ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Argentina’s Partido Obrero suppresses questions on alliance with Russian Stalinist with ties to neo-fascism

ஆர்ஜென்டினாவின் தொழிலாளர் கட்சி ரஷ்ய நவ-பாசிசத்துடன் உறவுகள் கொண்ட ஸ்ராலினிசத்துடனான கூட்டு பற்றிய கேள்விகளை அறியமுடியாதபடி மறைத்து வைக்கிறது

By Bill Van Auken
19 June 2018

ஆர்ஜென்டினாவின் தொழிலாளர் கட்சி (Partido Obrero) புவேனோஸ் அயர்சில் நான்காம் அகிலத்தை மீளஸ்தாபிப்பதற்கான குழுவின் (Committee to Refound the Fourth International -CRFI) ஒரு மாநாட்டை நடத்தி இப்பொழுது இரண்டு மாதங்களாகிறது, அதில் கௌரவிக்கப்பட்ட விருந்தினர்களுள் ஒருவராக ரஷ்யாவின் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் (United Communist Party of Russia - OKP) பிரதிநிதியான டரியா மிட்டினாவும் இருந்தார்.

உலக சோசலிச வலைத் தளமானது இந்த “மீளக்கட்டமைத்தலின்” அரசியலையும், ரஷ்ய அரசுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்ட ஒரு ஸ்ராலினிச வெறியர் மிட்டினா மற்றும் புவேனோஸ் அயர்சில் அவரது வருகையை ஒழுங்குசெய்வதில் தரகராக இருந்த கிரேக்க EEK (தொழிலாளர் புரட்சிக் கட்சி)-யின் தலைவரான சவாஸ் மிஷேல்-மட்சாஸ் இருவரது வரலாறையும் பற்றிய ஒரு அம்பலப்படுத்தலை வெளியிட்டது.

Partido Obrero இந்த அம்பலப்படுத்தலுக்கு எந்த பதிலையும் தரவில்லை மற்றும் கட்சியின் முகநூலில் பதிவிட்டிருந்த கட்டுரைகளையும் அதன் உள்ளடக்கம் பற்றிய கேள்விகளையும் விரைந்து அழித்துவிட்டது. அதில் பங்கேற்ற CRFI அல்லது எந்த குழுக்கள் அல்லது தனிநபர் உடனான தொடர்புகள் குறித்து PO வின் வலைத் தளத்தில் அதனைப் பின்தொடரும் கட்டுரைகளும் இருக்கவில்லை.

கோர்கே அல்தமிராவைச் சுற்றிய Partido Obrero வின் தலைமை, உலக சோசலிச வலைத் தளத்தால் செய்யப்பட்ட ஆய்வில் எழுப்பப்பட்ட பிரச்சினைகளின் எந்தவிதமான கலந்துரையாடலுக்கும் அஞ்சுகின்றது மற்றும் தாங்கள் இதுவரை கொண்டிருக்கும் நிலைப்பாட்டைக் கட்சியின் உறுப்பினரிடமிருந்து மறைப்பதற்கு விரும்புகின்றது.

அல்தமிராவும் மத்திய தலைமையும் பிரதான அரசியல் முன்முயற்சியை மேற்கொண்டதோடு தாங்கள் என்ன செய்கிறோம் என்பதைத் துல்லியமாகவே அறிவார்கள். மிட்டினா மற்றும் ரஷ்ய ஸ்ராலினிஸ்டுகள் போன்ற சக்திகளிடம் திரும்புவது வலதுசாரி சக்திகளுடனான ஒரு கூட்டை அபிவிருத்தி செய்வதை நோக்கிய ஒரு பரந்த திருப்புமுனையின் பகுதியாகும்.

CRFI மற்றும் Partido Obrero உடனான அவரது தொடர்பு மூலம் மிட்டினா ட்ரொட்ஸ்கிச முன்னோக்கிற்கு வென்றெடுக்கப்படுகிறார் என்று எவராவது நினைத்தால் அது துயரார்ந்த அறியாமையும் அப்பாவித்தனமும் ஆகும்.

OKP இன் வெளிவிவகாரச் செயலர் என்ற வகையில், மிட்டினா ரஷ்ய அரசின் சார்பாக, தம்மைத்தாமே சோசலிஸ்டுகள் மற்றும் இடதுகள் என்று சுயமாக கூறிக்கொள்ளுவோரோடு மட்டுமல்ல, இன்னும் மிகவும் கூடுதலாகவும் கவனத்துடனும், அதி-வலது மற்றும் நவ-பாசிஸ்ட்டுகளோடும் கூட தொடர்புகளை ஒன்றிணைக்கும் வேலையில் இருக்கிறார்.

