ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

“Never again!”

Tens of thousands protest in Berlin against far-right AfD

“மீண்டும் வேண்டாம்!”

அதிவலது AfD க்கு எதிராக பேர்லினில் பத்தாயிரக் கணக்கானோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

By our correspondents
28 May 2018

நவ-பாசிசவாத கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கொண்டுள்ள வெளிநாட்டவர் விரோத போக்கு, இனவாதம் மற்றும் இராணுவவாத கொள்கைகளை எதிர்த்து பேர்லினில் பத்தாயிரக் கணக்கானவர்களின் மிகப்பெரும் ஆர்ப்பாட்டங்களை, அக்கட்சியின் ஆதரவாளர்களது ஒரு பேரணி ஞாயிறன்று எதிர்கொண்டது.

ஜேர்மனி எங்கிலும் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொண்டு வர ஒப்பந்தத்திற்குப் பேருந்துகள் அமர்த்தப்பட்டிருந்ததுடன், அதில் பங்கெடுக்க ஆயிரக்கணக்கானவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டிருந்த போதும், எதிர்-ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்தவர்களின் தகவல்படி அவற்றில் ஏறக்குறைய 70,000 பேர் பங்கெடுத்திருந்த நிலையில், அந்த பாசிசவாத பேரணி அந்நகரெங்கிலும் கூடிய எதிர்-ஆர்ப்பாட்டக்காரர்களை காட்டிலும் சிறியதாகவே இருந்தது.

“முஸ்லீம் புலம்பெயர்ந்தவர்களை" “கண்ணைத் தவிர உடல் முழுவதையும் மறைக்கும் பர்க்கா உடை அணிபவர்கள், கத்தி வைத்திருப்பவர்கள், வேறெதற்கும் இலாயக்கற்றவர்கள்" என்று ஒரு பாசிசவாத வசையுரையில் கண்டித்து, ஜேர்மன் நாடாளுமன்ற கூட்டத்தொடரைத் தொடங்கி வைத்த AfD இன் இணை-தலைவர் அலிஸ் வைடெல் வழங்கிய உரையால் மிகவும் வெறுப்படைந்திருப்பதாக அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். நாஜி வாய்வீச்சின் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்திய வைடெல், “பழங்குடி" சமூகங்களின் மக்களை உள்நுழைய விட்டதன் விளைவாக "நமது தேசம் வீழ்ச்சி அடைந்திருப்பதாக" எச்சரித்தார்.

ஜேர்மன் அரசியல் ஸ்தாபகம் பாசிசவாதிகளைச் சகித்து கொள்கிறது, ஊக்குவிக்கிறது என்கின்ற அதேவேளையில், ஜேர்மனியில் பரந்த பெரும்பான்மை தொழிலாளர்களும் இளைஞர்களும் மீண்டும் 1930 களுக்குத் திரும்புவதை ஏற்க மாட்டார்கள் என்பதையே AfD க்கு எதிரான அந்த பாரிய போராட்டங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இந்த ஆர்ப்பாட்டங்கள், குறிப்பிடத்தக்க வகையில், பாரீசில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கோரிய சமூக செலவின குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக பத்தாயிரக் கணக்கான போராட்டக்காரர்கள் பேரணி நடத்திய அதே வாரயிறுதியிலும், அதேபோல அயர்லாந்து வாக்காளர்களில் பெரும் பெரும்பான்மையினர் அந்நாட்டின் கடுமையான கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தை மாற்றி எழுத வாக்களித்திருந்த அதே வாரயிறுதியிலும் நடத்தப்பட்டிருந்தன.


கனரக ஆயுதமேந்திய போலிஸ் பிரன்டென்பேர்க் வாயிலை மூடியது

கனரக ஆயுதமேந்திய போலிஸ் பாதுகாப்புடன், அந்த வலதுசாரி தீவிரவாதிகள் பேர்லினின் பிரதான இரயில் நிலையத்திலிருந்து பிரன்டென்பேர்க் வாயில் வரை அணிவகுத்த பின்னர், அங்கே AfD தலைவர்கள் பாசிசவாத வசையுரைகளை மொழிந்தனர். அதன் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் பெயாட்ரிக்ஷ் வொன் ஸ்ரோஷ் “ஜேர்மனியில் இஸ்லாம் ஆட்சியைக்" குறித்தும், அது "தீமையின் ஆட்சி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை" என்றும் பொரிந்து தள்ளினார். அப்பேரணி கூட்டத்தில் அவரது உரையின் போது, AfD தலைவர் அலெக்சாண்டர் கவ்லாண்ட் "அவர்களுக்கு பாடம் புகட்டுவோம்,” என்று எரியூட்டினார்.


