ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US President Trump backs meeting between two Koreas

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இரு கொரியாக்களுக்கு இடையிலான சந்திப்பை ஆதரிக்கிறார்

By Peter Symonds 
8 January 2018

அமெரிக்கா அதன் மாபெரும் அணுசக்தி ஆயுதங்களைக் கொண்டு வட கொரியாவை அச்சுறுத்திக் கொண்டிருந்த சில நாட்களுக்குப் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த சரியான சூழ்நிலையின் கீழ், அவர் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் உடன் பேச்சுவார்த்தை நடத்திட விருப்பம் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இரண்டு வருடங்களில் இரு கொரியாக்களுக்கு இடையிலான முதல் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை நாளை நடைபெறவிருக்கிறது, பின்னர் தென் கொரியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு ஒரு குழுவை அனுப்பிட கிம் முன்வருவார்.  

சனியன்று Camp David இல் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த பேச்சுவார்த்தைகளுக்கு டரம்ப் ஆதரவு தெரிவித்தார். “இது வேலை செய்யும் என்று நான் நம்புகிறேன்,” என்றும் “அந்த இரு நாடுகளுக்கும் இடையில் இப்பேச்சுவார்த்தை வேலை செய்வதை பார்க்க நான் மிகவும் விரும்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்தார். மேலும், அந்த கூட்டம் “ஒரு பெரிய ஆரம்பமாக” இருந்ததெனவும், அதை மீண்டும் கொண்டுவர அவர்தான் பொறுப்பாளியாக இருந்தாரெனவும்  பெருமையடித்துக் கொண்டார். “நான் தலையிடாமல் இருந்திருந்தால், தற்போது அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்திருக்க மாட்டார்கள்,” என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.    

அவர் கிம் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறாரா என்று கேட்கப்பட்ட போது, ட்ரம்ப், “நிச்சயமாக, நான் எப்போதும் பேச்சுவார்த்தையை நம்புகிறேன்…. மிகச்சரியாக அதை நான் செய்ய வேண்டும். அது குறித்து எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.” அதே நேரத்தில், அவரது நிர்வாகம் “மிகவும் ஒரு உறுதியான நிலைப்பாட்டை” பராமரிக்கும் என்றும், அவரை “சுற்றி குழப்பம் எதுவும் இல்லை. கொஞ்சம் கூட இல்லை” என்றும் வலியுறுத்தினார்.

இருப்பினும், ட்ரம்ப் கடந்த வாரம் கூட அணுவாயுதம் மூலம் வட கொரியாவை நிர்மூலமாக்கப் போவதாக பகிரங்கமாக அச்சுறுத்தினார். பின்னர் கிம், அவரது புத்தாண்டு உரையில், அவரது மேசையில் ஒரு அணுவாயுத பொத்தானை அவர் வைத்திருப்பதாக அமெரிக்காவை எச்சரித்ததோடு, ட்ரம்ப் அவரது சொந்த அணுவாயுத பொத்தான் “மிகப்பெரியது மற்றும் மிகவும் சக்திவாய்ந்தது என்று ட்வீட் செய்தார், ஆனால் எனது பொத்தான் வேலை செய்யும்!” என்று தெரிவித்தார். ஆனால், வட கொரியாவின் மட்டுப்படுத்தப்பட்ட அணுவாயுதங்களை முற்றிலும் இல்லாதொழிக்கும் வகையிலான அதிநவீன விநியோக அமைப்புகளுடன் கூடிய ஆயிரக்கணக்கான அணுவாயுதங்களை ட்ரம்ப் தயாராக வைத்திருக்கிறார்.    

வட கொரியா அதன் அணுவாயுத மற்றும் ஏவுகணை திட்டங்களை கைவிடத் தவறுமானால் வட கொரியா மீது இராணுவ தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்கா மீண்டும் மீண்டும் எச்சரித்துவந்த நிலையில் ஏற்கனவே நிலவும் மிக பதட்டமான ஒரு சூழ்நிலையை ட்ரம்ப் பொறுப்பற்ற அவரது ட்வீட்களினால் இன்னும் எரியூட்டிக் கொண்டிருந்தார். மேலும், பேச்சுவார்த்தைகளுக்கு ஊக்கமளிப்பதற்கு மாறாக, தற்போது இருக்கும் மோதலை ஒரு அமைதியான முடிவுக்குக் கொண்டுவரும் சாத்தியத்தை கீழறுக்கும் விதமாகவே கருத்துக்களை வெளியிட்டார். 