அதற்கு சரியான எடுத்துகாட்டு 2014 ஆகஸ்டில் கிரிமிய நகரமான யால்டாவில் கூடிய ஒரு மாநாட்டில், “ரஷ்யா, நோவோரோஸ்ஸியா, உக்ரேன்: பூகோளப் பிரச்சினைகளும் சவால்களும்” என்று தலைப்பிடப்பட்ட மாநாட்டை ஒழுங்கு செய்ததிலும் அதில் உரையாற்றியதிலும் உள்ள அவரது பங்காகும்.

அது வலது-சாரி ரஷ்ய தேசியவாதிகளால், குறிப்பாக மிட்டினாவுடன் Alexander Prokhanov மற்றும் Aleksandr Dugin போன்ற ரஷ்ய பாசிஸ்டுகளும் பங்கேற்றிருந்த அதிவலது “சிந்தனைக்குழாம்” ஆன Izborsky Club ஆல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

யால்டா மாநாட்டில் அணிவகுத்தோர் தனிநபர்களின் தொகுப்பு ஆவர், மாநாட்டைப் புகழ்ந்த ஒரு கட்டுரையில் அவர்கள் மிட்டினாவால் ஆர்வத்தோடு விவரிக்கப்பட்டார்கள்:

அரங்கமானது  200க்கும் மேற்பட்ட விருந்தினர்களைக் கொண்டு வந்தது. முன்னாள் உக்ரேன் பிராந்தியங்களில் உள்ள எதிர்ப்பு அணியினரின் தலைவர்கள், அரசியல்வாதிகள், Novorossiya படையின் இராணுவ அதிகாரிகள், குடிப்படை பிரதிநிதிகள், Novorossiya வின் பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், ரஷ்யா, உக்ரேன், பெலோரஸ்யா, இத்தாலி, போலந்து, ஹங்கேரி, ஜேர்மனி, கிரேட்பிரிட்டன், பிரான்ஸ், சேர்பியா, பெல்ஜியம், லாத்வியா, எஸ்தோனியா மற்றும் சர்வதேச பத்திரிகையாளர்கள் அதன் வேலைகளில் பங்கெடுத்தனர்.”

யார் இந்த “புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள்?” பகுதி அளவான ஒரு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது:

* பெல்ஜிய தீவிர வலதுசாரிக் குழுவான Vlaams Blok இன் முன்னாள் உறுப்பினரும் தீவிர வலதுசாரி Vlaams Belang இன் தற்போதைய உறுப்பினருமான Frank Creyelman.

* பெல்ஜிய neo-Nazi Parti Communautaire National-Européen இன் உறுப்பினர் Luc Michel.

* ஹங்கேரியில் உள்ள பாசிச Jobbik party இன் Márton Gyöngyösi.

* 85 பேரைக் கொன்ற Bologna புகையிரத நிலையத்தில் 1980ல் பயங்கரவாத குண்டு வெடிப்பு சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதில் தொடர்புடைய பாசிச Forza Nuova Italy இன் தலைவர் Roberto Fiore.

* போலந்தில் பாசிச Falanga குழுவின் தலைவர் Bartosz Bekier.

* பாசிச British National Party (BNP) இன் தலைவர் Nick Griffin.

* அங்கு வந்திருந்தவர்களுள் போலந்தில் உள்ள அதிவலது Samooborona கட்சியின் உறுப்பினர்களும் பல்கேரியாவிலுள்ள அதிவலது Ataka கட்சி உறுப்பினர்களும் அடங்குவர். பிரெஞ்சு தேசிய முன்னணியும் கூட அதற்கு அழைக்கப்பட்டிருந்தது.

நவ-நாஜிக்கள், யூத எதிர்ப்பாளர்கள், வெளிநாட்டவர் கலாச்சாரத்தை வெறுப்பவர்கள், இனவாதிகள் மற்றும் அதிவலது தேசியவாதிகள் ஆகியோரின் கூடல் பற்றிய அவரது கட்டுரையில், மிட்டினா “இவை அனைத்தும் கிரிமியன் நிர்வாகத்திற்கு, அவர்கள் இன்னும் தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருந்தால் உன்னதமான விளம்பரமாக இருந்திருக்க முடியும். விருந்தினரின் தனித்தன்மை வாய்ந்த சேர்க்கையைக் காண்பது இந்தக் குடியரசில் இன்னும், நாள்தோறுமான நிகழ்ச்சியாக இல்லை.”

