ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The war against Iraq and America's drive for world domination

ஈராக்கிற்கு எதிரான போரும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முன்னெடுப்பும்

By David North
4 October 2002

பின்வருவது உலக சோசலிச வலை தளத்தின் ஆசிரியர் குழு தலைவரான, டேவிட் நோர்த்தால் அக்டோபர் 1, 2002 அன்று அன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் பலர் வருகை தந்திருந்த பகிரங்கக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிக்கை ஆகும்.

செப்டம்பர் 17, 2002 அன்று புஷ் நிர்வாகமானது அதன் "ஐக்கிய அமெரிக்க அரசுகளின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை" வெளியிட்டது. இந்த முக்கியமான பத்திரம் பற்றி செய்தி ஊடக அமைப்பில் இதுவரையிலும் அக்கறை கொண்ட ஆய்வு எதுவும் இல்லாமல் இருந்து வருகிறது. குறைந்த பட்சம் சொன்னால், இது துரதிர்ஷ்டவசமானது, ஏனென்றால் இந்தப் பத்திரம் அமெரிக்க இராணுவ வாதத்தின் பிரம்மாண்டமான வெடிப்புக்கான அரசியல் மற்றும் தத்துவார்த்த நியாயத்தை முன்னெடுக்கின்றது. அப்பத்திரமானது உலகில் எங்கும், அது தேர்ந்தெடுக்கும் எந்த நேரத்திலும் அமெரிக்க நலன்களுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என நம்பும், அல்லது சில கட்டங்களில் அச்சுறுத்தலாக ஆகும் எனக் கருதும் எந்த நாட்டிற்கும் எதிராக இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமையை ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக வலியுறுத்துகின்றது. இப்பொழுது ஐக்கிய அமெரிக்க அரசுகளால் செய்யப்பட்டுக் கொண்டிருப்பது போல், பூகோள தலைமை நிலைக்கு --அல்லது, மிகவும் அப்பட்டமாகக்கூறினால், உலக மேலாதிக்கத்துக்கு-- அத்தகைய ஒரேயடியான கூற்றை வலியுறுத்தி இருப்பது நவீன வரலாற்றில்வேறு எந்த நாடும் இல்லை, ஹிட்லரின் பைத்தியக் காரத்தனத்தின் உச்சியில் நாஜி ஜேர்மனி கூட இருந்ததில்லை.

இந்தப் பத்திரத்தின் செய்தியானது அதன் சிடுமூஞ்சித்தனமான இடக்கரடக்கலை (தீய சொல்லை மறைத்துக் கூறும் மங்கல் சொல்லை) மற்றும் திட்டமிட்ட மழுப்புதலை துகிலுரித்தது தவறில்லாமல் தெளிவாகிறது. ஐக்கிய அமெரிக்க அரசுகள் அது தேர்ந்தெடுக்கும் நாட்டின் மீது குண்டு வீசுவதற்கான, ஆக்கிரமிப்பதற்கான மற்றும் அழிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்திக் கூறுகிறது. வேறு எந்த நாட்டின் இறையாண்மை பற்றிய சர்வதேச விதிமுறையின் விஷயத்தில் அது மதிப்பதற்கு மறுக்கிறது, மற்றும் உலகின் எந்த பகுதியிலும் உள்ள, அதாவது ஐக்கிய அமெரிக்க அரசுகள் அதன் முக்கிய நலன்கள் என்று கருதப்படுவனவற்றுக்கு பகையாக தோன்றக்கூடிய அல்லது என்றோ ஒரு நாள் ஆகக் கூடிய ஆட்சிக்கு, எந்த ஆட்சியிலுருந்தும் விடுபடுவதற்குள்ள உரிமையை தனக்கு ஒதுக்கி வைக்கின்றது. குறுகிய காலத்தில் அதன் அச்சுறுத்தல்கள், "தோல்வியுற்ற அரசுகள்" என அழைக்கப்படுவதற்கு எதிராக விடுக்கப்பட்டன --அதாவது, ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் கொள்கைகளால் சூறையாடப்பட்ட ஏழ்மை பீடித்த மற்றும் முன்னாள் காலனிகளான மூன்றாம் உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய ஏகாதிபத்திய காட்டுமிராண்டிப் பேச்சைப் புதுப்பிப்பதில், பத்திரம் "பெரும் வல்லரசுகள்" என குறிக்கும் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் பெரும் போட்டியாளர்கள், புஷ் நிர்வாகத்தின் துப்பாக்கி இலக்குகளில் எந்த வகையிலும் வைக்கப்படவில்லை. ஐக்கிய அமெரிக்க அரசுகள் இப்பொழுது தயாரித்துக் கொண்டிருக்கும் சிறிய மற்றும் பாதுகாப்பற்ற நாடுகளுக்கு எதிரான போர்கள் --அனைத்திற்கும் முதலாவதாக ஈராக்கிற்கு எதிரான போர்-- மிகவும் வல்லமை மிக்க இலக்குகளுக்கு எதிரான இராணுவ கடுந்தாக்குதலுக்கான தயாரிப்பாக இருக்கும் என நிரூபிக்கும்.

இப்பத்திரமானது "ஐக்கிய அமெரிக்க அரசுகள் உலகில் முன்னர் என்றுமிருந்திாரத --மற்றும் சமமற்ற -- பலத்தையும் செல்வாக்கையும் பெற்றிருக்கிறது" என்ற செருக்குடன் ஆரம்பிக்கின்றது. "ஐக்கிய அமெரிக்க அரசுகளின் தேசிய பாதுகாப்பு மூலோபாயம் நமது மதிப்பு மற்றும் நமது தேசிய நலன்களின் ஐக்கியத்தை எதிரொலிக்கும் வேறுபட்ட அமெரிக்க சர்வதேசிய வாதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்" என்ற மூச்செடுக்கும் தன்முனைப்புடன் அது அறிவிக்கின்றது. இந்த சூத்திரம் அது நினைவு கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தைக் கவருகிறது: அமெரிக்க மதிப்புக்கள் + அமெரிக்க நலன்கள் = ஒரு வேறுபட்ட அமெரிக்க சர்வதேசியம். அது அமெரிக்காவுக்கு எது நல்லதோ அது உலகத்திற்கு நல்லது என உறுதிப்படுத்தும் ஒரு மிகவும் வேறுபட்ட வகையிலான சர்வதேசியம்! இந்தப் பத்திரத்தின் முன்னுரையில் புஷ் உறுதிப்படுத்துகின்றவாறு, அமெரிக்காவின் மதிப்புக்கள் "ஒவ்வொரு சமுதாயத்திற்கும், ஒவ்வொரு நபருக்கும் சரியானது மற்றும் உண்மையானது..."

இந்த மதிப்புக்கள், "தனிச்சொத்துடைமைக்கான மதிப்பு"; வர்த்தக முதலீட்டை, புதுமுறை காணலை, மற்றும் தொழில்துறை உரிமையாளர் நடவடிக்கை ஆகியவற்றை ஊக்கப்படுத்துகின்ற வளர்ச்சி சார்பான சட்டரீதியான மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகள்"; "வரிக்கொள்கைகள் --வேலைக்கான ஊக்கத் தொகையை முன்னேற்றும் மற்றும் முதலீட்டை முன்னேற்றும்-- குறிப்பாக குறைந்த விளிம்பு நிலை வட்டிவீதங்கள்; மூலதனத்தை அதன் மிகத் திறமையான பயன்படுத்தத்தில் வைப்பதற்கு அனுமதிக்கும் வலுவான நிதி அமைப்பு முறைகள்"; "வர்த்தக நடவடிக்கைக்கு ஆதரவு தரும் நல்ல நிதிக் கொள்கைகள்" போன்ற-- அமெரிக்க செல்வராட்சியின் நன்கறியப்பட்ட அரசியல் சமூக சீர்திருத்த சட்டங்களின் தொகுப்பு தவிர வேறு எதுவும் அல்ல. அப்பத்திரம் பின்வருமாறு அறிவிக்கின்றது: "வரலாற்றுப் படிப்பினைகள் தெளிவாக இருக்கின்றன: சந்தைப் பொருளாதாரங்கள், அரசாங்கத்தின் கடும் தலையீட்டில் பொருளாதாரங்களை ஆணையிடுவன மற்றும் கட்டுப்படுத்துவன அல்லாதிருப்பது, முன்னேற்றத்தைக் கொண்டுவருதற்கான மற்றும் வறுமையைக் குறைப்பதற்கான சிறந்த வழியாக இருக்கின்றன. சந்தை ஊக்கத்தொகைகளை மற்றும் சந்தை நிறுவனங்களை மேலும் பலப்படுத்தும் கொள்கைகள் எல்லாப் பொருளாதாரங்களுக்கும் -தொழில்துறை நாடுகள், தோன்றிக் கொண்டிருக்கும் சந்தைகள், மற்றும் வளர்ச்சி அடைந்து-- கொண்டிருக்கும் உலகம் அனைத்திற்கும் பொருத்தமானதாக இருக்கின்றன."

இந்தவிதமான வலதுசாரி வெற்றுரைகள் ஆழமாகிக் கொண்டிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடிக்கு இடையில் ஒன்றை உறுதிபடக் கூறுகின்றன, அதில் முழுக் கண்டங்களும் சந்தைப் பொருளாதாரங்களின் விளைபயன்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றன, அது அவற்றின் சமூக உள்கட்டமைப்புக்கள் என ஒருசமயம் நிலைகொண்டிருந்தவற்றை தகர்த்திருக்கின்றது மற்றும் பில்லியன் கணக்கான மக்களை விவரிக்க முடியாத நிலைமைகளுள் ஆழ்த்தியுள்ளது. சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் கலைந்துபோன மற்றும் அதன் முதலாளித்துவ மீட்சியின் ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், ரஷ்யாவின் இறப்புவீதம் அதன் பிறப்பு வீதத்தை மிஞ்சுகிறது. சர்வதேச நாணய நிதியம் அதன் சமூகவிரோத பரிசோதனைகளை எக்களிப்புடன் நடைமுறைப்படுத்தும் ஒரு ஆய்வுக் கூடமான தென் அமெரிக்கா, ஒரு பொருளாதார சிதைவு நிலையில் இருக்கின்றது. தென் ஆபிரிக்காவில், மக்கள் தொகையின் கணிசமான பகுதியினர் ஹெச்.ஐ.வி (HIV) வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உலக வங்கியின் படி,

"எய்ட்ஸ் நெருக்கடியானது வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் மீது, சிறப்பாக ஆபிரிக்காவில் அழிவுகரமான பாதிப்புக்களைக் கொண்டிருக்கிறது. --ஒவ்வாத மற்றும் மோசமான நிர்வாகம் அவற்றுடன், எய்ட்ஸ் பாதிப்பால் பலவீனப்பட்டிருக்கும், சுகாதாரப் பராமரிப்பு அமைப்புமுறைகள் பாரம்பரிய நோய்களுடன் சமாளிக்க முடியவில்லை. மலேரியா மற்றும் காசநோய் பத்துலட்சக்கணக்கான மக்களைக் கொல்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது -- மலேரியா மட்டுமே ஆபிரிக்க துணை சஹாராவில் சராசரியான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதங்களை ஆண்டுக்கு சராசரியாக 0.5 வீதம் குறைப்பதாக மதிப்பிடப்படுகிறது. இந்தப் பிராந்தியத்தில் வாழ்நாள் எதிர்பார்ப்பு 1987ல் 50 ஆண்டுகளாக இருந்ததில் இருந்து 1999ல் 47 ஆண்டுகளாக குறைந்துள்ளது; எய்ட்ஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் (போஸ்ட்வானா, சிம்பாப்வே, தென் ஆபிரிக்கா மற்றும் லெசாத்தோ போன்றவற்றில்) சராசரி ஆயுட் காலம் பத்து ஆண்டுகளுக்கும் அதிகமானவற்றால் குறுக்கப்பட்டிருக்கிறது."[1]

இந்த அழிவுகரமான சூழ்நிலைகள் முதலாளித்துவ அமைப்பு முறையின் மற்றும் சந்தையின் ஆட்சியின் உற்பத்தி ஆகும். இந்த மூலோபாய பத்திரம் "மனித இனத்தின் பாதிப்பகுதியினர் ஒரு நாளைக்கு 2 டாலர்களுக்கும் குறைவான பணத்தில் வாழ்கின்றனர்" என கூறுவதில் உறுதிப்படுத்துகிறது, ஆனால், எதிர்பார்க்கப்படுவது போல், புஷ் நிர்வாகத்தினால் பெறப்பட்ட குறிப்பு, உலகம் முழுவதிலும் நிலைகொண்டிருக்கும் துன்பத்திற்கு பொறுப்பான பொருளாதாரக் கொள்கைகளை மிகவும் தீவிரமாகப் பயன்படுத்தலாக இருக்கிறது.

