ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump to meet North Korean leader in “three or four weeks”

ட்ரம்ப் "மூன்று அல்லது நான்கு வாரங்களில்" வட கொரிய தலைவரைச் சந்திக்க உள்ளார்

By James Cogan
30 April 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நேற்று மிச்சிகனில் பிரச்சார பேரணி ஒன்றில், அடுத்த "மூன்று அல்லது நான்கு வாரங்களில்" அவர் வட கொரிய தலைவர் கிம் ஜொங்-யுன்னைச் சந்திக்க இருப்பதைச் சுட்டிக்காட்டினார். இன்னும் இதற்கான இடம் அறிவிக்கப்படவில்லை. பராக் ஒபாமா நிர்வாகம் ஈராக் ஆக்கிரமிப்பை தொடர்ந்து கொண்டே, ஆப்கானிஸ்தானில் போரைத் தீவிரப்படுத்தி கொண்டிருந்த நிலையில், 2009 இல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதைப் போல, ட்ரம்புக்கும் அமைதிக்கான பரிசு வழங்கப்பட வேண்டுமென்ற குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைப்புவிடுப்பதை எதிரொலிக்கும் விதத்தில், அவர் ஆதரவாளர்கள் "நோபல், நோபல்,” என்று கூச்சலிட்டனர்.

வட கொரியா அதன் அணு திட்டங்களைக் கைவிட்டு, அதன் அணுஆயுதங்களை அழித்துவிட வேண்டுமென்ற அமெரிக்க கோரிக்கைகளுக்கு அது அடிபணியாவிட்டால் வட கொரியா "முற்றிலுமாக அழிக்கப்படும்" என்ற அவர் நிர்வாகத்தின் பொறுப்பற்ற அச்சுறுத்தல்களை அர்த்தப்படுத்தி, அவர் "பலத்தின்" விளைவாகவே, கடந்த வெள்ளிக்கிழமை கிம் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜா-இன் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்ததாக ட்ரம்ப் பெருமைபீற்றினார்.

தென் கொரிய மற்றும் வட கொரிய தலைவர்கள் கைகுலுக்கி ஆரத்தழுவிய ஓர் இராஜாங்க கூத்துக்குப் பின்னர், சமீபம் வரையில் எதிர்விரோத நாடுகளாக இருந்த அவை கலாச்சார மற்றும் பொருளாதார கூட்டுறவுக்குப் பொறுப்பேற்ற "பிரகடனம்" ஒன்றில் கையெழுத்திட்டன; 1950-53 கொரிய போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஓர் அதிகாரப்பூர்வ சமாதான உடன்படிக்கையிலும்; “முற்றிலுமாக அணுஆயுதமயமாக்கல் ஒழிக்கப்பட்ட, ஓர் அணுஆயுதமில்லா கொரிய தீபகற்பத்திற்கும்" கையெழுத்திட்டன.

ட்ரம்பின் புதிய வெளியுறவுத்துறை செயலர் முன்னாள் சிஐஏ இயக்குனர் மைக் பொம்பியோ மற்றும் தென் கொரிய அரசாங்கத்தால், என்ன உடன்பாடு எட்டப்பட்டன மற்றும் என்ன உடன்பாடு எட்டப்படவில்லை என்பதைக் குறித்த கூடுதல் விபரங்கள் வாரயிறுதி வாக்கில் வெளியிடப்பட்டன.

வட கொரியா அதன் Punggye-ri அணுசக்தி பரிசோதனை கூடத்தை மூடுவதை மேற்பார்வையிட, அது அமெரிக்க மற்றும் தென் கொரிய கண்காணிப்பாளர்களை அனுமதிக்கும் என்று தென் கொரிய ஜனாதிபதி அலுவலகம் நேற்று அறிவித்தது, இது இம்மாத தொடக்கத்திலேயே கிம் ஆல் அறிவிக்கப்பட்டிருந்தது. “அணுஆயுதங்களைத் தயாரிப்பதற்கு எங்களுக்கு எந்த காரணமும் இல்லை … அமெரிக்காவுடன் பரஸ்பர நம்பிக்கை உருவாக்கப்பட்டால்… போரையும் ஆக்கிரமிப்பையும் நிறுத்திக் கொள்வதற்கும் உறுதியளிக்கப்படுகின்றன,” என்று மூன் ஜா-இன்னிடம் கிம் தெரிவித்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

