ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump uses Australian PM’s visit to threaten North Korea

ட்ரம்ப் ஆஸ்திரேலியப் பிரதமரின் வருகையை வடகொரியாவை அச்சுறுத்த பயன்படுத்துகிறார்

By Peter Symonds
24 February 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் உடன் நடந்த கூட்டு பத்திரிகையாளர் செய்தி மாநாட்டை, முடக்கும் பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவத் தாக்குதல் கொண்டு மீண்டும் ஒருமுறை வட கொரியாவை அச்சுறுத்தப் பயன்படுத்திக் கொண்டார். தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக்குகள் முடிவடைய இருக்கையில் மற்றும் அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஏப்ரலில் ஒரு பரந்த போர் பயிற்சிக்காக தயாரிப்புச் செய்துகொண்டிருக்கையில் இவ்வாறான ட்ரம்ப்பின் கருத்துக்கள் வருகின்றன.

வட கொரியா மீதான கடுமையான புதிய பொருளாதாரத் தடைகளின் அறிவிப்புக்கு சிலமணிநேரங்கள் கழித்துப் பேசுகையில், ட்ரம்ப் பின்வருமாறு எச்சரித்தார்: “பொருளாதாரத் தடைகள் வேலை செய்யவில்லை எனில் நாம் கட்டம் இரண்டுக்குச் செல்லவிருக்கிறோம், கட்டம் இரண்டு மிகவும் கடுமையானது. “கட்டம் இரண்டு” இல் சம்பந்தப்படுபவை என்னவென என்று குறிப்பிடாத அதேவேளை, அது “உலகிற்கு மிக மிக துரதிருஷ்டவசமானதாக” (“very, very unfortunate for the world”) இருக்கக் கூடும் என்று அவர் தெரிவித்தார்.

ட்ரம்ப்பும் அவரது உயர் அதிகாரிகளும் வட கொரியா தனது அணுஆயுதத்தைக் கைவிடாவிடுவதோடு ஊடுருவல் ஆய்வு  ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற அமெரிக்கக் கோரிக்கைகளுக்கு வட கொரியா சரணாகதி அடையாவிட்டால், இராணுவ நடவடிக்கை அவசியமாகும் என்று திரும்பத் திரும்ப எச்சரித்தனர். வடகொரியா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகளை -வாஷிங்டன் போருக்கான சிவப்புக்கோடு என்று குறிப்பிடும் ஒன்றை- கொள்வதற்கு “ஒரு சில மாதங்களே” என்ற நிலையை கொண்டிருந்தது என சிஐஏ இயக்குநர் மைக் பாம்பியோ ஜனவரி இறுதியில் அறிவித்தார்.

டர்ன்புல் அவரது கருத்துக்களில், அமெரிக்கா ஆஸ்திரேலியாவின் “மிக முக்கியமான மூலோபாய மற்றும் பொருளாதார பங்காளி” என்று குறிப்பிட்டார். “எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு நெருக்கமாக மற்றும் மேலும் நெருக்கமாக வைத்திருத்தல்” என்று கூறி, இரண்டு நாடுகளுக்கு இடையிலான இராணுவக் கூட்டை வலியுறுத்தினார். “நூறாண்டுகளான நட்பு மற்றும் இன்னும் நூறு வர இருக்கின்றன” என்று அறிவித்து, ஆஸ்திரேலிய, அமெரிக்க படையினர்கள் 1918ல் பிரான்சில் சேர்ந்து போராடி 100 ஆண்டுகள் ஆகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஆஸ்திரேலிய உறவுகளின் தற்காப்புக் குணத்தை வலியுறுத்தும், டர்ன்புல்லின் அடிமைத்தனம் குறிப்பிடுவது, அவரது அரசாங்கம் கணக்கிடமுடியா விளைவுகளுடன் ஒரு போரில் வாஷிங்டனுடன் இணைந்து அடி வைப்பதில் நடைபோடுகிறது என்ற உண்மையைக் கோடிட்டுக்காட்டுகிறது. அமெரிக்க போர்க்கப்பல்களுள் ஒன்றுக்கு யுஎஸ்எஸ்-கான்பெரா எனப் பெயரிடப்படும் என்று ட்ரம்ப் அறிவித்து, அமெரிக்காவுக்கு ஆஸ்திரேலியாவை விட “நெருக்கமான நட்பு” வேறில்லை என்பதற்கு ஒரு அடையாளமாகும் என்றார். இது ஒரு “மிகவும் அரிதான கௌரவம்” என்று டர்ன்புல் பணிவுடன் பதிலிறுத்தார்.

அமெரிக்கா அதன் மோதலை வட கொரியாவுடன் மட்டுமல்லாமல், சீனாவுடனும் விரைவுபடுத்துகின்ற நிலையில், பெண்டகன் வட ஆஸ்திரேலியாவை ஆசியாவில் அதன் இராணுவ நடவடிக்கைக்கான ஒரு முக்கிய அடித்தளமாகக் கருதுகின்றது. அமெரிக்க பசிபிக் ஆணையகத் தலைவரும் ஆக்கிரோஷமான சீன எதிர்ப்பு தலைவருமான அட்மிரல் ஹாரி ஹாரிஸ், எந்தப் போர் நடந்தாலும் அதில் கான்பெரா முழுவதுமாய் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்வதற்கு அமெரிக்கத் தூதுவராக அமர்த்தப்பட்டார்.

