ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump administration pursues inhumane policy of separating migrant children from parents

ட்ரம்ப் நிர்வாகம் புலம்பெயர்ந்த குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து பிரிக்கும் மனிதாபிமானமற்ற கொள்கையைப் பின்பற்றுகிறது

By Meenakshi Jagadeesan
21 February 2018

பிப்ரவரி 20 அன்று லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் இல் வெளியான கட்டுரை ஒன்றில், ட்ரம்ப் நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் புதிய மற்றும் மூர்க்கமான புலம்பெயர்ந்தோர் எதிர்ப்புக் கொள்கை பரவுதலைப் பற்றி ஆவணப்படுத்தி உள்ளது. தங்களது குழந்தைகளுடன் முறையான ஆவணமின்றி அமெரிக்காவுக்குள் எல்லை தாண்டி நுழையும் பெற்றோர்கள் பொதுவாகவே குடும்பத் தடுப்புக்காவல் மையங்களில் வைக்கப்படுவர் அல்லது தாங்கள் திருப்பி அனுப்பப்படுவோமா இல்லையா என்ற முடிவுக்காக காத்திருக்கும் குடும்பம், நீதிமன்றத் தேதியுடன் விடுவிக்கப்படும். ஆயினும், தங்களின் கடுமையான மற்றும் கூடுதல் உக்கிரமான புலம்பெயர் எதிர்ப்பு உந்துதலில், புலம்பெயர் அமுலாக்கத்துறை அதிகாரிகள் படிப்படியாக பெற்றோரை அவர்களின் குழந்தைகளிடமிருந்து பிரிக்கும் செயல்முறையை ஆரம்பித்து விட்டனர்.

இக்கொள்கையானது சிலமாதங்களுக்கு முன்னர் ட்ரம்ப் நிர்வாகத்தால் “எல்லை கடந்து வருவதை ஊக்கமிழக்கசெய்தல்” என்ற அதன் பரந்த, அணுகுமுறையின் ஒரு பிரிவாக அடையாளம் காட்டப்பட்டது. “ட்ரம்ப் விளைவு” என்று அழைக்கப்படும், தென்னமெரிக்க எல்லையைக் கடந்து வரும் மக்களின் உள்வருகையில் ஒரு வீழ்ச்சியாக ஆரம்பத்தில் காணப்பட்டது மறைந்து போனது. 2017 நவம்பர் அளவில், சட்டவிரோதமாக எல்லையைக் கடந்ததற்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை 29,086 ஐ எட்ட இருப்பதாக —முந்தைய ஜனவரிக்குப் பின்னர் மிக உயர்ந்தது— நிர்வாகம் செய்தி அறிவித்தது. இவற்றுள் 7000 பேர் “குடும்ப அலகினர்” என்றும் மற்றும் 4000 பேர் யாரும் இணைந்து வராத சிறுவயதினர் என்றும் குறிக்கப்பட்டது.

இதற்குப் பதில்கொடுக்கும் விதமாக, ட்ரம்ப் நிர்வாகம் தேசிய பாதுகாப்பு சபை, உள்நாட்டு கொள்கை ஆலோசனைக்குழு, உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை (DHS), நீதித்துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை ஒன்று கூட்டி, எல்லை கடப்பதை, குறிப்பாக குழந்தைகளால் கடக்கப்படுவதை குறைப்பதை நோக்கம்கொண்டு புதிய கொள்கை நடவடிக்கைகளுடன் வருமாறு அவர்களைப் பணித்தது. கடந்த டிசம்பரில், வாஷிங்டன் போஸ்ட், நிர்வாகமானது “குடும்பம் பிரிப்பு கொள்கையை” அதன் முன்மொழியும் தீர்வுகளுள் ஒன்றாக தீவிரமாக கருதி வருகிறது என்ற செய்தியை வெளியிட்டது.

