ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Germany: Merkel’s re-election and the fight against militarism, welfare cuts and dictatorship

ஜேர்மனி: மேர்க்கெலின் மறுதேர்வும் மற்றும் இராணுவவாதம், பொதுநல வெட்டுக்கள் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டமும் 

By Johannes Stern 
15 March 2018

அங்கேலா மேர்க்கெல் (கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி, CDU) சான்சலராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் ஜனாதிபதி ஃபிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் (சமூக ஜனநாயகக் கட்சி, SPD) புதிய கூட்டாட்சி அமைச்சரவைக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தும், நாஜி ஆட்சியின் (Third Reich) வீழ்ச்சிக்குப் பின்னர், மிக வலது-சாரி ஜேர்மன் அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது.     

மக்களின் முதுகிற்கு பின்னால் தீட்டப்பட்ட ஒரு ஆறுமாத கால அரசியல் சதியில் உருவானதான, சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக “ஒன்றியம்” (CDU/CSU) ஆகியவற்றின் புதுப்பிக்கப்பட்ட இக்கூட்டணி, முன்னைய பெரும் கூட்டணியின் கொள்கைகளை வெறுமனே பின்தொடராது. இது, ஜேர்மனியை இராணுவவாதத்திற்கு திரும்பச் செய்வது, ஒரு நவீன பொலிஸ் அரசை ஸ்தாபிப்பது மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக மிருகத்தனமான சமூக தாக்குதல்களின் ஒரு புதிய சுற்றை செயல்படுத்துவது ஆகியவற்றை பெருமளவில் அதிகரிக்கும்.

CDU மற்றும் SPD இன் தலைவர்களால் திங்களன்று கையெழுத்திடப்பட்ட கூட்டணி உடன்படிக்கை, 2024 க்குள் இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்குவதையும், 10,000 க்கும் அதிகமான புதிய பொலிஸ் அதிகாரிகளையும் நியமனம் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், கூட்டணி கட்சிகள், ஜேர்மனிக்கான மாற்றின் (AfD’s) அதி-வலது அகதிகள் கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கும், மற்றும் சமீபத்திய வருடங்களில் ஐரோப்பா எங்கிலும் வறுமை, வேலையின்மை மற்றும் விரக்தி போன்ற நிலைமைகளுக்குள் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஜேர்மன் அரசாங்கம் ஏற்கனவே உந்தித் தள்ளுவதற்கு வழிசெய்த சிக்கன நடவடிக்கை ஆணைகளை இன்னும் தீவிரப்படுத்துவதற்கும் ஒப்புக்கொண்டுள்ளன.

வெடிப்புறும் பொருளாதார, சமூக மற்றும் பூகோள அரசியல் அழுத்தங்கள் மிக்க நிலைமைகளின் கீழ், ஆளும் வர்க்கம் பிற்போக்குத்தன கூட்டணி வேலைத்திட்டத்தை துரிதமாக செயல்படுத்துவதற்கு மட்டும் அழுத்தம் கொடுப்பதோடல்லாமல், அரசாங்கம் இன்னும் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கும் கோரிக்கை விடுக்கிறது. உதாரணமாக, வணிக தினசரி நாளிதழான Handelsblatt செவ்வாயன்று “பெரும் கூட்டணியை மேலும் மேம்படுத்த” அழைப்பு விடுத்து, “மேர்க்கெலின் மூன்றாவது பெரும் கூட்டணி இங்கு அதை வழங்குமானால் அது ஒரு முன்னேற்றமாகும். ஆனால் இக்கூட்டணி, மூன்று கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி கூறியபடி, நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்குமானால், அது ஒப்புக்கொண்டதற்கு அதிகமாகவே செய்ய வேண்டியிருக்கும். இதற்கு இப்போது வெளியிலிருந்து அழுத்தம் கொண்டுக்கப்படுகின்றது” எனவும் குறிப்பிடுகிறது.

