ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Italy: IMF economist to form technocratic government

இத்தாலி: சர்வதேச நாணய நிதிய பொருளாதார வல்லுனர் தொழில்நுட்பவாத அரசாங்கத்தை அமைக்க வேண்டும்

By Peter Schwarz 
29 May 2018

இத்தாலியில், ஐந்து நட்சத்திர (M5S) எதிர்ப்பு இயக்கமும் அதிவலது லெகா கட்சியும் இணைந்து ஒரு அரசாங்கத்தை ஸ்தாபிக்க முயற்சி செய்தமை தற்போது தோல்வியடைந்துள்ளது. அரசாங்கத்தை அமைக்க இரண்டு கட்சிகளும் முன்மொழிந்த பின்னர், ஜனாதிபதி செர்ஜியோ மத்தெரெல்லாவினால் நியமிக்கப்பட்ட கியுசெப்ப கொன்ர வெறும் நான்கு நாட்களுக்குப் பின்னர் ஞாயிறு மாலையில் அவரது பதவியிலிருந்து வாபஸ் செய்தார்.

81 வயதான பாவோலோ சாவோனாவை நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக நியமிக்க மத்தெரெல்லா மறுத்ததுதான் கொன்ட் வாபஸ் பெறுவதற்கான காரணமாக இருந்தது. ஏனைய அனைத்து அமைச்சக முன்மொழிவுகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்ட போதிலும், யூரோ நாணயத்தில் இருந்து இத்தாலியின் வெளியேற்றத்திற்கு அவர் திட்டமிட்டார் என்ற அடிப்படையில் சாவோனாவை அவர் நிராகரித்தார்.

இத்தாலிய அரசாங்க பங்கு பத்திரங்கள் மீதான அதிகரித்த அளவிலான அபாய இழப்புநிதி மற்றும் பங்குச் சந்தைகளில் ஏற்படும் இழப்பீடுகள் இவற்றுடன் ஒரு யூரோ ஐயுறவு அரசாங்கத்திற்கு நிதி சந்தைகள் காட்டிய எதிர்வினையை சுட்டிக்காட்டி, இத்தாலியில் சேமிப்பாளர்களை காப்பாற்ற அவர் கடமைப்பட்டிருந்ததாக மத்தெரெல்லா தெரிவித்தார். கொன்ட் வாபஸ் பெற்ற பின்னர், நிதியச் சந்தைகளில் உள்ள ஏற்ற இறக்கம் குறைந்துபோனது.

சாவோனா, இத்தாலிய அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு முக்கிய பிரமுகர் ஆவார். ஓய்வுபெற்ற பொருளியல் பேராசிரியரான இவர் பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் நிர்வாக குழுவில் பங்கேற்றவர் என்பதுடன், முதலாளிகள் சங்கத்தின் பொது இயக்குநராகவும், கார்லோ அஜெக்லியோ சியாம்பி தலைமையின் கீழ் தொழில்துறை மந்திரியாகவும் இவர் இருந்துள்ளார். ஆனால் தற்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் (European Union – EU) மீதான இத்தாலி இணைந்துகொண்டது ஒரு “வரலாற்று ரீதியான தவறு” என்றும், யூரோ என்பது ஒரு “ஜேர்மன் கூண்டு”, அதில் இத்தாலிய பொருளாதாரம் சிக்கிக் கொண்டுள்ளது என்றும் அவர் கருதுகிறார்.

திங்களன்று, அரசாங்கத்தை ஸ்தாபிக்க சரியான எதிராளியாக நிற்க மாட்டரெல்லா ஒருவரை நியமித்தார். அவர் நியமித்த கார்லோ கொட்டரெல்லி, யூரோ மற்றும் ஐரோப்பிய சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒரு உற்சாகமான ஆதரவாளர் ஆவார். 64 வயதான அவர், தனது நியமனத்திற்கு பின்னர், அவர் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கம் ஒரு ஐரோப்பிய சார்பு போக்கினை பின்பற்றும் என உறுதியளித்தார். யூரோ மண்டலத்தில் இத்தாலியின் பங்கு என்பது “அடிப்படை முக்கியத்துவம்” வாய்ந்ததாக இருந்ததென அவர் கூறியதோடு, “எனது தலைமையிலான அரசாங்கம் வரவு-செலவு திட்டம் மீதான ஒரு விவேகமான அணுகுமுறைக்கு உத்திரவாதம் அளிக்கும்” என்பதையும் அவர் சேர்த்துக் கூறினார்.