டர்ன்புல்லுடன் சேர்ந்து பக்கமாக அவரது வார்த்தைகளில், ட்ரம்ப், அமெரிக்கா வட கொரியாவை இலக்கு வைத்துக் கொண்டிருப்பது போலவே சீனாவையும் இலக்குவைத்துக் கொண்டிருக்கிறது என்று தெளிவுபடுத்தினார். தென் சீனக் கடலில் சீனா கடல்சார் உரிமை கோரல்களை சவால் செய்யும் நடவடிக்கைகளில், சீன இராணுவத்துடன் ஒரு நேரடி மோதலுக்கு இட்டுச்செல்லுவதை தூண்டும் பயிற்சியான- “சுதந்திரக் கடல்வழி” என்பதில் ஆஸ்திரேலிய போர்க் கப்பல்கள் அமெரிக்க கடற்படையுடன் சம்பந்தப்படுவதைப் பார்ப்பதற்கு தாம் “அன்பு” கொள்வதாக சுட்டிக்காட்டினார். டர்ன்புல் அரசாங்கம் எச்சரிக்கையுடன் கவனித்துவரும் வேளையில், ஆஸ்திரேலியன் செய்தித்தாள்கள் அத்தகைய நடவடிக்கைக்கான விரிவான திட்டங்களை பாதுகாப்புத் துறை வரைந்திருக்கின்றது என்று, இன்று சுட்டிக்காட்டின.

வெள்ளியன்று ஆரம்பத்தில், வெள்ளை மாளிகையானது ட்ரம்ப் ஒரு நாட்டில் “என்றும் அமல்படுத்திடாத மிகக்கடுமையான பொருளாதாரத் தடைகள்” என்று விவரித்ததை அறிவித்தது. கருவூலச்செயலர் Steven Mnuchin, அமெரிக்கா “உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் நாடுகளை கவனத்தில் வைக்கும்… வட கொரியாவுடன் வணிகம் செய்வோர் தங்களின் சொந்த அழிவில் வணிகம் செய்பவர்கள்…” என்று எச்சரிக்கை செய்தார்.

சமீபத்திய தடைகளில் இன்னும் 27 நிறுவனங்கள், 28 கப்பல்கள் மற்றும் ஒரு தனி நபர், கருவூலத்துறையின் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர், அமெரிக்காவில் அவர்களுடன் வணிகம் செய்வதிலிருந்து எவரையும் தடுத்துவைக்கும். கப்பல்கள் பதிவு செய்யப்படுவது அல்லது கீழ்மைப்படுத்துவது வடகொரியாவில் மட்டுமல்ல, சீனாவிலும் இன்னும் ஏழு நாடுகளிலுமாகும்.

டர்ன்புல்லை சந்தித்த Mnuchin, “வட கொரியா மீதானொரு ஆக்கபூர்வமான கலந்துரையாடலை” நாம் கொண்டிருந்தோம் என்று அறிவித்தார். “அவர் மிக ஆதரவாக இருக்கிறார் மற்றும் அவரை நாம் பொருளாதாரத் தடைகள் மீதாக எம்முடன் சேர்ந்து வேலைசெய்யுமாறு ஊக்கப்படுத்தினோம். இருவரும் ஒருவரையொருவர் பல ஆண்டுகளாக நன்கு அறிந்தவர் – இருவரும் அமெரிக்கப் பகாசுர முதலீட்டு வங்கியான Goldman Sachs இல் பங்குதாரர்கள்.

Mnuchin அமெரிக்கப் பொரளாதாரத் தடைகள் இறுதியில் வடகொரியா மீதான ஒரு முழு கடல் முற்றுகையாக அமல்படுத்தப்படுமா என்று கூற மறுத்துவிட்டார். ஆனால் அவர் ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானங்கள் அமெரிக்க கடற்படை கப்பல்களை விடும் நாட்டின் அனுமதியோடு கப்பலில் ஏறி, சரக்கை சோதனையிட அனுமதிக்கின்றது என்று அவர் குறிப்பட்டார். ட்ரம்ப் நிர்வாகமானது ஐ.நாவில் திணித்த ஒரு தீர்மானத்தை, நடுக்கடலில் கப்பல்களில் ஏறி அதைக் கைப்பற்றுதலான குற்றமாகக் கருதும் ஒன்றை, தனக்கு ஏற்புடையதாகக் கருதுவது- அதுதாமே ஒரு போர் நடவடிக்கை ஆகும்.