“இந்த கூட்டணி உடன்படிக்கை ஏற்கனவே பகுதியளவு காலாவதியானது,” என்று ஜேர்மனியின் பெருவணிகத்தின் ஊதுகுழல் அறிவித்தது. “நேற்றைய உடன்படிக்கைக்கும் மற்றும் அதன் இன்றைய உடன்படிக்கைக்கும் இடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அபராத கட்டணங்களை அறிவித்துள்ளதுடன், ஒரு வர்த்தகப் போருக்கும் அச்சுறுத்தியுள்ளார்.” ஆகவே, “ஜேர்மன் பொருளாதாரம் மீதான போட்டித்தன்மை குறித்த கேள்வி”, “CDU மற்றும் SPD களின் பிரதிநிதிகள் அவர்களது பேச்சுவார்த்தைகள் மூலமாக பரிசீலிப்பதற்கு முன்பாக விரைந்து முன்வைக்கப்படக்கூடும்.” அதன் விளைவாக, இந்த கூட்டணி உடன்படிக்கை, “அடுத்த அரசாங்கத்தின் ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டுமேயன்றி, முற்றுப்புள்ளியாக இருக்கக்கூடாது” என்றது.

“போட்டித்தன்மை” மூலமாக என்பது, Handelsblatt  நாளிதழின் கருத்துப்படி, ஒரே நேரத்தில் ஊதிய வெட்டுக்களையும், மற்றும் பெரும்பான்மையினர் பணிநீக்கத்தையும் செயல்படுத்துவதுடன் சேர்த்து, கூடவே, ஜேர்மன் பெருநிறுவனங்களுக்கு ட்ரம்ப் இனை போல பல பில்லியன்-யூரோ வரிச் சலுகைகள் தேவையென கருதுகின்றது. இவையனைத்தும் நீண்ட காலமாக திட்டமிடப்பட்டவையாகும். கடந்த சில நாட்களில் மட்டும், தொழிற்சங்கங்களுடனான நெருங்கிய ஒத்துழைப்புடன் Deutsche Bank, Postbank, Airbus, RWE மற்றும் Eon போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான வேலைகளை அழிக்க திட்டமிட்டுள்ளது. மேலும், Siemens, Bombardier மற்றும் ThyssenKrupp ஆகியவற்றில் முழு ஆலைகளும் மூடப்படுவதற்கு அச்சுறுத்தப்படுகின்றன.         

இந்த வார தொடக்கத்தில், புதிய சுகாதார மந்திரி ஜென்ஸ் ஸ்பான் (CDU), ஹார்ட்ஸ் IV என்றழைக்கப்படும் தொழிலாளர் மற்றும் பொதுநல சீர்திருத்தங்கள் என்பது, “உயிர்வாழ்வதற்கு தேவைப்படும் அனைத்தையும் ஒருவர் கொண்டிருப்பதாகும்,” என்று ஆணவமாக வெளியிட்டிருக்கும் அறிக்கை, புதிய அரசாங்கத்தின் சமூக விரோத குணாம்சத்தை இரத்தின சுருக்கமாக கூறுகிறது. இச்சூழ்நிலையில், ஸ்பான் போன்றவர்கள், ஒரு குறைவூதியமளிக்கும் “சிறு வேலையில்” குறைந்தபட்சம் சில நாட்களுக்காவது பணியாற்ற வேண்டுமென்றோ, அல்லது உயிர் பிழைக்க மட்டும் போதுமான ஹார்ட்ஸ் IV நன்மைகளை விட சற்று அதிகமாக பணத்தை பெறுவதற்காக பேர்லினின் குளிர்காலத்தில் ஒரு போத்தல் சேகரிப்பாளராக சில நாட்களை செலவிட வேண்டுமென்றோ ஒருவர் விரும்பலாம். 

அடுத்துவந்த சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி அரசாங்கத்தின் ஹார்ட்ஸ் “சீர்திருத்தங்கள்” என்றழைக்கப்பட்ட நலன்கள் ஐரோப்பிய நாடுகளிலேயே சமூக சமத்துவமின்மை மிக்க —மற்றும் மிக வறிய!— ஒரு நாடாக ஜேர்மனியை உருவாக்கியது என்பது சர்வதேச அளவில் இப்போது அறியப்படுகிறது – மேலும் எண்ணற்ற ஆய்வுகளில் கூட இதுபற்றி படிக்க முடியும்.