நீதிமன்றத் தீர்ப்புத் தேதிக்காக “பிடித்து விடுதல்” என காத்திருக்குமாறு அவர்களை விட்டுவிட்டு தொடர்ந்து பிரிபடாத வகையில் இருக்கவைக்கும் முந்தைய கொள்கையை கைவிட்டு விட்டு, ட்ரம்ப் நிர்வாகம் நாட்டுக்குள் நுழைவது மத்திய அரசின் சட்டவிரோதமான குற்றம் என்ற காரணத்தின் அடிப்படையில் புலம்பெயர்ந்த பெற்றோர்கள் சிலர் மீது வழக்குத் தொடுக்கும் அச்சுறுத்தலை நிறைவேற்ற ஆரம்பித்துள்ளது. முதல் தடவையாக புலம்பெயர்ந்தோர் பெற்றோர் பிடிக்கப்பட்டு, அதிக பட்சம் ஆறுமாதச் சிறை ஏற்கும் மிகக் கடுமையல்லாத குற்றத்தை இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டனர். இரண்டாவது முறையாகப் பிடிபடுவோர், அவர்களின் குற்றப் பதிவுகளைப் பொறுத்து 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் பாதகச்செயலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டை எதிர்கொள்வர். விடயமானது ஒருமுறை குற்றத்தனமானதாக ஆனதும், பெற்றோரும் குழந்தைகளும் பிரிக்கப்படுவர்.

நிர்வாகமானது வழக்கம்போல், இந்த நகர்வை தேசியப்பாதுகாப்பை பாதுகாக்க வெறுமனே சட்டரீதியான மற்றும் அவசியமானது மட்டுமல்லாது, சட்டவிரோத எல்லை கடத்தலின் உள்ளியல்பான அபாயங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதை நோக்கங்கொண்ட ஒரு கொள்கையும்கூட என்று காட்டிக்கொள்ள முயற்சித்தது. DHS சார்பில் பேசவல்ல Tyler Q. Houlton வார்த்தைகளில் சொல்வதெனில், “ஆபத்தான வடக்கே சட்டவிரோதப் பயணத்திற்கு இளங்குழந்தைகளுக்கு இடமில்லை மற்றும் நாம் அவர்களைப் பாதுகாக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் தேட வேண்டியிருக்கிறது” என்றார். இந்த நடவடிக்கையின் ஆதரவாளர்கள், குற்றமிழைத்ததாக புலம்பெயர்ந்தோர் பெற்றோர்களை குற்றம் சாட்டல், உண்மையில் நல்லது என்றனர்.

முன்னாளைய புலம்பெயர்வு அரசு வழக்கறிஞரும் தற்போதைய புலம்பெயர்தல் ஆய்வுக்கான அதி-வலதுசாரி மையத்தின் சகாவுமான Andrew Arthur  லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸஸ் க்கு தெரிவிக்கையில், “குழந்தைகள் அங்கிருப்பதற்கான காரணம் குழந்தைகளுடன் உள்ள பெற்றோர் தடுத்துவைக்கப்படமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பமாகிறது,” மற்றும் உண்மையில் பெற்றோரின் நடவடிக்கைகள், அத்தகைய பயணத்தில் தங்கள் குழந்தைகள் பாதிக்கப்படுமாறு விடும் பெற்றோர்கள் வெளிப்படையாகவே குழந்தைகளைத் தவறாக நடத்துதலுக்கு காரணமாகின்றனர்” என்றார்.

ட்ரம்ப் நிர்வாகத்தால் கூறப்பட்ட கூற்றுக்கள் மற்றும் வெளிப்படையாகவே எல்லைகளில் குழந்தைகளைப் பாதுகாத்தல் சம்பந்தமானதில் அதன் அதிவலது ஆதரவாளர்கள் கூற்றுக்கள் பெரிதும் முட்டாள்த்தனமானவை. குழந்தை உரிமைகள் மீதான தீர்மானத்தில் வாக்களித்து ஏற்பதாக உறுதி கூட செய்யாத ஐ.நா வின் ஒரே அங்கத்துவநாடு அமெரிக்கா என்ற உண்மையுடன் சேர்த்து, குழந்தைப்பருவ வளர்ச்சியில் மனிதாபிமானமற்ற அத்தகைய புலம்பெயர் கொள்கைகளின் தீமைபயக்கும் பாதிப்புக்களைப் பற்றி போதுமான அளவு ஆய்வுகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