இந்த மாதத் தொடக்கத்தில் சமீபத்திய பொருளாதார தடைகளுக்கு சமிக்கை காட்டிய, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், கடந்த வாரம் குளிர்கால ஒலிம்பிக்கில் வட – தென் கொரிய இணைந்த குழு விளையாட்டரங்கில் நுழைகையில் தான் எழுந்து நிற்க மறுத்ததை சரி என்றார். வியாழன் அன்று அவர், அமெரிக்கா “கொலைகார சர்வாதிகாரங்களுடன் சேர்ந்து நிற்காது” என்று அறிவித்து பியோங்யாங் ஆட்சியை மீண்டும் சாடினார். அவர் எச்சரித்தார்: “வடகொரியா எங்கள் நாட்டை, எமது கூட்டாளிகளை அச்சுறுத்துவதை நிறுத்தும் வரைக்கும் அல்லது அவர்கள் தங்களின் அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை ஒரேயடியாகக் கைவிடும் வரைக்கும் நாம் பலமாக எழுந்து நிற்போம்” என்றார்.

பென்ஸ் ஒலிம்பிக்கில் குறிப்பால் காட்டுமுகமாக, பியோங்யாங்குடன்  பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு “அமைதி விளையாட்டுக்களை” பயன்படுத்தும் தென்கொரிய முயற்சிகளைக் கடந்து, வடகொரிய உயர் அதிகாரிகளை பண்புநலமின்றி நடத்தினார். பேச்சுவார்த்தைகளை முற்றிலும் நிராகரிக்காத அதேவேளை, ட்ரம்ப் நிர்வாகமானது வடகொரியா அணுஆயுதமற்றதாக்கும் அமெரிக்கக் கோரிக்கைகளுக்கு முற்றிலும் சரணாகதி அடைதலுக்குக் குறைவான எதனையும் ஏற்றுக்கொள்ளாது என்று வலியுறுத்தியது.

தென் கொரியாவும் அமெரிக்காவும் ஏற்கெனவே அறிவித்த கூட்டு இராணுவப் பயிற்சியானது, வட கொரியா ஒலிம்பிக்கில் போட்டியிடுவதற்காக தாமதப்படுத்தப்பட்டது. அது கனகர ஆயுதங்கள், போர்க்கப்பல்கள், அமெரிக்க குண்டு வீசிகள் மற்றும் போர்விமானங்களால் ஆதரவு கொடுக்கப்படும், 300,000 துருப்புக்களுக்கு மேல் கலந்துகொள்ளும் ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் பெரும் போர் சாகசங்கள் தவிர்க்க முடியாதபடி கொரிய தீபகற்பத்தில் பதட்டங்களை எழுப்பும். இந்தப் பயிற்சிகள் வட கொரியாவுடனான முழு அளவிலான போருக்கான மெல்லிய திரையிடப்பட்ட ஒத்திகை ஆகும்.

வடகொரியா மீது திணிக்க ட்ரம்ப் நிர்வாகமானது தயாரித்துக் கொண்டிருக்கும் பேரழிவின் அளவு மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் கடந்த வாரம் முடிவில் அமெரிக்க செனெட்டர் Jim Risch ஆல் இடப்பட்ட கருத்துக்களால் கோடிட்டுக்காட்டப்பட்டது. “உலகம் என்றும் கண்டிராத நெருப்பும் சீற்றமும்” என கடந்த ஆண்டு ட்ரம்ப்பின் சொந்த எச்சரிக்கையை எதிரொலிக்கும் வண்ணம், அமெரிக்கா மட்டுப்படுத்தப்பட்ட, முன்கூட்டிய தாக்குதலை –ஒரு "இரத்தக்களரி தண்டனை"- வடகொரியாவை ஆத்திரமூட்ட அமெரிக்கா திட்டமிடுகிறது என்ற கருத்துக்களை Risch புறந்தள்ளினார்.

போர் தொடங்கிவிட்டால், அது எமது நாகரிக வளர்ச்சியில் மிக மோசமான அழிவுகர நிகழ்வுகளுள் ஒன்றாக இருக்கப் போகிறது, ஆனால் அது மிக மிக சுருக்கமானதாக இருக்கும்” என்று Risch அறிவித்தார். அவர் தொடர்ந்தார்: அதன் முடிவு பெருந்திரள் சேதங்கள், இந்தக் கோளமே பார்த்திராதது. அது பைபிள் காலத்திய அளவுகளிலேயே இருக்கும்.”

Risch ஞாயிறு அன்று குளிர்கால ஒலிம்பிக்கின் முடிவு விழாவில் அமெரிக்க ஜனாதிபதி பேராளர் குழுவின் ஒரு அதிகாரபூர்வ உறுப்பினராய் கலந்துகொள்வார். அவர் செனெட் வெளியுறவுக் குழுவின் அடுத்த தலைவராக ஆவதற்கு வரிசையிலும் நிற்கிறார். அவரது போர்வெறிக் கூச்சல், ட்ரம்ப் நிர்வாகமானது 25 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாட்டை “முற்றிலும் அழிக்க”, மரபுவழி முறையையோ மற்றும் அல்லது அணு ஆயுதங்களையோ பயன்படுத்தும் ஒரேயடியான தாக்குதலுக்குத் திட்டமிடுகிறது என்று எச்சரிக்கை செய்கிறது.