ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Professor Sean McMeekin and the construction of a historical lie (Part II)

பேராசிரியர் சோன் மக்மீக்கனும் ஒரு வரலாற்று பொய்யை கட்டமைத்தலும் (பகுதி- II)

By David North
10 July 2017

ஜூன் 30, 2017 அன்று, உலக சோசலிச வலைத் தளம்பேராசிரியர் சோன் மக்மீக்கன், லெனின் விரோத செல்வாக்கிழந்து போன அவதூறுகளை புதுப்பிக்கிறார்” என்பதை பதிவிட்டது. எனது கட்டுரையானது, ஜூன் 19 அன்று நியூயோர்க் டைம்ஸ் இல் பேராசிரியர் சோன் மக்மீக்கனால் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரைக்கு பதிலாகும். இதில் பார்ட் (Bard) கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியர் 1917 ஏப்ரலில் லெனின் ஜேர்மன் முடியாட்சியின் ஒரு முகவராக திரும்பி வந்தார் என்று குற்றம் சாட்டியிருந்தார். ஜூன் 30 கட்டுரையில் நான் குறிப்பிட்டவாறு:

கட்டுரையானது மக்மீக்கனின் அண்மையில் வெளியான புத்தகமான, ரஷ்ய புரட்சி: ஒரு புதிய வரலாறு என்பதை அடிப்படையாக கொண்டிருந்தது. ஸ்பெயினின் ஃபிராங்கோ, சிலியின் பினோசே, அல்லது அமெரிக்காவின் சொந்த J. எட்கார் ஹூவர் தங்களின் ஓய்வு நேரத்தில் “வரலாற்று எழுத்தை” எழுதுவதாயின் ரஷ்ய புரட்சி பற்றி என்ன எழுதியிருப்பார்களோ அவ்வாறான வகையானதே அதுவென்று சிறப்பாக விவரிக்கப்பட முடியும். அந்த புத்தகம் வரலாறு சம்பந்தமான படைப்பு என்று விவரிக்க முடியாதது, ஏனெனில் மக்மீக்கன் இடம் உண்மைகளுக்காக தேவைப்படும் அறிவு மட்டம், உண்மைகளுக்கான மதிப்பு மற்றும் தேர்ச்சிபெற்ற தொழில்முறைத் திறன் பற்றாக்குறையாக இருக்கிறது. மக்மீக்கன் இன் புத்தகம் என்பது சாதாரணமாக சொன்னால் வெறுமனே கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்திற்கான ஒரு முயற்சி எனலாம், அதிலிருந்து ஒருவரும் எதையும் கற்றுக்கொள்ள முடியாது.

கடந்த வாரங்களில், நான் ”ஜேர்மன் தங்கம்” பற்றிய பிரச்சினையை தொடர்ந்து படித்திருக்கிறேன். அது பல பத்தாண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவு வரலாற்று ஆய்வுக்குரிய விஷயமாக இருந்து வந்திருக்கிறது. அக்கறை கொண்ட வரலாற்றாசிரியர்களால் ஸ்தாபிக்கப்பட்டிருந்தவற்றுடன் மக்மீக்கன் இன் குற்றச்சாட்டுக்களை ஒப்பிடுவதில் குறிப்பாய் நான் ஆர்வம் கொண்டேன்.

நான் மக்மீக்கனின் புத்தகத்தை மதிப்பீடு செய்கையில், எனது கவனம் பின்வரும் அத்தியாயம் எட்டில், போல்ஷிவிக் தலைவருக்கு எதிரான பேராசிரியரின் குற்றச்சாட்டு பற்றிய பின்வரும் உரைப் பகுதியின்பால் ஈர்க்கப்பட்டது:

இடைக்கால அரசாங்கத்திற்காக எதிரி ஒற்றர் அமைப்பை வேவு பார்த்த கர்னல். பி.வி. நிக்கிட்டன், குற்றச்சாட்டிற்கு ஆதாரமான சான்று தந்திகளை தனது நினைவுகளில் இருந்து மீளத் தந்தார். அதில் அவரும் கூட போல்ஷிவிக் முகவர் இவ்ஜீனியா சுமென்சன் (Evgeniya Sumenson) விசாரணையின்போது பணத்தை போல்ஷிவிக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்த, போலிஷ் வழக்கறிஞர் Miecyslaw Kozlovsky க்கு அனுப்பியதாக ஒத்துக் கொண்டார் (அதில் அவர் ஜேர்மன் இறக்குமதி வணிகத்தில் மாற்றிய பணத்தை) என்று குறிப்பிட்டார். 1917ல் ரஷ்யாவை விட்டுச் சென்ற பின்னர், கெரென்ஸ்கி தான் பார்த்ததாக தெரிவித்த, சுமென்சனின் கணக்கிலிருந்து சைபீரியன் வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட நன்கறிந்த 750,000 ரூபிள்கள் எடுப்பு உட்பட, ஆவணங்கள் பற்றிய கூட்டுநாடுகளின் உளவுத் தகவல் (பின்னர் சுயசரிதை குறிப்புக்களில் எழுதினார்) பற்றி விரிவாகக் கூறினார். இதுவரைக்கும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் ரஷ்ய ஆவணக் காப்பகத்திலிருந்து அவற்றை உறுதிப்படுத்தும் ஆதாரப் பற்றாக்குறையினால், இந்த சச்சரவை உண்டுபண்ணக்கூடிய விஷயங்கள் தொடர்ந்து கட்டாயம் தெளிவற்றதாகவே இருப்பதாக கூறினர்.[1]