மார்ச் 2017ல், DHS இன் அப்போதைய செயலர் John F. Kelly-ஆல் இதேபோன்ற கருத்து விடப்பட்டிருந்தது, குழந்தைகள் “பெற்றோரை நடத்துவதுபோல நாம் குழந்தைகளிடத்து அக்கறைகொள்வோம் என்பதால்” குடும்பத்தைப் பிளவுபடுத்தல் கெட்ட விடயமாக இருக்காது என்றார் அவர். குழந்தை மருத்துவ பராமரிப்பு அமெரிக்கக் கழகம் அத்தகைய முன்மொழிவு பற்றி, அதனை கடுமையானது மற்றும் எதிர் விளைவு” என்று விவரித்து, பொறுப்பிலுள்ளோரை “அமெரிக்காவில் அடைக்கலம் கோருகையில் உணர்வுகரமான மற்றும் சரீரரீதியான மன அழுத்தத்தை குழந்தைகள் அனுபவிக்காதவாறு உறுதிப்படுத்தும் வண்ணம் எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டும், அவர்கள் தங்களது உடன்பிறந்தோரிடம், பெற்றோரிடம் அல்லது இதர உறவினரிடம் மற்றும் பாகாப்பாளர்களிடமிருந்து பிரிக்கப்படும் கூடுதல் அதிர்ச்சிநிலையால் மேலும்மோசமாகிவிடக்கூடாது” என்று தமது கடும் கவலையை வெளிப்படுத்தி அறிக்கை வெளியிட்டது.

ஜனவரி 2018 நடுவில், 70 தேசிய மற்றும் 50 மாநில மற்றும் வட்டார புலம்பெயர்ந்தோர் ஆதரவு குழுக்கள் உள்நாட்டுப் பாதுகாப்புத்தறை புதிய செயலாளர் Kierstjen Nielsen க்கு விடுத்த கடிதத்தில், குடும்பங்களைப் பிரிக்கும் கொள்கைக்கு தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். புலம்பெயர்ந்த குடும்பங்களைப் பிரித்தல் “அடிப்படையில் அமெரிக்கனல்லாத, கொடூரமான, அமெரிக்கா மற்றும் சர்வதேச குழந்தைகள் நலம் மற்றும் அகதிகள் கோட்பாடுகள் மற்றும் சட்டங்களை மீறலாகும்” என்று அக்கடிதம் அறிவித்தது. குடும்ப ஐக்கியம் என்பது “சர்வதேச சட்டத்தில், அடிப்படை மனித உரிமையாய் போற்றிப் பேணப்படுகிறது.”

மேலும், குடும்பங்களை ஆபத்து நிறைந்த எல்லைகளைக் கடந்து செல்வதில் இறங்க வைக்க நிர்பந்திக்கும் குறிப்பாக புறத்தாக்கம் காரணமான சூழ்நிலைகளை எடுத்துக் கொள்கையில், குழந்தைகளிடமிருந்து பெற்றோர்களைப் பிரிப்பது வேண்டுமென்றே மேலும் தீங்கை விளைப்பதற்குப் பயன்படுமே அன்றி வேறெதற்குமில்லை. அவர்கள் நிர்வாகமானது “புலம்பெயர்ந்தோர் மற்றும் எல்லை அமல்படுத்தல் கொள்கைகளில் உள்ள குடும்ப ஐக்கியம் மற்றும் சுதந்திரம் பற்றிய கோட்பாடுகளை” மதிக்குமாறு கேட்டு கடிதத்தை முடித்துக் கொண்டனர்.

அத்தகைய அழைப்புக்கள் செவிசாய்க்கப்படவில்லை என்பது மிகவும் வெளிப்படையானது. துல்லியமான விவரங்கள் வருதல் அரிதாயிருக்கும் அதேவேளை, புலம்பெயர்ந்தோர் ஆதரவுக் குழுக்கள், குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக வழக்குப் பதியப்பட்டு குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து சீராக அதிகரித்து வருகிறது என்று அறிவிக்கின்றனர். 2017 ஜூனுக்கும் நவம்பருக்கும் இடையில் எல் பாசோ-வில் 90 அடைக்கலம் கோருவோர் சார்பிலான வழக்கறிஞர்களின் கணக்கெடுப்பில், ஹோப் பார்டர் இன்ஸ்டிடியூட் 94 சதவீதம்பேர் தங்கள் குழந்தைகளிடமிருந்து பிரிக்கப்பட்ட பெற்றோர்களை தங்கள் கட்சிக்காரர்களாகக் கொண்டுள்ளனர்.