மார்ச் மாத தொடக்கத்தில், வட கொரிய ஆட்சி "அணுஆயுதமயமாக்கல் ஒழிப்பு" பேச்சுவார்த்தைகளை நடத்த அதன் விருப்பத்தை அறிவித்தது. கடுமையான தடைகளை அமுலாக்குவதில் சீனாவும் சேர்ந்து கொண்டமை, அந்நாட்டின் ஏற்றுமதிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வீழ்ச்சியை ஏற்படுத்தி இருந்ததாக செய்திகள் குறிப்பிட்டன. கணிசமான சீன உதவியில்லாமல், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஏனைய அமெரிக்க கூட்டாளிகளின் கூட்டுப்படையை இராணுவரீதியில் தோற்கடித்து விடலாமென வட கொரியாவால் நினைத்தும் பார்க்க முடியாது. அது அதன் சிறிய அணுஆயுத தளவாடங்களைப் பயன்படுத்தினாலும் கூட, அது நிர்மூலமாக்கலை முகங்கொடுக்க வேண்டியிருக்கும்.

அப்பட்டமாக சீன ஆதரவை இழந்திருந்த பியாங்யொங், அதன் ஆளும் குழுவின் பதவிகளும் செல்வவளமும் பாதுகாக்கப்படும் ஓர் ஏற்பாட்டை வழங்கினால், ஓர் உடன்படிக்கை செய்து கொள்ள தயாராக இருப்பதைச் சமிக்ஞை செய்துள்ளது. இவ்வாறு இருந்தாலும், கொரிய தீபகற்ப நிலைமையின் சமநிலை தொடர்ந்தும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு தான் இருக்கிறது.

ட்ரம்ப் மிச்சிகன் பேரணியின் போது, அமெரிக்க கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யவில்லையானால் ஒரு போர் கொள்கைக்கு திரும்புவது மற்றும் பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளியேறுவது என்ற அவர் முந்தைய அச்சுறுத்தல்களை மீண்டும் அறிவித்தார். “என்ன நடக்கிறதோ, நடக்கட்டும்,” என்று அறிவித்த அவர், “நான் பேச்சுவார்த்தைக்கு செல்லலாம், இது பயனற்றுப்போனால், நான் வெளியேறலாம்,” என்றார்.

ஏதேனுமொரு சாத்தியமான சந்திப்பிற்கான அடித்தளத்தைப் பேசி முடிக்க மார்ச் இறுதியில் ட்ரம்பால் பியாங்யொங்கிற்கு அனுப்பப்பட்டிருந்த பொம்பியோ, ABC செய்திகளுக்கான தலைமை வெள்ளை மாளிகை செய்தியாளர் ஜொனாதன் கார்ல் க்கு நேற்று கூறுகையில், அமெரிக்காவின் ஓர் உடன்படிக்கை வரையறைகள் "முழுமையானது, சரிபார்க்கத் தக்கவை, திரும்ப பெறவியலாத அணுஆயுதமயமாக்கல் ஒழிப்பு" என்பதை வட கொரியா "புரிந்து வைத்திருப்பதாக" தெரிவித்தார். அவர் வலியுறுத்தினார்: “நாங்கள் வாக்குறுதிகள் வழங்க போவதில்லை. நாங்கள் வார்த்தைகளைப் பெற போவதில்லை. நாங்கள் நடவடிக்கைகளையும் செயல்பாடுகளையும் பார்க்க போகிறோம்,” என்றார்.

கார்ல் வினவினார்: “இதில் இராஜாங்க நடைமுறைகள் தோல்வியடைந்தால், அங்கே இராணுவ விருப்பத்தெரிவு இருக்குமா?” பொம்பியோ பதிலளித்தார்: “அமெரிக்காவை கிம் ஜொங்-யுன் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருப்பதை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை.”

இன்னும் அச்சுறுத்தலான கருத்துரை ஒன்றில், புதிதாக நியமிக்கப்பட்ட ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் ஃபாக்ஸ் செய்திகளுக்கு கூறுகையில், டிசம்பர் 2003 இல் லிபியாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை, வட கொரிய அணுஆயுதமயமாக்கல் ஒழிப்புக்கான "முன்மாதிரி" ஆக இருக்கும். இரசாயன ஆயுதங்கள் மற்றும் அணுஆயுத துணைப்பொருட்களை அழித்ததற்கு பிரதியீடாக, பிரதான சக்திகள் மௌம்மர் கடாபியின் லிபிய ஆட்சியுடன் உறவுகளை மீட்டமைத்தன.