சோன் மக்மீக்கன்

மக்மீக்கன் இந்த உரைப் பகுதிக்கு அடிக்குறிப்பு, 21ஐ சேர்க்கிறார், அது வாசகரை பக்கம் 372 இல் ஒரு குறிப்புக்கு அழைத்துச் செல்கிறது. அக்குறிப்பு கூறுவதாவது, “அதுதான் போல்ஷிவிக்குகளின் ஜேர்மன் தங்கம் விவாதத்திற்கு வந்துள்ளது” (1995) என்பதில் செமியோன் லியான்ட்ரேஸ் இன் முடிவுரையாக இருந்தது.” எனவே இங்கு மக்மீக்கன், அவரது வாதத்திற்கு ஆதரவாக ஜேர்மன் அரசாங்க மூலத்திலிருந்து போல்ஷிவிக் கஜானாவுக்கு பணம் மாற்றப்பட்டதற்கான தந்திச் சான்று என இன்னொரு வரலாற்றாசிரியர் செமியோன் லியான்ட்ரேஸ் (Semion Lyandres) ஐ மேற்கோள் காட்டுவதும் “தெளிவற்றதாகவே இருப்பதை” நாம் பார்க்கிறோம்.

வரலாற்றை பொய்ம்மைப்படுத்துவதில் தேர்ந்தவர்களான ரொபேர்ட் சேர்வீஸ் (Robert Service) மற்றும் இயன் தாட்சர் (Ian Thatcher) போன்றவர்களை கையாண்டதால், மக்மீக்கனால் குறிப்புரைக்கப்படும் செமியோன் லியான்ட்ரேஸ் ஆல் செய்யப்பட்ட வேலையை ஆய்வு செய்வது அவசியம் என்பதை நான் அறிவேன். பக்கம் 372ல் எலியின் கசப்பான நாற்றம் வீசியது. மக்மீக்கன், லியான்ட்ரேஸ் ஆய்வை துல்லியமாக தந்திருப்பார் என்று என்னால் எளிதாய் ஊகம் செய்ய முடியவில்லை.

செமியோன் லியான்ட்ரேஸ், Notre Dame பல்கலைக் கழகத்தில் ஒரு வரலாற்றுப் பேராசிரியர் ஆவார். வரலாற்றுத் துறையானது அவரது தொழிற்துறை வல்லமை பற்றிய இந்த ஒரு குறுகிய சுயசரிதையை வழங்குகின்றது:

செமியோன் லியான்ட்ரேஸ் நவீன மற்றும் தற்கால ரஷ்ய வரலாறு: வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் ஆவணங்கள் என்ற சர்வதேச தொடரின் நிறுவனர் மற்றும் வட அமெரிக்க ஆசிரியர் மற்றும் நவீன ரஷ்ய வரலாறு மற்றும் வரலாற்றியல் இதழ் இன் இணை நிறுவன ஆசிரியர். அவரது வெளியீடுகளுள் போல்ஷிவிக்குகளின் ரஷ்ய தங்கம் விவாதத்திற்கு வந்துள்ளது: 1917 குற்றச்சாட்டுகள் பற்றிய ஒரு விசாரணை (1995); A. V. Smolin உடன் சேர்ந்து எழுதிய அரசு டூமாவின் தலைவரும் இடைக்கால அரசாங்கத்தில் போர் அமைச்சருமான அலெக்சாண்டர் குச்கோவின் நினைவுக் குறிப்புக்கள் (1993), சைபீரியாவில் உள்நாட்டு யுத்தத்தில் மற்றும் சீனாவில் புலம்பெயர்வு பற்றிய தொடர்வரலாறு: Petr Vasil’evich Vologodskii குறிப்புக்கள் 1918-1925 (2002), 2 தொகுதிகளில் (with Dietmar Wulff), மற்றும் மிக அண்மையில், ஜாரிசத்தின் வீழ்ச்சி: பிப்ரவரி புரட்சியின் சொல்லப்படாத கதை (ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் 2013 புதுப்பிக்கப்பட்ட தாள் பதிப்பு 2014). அவர் ஜேர்மன்-அமெரிக்கன் அகாடமிக் கவுன்சில், John M. Olin Foundation, NEH, மற்றும் Earhart Foundation இடமிருந்து பெரும் விருதுகள் பெற்றிருக்கிறார்; மற்றும் ஸ்லாவிய மதிப்புரையான, Kritika, சோவியத் மற்றும் சோவியத்துக்குப் பிந்தைய பார்வை, ரஷ்ய வரலாறு, Berliner Jahrbuch für osteuropaische Geschichte, Zmanim, நவீன ரஷ்ய வரலாறு மற்றும் வரலாற்றியல் இதழ் மற்றும் Otechestvennaia istoriia.[2] ஆகியவற்றில் பல கட்டுரைகள் எழுதி வெளியிட்டிருக்கிறார்.