பெண்கள் ஏதிலியர் ஆணைக்குழு மற்றும் இதர அமைப்புக்கள் உள்நாட்டு பாதுகாப்புச் செயலரிடம் டிசம்பர் 17 இல் மனுச்செய்த புகாரில் ஒருவருடத்திற்கும் குறைந்த கால அளவில் அவர்கள் அத்தகைய நடப்புக்களை 150க்குமேல் ஆவணப்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர், மற்றும் அது “குடும்ப அலகுகள் பலாத்தகாரமாகப் பிரிக்கப்படலில் எச்சரிக்கும் வகையில் அதிகரிப்பு” அதன் பகுதியாக இருந்தது. “அச்சமூட்டி புலம்பெயர்தலைத் தடுக்கும் ஒரே காரணத்திற்காக குடும்ப உறுப்பினர்களைத் தடுப்பது கொடுமையும் சட்டவிரோதமும் ஆகும்; அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதை எடுத்துக்கொண்டால், அத்தகைய பிரிப்பு, ஒருவரை ஒருவர் இருப்பிடம் கண்டறியும் திறனற்றவராக குடும்ப உறுப்பினர்களை ஆக்குகிறது” என்றும் கூட அந்தப் புகார் அறிவிக்கிறது.

கடந்த நவம்பரில், எல் சால்வடோரில் இருந்து வந்த ஆவணப்படுத்தப்படாத புலம்பெயர்தோரான José Fuentes, குடிவரவு-அகல்வு அதிகாரிகளிடம், தனது ஒரு வயது மகன் Mateo உடன் சேர்த்து அடைக்கலம் கேட்டிருந்தார். அவரது குடும்பத்தின் படி, அச்சுறுத்தும் கும்பல்களின் வன்முறை காரணமாக Fuentes அடைக்கலம் கோருவோருடன் கூட்டமாக ஒரு வண்டியில் ஏறி தப்பித்திருந்தார். இருவரும் சேர்ந்து பிடிக்கப்பட்டு நான்கு நாட்கள் கழித்து, Fuentes கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சாண்டியாகோ தடுப்புக்காவல் நிலைக்கு மாற்றப்பட்டார், அதேவேளை Mateo டெக்சாஸ் மாநிலத்திலுள்ள லாரெடோ குழந்தைகள் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார்.

ஆறுநாட்களாக, Fuentes உம் மெக்சிகோவில் அவர்களது அடுத்த மகனுடன் தங்கி இருக்கும் அவரது மனைவி Olivia Acevedo உம் குழந்தை எங்கு வைக்கப்பட்டிருக்கிறான் என்ற விவரம் எதுவும் அறியாத நிலையில் இருந்தனர். அவர்களின் வழக்கறிஞர் எடுத்த பெரும் முயற்சியால்தான் அவர்களால் தங்களது மகனின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது, மற்றும் Acevedo-ஆல் அதுவும் அவனை ஐந்து நிமிட காணொளி அழைப்பால் காண முடிந்தது. அன்னியர்களால் தனது பிள்ளை தடுத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து முழுநேரமும் கதறிய Acevedo நியூ யோர்க் டைம்ஸ் இடம், இது “ஒரு வகை சித்திரவதை” என்றார்.

ICE சார்பில் பேசவல்ல பேச்சாளர் Liz Johnson, அதிகாரிகள் “குழந்தையின் நலம் மற்றும் பாதுகாப்புக்கான அக்கறை எதுவுமில்லாமல்” பிரிப்பதை மேற்கொண்டிருந்தார்கள். ஏனெனில் Fuentes இடம் உண்மையில் அவர்தான் Mateo வின் தந்தையாக இருந்தபோதிலும் அதற்கு  போதுமான சான்றாவணம் எதுவும் இன்றி இருந்தார் என கூறப்பட்டது. புலம்பெயர்வு உரிமைகள் ஆதரவு வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியவாறு, இது மேலும் புலம்பெயர் குடும்பங்களை அச்சுறுத்தவும் அடைக்கலம் கேட்பதிலிருந்து அவர்களைத் தடுத்துவைக்கவும் ஒரு வசதியான நியாயப்படுத்தலாக இப்பொழுது ஆகியிருக்கிறது.