ஒட்டுமொத்த அமைச்சரவையும், புதிய அரசாங்கத்தின் தீவிர வலது-சாரி மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்பு அம்சங்களையே பிரதிபலிக்கிறது. உள்துறை மற்றும் தாயக பாதுகாப்பு மந்திரி CSU தலைவர் ஹோர்ஸ்ட் ஸீஹோஃபர் ஆவார், ஞாயிறன்று இவர் மட்டும் தான், Bild பத்திரிகையில், “மிகுந்த உறுதிப்பாடுள்ள நாடு கடத்தல்கள்”, பரந்த கண்காணிப்பு மற்றும் பிற பொலிஸ் அரசு நடவடிக்கைகள் ஆகியவை குறித்த ஒரு பெரும் திட்டத்தை முன்வைத்தார். ஓலாவ் ஷொல்ஸ், SPD இன் சிக்கன மற்றும் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மீது எவரும் கொண்டிராத உறுதிப்பாட்டை கொண்டிருக்கும் இவர் தான் புதிய நிதியமைச்சராக உள்ளார். SPD இன் பொதுச் செயலாளராக ஷொல்ஸ், செயற்பட்டியல் 2010 ஐயும், நலன்புரி அரசு மற்றும் தொழிலாளர் உரிமைகள் மீதான ஹார்ட்ஸ் தாக்குதல்களையும் ஆதரித்தார்; மேர்க்கெலின் கீழ் முதலாவது பெரும் கூட்டணியில் தொழில்துறை மந்திரியாக, ஓய்வுபெறும் வயதை 67 ஆக உயர்த்தினார், மேலும் ஹம்பேர்க் நகரமேயராக, G20 கண்டனங்களுக்கு எதிராக மிருகத்தனமான பொலிஸ் நடவடிக்கையையும் ஒழுங்கமைத்தார்.

இவையனைத்திற்கும் மேலாக, 2014 முனிச் பாதுகாப்பு மாநாட்டில், வெளிசெல்லும் மற்றும் உள்வரும் பாதுகாப்பு அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லையன் (CDU), ஸ்ரைன்மையர், மற்றும் அவரது முன்னோடி ஜோஅஹிம் கௌக் ஆகியோரால் அறிவிக்கப்பட்ட ஒரு தீவிர வெளிநாட்டு மற்றும் பெரு வல்லரசு கொள்கைக்கு ஜேர்மனி திரும்புவதற்கு துரிதப்படுத்தும். DerSpiegel  பத்திரிகையின் தலைமை ஆசிரியரான கிளவ்ஸ் பிறிங்க்பொய்மர், அவரது கட்டுரை “நன்றி, டொனால்ட்” என்பதில், ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்திற்காக அவர் பேசியபோது, நீண்டகாலம் “மறைந்திருப்பது” மற்றும் “ஒழுக்கமான தூய நிலைப்பாடுகளை” இன்னும் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளாத ஒரு “கண்ணியமற்ற” வெளியுறவுக் கொள்கைக்கு ஜேர்மனி திரும்ப வேண்டுமென்று அவர் அழைப்பு விடுத்தார்.

அக்டோபர் 2014 இல் ஜேர்மன் வரலாற்று அருங்காட்சியகத்தில், “ஜேர்மனி ஒரு தலையீட்டு சக்தி?” என்று தலைப்பில் ஒரு "குழு விவாதத்தில்" , வலது-சாரி தீவிரவாத வரலாற்றாளர் ஜோர்க் பாபரோவ்ஸ்கி மூலமாக ஏற்கனவே விவரிக்கப்பட்டதன் பொருள் என்ன?. “பயங்கரவாதிகள் செய்யக்கூடியவை போன்று, எவரையும் பிணைய கைதிகளாக வைக்கவோ, கிராமங்களை எரிக்கவோ, மக்களை தூக்கிலிடவோ, மற்றும் பயத்தையும் திகிலையும் பரப்ப முடியவில்லையென்றால், அதாவது இத்தகைய செயல்களை ஒருவர் செய்யத் தயாராக இல்லையானால், இதுபோன்றவொரு மோதலை ஒருவரால் ஒருபோதும் வெல்ல முடியாது, மேலும் அதில் தலையிடுவதை தவிர்த்துக்கொள்வது முற்றிலும் நல்லது,” என அவர் ஆப்கானிஸ்தானிலும் மற்றும் மத்திய கிழக்கிலும் ஜேர்மன் Bundeswehr (ஆயுதப்படைகள்) இன் யுத்த முயற்சி பற்றிக் குறிப்பிட்டார். 