ஒரு மாணவர் AfD க்கு எதிராக போராடுகிறார்

காலையிலிருந்தே பிரன்டென்பேர்க் வாயிலில் இளைஞர்கள் பலர் ஒன்றுகூடினர். மத்திய நாடாளுமன்றத்திற்கு (Bundestag) அருகே "நாஜிக்களால் வெறுப்படைந்துள்ளேன்,” என்று கையில் எழுதிய கோஷ அட்டை வைத்திருந்த ஒரு மாணவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறுகையில், அதி-வலது மீண்டுமொருமுறை ஜேர்மனியில், எல்லா இடங்களிலும், அணிவகுத்து வருவதென்பது "அதிர்ச்சியூட்டுகிறது" என்றார். “ஏற்கனவே இது நம்மிடையே இருந்தது. அவர்கள் அதன் பெயரால் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றார்கள்.”


AfD-எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியவர்கள்

சுய-தொழில் புரிபவரான 28 வயதான சரா AfD-எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தார் ஏனென்றால் இனவாதம் மற்றும் வெளிநாட்டவர் விரோத போக்கை எதிர்த்து போராடுவது அவசியமென அவர் உணர்ந்தார். நாடாளுமன்றத்தில் உள்ள ஏனைய கட்சிகளைக் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது, அவர் தெரிவித்தார், “வேறு யாரும் AfD க்கு எதிராக போராடவில்லை.” இது ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில், ஏனென்றால் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளும் தான் அகதிகளுக்கு எதிராக ஆத்திரமூட்டி கொண்டிருக்கிறார்கள், அத்துடன் நடைமுறையளவில் அவர்கள் AfD இன் கொள்கைகளை ஏற்றுள்ளார்கள் என்றார். “மக்களில் பெரும்பான்மையினர் AfD மற்றும் அதிவலதை எதிர்க்கின்றனர் என்பதையே இன்றைய ஆர்ப்பாட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன,” என்பதையும் சரா சேர்த்துக் கொண்டார்.

24 வயதான தொழில்பயிற்சி விற்பனை தொழிலாளர் ஒலிவர், AfD க்கு எதிராக போராடுவதற்காக மட்டுமல்ல, மாறாக அது கொண்டிருக்கும் "வலதுசாரி, இனவாத கொள்கைகளுக்கு" எதிராக போராடுவதற்காகவும் அவர் நண்பர்களுடன் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தார். இக்கட்சி மீண்டுமொருமுறை இன வெறுப்புகளை அறிவுறுத்தி வருவது "வெட்கக்கேடானது" என்றவர் குறிப்பிட்டார்.

பங்கெடுத்தவர்கள் பலரும் 1930கள் மற்றும் நாஜிக்களுடன் சமாந்தரங்களை காட்டினர், பிரதான கட்சிகள் அவற்றின் வலதுசாரி, சமூக-விரோத கொள்கைகளுடன் AfD க்கு வழி வகுத்து வருவதற்காக அவற்றை விமர்சித்தனர். இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே உள்ள அதிவலதை நோக்கிய வெறுப்புக்கும், AfD க்கு எதிர்ப்பாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்ள ஸ்தாபக கட்சிகளின் பாசாங்குத்தனமான முயற்சிகளுக்கும் இடையே மிகப்பெரும் இடைவெளி இருப்பது அனைவருக்கும் தெரியும் வகையில் வெளிப்படையாக இருந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களில் பரந்த பெரும்பான்மையினர், சமூக ஜனநாயக கட்சியினர், இடது கட்சி, பசுமை கட்சியினர் மற்றும் தொழிற்சங்கங்களால் ஜேர்மன் நாடாளுமன்றத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உத்தியோகப்பூர்வ பேரணியை புறக்கணித்திருந்தனர்.


AfD-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரன்டென்பேர்க் வாயில் முன்னால் ஒன்றுகூடினர்

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei – SGP) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் (IYSSE) உறுப்பினர்கள், ஆர்ப்பாட்டங்களின் விவாதங்களில் கலந்து கொண்டு, நவ-பாசிசவாதிகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஸ்தாபக கட்சிகளுடன் அரசியல்ரீதியில் கணக்கு தீர்க்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டம் அவசியம் என்பதை விளங்கப்படுத்தினர்.