ஆனால் வெறும் எட்டாண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்காவும் ஐரோப்பாவும் துனிசியாவிலும் மிகவும் கூடிய கவலையுடன் எகிப்திலும் வெடித்த,, புரட்சிகர மேலெழுச்சியைக் கட்டுப்படுத்தும் அவற்றினது முயற்சிகளின் பாகமாக கடாபிக்கு எதிராக திரும்பின. இந்த ஏகாதிபத்திய சக்திகள் லிபியாவில் உள்நாட்டு போரைத் தூண்டிவிட இஸ்லாமியவாத மற்றும் பிரிவினைவாத "கிளிர்ச்சியாளர்களுடன்" சூழ்ச்சிகள் செய்து, பின்னர் கடாபி ஆட்சி மற்றும் இராணுவம் மீது ஒரு பாரிய விமானப்படை தாக்குதலை நியாயப்படுத்துவதற்கு அதே சண்டைகளைப் பயன்படுத்தின. அக்டோபர் 2011 இல் கடாபி இந்த ஏகாதிபத்திய-சார்பு கிளர்ச்சியாளர்களால் கொடூரமாக கொல்லப்பட்டார்.

வட கொரியா அதன் அணுஆயுத திட்டத்தைக் கைவிட வேண்டுமென்ற அமெரிக்க-தலைமையிலான கோரிக்கைக்கு அது அடிபணிய மறுப்பதற்கு ஒரு காரணமாக, அது லிபியா மற்றும் கடாபியின் தலைவிதியை முன்னர் சுட்டிக்காட்டி வந்தது.

நகர்வுகள் பேச்சுவார்த்தைகளை நோக்கி முன்நோக்கி நகர்ந்து வருகின்றன என்றாலும், அவை "அணுஆயுதமயமாக்கல் ஒழிப்பு" மற்றும் "அணுஆயுதமில்லா கொரிய தீபகற்பம்" என்ற வரையறைகளின் மீது முற்றிலுமாக உடைந்தும் போகலாம். சான்றாக, அணுஆயுதங்களைச் செலுத்த தகைமை கொண்ட இராணுவ தளவாடங்களை அமெரிக்கா திரும்ப பெறுவதற்கும் மற்றும் அமெரிக்க-தென் கொரிய கூட்டணியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் வட கொரியா தொடர்ந்து வலியுறுத்தலாம்.

நியூ யோர்க் டைம்ஸ் போன்ற அமெரிக்க ஊடகங்களின் ட்ரம்ப்-விரோத பிரிவுகளிடம் இருந்து வரும் பல கருத்துரைகள் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைவதற்கான சாத்தியக்கூறுகளை நிழலிடுகின்றன. அவர் தான் கிம்மை பேச்சுவார்த்தைகளுக்கு நிர்பந்தித்தார் என்ற ட்ரம்பின் வாய்சவுடால்களை ஏளனம் செய்து, டைம்ஸ் கட்டுரையாளர் பிரெட் ஸ்டீபன்ஸ் வலியுறுத்துகையில், நிர்வாகம் "மனித உரிமைகளை மீறிய" ஒருவரை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது, அது “சியோலுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே [வட கொரியா] ஒரு பிளவை உண்டாக்குவதற்கு" அதை அனுமதிக்கிறது மற்றும் "பியாங்யொங் காய் நகர்த்த" அனுமதிக்கிறது என்றார்.

போர் மற்றும் "ஆட்சி மாற்றத்திற்கு" பகிரங்கமாக முன்னுரிமையைச் சுட்டிக்காட்டி, ஸ்டீபன்ஸ் எழுதினார்: “சிலர் வாதிடுவதைப் போல, எல்லா விருப்பத்தெரிவுகளும் மோசமானவை அல்ல என்பது உண்மை தான், என்றாலும் அவற்றில் 'சமீபத்திய மோசமானது' பேரம்பேசியதாகும்,” என்றார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதனால், ட்ரம்ப் நிர்வாகம் எந்தவொரு பேச்சுவார்த்தைகளுக்கு செல்வதானாலும் சாத்தியமானளவுக்கு கடுமையான போக்கை எடுக்க வேண்டுமென்ற ஆழ்ந்த உள்நாட்டு அழுத்தத்தின் கீழ் செல்கிறார். வட கொரியாவை முழுமையாக அடிபணிய வைக்காத எந்தவொரு உடன்படிக்கையும், “மிகவும் தாராளமனத்துடன்" இருப்பதாக விமர்சனத்தின் கீழ் அவமதிக்கப்படலாம்.