"வேறுபட்ட அமெரிக்க சர்வதேசியம்" என்ற அதன் கருத்தை வரையறை செய்கையில், பத்திரமானது "சர்வதேச சமூகத்தின் ஆதரவை பட்டியலிட ஐக்கிய அமெரிக்க அரசுகள் மாறாது முயற்சிக்கும் அதேவேளை, தனியாக செயல்படுவதற்கு நாம் தயங்கமாட்டோம்..." என விளக்குகின்றது. இன்னொரு பந்தியில், ஐக்கிய அமெரிக்க அரசுகள் "எமது பூகோளப் பாதுகாப்பில் மேற்கொள்ளப்படும் பொறுப்புக்களை மற்றும் அமெரிக்கர்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நிறைவேற்றுதற்கான எமது முயற்சிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் (ICC) புலனாய்வு செய்யப்படுவதால், விசாரிக்கப்படுவதால் மற்றும் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படுவதால் பாதிப்படையாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும், அதன் விசாரணை அதிகாரம் அமெரிக்கர்களுக்கு நீட்டிக்கப்படவில்லை மற்றும் நாம் அதனை ஏற்கவில்லை" என எச்சரிக்கிறது. வேறுவார்த்தைகளில் சொன்னால், ஐக்கிய அமெரிக்க அரசுகளின் தலைவர்களின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தின் மாநாடுகளால் கட்டுப்படுத்தப்படாது.

நூரெம்பேர்க் போர்க்குற்றங்கள் நடுவர் மன்றம்

நூரெம்பர்க் போர்க்குற்றங்கள் நடுவர் மன்ற ஆய்வு ஒன்றில், அமெரிக்கத்தரப்பு தலைமை வழக்கறிஞரின் உதவியாளராக பணியாற்றிய, றொபேர்ட் ஹெச். ஜாக்சன் (Robert H. Jackson) --போரின் விதிகள் வென்றடக்கப்பட்ட தேசங்களின் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளுக்குப் பொருந்தாது. ஆய்வுக்குள்ளாக்கப்படுவதிலிருந்து நாடுகளை காப்புத்தடை செய்துகொள்வதற்கான தார்மீக மற்றும் சட்டரீதியான அடிப்படை இல்லை. போரின் விதிகள் ஒரு வழிப்பாதை கொண்ட தெரு அல்ல. "[2] சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்க அரசுகள் அங்கீகரிக்க மறுப்பது மிகப் பெரிய சர்வதேச அரசியல் முக்கியத்துவம் உடையதாகும், மற்றும் தங்களின் கொள்கைகள் குற்றத்தன்மை வாய்ந்தவை மற்றும் சர்வதேச சட்டம் அமல்படுத்தப்பட்டால், அவர்களை மிகவும் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கக் கூடும் என்ற அமெரிக்க தலைவர்களின் கூர்ந்த விழிப்புணர்வுக்கு அது சான்றளிக்கிறது.

டெல்ஃபோர்ட் டெய்லர் (Telford Taylor) வலியுறுத்துகின்றவாறு, நூரெம்பேர்க் வழக்கு விசாரணையில் நாஜித் தலைவர்களின் வழக்கு விசாரணை புதியசட்டக் கருத்துருவை அடிப்படையாகக் கொண்டிருந்தது: ஆக்கிரமிப்புப் போரைத் தொடுப்பதற்கான முடிவு மற்றும் அவர்களின் திட்டமிடல் ஒரு குற்றத்தைக் கொண்டிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டு ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் குடிமக்களுக்கு, யூதர்களுக்கு எதிராக மற்றும் போர்க் கைதிகளுக்கு எதிராக நாஜிக்களால் இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக குற்றச்சாட்டுக்களில் எண்ணிக்கையில் கூட முந்திச்சென்றது. டெய்லரால் தயாரிக்கப்பட்ட நினைவுக்குறிப்பு ஆக்கிரமிப்புப் போரைத் திட்டமிட்டதற்காக நாஜிதலைவர்களை குற்றம்சாட்டுவதற்கு ஆதரவாக வாதிக்கின்றது, அவர் எழுதினார்:

"ஆக்கிரமிப்புப் போர்க் குற்றம் செய்தல் ஒரு குற்றம் என முன்னர் எந்த நடுவர் மன்றமும் என்றும் தீர்மானிக்காவிட்டாலும், ஆக்கிரமிப்புப் போர்க் குற்றம் செய்பவர் அவரது குற்றச்செயலுக்காக தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இடரில் உள்ளதாக நடிப்பார் என்ற முடிவால், அதிர்ச்சிக்குள்ளாக்கப்படுவதாக மிக இழிவான சட்டவாதிகள் மட்டுமே பாசாங்கு செய்ய முடியும்."[3]

டெய்லர் தொடர்ந்தார்:

"வழக்கு போருக்கான காரணம் பற்றிய விசாரணையாக ஆகவில்லை என்பது முக்கியமானது. போருக்கான முற்றமுழு காரணம் ஹிட்லரிசமாக இருந்தது என்று அது நிலைநாட்டப்பட முடியாது, மற்றும் அங்கு இதனைச் செய்வதற்கு முயற்சி இருக்க வேண்டாம். சம்பந்தப்பட்ட தனிநபர்கள் மற்றும் பல நாடுகள் மத்தியில் போரை விளைவித்ததற்கான பொறுப்பினை பங்கிட்டுக் கொடுப்பதில் எந்த முயற்சியும் அல்லது நேரமும் அங்கு செலவழிக்கப்பட்டு இருந்திருக்கும் என நானும் நம்பவில்லை. காரணம் பற்றிய பிரச்சினை முக்கியமானது மற்றும் அது பல ஆண்டுகளுக்கு விவாதிக்கப்படும், ஆனால் அதற்கு இந்த வழக்கு விசாரணையில் இடமில்லை, போரைத் தொடுப்பதற்கும் திட்டமிடுவதற்கும் பிரதிவாதிகளைப் பாதித்தது என்னென்ன காரணிகளாகவும் இருக்கலாம், அது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தல் மற்றும் திட்டமிடுதல் சட்டவிரோதமானது என்ற கோட்பாட்டை விடாது பற்றுவதில் கடுங்கண்டிப்பாய் கட்டாயம் இருக்க வேண்டும். பங்களிப்பு செய்த காரணிகள் பிரதிவாதிகளால் வரலாற்றின் முறைமன்றத்தில் சாக்குப்போக்காக காரணங்கூறி வாதாடப்படலாம், ஆனால் நடுவர் மன்றத்தின் முன் அல்ல."[4]

இந்தப் பிரச்சினை --ஈராக்கிற்கு எதிரான தூண்டப்படாத அமெரிக்க போர் ஒன்றுக்கான மற்றும் தற்போதைய நடந்து கொண்டிருக்கும் மிகவும் முன்னதான தயாரிப்புக்கள் தொடர்பாக மட்டும் முக்கியத்துவம் உடையதாக அல்லாமல், இன்று பிறவகையிலும் அசாதாரணமான முக்கியத்துவம் உடையதாகும். நூரெம்பேர்க்கில் நிலைநாட்டப்பட்ட முன்நிகழ்வு ஏதாவது நிகழ்காலப் பொருத்தத்தைக் கொண்டிருக்குமானால், இந்தப் பத்திரத்தில் நுட்பமாக விளக்கப்பட்ட முழு மூலோபாயமும் சர்வதேச விதியின் எல்லைகளுக்கு வெளியில் செல்கிறது. இந்தப் பத்திரத்தில் வலியுறுத்தப்பட்ட, அமெரிக்க மூலோபாயத்துக்கு அத்திவாரமாக சேவைசெய்யும் அடிப்படைக்கூற்று, தாக்குதலுக்கான தெளிவான மற்றும் ஆதாரம் காட்டத்தக்க அச்சுறுத்தலைத் தடுப்பதற்கு தான் செயல்படுகிறது என, நம்பத் தகுந்த ஆதாரங்களை வழங்காமல், இன்னொரு நாட்டுக்கு எதிராக ஒரு தலைப்பட்சமான இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு உள்ள ஐக்கிய அமெரிக்க அரசுகளின் உரிமை ஆகும். எப்பொழுதெல்லாம் தீர்மானிக்கிறதோ அப்பொழுது அவ்வாறு செய்வதற்கு வன்முறையைப் பயன்படுத்துவதற்கு அனைத்து வகையிலும் சூழ்ந்து கொண்ட அரசுகளின் இந்த வலியுறுத்தலானது, மேலோட்டமான ஆய்வுகளுடன் கூட ஈடுகொடுக்க முடியாத இறுக்கமில்லாமல் -வடிவமைக்கப்பட்ட மொழியுடன் நியாயப்படுத்தப்படுகிறது: "போக்கிரி அரசுகளையும் அவர்களின் பயங்கரவாத கட்சிக்காரர்களையும் அவர்கள் அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கும் நமது கூட்டாளிகளுக்கும் நண்பர்களுக்கும் எதிராக பரந்த அழிவுகரமான ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடும் அல்லது அச்சுறுத்த முனையும் முன்னர், தடுத்து நிறுத்துவதற்கு நாம் கட்டாயம் தயாரிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்."

எதை ஒரு "போக்கிரி அரசு" என யார் வரையறை செய்வது? ஏதாவது அரசு அமெரிக்க நலன்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சவால்செய்கிறதா? புஷ் நிர்வாகம் "போக்கிரி அரசுகளாக" கருத இருக்கும், "போக்கிரி அரசுகளின்" சாத்தியம் விளக்கப்படாத, அந்த அனைத்து நாடுகளின் பட்டியலானது மிகவும் நீண்ட ஒன்று. இந்தப் பட்டியல் நிச்சயமாக கியூபாவையும் உள்ளடக்கி இருக்கிறது. அது ஹெகார்ட் ஷ்ரோடரினது (Gerhardt Schroeder) பிரதமராக மறுதேர்வு செய்யப்பட்டதன் பின்னர் ஜேர்மனியையும் கூட உட்சேர்த்துக் கொள்ளக் கூடும்!