1980 களில் இத்தாலிய தேசிய வங்கியில் கொட்டரெல்லி பணியாற்றினார், அதனைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) அந்தஸ்துமிக்க பதவிகளில் 25 ஆண்டுகளுக்கும் கூடுதலாக காலத்தை செலவழித்தார். மேலும் 2013 இல், இன்ரிகோ லெட்டாவின் ஜனநாயகக் கட்சி (Democratic Party-PD) அரசாங்கத்தில் “சேமிப்பு ஆணையாளராக” அவர் பணியாற்றி, அரசு எந்திரத்திற்காக ஒரு கடுமையான சிக்கன நடவடிக்கைத் திட்டத்தை வரைந்தார்.

தற்போது கொட்டரெல்லி, கட்சிசாரா வல்லுனர்களைக் கொண்டு ஒரு தொழில்நுட்பவாத அரசாங்கத்தை ஸ்தாபிக்க உள்ளார், இது வரவு-செலவு திட்டத்தை ஏற்கும் என்பதுடன், 2019 வசந்த காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கான தயாரிப்புகளை மேற்கொள்ளும். இருப்பினும், இதற்கு ஒரு பாராளுமன்ற பெரும்பான்மை அவருக்கு தேவைப்படுகிறது, ஆனால் அதை அவர் பெறுவது சாத்தியமில்லை. இதுவரை, கொட்டரெல்லியின் தலைமையின் கீழ் ஒரு இடைக்கால அரசாங்கத்தை ஆதரிக்க ஆளும் ஜனநாயக கட்சி (PD) மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு ஆரம்பத்தில் இலையுதிர் காலத்தில் புதிய தேர்தல்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.

அனைத்து அமைச்சர்கள் மீதான தடுப்பதிகாரத்தை ஒரு ஜனாதிபதி கொண்டுள்ள இத்தாலியில் இது வழக்கமாக இருப்பதால், சாவோனாவிற்கு ஒரு மாற்றீட்டை முன்மொழிய லெகா மற்றும் ஐந்து நட்சத்திர இயக்கம் இரண்டும் மறுத்துவிட்டன. மாறாக, நிதி சந்தைகளின் சார்பில் மத்தெரெல்லாவின் தலையீட்டை அவர்கள் சுரண்டி வருகின்ற நிலையில், ஒரு வலதுசாரி ஜனரஞ்சக மற்றும் தேசியவாத முறையீடு செய்ய புருசெல்ஸ், பேர்லின் மற்றும் பாரிஸ் போன்ற நகரங்களில் இது வரவேற்பை பெற்றுள்ளது.

ஐந்து நட்சத்திர இயக்கத்தின் தலைவர் லூய்கி டி மாயோ, ஜனநாயகம் குறித்த பிரச்சினை பற்றியும், மத்தெரெல்லாவை பதவியிலிருந்து அகற்றுவது பற்றியும் பேசினார்.

லெகா கட்சித் தலைவர் மத்தேயோ சால்வினி, “யாருடைய அதிகாரத்திற்கு இத்தாலி தலைவணங்க வேண்டுமோ… அத்தகைய சக்திகளின் ஒரு பிரதிநிதியாக” முன்னாள் சர்வதேச நாணய நிதிய அதிகாரி கொட்டரெல்லிக்கு அழைப்புவிடுத்தார். லெகா தன்னை அச்சுறுத்த அனுமதிக்காது என்று அவர் அறிவித்ததோடு, இத்தாலியில் இத்தாலியர்கள் தான் முடிவு செய்தனர், ஜேர்மனியர்கள் அல்ல என்றும் சேர்த்துக் கூறினார்.