செமியோன் லியான்ட்ரேஸ்

இந்த விசாரணைக்கு பொருத்தமான படைப்பான, போல்ஷிவிக்குகளின் ஜேர்மன் தங்கம் விவாதத்திற்கு வந்துள்ளது, 132 பக்க வரலாற்றுக் குறிப்பு, ரஷ்ய மற்றும் கிழக்கு ஐரோப்பிய ஆய்வுகளில் Carl Beck Papers ஆல் 1995ல் வெளியிடப்பட்டது. லெனினுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இடைக்கால அரசாங்கம் அடிப்படையாக கொண்ட ஆவணங்களை என்றும் செய்திராத அளவுக்கு விரிவாகச் செய்த ஆய்வு ஆகும். பிரெஞ்சு அரசாங்கத்தால் இடைமறிக்கப்பட்டு, இடைக்கால அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட, ஜேர்மன் அரசுக்கும் போல்ஷிவிக்குகளுக்கும் இடையிலான பணப் பரிவர்த்தனை பற்றி ஆவணப்படுத்தியதாக கருதப்படும் 66 தந்திகளை. லியான்ட்ரேஸ் மொழிபெயர்த்து ஆய்வு செய்தார்.

இந்த வரலாற்று ஆய்வுக்கான முன்னுரையில், லியான்ட்ரேஸ் அத்தியாவசியமான பின்புல விளக்கத்தை வழங்கினார்:

1917 ஜூலை 4 அன்று மாலை, அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியின் உச்சத்தில் (“ஜூலை நாள்கள்”) இடைக்கால அரசாங்கத்தின் நீதி அமைச்சர் Pavel N. Pereverzev போல்ஷிவிக் தலைவர்களின் தேசத்துரோக நடவடிக்கைகளை குற்றஞ்சாட்டும் பத்திரிகை செய்தியை அதிகாரபூர்வமாய் உறுதிப்படுத்தினார். அடுத்த நாள் வெளியிட்ட அறிக்கையானது, லெனின் ஜேர்மன் அரசாங்கத்தால் ஜேர்மனியுடன் பிரத்தியேகமான அமைதி உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ளவும் “இடைக்கால அரசாங்கத்தில் ரஷ்ய மக்களின் நம்பிக்கையை கீழறுக்கவும்” ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டார் என்று குற்றம் சாட்டியது. அவரது நடவடிக்கைக்கான பணம், பேர்லினில் இருந்து பெட்ரோகிராட்டுக்கு ஸ்டாக்ஹோம் வழியாக அனுபப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. ஸ்டாக்ஹோமில் இந்த பணமாற்றம் போல்ஷிவிக் Jakub Fürstenberg (Hanecki) மற்றும் ரஷ்ய-சமூக ஜனநாயகவாதி Alexander Israel Helphand (பார்வுஸ்) ஆல் மேற்கொள்ளப்பட்டது. பெட்ரோகிராட்டில் பணம் பெற்ற முக்கிய நபர்கள் போல்ஷிவிக் வழக்கறிஞர் Mieczyslaw Kozlowski மற்றும் Furstenberg-Hanecki இன் உறவினரான Evgeniia M. Sumenson அப்பெண்மணியும் Mieczyslaw Kozlowski உம் Fürstenberg உடன் நிதித் தொடர்புகளை வைத்துக்கொள்வதற்கு மூடி மறைப்பாக வர்த்தக வணிகத்தை நடத்தினர், இவ்வாறு சட்டரீதியான வர்த்தக நடவடிக்கைபோல் ஜேர்மன் நிதியை மாற்றினர்.