"பயங்கரவாதி" பற்றிய திட்டவட்டமான வரையறைக்காகவும் நாம் கேட்க வேண்டும். இகழார்ந்த வகையில் தெளிவில்லாமல் அரசியல் சூழ்ச்சிக்கு உள்ளாக்கப்படும் வார்த்தை இதுவாகும். மேலும், அமெரிக்க ஐக்கிய அரசுகள் "போக்கிரி அரசை" தாக்கும் முன்னர் "போக்கிரி அரசு" என்று அழைக்கப்படுவதற்கும் ஒரு "பயங்கரவாத கட்சிக்காரருக்கும்" இடையிலான தொடர்பை நிலைநாட்டுவதற்கு எந்தத் தரத்திலான சான்று தேவைப்படும்? சற்றே மற்றொருநாள், ஜனாதிபதி, அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் ஈராக்கிற்கும் அல் கொய்தாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்று, இந்தக் கூற்றுக்கு உண்மை நிகழ்வோடு தொடர்புடைய எந்த ஆதாரமும் வழங்காமல் அறிவித்தனர், மற்றும் மாறுபாடான வகையில் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் தொடர்பான ஈராக்கின் மதச்சார்பற்ற ஆட்சியின் குரோதமான நோக்கு பற்றி உண்மையில் அறியப்பட்டிருக்கிறது.

இறுதியாக, "பரந்த அழிவுகரமான ஆயுதங்களைப் பயன்படுத்த இயலும் முன்னர் அல்லது அச்சுறுத்த இயலும் முன்னர் போக்கிரி அரசுகளுக்கும் அவர்களின் பயங்கரவாத கட்சிக்காரர்களுக்கும்" எதிராக இராணுவ நடவடிக்கையை எடுப்பதற்கான உரிமை பற்றிய வலியுறுத்தலானது, அமெரிக்க ஐக்கிய அரசுகளானது அச்சுறுத்தும் சாத்தியம் உள்ளதாக எந்தெந்த அரசுகளை இனங்காட்டுகிறதோ அவற்றைத் தாக்கும் உரிமையைப் பற்றி அது கூறுகிறது என்று மட்டுமே அர்த்தப்படுத்த முடியும். தற்போது ஒரு அரசு, அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்காவிட்டாலும்; அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு எதிராக ஒரு தாக்குதலை செயலூக்கத்துடன் தயாரிக்காதது ஒரு புறம் இருக்கட்டும், தற்போது அது திட்டமிடலில் இல்லாதிருந்தாலும், அமெரிக்க அரசாங்கம் அதனை அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஒரு சாத்தியமான அல்லது கருவடிவிலான அச்சுறுத்தலைக் கொண்டிருப்பதாக இனங்கண்டால், அது தாக்குதலுக்கான முறையான இலக்காக இன்னும் இருக்கும்.

"அச்சுறுத்தல்" பற்றிய ஒரு வரையறைக்கு, அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு எதிரான எல்லோருக்கும் தெரியத்தக்க வெளிப்படையான நடவடிக்கை தேவைப்படவில்லை, மாறாக எதிர்காலத்தில் சில கட்டத்தில் அச்சுறுத்தல் ஆவதற்குரிய சாத்தியம் ஒன்றே, அமெரிக்கத் தாக்குதலுக்கான சாத்தியமான இலக்குகளின் பட்டியலில் உண்மையில் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் வைக்கும். இது ஒரு மிகைப்படுத்தல் அல்ல. அப்பத்திரம் "பகைவர்கள்" பற்றி மட்டும் பேசவில்லை, "சாத்தியமுள்ள பகைவர்கள்" பற்றியும் கூட பேசுகிறது, மற்றும் அவற்றை "அமெரிக்க அரசுகளின் ஆற்றலை கடந்து செல்லும் அல்லது சமப்படுத்தும் நம்பிக்கைகளில் ஒரு இராணுவத்தைக் கட்டுவதை" மேற்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறது. "முன்னேறிய இராணுவ செயல்வல்லமைகளை" சீனா அடைய முயற்சிப்பதற்கு எதிராக அது நேரடியாக எச்சரிக்கிறது, அவ்வாறு செய்வதன் மூலம் "சீனா காலாவதியாகிப் போன ஒரு பாதையைப் பின்பற்றுகிறது, இறுதியில் அது தேசியப் பெருமை பற்றிய அதன் சொந்தப் பின்பற்றலை இடையூறுக்கு உள்ளாக்கும்" என உறுதியாகக் கூறுகிறது --அதாவது, அது ஒரு அச்சுறுத்தலாக வெளிப்படும், அதற்கு அமெரிக்க ஐக்கிய அரசுகளால் முன்னரே தாக்கித் தனதாக்கிக் கொள்ளும் இராணுவ பதில் நடவடிக்கை தேவைப்படலாம் என்கிறது.

அறிக்கையானது "முன்னேறிய இராணுவ செயல்வல்லமைகளை" சீனா பின்பற்றுவதன் அர்த்தம் "காலாவதியாகிப் போன பாதையை" பின்பற்றுவதாகும் என சீனாவிற்குக் கூறும் அதேவேளை, சற்றே இரண்டு பக்கங்கள் தள்ளி, போலி நடிப்பாய் ஏய்க்கும் விதத்தில் அமெரிக்க இராணுவ பலத்தின் அத்தியாவசியப் பாத்திரத்தினை மீள உறுதிப்படுத்துவதற்கான நேரம்" என்று முடிவாய் வலியுறுத்தி அறிவிக்கிறது. சவாலுக்கு அப்பால் எமது பாதுகாப்புக்களை நாம் கட்டாயம் கட்டி எழுப்ப வேண்டும் மற்றும் பராமரிக்க வேண்டும் என்கிறது. "மற்றும் இந்த செயல் வேலைத் திட்டம் உலகம் முழுவதும் அமெரிக்காவின் இராணுவ நிலைகொள்ளலின் பரந்த விரிவாக்கத்தை இன்றியமையாததாக்குகிறது. "உறுதியிலாத்தன்மையுடன் போராடுவதற்கு மற்றும் நாம் எதிர் கொள்ளும் பல பாதுகாப்பு சவால்களை சந்திப்பதற்கு அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு மேற்கு ஐரோப்பா மற்றும் வடகிழக்கு ஆசியாவுக்கு உள்ளேயும் அப்பாலும் நிலையங்களும் தளங்களும் தேவைப்படுகின்றன, அதேபோல அமெரிக்கப் படைகளை நீண்ட தொலைவுக்கு அனுப்புவதற்கான தற்காலிக ஏற்பாட்டு வசதிகளும் தேவைப்படுகின்றன.

பத்திரமானது நிலவுகின்ற மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கு எதிராக முன்னரே தாக்கித் தனதாக்கிக் கொள்ளும் புதிய கோட்பாட்டை திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றது, மற்றும் அமெரிக்க ஐக்கிய அரசுகள் எதிர்பார்த்திராத மற்றும் கற்பனை செய்யமுடியாத புதிய ஆபத்தை திடீரென்று எதிர்கொள்ளும்பொழுது, பின்வாங்கச் செய்யும்படியான முந்தைய கோட்பாட்டைக் கைவிடுதல் செப்டம்பர் 11, 2001 நிகழ்ச்சிகளுக்கு ஒரு அவசியமான பதிலாக இருக்கிறது. "குளிர் யுத்த அச்சுறுத்தலின் தன்மையானது, பரஸ்பரம் உத்தரவாதம் செய்யப்பட்ட அழிவின் விட்டுக் கொடுக்காத மூலோபாயத்தினை உண்டுபண்ணும் பகைவர்கள் பலத்தைப் பயன்படுத்தலை பின்வாங்கச் செய்வதற்கு வலியுறுத்தல் செய்வது, அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு தேவைப்பட்டது" என அறிக்கை வலியுறுத்தல் செய்கிறது. சோவியத் ஒன்றியத்தின் பொறிவுடனும் குளிர் யுத்தத்தின் முடிவுடனும், எமது பாதுகாப்பு சூழல் பெரும் மாற்றங்களுக்குள் சென்றிருக்கிறது." சிலவற்றுக்குப் பின்னர், பத்திரமானது சோவியத் ஒன்றியத்தை "பொதுவாக இதுகாறும் உள்ள நிலையில், ஆபத்து-தீங்கு விளைவிக்கும் பகைவன்" என விவரிக்கிறது. "பின்வாங்கச் செய்தல் பலனுள்ள பாதுகாப்பாக இருந்தது" என்கிறது.

1980 கள் ஒப்பீட்டளவில் அண்மைய வரலாறாக இருக்கும் எம்மைப் பொறுத்தவரை, 1960களை இன்னும் நினைவு கூரக் கூடியவர்களை, மற்றும் 1950 களின் வரலாறு பற்றி கூட சிலவற்றை அறிந்திருப்பவர்களைப் பொறுத்தவரை, இவை குறிப்பிடத்தக்க வார்த்தைகளாக இருக்கின்றன. குளிர் யுத்த வரலாற்றுடன் பரிச்சயமில்லாதவர்கள், இந்த மூலோபாயப் பத்திரத்தின் ஆசிரியர்கள் --சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை இப்பொழுது கிட்டத்தட்ட பழங்கால நாட்ட வார்த்தையில் "கெளரவமாய் மற்றும் பணிவான வகையில் பின்வாங்கச்செய்தல் பயன்மிக்கதாய் இருந்த அதற்கு எதிராக, பொதுவாக இதுகாறும் உள்ள நிலையில், ஆபத்து (தீங்கு) விளைவிக்கும் பகைவன்" என விவரிக்கும் அவர்கள்-- கிட்டத்தட்ட அதே ஆட்கள், 1980கள் போல் அண்மையில், சோவியத் ஒன்றியத்தை "தீமையின் குவிமையம்" என விவரித்தனர், அதற்கு எதிராக ஐக்கிய அமெரிக்க அரசுகள் ஒரேயடியான போருக்காக தயார் செய்யவேண்டும் என விவரித்தனர். தற்போதைய பாதுகாப்பு செயலாளர், டொனால்ட் ரம்ஸ்பெல்ட் நெருக்கமாகத் தொடர்புடைய தற்போதைய ஆபத்துக்கான வலதுசாரிக் குழு, 1970களில் அமைக்கப்பட்டது, அது சோவியத் ஒன்றியத்துடன் ஆயுதக்கட்டுப்பாட்டு உடன்படிக்கையை வெறுப்புடன் எதிர்த்தது. இந்த அமைப்பு சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கு எதிராக பெரும் இராணுவக் கட்டி எழுப்பலைக் கோரியது, மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அணு ஆயுதப் போரை அமெரிக்க ஐக்கிய அரசுகள் நடத்தும் சாத்தியம் பற்றியும் அதில் வெல்லும் சாத்தியம் பற்றியும் விவாதித்தது. "நட்சத்திரப் போர்" (Star Wars) என்று பெயர் பெற்ற றேகன் நிர்வாகத்தின் ஆதரவு பெற்ற மூலோபாய பாதுகாப்பு முன்னெடுப்பானது (Strategic Defense Initiative [SDI]), குடியரசுக் கட்சியில் உள்ள அதி வலதுசாரி சக்திகள் --அவர்களின் மத்தியில் இப்போது காணப்பட இருக்கின்ற, புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளை இயக்கும் பிரதான நாடக நபர்கள், சிறப்பாக செனி, ரம்ஸ்பெல்ட் மற்றும் உல்போவிட்ஸ் ஆகியோர் -- அமெரிக்க ஐக்கிய அரசுகளைப் பொறுத்தவரையில் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கு எதிராக சக்தியுள்ள ஒரு இராணுவ தேர்வாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை எண்ணிப்பார்ப்பதை சாத்தியமாக்கும் தொழில் நுட்பத்தினை அபிவிருத்தி செய்வதற்கான --கோரிக்கையில் இருந்து எழுந்தது.