பெனிட்டோ முசோலினியின் பாசிச படைகளின் ரோம் மீதான 1922 அணிவகுத்து சென்றது போன்ற ஒரு உருவகமாக இது இப்போது “ரோமிற்கு போவது” தேவையானது என்று சால்வினி தெரிவித்தார்.

சால்வினியின் லெகாவிற்கு, உடனடி எதிர்காலத்தில் புதிய தேர்தல்கள் நடைபெறுவது சாத்தியமான ஒன்றாக இருக்கக்கூடும். மார்ச் மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் 17 சதவிகித வாக்குகளை வியக்கத்தக்க வகையில் இது பெற்றதுடன், (33 சதவிகிதம் பெற்ற) M5S மற்றும் (19 சதவிகிதம் பெற்ற) சமூக ஜனநாயகக் கட்சி (PD) போன்ற கட்சிகளுக்கு பிந்தைய மூன்றாவது வலுவான கட்சியாகவும் இது உருவெடுத்தது. அப்போதிருந்து, ஐந்து நட்சத்திர இயக்கம் தேக்கம் கண்டும், PD தொடர்ந்து ஆதரவை இழந்தும் வருகின்ற நிலையில், இது PD ஐ முந்தியதுடன், 24 சதவிகித வாக்குகளுடன் நிலைபெற்று நிற்கிறது.

தற்போதைய நெருக்கடியின் விளைவாக, லெகாவும் ஐந்து நட்சத்திர இயக்கமும் வலுவாக எழுச்சிபெறும் என்று சர்வதேச நிதியச் செய்தி ஊடகம் கருதுகிறது. உதாரணமாக, Financial Times இவ்வாறு குறிப்பிட்டது: “ஆட்சி செய்யும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது என்று தேர்தல் பிரச்சாரத்தில் அவர்கள் அநேகமாக உறுதியாக வலியுறுத்துவார்கள் என்ற நிலையில், ஒரு புதிய தேர்தலில் இருந்து ஐந்து நட்சத்திர இயக்கமும் லெகாவும் இன்னும் வலுவாக எழுச்சி பெறக்கூடும் என்பது தான் மத்தெரெல்லாவிற்கு பெரும் ஆபத்தாக உள்ளது.”

Neue Zürcher Zeitung  பத்திரிகை, “இத்தாலியில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் கீழறுத்தது, ‘மக்களுக்கும் அரண்மனைக்கும் இடையில் ஒரு மோதலை’ உருவாக்கியது ஆகியவை குறித்து, தற்போது ஜனரஞ்சகர்கள் ஜனாதிபதியை கடுமையாக குற்றம் சாட்டுகின்றனர். அவர்களின் வழிநடப்பவர்கள் ஏற்கனவே இணையத்தில் மத்தெரெல்லாவிற்கு எதிராக நச்சுத்தன்மை கொண்ட செய்திகளை பதிவு செய்து வருகின்றனர். அரசியல் குற்றச்சாட்டின் மூலமாகவும் அவர் அச்சுறுத்தப்படுகிறார். தேர்தல் பிரச்சாரம் தொடங்கியுள்ளது, மேலும் இது கடைசியாக நடந்த பிரச்சாரத்தை விட மிகவும் வலுவானதாக இருக்கும் வாய்ப்பும் உள்ளது” எனக் குறிப்பிட்டது.

பெல்ஜிய செய்தித்தாள் De Tijd, “ஜனாதிபதி செர்ஜியோ மத்தெரெல்லாவின் கொள்கை ரீதியான அணுகுமுறை பேரழிவை தடுப்பதற்கு மாறாக, அதை இன்னும் பெரிதாக்கி விட்டது என்பதுதான் ஒரு ஆபத்தாக உள்ளது. யூரோ நெருக்கடியை சமாளிக்க நினைத்தவர்கள் மீண்டும் அவர்களது வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டியிருக்கலாம். ஐரோப்பாவின் தெற்கில் சூடான கோடை தொடங்கியுள்ளது” எனத் தெரிவித்தது.