ஊடக விமர்சனங்கள் மற்றும் உயர்ந்த வேலையை செயல்படுத்தும் ட்ரம்பின் திறமை குறித்து வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள அரசியல் தீப்பிழம்புக்குள் காங்கிரஸ் நுழைந்த பின்னர், ட்ரம்பின் மூத்த அதிகாரிகள் நேற்று ஜனாதிபதியின் ஒழுங்கற்ற கருத்துக்களை பாதுகாத்தனர்.

ABC இன் “This Week” நிகழ்ச்சியில் பேசுகையில், ஐ.நா. வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, ட்ரம்பின் தீமூட்டும் “அணுசக்தி பொத்தான்” பற்றிய டவீட் [வட கொரிய தலைவர்] கிம் ஐ அவரது கால் விரல்களுக்கு அடியில் வைத்திருக்கும்” என்றும், அணுவாயுதப் போர் நிகழுமானால் “அது எங்களை அல்ல, உங்களை அழித்துவிடக் கூடியதாக இருக்கும்” என்பதை அவருக்கு நினைவுபடுத்துங்கள் என்றும் அறிவித்தார்.   

இத்தகைய கருத்துக்கள் ஆசியாவில், அதன் கூட்டாளிகளுடன் அமெரிக்கா மீதான நம்பகத்தன்மையை பாதிக்கிறதா என்று கேட்கப்பட்ட போது, ஹேலி, “ஏதோவொன்று மக்களை பதட்டமடையச் செய்கிறது என்பதை நான் அறிவேன், ஆனால் நாங்கள் அதை செய்யவில்லை என்றால், நாங்கள் மிக ஆபத்தான ஒரு சூழ்நிலைக்கு உள்ளாவோம்” என்று தெரிவித்தார். அவர், “ஒவ்வொருவரும் அவரவர் கருத்துக்களைத் தான் பின்பற்ற வேண்டும்” என்ற ட்வீட் பொறுப்பற்றது  என்பது உட்பட, Cory Gardner மற்றும் John Cornyn போன்ற காங்கிரஸ் குடியரசுக் கட்சியினரிடமிருந்து வந்த விமர்சனத்தை நிராகரித்தார்.

இரண்டு கொரியாக்களுக்கும் இடையிலான நாளைய பேச்சுவார்த்தைகள் மூலமான ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கான எந்தவொரு ஆலோசனையையும் அமெரிக்க தூதர் நிராகரித்ததோடு, அவர் இவ்வாறு கூறினார்: “அவர்கள் ஒலிம்பிக் போட்டிகள் பற்றி பேசப் போகிறார்கள் என்று தான் நான் நினைக்கிறேன். மேலும் வேறெதையும் பற்றி அவர்கள் பேசப் போகிறார்களா என்பதையும் நான் அறியவில்லை.”

அமெரிக்க கோரிக்கைகளுக்கு முன்கூட்டியே வட கொரியா அணுவாயுத ஒழிப்புக்கு இணங்கினால் மட்டுமே வாஷிங்டன் மற்றும் பியோங்யாங் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்பதை ஹேலி வலியுறுத்தினார். “அவர் (ட்ரம்ப்) அடிப்படையாக கூறியது ஆம் மட்டும் தான், வட கொரியாவுடன் நாங்கள் பேசுவதற்கு ஒரு நேரம் வாய்க்கலாம், ஆனால் உண்மையில் அது நடக்கப் போவதற்கு முன்னால் நிறைய விடயங்கள் நடக்க வேண்டும். சோதனைகளை அவர்கள் நிறுத்த வேண்டும். அவர்களது அணுவாயுதங்களை தடை செய்வதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் விரும்ப வேண்டும். அவையனைத்தும் நிகழ வேண்டும்” என்றும் தெரிவித்தார்.   

CBS இல் “Face the Nation” நிகழ்ச்சியில் பேசுகையில், CIA இயக்குநர் மைக் போம்பியோ, வட கொரியா உடனான மோதல் நிலைப்பாட்டிற்கு ஒரு அமைதியான தீர்வு காண்பதற்கான நேரம் விரைவாக குறைந்து கொண்டே வந்ததாக சுட்டிக்காட்டினார். மேலும் அவர், “ஒருசில மாதங்களாகவே” “அணுவாயுத தாக்குதல் ஆபத்திற்கு அமரிக்க நகரத்தை உள்ளாக்க அதன் நுழைவாயிலை கடக்கும் முயற்சியில்,” பியோங்கயாங் இருந்தது, ஆனால் இன்னும் குறிப்பிடும்படி இருக்க மறுத்துவிட்டது” என்று தெரிவித்தார். 