வெளியிடப்பட்ட அறிக்கை குற்றச்சாட்டுகளுக்கான இரு வேறுபட்ட வகையான ஆதாரத்தை பற்றிக் குறிப்பிட்டது. முதலாவது குற்றச்சாட்டான –லெனின் ஜேர்மனியர்களுக்காக வேலைசெய்தார் என்பது— Ensign Dmitrii S. Ermolenko இன் ஆட்டங்காணும் சான்றிலேயே தங்கி இருந்தது. அவர் ஜேர்மன் முகாமில் ஒரு சிறைக் கைதியாக இருந்தபோது ஜேர்மன் உளவுத்துறை அதிகாரிகளால் தமக்கு கூறப்பட்டிருந்ததாக குற்றம்சாட்டி இருந்தார். இரண்டாவது குற்றச்சாட்டு –போல்ஷிவிக்குகள் ஜேர்மன் பணத்தைப் பெற்றனர்— என்பது, பெட்ரோகிராட்டிற்கும் ஸ்டாக்ஹோமிற்கும் இடையில் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டவர்களுக்கு இடையிலான இடைமறித்து பெறப்பட்ட தந்தி தொடர்புகளால் நன்கு ஆவணப்படுத்தப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுகளை கவனிப்பதற்கு, இடைக்கால அரசாங்கமானது பெட்ரோகிராட் நீதிமன்றத்தின் அரசுவழக்கறிஞர் Nikolai S. Karinskii ஆல் தலைமை தாங்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. விசாரணைக் குழுவானது பரிமாறிக்கொண்ட தந்திகளைப் பயன்படுத்தி, இரண்டு வாரங்கள் கழித்து ஜூலை 21 அன்று போல்ஷிவிக் தலைவர்கள் தேசத்துரோகம் செய்ததாக சம்பிரதாய பூர்வமாக குற்றம் சாட்டியது. [3]

முகவுரையில், மக்மீக்கன் 22 ஆண்டுகள் கழித்து லெனினுக்கு எதிரான அவரது குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையைக் கொண்டிருக்கும் ஆதாரம் பற்றி லியான்ட்ரேஸ் பல முக்கிய புள்ளிகளை எழுப்பி இருந்தார். மூலத்தில் நிக்கிட்டனால் மேற்கோள் காட்டப்பட்ட தந்திகள் தொடர்பாக பேராசிரியர் லியான்ட்ரேஸ் எழுதினார்:

ஆயினும், அவற்றின் மூலமும், உண்மையும் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை என்பதை எடுத்துக் கொண்டால், இந்த விஷயதானங்கள் எச்சரிக்கையுடன் கட்டாயம் கையாளப்பட வேண்டும். முதலில், நிக்கிட்டன் 1917ல் பிரெஞ்சு அரசாங்கத்திடமிருந்து அவர் கிட்டத்தட்ட இருபத்தாண்டுகளுக்கு முன்னர் 29 பிரதிகளை பெற்றபொழுது அவர் எடுத்திருந்த குறிப்பிலிருந்து, மறுதயாரிப்பு செய்தார். இரண்டாவதாக பிரெஞ்சு அவற்றின் பரிமாற்றத்தின்பொழுது இடைமறித்திருந்தவை, மறு உற்பத்தி செய்யும்பொழுதான துல்லியம் பற்றி சரிபார்ப்பது இயலாததாகும். மற்றும் இறுதியாக, நிக்கிட்டன் போல்ஷிவிக் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன் குறுகிய காலத்தில் அவர் அதைப்பெற்றதற்காக, ஆவணங்களை ஆய்வு செய்வதற்குத் தேவைப்பட்ட அளவுக்கு அவருக்குப் போதுமான கால அவகாசமில்லாதிருந்தது. இவை அனைத்தும் நிக்கிட்டின் 29 தந்திகளில் எண்கள், தேதிகள். அனுப்பிய நேரங்கள் இல்லாமையைப் பற்றி விவரிக்கலாம். மேலும் அவற்றில் குறிக்கப்பட்ட பெயர்கள் மற்றும் முகவரிகள் பற்றிய எண்ணற்ற தவறுகள், துல்லியமின்மைகள் மற்றும் எழுத்துப் பிழைகள் தந்திகளின் அர்த்தத்தைக் கூற முயற்சித்தவர்களால் அவர்கள் ஒரு தவறான முடிவுகளுக்கு இட்டுச்செல்ல தவிர்க்க முடியாமல் வழிவகுக்கும்.[4]

லியான்ட்ரேஸ் தொடர்ந்தார்:

29 தந்திகளும் நாளிடப்பட்டு விளக்கமளித்து முறைப்படுத்துவதற்காக மேற்கொண்ட ஒரே ஒருங்குகுவிந்த முயற்சி, புலம்பெயர்வாழ் வரலாற்று ஆசிரியர் Sergei P. Mel’gunov ஆல் 1940ல் செய்யப்பட்டது. இருந்தும், மேலே குறிப்பிடப்பட்ட நிக்கிட்டன் தந்திகளின் பற்றாக்குறைகளை கருத்தில் கொண்டால், அந்த வேளை Mel’gunov க்கு இருந்த மட்டுப்படுத்தப்பட்ட வளங்களையும் எடுத்துக்கொண்டால், வரலாற்றாசிரியர் தந்திகளின் பொருளை போதுமான அளவு விளக்கப்படுத்தியிருக்க முடியாது. உண்மையில், தந்திகள் ஜேர்மன் பணம் போல்ஷிவிக்குகளுக்கு மாறியதை உறுதிப்படுத்துகிறதா என்று குறிப்பிட்ட முடிவுகளுக்கு வரமுடியாது, அவை சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளுக்கு ஒரு மூடிமறைப்பாக சேவைசெய்யக்கூடிய ஒரு வகை சங்கேத வார்த்தை கொண்ட செய்தி தொடர்பைக் குறித்தன என்று மட்டுமே உறுதிப்படுத்தின. [5]

லியான்ட்ரேஸ் தெளிவாகவே மக்மீக்கனின் அடிப்படை வாதத்தில் வேறுபடுகிறார். Notre Dame பேராசிரியர், தந்திச் சான்று பற்றிய நிக்கிட்டனின் பதிப்பின் நம்பகத்தன்மையை பெரிதும் கேள்விக்குரியதாக்க கவனத்தை ஈர்க்கின்றார். ஆனால் என்ன தொடர்கிறது என்றால், மக்மீக்கன் முன்வைப்பின் மிகத் துணிச்சலான காரியம்தான், ஏனெனில் அது அவரின் மிகவும் நனவான மற்றும் அவரது ஆதார வளத்தைப் பற்றிய வேண்மென்றே பொய்மைப்படுத்தலை அது அம்பலப்படுத்துகிறது. லியான்ட்ரேஸ் எழுதினார்:

நிக்கிட்டனின் சுயசரிதைக் குறிப்புக்களும் சரி Mel’gunov இன் ஆய்வும் சரி தந்திகளின் அர்த்தம் மீதான சர்ச்சையைத் தீர்க்கவில்லை. பதிலாக, இடைக்கால அரசாங்கமானது நிக்கிட்டனால் மறுஉற்பத்தி செய்யப்பட்ட அந்த தந்திகளைத்தான் கவனத்தில் எடுத்துக்கொண்டது என்று அடுத்து வந்த வரலாற்றாசிரியர்கள் மத்தியில் எண்ணத்தை ஏற்படுத்தியது. [6]

நான் வாசகரிடமிருந்து ஒரு பெரிய அளவிலான ஒருங்குவிப்பை கோருவதாக உணர்கிறேன். வரலாற்றை பொய்மைப்படுத்தும் நிகழ்ச்சிப்போக்கு பற்றிய தடய ஆய்வானது விவரம்பற்றி எச்சரிக்கையுடன் கவனிக்குமாறு கோருகிறது. மக்மீக்கன் ஆதாரத்தை அவரது நம்பக்கூடிவாறு பூச்சுப்பூசும் திட்டமிட்ட திரித்தல்களை மூடிமறைக்க கூடியதாக்கும் ஒரு வடிவை ஆக்கும் திசைதிருப்பலில் தேர்ந்தவர். தந்தி சான்று அதுதான் போல்ஷிவிக்குகளின் ஜேர்மன் தங்கம் விவாதத்திற்கு வந்துள்ளது (1995) என்பதில் செமியோன் லியான்ட்ரேஸ் இன் முடிவுரையாக இருந்தது” என்று கூறும் அடிக்குறிப்புக் கொண்டதுடன் ஆதரிக்கும் “விளக்கமுடியாததாக தொடர்ந்து இருக்கும்” என்ற மக்மீக்கன் இன் அறிக்கையை வாசகர் திரும்பிப்பார்க்க வேண்டும்.