“1930 களுக்குப் பின்னர் முதலாளித்துவத்தின் மிக ஆழமான நெருக்கடி, உலகெங்கிலுமான போர்கள், பிரதான சக்திகளுக்கு இடையே அதிகரித்து வரும் மோதல்கள் என இந்நிலைமைகளின் கீழ், ஆளும் வர்க்கம் அதன் இராணுவவாத கொள்கையை முன்னெடுக்கவும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரசு அதிகாரங்களை அதிகரித்து கொள்ளவும் மற்றும் சமூக செலவின குறைப்புகளுக்காகவும் வேண்டுமென்றே அது அதிதீவிர வலதைப் பலப்படுத்தி வருகிறது,” என்பதை SGP மற்றும் IYSSE ஓர் அறிக்கையில் அறிவித்தது.

அதிவலதுக்கு எதிரான போராட்டம் முதலாளித்துவ அரசு மற்றும் அதன் அரசியல் கட்சிகளின் அடிப்படையில் இருக்க முடியாது என்பதை முன்னணி AfD அரசியல்வாதிகளின் தோற்றுவாய்கள் எடுத்துக்காட்டுகின்றன என்பதை அந்த அறிக்கை தொடர்ந்து விளங்கப்படுத்தியது. AfD இன் பெரும்பான்மையான பிரிவுகள், இராணுவம், நீதித்துறை மற்றும் போலிஸ் உட்பட அரசு எந்திரத்திலிருந்தோ அல்லது மற்ற முதலாளித்துவ கட்சிகளில் முன்னர் உறுப்பினர்களாக இருந்தவர்களைக் கொண்டோ நியமிக்கப்பட்டிருந்தனர். “பாசிசம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தை அதற்கு காரணமான முதலாளித்துவம், மற்றும் இந்த திவாலான அமைப்புமுறையைப் பாதுகாக்கும் அனைத்து கட்சிகளுக்கும் எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாது,” என்பதை சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை வலியுறுத்தியது.

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி ஐரோப்பாவில் வலதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு முன்னணி பாத்திரம் வகித்துள்ளது. 2014 இல், கட்சி வலதுசாரி தீவிரவாத பேராசிரியர்கள் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி மற்றும் ஹெர்பிரட் முன்ங்லெரை உத்தியோகபூர்வமாக பிரபல்யப்படுத்துவதை எதிர்த்து ஒரு பிரச்சாரம் தொடங்கியது. இந்த தீவிர வலது சித்தாந்தவாதிகளைப் பாதுகாப்பதற்கு விரைந்த அரசியல் ஸ்தாபகம் இதற்காக கட்சியைக் கண்டித்தது.

பாசிசவாத வலதின் வளர்ச்சிக்கும், போர் மற்றும் சமூக செலவின குறைப்பு தொடர்பான முதலாளித்துவ கொள்கைகளுக்கும் இடையிலான தொடர்பைக் குறித்த பல ஆர்ப்பாட்டக்காரர்களும் அறிந்துள்ளனர். உடலியக்க மருத்துவ நிபுணர் மார்டீன் மொரான்ட், இராணுவச் செலவினங்களில் மாபெரும் கூட்டணியின் திட்டமிட்ட அதிகரிப்புகளுக்கு எதிராக பேசினார். இந்த பணத்தை "நிஜமான வறுமையைப்" போக்க சிறந்த முறையில் முதலீடு செய்திருக்கலாம் என்றார். “போர் மற்றும் வன்முறை,” மற்றும் "ஆபிரிக்காவின் வறிய நிலைமைகளில் இருந்து" மக்கள் தப்பியோடுகின்றனர். இராணுவ மீள்இராணுவமயமாக்கத்திற்கு பதிலாக, “கத்திகளை கலப்பைகளாக" மாற்றுவதற்கு மார்ட்டீன் அழைப்புவிடுத்தார்.

ஜேர்மன் மொழிப்பாடம் கற்பிக்கும் ரெனெ அவர் மகனை பேரணிக்கு அழைத்து வந்திருந்தார். அவர் கடந்த வாரம் AfD தலைவர் அலிஸ் வைடெலின் பாசிசவாத வசையுரையால் இதில் பங்கெடுக்க இழுத்து வரப்பட்டிருந்தார். 1945 க்குப் பின்னர், இதுபோன்ற எதுவும் "ஒருபோதும் நடக்காது,” என்றவர் ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் நினைத்ததிருந்ததாக தெரிவித்தார். “இது சர்வசாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதால் நான் மிகவும் கவலையடைகிறேன். இதனால் என் மகனிடம், இன்றைய இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு உதவுவோம் என்று கூறினேன்.”

AfD இன் வாய்வீச்சு ஹிட்லர் மற்றும் நாஜிக்கள் பயன்படுத்தியதை போன்றதுதான், ஆனால் ஸ்தாபக கட்சிகள் அனைத்தும் "படிப்படியாக" AfD இன் நிலைப்பாடுகளை ஏற்று வருகின்றன என்று ரெனெ தெரிவித்தார்.