வட கொரியா மற்றும் தென் கொரியாவிற்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் ஒரு நேர்மறையான நடவடிக்கையை பிரதிநிதித்துவப்படுத்துமா என்பதில் போம்பியோ சந்தேகம் கொண்டிருந்தார். “அது தான் விவகாரம் என்று நான் நம்புகிறேன்,” என்று தெரிவித்தார். “ஆனால், கடந்த கால வரலாறு இது வீணானது என்று சுட்டிக்காட்டும், [கிம் இன்] மூலோபாய கண்ணோட்டத்தில் எந்தவித உண்மையான மாற்றத்திற்கும் இது வழிவகுக்காது. அதாவது, அவரது அணுவாயுத திறத்தை பராமரிப்பதை அவர் இன்னும் தொடருவார். அதனால் தான் ஜனாதிபதி அது ஒத்துக்கொள்ள முடியாதது என்றார்” என்றும் தெரிவித்தார்.    

அக்டோபரில், ட்ரம்ப் தானே பகிரங்கமாக அமெரிக்க பாதுகாப்பு செயலர் றெக்ஸ் ரில்லர்சனை கண்டித்ததோடு, வட கொரியாவுடனான பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையை அமைப்பதற்கான இராஜதந்திர முயற்சிகள் என்பது “நேரத்தை வீணடிப்பதாகும்” என்று தெரிவித்தார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் முடியும் வரை, அமெரிக்க-தென் கொரிய கூட்டு பயிற்சிகள் நடத்தப்படுவதை காலம் தாழ்த்துவதற்கு ஒப்புக் கொள்வததையே ஜனாதிபதி அளிக்கும் ஒரே சலுகையாக இருக்கிறது.     

இருப்பினும், அமெரிக்க இராணுவம், கடந்த ஒரு வருடமாக வட கொரியா உடனான போருக்கு அதன் திட்டங்களை தீட்டிக் கொண்டே இருக்கிறது, மேலும் அத்தகைய ஒரு மோதலுக்கான ஒத்திகையாக தென் கொரியா உடன் ஒரு தொடர்ச்சியான பாரியளவிலான இராணுவ பயிற்சிகளையும் நடத்தி முடித்துள்ளது. கடந்த மாதம் கூட, மின்னல் வேகத்தில் தாக்கும் அமெரிக்க போர்விமானங்கள் உள்ளிட்ட ஒரு பெரும் அளவிலான கூட்டு வான் பயிற்சியை பென்டகன் நடத்தியது, அத்துடன் வட கொரியாவுக்குள் ஒரு இராணுவ தலையீட்டை நிகழ்த்துவதற்கான ஒரு சிறப்பு படை பயிற்சியையும் நடத்தியது.  

இந்த தயாரிப்புகள் வெறுமனே மரபு ரீதியானது மட்டுமல்ல, மாறாக அணுவாயுத போருக்கானதாகவும் உள்ளது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Centres for Disease Control and Prevention-CDC) ஜனவரி 16 அன்று, அமெரிக்கா மீதான ஒரு அணுவாயுத தாக்குதல் நிகழுமானால் கூட்டாட்சி, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்க ஒரு சிறப்பு விளக்கத்தை அறிவித்தன. 

அறிவிப்பு இவ்வாறு கூறியது: “ஒரு அணுவாயுத வெடிப்புக்கு சாத்தியம் இல்லை என்றாலும், பேரழிவுகரமான விளைவுகளை அது கொண்டிருக்கும், மேலும் முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கு அங்கு குறைந்தளவு நேரம் மட்டுமே இருக்கும். அத்தகைய நிகழ்வைச் சுற்றிலும் பயம் ஒருபுறம் இருந்தாலும், திட்டமிடலும், தயாரிப்பும் இறப்புகளையும் நோய்களையும் குறைக்கலாம்.” 

கடந்த ஒரு வாரமாக, அமெரிக்க, பணியாளர்களின் கூட்டுத் தலைமை குழுவின் முன்னாள் தலைவர் மைக் முல்லன் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் இருவரும், முன்பை விட வட கொரியா உடனான ஒரு அணுவாயுதப் போருக்கு உலகம் மிக நெருக்கமாக உள்ளதென அவர்கள் நம்புவதாக அறிவித்தனர்.