இங்கு புஷ் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் கீழ் இருக்கும் வரலாற்று பொய்மைப்படுத்தலுக்கும் அரசியல் ஏமாற்றுக்கும் நாம் வருகின்றோம் --இன்றியமையாத வகையில் செப்டம்பர் 11 நிகழ்வுகளுக்கு ஒரு பதிலாக இருக்கின்ற, அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ள கொள்கைகள், அல்கொய்தா மற்றும் ஏனைய பயங்கரவாத அமைப்புக்களினால் அமெரிக்க ஐக்கிய அரசுகள் மீது திணிக்கப்பட்ட தப்பிக்க முடியாத இராணுவ கடப்பாடுகளால் தீர்மானிக்கப்பட்டன மற்றும் வடிவமைக்கப்பட்டன. புஷ் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில் குறிக்கப்பட்டுள்ள உலக மேலாதிக்கத்திற்கான திட்டமானது செப்டம்பர்11, 2001 நிகழ்ச்சிகளுக்கு விதிவிலக்கான பதிலாக இருக்கின்றதற்கும் அப்பால், அது ஒரு தசாப்தத்திற்கும் மேலான அபிவிருத்தியில் இருந்து வந்திருக்கின்றது.

சோவியத் ஒன்றிய கலைப்பு

தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் மூலங்கள் பற்றி இரு வாரங்களுக்கு முன்னர் முகத்திரை விலக்கியது 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட நாளுக்கு திருப்பிச்செல்ல முடியும். இது அமெரிக்க ஐக்கிய அரசுகளைப் பொறுத்தவரை மிகப் பரந்த செயல்விளைவுடைய முக்கியத்துவம் உடையது. நூற்றாண்டின் கிட்டத்தட்ட முக்கால்வாசி பகுதிகளான, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் தலைவிதியானது விடுபட முடியாமல் இணைந்திருந்தன. முதல் உலகப் போரில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் நுழைந்த 1917 ஏப்ரலுக்கு சிலமாதங்களுக்குப் பின்னர் மட்டுமே போல்ஷிவிக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வந்த அக்டோபர் புரட்சி தொடரப்பட்டது. இவ்வாறு, பிரதான ஏகாதிபத்திய வல்லரசாக அதன் வெளித்தோன்றலின் ஆரம்ப நாட்களிலிருந்து, அமெரிக்க ஐக்கிய அரசுகளானது, உலக சோசலிசப் புரட்சியை பறைசாற்றிய, புதிய வரலாற்று சகாப்தத்தின் வருகையினைப் பறைசாற்றிய தொழிலாளர் அரசின் யதார்த்தத்துடன் மோதியது. லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியால் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட புரட்சிகர சர்வதேச கருத்துக்கள் பற்றியதில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் அடுத்தடுத்த காட்டிக் கொடுப்பு இருப்பினும், ரஷ்யாவில் முதலாளித்துவத்தைத் தூக்கி வீசியதால் உண்டு பண்ணப்பட்ட அரசியல் --அமெரிக்க ஐக்கிய நாடுகள் உட்பட முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் சமூக நனவு மற்றும் அரசியல் போர்க்குணத்தின் வளர்ச்சியில், மற்றும் சிறப்பாக இரண்டாவது உலகப் போரின் பின்னர் பூகோளத்தின் குறுக்கே அடித்துச்செல்லும் காலனித்துவ எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் அலையில்-- தசாப்த காலங்களாக தொடர்ந்து எதிரொலிக்க இருந்தது.

இரண்டாம் உலகப்போரில் இருந்து அது உலக முதலாளித்துவத்தின் தலைவராக தோன்றினாலும், அமெரிக்க ஐக்கிய அரசுகளானது உலகை அது பொருந்தக்கூடியதாக பார்க்கிறவாறு ஒழுங்கு செய்வதற்கான நிலையில் இல்லை. அணுகுண்டை உடைமையாகக் கொண்டிருப்பது, அமெரிக்க ஐக்கிய அரசுகள் அச்சுறுத்த அதிகாரம் கொடுக்கும் மற்றும், தேவைப்படுமானால், சோவியத் ஒன்றியத்தை அழிக்கும் என்ற ஆரம்ப எதிர்பார்ப்பானது, 1949ல் சோவியத் ஒன்றியத்தின் அணுஆயுத சாதன உற்பத்தியால் சிதறுண்டு போனது. அதே ஆண்டில் சீனப்புரட்சியின் வெற்றியானது, ஆசியாவின் மேல் சவால் செய்ய முடியாத ஆதிக்கத்தை, தான் செயல்படுத்தும் என்ற அமெரிக்காவின் எதிர்பார்ப்பிற்கு ஒரு அழிவுகரமான தாக்குதல் கொடுப்பதை பிரதிநிதித்துவப்படுத்தியது.

குளிர் யுத்த ஆரம்ப ஆண்டுகள் முழுவதும் சோவியத் ஒன்றியத்துடன் எப்படி அணுகுவது என்பது தொடர்பாக அமெரிக்க ஆளும் வட்டங்களுக்குள்ளே ஒரு கடும் சண்டைக்கான வேட்கை இருந்தது. 1940களின் இறுதி மற்றும் 1950களின் ஆரம்பத்தினது கொடிய கம்யூனிச எதிர்ப்பு வேட்டையாடல் மற்றும் அரசியல் களையெடுப்புக்கள் ஆகியன இந்த விவாதம் இடம்பெற்ற சூழலின் முக்கிய கூறுகளாக இருந்தன. ஆளும் தட்டின் கணிசமான பிரிவினர் (கன்னை) 'திரும்பச் சுருட்டல்' (“rollback”) மூலோபாயத்துக்கு --அதாவது, சோவியத் ஒன்றியத்தையும் சீனாவில் மாவோயிச ஆட்சியையும் அழித்தலுக்கு வக்காலத்துவாங்கின, இது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலை தவிர்க்க முடியாததாகக்கூட ஆக்கியது. அரசுத்துறை கொள்கை வகுப்பாளர் ஜோர்ஜ் எப். கென்னான் (George F. Kennan) உடன் தொடர்புடைய, இன்னொரு பிரிவு, "எதிரியைத் தாக்குக் காட்டி வைத்திருக்கும் சூழ்ச்சி" (containment) க்கு வக்காலத்து வாங்கியது.

ட்ரூமன் நிர்வாகம் சீன இராணுவத்திற்கு எதிராக அணுஆயுதங்களைப் பயன்படுத்தலை அங்கீகரிப்பதற்கு நெருக்கமாக வருகையில், இந்த பிரிவுகளுக்கு (கன்னைகளுக்கு) இடையிலான மோதல் கொரிய போரின்பொழுது முன்னுக்கு வந்தது. 1950, நவம்பர் 30ல் நடைபெற்ற ஒரு செய்தியாளர் மாநாட்டில், ட்ரூமன் கொரிய போரில் சீனா நுழைவதை எப்படி அணுக அவர் விருப்பங்கொண்டுள்ளார் என்று கேட்டனர். ஜனாதிபதி பதிலளித்தார்: "நாம் எப்போதும் போலவே, இராணுவ சூழலை சந்திப்பதற்குத் தேவையான என்னென்ன நடவடிக்கைகள் இருக்கின்றனவோ அவற்றை எடுப்போம். பின்னர் அவர் குறிப்பாக அது அணுகுண்டு பயன்படுத்துவதை உள்ளடக்கியுள்ளதா எனக் கேட்கப்பட்டார், அதற்கு ட்ரூமன் பதிலளித்ததாவது, அது "நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு ஆயுதத்தையும் உள்ளடக்குகிறது. இந்தக் கூற்றை விளக்குமாறு அதிர்ச்சியுற்ற செய்தியாளர்கள் வலியுறுத்தியபோது, "அணுகுண்டு பயன்படுத்தல் செயலூக்கத்துடன் எண்ணப்பட்டிருந்தது, "[5] என்றார்.

சர்வதேச பெருங்கூச்சல் அமெரிக்க அரசாங்கத்தை ட்ரூமனின் கூற்றுக்கு பதில்வினையாற்றும்படி நிர்ப்பந்தித்தது பின்நிகழ்வாகியது. இறுதியாக, ட்ரூமன் நிர்வாகம் மஞ்சூரிய --கொரிய எல்லையில் ஜப்பான் கடலில் இருந்து மஞ்சள் கடல்வரை "கோபால்ட் கதிரியக்க வீச்சின் ஒரு பட்டை" யை பரப்புதற்கு 30லிருந்து 50 அணுகுண்டுகள் போடப்படவேண்டும் என்ற ஜெனரல் மக்ஆர்தரின் (General MacArthur) கோரிக்கையை நிராகரித்தது. இந்த முன்மொழிவு ஒரு பைத்தியக்கார ஜெனரலின் மூளையில் உருவாகிய குழந்தை அல்ல. இந்த மற்றும் அதேபோன்ற கருத்துக்கள் நீண்டு நினைக்கப்பட்டது மற்றும் ஆதரிக்கப்பட்டது. அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலை பகிரங்கமாக ஆதரித்தோர்களுள் பிற்கால உதவி ஜனாதிபதியின் தந்தையான காங்கிரஸ் உறுப்பினர் மூத்த அல்பர்ட் கோர் ஆவார். கொரியப் போரில் அணுகுண்டுகளைப் பயன்படுத்தாதிருக்க முடிவெடுத்தமைக்கு இரு காரணிகள் வழிவகுத்தன. முதலாவாக, நிலவும் இராணுவ சூழலில் அது பலனுள்ளது என நிரூபிக்கும் என்பது பற்றி அங்கு சீரிய சந்தேகங்கள் இருந்தன. இரண்டாவது, மற்றும் தீர்மானகரமானது, கொரியாமீது குண்டு போடுவது ஒரு அரசியல் சங்கிலித்தொடரான எதிர்வினையை இயங்க வைக்கும், அது அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அணுஆயுத மோதல்களுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் இருந்ததாகும். குளிர் யுத்தத்தின் எஞ்சிய தசாப்தங்களில், "பின்வாங்கும்படி செய்வதன்" உண்மையான அர்த்தம், சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை அவ்வாறு செய்வதிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் தடுப்பது அல்ல, மாறாக சோவியத்தின் திருப்பித் தாக்கல் சாத்தியமானால் அவ்வாறு செய்வதிலிருந்து அமெரிக்க ஐக்கிய அரசுகளைத் தடுப்பதாகும்.