இதே தனிநபர்களுடன்தான் அல்தாமிரா “நான்காம் அகிலத்தை மீளஸ்தாபிக்க” முன்மொழிகிறார். நமது முந்தைய ஆய்வில் நாம் சுட்டிக்காட்டியவாறு, மிட்டினா ஆண்டுக்கு இருமுறை ஸ்ராலினின் கல்லறையில் மலர்களை வைப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டார். அவர் ஐரோப்பா முழுவதும் பாசிஸ்டுகளுடன் நெருக்கமான அரசியல் உறவுகளை அனுபவித்து வருகிறார் என்பதும் கூட வெளிப்படையானது.

கடந்த ஏப்பிரலில் அவரை PO உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்கையில், அல்தாமிரா அவரை “ரஷ்யாவில் கம்யூனிசத்தின் மரபின் பெயரில் பேசும் ஒரு தோழர், அவரைப் பொறுத்தவரை அது அவருக்கு ஸ்ராலினிசமாக இருக்கும்,” அத்தகைய சக்திகளுடன் ஐக்கியப்படுத்தும் முயற்சியை முன்வைப்பது “நீங்களே அகிலத்தைக் கட்டுங்கள்” என்ற ஒரு “குறுங்குழுவாத” கருத்துருவைவிடவும் ஒரு மேம்பட்ட வழிமுறையாகும், அதாவது ஒரு பொது உலக வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கு மீதான அடிப்படையில் ஒரு கோட்பாட்டு ரீதியான ஒன்றிணைப்பால் ஒரு உண்மையான அகிலத்தை கட்டி எழுப்புவதற்கு போராடுவதாகும்.

ரஷ்ய ஸ்ராலினிசம் மற்றும் பாசிசத்திற்கு இடையிலான தொடர்புகள் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளன.

லியோன் ட்ரொட்ஸ்கி காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி என்ற நூலில் சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்துவ சீரழிவு பற்றிய அவரது முக்கியத்துவம் மிக்க ஆய்வில்: “சோவியத் ஜனநாயகத்தை அனைத்து சக்திமிக்க அதிகாரத்துவத்தால் நசுக்கலும் பாசிசத்தால் முதலாளித்துவ ஜனநாயகம் அழித்தொழிக்கப்படலும் ஒரேமாதிரியான காரணத்தால் உருவாக்கப்பட்டதாகும்: அக்காரணம் வரலாற்றால் அதற்காக முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதில் உலகப் பாட்டாளி வர்க்கம் தாமதமடைந்ததாலாகும். சமூக அடித்தளங்களில் ஆழமான வேறுபாடுகள் இருந்தாலும், ஸ்ராலினிசமும் பாசிசமும் சமச்சீரான நிகழ்வுப்போக்குகளாகும். அவற்றினுடைய பல இயல்புகளில் அவை மரண ஆபத்தான ஒத்ததன்மையைக் கொண்டுள்ளன.”

அக்டோபர் 1917 புரட்சியினால் ஸ்தாபிக்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட சொத்துடமையின் சமூக அடித்தளம் அகற்றப்பட்டு 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதுடன் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் அது இல்லாதொழிக்கப்பட்டதுடன், ரஷ்ய ஸ்ராலினிசத்திற்கும் பாசிசத்திற்கும் இடையிலான இந்த “மரண ஆபத்தான ஒத்ததன்மை” எல்லாவகையிலும் பகிரங்கமாகவும் நேரடியாகவும் வெளிப்படையாகியுள்ளது.

யால்டாவில் நவ-பாசிஸ்டுகளுடைய ஒரு கூடல் ஒன்றில் அவர் பயன்படுத்தியது போலல்லாமல், PO உறுப்பினர்களுக்கு சற்றே மிகவும் “இடது” சொல்லாடல்களை பயன்படுத்தி, மிட்டினா போன்ற புட்டின் ஆட்சியின் ஸ்ராலினிச ஏஜெண்டுகள் தங்களுடைய அரசியலை பல்வேறு பார்வையாளர்களுக்குப் பொருந்தும் வகையில் வெட்டித்தைப்பார்கள்.

