ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

More than 3,000 striking employees shut down Sri Lanka’s international airport

வேலைநிறுத்தம் செய்த 3000க்கும் அதிகமான தொழிலாளர்களினால் இலங்கையின் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

தொழிலாளர்கள் போராட்டம்: ஆசியா

7 April 2018

தொழிலார்களின் வேலைநிறுத்தத்தினால் இலங்கையின் பிரதான விமான நிலையம் மூடப்பட்டது

ஏப்ரல் 3 அன்று கட்டுநாயகாவிலுள்ள பண்டாரநாயகா சர்வதேச விமான நிலயத்திலிருந்து 3000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வெளிநடப்பு செய்ததுடன் விமானநிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தையும் மேற்கொண்டனர்.

நிர்வாகம், பொறியியல், பாதுகாப்பு மற்றும் மின்விநியோகம் ஆகிய துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களுடைய ஊதிய உயர்வு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூபாய் 10,000 அதிகரிக்கபடவேண்டும், பேரிடர் கடன் வழங்கல், சரியான காப்பீடு நடைமுறைகள் மற்றும் பாதுகாப்புத் தலைவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கும் அவர்கள் கோரினர். மாத்தளை மற்றும் அட்டியாவில் ரேடியோ டிரான்ஸ்மிசன் நிலைய தொழிலாளர்களும் மற்றும் பிதூறுதாலகால வில் ராடார் நிலைய தொழிலாளர்களும் பண்டாரநாயகா சர்வதேச விமானநிலைய வேலைநிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களும் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

தொழிலாளர்கள் விமான நிலையத்தின் பிரதான வாயிலை மறித்து தண்ணீர் மற்றும் அனைத்து மின் பகிர்மானங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து உள்ளிருப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர். வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை மிரட்டும்விதமாக காவல்துறையினரையும் சிறப்பு அதிரடிப் படையினரையும் அத்துடன் எதிர்ப்பு கலவரப் படையினரையும் விமான நிலைய அதிகாரிகள் அணிதிரட்டினர்.

தொழிலாளர்களின் கோரிக்கைகளை எற்றுக்கொள்வதற்கு போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் ஒப்புக்கொண்டதன் பின்னர் மாலையில் அந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.

இலங்கை பல்கலைக்கழக கல்விசாரா தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போரட்டம் தொடர்கிறது

பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டு குழு (UTUJC) ஏப்ரல் 4 அன்று 15,000 பல்கலைக்கழக கல்விசாரா தொழிலாளர்கள் அவர்களுடைய காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடர்வார்கள் என்று அறிவித்துள்ளது ஏனேனில் தொழிற்சங்கத்திற்கும் உயர்கல்வி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோர்க்கிடையில் அடையப்படவேண்டிய ஒரு ஒப்பந்தத்தை நிறுவுவதற்கு அரசாங்க அதிகாரிகள் தவறிவிட்டார்கள். ஐந்து வாரங்களாக நடக்கும் வேலைநிறுத்தமானது 15 அரசாங்க பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் செயற்படும் உயர்கல்வி நிலையங்களில் கற்பிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தப்படுவதற்கு இட்டுச் சென்றுள்ளது.

20 சதவீத சம்பள உயர்வு, மொழித் திறமை கொடுப்பனவு, சலுகை கடன்கள் அதிகரிப்பு, மருத்துவக் காப்பீடு அறிமுகப்படுத்தவும் மேலும் ஒரு ஓய்வுதியத் திட்டம் ஆகியவை வேண்டும் என்று பல்கலைக்கழக கல்விசாராத் தொழிலாளர்கள் கோருகின்றார்கள்.

கல்வித்துறை அமைச்சர், சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார் ஆனால் அமைச்சகத்தின் அதிகாரிகளால் அவருடைய அறிவுறுத்தல்கள் தாமதமாக வருகின்றன என பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டு குழுவின் தலைமை கூறுகிறது.

இந்தியா: ஆயிரக்கணக்கான கிராம சுகாதார நலப்பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் தொடர்கிறார்கள்.

இந்தியாவில்லுள்ள பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர், மேலும் ஹரியானா ஆகிய மாவட்டங்களிலுள்ள கிராம சுகாதார நல அல்லது அங்கன்வாடி தொழிலாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.