குளிர் யுத்தம் ஒட்டு மொத்தமானதின் மூலோபாயமாக இல்லாதது என்பது ஒருபுறம் இருக்க, குளிர் யுத்தத்தின்பொழுது அமெரிக்க ஐக்கிய அரசுகளின் அணுஆயுத மூலோபாயம் பற்றி சக்தி இழக்கும் வகையில் விவாதிப்பதற்கான இடம் இதுவல்ல. ஆனால் கடந்த தசாப்தத்தின் சம்பவங்களையும் அமெரிக்க அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகளைப் பற்றியும் புரிந்துகொள்வதன் நோக்கத்திற்காக, சோவியத் ஒன்றியம் அமெரிக்க இராணுவ பலத்தை செயல்படுத்தலின் கீழ் வைக்கப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் இருப்பு எனும் கட்டுப்பாடுகளின் கீழ் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பரந்த பகுதிகள் சினமூட்டப்பட்டன என்பது கட்டாயம் வலியுறுத்தப்பட வேண்டும். இந்தக் காலகட்டம் முழுவதும் ஜனாதிபதி ஐசனோவர் அழைத்த "இராணுவ -- தொழிற்சாலை வளாகம்" என்பதனுள்ளே சக்திமிக்க வட்டாரத்துக்குள் எஞ்சி இருந்தது, அது சோவியத் ஒன்றியத்துடன் கடுமை தணியாத மோதலுக்கு தள்ளியது. நான் ஏற்கனவே குறிப்பிட்டவாறு, புஷ் நிர்வாகத்தில் தற்போது மிகமுக்கிய பதவிகளில் இருப்பவர்களுள் பலர் 1970கள் மற்றும் 1980களில் பெரும் சோவியத் விரோத இராணுவக் கட்டி எழுப்பலுக்கு வெறியுடன் வக்காலத்து வாங்கியோராக, மற்றும் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் மீது அணு ஆயுதத்தாக்குதலை நடத்தல் நிகழக்கூடிய தேர்வாக கருதப்பட்டிருந்தது என்று கூட வாதித்தவர்களாக இருந்தனர்.

அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையின் அதிகரித்துவரும் வலியத்தாக்கும் தன்மை பிரத்தியேகமாக குடியரசுக் கட்சியின் செயல்முறைத் திட்டம் ஆக இல்லை. ஜிம்மி கார்ட்டர் நிர்வாகம் சோவியத் ஒன்றியத்தின் மத்திய ஆசிய குடியரசுகளை சீர்குலைக்க வேண்டி ஆப்கானிஸ்தானுக்குள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளைத் தூண்டி விடும் கருத்தை தட்டிவிட்டது. கார்ட்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜ்பிக்னீவ் பிரிஜேஜின்ஸ்கி, பல ஆண்டுகளுக்கு முன்னர் உறுதிப்படுத்தியவாறு, சோவியத் ஒன்றியம் அந்த நாட்டில் இராணுவ தலையீடு செய்ய தீர்மானிக்கும் முன்னரே ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நடவடிக்கைகள் நன்கு செயல்பட்டுக் கொண்டிருந்தன.

குளிர் யுத்த காலத்தின்பொழுது சோவியத் - அமெரிக்க உறவுகள் பற்றி மேலதிகமாய் ஒரு புள்ளி கூறப்பட வேண்டும். அமெரிக்க வலியத் தாக்குதல் தன்மை உலக முதலாளித்துவ பொருளாதாரத்துடன் தொடர்புடையது என்று பலமாக மற்றும் செயலூக்கத்துடன் விவாதிக்கப்பட முடியும் என்று நான் நம்புகிறேன். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான சர்வதேச முதலாளித்துவத்தின் விரிவாக்க முழுமலர்ச்சிக் காலத்தின்பொழுது, அமெரிக்க ஆளும் தட்டிற்குள்ளே கசப்பான உள்சண்டை சோவியத் ஒன்றியத்துடன் சமரசத்தை ஆதரித்தவர்களின் விவாதங்களின் அடிப்படையில் தீர்க்கப்படுவதை நாடியது. உலகரீதியான பொருளாதார விரிவாக்கத்தின் பொதுவான சூழ்நிலைகள் கிழக்கு -- மேற்கு பிரிவு என்று அழைக்கப்படும் புவிசார் அரசியல் கட்டமைப்புக்குள்ளே இலாபரீதியாக இயங்குதற்கு அமெரிக்க முதலாளித்துவத்தை அனுமதித்த அந்த மட்டத்துக்கு, அமெரிக்க ஆளும் தட்டு சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்துடன் அணுஆயுத மோதலைத் தவிர்ப்பதற்கு அல்லது தள்ளிப்போடவாவது மூலோபாய முடிவை செய்தது. வெளிப்படையான இராணுவ மோதல்கள் புற எல்லைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

இருப்பினும், ஆழமான கட்டமைப்பு மற்றும் அமைப்பு முழுதும் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து எழுந்த நீண்ட பொருளாதாரத் தேக்கநிலை மற்றும் பொருளாதார சரிவு கொண்ட காலகட்டத்தில் 1970களில் உலக முதலாளித்துவம் நுழைகையில், --அதன் தற்போதைய பொருளாதார பின்னடைவு முன்கூட்டிய அடையாளமாக இருக்கிறது-- இன்னும் அதிகமாய் வலியத் தாக்கும் போக்குகள் தம்மை உறுதிப்படுத்தின மற்றும் ஆளும் வட்டத்திற்குள்ளே ஆதரவான பதிலைக் கண்டன. ஒருவர் இரு மாபெரும் எண்ணெய் அதிர்ச்சிகளையும் கூட சேர்க்கலாம் --முதலாவது எண்ணெய் விற்பனை மீதாக புறக்கணிப்பை திணித்தலை அமல்படுத்துவதற்கான அரபு அரசுகளின் முடிவின் விளைவாக 1973ல் முதலில் நிகழ்ந்தது, இரண்டாவது 1979 ஈரானியப் புரட்சியைத் தொடர்ந்து-- அமெரிக்க ஆளும் வர்க்கம் எண்ணெய், இயற்கை வாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய மூலோபாய வளங்களை அது பெறுவதற்கு எந்தவிதமான எதிர்கால இடையூறுகளையும் தடுப்பதற்கு அதன் உறுதியை அதிகரித்தது.

1980களின் பெரும் இராணுவக் கட்டி எழுப்பலானது, அமெரிக்க ஆளும் தட்டின் சக்திமிக்க பகுதிகள் சோவியத் ஒன்றியத்துடன் பிரதான மோதலின் ஆபத்து நேர்வை எடுக்க விரும்பி இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டியதாய் காணப்பட்டது. இந்தப் போர்வெறி கொண்ட சர்வதேசக் கொள்கை றேகன் நிர்வாகத்தால் பின்னபற்றப்பட்ட உள்நாட்டுக் கொள்கையின் கண்ணாடி பிரதிபலிப்பாக இருந்தது, அது தொழிற்சங்க- உடைப்பின் வெற்றிகரமான மற்றும் செயலூக்கமுள்ள வேலைத்திட்டத்தையும் முந்தைய 50 ஆண்டுகளாக தொழிலாள வர்க்கத்தால் வென்றெடுக்கப்பட்ட சமூக சீர்திருத்தங்களை "திரும்ப சுருட்டிக் கொண்டுபோதலை" யும் முன்னெடுத்தது.

முடிவில், சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை கலைப்பதற்கு முடிவெடுத்தது சோவியத் அதிகாரத்துவம் ஆகும். 1991ல் சோவியத் ஒன்றியம் சுய-கலைப்பு --ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் அக்டோபர் புரட்சியின் மரபியத்தை இறுதியாய்க் காட்டிக் கொடுத்தது-- அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முன்னர் என்றுமிருந்திராத வரலாற்று வாய்ப்பினை உண்டு பண்ணியது. முதல் தடவையாக அது அதன் நோக்கங்களை அடைவதற்கு பலத்தைப் பயன்படுத்துவதில் எந்தவித குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளும் --இராணுவ அல்லது அரசியல் கட்டுப்பாடுகளும்-- இருக்காத சர்வதேச சூழலில் செயல்பட முடிந்தது. இந்தப் புள்ளியிலிருந்து, அமெரிக்க ஐக்கிய அரசுகளின் மூலோபாய குறிக்கோள்கள் மீதான உள் விவாதங்கள் மிகவும் கொடிய மற்றும் பிற்போக்கு போக்கினரால் எடுத்துக் கொள்ளப்பட்டன.

சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் இல்லாமற்போனது, அமெரிக்காவைப் பொறுத்தவரை சவால் செய்ய முடியாத பூகோள மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு வாய்ப்பை வழங்கியது என அவர்கள் அறிவித்தனர். அமெரிக்க ஐக்கிய அரசுகளின் பணியானது 1991ல் வலதுசாரி பத்தி எழுத்தாளர் சார்லஸ் கிராத்தம்மர் (Charles Krauthammer) குறிப்பிட்டவாறு முற்றுமுழுதான பூகோள மேலாதிக்க நிலையை ஏற்படுத்துவதற்கு ஒரு "ஒரு திற முனைப்பாற்றலுடைய இயக்கமாக" பயன்படுத்திக் கொள்வதாக இருந்தது. அமெரிக்க ஐக்கிய அரசுகள் அது எதனை எல்லாம் விரும்புகிறதோ அதனை அடைய இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கு தயங்கக் கூடாது என கிராத்தம்மர் விவாதித்தார். ஐரோப்பியர்களும் ஜப்பானியர்களும் ஏளனமாக நடத்தப்பட வேண்டும், மற்றும் அவர்கள் அமெரிக்க ஐக்கிய அரசுகளை கெஞ்சுபவராக அணுக இருந்தனர் என்பதை அங்கீகரிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட வேண்டும். அமெரிக்கத் தலைவர்களைப் பொறுத்தவரை பன்முகத்தன்மைக்கு உதட்டளவில் சேவை செய்வது அரசியல் ரீதியாக உசிதமாக இருக்கும் அதேவேளை, அந்தக் கொள்கை யதார்த்தத்தில் இறந்து விட்டது. "உலக ஒழுங்கின் விதிமுறைகளை வெட்கமில்லாமல் கீழே போடுவதற்கு மற்றும் அவற்றை வலிந்து செயற்படுத்த தயாரிப்பு செய்வதற்கு" [6] தன்னிச்சையாக அதன் ஆற்றலை செயல்முறைப்படுத்துதற்கு அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு நேரம் வந்திருந்தது.

விசித்திரம், அவர் இந்த வார்த்தைகளை எழுதிய பொழுது, பல ஆண்டுகளுக்கு முன்னால் இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் மார்க்சிஸ்டுகளால் செய்யப்பட்ட முன்கணித்தலை அவர் நிரூபணம் செய்ததை ஒருவேளை திருவாளர் கிராத்தமர் உணராதிருக்கலாம். லியோன் ட்ரொட்ஸ்கி 1933ல் எழுதுகையில், ஐரோப்பாவை "ஒழுங்கு செய்ய" ஜேர்மனி முதலாம் உலகப் போரைத் தூண்டி விட்டது என்று நினைவு கூர்ந்தார். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கங்கள் இன்னும் அதிகமான பேரவாவென நிரூபிக்கப்படும். "அமெரிக்க ஐக்கிய அரசுகள் உலகை "கட்டாயம் 'ஒழுங்கு' செய்யும்" என ட்ரொட்ஸ்கி எழுதினார். "அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிமலை வெடிப்புடன் வரலாறானது மனிதகுலத்தை நேருக்குநேர் கொண்டுவந்திருக்கிறது" என ட்ரொட்ஸ்கி எழுதினார்.[7]

முதலாவது புஷ் நிர்வாகத்தினால் பின்பற்றப்பட்ட இராணுவ மூலோபாயம் பற்றிய மீளாய்வு

முதலாவது புஷ் நிர்வாகமானது சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் இல்லாமற் போனமைக்கு அமெரிக்க இராணுவ மூலோபாயத்தை ஒரு முழு அளவிலான மறு ஆய்வு செய்வதன் மூலம் பதில்கொடுத்தது. அதன் மேலோங்கி நின்ற குறிக்கோள்கள் சோவியத் ஒன்றியம் கலைப்பால் விடப்பட்ட அதிகார வெற்றிடத்தை செயலூக்கத்துடன் பயன்படுத்திக்கொள்ள இருந்தன, மற்றும் அவ்வாறு செய்வதன் மூலம் அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு செல்வாக்குள்ள போட்டியாளராக எந்த நாடும் தோன்றுவதிலிருந்து தடுக்கும் ஒரு புவிசார் அரசியற்கோட்டையை ஏற்படுத்துவதாக இருந்தது. இந்த செயல்வேலைத்திட்டத்திற்கு முக்கியமானது இருக்கின்ற அல்லது சாத்தியமுள்ள எந்த பகைவரையும் அல்லது எதிரியையும் ஆத்திரமூட்டுவதற்கு மற்றும் தேவைப்பட்டால் நசுக்குவதற்கு, இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதாக இருந்தது. 1992ல், பாதுகாப்பு செயலாளர் ரிச்சர்ட் செனி மற்றும் அப்போதைய படைத்தளபதியான கொலின் பாவெல் அமெரிக்க இராணுவப் படைகளுக்கான பரந்து விரிந்த செயல்பாட்டு குறிக்கோள்களை நடைமுறைப்படுத்துதற்கு அழைப்பு விடுத்தனர். அதாவது இராணுவமானது 100 நாட்களில் ஒரு பெரிய போரை மற்றும் 180க்கும் குறைவான நாட்களில் இரண்டு போரை முடிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என தூண்டி விட்டது.