இது, லியான்ட்ரேஸ் இன் ஆய்வை திட்டமிட்டு பொய்மைப்படுத்தலாகும். லியான்ட்ரேஸ், மக்மீக்கன் ஆல் குறிக்கப்படும் அர்த்தத்தில் சான்றானது “விளக்கமுடியாததாக இருந்தாக வேண்டும்” என்று விளக்கவில்லை, அதாவது, “ஜேர்மன் தங்கம்” மீது லெனின் தங்கி இருந்தமை, மக்மீக்கன் அவரது 2017ல் புதிய வரலாறு என்பதை வெளியிடும் வரைக்கும் தெளிவாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் 1995ல் லியான்ட்ரேஸ், எழுத்துக்கள் 1937 வரலாற்றுக் குறிப்புக்களில் நிக்கிட்டனின் முன்வைப்புக்கள் மற்றும் 1940 இல் Mel’gunov குறிப்பிட்டவை நம்பத்தகுந்தவை அல்ல மற்றும் தவறாய் வழிகாட்டுவன. அவர்களின் எழுத்துக்களை நம்பி வரலாற்றாசிரியர்களால் போல்ஷிவிக்குளின் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய ஒரு அதிகாரபூர்வமான மதிப்பீட்டுக்கு வரமுடியவில்லை. வரலாற்றாசிரியர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்த இந்த குழப்பத்திற்கான மிக முக்கிய காரணம் நிக்கிட்டன் மற்றும் Mel’gunov இன் எழுத்துக்கள் 29 தந்திகளையே அலசின, அவை எந்தவிதத்திலும், மோசமாக மறு உற்பத்தி செய்யப்பட்டன, முழுதும் தவறுகள் இருந்தன மற்றும் முறையற்ற வகையில் ஆய்வு செய்யப்பட்டன. லியான்ட்ரேஸ் இது முழுமை பெறாத மற்றும் தவறாக வழிகாட்டும் ஆவணம் என்று விளக்கினார். லெனின் ஒரு ஜேர்மன் முகவராக இருந்தார் என்ற இடைக்கால அரசாங்கத்தின் குற்றச்சாட்டின் உண்மையான அடிப்படை 66 தந்திகள் கொண்ட தொகுதியில் தங்கி இருந்தது.

1990களின் மத்தியில் பேராசிரியர் லியான்ட்ரேஸ், இடைமறிக்கப்பட்ட 66 தந்திகளின் முழுத்தொகுதியையும் ஆராய்ந்த, முதல் வரலாற்றாசிரியர் ஆவார். இடைக்கால அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகளை ஆதாரப்படுத்துவதை காட்டிலும், முழு ஆவணங்களை பற்றிய ஆய்வானது போல்ஷிவிக்குகளுக்கு எதிரான அதிகாரபூர்வ வழக்கை ஒன்றுமில்லாமற் செய்துவிட்டன. லியான்ட்ரேஸ் எழுதினார்:

தற்போதைய பணியானது ஒவ்வொரு தனித்தனி தந்தியையும், அதேபோல 66 இன் முழுத் தொகுதியையும் பற்றிய ஒரு ஆய்வை வழங்குகிறது, அது ஜூலைக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதரவை அவற்றில் காணவில்லை. போல்ஷிவிக் கஜானாக்களில் நிதிகள் கொட்டுவது ஒருபுறம் இருக்கட்டும், உண்மையில் ஸ்டாக்ஹோமிலிருந்து பெட்ரோகிராட்டுக்கு நிதிகள் மாறியதாக தந்திகளில் எந்த ஆதாரமும் இல்லை. அந்த நேரத்தில் 100,000 ரூபிள்கள் வரைக்கும் பெருந்தொகை மாறியது, தந்தித் தொடர்புகளில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. ஆனால் இந்த தொகைகள் Parvus-Fürstenberg நிறுவனத்தால் ஸ்கான்டிநேவியாவிலிருந்து பெட்ரோகிராட்டுக்கு சரக்குகள் ஏற்றுமதி செய்ததற்கான பணம் செலுத்தல்களாக இருந்தன, மற்றும் பணம் செலுத்தல்கள் ஸ்டாக்ஹோமுக்கு சென்றதாகும் மாறாக எதிர்த் திசையில் அல்ல. இடைக்கால அரசாங்கத்தால் குறிக்கப்பட்டவாறு, Sumenson இந்த நிதியப் பரிவர்த்தனைகளை நிர்வகித்திருந்த போதிலும், அப்பெண்மணி, ஒரு பணம் அனுப்புநராக இருந்தாரேயொழிய பணம் பெறுபவராக இல்லை. இந்த முடிவானது, ஜூலை விசாரணை பற்றிய புதிதாக வெளியிடப்பட்ட ஆவணங்களில் எதிர்பாராதவகையில் கூடுதல் ஆதாரங்களைக் கண்டது. Parvus-Fürstenberg-Kozlowski-Sumenson வலைப்பின்னல்களிலிருந்து போல்ஷிவிக்குகள் ஜேர்மன் நிதியை பெற்றார்கள் என்று ஆதாரத்தை தேடும் தொடர்ந்த தேடலாக மட்டும் நிற்கவில்லை, (இடைக்கால அரசாங்கமானது Sumenson இன் வர்த்தக நடவடிக்கைகள் பற்றிய ஆவணங்களை மட்டுமல்லாமல், 1914-1917 ஜூலை வரையிலான ரஷ்யாவுக்குள் வந்த அனைத்து வெளிநாட்டு பணப் பரிமாற்றங்களையும் முற்றுமுழுதாக ஆய்வு செய்தது) விசாரணையானது “ஜேர்மன் தொடர்பு”க்கான ஆதாரம் எதுவும் இல்லை என முடிவுக்கு வந்தது. [7]

