கு அவரது ஒப்புதலை ட்வீட் செய்தார். புதிய பொருளாதாரத் தடைகளை ஆதரிப்பதற்காக சீனாவையும், ரஷ்யாவையும் அவர் பாராட்டினார்.

இருப்பினும், பெய்ஜிங், வட கொரியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தனது சொந்த முன்மொழிவை முன்வைக்க தொடர்ந்து முயன்றுவருகிறது – அது பியோங்யாங் அதன் அணுஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்துவது மற்றும், அதற்கு பதிலாக அமெரிக்காவும், தென் கொரியாவும் அவற்றின் பிரதான கூட்டு இராணுவ பயிற்சிகளை முடக்குவது உள்ளிட்டவை. வாஷிங்டன், வட கொரியாவுடனான போருக்கான ஒரு ஒத்திகைக்கு ஒப்பான இந்த இராணுவ பயிற்சிகள் குறித்த எந்தவொரு நிறுத்தத்தையும் மீண்டும் மீண்டும் நிராகரித்துள்ளது.

ஐ.நா.வுக்கான சீன தூதரான லியு ஜீயும், தென் கொரியாவில் ஒரு முனைய அதிஉயர பகுதி பாதுகாப்பு (Terminal High Altitude Area Defence-THAAD) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எதிர்ப்பு பாட்டரியை அமெரிக்கா பயன்படுத்துவது குறித்த பெய்ஜிங்கின் எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தினார். பெயரளவில் வட கொரியாவிற்கு எதிராக இதன் இலக்கு உள்ள போதிலும், இந்த THAAD நிறுவுதல் அமெரிக்க இராணுவத்தை சீன பிராந்தியத்திற்குள் ஆழ்ந்து செல்ல அனுமதிக்கின்றது. வாஷிங்டன், இந்த பயன்பாடு தொடர்பான எந்தவொரு நிறுத்தத்தையும் தள்ளுபடி செய்துவிட்டது.

வார இறுதி நாட்களில், மணிலாவில் நடைபெற்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் (Association of South East Asian Nations-ASEAN) பிராந்திய கருத்துக்களத்தில், சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் தனது வட கொரிய சமதரப்பினரான ரி வோங்-ஹோ ஐ சந்தித்தார். அவர் செய்தி ஊடகத்திடம் பியோங்யாங்கை பின்வருமாறு எச்சரித்ததாக கூறினார்: “ஏவுகணை நிறுவுதல் அல்லது அணுஆயுத சோதனைகளை நடத்துவதன் மூலம் ஐ.நா.வின் தீர்மானத்தை மீற வேண்டாம், அல்லது சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்திற்கு எரிச்சலூட்ட வேண்டாம்.”

எவ்வாறெனினும், வாங், “அமெரிக்கா மற்றும் தென் கொரியா போன்ற பிற கட்சிகளும் பதட்டங்களை அதிகரிப்பதை நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார். பொருளாதாரத் தடைகள் அவையாகவே ஒரு முடிவாக இருக்கவில்லையென அவர் கூறியதோடு, “கொரிய தீபகற்ப அணுஆயுத விவகாரத்தை திரும்ப பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதே நோக்கமாகும் என்பதுடன், பேச்சுவார்த்தை மூலம் இறுதித் தீர்வு ஒன்றை அடைய வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.

பெய்ஜிங்கின் வலுயுறுத்தலின் பேரில், அமெரிக்கா, சீனா, இரண்டு கொரியாக்கள், ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகியவை சம்பந்தப்பட்ட ஆறு கட்சி பேச்சுவார்த்தைகளுக்கு திரும்ப அனைத்து தரப்பினருக்கும் ஐ.நா. அழைப்பு விடுத்தது. ஆனால், கூடுதல் ஆய்வுகள் மற்றும் பாதுகாப்புகளுக்கு கோரிக்கை விடுப்பதன் மூலம் வட கொரியா அணுஆயுத ஒழிப்பை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட 2007 உடன்படிக்கையை அமெரிக்க ஜனாதிபதி புஷ் குறைமதிப்பிற்கு உட்படுத்திய பின்னர் இந்த பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனற்றவையாக மாறின. சீன ஆதரவிலான இந்த ஆறு கட்சி பேச்சுவார்த்தைகளின் மறுதொடக்கத்திற்கு ஒபாமா நிர்வாகம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை.