பில் கிளிண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டது அமெரிக்க இராணுவத் திட்டமிடலாளர்களின் அதிகரித்துவரும் வலுச்சண்டைக்குப் போகும் நோக்கில் எந்தவித குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. "ஈடுபடல் மூலம் உலகை வடிவமைத்தல்" என்ற முழக்கத்தின் கீழ், 1990கள் ஐக்கிய அமெரிக்க அரசுகள் நீண்டகால பூகோள மேலாதிக்கத்தை உத்தரவாதம் செய்யும் பிரதான வழிமுறையாக இராணுவ ஆற்றலைப் பார்த்த ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டினதும் உள்ளே அரசியல் ஒத்திசைவின் தோற்றத்தைக் கண்டது.

ஆயினும், இராணுவ ஆற்றலின் தீர்க்கமான பாத்திரத்தின் மீதான இந்த வலியுறுத்தல் அதன் பலத்திலிருந்து எழவில்லை மாறாக, இன்னும் சொல்லப்போனால் அமெரிக்க முதலாளித்துவத்தின் கீழுள்ள பலவீனத்திலிருந்தே ஆகும். சாராம்சத்தில், இராணுவ வாதமானது பொருளாதார மற்றும் சமூக சரிவின் அறிகுறி ஆகும். அதன் பிரதான போட்டியாளர்களுக்கு எதிரெதிராக அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார பலத்தின் நம்பிக்கை சரியான காரணத்துடன் இழந்து போகையில், மற்றும் உள்நாட்டு சமூகக் கட்டமைப்புக்குள்ளே பிளவுகள் பற்றி அதிகரித்துவரும் அச்சம் வளர, ஆளும் தட்டானது இராணுவ ஆற்றலை தொந்திரவு கொடுக்கும் அனைத்து எதிர்மறைப் போக்குகளுக்கும் எதிர்வினை ஆற்றக்கூடிய வழிமுறையாகப் பார்க்கின்றது. நியூ யோர்க் டைம்ஸின் தோமஸ் பிரைட்மன் (Thomas Friedman) மார்ச் 1999ல் எழுதியவாறு, "மறைந்த முஷ்டி இல்லாமல் சந்தையின் மறைந்த கை ஒருபோதும் வேலை செய்யாது --எப்-15 கட்டியமைப்பவர், மாக்டொன்னெல் டுக்ளஸ் இல்லாமல் மக் டொனால்ட் பூத்துக்குலுங்காது. சிலிக்கன் பள்ளத்தாக்கின் தொழில்நுட்பத்திற்காக உலகை பாதுகாப்பாக வைத்திருக்கும் மறைவான முஷ்டி அமெரிக்க இராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் கடற்படையிலுள்ள நிலப்படை.... என அழைக்கப்படுகின்றது, அமெரிக்கா கடமையில் இல்லாமல், அமெரிக்கா ஒன்லைன் இருக்காது."

அமெரிக்காவின் மூலோபாய குறிக்கோள்கள் பற்றிய உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈராக் பிரச்சினை முக்கிய பாத்திரத்தினை ஆற்றியது. ஒரு பொருளில், ஈராக்கிற்கு எதிரான முதலாவது போர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொறுத்தவரை ஒரு சிலமாதங்களே மிக முன்கூட்டி நிகழ்ந்தது. ஜனவரி -பெப்ரவரி 1991ல், சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் தலைவிதி இன்னும் நிச்சயமில்லாததாய் இருந்தவேளை, ஐ.நா ஆட்சிக் கட்டளை உரிமையின் எல்லகளை வரம்பு மீறுதற்கு மற்றும் சதாம் ஹூசைன் ஆட்சியை ஒருதலைப்பட்சமாய் தூக்கி வீசுதற்கு முயற்சிப்பதற்கு புஷ் நிர்வாகம் அதனை அதி ஆபத்துநேர்வுக்குரியதாய் கருதியது. ஆனால் போர் கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்திருந்த வேளை, ஆளும் தட்டின் சக்திமிக்க பகுதிகளுக்குள்ளே பெரும் வாய்ப்பு தவறவிடப்பட்டிருந்ததாக ஒரு உணர்வு அங்கு இருந்தது. அமெரிக்க மேலாதிக்கத்தை சவால் செய்யக்கூடிய எந்த ஒரு அரசு அல்லது அரசுகளின் சேர்க்கையும் தோன்றுவதைத் தடுக்கும் புதிய மூலோபாய நோக்கத்தின் உள்ளடக்கத்தினுள்ளே, ஈராக்கை வெற்றி கொள்ளல் தீர்வுக்குரிய மூலோபாய குறிக்கோளாகக் காணப்பட வந்தது. வலதுசாரி மூலோபாய வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட எண்ணற்ற பத்திரங்களில், சதாம் ஹூசைனின் ஆட்சியைத் தூக்கி வீசல் ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு எண்ணெய் மீதான, ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் உள்ள அதன் இராணுவப் போட்டியாளர்களாகும் சாத்தியம் உள்ளவர்களின் மற்றும் பொருளாதாரப் போட்டியாளர்களாகும் சாத்தியம் உள்ளவர்களின் பொருளாதாரங்களுக்கு அத்தியாவசியமாக இருக்கும், உச்சபட்சமாய் நெருக்கடி மிகுந்த வளத்தின் மீது மூலோபாயக் கட்டுப்பாட்டை வழங்கும் என வெளிப்படையாக வாதித்தனர். கொள்கை வகுப்பதில் சிறப்பு வல்லநர்களான ஜோர்ஜ் பிரைட்மன் மற்றும் மெர்டித் லெபார்ட் (Meredith Lebard) அவர்களின் செல்வாக்குமிக்க நூலான, 1991ல் வெளியிடப்பட்ட, ஜப்பானுடன் வரவிருக்கும் போர் என்பதில் வாதிக்கின்றனர்.

"எண்ணெயோடு பாரசீக வளைகுடா ஒரு பிராந்திய பிரச்சினை என்பதை விடவும் அதிகமான ஒன்றாக ஆனது. அது அமெரிக்காவைப் பொறுத்தவரை உலகப் பொருளாதாரத்தின் இயக்கமையமாக ஆகிறது, பிராந்தியத்தின் மேலாதிக்கம் முன்னர் எதிர்பார்த்திராத சர்வதேச ஆற்றல் மீது கதவைத் திறந்துவிடும். மற்றொருபுறம், ஈராக் அல்லது ஈரான் போன்ற இன்னொரு பிராந்திய அரசை, பிராந்தியத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றவும் அதன் சொந்த அதிகாரத்தை வலுப்படுத்தவும் அனுமதித்தலானது, இந்தப் பிராந்தியத்தில் ஒரு தரைவழி போரைத் தொடுப்பதற்கு அமெரிக்காவைத் தயார்செய்திராவிடில், அச்சாத்தியத்தின் கதவை மூடிவிடும்.

"குவைத் மீதான 1990 ஈராக்கிய ஆக்கிரமிப்பின்பொழுது, அமெரிக்க பதில் வெளிப்படையாக ஒரு நோக்கத்திற்காக இருந்தது: பிராந்தியத்தின் எண்ணெய் அளிப்பின் ஈராக்கின் மேலாதிக்கத்தைத் தடுத்தல். ஆயினும், அது கூடவே இன்னுமொரு சாத்தியத்தைத் திறந்து விட்டது. குவைத்தை மீண்டும் எடுத்துக்கொள்வதில், சதாம் ஹூசைனின் ஆட்சியை உடைத்தலில் மற்றும் ஈராக் மீதான கட்டுப்பாட்டைக் கைப்பற்றலில் அமெரிக்காவின் வெற்றியானது உலகின் பேரளவு எண்ணெய் சேர்ம இருப்பின் மற்றும் உற்பத்தியின் கட்டுப்பாட்டில் அமெரிக்காவை வைக்கும். எவ்வளவு சேதம்விளைக்காது இந்த சக்தி பயன்படுத்தப்படும் என்பது ஒரு பொருட்டல்ல, அமெரிக்காவானது சர்வதேச பொருளாதார அமைப்பைக் கட்டுப்படுத்துவதில் வெளித்தோன்றும்.....

"...அது உற்பத்தி ஒதுக்கீடுகளை நிர்ணயிக்கும் நிலையில் இருக்கும் மற்றும் ஆகையால் விலைகளை, அதேபோல எண்ணெய் நகர்வினைக் கட்டுப்படுத்தும். தனது 60 சதவீதத்திற்கும் மேலான எண்ணெய் ஏற்றுமதிகளுக்கு ஹொர்முஜ் நீரிணைக்குள் (Straits of Hormuz) உள்ள நாடுகளின் மீது சார்ந்திருக்கும், ஜப்பான் போன்ற நாடு, அதன் மாபெரும் பொருளாதாரப் போட்டியாளர் --உலகின் ஒரே பெரிய பொருளாதாரம் மற்றும் அதிகிரித்த அளவில் ஜப்பானின்பால் கடுமையாயிருக்கும் ஒன்று-- ஜப்பானின் எண்ணெய் அளிப்பின் மீது நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதைக் காணும்.....

"...முன்னணி அரசியல் சக்தியான, அமெரிக்காவானது திடீரென்று, சர்வதேசப் பொருளாதாரத்தின்மீது முதுகுக்குப் பின்னால் மல்லன் பிடி போட தனது அரசியற் சக்தி பயன்படுத்தப்பட முடியும் ஒரு ஸ்தானத்தில் இருப்பதாய் தன்னையே கண்டு கொள்ளும்.