தந்திகள் பற்றிய லியான்ட்ரேஸ் இன் 1995 ஆய்வானது இதைவிடத் தெளிவானதாக இருக்க முடியாது. பரிவர்த்தனைகளின் தன்மை இனியும் இருளில் இல்லை. பணமானது ஸ்டாக்ஹோமிலிருந்து பெட்ரோகிராட்டுக்கு வரவில்லை, மாறாக பெட்ரோகிராட்டிலிருந்து ஸ்டாக்ஹோமுக்கு, “Parvus-Fürstenberg நிறுவனத்தால் சரக்குகள் ஸ்கான்டிநேவியாவிலிருந்து பெட்ரோகிராட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான பணம் செலுத்தல் என்றவகையில் வந்தது. சரக்குகள் பெட்ரோகிராட்டுக்கு அனுப்பப்பட்டன, பணம் செலுத்தல்கள் ஸ்டாக்ஹோமுக்குச் சென்றன மாறாக எதிர்த்திசையில் அல்ல.”

“அதுபோல பெட்ராகிராட்டுக்கும் ஸ்டாக்ஹோமுக்கும் இடையில் பராமரிக்கப்பட்ட தந்தித் தொடர்பு சங்கேதமுறையில் குறியிடப்பட்டிருந்தது என்பதற்கான சான்றும் இல்லை” என்று கூட லியான்ட்ரேஸ் கண்டறிந்தார்.[8] இது போல்ஷிவிக்குகள் ஸ்டாக்ஹோமிலிருந்து பெறும் சட்டவிராத நிதிகள் பெறலை மறைப்பதற்கு சங்கேதமுறையை பயன்படுத்துவதன் மூலம் மறைக்க முயன்றனர் என்ற இடைக்கால அரசாங்கத்தின் கூற்றுக்கு மரண அடியாக அதனைக் கீழறுத்தது. மக்மீக்கன், லியான்ட்ரேஸ் ஆல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கண்டறிதல்களை சர்வசாதாரணமாக அலட்சியம் செய்கிறார்.

பெரும் அறிஞர்கள் லியான்ட்ரேஸ் இன் தனிக்கட்டுரையை “ஜேர்மன் தங்கம்“ பற்றிய சர்ச்சை தொடர்பான ஆய்வில் ஒரு மைல்கல்லாக அங்கீகரித்துள்ளனர். 2005ல் வெளியிடப்பட்ட லெனினின் சுயசரிதை என்ற தனது நூலில், வரலாற்றாசிரியர் கிறிஸ்டோபர் ரீட் எழுதினார்: “(ஜேர்மன் தங்கம்) கட்டுக்கதைகள் S. லியான்ட்ரேஸ் உடைய ‘போல்ஷிவிக்குகள்’ “ஜேர்மன் தங்கம்” விவாதத்திற்கு வந்துள்ளது’....” [9] என்பதில் மிகவும் வெற்றிகரமாக மறுதலிக்கப்பட்டது. பேராசிரியர் ரெக்ஸ் வேட், 1996ல் வெளியிடப்பட்ட ஸ்லாவிக் ரிவீயு சஞ்சிகையில் லியான்ட்ரேஸ் ஆய்வைப் பற்றி விளக்குகிறார்:

லியான்ட்ரேஸ் ஆவணங்களைப் படிப்பதில் அருமையான பணியைச் செய்திருக்கிறார் மற்றும் அவற்றை வெளியிடுவதற்காக தயாரித்திருக்கிறார். அவற்றுள் ரஷ்ய மூலங்கள் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் இரண்டும் உள்ளடங்கும், அத்தோடு சேர்ந்திருக்கும் நீண்ட குறிப்புக்கள் மற்றும் கருத்துரைப்புக்கள் அவற்றின் உள்ளடக்கத்தை, மற்றும் பொருளை தெளிவாக்குகின்றன. இது ஒன்றும் எளிதானதல்ல. அவை தந்திகள், அதன் பொருள் அவை மறைமுக சங்கேத வடிவில் உள்ளன என்பது மட்டுமல்லாமல், ரஷ்ய மொழியில் எழுதப்பட்டவை –அவற்றுள் பெரும்பாலானவை– இலத்தீன் மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு, பெயர்கள் திரிக்கப்பட்டு திரும்ப ரஷ்ய மொழிக்கே கொண்டுவரப்பட்டுள்ளன. ரஷ்ய மற்றும் மேற்கத்திய நாட்காட்டிகள் (அந்த நேரம் 13 நாள்கள் வேறுபாடு கொண்டவை) அறிமுகப்படுத்தப்பட்டவை மேலும் தவறாக புரிதலுக்கு வழிவகுப்பன. லியான்ட்ரேஸ் இந்தப் பிரச்சினைகள் மற்றும் இதர பிரச்சினைகளையும் பெருங் கவனத்தில் கொண்டு பணியாற்றி இருக்கிறார். அவர் சர்ச்சையின் வரலாறு பற்றி, தந்திகளின் மூலம் மற்றும் 1917ல் அவை வெளியிடப்பட்டமை மற்றும் தந்திகளின் உள்ளடக்கம் மற்றும் முக்கியத்துவத்தின் ஒரு முடிவான அருமையான விளக்கத்தையும் தருகிறார்…