2008 நிதி நெருக்கடிக்குப் பின்னர், இத்தாலியில் 30 சதவிகிதத்திற்கும் மேலான மக்களின் பெரும் வறுமைக்கும், இளைஞர்கள் வேலையின்மைக்கும் இட்டுச்சென்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன கொள்கை மீதான மக்களின் சீற்றத்தை லெகாவும் ஐந்து நட்சத்திர இயக்கமும் சுரண்டி வருகின்றன. ஆனால் மே 23 அன்று உலக சோசலிச வலைத் தளம் எழுதியது போல, “தொழிலாள வர்க்கத்திற்கும் மூலதனத்திற்கும் இடையிலான மோதலில், லெகாவும் ஐந்து நட்சத்திர இயக்கமும் மூலதனத்தின் பக்கம் உறுதியாக நிற்கின்றன.” எப்போதும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விசுவாசமாக இருந்து வந்த முந்தைய இத்தாலிய அரசாங்கங்களை விடவும் இன்னும் தீவிரமான தேசியவாதப் போக்கைத்தான் அவர்கள் வெறுமனே பின்பற்றி வருகின்றனர்.

ஐந்து நட்சத்திர இயக்கமும் லெகாவும் இணைந்த கூட்டு அரசாங்க வேலைத்திட்டம், விரைவில் ஒரு போலியாக அம்பலப்படக்கூடிய, ஐரோப்பிய தலைநகரங்களில் வெடித்த சீற்றத்தை எதிர்கொண்ட சமூக சீர்திருத்தங்களை அறிவித்த அதேவேளையில், பணக்காரர்களுக்கு பாரிய வரிச் சலுகைகளை விதிக்கவும், பத்தாயிரக்கணக்கான பொதுத்துறை வேலைகளையும் அகற்றவும் உள்ளது.

இரு தரப்பினரும், அவர்களது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாக வங்கிகளுக்கு சமிக்ஞை செய்தனர். ஒரு அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் மத்தெரெல்லா அவர்களை குற்றம் சாட்டுவதற்கு முன்னர், யூரோ வெளியேற்றத்திற்கான கோரிக்கையை அவர்கள் ஏற்கனவே கைவிட்டனர். மேலும் பிரதம மந்திரி நியமித்த கொன்ட், அவரது அமைச்சரவை பட்டியலை மத்தெரெல்லாவிற்கு சமர்ப்பிப்பதற்கு முன்னதாக மத்திய வங்கியின் தலைவர் இக்னாஸியோ விஸ்கோ உடனான அவரது விசுவாசத்தை அவருக்கு மீள் உறுதிப்படுத்த அவரை சந்தித்தார்.

லெகாவையும், அதிலிருந்து சற்று குறைந்த அளவிலான ஐந்து நட்சத்திர இயக்கத்தையும் வேறுபடுத்துவது எதுவென்றால், அகதிகளுக்கு எதிரான அவர்களது தடையற்ற போராட்டமாகும். அவர்களது அரசாங்க வேலைத்திட்டம், நூறாயிரக்கணக்கான அகதிகளுக்கான தடுப்புக்காவலையும், நாடுகடத்தலையும் வழங்கியது. இந்த சதிவேட்டை, பேரினவாத வெறித்தனத்தை தூண்டுகிறது, பாசிச சக்திகளை பலப்படுத்துகிறது, அரசு எந்திரத்தின் அதிகாரங்களை அதிகரிக்கிறது, மேலும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைத் தாக்குகிறது. ஐரோப்பிய தலைநகரங்கள் அல்லது ஊடகங்களில் இது பற்றி எந்த விமர்சனமும் இல்லை, ஏனென்றால் இந்த கொள்கை ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஒருமித்த கொள்கையாக மாறியுள்ளது.