"பாரசீக வளைகுடாவானது ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான தகராறுகளின் மையமாக ஆவது அவசியமானதாக ஆகும். அந்தப் பகுதியிலிருந்து எண்ணெய் பாய்வதற்கு ஜப்பானின் வடுப்படும் நிலை, இப்பிராந்தியத்தில் அதிகரித்த அமெரிக்க அதிகாரம் கட்டாயம் ஜப்பானிய பாதுகாப்பின்மை அதிகரிப்பதை அர்த்தப்படுத்தும். மோதலின் பிராந்தியமயமாதல் மற்றும் பொருளாதாரத்தின் பிராந்திய பிளவுகள் ஐக்கிய அமெரிக்க அரசுகளைப் பொறுத்தவரை முக்கியமான கதவைத் திறக்கும்: ஜப்பானிய எண்ணெய் அளிப்பை சூழ்ச்சியுடன் கையாளுதல் ஜப்பானிய ஏற்றுமதிகள் அமெரிக்காவிற்கு முன்வைக்கும் சவாலை நன்றாக முடிவுக்குக் கொண்டுவரக் கூடும்." [8]

எளிதில் பாதிக்கக் கூடிய இந்த பிரச்சினை பற்றிய விவாதம் தொடக்கூடாததாக உண்மையில் இருக்கும், அமெரிக்க வெகுஜன ஊடகங்களைத் தவிர, அமெரிக்காவைப் பிரதானமாய் முன்ஆக்கிரமித்திருப்பது பரந்த மக்களை அழிக்கும் ஆயுதங்கள் எனப்படுபவை அல்ல, எண்ணெய்தான் என உலகம் முழுவதிலும் பரவலாய் அங்கீகரிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் போரானது, உலகில் இரண்டாவது பெரும் பெட்ரோலிய சேர்ம இருப்புக்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் மத்திய ஆசியாவில் புதிய அமெரிக்க இராணுவ தளங்களை ஏற்படுத்துதற்கான வாய்ப்பை வழங்கிய அதேவேளை, ஈராக்கை வென்று கைப்பற்றல் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய க்ரூட் எண்ணெய் சேர்ம இருப்பினை உடனடியாக ஐக்கிய அமெரிக்க அரசுகளின் கட்டுப்பாட்டில் வைக்கும். சொல்லுதற்கரிய தோமஸ் பிரைட்மனை மேற்கோள் காட்டுவதாயின், "உடைந்து போயிருக்கிறது ஈராக், நாம் ஈராக்கை சொந்தமாக்குவோம்."

தங்களின் குற்றவியல் திறமைகளை எண்ணெய் தொழில்துறை நிர்வாக அதிகாரிகளாக சாணை தீட்டிக் கொண்ட செனி போன்ற ஆட்களை முன்னணி நபர்களாக உடைய, புஷ் நிர்வாகமானது தோன்றிக் கொண்டிருக்கும் அமெரிக்கப் பேரரசின் கிரீடத்தில் சாத்தியமாக ஆகும் மணிக்கல்லாக பாரசீக வளைகுடாவைப் பார்க்கின்றனர். மத்திய ஆசியாவில் இறுதியில் வெளிக்கொண்டுவர விருக்கும் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு சேர்மங்கள் மீதான கட்டுப்பாட்டுடன் அந்தப் பிராந்தியத்தின் மேலாதிக்கம் சேர்ந்து விடுமாயின், ஐக்கிய அமெரிக்க அரசுகளை நீண்டகாலத்துக்கு சட்டம் முதலியவற்றுக்கு பிடிகொடாமல் ஏய்க்கும் நீண்டகால மூலோபாய மேலாதிக்கத்தை அவர்கள் அடைவார்கள் என்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைவர்கள் நம்புவர். உலக மேலாதிக்கத்தின் இந்தக் காட்சி, மூலோபாய பூகோள வளங்களின் கட்டுப்பாடு மூலமாக உத்தரவாதம் செய்யப்படுவது, பிற்போக்கு கனவுருவுப் புனைவாற்றல் ஆகும், அது நிர்வாக நிறுவனத்தின் பரந்தபகுதியினர் மத்தியில் ஆர்வமிக்க பார்வையாளர்களைக் கண்டிருக்கிறது. அமெரிக்காவின் அரசியல் மற்றும் நிதி மேற்குடி ஆட்சியின் உள்ளே நிலைகொண்டிருக்கும் எண்ண வடிவு, பொருநர் அரசியல்: ஏன் தலைமை புறச்சமய ஒழுங்கமைதியைக் கோருகிறது என்று தலைப்பிடப்பட்ட, றொபேர்ட் கப்ளானால் எழுதப்பட்ட புதிய புத்தகத்தில் எதிரொலிக்கிறது. ஒரு மாதிரி பந்தியில், அவர் அறிவிக்கிறார்:

"மிக வெற்றிகரமான எமது வெளிநாட்டுக் கொள்கை, உலகில் அமெரிக்கா அதிக செல்வாக்கைக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு, எதிர்கால வரலாற்றாசிரியர்கள் இருபத்தோராம் நூற்றாண்டை ஐக்கிய அமெரிக்க அரசுகளை ஒரு குடியரசு போல ஒரு பேரரசாக திரும்பிப் பார்ப்பர், அது வரலாறு முழுவதும் உள்ள ரோம் மற்றும் ஏனைய பேரரசிலிருந்து எவ்வளவுதான் வேறுபட்டிருந்த போதும் அவ்வாறு பார்ப்பர். தசாப்தங்கள் மற்றும் நூற்றாண்டுகள் செல்கையில், ஐக்கிய அமெரிக்க அரசுகள் நாற்பத்து மூன்று ஜனாதிபதிகளுக்குப் பதிலாக, நூறு ஜனாதிபதிகளை அல்லது 150 ஜனாதிபதிகளைக் கூடக் கொண்டிருக்கும், மற்றும் அவர்கள் கடந்து போன பேரரசுகளின் --ரோமன், பைஜான்டன், ஒட்டோமான் இவற்றின்-- ஆட்சியாளர்கள் போல ஒரு நீண்ட பட்டியலில் இடம் பெறுவர். தொல் பழமையுடன் ஒப்பிடுவது குறைந்துபோவதை விடவும் வளரும். குறிப்பாக ரோம் ஒழுங்கற்ற உலகில் ஆணையின் சிறு பகுதியை ஊக்குவிக்க பல்வேறு வழிகளைப் பயன்படுத்தும் மேலாதிக்க வல்லரசுக்கு ஒரு மாதிரி ஆகும்..." [9]

இந்தப் பிதற்றல் ஒரு வகை நம்பத்தகாத கலாச்சார இயல்நிகழ்ச்சியின் --பொது நாகரிகம் என்பதைப் பற்றிக் கூறத் தேவையில்லை, அனைத்துவிதமான வரலாற்று உணர்வு மற்றும் நிகழ்கால யதார்த்தம் ஆகியவற்றை இழந்து விட்ட ஆளும் தட்டுக்குள்ளே உள்ள மாயத் தோற்ற மனநிலையின் ஒரு எடுத்துக்காட்டின்-- நலனாக மட்டுமே இருக்கிறது.

ஐக்கிய அமெரிக்க அரசுகள் இந்த கனவுருப் புனைவாற்றல்களை நடைமுறைப்படுத்துதற்கு விழையும் மட்டத்திற்கு அது எதிர்ப்பை எதிர்கொள்ளும்: முதலாவதாக, அமெரிக்க கொள்ளையிடல்களின் உடனடி இலக்குகளாக இருப்பவற்றிலிருந்து --வென்றடக்குவதற்கு இலக்குவைக்கப்பட்ட இந்நாடுகளில் உள்ள மக்களிடமிருந்து என்பது திரு. கப்ளனுக்கு மனத்தில் தோன்றுவதாகத் தெரியவில்லை. ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் உள்ள அமெரிக்காவின் ஏகாதிபத்தியப் போட்டியாளர்களின் எதிர்ப்பும் கூட அங்கு இருக்கிறது, அவை பொருளாதார அழுத்தத்துடன் கூடிய அச்சுறுத்தலை சாதாரணமாய் ஏற்றுக் கொள்ளமாட்டா. முற்றிலும் அதே முறையிலேயே அமெரிக்காவின் நீண்டகால மூலோபாய நோக்கங்களின் விளைபயன்கள் மீதாக வளர்ந்து வரும் அச்சங்கள் --பூகோள மேலாதிக்கத்தை நிறுவுதல்-- ஈராக்கில் போருக்கான அமெரிக்கத் திட்டங்களுக்கு வெளிப்படையான எதிர்ப்பில் அதிகரித்த அளவில் வெளிப்பாட்டைக் காண்கிறது. ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போரின் விளைவுகள் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்கள் --ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கும் அதன் பிரதான பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் போட்டியாளர்களுக்கும் இடையில் பேரளவில் உக்கிரமடைவது நடக்கக்கூடியதாக இருக்கும். மூன்றாவது உலகப் போருக்கான மேடை அமைக்கப்படும்.

ஐக்கிய அமெரிக்க அரசுகளில் சமூக உறவுகள்

இதுவரை, போருக்கான ஐக்கிய அமெரிக்க அரசுகளின் முன்னெடுப்பிற்கான காரணங்களை விவாதித்தலில், நாம் பூகோள புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நோக்கங்கள் மீது எண்ணங்களை ஒரு முகப்படுத்தி இருந்தோம். ஆனால் இருந்தும் அரசியல் சமன்பாட்டில் இன்னொரு தீர்க்கமானகரமான காரணி அங்கு இருக்கிறது --அதாவது, ஐக்கிய அமெரிக்க அரசுகளில் உள்ள சமூக உறவுகளில் அதிகரித்த அளவில் வெடிக்கும் நிலையும் முதலாளித்துவ ஆட்சிக்கு அது முன்வைக்கும் அச்சுறுத்தலும் ஆகும்.

கடந்த தசாப்தம் முழுவதும் அமெரிக்க கொள்கை வல்லுநர்கள் சமூக ஒருங்கிசைவின் சீரழிவின் வளர்ந்து வரும் அறிகுறிகள் பற்றி கவலைகளைத் தெரிவித்திருக்கின்றனர். நாகரிகங்களின் மோதல் என்ற புத்தகத்தின் மூலம் பிரபலமான, சாமுவேல் ஹன்டிங்டன் (Samuel Huntington) பல ஆண்டுகளுக்கு முன்னர், குளிர் யுத்தத்தின் முடிவானது அரசுக்கான மக்கள் ஆதரவை ஊட்டி வளர்க்கக் கூடிய காரணத்தை அமெரிக்கா இழந்திருந்தது என எச்சரித்தார். பரந்த மக்கள் ஆதரவைப் பெறும் எந்தவிதமான உண்மையான தேசிய நலன்களின் உணர்வும் அங்கு நிலைகொண்டிருப்பதாக காணப்படவில்லை. இருப்பினும், ஹன்டிங்டனால் குறிப்பிடப்பட்ட பிரச்சினை அடிப்படை ரீதியாக கருத்தியல் சார்ந்ததல்ல. அது அமெரிக்க சமுதாயத்தினுள்ளே உள்ள அதிகரித்துவரும் சமரசம் செய்யமுடியாத மோதலில் வேரூன்றி இருக்கிறது. அமெரிக்க சமூதாயத்தை தற்போது பண்பிட்டுக்காட்டும் பரந்த சமூக சமத்துவமின்மையை முகமூடியிட்டு மறைப்பது அதிகரித்த அளவில் கடினமாகி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் எவ்வளவு திடமாக செல்வந்தரையும் அவர்களின் வாழ்க்கைப் பாணியையும் புகழ்கின்றன என்பது ஒரு பொருட்டல்ல, மக்கள் தொகையின் மிகச் சிறிய வீதத்தினர் மத்தியில் தனிச்சொத்து அசாதாரணமான அளவில் செறிந்திருத்தல் தொலை-நோக்கிலான சமூக பாதிப்புக்களைக் கொண்டிருக்கிறது.