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பான IYSSE  விமர்சித்த, “ஹிட்லர் கொடூரமானவர் அல்ல” என்ற அவரது அறிக்கையை பாதுகாத்து தினசரி செய்தித்தாளான taz அதன் சமீபத்திய வார பதிப்பில் வெளிப்படையாகவே பாபரோவ்ஸ்கியின் பக்கம் சாய்ந்துள்ளமை சமூக ஜனநாயகக் கட்சி – பசுமைக் கட்சி சார்பானோரின் கடும் வலதுசாரி நோக்கிய திருப்பம் பற்றி பல அத்தியாயங்களில் பேசுகின்றது. அதிகரித்து வரும் வர்க்க மோதல்களுக்கு முகம்கொடுக்கையில் வசதிபடைத்த குட்டி முதலாளித்துவ பிரிவினர் தீவிர பிற்போக்குத்தனத்தின் சார்பாக பக்கம் சார்ந்துள்ளனர்.

இது இடது கட்சியின் தலைமைக்கும் கூட பொருந்தும். பிப்ரவரியில், இதன் பாராளுமன்ற குழு தலைவர், டீட்மார் பார்ட்ஸ்ச், பெரும் கூட்டணியின் பெரும் ஆதிக்கத் திட்டங்களுக்கு ஏற்கனவே ஆதரவளித்துள்ளார் என்பதோடு, மேலும் ஊர்சுலா வொன் டெர் லையன் இடம், ஆயுதப்படைக்காக திட்டமிடப்பட்டுள்ள கூடுதல் பில்லியன் கணக்கான நிதி “துருப்புகளுக்கு முதலீடு செய்யப்பட்டதா” என்று கேட்டார். ஜேர்மனியர்கள் மட்டும் தான் தற்போதைக்கு தங்களுடைய உணவு இருப்பில் இருந்து ஆதரவை பெற்றுக் கொள்ளலாம் என சமீபத்தில் எஸ்ஸன் நகரத்தின் ராவ்வெல் அறக்கட்டளையின் இனவாத முடிவுக்கு ஆதரவளித்த தீவிர வலதுசாரி AfD இன் அகதிகள் எதிர்ப்பு பிரச்சாரத்தை அவரது சகாவான சாரா வாகன்க்னெக்ட் ஊக்குவிக்கின்றார்.

Sozialistische Gleichheitspartei (SGP சோசலிச சமத்துவக் கட்சி) மட்டுமே இடது பக்கத்திலிருந்து பெரும் கூட்டணியை எதிர்க்கும் ஒரே கட்சியாகும். சமீபத்திய வாரங்களில் SGP புதிய தேர்தல்களுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தது என்பதோடு, Bundestag (பாராளுமன்றம்) இல் பெரும் கூட்டணிக்கும் மற்றும் அதன் அரசியல் ஆதரவாளர்களுக்கும் எதிராக மக்களிடையேயான பரந்த எதிர்ப்பை அரசியல்ரீதியாக அபிவிருத்தி செய்வதற்கும், ஒழுங்கமைப்பதற்கும் இப்போது போராடுகிறது. ஜேர்மன் ஆளும் வர்க்கம் அரசியல் மற்றும் சமூக காட்டுமிராண்டித்தனத்தின் தீவிர வடிவங்களுக்கு திரும்புவதை, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தினால் மட்டுமே நிறுத்தமுடியும். பெரும் கூட்டணி ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள வேளையில், இந்த பணியை மிகவும்  அவசரமான ஒன்றாக உள்ளது.