ஆயினும், அடிப்படைகள் ஒன்றுதான்: ரஷ்ய பேரினவாதம், “நவ-தாராளவாதம்” மீதான ஜனரஞ்சகக் கண்டனங்கள் மற்றும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு குரோதம். இத்தகைய அரசியல் சோசலிசத்துடன் அறவே சம்பந்தப்பட்டதல்ல, மாறாக அது பாசிசத்துக்கும் தேசியவாத அதி வலதுக்குமே மிகவும் நெருக்கமானது.

மிட்டினா போன்ற சக்திகளுடன் அல்தமிரா தலைமை கூட்டு வைப்பதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். PO போன்ற இயக்கத்தின் சர்வதேசிய அரசியல் என்பது தேசிய அரசியலின் ஒரு நீட்டிப்பு ஆகும். அத்தகைய உறவுகள் சர்வதேச ரீதியாக ஏற்படுத்தப்பட்டால், PO முற்றிலும் வலதுசாரி சக்திகளுடன் கூட்டுவைப்பதை அவர்கள் ஆர்ஜென்டினாவிலேயே செய்ய முடியும் மற்றும் செய்யலாம்.

சோசலிசத்திற்காகப் போராட வேண்டும் என்ற ஒரு ஆவலில் இயக்கத்தில் சேர்ந்த PO உறுப்பினர்கள் சில கேள்விகளைக் கேட்கத் தொடங்குவது சிறப்பாக இருக்கும்:

“நான்காம் அகிலத்தை மீளஸ்தாபித்தலுக்கு” ஆன மாநாட்டிற்கு ஒரு ஸ்ராலினிச வாதியும் ஐரோப்பிய பாசிஸ்டுகளின் கூட்டாளியுமான டரியா மிட்டினா ஏன் அழைக்கப்பட்டார்? அத்தோடு ஏன் PO உறுப்பினர்கள் முன்பு “தோழர்” என்று காட்சிப்படுத்தப்பட்டார்?

டரியா மிட்டினாவோடு என்னென்ன கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன?

ஆர்ஜென்டினாவின் தேசிய அரசியலிலும் PO வின் நடைமுறையிலும் ரஷ்ய ஸ்ராலினிசத்தை ஆரத்தழுவியதின் தாக்கங்கள் என்ன?

ஐரோப்பா எங்கும் உள்ள பாசிஸ்டுகளுடன் மிட்டினாவின் சந்திப்புக்களுக்கு இடையில், ஏதென்சில் மாநாட்டிற்கு அவரை அழைத்து இந்த பிற்போக்கு அரசியல் கூட்டைச் செய்ததில் கிரேக்க EEK (தொழிலாளர் புரட்சிக் கட்சி) இன் சந்தேகத்திற்கிடமான தலைவர் சவாஸ் மிஷேல்-மட்சாஸ் ஆல் ஆற்றப்பட்ட பாத்திரம் என்ன?

புவேனோஸ் அயர்ஸ் மாநாடு பற்றிய எமது முந்தைய ஆய்வில் நாம் கூறியவாறு, “ஸ்ராலினிசத்துடனான கூட்டில் “மீளஸ்தாபித்தல்” எனும் பாசாங்கை தொழிலாள வர்க்கம் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். துல்லியமாக ஒவ்வொரு கண்டத்திலும் வர்க்கப் போராட்டம் மீளெழுச்சி கண்டுவருகின்ற புள்ளியில் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்திற்கு கீழ்ப்படுத்துவதற்கான புதிய அரசியல் கருவிகளை ஒன்றிணைக்கும் ஒரு முயற்சியை துல்லியமாக அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது”.

PO வின் ரஷ்ய “தோழர்” மற்றும் “மீளஸ்தாபித்தலின்” பங்குதாரர் பற்றிய அதிக தகவல்கள் தோன்றத்தோன்ற இந்த அரசியற்கருவிகள் எவ்வளவு வலதுசாரித்தனமாக ஆகின்றன என்பது மேலும்மேலும் தெளிவாகும்.

ஆசிரியர் வாசிக்கப் பரிந்துரை செய்வது:

ஆர்ஜென்டினாவில் தொழிலாளர் கட்சி ஸ்ராலினிசத்துடன் கூட்டு சேர்ந்து நான்காம் அகிலத்தை “மீள ஸ்தாபிப்பதற்கு” முயல்கிறது

[7 June 2018]