கடந்த வாரம் அமெரிக்க வெளியுறவு செயலர் றெக்ஸ் ரில்லர்சன், வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக இருக்கும் எனத் தெரிவித்தார். மேலும், “நாங்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை, நாங்கள் (பியோங்யாங்) ஆட்சியின் சரிவையும் தேடவில்லை, தீபகற்பத்தின் ஒரு துரிதமான மறு இணைப்பையும் நாங்கள் தேட முனையவில்லை, மேலும், 38வது இணையின் வடக்கிற்கு (இரண்டு கொரியாக்களை பிரிக்கும் பகுதி) எங்களது இராணுவத்தை அனுப்ப நாங்கள் சாக்குப்போக்கையும் தேடவில்லை,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதே நேரத்தில், வட கொரியா தனது அணுசக்தி ஆயுதங்களை கைவிட தயாராக இருந்திருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை சாத்தியமாகும் என்பதை ரில்லர்சன் ஐயத்திற்கிடமின்றி தெளிவுபடுத்தியுள்ளார். “அணுஆயுத ஒழிப்பை மேற்கொள்வது மற்றும் அவர்களது பேரழிவுகர ஆயுதங்களை கைவிடுவது ஆகியவற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை அடையமுடியும்” என்றும் “அப்போதுதான் பேச்சுவார்த்தையில் ஈடுபட நாங்கள் தயாராக இருப்போம்” என்றும் அவர் தெரிவித்தார்.

மணிலாவில், ரில்லர்சன் வாங்கை சந்தித்ததோடு, தென் கொரிய மற்றும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர்களையும் சந்தித்தார். ஆனால் ASEAN உச்சி மாநாட்டில், அமெரிக்க மற்றும் வட கொரிய பிரதிநிதிகளுக்கு மத்தியிலான எந்தவொரு உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை. உண்மையில், இந்த கருத்தரங்கில் வட கொரியாவின் அங்கத்துவத்தை இடைநீக்கம் செய்யும் ஒரு முயற்சியில் அமெரிக்கா தோல்வி அடைந்தது.

இதன் விளைவாக பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. வட கொரியா தன்னை ஒரு அணுசக்தி நாடாக பிரகடனப்படுத்தி கொண்டதோடு, அது ஒரு அணுசக்தித் தளத்தை கட்டியெழுப்புவதை தொடரவுள்ளதாகவும் விடாப்பிடியாகக் கூறுகின்றது. அரசுக்கு சொந்தமான Rodong Sinmun பத்திரிகையில் ஒரு கருத்துரை, அமெரிக்கா அதன் “விரோத கொள்கை” ஐ விட்டுக்கொடுக்க வேண்டுமென எச்சரிப்பதோடு, அது நாட்டின் மீது தாக்குதலை தொடுத்தால், அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதி “கற்பனைசெய்ய முடியாத ஒரு நெருப்புக் கடலில்” மூழ்கடிக்கப்படும் எனவும் அச்சுறுத்தியுள்ளது.

வாஷிங்டன், ஆசிய பசிபிக்கில் அதன் இராணுவ கட்டமைப்பை துரிதப்படுத்துவதற்காக கொரிய தீபகற்ப நெருக்கடியை சுரண்டுவது, முக்கியமாக வட கொரியாவிற்கு எதிராக அல்ல, மாறாக அமெரிக்கா அதன் பிராந்திய மற்றும் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான முக்கிய சவாலாக கருதுகின்ற சீனாவிற்கு எதிராகத் தான் என்ற நிலையில், வட கொரியாவின் இத்தகைய போர்குணமிக்க ஆனால் வெற்று அச்சுறுத்தல்கள் அதனுடனான நேரடியான மோதல்களை தூண்டுவதாகவுள்ளன.

MSNBC இன் நேற்றைய ஒரு நேர்காணலில், ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர்.மெக்மாஸ்டர், வட கொரியாவால் முன்வைக்கப்படும் “அபாயத்தை மிகைப்படுத்த முடியாது” என்று தெரிவித்ததோடு, இராணுவ தாக்குதல்கள் உட்பட, அனைத்து தேர்வுகளும் மேஜை மீது தயார் நிலையில் இருப்பதாக மீண்டும் அறிவித்தார். அது “முக்கியமாக தென் கொரிய மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற விதத்தில், மாபெரும் விளைவை கொண்ட யுத்தமாக இருக்கும்…” என்று அவர் ஒப்புக்கொண்டார் ஆனால், அமெரிக்க ஜனாதிபதி “ஆழமாக விளக்கியுள்ளார்” என்பதைக் குறிப்பிட்டு, அச்சுறுத்துவதில் இருந்து விலகிவிடவில்லை.