தென் கொரியாவில் உள்ள அமெரிக்க படைகளுக்கு எதிராக வட கொரியாவை ஒரு பயனுள்ள இராணுவமயப்பட்ட இடைத்தடை பகுதியாக பார்க்கும் சீனா மற்றும் ரஷ்யா, வட கொரியா எல்லையை ஒட்டியுள்ள இவை, அவற்றின் மூலோபாய நலன்களுக்குக் குழிபறிக்கும் எந்தவொரு உடன்படிக்கைக்கும் எதிர்ப்பை எடுத்துக்காட்டி உள்ளன.

அமெரிக்க-வட கொரிய பேச்சுவார்த்தைகளின் விளைவு என்னவாக இருந்தாலும், ரஷ்யா, சீனா மற்றும் ஜப்பானையும் உள்ளடக்கி, அத்துடன் அமெரிக்கா மற்றும் இரண்டு கொரியாவும் சேர்ந்த "ஆறு தரப்பு பேச்சுவார்த்தைகள்" மட்டுமே அந்த "துணை-பிராந்தியங்களின் பிரச்சினைகளைத்" தீர்க்குமென ரஷ்யாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் Igor Morgulov சனியன்று வலியுறுத்தினார்.

சீன அரசாங்கம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றாலும், சீன கருத்துரைப்பாளர்கள் கொரிய பிரகடனத்தைச் சுட்டிக்காட்டும் விதமாக, பெய்ஜிங் பங்களிப்பு இல்லாமல் கையெழுத்திடப்படும் ஒரு "சமாதான உடன்படிக்கையின்" சாத்தியக்கூறை எதிர்த்துள்ளனர். லியோனிங் சமூக விஞ்ஞான பயிலகத்தின் லு சாவோ தென் சீன மார்னிங் போஸ்டுக்கு தெரிவிக்கையில், “ஒரு சட்டப்பூர்வ முன்னோக்கிலிருந்து பார்த்தால், ஒரு தற்காலிக போர் நிறுத்தம் என்பதிலிருந்து ஒரு சமாதான உடன்படிக்கையாக மாற்ற வேண்டுமானால், அந்த நிகழ்முறையில் பங்கு வகிக்கும் எல்லா நாடுகளும் கையெழுத்திட வேண்டும், இதன் அர்த்தம் சீனாவுக்கும் மேசையில் ஓர் ஆசனம் வழங்கப்பட வேண்டும்,” என்றார்.

கிம் ஐ சந்திக்க தயார் என்ற ட்ரம்பின் மார்ச் 8 அறிவிப்புக்குப் பின்னர், ரஷ்யாவும் சீனாவும் இரண்டுமே வேக வேகமாக அவற்றின் சொந்த இராஜாங்க நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்தின. கிம் அவரின் முன்பில்லாத முதல் பயணமாக பெய்ஜிங்கிற்கு அழைக்கப்பட்டார், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் "விரைவில்" பியாங்யொங் விஜயம் செய்வதற்கான அவரின் விருப்பத்தை அறிவித்தார். சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, அபிவிருத்திகளைக் குறித்து விவாதிக்க மே 2—3 இல் பியாங்யொங்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொள்ளவிருக்கிறார். ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரொவ் தேதி குறிப்பிடப்படவில்லை என்றாலும் வட கொரியாவுக்கு பயணிக்க உள்ளார்.

இத்தகைய இராஜதந்திரங்கள், இராஜாங்கரீதியிலும் சரி அத்துடன் இராணுவரீதியிலும் சரி, வெறுமனே தீவிரமடைய மட்டுமே செய்யும்.

 

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

வடகொரியாவுடன் ட்ரம்ப்பின் திரைமறைவு இராஜதந்திரம் [PDF]

[19 April 2018]

போர் மற்றும் உள்நாட்டு நெருக்கடிக்கு மத்தியில் ட்ரம்ப்பும் அபேயும் சந்திக்கின்றனர் [PDF]
[18 April 2018]