உத்தியோகபூர்வ மதிப்பீட்டுகளின்படி, அங்கன்வாடி பெண் தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் 60000 பேர்  ஜம்மு மற்றும் காஷ்மீரிலிருந்தும், 54000 பஞ்சாப்பிலும், சுமார் 50000 ஹரியானவிலுமிருந்து பங்குபற்றியிருந்தனர்.  இந்த தொழிலாளர்கள் மகப்பேரியலுக்கு முன்னரும் பின்னரும் அத்தியாவசிய பராமரிப்புகளை செய்கின்றனர் மேலும் கிராமப்பகுதிகளில் ஆறு வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசியினையும் போடுகிறார்கள்.

60 நாட்களுக்கு மேலாக வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜம்மு மற்றும் காஷ்மீரிலிருந்து அங்கன்வாடி தொழிலாளர்கள் இந்தவாரம் அனைத்து அங்கன்வாடித் தொழிலாளர்களுக்கும் 3,600 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக ஊதியத்தினை உயர்த்தக்கோரி மாநில பாராளுமன்றத்திற்கு வெளியே அணிவகுத்துச் சென்றனர்.

ஆந்திராவில் சணல் ஆலைத் தொழிலாளர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்தனர்

சம்பள உயர்வு மற்றும் நிலுவையிலிருக்கும் சம்பள தொகைக்காவும் மார்ச் 31 இன்று எலூரு வில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான ஸ்ரீ கிருஷ்ணா சணல் ஆலையிலிருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர். 2015 இல் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட போனஸ் தொகையையினையும் செலுத்தும்படி நிருவாகத்தினை தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டனர். வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்  வேலைநிறுத்தத்தின்போது ஆலைக்கு வெளியிலிருந்த சாலையில் மறியலில் ஈடுபட்டிருந்தனர்.

பாகிஸ்தான்: பஞ்சாப் சுகாதார ஊழியர்கள் அரசாங்கம் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டபிறகு போராட்டத்தினை முடித்துக்கொண்டனர்

250க்கு மேற்பட்ட, அரசு நடத்தும் பெண் சுகாதார ஊழியர்கள் மற்றும் பெண் சுகாதார மேற்பார்வையாளர்களின் ஒரு ஐந்துநாள் போராட்டம், மார்ச் 30 அன்று தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என கூறிய பிறகு முடிவடைந்தது.

லாகூரில் பஞ்சாப் பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் மற்றைய அரசாங்க வளாகங்கள் மற்றும் உயர் வணிகங்கங்கள் நடக்கும், சுறுசுறுப்பாக இருக்கும் மால் சாலையில் பகல் இரவாக போராட்டம் நடைபெற்றன.

சுகாதாரப் பணியாளர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை அல்லது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டவில்லை அல்லது 2012 இலிருந்து பதவிஉயர்வுகள் வழங்கப்படவில்லை. குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 7,000  (60.48 டாலர்) மட்டும் பெறுகின்றனர் மேலும் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் ரூபாய் 15,000 சம்பளமாகப் பெறுகின்ற நிலையில், 10 சம்பள அளவுகளுக்கு இடையில் ஊதியமட்டம்  இருக்கிறது. பெண் சுகாதாரப் பணியாளர்கள் பணியை நிரந்தரப்படுத்தவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏப்ரலிலிருந்து தொழிலாளர்களை உள்ளடக்கிய சுகாதரார ஊழியர்கள் சங்க தேசியத் திட்டத்தில் சம்பள உயர்வுக்கு நிதியினை ஒதுக்குவதாக அரசாங்கம் அளித்து வாக்குறுதியை அடுத்து வேலைநிறுத்தப்போராட்டம் நிறுத்தப்பட்டது.  எனினும் ஐம்பது சதவீத குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்கள் பதவி உயர்வோ அல்லது சம்பள உயர்வோ பெறப்போவதில்லை.

பெஷாவர் பொறியியலாளர்கள் ஒரு சேவை கட்டமைப்பைக் கோருகிறார்கள்

திங்கட்கிழமையன்று பெஷாவரில் ஒரு அடிப்படை சேவைக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதில் நீண்ட காலதாமதத்தைக் கண்டித்து அரசு பொறியியலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட கைபர் பதுன்குவா சங்கம் பாகிஸ்தான் மாகாணங்கள் அனைத்திலும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.  சிவில் செயலகத்திலிருந்து பெஷாவர் கிளப் வரை பேரணியினை மேற்கொண்ட பொறியாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் தொழில்முறை கொடுப்பனவுகள் போன்றவற்றையும் கோரினர்.

அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென்றால் அவர்கள் தொழில்முறை நடவடிக்கையை மேற்கொள்ளப்போதாக தகவல் தொடர்பு, நீர்பாசனம், பொதுப்பணித்துறை தொழிலாளர்கள் உட்பட பல்வேறுப்பட்ட நிலைகளிலிருக்கும் பொறியாளர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.