ஜனநாயக விதிமுறைகள் அரித்துப்போதலும் அமெரிக்க அரசியலின் எவ்வளவோ அதிகமான வெளிப்படையாய் செயல்படா நிலையும் சமூக துருவமுனைப்படலின் புறநிலைரீதியான விளைபயன்கள் ஆகும். 2000 ம் ஆண்டில், குளிர்யுத்தத்தை அடுத்து உடனடியாக முதல் தடவையாக, தேர்தல் பற்றியதில் உண்மையான ஜனநாயக தீர்வுக்கு வருதல் இயலாததாக இருந்தது. முடிவில், நிதி செல்வராட்சி, ஜனாதிபதியைப் பொறுக்கி எடுத்தது.

ஐக்கிய அமெரிக்க அரசுகள் இடருக்குள்ளாக்கப்படும் சமூகப் பிரச்சினைகளுக்கு நிலவுகின்ற அரசியல் அமைப்பில் விடைகள் இல்லை. உண்மையில், அவற்றைக் கவனிக்கக்கூட அதனால் முடியாது. செல்வராட்சியின் நிதி ஆதரவில் அப்பட்டமாக தங்கி இருக்கும் நபர்களைக் கொண்ட, நிலவுகின்ற இரு கட்சி முறை, முற்றிலும் பொதுமக்களின் பிரிதிநித்துவமின்மை ஆகும். போரை நோக்கிய முன்னெடுப்பு தொடர்பாக பத்து இலட்சக்கணக்கான அமெரிக்கர்களால் உணரப்படும் ஆழமான மன உலைவு மற்றும் இரு மனப்போக்கு பற்றி அரசியல் நிறுவனத்தில் உண்மையில் தெளிவாக ஒலிப்பதைக் காணவில்லை என்ற உண்மையைத்தவிர வேறு எவ்வாறு ஒருவர் விளக்க முடியும். இன்னும் சொல்லப்போனால், மக்கள்தொகையின் இரண்டு சதவீத, மிகவும் செல்வம் படைத்தவர்களின் பல்வேறு பகுதிகளை அரசியல் வட்டாரங்களாக உடைய அரசியல் நிறுவனம், பரந்த வெகுஜனங்களின் நலன்களுக்கும் அக்கறைகளுக்கும் குரல் கொடுக்க முற்றிலும் திராணி அற்றது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியானது ஆளும் வர்க்கத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான மனமுறிவை ஆற்றல் மிக்கவகையில் ஆழப்படுத்தி இருக்கிறது. நடந்து கொண்டிருக்கும் கார்ப்பொரேட் தட்டுக்களின் குற்றவியல் தன்மை அம்பலப்படலானது பொருளாதார நெருக்கடியை --அது, அதாகவே, பேரளவில் ஆபத்தான பண்பைக் கொண்டது-- வர்க்க ஆட்சியின் பொது நெருக்கடியாக மாற்றுதற்கு அச்சுறுத்துகின்றது. வெளிநாடுகளில் திடீர் வெற்றிகள் உள்நாட்டு நெருக்கடியிலிருந்து மக்களை திசைதிருப்பும் என்று புஷ் நிர்வாகமானது நம்பிக்கை வைத்திருப்பது சிறு மட்டத்துக்கு அல்ல. ஆனால் உள்நாட்டுப் பிரச்சினைகளை முன்னேறவிடாமல் தடுத்து வைப்பதற்கு செயல்படும் பிற்போக்கு ஆட்சிகளுக்கு நேரிட்ட பேரழிவுகளின் பல எடுத்துக்காட்டுக்களை வரலாறு வழங்குகின்றது. தோல்வி அடைந்து வரும் உள்நாட்டு பொருளாதாரத்திற்கான மற்றும் உக்கிரமடைந்து வரும் சமூக மோதலுக்கான மருந்தாக ஒரு போரை வகுத்துரைக்கும் அரசாங்கங்கள் அனைத்துவகையான முன்னரே பார்க்க முடியாத பக்கவிளைவுகளாலும் பாதிக்கப்படலாம் -- அதில் புரட்சி மிகவும் சீரிய ஒன்று என்பதை நிரூபிக்க இருக்கும்.

போரை நோக்கிய புஷ் நிர்வாகத்தின் முன்னெடுப்பு, ஒவ்வொரு மாணவரையும் அரசியலுடன் முரண்பட வைக்கிறது மற்றும், ஒழுக்கநெறி பிரச்சினைகளையும் நான் சேர்ப்பேன், அதனுடனும் பெரும் அளவில் முரண்பட வைக்கிறது. அனைத்துக்கும் முதலாவதாக, இந்தக் கருத்தை என்னால் முடிந்த அளவு வலியுறுத்திக் கூற அனுமதிக்கவும். புஷ் நிர்வாகத்தின் கொள்கைகள் வெறுமனே தவறாகக் கொள்ளப்பட்டவை அல்ல... அவை குற்றத்தனமானவை. இந்தக் கொள்கைகளுக்கு பொறுப்பானவர்கள் தவறாக வழிநடத்தப்பட்ட தனிநபர்கள் அல்லர். அவர்கள் அரசியல் குற்றவாளிகள். ஆனால் அவர்களின் கொள்கையின் குற்றவியல் தன்மை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிப்படையான குற்றவியல் பண்பிலிருந்து பெருக்கெடுக்கிறது-- அது கொள்ளையிடல் மற்றும் வெகுஜனப் படுகொலை கொள்கையின் மூலம் தடுமாறும் முதலாளித்துவ அமைப்பை முண்டு கொடுத்து நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றது. ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்குள் ஆளும் தட்டால் செயற்படுத்தப்படும் வழிமுறைகளுக்கும் அது சர்வதேச ரீதியாக பயன்படுத்தும் வழி முறைகளுக்கும் இடையில் உண்மையிலேயே அடிப்படை ரீதியாக வேறுபாடு இல்லை.

கார்ப்பொரேட் ஊழல் பற்றிய அண்மைய அம்பலப்படுத்தல் தொலைநோக்கில் சமூக முக்கியத்துவம் உடையது. அமெரிக்க வர்த்தகத்தின் நாளாந்த நடவடிக்கைகள் குற்றத்தன்மையை மேற்கொள்கின்றன. ஆளும் தட்டு தொழில்துறை, நிதித்துறை மற்றும் சமூக வளங்களை விரும்பி மற்றும் படிமுறை ரீதியாய் கொள்ளையிடல் மூலம் பரந்த செல்வத்தைத் திரட்டி இருக்கிறது. அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) அவர்கள் சீரழித்த கார்ப்பொரேஷன்களில் வகித்த பதவிக்காலத்தை சீசரின் வார்த்தைகளை சிறிதே மாற்றி அமைப்பதன் மூலம் சுருக்கிச் சொல்ல முடியும்: "வந்தேன், பார்த்தேன், திருடினேன்." உண்மையில் கடந்த தசாப்தத்தில் ரஷ்யாவைச் சூறையாடிய கொள்ளைக் கும்பல் போன்ற "பிஸ்னெஸ்மென்" ("biznessmen") களுக்கும் தங்களின் கார்ப்பொரேசன்களை கொள்ளையடித்திருக்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் குற்றக் கும்பலுக்கும் இடையில் எந்தவிதமான பிரதான வேறுபாடும் இல்லை. அதன் சர்வதேச குறிக்கோள்களை அடைவதற்கு அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தால் பயன்படுத்தப்படும் வழிமுறைகளில் எந்த அடிப்படை வேறுபாடும் இல்லை. அதற்கு ஈராக்கின் எண்ணெய் தேவைப்படுகிறது, ஆகையால் அது அதனை --அமெரிக்க இராணுவத்தின் உதவியுடன்-- திருட விரும்புகிறது.

இந்த குற்றவாளிகளை எதிர்ப்பது மாணவர்களின் கடமை ஆகும் --ஆனால் எதிர்ப்பானது அரசியலை மற்றும் முதலாளித்துவ சமூதாயத்தின் சமூக இயக்கவியலை விஞ்ஞான ரீதியாகப் புரிந்து கொள்ளலை கட்டாயம் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். ஏகாதிபத்திய போருக்கு எதிரான அக்கறை கொண்ட மற்றும் விடாஉறுதி மிக்க போராட்டமானது போரை எழ வைத்த சமூகப் பொருளாதார நலன்களுக்கு-- அதாவது, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதது. மேலும், அந்தப் போராட்டமானது ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்குள்ளேயும் சர்வதேச ரீதியாகவும் புறநிலைரீதியாக முதலாளித்துவத்திற்கு எதிராக நிற்கும் பரந்த சமூக சக்திகளை அணிதிரட்டுவதற்கு அது முயற்சிக்கும் அந்த மட்டத்துக்கு மட்டுமே வெற்றிகரமாக இருக்க முடியும். அந்த சமூக சக்தி, நவீன முதலாளித்துவ சமுதாயத்தில் உள்ள அபரிமிதமான மக்களைக் கொண்டிருக்கும் தொழிலாள வர்க்கமாகும்.

இவ்வாறு, போருக்கு எதிரான ஆரம்ப மையமே தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அணிதிரட்டலும் ஒங்கமைப்பதும் ஆகும். ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்குள்ளே, இதன் அர்த்தமானது, முதலாவதும் முக்கியமானதுமாக, தொழிலாள வர்க்கத்தை ஜனநாயகக் கட்சியின் அரசியல் மேலாதிக்கத்திலிருந்து விடுவிப்பதும் புதிய, சுதந்திரமான, சோசலிசக் கட்சியைக் கட்டுவதுமாகும். அத்தகைய கட்சியின் வேலைத்திட்ட ரீதியான முதன்மையான தன்மை, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தின் முன்னோக்கை அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு கட்டாயம் தன் அர்ப்பணிப்பைக் கொண்டிருக்க வேண்டும்.

ஐக்கிய அமெரிக்க அரசுகளில் அத்தகைய கட்சி இருக்கிறது. அதுதான் சோசலிச சமத்துவக் கட்சி, அது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியத்தைக் கொண்டிருக்கிறது. அதில் சேருவது பற்றி எண்ணிப்பார்க்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்புக்கள்:

1. PovertyNet, Poverty Reduction and the World Bank, World Bank Executive Summary.
2. The Anatomy of the Nuremberg Trials (New York, 1992), p. 641.
3. அதே நூல்,  பக்கம் 51.
4. அதே நூல், பக்கம் 51-52.

5. Stanley Weintraub, MacArthur's War: Korea and the Undoing of an American Hero (New York, 2000) pp. 253-54.
6. Foreign Affairs, vol. 70, no. 1, 1991, p. 33.
7. Writings of Leon Trotsky 1933-34 (New York, 1998) p. 302.
8. New York, 1991. pp. 210-11.
9. New York, 2002, p. 153.

மேலதிக வாசிப்புகளுக்கு:

ஈராக்கிய ஆட்சியின் எதிர்ப்பாளர்களும் பாக்தாதில் "ஆட்சி மாற்றத்திற்கான" அமெரிக்க திட்டங்களும்
பகுதி I
| பகுதிII

சர்வதேச சங்கத்திற்கு உண்மையில் என்ன நிகழ்ந்தது

புஷ் நிர்வாகம் போரை விரும்புகிறது

ஐ.நா சபையில் புஷ்: உலகத்துக்கு வாஷிங்டனின் போருக்கான இறுதி எச்சரிக்கை

செனியின் போருக்கான விவரம்: பரந்த பொய்களும் வரலாற்று ரீதியான பொய்மைப்படுத்தல்களும்