லியான்ட்ரேஸ் அவரது ஆவணங்கள் காட்டும் காட்சியை விட அதிகமாக சாதுர்யமாக எதையும் கூறவில்லை: 1917ல் முன்கணிக்கப்பட்ட Helphand தடம் வழியாக ஜேர்மன் பணம் போகவில்லை. ஆயினும், ரஷ்ய புரட்சியை பற்றிய நமது புரிதல்களில் அது பெரும் பங்களிப்பாக இருந்தது. அது அனைத்து சீரிய வரலாற்றாளர்களின் விளக்கத்தையும் பாதிக்க வல்லவை மற்றும் ஜேர்மன் தங்கத்திற்கும் 1917ல் போல்ஷிவிக்குகளின் வெற்றிக்கும் உள்ள ஒரு நீரூபிக்கப்பட்ட தொடர்பை அனுமானிக்க சிரத்தையின்றி நாடும் ஒரு பரந்த வாசிப்பாளர்களிடம் செல்வாக்கு செலுத்தும். [10]

பேராசிரியர் வேட் இன் மதிப்பீட்டிலுள்ள முக்கிய சொற்றொடர் “அக்கறை கொண்ட அனைத்து வரலாற்றாசிரியர்களும்” என்பதாகும். சோன் மக்மீக்கன் ஒரு “அக்கறை கொண்ட” வரலாற்றாசிரியர் அல்ல. அவர் வரலாற்றாசிரியரே அல்லர். அவரிடம் உண்மைகளுக்கான மதிப்பு இல்லை. கொள்கை கோட்பாடற்ற ஒரு அரசு வழக்கறிஞர் ஒரு சோடிப்பு செய்யும் பாணியில், மக்மீக்கன் மேற்கோள்களை தவறாகப் பயன்படுத்துகிறார், குற்றங்களிலும் தவறுகளிலிருந்தும் தெளிவாக்கும் ஒரு சான்றை அலட்சியம் செய்கிறார் மற்றும் ஆவணங்களை பொய்மைப்படுத்துகிறார். லியான்ட்ரேஸ் ஆய்வு லெனினுக்கு எதிரான இடைக்கால அரசாங்கத்தினால் போடப்பட்ட வழக்கை செல்வாக்கிழக்கச் செய்துள்ளது என்று அவர் அறிவார். ஆனால், அவர் லியான்ட்ரேஸ் இன் நன்கு அறியப்பட்ட மற்றும் செல்வாக்குடைய வரலாற்றுக் குறிப்பை சர்வசாதாரணமாக அலட்சியம் செய்ய முடியாது என்பதால், 1995 பணியின் முடிவானது, லெனின் மற்றும் போல்ஷிவிக்குகள் பற்றிய அவரது சோடிப்பை மறுக்கவில்லை என்று ஒரு எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக, மக்மீக்கன் பொருத்தமான வகையில் இரட்டைத் தன்மை கொண்ட சொற்றொடரை நாடினார்.

இறுதியாக ஒரு புள்ளி: உலக சோசலிச வலைத் தளத்தால் பேராசிரியர் லியான்ட்ரேஸ் தொடர்பு கொள்ளப்பட்ட பொழுது, 1995ல் அவர் வந்த முடிவுகளை மாற்றுவதற்கு இட்டுச்செல்லும் புதிய தகவல் எதனையும் தாம் பார்க்கவில்லை என்று குறிப்பிட்டார்.

சோன் மக்மீக்கன் நிலைப்பாடு அவரை ஒரு வரலாற்றைப் பொய்மைப்படுத்துபவர் என்று அம்பலமாக்கியுள்ளது.

** ** **

 

[1] The Russian Revolution: A New History (New York: Basic Books, 2017), p. 133.

[2] Accessible online at https://history.nd.edu/faculty/directory/semion-lyandres/

[3]Lyandres, p. 1.

[4] Ibid, p. 4.

[5] Ibid

[6] Ibid

[7] Ibid, pp. 94-95, Italics in the original.

[8] Ibid, p. 95.

[9] Lenin by Christopher Read (London and New York: Routledge, 2005), p. 295.

[10] Rex A. Wade, Review of TheBolsheviks’ “GermanGold” Revisited: An Inquiry into the 1917 Accusations, by Semion Lyandres, in Slavic Review, Vol. 55, No. 2 (Summer, 1996), pp. 486-487.